ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை (Sunset Crater volcano ) தேசிய பூங்கா நிறைவு பகுதி





இந்த இடம் கொகோனினோ கவுண்டி என்று அழைக்கப்படும்  அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாஃபிற்கு வடக்கே 15 மைல் (24 கிமீ) தொலைவில் உள்ளது இந்த  பூங்கா.

1000 வருடங்களுக்கு முன்   எரிமலை வெடித்த அந்த வெடிப்பை காணவும், அதை நினைவில் கொள்ளவும் மக்கள் வந்து போகிறார்கள். ஜூலை மாதம் மகன்  அழைத்து போனான். 

முதல் பதிவு  படிக்கவில்லைஎன்றால் படிக்கலாம்.
இந்த   பதிவு நிறைவு பகுதி.




மேலே உள்ள   படம் நான் எடுத்த படம், இந்த படம் பேரன் எடுத்தான். பாதைநடப்பதற்கு நன்றாக இருந்தது. நடந்து கொண்டே மலையின் அழகை ரசிக்கலாம்.





இங்கு குழுவாக வந்தவர்களை அமர வைத்து இந்த மலையின் வரலாற்றை சொல்வார்கள் என்று நினைக்கிறேன். நிறைய பெஞ்ச் போட்டு இருந்தார்கள்.

மலை அழகு



வழி நெடுக அமர்ந்து ஓய்வு எடுக்க ஆசனங்கள்.




ஒரு இடத்தில் இப்படி குழந்தைகள் கட்டும் ஆற்று மணல் கோபுரம் போல அழகாய்  இருந்தது

மேலே இருந்து கீழே எடுத்த படம்

பாலத்தில் இரு மருங்கிலும் இந்த வெள்ளை பூக்கள் செடிகள் இருந்தன.

அப்பாச்சி ப்ளூம், ஃபாலுஜியா முரண்பாடு

அங்கு இந்த மலர்கள் தான் அதிகமாக இருந்தது.

இந்த புதர் செடி ஜூன் முதல் ஆகஸ்ட் வரை  பூக்கும் .




இந்த அழகான மலரை களைச்செடி அழிக்கவேண்டும் என்கிறார்கள்.

பைன் மரங்களுக்கும் பேர் வித விதமாக இருக்கிறது என்று தெரிந்தது


எரிமலை ஓட்ட பாதையில்  மகன் நிற்கிறான்

கீழே இருந்து மகன் எங்களை எடுத்த படம்


சற்று நேரம்  அடிமரத் துண்டு ஆசனமானது

பின் நடந்து கார் இருக்கும் இடத்திற்கு வந்து அங்கு பாதை ஒரத்தில் இருந்த இந்த  சோளக்கதிர் போன்ற செடியைபடம் எடுத்தேன்



காட்டுத்தீயால் எரிந்த பைன் மரங்கள்.



 மலையில் நான்  எடுத்த காற்றின் ஒலி காணொளி சிறிதுதான் காற்றின் ஒலி எப்படி இருக்கு சொல்லுங்க


சுற்றிப்பார்க்க சென்ற இடங்களில் எல்லாம் கழிவறை  மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வசதியாக இருந்தது. பாராட்டப்படவேண்டிய விஷயம்.

பூங்கா எங்கும் குப்பைகள் இல்லாமல் மிகவும் சுத்தமாக இருந்தது .அதையும் பாராட்ட வேண்டும்.


நடக்க முடியாதவர்கள் சக்கர நாற்கலியில்  அவரகளே காரிலிருந்து வண்டியை  இறக்கி  அதை இயக்கி வர வசதியான நடைபாதை.



எரிமலை பூங்காவை சுற்றிப்பார்த்து விட்டு கிளம்பி விட்டோம் 


அடுத்த போன இடம் பழங்குடியினர்  வாழ்ந்த இல்லம்.

அடுத்த பதிவில்  பார்க்க போகலாம் வாங்க.



வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !

உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் - கண்ணா !

இணைவாய் எனதா வியிலே - கண்ணா !

இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா !
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய் !


எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கினியா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா !
துணையே, அமரர் தொழும்வா னவனே !
- மகாகவி பாரதியார்



அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!
அரிசோனா மகா கணபதி கோவில் கிருஷ்ணஜெயந்தி விழா நேரலையில் பார்த்தேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

30 கருத்துகள்:

  1. இன்றைய பதிவில் படங்கள் எல்லாமும் long shot ஆக உள்ளன. பின்னணிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். பாதை பல படங்களிலும் தனி இடம் பெறுகிறது.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //இன்றைய பதிவில் படங்கள் எல்லாமும் long shot ஆக உள்ளன. பின்னணிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். பாதை பல படங்களிலும் தனி இடம் பெறுகிறது.//

      ஆமாம் சார், இயற்கைக்கு முக்கியத்துவம்தான். பாதை பல படங்களில் இடம் பெற்று இருப்பதை கவனித்து சொன்னதற்கு நன்றி. . உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    அதிலும் பூக்களின் படங்கள் சிறப்பு.

    காணொளி கண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

      அதிலும் பூக்களின் படங்கள் சிறப்பு.

      காணொளி கண்டேன்//

      படங்கள், காணொளி கண்டு கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் காணொளி எல்லாமே மிக அருமை

    மரங்கள் பூக்கள் விவரணம் நன்றாக இருக்கிறாது

    சோளக்கதிர் போன்ற அந்தச் செடி அங்குள்ள தானியம் அல்லது கற்றாழை வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    கடைசிப்படம் அந்த இடிந்த வீடு பழங்குடியினர் வீடு போல்தான் உள்ளது அங்குதான் அடுத்து சென்றீர்கள் இல்லையா. கற்களால் கட்டப்படு இருபது போல் இருக்கிறது ஆச்சரியம்!

    அறிய ஆவலுடன் தொடர்கிறோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //படங்கள் காணொளி எல்லாமே மிக அருமை

      மரங்கள் பூக்கள் விவரணம் நன்றாக இருக்கிறாது//

      நன்றி.


      //சோளக்கதிர் போன்ற அந்தச் செடி அங்குள்ள தானியம் அல்லது கற்றாழை வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.//

      கீதா கூகுள் செய்து போட்டு இருக்கிறார்கள். கற்றாழை இல்லை போல இல்லை, சோளக்கதிர்களின் இலை போல தான் இருக்கும்.

      //கடைசிப்படம் அந்த இடிந்த வீடு பழங்குடியினர் வீடு போல்தான் உள்ளது அங்குதான் அடுத்து சென்றீர்கள் இல்லையா. கற்களால் கட்டப்படு இருபது போல் இருக்கிறது ஆச்சரியம்!//

      ஆமாம், கற்களால் கட்டப்பட்டதுதான். சிந்துவெளி நகரீகம்

      மொகஞ்சதாரோ ஹரப்பாவில் உள்ளது போல இருக்கிறது.


      //அறிய ஆவலுடன் தொடர்கிறோம்//

      நன்றி.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. பாதைகளும் பின் புற மலைகள் காட்சியுள்ள படங்களும் அழகோ அழகு. ரொம்ப நல்லா வந்திருக்கு நல்ல வெயில் படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆமாம் மலை அழகுதான்.

    ஆங்காங்கே பெஞ்சுகள்! வழி நெடுக அமர்ந்து ஓய்வு எடுக்க ஆசனங்கள்....எப்படி எல்லாம் செய்யறாங்க என்று எண்ண வைக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //பாதைகளும் பின் புற மலைகள் காட்சியுள்ள படங்களும் அழகோ அழகு. ரொம்ப நல்லா வந்திருக்கு நல்ல வெயில் படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆமாம் மலை அழகுதான்.//

      ஆமாம், மலை அழகுதான். வெயிலில் படங்கள் நன்றாக இருக்கும் என்பது உண்மை. நாங்கள் மணி 11.30 இருக்கும் அங்கு போகும் போது
      நல்ல வெயில் ஆனால் காற்று வீசியதால் வெயில் அதிகம் தாக்கவில்லை.

      //ஆங்காங்கே பெஞ்சுகள்! வழி நெடுக அமர்ந்து ஓய்வு எடுக்க ஆசனங்கள்....எப்படி எல்லாம் செய்யறாங்க என்று எண்ண வைக்கிறது!//

      என் போன்றவர்களுக்கு வசதி ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு நடந்தேன்.

      நீக்கு
  5. அந்த டார்க் சிவப்பு மலையும் எரிமலைதான் இல்லையா குழந்தைகள் குவித்துச் செய்யும் மலை போல!!! இருப்பதும்...எரிமலை போலத்தான் இருக்கிறது. இதுவும் பார்க்க அழகு

    இடையில் பாலம் வருவது இடையில் நீரோடை இருக்கிறதா? என் மைன்ட் வாய்ஸ் - (கீதா இது என்ன தேவையில்லாத அர்த்தமற்ற கேள்வி? அங்கு நீரோடை இருந்திருந்தா கோமதிக்காவே படம் எடுத்துப் போட்டிருப்பாங்களே! அது பத்தி சொல்லியிருப்பாங்களே! ஏதோ கேள்வி கேட்கணுமேன்னுகேக்காத ஒழுங்கா பதிவு பார்த்து பேசு!!!)

    அங்கு இடைவெளி பள்ளம் இருந்ததோ அதான் பாலம் போட்டிருக்காங்க போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த டார்க் சிவப்பு மலையும் எரிமலைதான் இல்லையா குழந்தைகள் குவித்துச் செய்யும் மலை போல!!! இருப்பதும்...எரிமலை போலத்தான் இருக்கிறது. இதுவும் பார்க்க அழகு//

      தெரியவில்லை கீதா. தூரத்திலிருந்துப்பார்க்க அழகாய் இருந்தது அதனால் எடுத்தேன்.

      //இடையில் பாலம் வருவது இடையில் நீரோடை இருக்கிறதா? என் மைன்ட் வாய்ஸ் - (கீதா இது என்ன தேவையில்லாத அர்த்தமற்ற கேள்வி? அங்கு நீரோடை இருந்திருந்தா கோமதிக்காவே படம் எடுத்துப் போட்டிருப்பாங்களே! அது பத்தி சொல்லியிருப்பாங்களே! ஏதோ கேள்வி கேட்கணுமேன்னுகேக்காத ஒழுங்கா பதிவு பார்த்து பேசு!!!)//

      நீரோடை இல்லை, இருந்தாலும் மழை காலங்களில் தண்ணீர் ஓடி வரலாம். அழகுக்காவும் செய்து இருக்கலாம்.
      இங்கு எனக்கு பிடித்தது எத்தனை மழை பொழிந்தாலும் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்பது இல்லை, தண்ணீர் ஓடி விட சரியான வடிகால் வசதி செய்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //படங்கள் துல்லியம், அழகு//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. வெள்ளை மலர்கள் பார்க்கறப்ப எப்படி இப்படி வறண்ட பூமியில் இவ்வளவு அழகான மலர்கள் என்று தோன்றுகிறது.

    அந்தச் சிவப்பு மலர் அழகா இருக்கே அது களைச்செடியா? சரி களையாக இருந்தால் என்ன அங்கு ஒன்றும் பயிர் போடப் போவதில்லையே இது அந்த இடத்திற்கு அழகு சேர்ப்பதால் இருந்துவிட்டுப் போகலாமே! ஏன் இப்படி ஒரு எண்ணமோ. கோமதிக்கா பேசாம நம்மள அங்கு இந்த இடங்களைப் பராமரிக்கும் பரிந்துரைகளைத் தரச் சொல்லும் பொறுப்பு தரச் சொல்லுங்க நாம பாத்துப்போம்!!!! என்ன சொல்றீங்க? !!!!!!!!!!!!!!!!!!

    பைனில் நிறைய வகை இருக்கிறது அக்கா. கலிஃபோர்னியா Yosemite தேசிய பூங்காவில் அதிகம் உள்ள்பைன் மரங்கள், ஃபிர் மரங்கள், ஸ்ப்ரூஸ் மரங்கள் மூன்றிற்கும் சிறு சிறு வித்தியாசங்கள்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெள்ளை மலர்கள் பார்க்கறப்ப எப்படி இப்படி வறண்ட பூமியில் இவ்வளவு அழகான மலர்கள் என்று தோன்றுகிறது.//

      காட்டுப்பூக்கள் எல்லாம் அழகாய் இருக்கும் கீதா.

      //அந்தச் சிவப்பு மலர் அழகா இருக்கே அது களைச்செடியா? சரி களையாக இருந்தால் என்ன அங்கு ஒன்றும் பயிர் போடப் போவதில்லையே இது அந்த இடத்திற்கு அழகு சேர்ப்பதால் இருந்துவிட்டுப் போகலாமே! ஏன் இப்படி ஒரு எண்ணமோ. கோமதிக்கா பேசாம நம்மள அங்கு இந்த இடங்களைப் பராமரிக்கும் பரிந்துரைகளைத் தரச் சொல்லும் பொறுப்பு தரச் சொல்லுங்க நாம பாத்துப்போம்!!!! என்ன சொல்றீங்க? !!!!!!!!!!!!!!!!!!//

      பார்த்தீனிய செடி கெடுதல் அதை பிடிங்கி ஏறிய வேண்டும் என்பது போல இந்த செடிக்கும் ஏதாவது தீங்கு விளைவிக்கும் குணம் இருக்கும்.
      அதனால் களைய பட வேண்டும் என்கிறார்கள்.
      எருமை பூங்காவிலும் போட்டு இருந்த்னே! களையை களைய உதவிக்கு அழைப்பு விடுத்தைப்பற்றி.

      //பைனில் நிறைய வகை இருக்கிறது அக்கா. கலிஃபோர்னியா Yosemite தேசிய பூங்காவில் அதிகம் உள்ள்பைன் மரங்கள், ஃபிர் மரங்கள், ஸ்ப்ரூஸ் மரங்கள் மூன்றிற்கும் சிறு சிறு வித்தியாசங்கள்தான்.//

      ஆமாம் பார்த்தேன் , சின்ன சின்ன வித்தியாசங்கள் தான்.

      நீக்கு
  8. எரிமலை ஓட்டப் பாதையா?!!!!! ஓடுவதற்கு இடம் இருக்கிறாதா அங்கு தடுக்கி விழாம! நீங்கள் எல்லோரும், நீங்களும் கவினும் இருக்கும் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    சோளக் கதிர் போல நல்ல உயரமாக இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. அதன் பெயர் கூகுள் சொல்கிறது...ஆனால் இதே போன்று இன்னும் சில இருப்பதால் அதுதானா என்று சொல்லத்தெரியலை

    ஆனா அழகா இருக்கு.

    காணொளி சூப்பர். யுடூபிலும் பார்த்தேன் அக்கா,

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எரிமலை ஓட்டப் பாதையா?!!!!! ஓடுவதற்கு இடம் இருக்கிறாதா அங்கு தடுக்கி விழாம!//
      எரிமலை குழம்பு ஓடிய பாதை கீதா. தடுக்கி விழாமல் நடக்க சிறு பாதைகள் இருக்கு பார்த்து கவனமாக நடக்க வேண்டும்.

      //நீங்கள் எல்லோரும், நீங்களும் கவினும் இருக்கும் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.//

      நன்றி.

      //சோளக் கதிர் போல நல்ல உயரமாக இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. அதன் பெயர் கூகுள் சொல்கிறது...ஆனால் இதே போன்று இன்னும் சில இருப்பதால் அதுதானா என்று சொல்லத்தெரியலை

      ஆனா அழகா இருக்கு.

      காணொளி சூப்பர். யுடூபிலும் பார்த்தேன் அக்கா,//

      சோளக்கதிர் போன்ற செடியை கூகுள் செய்து தன் பெயரை கண்டு கொண்டது, மற்றும் காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  9. common mullein (Verbascum thapsus)

    அந்தச் சோளக்கதிர் போல இருப்பது, கீழெ உள்ள படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //common mullein (Verbascum thapsus)

      அந்தச் சோளக்கதிர் போல இருப்பது, கீழெ உள்ள படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தேன்...//

      சோள்க்கதிர் போல இருக்கும் செடியின் பேரை அறிந்து கொண்டு சொன்னதற்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி கீதா.

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் துல்லியமாக, அழகாக இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் துல்லியமாக, அழகாக இருக்கின்றன!//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பழங்குடியினர் வாழ்ந்த இல்லம் அழகா இருக்கு... அடுத்த இடம் சூப்பரா இருக்கும்னு தெரியுது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழங்குடியினர் வாழ்ந்த இல்லம் அழகா இருக்கு... அடுத்த இடம் சூப்பரா இருக்கும்னு தெரியுது//

      ஆமாம், நன்றாக இருக்கிறது கீதா.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    நலமா? தங்களுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். இப்போது மகன் வீட்டுக்கு வந்து விட்டீர்களா? படங்களும், பதிவும் அருமையாக உள்ளது.

    நீல நிற மேகமும், அதற்கு துணையாக அதனூடேயே கைக் கோர்த்திருக்கும் வெண்ணிற மேகங்களுமாக படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.

    தாங்களும், தங்கள் பேரனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அழகாக இருக்கிறது. முதல் படம் இரண்டு பக்கமும் விரிந்த வளைந்த பாதையும், சுற்றிலும் மலைகளுமாக நன்றாக உள்ளது.

    கரடு முரடான மலைப்பகுதியில் பேரனின் துணையுடன் கவனமாக ஏறியிருப்பீர்கள். ஆனாலும் அதிக தூரம் மலை மேல் ஏற வேண்டாமென தங்கள் மகன் அன்புடன் தடுத்தது சரிதான்..! மலை முழுவதும் கரடு முரடாக கற்கள், பாறைகள் என உள்ளது.

    நீண்ட சோளக்கதிர் மாதிரியான செடியும், அழகான மலர்களின் படங்களும் பார்க்க மிக அழகாக இருக்கிறது. காற்றின் ஒலி கேட்டேன்.

    கடைசி படம் அருமை. ஸ்ரீ கிருஷ்ணர் மேல் பாரதியார் பாடிய பாட்டு நன்றாக உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி வேலைகள் அழைக்கிறது. தங்களின் முந்தைய பதிவையும் படித்து விட்டு வருகிறேன் சகோதரி. அடுத்தப் பதிவுக்கும் காத்திருக்கிறேன். தொடர்கிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //நலமா? தங்களுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். //
      நலம். கிருஷ்ண ஜெயந்தி பதிவு போடுங்கள் நேரம் கிடைக்கும் போது.

      //இப்போது மகன் வீட்டுக்கு வந்து விட்டீர்களா? படங்களும், பதிவும் அருமையாக உள்ளது.//

      மகள் வீட்டில் தான் இருக்கிறேன்.அடுத்த மாதம் மகன் வீட்டுக்கு போவேன்.

      //நீல நிற மேகமும், அதற்கு துணையாக அதனூடேயே கைக் கோர்த்திருக்கும் வெண்ணிற மேகங்களுமாக படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.

      தாங்களும், தங்கள் பேரனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அழகாக இருக்கிறது. முதல் படம் இரண்டு பக்கமும் விரிந்த வளைந்த பாதையும், சுற்றிலும் மலைகளுமாக நன்றாக உள்ளது.//

      நன்றி.

      //கரடு முரடான மலைப்பகுதியில் பேரனின் துணையுடன் கவனமாக ஏறியிருப்பீர்கள். ஆனாலும் அதிக தூரம் மலை மேல் ஏற வேண்டாமென தங்கள் மகன் அன்புடன் தடுத்தது சரிதான்..! மலை முழுவதும் கரடு முரடாக கற்கள், பாறைகள் என உள்ளது.//

      ஆமாம், அவன் முன்னேலே போய் பாதை சரியாக இருக்கிறதா என்றுப் பார்த்து பேரனை அழைத்து வர சொன்னான்.

      //நீண்ட சோளக்கதிர் மாதிரியான செடியும், அழகான மலர்களின் படங்களும் பார்க்க மிக அழகாக இருக்கிறது. காற்றின் ஒலி கேட்டேன்.//

      காற்றின் ஒலியை கேட்டது மகிழ்ச்சி.

      //கடைசி படம் அருமை. ஸ்ரீ கிருஷ்ணர் மேல் பாரதியார் பாடிய பாட்டு நன்றாக உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி வேலைகள் அழைக்கிறது. தங்களின் முந்தைய பதிவையும் படித்து விட்டு வருகிறேன் சகோதரி. அடுத்தப் பதிவுக்கும் காத்திருக்கிறேன். தொடர்கிறேன். நன்றி சகோதரி.//

      கடைசி படம் சாம்பிராணி புகையில் பெருமாள் இருக்கிறார்.
      கிருஷ்ணஜெயந்தி பட்சணங்களை நம் வீட்டுக்குழந்தைகள் விருப்பமுடன் எதிர்ப்பார்ப்பார்கள். கண்ணனுக்கு படைத்து விட்டு நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மகிழ்ச்சிதான்.
      மருமகளும் முறுக்கு , சீடை செய்து விட்டாள்.
      இங்கு மகள், முறுக்கு, அவல் , வெண்ணெய் வாங்கி வந்தாள் தயிர் இருக்கிறது. அது போதும் இங்கு உள்ள கண்ணனுக்கு.

      வேலை பளுவுக்கு இடையில் பதிவுக்கு வந்து
      உங்கள் விரிவான கருத்தை அளித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. படங்கள் யாவும் ரசித்தேன்.  ஏனோ ஒரு வெறுமை, ஒரு தனிமை உணரப்படுகிறது அந்தச் சூழலில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படங்கள் யாவும் ரசித்தேன். ஏனோ ஒரு வெறுமை, ஒரு தனிமை உணரப்படுகிறது அந்தச் சூழலில்.//

      ஆமாம், நாங்கள் மட்டும் அந்த இடத்தில் இருந்தோம்.
      சிலர் வேறு இடங்களில் இருந்தாரகள்.

      நிறைய மக்கள் வீடுகளை, நிலங்களை எரிமலை கொண்டு போய் விட்டதே! அப்போ வெறுமைதானே!

      நீக்கு
  14. பழங்குடியில் பெருங்குடி போல.. வீடு பெரிதாக இருக்கிறது! காணொளி பார்த்தேன். 'காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்' பாடல் மனதில் ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழங்குடியில் பெருங்குடி போல.. வீடு பெரிதாக இருக்கிறது! காணொளி பார்த்தேன். 'காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்' பாடல் மனதில் ஓடுகிறது.//

      பழங்குடியினர் சேர்ந்து வாழ்ந்து இருகிறார்கள். பெருங்குடிதான் அவர்கள்.
      காணொளி பார்த்தவுடன் காற்றைக் கொஞ்சம் நிற்க பாட்டு நினைவுக்கு வந்து விட்டதா ?
      காற்றின் ஒலி இல்லையென்றால் பாட்டு நினைவுக்கு வரவில்லையா?
      காற்றின் ஒலிதான் இசையா? என்ற பாடலும் பிடிக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம். உங்கள் கருத்துகளை தேடி கொண்டு வந்து விட்டேன்.

      நீக்கு
  15. படங்களும் தகவல்களும் நன்று. படங்களை மிகவும் ரசித்தேன்.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் , வாழ்க வளமுடன்

      //படங்களும் தகவல்களும் நன்று. படங்களை மிகவும் ரசித்தேன்.

      கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.//

      பதிவை ரசித்திப்பார்த்து கருத்து சொன்னதற்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு