செவ்வாய், 28 மே, 2024

போர் வீரர்களின் நினைவை போற்றும் பூங்கா(Anthem Veterans Memorial Park )-பகுதி - 2


ஒரு மாலை பொழுதில் அரிசோனாவில்  வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னம் உள்ள  அழகிய பூங்கா சென்று இருந்தோம். அங்கு பார்த்தவைகள் தொடர் பதிவாக வருகிறது.
முதல் பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.


1971 முதல் மே மாதத்தின் கடைசி திங்கள் கிழமை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

 போரில் தங்கள் இன்னூயிரை நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள், மற்றும் போர் வீரர்களை கெளரவிக்க  விடப்படும் விடுமுறை நாளாக இருக்கிறது.

அந்த நாளில் போர்வீரர்களின் நினைவு இடத்திற்கு சென்று மலர்கள் வைத்து  வருகிறார்கள், அவர்களின் உறவினர்களை அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து உரையாடி வருகிறார்கள். 




பூங்காவில் பார்த்த அழகான வெள்ளை வாத்துகள்  


என்ன பேசிக் கொள்கிறது? அங்கு பாருங்க நம்மை படம் எடுக்கிறார்கள் என்று சொல்கிறதோ!
 

வாங்க போகலாம் வேறு இடத்திற்கு

கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன?

பொழுது சாய்கிறது அம்மா தேடுவார்கள்

"சின்ன முயலே! நீயாவது என் அருகில் இரு , கொஞ்சம் தூங்குகிறேன்"




நான் வாரேன் நான் வாரேன்!

இதற்கு முந்தின பதிவில் கமலா ஹரிஹரன் கேட்ட குட்டி முயல் வந்து விட்டது இந்த பதிவில். 

நிறைய முயல்கள் நின்றன, நாங்கள் பக்கத்தில் போய் படம் எடுக்க போன போது ஒரு முயல் மட்டும் கிடைத்தது . மற்றவை புதர் செடிக்குள் மறைந்து கொண்டன, வெளியே வரவே இல்லை.

அடிக்கிற வெயிலில் புல் காய்ந்து விட்டது என்று சொல்கிறதோ!

நிழலும், நிஜமும்


கூட்டுக்கு போகும் முன் ஒரு குளியல் போடுவோம். அரிசோனா காகம்

நீரில் குளித்து விட்டு  ஒரு காலை தூக்கி  இறகை கோதி விடுகிறது

நடனம் நன்றாக இருக்கா?

சரி போவோம் கூட்டுக்கு

எனக்கு இன்னும் கரையேற மனம் இல்லை


முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்

சேர்ந்து வாங்க


நான்கு வாத்துகளும் சேர்ந்து நீந்தும் காட்சி.

கரை ஏறி  இறக்கைகளை சிலிர்த்து நீரை வெளியேற்றும் வாத்துகள்




சரி போவோம் வீட்டுக்கு


 மரக்கிளையில் அமர்ந்து பார்க்கும்  குருவி வகையை சேர்ந்த் பறவை.

குழந்தைகள் விளையாட  அழகான இடம்.  கோடை காலத்தில் நீர் விளையாட்டு விளையடாலாம்.  
நடுவில் உள்ள வட்டத்தில் குழந்தைகள் குதித்தால், குடை மற்றும்  அனைத்து அமைப்பிலும் நீர் கொட்டும். நாங்கள் போன போது விளையாட்டு நேரம் முடிந்து குழந்தைகள் வெளியே வந்து விட்டார்கள். மாலை 6 மணியோடு முடிந்து விடும். 


ரயிலில் பயணம் செய்யலாம் இதுவும் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரைதான்.

நினைவு இடத்தை பார்த்து போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு  பூங்காவை  சுற்றி வந்து அனைத்தையும் ரசித்து வரலாம் விடுமுறை நாளில். 
பூங்கா பதிவு நிறைவு பெற்றது.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

--------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    காணொளியும் கண்டேன் படங்களை பொறுமையாக எடுத்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

      காணொளியும் கண்டேன் படங்களை பொறுமையாக எடுத்து இருக்கிறீர்கள்.//

      படங்களை காணொளியை கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி ஜி

      நீக்கு
  2. முயல் குட்டி ரொம்ப அழகா இருக்கு. காது எவ்வளவு நீளம் இல்லையா...

    வாத்து கண் அயர்ந்து என்ன சுகம் பாருங்க!

    முயல் குட்டி வெகு அழகு. உணர்வுகள் ததும்பும் கண்கள் தான் என்ன அழகு.

    முயல்கள் மிகவும் சென்சிட்டிவ். டக்கென்று ஓடிவிடும்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //முயல் குட்டி ரொம்ப அழகா இருக்கு. காது எவ்வளவு நீளம் இல்லையா...//

      ஆமாம். பார்க்கவே அழகு.

      //வாத்து கண் அயர்ந்து என்ன சுகம் பாருங்க!//
      எல்லா பறவைகளும் இப்படி கொஞ்சம் கண் அயரும் போல !
      நம் வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளை சொல்வார்கள் "என்ன கோழி தூக்கம் தூங்கிறே நல்ல தூங்கு என்று."

      //முயல் குட்டி வெகு அழகு. உணர்வுகள் ததும்பும் கண்கள் தான் என்ன அழகு.

      முயல்கள் மிகவும் சென்சிட்டிவ். டக்கென்று ஓடிவிடும்.//

      ஆமாம், மகன் வீட்டில் ஒரு முயல் முன் பக்கம் வைத்து இருக்கும் செம்பருத்தி பூவை வளரவிட மாட்டேன் என்கிறது. மொட்டு , மலரை வந்து தின்று விடும் நாம் பார்த்தால் புதரில் போய் மறைந்து கொள்ளும். சின்ன சத்தமும் அதை பயபடுத்தும்.

      நீக்கு
  3. வாத்தின் (மல்லார்ட் வகை) முகமும் தண்ணீரில் அதன் நிழலும் சேர்ந்து அந்த அலகு ஒட்டிக் கொண்டிருப்பது போல், வாத்தின் உடலும் கீழே இரண்டும் சேர்த்துப் பார்த்தா ஏதோ ஒரு கருவி போன்று... ரொம்ப நல்லா வந்திருக்கு

    அரிசோனா காகமும் அழகு. ப்ரௌன் நிறம் கலந்தது போன்று இருக்கு.

    வாத்துகள் படங்கள் சேர்ந்து நீந்தும் காணொளி, சேர்ந்து கொண்டு ஏதோ வட்ட மேசை மாநாடு போடுவது போல....அப்புறம் வரிசையாக வரும் படம், அந்தக் குருவி எல்லாமே சூப்பர். ரசித்துப் பார்த்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாத்தின் (மல்லார்ட் வகை) முகமும் தண்ணீரில் அதன் நிழலும் சேர்ந்து அந்த அலகு ஒட்டிக் கொண்டிருப்பது போல், வாத்தின் உடலும் கீழே இரண்டும் சேர்த்துப் பார்த்தா ஏதோ ஒரு கருவி போன்று... ரொம்ப நல்லா வந்திருக்கு//

      எல்லா வாத்துகளும் அழகுதான். படத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      //அரிசோனா காகமும் அழகு. ப்ரௌன் நிறம் கலந்தது போன்று இருக்கு.//

      இரண்டு வகை காகமும் இருக்கிறது. அடர் கருப்பு , ப்ரெளன் கலர் முன்பு அமெரிக்க காகங்கள் , அண்டம் காக்கை படம் , இந்த காகம் எல்லாம் பதிவு செய்து இருக்கிறேன்.

      //வாத்துகள் படங்கள் சேர்ந்து நீந்தும் காணொளி, சேர்ந்து கொண்டு ஏதோ வட்ட மேசை மாநாடு போடுவது போல....அப்புறம் வரிசையாக வரும் படம், அந்தக் குருவி எல்லாமே சூப்பர். ரசித்துப் பார்த்தேன்//
      வாத்து படங்கள், காணொளி, குருவியை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி மகிழ்ச்சி.

      நீக்கு
  4. நடுவில் உள்ள வட்டத்தில் குழந்தைகள் குதித்தால், குடை மற்றும் அனைத்து அமைப்பிலும் நீர் கொட்டும். //

    அட! நானும் சின்னக் குழந்தைதான் எனக்கும் அப்படி விளையாட ஆசையா இருக்கு. அங்கு குழந்தைகள் விளையாடும் இடம் ரொம்ப அழகா ஈர்க்கும் விதத்தில் இருக்கு.

    மாலை 6 மணியோடு முடியும் என்பதால் உங்களுக்கும் அதை எடுக்க முடியாமல் ஆனதோ?

    உங்களின் தயவில் நாங்களும் ரசித்தோம் கோமதிக்கா.

    படங்களும் தொகுப்பும் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //அட! நானும் சின்னக் குழந்தைதான் எனக்கும் அப்படி விளையாட ஆசையா இருக்கு. அங்கு குழந்தைகள் விளையாடும் இடம் ரொம்ப அழகா ஈர்க்கும் விதத்தில் இருக்கு.//

      மனதால் குழந்தை என்றாலும் பெரியவர்களுக்கு விளையாட அனுமதி இல்லை கீதா.

      //மாலை 6 மணியோடு முடியும் என்பதால் உங்களுக்கும் அதை எடுக்க முடியாமல் ஆனதோ?//

      ஆமாம், ரயில் சேவீஸ், மற்றும் பார்கில் குழந்தைகள் விளையாடும் இடம் எல்லாம் 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை. தனியாக கேட் இருக்கிறது.

      //உங்களின் தயவில் நாங்களும் ரசித்தோம் கோமதிக்கா.//

      நீங்கள் ரசிப்பீர்கள் என்பதாலும் என் நினைவுக்காகவும் இங்கு பதிவு செய்கிறேன்.

      //படங்களும் தொகுப்பும் சூப்பர்.//

      நன்றி கீதா.

      நீக்கு
  5. மௌன்டென் ரயில் ரோடு என்று இருக்கிறதே அதை அமைத்த கம்பெனி பெயரோ...இல்லைனா பார்க்கில் ஏறி இறங்குவது போல சின்ன சின்ன குன்றுகள் போல இருக்குமோ...வயதானவர்களுக்கு என்று எத்தனை வசதிகள்!

    இங்கு லால்பாகிலும் நடக்க முடியாதவர்களுக்கு பேட்டரி கார் செர்வீஸ் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மௌன்டென் ரயில் ரோடு என்று இருக்கிறதே அதை அமைத்த கம்பெனி பெயரோ...இல்லைனா பார்க்கில் ஏறி இறங்குவது போல சின்ன சின்ன குன்றுகள் போல இருக்குமோ...வயதானவர்களுக்கு என்று எத்தனை வசதிகள்!//

      ரயில் பாலம் படம் போட மறந்து விட்டேன், மலை பகுதிதானே ! சின்ன சின்ன குன்று இருக்கிறது. நீங்கள் சொல்வது போல இருக்கலாம்.
      நாங்கள் ரயிலையே பார்க்கவில்லை, பார்க் வெகு தூரம் இருக்கிறது.
      நாங்கள் கொஞ்சம் இடங்களை பார்த்தோம்.

      //இங்கு லால்பாகிலும் நடக்க முடியாதவர்களுக்கு பேட்டரி கார் செர்வீஸ் இருக்கு.//

      இங்கும் இருக்கா என்று தெரியவில்லை.
      விளையாட்டு இடத்தை மூட வந்த பாதுகாவலர் பேட்டரி காரில் வந்து விளையாட்டு இடம் எல்லாம் தேடி அங்கு இருந்தவர்களை வெளியே போக வைத்து கேட்டை மூடினார்.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. வாத்துகளும், வாத்துகளுக்கான வார்த்தைகளும் ரசனை.   முயல்குட்டி வாத்துகளின் நட்பு ரசனை.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வாத்துகளும், வாத்துகளுக்கான வார்த்தைகளும் ரசனை. முயல்குட்டி வாத்துகளின் நட்பு ரசனை. //

      வாத்துகளை பார்க்கவும், இது போல முயல் குட்டி யுடன் இருக்கும் வாத்தைப்பார்ப்பதும் மிகவும் மகிழ்வாய் இருந்தது. அவைகளின் நட்பு மனதுக்கு மகிழ்ச்சியை தரும். நீங்கள் என்றால் கவிதை எழுதி விடுவீர்கள் முயல், வாத்து நட்பை பாராட்டி.

      நீக்கு
  7. வாத்துகளின் போட்டோக்கள் பேஸ்புக்கிலும் பார்த்தேன்.  காக்கைகளும் களிநடனம் புரிகின்றன.  நல்ல பெரிய இடம் என்று தெரிகிறது.  விடுமுறை நாளைக் கழிக்க நல்லதொரு இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாத்துகளின் போட்டோக்கள் பேஸ்புக்கிலும் பார்த்தேன். //
      நன்றி.

      //காக்கைகளும் களிநடனம் புரிகின்றன. நல்ல பெரிய இடம் என்று தெரிகிறது. விடுமுறை நாளைக் கழிக்க நல்லதொரு இடம்.//

      கோடையிலே இளைப்பாற நல்ல இடம்தான். சுத்தமான், சுகாதாரமான இடம், கண்ணுக்கு குழுமை .
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பூங்காவின் பிற பகுதிகளை கொண்ட இன்றைய தொகுப்பு நன்றாக உள்ளது. வெள்ளை வாத்து அழகாக இருக்கிறது. வெள்ளை வாத்துக்கள் பேசிக் கொள்வது போன்ற தங்களின் கற்பனை உரையாடலை மிகவும் ரசித்தேன்.

    அட... நான் தேடிய அந்த சின்ன முயல் வந்து விட்டதே.. "உங்களுக்கு தெரிந்த யாரோ ஒரு சகோதரிக்காக என்னைச் சிறைப்பிடித்து வலைப்பூவுக்குள் வைத்து விட்டீர்கள். அவர் இன்னமும் என்னைக் காண வரவேயில்லையே ..!" என அது தங்களை செல்லமாக கோபித்துக் கொண்டிருக்கும் . "இதோ வந்து விட்டேன் முயலே. கொஞ்சம் தாமதமாகி விட்டது. உன் அழகு அவ்வளவு நன்றாக உள்ளது. கோமதி அரசு சகோதரியின் வலைப்பூவுக்குள் நீ பத்திரமாக இருப்பதே உன் பாக்கியம் என பெருமைப்பட்டுக் கொள். என நான் சொன்னதாக அதனிடம் கூறுங்கள்.:))

    வாழ்த்துகள் நான்கும் கூடிக் கொண்டபடி நீச்சலடித்து மகிழும் காணோளி அருமையாக உள்ளது. எத்தனை ஒற்றுமை அதனிடம் என வியக்க வைக்கிறது. முயல், வாத்துக்கள், அதன் பொருத்தமான உரையாடல்கள் என அனைத்தையுமே மிக மிக ரசித்தேன்.

    வெளியில் சுற்றிய காகம் ஒரு குளியலை போட்டு விட்டுத்தான் கூடு திரும்புமா? நல்ல யோசனை தங்களுக்கும், கூடவே அதற்கும். அதன் பேச்சுக்களை ரசித்தேன்.

    குழந்தைகள் விளையாடுமிடங்கள், ரயில் செல்லும் காட்சிகள் என ஒருநாள் பொழுது மகிழ்வாக ச் செல்ல நல்ல பொழுது போக்கான இடம். உங்கள் தயவில் நானும் பூங்காவை சுற்றிப்பார்த்து காகம்,வாத்துக்கள் முயலுடன் பேசியாச்சு. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. பூங்காவின் பிற பகுதிகளை கொண்ட இன்றைய தொகுப்பு நன்றாக உள்ளது. வெள்ளை வாத்து அழகாக இருக்கிறது. வெள்ளை வாத்துக்கள் பேசிக் கொள்வது போன்ற தங்களின் கற்பனை உரையாடலை மிகவும் ரசித்தேன்.//

      உரையாடலை ரசித்து, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //அட... நான் தேடிய அந்த சின்ன முயல் வந்து விட்டதே.. "உங்களுக்கு தெரிந்த யாரோ ஒரு சகோதரிக்காக என்னைச் சிறைப்பிடித்து வலைப்பூவுக்குள் வைத்து விட்டீர்கள். அவர் இன்னமும் என்னைக் காண வரவேயில்லையே ..!" என அது தங்களை செல்லமாக கோபித்துக் கொண்டிருக்கும் . "இதோ வந்து விட்டேன் முயலே. கொஞ்சம் தாமதமாகி விட்டது. உன் அழகு அவ்வளவு நன்றாக உள்ளது. கோமதி அரசு சகோதரியின் வலைப்பூவுக்குள் நீ பத்திரமாக இருப்பதே உன் பாக்கியம் என பெருமைப்பட்டுக் கொள். என நான் சொன்னதாக அதனிடம் கூறுங்கள்.:))//


      அருமை , அருமை.

      சகோதரி கமலாவிற்கு பொறுப்பும், கடமையும் அதிகம் என்று சொல்லி இருக்கிறேன் முயல் குட்டியிடம். எப்படியும் உன்னை வந்து பார்த்து மகிழ்வார்கள் என்று சொன்னது போல வந்து அழகாய் அதனிடம் பேசி விட்டீர்கள்.

      நீங்கள் சொன்னது அதற்கு கேட்டு விட்டது மகிழ்வாய் துள்ளி குதித்து தன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது.

      //வாழ்த்துகள் நான்கும் கூடிக் கொண்டபடி நீச்சலடித்து மகிழும் காணோளி அருமையாக உள்ளது. எத்தனை ஒற்றுமை அதனிடம் என வியக்க வைக்கிறது. முயல், வாத்துக்கள், அதன் பொருத்தமான உரையாடல்கள் என அனைத்தையுமே மிக மிக ரசித்தேன்.//

      காணொளியை , உரையாடலை ரசித்தமைக்கு நன்றி.

      //வெளியில் சுற்றிய காகம் ஒரு குளியலை போட்டு விட்டுத்தான் கூடு திரும்புமா? நல்ல யோசனை தங்களுக்கும், கூடவே அதற்கும். அதன் பேச்சுக்களை ரசித்தேன்.//

      காகம் பற்றிய பதிவில் சொல்லி இருப்பேன், காகம் குளித்து விட்டுதன் கூடு திரும்பும் என்று.

      கீழே சகோ துரை செல்வராஜூ அவர்களும் அதையே சொல்லி இருக்கிறார்கள்.

      //குழந்தைகள் விளையாடுமிடங்கள், ரயில் செல்லும் காட்சிகள் என ஒருநாள் பொழுது மகிழ்வாக ச் செல்ல நல்ல பொழுது போக்கான இடம். உங்கள் தயவில் நானும் பூங்காவை சுற்றிப்பார்த்து காகம்,வாத்துக்கள் முயலுடன் பேசியாச்சு. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      பூங்காவை சுற்றிப்பார்த்து காகம், வாத்துக்களுடன், முயலுடன் பேசி களித்தமைக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  9. படங்களும் அழகு..

    அவற்றுக்கான சொல்லாடல்களும் அழகு...

    வாத்துகள் எப்போதும் அழகு தான்..

    சிறப்பு..
    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //படங்களும் அழகு..

      அவற்றுக்கான சொல்லாடல்களும் அழகு...

      வாத்துகள் எப்போதும் அழகு தான்..

      சிறப்பு..
      மகிழ்ச்சி..//

      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. ///கூட்டுக்கு போகும் முன் ஒரு குளியல் போடுவோம்... அரிசோனா காகம்///

    அரிசோனாவாக இருந்தாலும் அரசம்பட்டியாக இருந்தாலும்
    காக்கை - காக்கை தான்!...
    கூட்டுக்குத் திரும்பும் முன் குளிப்பதற்கு மறக்காது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அரிசோனாவாக இருந்தாலும் அரசம்பட்டியாக இருந்தாலும்
      காக்கை - காக்கை தான்!...
      கூட்டுக்குத் திரும்பும் முன் குளிப்பதற்கு மறக்காது...//

      ஆமாம், காகத்தின் இயல்பு. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து இருக்க உதவுகிறது.
      தன்னையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. படங்கள் மிகவும் அழகாக உள்ளன. குறிப்பாக வாத்து, காகம் இவற்றின் நிழல்+நிஜம், முயல் போன்றவை. வாழ்த்துக்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக உள்ளன. குறிப்பாக வாத்து, காகம் இவற்றின் நிழல்+நிஜம், முயல் போன்றவை. வாழ்த்துக்கள்.//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. வெள்ளை வாத்துகள் அழகாக இருக்கின்றன.

    முயல்குட்டி சாதுவாக புல்தரையில் இருந்து படம் எடு என பார்க்கிறது.

    நிழல் நிஜம்,பச்சைக் கழுத்து வாத்து கரையிலும் இருப்பது அழகாக நடந்துகிட்டு.

    நீந்தும் வாத்துகள் வீடியோ அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      நான் வெளியூர் போய் இருந்தேன் மகனுடன். நேற்றுதான் வந்தோம் ஊரிலிருந்து அதனால் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்க தாமதம்.
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு