ஞாயிறு, 26 மே, 2024

போர் வீரர்களின் நினைவை போற்றும் பூங்கா(Anthem Veterans Memorial Park)


படைவீரர்கள் நினவு சின்னம்

அரிசோனாவில் வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னம் உள்ள  இந்த இடத்திற்கு  மாலை நேரம் போய் இருந்தோம்.


புரட்சிகர  தேசபக்தர்கள் அமெரிக்க  சுதந்திரத்திற்கு பாடு பட்ட ஆண்கள், மற்றும் பெண்களின் தியாகத்தை போற்ற  நினைவூட்ட அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த நினைவுச்சின்னம்.

1775- 1783 ல்  சுதந்திர புதிய தேசத்தை   உருவாக்க   போராடியவர்கள்.  250 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்கப் புரட்சியின்  ஓகோட்டில்லோ அத்தியாயம்  மகள்களால் வழங்கப்பட்டது.


நவம்பர் மாதம் சரியாக 11.11 மணிக்கு   நடைபாதை வட்டத்தின்  குறுக்கே நீண்ட  நிழலை உண்டு பண்ணுமாம்.


தேசத்தை பாதுகாக்க  பணியாற்றிய , தியாகம் செய்த  துணிச்சலான அமெரிக்க  ராணுவ வீரர்களை என்றென்றும் நினைவில் வைத்து இருக்க நினைவு சின்னம்.

  இந்த நினவுச் சின்னத்தின் ஐந்து தூண்களும்  நவம்பர் மாதம் 11 ம் தேதி அன்று  சரியாக 11.11மணிக்கு நடைபாதை வட்டத்தின் குறுக்கே நீண்ட நிழலை  படர செய்யும்.

 சூரியனின் கதிர்கள் ஐந்து தூண்களின்  நீள்வட்டங்கள் வழியாக அமெரிக்காவின் கிரேட் சீல் என்ற  மொசைக் மீது சூரிய ஒளி முழுமையாக பரவி  ஒளிர செய்கிறது.  இது  போரில் கலந்து கொண்டு  தியாகம் செய்த ஆண்களுக்கும், பெண்களுக்கும்   சிறப்பான அஞ்சலி செலுத்துவது போல  உள்ளது.


வரலாற்று தலம் 2011 இல் கட்டப்படடு இருக்கிறது இந்த நினைவு சின்னம்

ஐந்து தூண்களும் ஐக்கிய மாகாணங்களின்  இராணுவத்தின் ஐந்து பிரிவுகளின் ஒற்றுமையை  சொல்கிறது

தூண்களை  சுற்றி இப்படி அழகான மலர் தோட்டம் அமைத்து இருக்கிறார்கள்.

செயற்கை ஓடைகளை அமைத்து இருக்கிறார்கள்.  அதில் அழகான வாத்துகள் நீந்தி களிப்பதை கண்டுமகிழ்ந்தோம்.  மாலை நேரம்   போய் இருந்தோம். முயல்கள் நிறைய குட்டி குட்டியாக இருந்தது, ஆனால் ஒரு குட்டி முயல் மட்டும் தான் படம் எடுக்க சிக்கியது. பூங்காவில்  பார்த்த காட்சிகள் இந்த பதிவில்.


ரயிலில் போய் கொண்டே ஓடையில் நீந்தும் வாத்துகளை பார்க்கலாம். நாங்கள் 6 மணிக்கு மேல்தான் பூங்கா வந்தோம் அதனால்  ரயிலை பார்க்கவில்லை. 

சிலர் ஓடைகளில் மீன் பிடித்து கொண்டு இருந்தார்கள், பிடித்து பின் அதிலே விட்டுவிடுவார்கள். சும்மா பொழுது போக்கு.
சிலர் அழகான  நாய்களுடன்  நடைப்பயிற்சி செய்தார்கள். கோடை காலத்துக்கு   நன்றாக இருக்கும் இங்கு வந்தால்.

கற்களை போட்டு சின்ன   அருவி போல    அமைத்து இருக்கிறார்கள். 






என்ன பேசிக் கொள்கிறது நேரம் ஆகி விட்டது கரை ஏற வேண்டும் என்று சொல்கிறதோ


தனிமையும் இனிமைதான்

ஏறுங்க ஏறுங்க  மேலே!
எங்கள் பக்கத்தில் வந்த போது அலைபேசியில் எடுத்த படங்கள். உணவு கொடுக்க கூடாது என்று போட்டு இருக்கிறார்கள் சிலர் கொடுப்பார்கள் போல அதனால் பக்கத்தில் வந்து எங்களை பார்த்தது.


 
சின்ன வாத்து எப்படி தலைகீழாக  சாகஸம் செய்கிறது  என்று பாருங்கள்.    மிக சிறிய  காணொளிதான் மூன்று முறை  முங்கி எந்திரிக்கும்.

பசுமையான புல்வெளி கண்ணுக்கு குளிர்ச்சி

மரங்கள் வரிசையாக நிழல் பரப்பி கொண்டு பார்க்கவே அழகு


சின்ன காணொளிதான்
நீந்தி கொண்டு இருக்கும்  வாத்துகள் நாயை பார்த்தவுடன் பயந்து ஒரே இடத்தில் கூடுவது பார்க்கலாம்.


மாலை சிற்றுண்டி செய்து கொண்டு வந்தாள் மருமகள். அதை அங்கு வைத்து உண்ட போது  இளமைக்கால நினைவுகள்  வந்தது. சினிமா பார்க்கபோனாலும், பார்க்  போனாலும் அம்மா வீட்டிலிருந்து தின்பண்டங்கள் எடுத்து வருவார்கள்.
தியேட்டரில் விற்கும் முறுக்கு, பாப்கார்ன் வாங்குவது இல்லை.
 
நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து கொண்டு போனாலும் சினிமா தியேட்டரில் விற்கும் கோன்ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவார்கள்.

இந்த பூங்காவில் எதுவும் கிடைக்காது நாம் தான் கொண்டு போக வேண்டும்.
 பூங்கா அடுத்த பதிவிலும் தொடரும்.   

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. முதல் படமே ரொம்ப அழகாக இருக்கிறது.

    //புரட்சிகர தேசபக்தர்கள் அமெரிக்க சுதந்திரத்திற்கு பாடு பட்ட ஆண்கள், மற்றும் பெண்களின் தியாகத்தை போற்ற நினைவூட்ட அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த நினைவுச்சின்னம்.//

    பல நாடுகளுக்கும் இருக்கும் போல. ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் (தமிழில் எழுதும் போது அந்தச் சொல்லிலேயே வந்துவிடுகிறதோ பிரித்தானி.....என்று!!) பல நாடுகளையும் ஆண்டதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //முதல் படமே ரொம்ப அழகாக இருக்கிறது.//

      ஆமாம். மிக அழகாய் இருக்கிறது. அந்த இடமே மிக சுத்தமாக இருக்கிறது.

      பல நாடுகளுக்கும் இருக்கும் போல. ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் (தமிழில் எழுதும் போது அந்தச் சொல்லிலேயே வந்துவிடுகிறதோ பிரித்தானி.....என்று!!) பல நாடுகளையும் ஆண்டதால்.//

      பலநாடுகளிலும் இருக்கிறது. அட்லாண்டாவில் ஒரு இடம் பகிர்ந்து இருந்தேன். அங்கே இரண்டு இடங்கள் பார்த்தேன், இங்கும் போன தடவை ஒன்று பகிர்ந்து இருந்தேன்.

      https://mathysblog.blogspot.com/2021/06/blog-post_22.html
      பார்த்தால் நினைவு இருக்கும். பல பறவைகள், வாத்துகள் போட்டு இருப்பேன். நிறைய பேர் படித்த பதிவு.

      நீக்கு
  2. அமெரிக்கப் புரட்சியின் மகள்கள் என்றே சொல்லப்படுகிறதே!!!

    நவம்பர் மாதம் சரியாக 11.11 மணிக்கு நடைபாதை வட்டத்தின் குறுக்கே நீண்ட நிழலை உண்டு பண்ணுமாம்.//

    அட! அப்படி வடிவமைத்து இருக்காங்களா அல்லது வடிவமைத்த பிறகு நிழல் விழுவது தெரிந்ததோ? என்றாலும் ஆச்சரியம்தான் இல்லையா? அதுவும் சரியான நேரத்திற்கு.

    //சூரியனின் கதிர்கள் ஐந்து தூண்களின் நீள்வட்டங்கள் வழியாக அமெரிக்காவின் கிரேட் சீல் என்ற மொசைக் மீது சூரிய ஒளி முழுமையாக பரவி ஒளிர செய்கிறது. இது போரில் கலந்து கொண்டு தியாகம் செய்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறப்பான அஞ்சலி செலுத்துவது போல உள்ளது.//

    வடிவமைக்கும் போது அப்படி அழகாக வடிவமைத்திருக்காங்க!! அருமை.

    ஐந்து தூண்களைப் பற்றிய குறிப்புகளும் தகவல்களும் அருமை, அக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்கப் புரட்சியின் மகள்கள் என்றே சொல்லப்படுகிறதே!!!//


      இருக்கலாம் கீதா.

      //அட! அப்படி வடிவமைத்து இருக்காங்களா அல்லது வடிவமைத்த பிறகு நிழல் விழுவது தெரிந்ததோ? என்றாலும் ஆச்சரியம்தான் இல்லையா? அதுவும் சரியான நேரத்திற்கு.//
      நம் நாட்டில் டெல்லியில் ஜந்தர் மந்தரில் இருக்கே! அது போல வடிவனைத்து இருக்கிறார்கள்.

      //வடிவமைக்கும் போது அப்படி அழகாக வடிவமைத்திருக்காங்க!! அருமை.

      ஐந்து தூண்களைப் பற்றிய குறிப்புகளும் தகவல்களும் அருமை, அக்கா//

      ஆமாம். நன்றாக வடிவமைத்து இருக்கிறார்கள்.


      நீக்கு
  3. அங்கு எல்லாம் இப்படி ஒவ்வொரு பூங்காவும், இடங்களும் வடிவமைக்கப்பட்டு சுற்றுலாவிற்கும், உள்ளூர்வாசிகளுக்கும் அருமையான பொழுதுபோக்கு அம்சங்களாகச் செய்திருக்கிறார்கள்.

    நம் நாட்டில் இயற்கையாகவே பல அருமையான இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கை அன்னை தாராளமாக நிறைய வடிவமைத்துக் கொடுத்திருக்கிறாள். ஆனால் இன்னும் சுற்றுலாவிற்கான சீரமைப்புகள், நல்ல கழிவறை வசதிகள், வயதானவர்களும் கண்டு களிக்கும்படியான வசதிகள், இருப்பவற்றை நன்றாகப் பராமரித்து நல்ல பாதுகாப்பு வசதிகள் என்று நிறைய செய்து கொடுக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அங்கு எல்லாம் இப்படி ஒவ்வொரு பூங்காவும், இடங்களும் வடிவமைக்கப்பட்டு சுற்றுலாவிற்கும், உள்ளூர்வாசிகளுக்கும் அருமையான பொழுதுபோக்கு அம்சங்களாகச் செய்திருக்கிறார்கள்.//

      ஆமாம், அடுத்த பதிவில் இங்கு உள்ள பொழுது போக்கு அம்சங்கள் வரும். வார இறுதி நாட்களை குடும்பத்தோடு வெளியே போவதை ஒரு மகிழ்ச்சியான விஷயமாக கடைபிடிக்கிறார்கள்.
      இந்த மாதிரி இடங்களை சுத்தமாக அழகாய் பராமரிக்கிறார்கள்.

      //நம் நாட்டில் இயற்கையாகவே பல அருமையான இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கை அன்னை தாராளமாக நிறைய வடிவமைத்துக் கொடுத்திருக்கிறாள். ஆனால் இன்னும் சுற்றுலாவிற்கான சீரமைப்புகள், நல்ல கழிவறை வசதிகள், வயதானவர்களும் கண்டு களிக்கும்படியான வசதிகள், இருப்பவற்றை நன்றாகப் பராமரித்து நல்ல பாதுகாப்பு வசதிகள் என்று நிறைய செய்து கொடுக்கலாம்.//

      ஆமாம் கீதா. நீங்கள் சொல்வது சரிதான். வசதிகள் செஉது கொடுக்கலாம். முக்கியமாக பொது மக்களுக்கு கழிவறை வசதிகள் நம் ஊரில் சரியாக இல்லை சுற்றுலா தலங்களில். பொதுமக்களும் போகும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

      இருப்பவற்றை பராமரித்தாலே போதும் நம் நாட்டில்.

      நீக்கு
  4. நீரோடைகள், சின்ன அருவி போன்ற வடிவமைப்புகள், பூக்கள், பச்சை, வாத்துகள் அழகு....இவற்றைப் பார்த்தாலே மனம் இதமாகிவிடும். நான்கும் சேர்ந்திருப்பது அழகு!! ஆமாம் அப்படித்தான் பேசியிருக்கும் அடுத்த படத்துல எல்லாம் போவதைப் பார்க்க முடிகிறது!!!!!

    இந்த வாத்துகள் இப்படித் தலைகீழாகச் செய்யும். இங்கும் ஏரியில் அப்பப்ப இப்படிச் செய்யும். காணொளி மிக அழகு. அப்படிச் செய்து அடியில் பூச்சிகள் புழுக்கள் உணவு ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்க்குமாம். இந்த வாத்துகளின் வகை - புள்ளி மூக்கு வாத்துகள் இங்கு பார்க்க முடியும். எடுத்திருக்கிறேன். இன்னும் பகிரவில்லை. கழுத்து அடர் கலரில் இருப்பது ஆண், மற்றொன்று பெண் என்று நினைக்கிறேன் அப்படி வாசித்த நினைவு.

    நாயைப் பார்த்ததும் கூடுவது அழகு! படங்களை காணொளிகளை ரொம்ப ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீரோடைகள், சின்ன அருவி போன்ற வடிவமைப்புகள், பூக்கள், பச்சை, வாத்துகள் அழகு....இவற்றைப் பார்த்தாலே மனம் இதமாகிவிடும். நான்கும் சேர்ந்திருப்பது அழகு!! ஆமாம் அப்படித்தான் பேசியிருக்கும் அடுத்த படத்துல எல்லாம் போவதைப் பார்க்க முடிகிறது!!!!!//

      7.25க்கு நாங்கள் பூங்காவை விட்டு வெளியே வந்தோம். வாத்துகள் 6.30க்கு எல்லாம் கரை ஏறி விட்டன. கரையில் அமர்ந்து தங்கள் இறக்கையில் உள்ள நீரை உடலை சிலிர்த்து வெளியேற்றின .

      //இந்த வாத்துகள் இப்படித் தலைகீழாகச் செய்யும். இங்கும் ஏரியில் அப்பப்ப இப்படிச் செய்யும். காணொளி மிக அழகு. அப்படிச் செய்து அடியில் பூச்சிகள் புழுக்கள் உணவு ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்க்குமாம். இந்த வாத்துகளின் வகை - புள்ளி மூக்கு வாத்துகள் இங்கு பார்க்க முடியும். எடுத்திருக்கிறேன். இன்னும் பகிரவில்லை. கழுத்து அடர் கலரில் இருப்பது ஆண், மற்றொன்று பெண் என்று நினைக்கிறேன் அப்படி வாசித்த நினைவு.//

      ஆமாம், வாத்துகள் புழு பூச்சியை தேட இப்படி முக்குகுளிக்கும்.
      அது பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருந்தது. வாத்து பற்றிய விவரங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் எடுத்த படங்களை போடுங்கள் கீதா.

      //நாயைப் பார்த்ததும் கூடுவது அழகு! படங்களை காணொளிகளை ரொம்ப ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா//

      ஆமாம்கீதா, ரசிப்பீர்கள் என்றுதான் போட்டேன்.

      நீக்கு
  5. மாலைச் சிற்றுண்டி சூப்பர். நாங்களும் எங்கு போனாலும் கையில் கொண்டு சென்றுவிடுவது வழக்கம். வேற வழியில்லைனாதான் வெளியில். அதுவும் இப்ப எல்லாம் ரொம்ப பயமாக இருக்கு.

    எல்லாம் ரசித்தேன் கோமதிக்கா. அருமையான இதமான மாலைப் பொழுது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /மாலைச் சிற்றுண்டி சூப்பர்.//
      நன்றி.

      //நாங்களும் எங்கு போனாலும் கையில் கொண்டு சென்றுவிடுவது வழக்கம். வேற வழியில்லைனாதான் வெளியில். அதுவும் இப்ப எல்லாம் ரொம்ப பயமாக இருக்கு.//

      ஆமாம், இப்போது கொஞ்சம் பயம் தான். கையில் கொண்டு போவது நல்லதுதான்.

      கடற்கரைக்கு சென்றால் சுண்டல், வடை, அப்பம் செய்து கொண்டு போய் விடுவோம். அங்கும் சுண்டல் விற்பார்கள் தேங்காய், மாங்காய், பட்டானி சுண்டல், மாங்காய் துண்டுகள் வாங்கி விடுவார்கள் குழந்தைகள்.

      //எல்லாம் ரசித்தேன் கோமதிக்கா. அருமையான இதமான மாலைப் பொழுது!//

      ஆமாம் கீதா. அருமையான இதமான மாலைப்பொழுதுதான்.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  6. நம்ம ஊர் கோவில்கள் சிலவற்றில் குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளி விழுவது போல அமைத்திருப்பது போல அங்கேயும் அமைத்திருக்கிறார்கள் போல.  அந்த நாளுக்கு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //நம்ம ஊர் கோவில்கள் சிலவற்றில் குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளி விழுவது போல அமைத்திருப்பது போல அங்கேயும் அமைத்திருக்கிறார்கள் போல. அந்த நாளுக்கு சிறப்பு.//

      ஆமாம். நம் ஊர்களில் சுவாமி மேல் சூரியஒளி விழும் நாளில் சிறப்பு பூஜைகள் எல்லாம் உண்டு. அந்த நாள் சிறப்புதான்.
      அது போல நவம்பர் 11 சிறப்புதான் இந்த இடத்தில்.

      நீக்கு
  7. இரண்டு காணொலிகளும் கண்டேன்.  குட்டி வாத்து 'அச்சச்சோ,  வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலைல தலைக்கு குளிக்க மறந்துட்டேனே...... இப்போ முழுக்கு போட்டுடலாம்' என்று குளிக்கிறது போல...  அல்லது தன் யோகா குருவிடம் குருவிடம் கற்ற சிரசாசனத்தை பிராக்டீஸ் செய்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டு காணொலிகளும் கண்டேன். குட்டி வாத்து 'அச்சச்சோ, வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலைல தலைக்கு குளிக்க மறந்துட்டேனே...... இப்போ முழுக்கு போட்டுடலாம்' என்று குளிக்கிறது போல... அல்லது தன் யோகா குருவிடம் குருவிடம் கற்ற சிரசாசனத்தை பிராக்டீஸ் செய்கிறது!!//

      உங்கள் ரசனையான பின்னூட்டம் அருமை.
      ஆமாம். இப்போது யோகா நல்லது என்று அதற்கும் தெரிந்து விட்டது.
      நல்ல குரு கிடைத்து இருக்கிறது.

      நீக்கு
  8. மரங்கள், குளம், செயற்கை அருவி, தோட்டம் என அந்த இடமே பார்க்க மிக அழகாய் இருக்கிறது.   குளக்கரை மரத்தடியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து வரலாம் போல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மரங்கள், குளம், செயற்கை அருவி, தோட்டம் என அந்த இடமே பார்க்க மிக அழகாய் இருக்கிறது. குளக்கரை மரத்தடியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து வரலாம் போல...!//

      ஆமாம், மாலை 3 மணியிலிருந்து எவ்வளவு நேரமானாலும் இருக்கலாம் தான். விளையாட்டு இடம் 6 மணியோடு முடிந்து விடும்.
      மற்ற இடங்களில் இருட்டும் வரை அமர்ந்து இருக்கலாம்.

      நீக்கு
  9. நேந்திரங்காய் சிப்ஸுடன் இருப்பது மஷ்ரூம் போல தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நேந்திரங்காய் சிப்ஸுடன் இருப்பது மஷ்ரூம் போல தெரிகிறது!//

      பாஸ்தா ஸ்ரீராம், அதில் காய்கறிகளுடன் மஷ்ரூம் கொஞ்சமாக போட்டு இருக்கிறது. எனக்கு காளான் பிடிக்காது அதனால் அதை தவிர்த்து கொஞ்சமாக பாஸ்தா தட்டில் எடுத்து கொண்டேன், அப்படியும் உங்கள் கண்ணில் பட்டு விட்டது போலவே!

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. சுதந்திர வீரர்களை நினைவு கூர்ந்து அதை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவது ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் கடமை.
    நமது நாட்டில் இது கூத்தாடிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.

    படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    காணொளிகள் இரண்டும் கண்டேன்.

    இடம் மிகவும் ரம்மியமாக உள்ளது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

    வாழ்க வளத்துடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //சுதந்திர வீரர்களை நினைவு கூர்ந்து அதை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவது ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் கடமை.//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை, நம் கடமைதான்.

      //படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

      காணொளிகள் இரண்டும் கண்டேன்.

      இடம் மிகவும் ரம்மியமாக உள்ளது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.//

      ஆமாம், இடம் மிகவும் ரம்மியமாக இருந்தது, கோடைக்கு ஏற்ற இடம்.
      படங்களை, காணொளிகளை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அமெரிக்க போர் வீரர்களுக்கான நினைவு பூங்கா நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை

    நவம்பர் மாதம் அந்த குறிப்பிட்ட நேரத்தில், சூரிய கதிர்கள் ஒரேமாதிரி நிழல் பரப்புவதும், சூரிய ஒளி பூங்காவின் வட்டப்பாதையில் தன் ஒளியை பரப்பி அந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த தூண்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு. படங்களைப்பார்த்து ரசித்தேன்.அதன் தகவல்களையும் விபரமாக தெரிந்து கொண்டேன்.

    மலர்களும், அந்த செயற்கை ஓடையும் பார்க்கவே ரம்யமாக உள்ளது. அந்த ஒரேயொரு முயல் குட்டி படத்தை காணோமே?

    வாத்து படங்கள் நன்றாக உள்ளது. தங்களின் அதன் பேச்சாக யோசித்த வார்த்தைகளின் கோர்வையும் நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன்.

    காணொளிகளையும் கண்டு மகிழ்ந்தேன். மிகவும் பொறுமையாக காணொளிகளை எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாத்து நன்றாக முங்கி, முங்கி குளிக்கிறது. நீரின் உள்ளே அதன் உணவை தேடவா? அதற்கென்று ஒரு திறமைகளை ஆண்டவன் அருளியிருப்பார்.

    மாலை நேர சிற்றுண்டி மருமகள் தயாரிப்பில் நன்றாக உள்ளது. முன்பு நாங்களும் அம்மா வீட்டில் இருந்த போதும், திருமணமாகி எங்கள் குழந்தைகளுடன் வெளியில் செல்லும் போதும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிட்டதே இல்லை. ஆனால், இப்போது வீட்டில் செய்து கொண்டு போக முடியாத பட்சத்தில், ஏதாவதொரு நல்ல உணவகத்தில் சாப்பிட்டு வருகிறோம்.. (பேரக் குழந்தைகளுக்காக.)

    அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது. நீங்கள் கூறும் தகவல்கள், அதன் புகைப்படங்கள் வாயிலாக நானும் அந்த இடத்திற்கு சென்று வந்த உணர்வை பெறுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. அமெரிக்க போர் வீரர்களுக்கான நினைவு பூங்கா நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை//

      நன்றி.

      //மலர்களும், அந்த செயற்கை ஓடையும் பார்க்கவே ரம்யமாக உள்ளது. அந்த ஒரேயொரு முயல் குட்டி படத்தை காணோமே?//

      அடுத்த பதிவில் வரும் குட்டி முயல்.


      //வாத்து படங்கள் நன்றாக உள்ளது. தங்களின் அதன் பேச்சாக யோசித்த வார்த்தைகளின் கோர்வையும் நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன்//

      நன்றி .

      //காணொளிகளையும் கண்டு மகிழ்ந்தேன். மிகவும் பொறுமையாக காணொளிகளை எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாத்து நன்றாக முங்கி, முங்கி குளிக்கிறது. நீரின் உள்ளே அதன் உணவை தேடவா? அதற்கென்று ஒரு திறமைகளை ஆண்டவன் அருளியிருப்பார்.//

      நீரில் உள்ள உணவைதான் தேடுகிறது முங்கி.

      நீங்கள் சொல்வது உண்மை., ஒவ்வொரு ஜீவ ராசிகளுக்கும் இறைவன் ஒவ்வொரு அறிவை கொடுத்து இருக்கிறான்.

      //மாலை நேர சிற்றுண்டி மருமகள் தயாரிப்பில் நன்றாக உள்ளது. முன்பு நாங்களும் அம்மா வீட்டில் இருந்த போதும், திருமணமாகி எங்கள் குழந்தைகளுடன் வெளியில் செல்லும் போதும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிட்டதே இல்லை. ஆனால், இப்போது வீட்டில் செய்து கொண்டு போக முடியாத பட்சத்தில், ஏதாவதொரு நல்ல உணவகத்தில் சாப்பிட்டு வருகிறோம்.. (பேரக் குழந்தைகளுக்காக.)//

      காலங்கள் மாறும் போது நாமும் மாறி தான் ஆக வேண்டும்.
      இங்கும் சில நேரங்களில் உணவகத்தில் சென்று சாப்பிட்டு வருவோம். கிடைக்காத இடங்களுக்கு கையில் கொண்டு போவோம்.

      //அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது. நீங்கள் கூறும் தகவல்கள், அதன் புகைப்படங்கள் வாயிலாக நானும் அந்த இடத்திற்கு சென்று வந்த உணர்வை பெறுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு மகிழ்ச்சி. பதிவில் என் சேமிப்பாகவும் இருக்கும் .

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி. நேற்று மாலை நண்பர் வீட்டுக்கு போய் விட்டோம். அதுதான் காலதாமதம் பின்னூட்டம் அளிக்க.



      நீக்கு
  12. அமெரிக்காவில் அரிஜோனா வில் போர் வீரர்களை நினைவூட்டும் அழகிய பூங்கா படங்கள் , நவம்பர் மாதம் சரியாக 11.11 மணிக்கு நடைபாதை வட்டத்தின் குறுக்கே நீண்ட நிழலை உண்டு பண்ணும் நிகழ்வு என்று வரலாற்றுப் பூங்கா இவ்வளவு அழகாக இருப்ப்தைப் பார்க்க ஆச்சரியம்.

    செயற்கையாக வடிவமைக்கப்பட்ட குளங்கள், சின்ன அருவி, என்று அதில் வாத்துகளும நீ ந்தி மகிழ்வதை படங்களின் மூலமும், காணொளிகளின் மூலமும் கண்கொள்ளாக் காட்சியாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. அனைத்தும் அருமை.

    துளசிதரன்

    America vil Arizona Vin azhakana padankalum,kanolikalum....arumai...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //அமெரிக்காவில் அரிஜோனா வில் போர் வீரர்களை நினைவூட்டும் அழகிய பூங்கா படங்கள் , நவம்பர் மாதம் சரியாக 11.11 மணிக்கு நடைபாதை வட்டத்தின் குறுக்கே நீண்ட நிழலை உண்டு பண்ணும் நிகழ்வு என்று வரலாற்றுப் பூங்கா இவ்வளவு அழகாக இருப்ப்தைப் பார்க்க ஆச்சரியம்.//

      ஆமாம், 2011ல் கட்டினாலும் இப்போதும் புதிதாக காட்சி அளிக்கிறது. சுத்தமாக பாராமரிக்கிரார்கள்.

      //செயற்கையாக வடிவமைக்கப்பட்ட குளங்கள், சின்ன அருவி, என்று அதில் வாத்துகளும நீ ந்தி மகிழ்வதை படங்களின் மூலமும், காணொளிகளின் மூலமும் கண்கொள்ளாக் காட்சியாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. அனைத்தும் அருமை.//

      ஆமாம், கண்கொள்ளாக் காட்சிகள்தான். அடுத்த பதிவிலும் இந்த பூங்கா படங்கள் தொடரும்.

      //America vil Arizona Vin azhakana padankalum,kanolikalum....arumai.//

      நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

      நீக்கு
  13. பூங்கா படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

    ஏரி நீரில் மரங்களின் நிழல் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //பூங்கா படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.//

      பூங்கா படங்கள் அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி.

      //ஏரி நீரில் மரங்களின் நிழல் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.//

      நன்றி, எனக்கு இந்த மாதிரி படங்கள் எடுக்க பிடிக்கும் நன்றாக வந்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  14. இந்த மாதிரி இடத்திற்கு கையில் தீனியுடன் சென்றால் நடந்த களைப்பிற்கு இதமாஇருக்கும்.

    வாத்துகள் அழகு. காணொளியும் நன்று இசையில்லாமல் கர்க கர்க் சப்தத்துடன் இருக்கும் பகுதி அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மாதிரி இடத்திற்கு கையில் தீனியுடன் சென்றால் நடந்த களைப்பிற்கு இதமாஇருக்கும்.//

      ஆமாம்.

      //வாத்துகள் அழகு. காணொளியும் நன்று இசையில்லாமல் கர்க கர்க் சப்தத்துடன் இருக்கும் பகுதி அருமை//

      காணொளியில் இசை சேர்க்க சொன்னான் பேரன், நான் வாத்துகளின் "சத்தம் போய் விடுமே "என்றேன் "போகாது பாருங்கள், போனால் வேறு செய்யுங்கள்" என்றான். போட்டு பார்த்தேன். வாத்துகளின் சத்தம் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் குறிப்பிட்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. அமெரிக்க சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளின் நினைவுப் பூங்கா நன்றாக இருக்கிறது.

    தூண்களும் அவற்றின் ஒளி நிழல் குறிப்பிட்ட நாள் நேரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு அஞ்சலி செய்வது போல சிறப்பாக இருக்கிறது.

    ஏரி வாத்துகள் என அழகாக இருக்கின்றன. வாத்து மூழ்கியது ரசிக்கவில்லை.
    காணொளி நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //அமெரிக்க சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளின் நினைவுப் பூங்கா நன்றாக இருக்கிறது.

      தூண்களும் அவற்றின் ஒளி நிழல் குறிப்பிட்ட நாள் நேரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு அஞ்சலி செய்வது போல சிறப்பாக இருக்கிறது//

      ஆமாம், சிறப்பாக அமைத்து இருக்கிறார்கள்.

      //ஏரி வாத்துகள் என அழகாக இருக்கின்றன. வாத்து மூழ்கியது ரசிக்கவில்லை.//

      வாத்து மூழ்கிய காணொளி தெரியவில்லையா?
      அடுத்த காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      காணொளி நன்றாக இருந்தது.//

      காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு