திங்கள், 1 ஜூலை, 2024

மெக்சிகோ வரலாற்று சிறப்பு மிக்க ஹோட்டல் ரிவியரா டெல் பசிஃபிகோ




எங்கள் கப்பலும் இன்னொரு கப்பலும்  நிற்கிறது.      பஸ்ஸில் போகும் போது பார்த்து எடுத்த படம்.


மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ்  ஊரிலிருந்துகிளம்பி  மெக்சிகோ வரை பயணம்.

கப்பல் பயண அனுபவங்கள் தொடர் பதிவாக இங்கு இடம்பெறுகிறது. இந்த பதிவில் மெக்சிகோவில் சில இடங்களை பார்த்தோம்  அவை இந்த பதிவில்.



இதற்கு முந்திய பதிவுகள்.


வரலாற்று  மைய மாவட்டம்  சிறப்பு மிக்க இடம்  என்செனடா

1930 ஆண்டு ஆரம்பித்த "ஆண்டலூஸ் பார் ."


வழிகாட்டி இசாபெல் முதலில் அழைத்து போன இடம்
"ஹோட்டல் ரிவியரா டெல்  பசிஃபிகோ" என்ற மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியாவில் உள்ள என்செனாடாவில் அமைந்துள்ள்  ஹோட்டலுக்கு .
இது மெக்சிகோவின் ஆடம்பர ஹோட்டலாம்.

ஹோட்டல் 1930ல்   ஆரவாரத்துடன் திறக்கப்பட்டு 1950 களில் சரியாக போகாமல் 1964 ல் மூடப்பட்டு விட்டதாம். பின்னர் 
ஹோட்டல் இடை இடையே மட்டும் இயங்கி கொண்டு இருந்ததாம்,  இரண்டாம் உலகப் போரின் போது இராணுவ பயன்பாட்டிற்கு  உதவியதாம்.

1978 ல் மறுசீர் அமைக்கப்பட்டு  ஹோட்டல் "சென்ட்ரோ சோஷியல்  சிவிகோ ஒய் கல்ச்சுரல் டி என்செனாடா" என பெயர் மாற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது.  இதில் திறந்தவெளி தியேட்டர், வரலாற்று அருங்காட்சியகம்,  பல  நிகழ்ச்சிகளை நடத்த  பல அறைகள் உள்ளதாம்.
கலாச்சார மற்றும் மாநாட்டு மையமாக உள்ளதாம்.


அருங்காட்சியகத்தில்   பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. உள்ளே நிறைய இடங்களில் வேறு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்ததால்   உள்ளே மேலும் விவரங்கள் தெரியவில்லை.

கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும் இடம்


வாசலில் இப்படி அழகாய் கட் அவுட் வைத்து இருந்தார்கள், மகனும், மருமகளும் தங்கள்  முகத்தை  காட்டி படம் எடுத்து கொண்டார்கள்.

அங்கு வாசலில் இருந்த அழகிய   கள்ளி செடிகள்



இலைகளே மலர்கள் போல காட்சி அளிக்கும் தாவரம்

இரவு நேரம் ஒளி விளக்குகள் அழகாய் ஒளிரும் போல 


 மது வகைகளை வாங்கி வந்து அமர்ந்து குடிக்க  வட்ட மேஜைகள், நாற்காலிகள்  போடப் பட்டு இருந்தது.


கொஞ்சமாக நீர் வருகிறது  இந்த அலங்கார  ஜாடியில்.


நிறைய கடைகள் இருந்தது  அலங்கார குடைகள் விரிக்கப்பட்டு இருக்கிறது, வெயில் அடிப்பதால்

கட்டிடத்தின் நடுவில் மேஜைகள், சுற்றி கடைகள்

சிப்பியில் செய்த அழகிய பொருட்கள்

கையில் கட்டி கொள்வது , கழுத்தில் போட்டுக் கொள்ளும் வித விதமான கயிறுகள்


நினைவு பரிசுகள்  கொடுக்க சின்ன சின்னதாக

பீங்கான் பொருட்கள்

கண்ணாடிப் பொருட்கள்

வாசலில் தொங்க விடுவார்கள் போலும்


மீன் எலும்பு என்று போட்டு இருக்கு . மீன் எலும்பு தனியாக விற்கிறார்களா? அல்லது அங்கு உள்ள பொருட்கள் மீன் எலும்பில் செய்தவையா தெரியவில்லை .



பொம்மலாட்ட பொம்மைகள்

தொப்பிகள், உடைகள், காலணிகள்


வெளிச்சுவற்றில்  வீரமிக்க விளையாட்டு   காட்சி

பால்கனி அழகிய மர வேலைப்பாடு 

பார் இருக்கும் கட்டிடத்திற்கு உள்ளே பார்த்த காட்சி


//என்செனாடா கடற்கரை கிளப், எஸ்.ஏ. என்செனாடாவில் ஒரு ரிசார்ட் கட்டும் இலக்குடன் உருவாக்கப்பட்டது. 1926 இல் கிளப் கலைக்கப்பட்ட பிறகு, அதன் உறுப்பினர்கள் பலர் புதிய நிறுவனமான கிளப் இன்டர்நேஷனல், எஸ்.ஏ., திட்டத்தைத் தொடர, ஆரம்பத்தில் ஹோட்டல் பிளேயா டி என்செனாடா (என்செனாடா பீச் ஹோட்டல்) என்று அழைக்கப்பட்டனர். ஹோட்டலை வடிவமைக்க கட்டிடக் கலைஞர் கோர்டன் எஃப். மேயர் பணியமர்த்தப்பட்டார்; ஆல்ஃபிரடோ ராமோஸ் மார்டினெஸ் அதன் சுவரோவியங்களைச் செய்ய பணியமர்த்தப்பட்டார். பிளாயா என்செனாடா ஹோட்டல் மற்றும் கேசினோ ஆகியவை குத்துச்சண்டை வீரர் ஜாக் டெம்ப்சேயின் நடைமுறை நிர்வாகத்தின் கீழ், சேவியர் குகட் இசைக்குழு உட்பட கண்கவர் விழாக்களுடன் அக்டோபர் 31, 1930 அன்று திறக்கப்பட்டது. [1] [2]//

நன்றி விக்கி பீடியா


மெக்சிகோ  கிளப்பில் யார் யார் என்ன பொறுப்பில் இருந்தார்கள் என்று அவர்கள் பேர் போட்டு இருக்கிறது

அந்தக்கால வர்ண கண்ணாடி ஜன்னல்கள்

அந்தக்கால அலங்கார கண்ணாடி கூண்டுக்குள்  விளக்கு

பழைய கால படங்கள்

எங்களை அழைத்து வந்த வழிகாட்டி இசாபெல்  மதுவகைகளின் ருசியை பற்றி சொல்லி அந்தக்காலத்தில் எப்படி ருசிமிகுந்த மதுவகைகள் இருந்தன என்று சொல்கிறார்.
பாட்டு, ஆட்டம், மது இவை மகிழ்ச்சியை தருபவை என்கிறார்.
பின்னாடி ஓவியமும்  அதை சொல்கிறது.

பிரியபட்டவர்களுக்கு மதுவகைகள்  குடித்துப்பார்க்க சிறு கிண்ணங்களில்  கொடுத்தார்கள்.

  மேலே மர விதானம் அழகு


வேறு ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.


பழைய கால கட்டிக்கலை மர வேலைப்பாடு அழகாய் இருந்தது, தொங்கும் அலங்கார விளக்கும் அழகாய் இருந்தது



அலங்கார மரப்படிகள், மேலேயும் வேறு ஏதோ நிகழச்சி நடந்து கொண்டு இருந்தது, அதனால் அங்கு போகவில்லை, மாடியில்மேல் விதானம் அழகாய் இருக்கிறது.




உள்ளே பார்த்து விட்டு வெளியே வந்தால் இப்படி  சிட்டி டூர் அழைத்து செல்லும் வாகனங்கள் நிரைய  நிற்கிறது.






நாங்கள் வந்த வாகனம்.
அடுத்து  எந்த இடம் அழைத்து சென்றார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


 வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

24 கருத்துகள்:

  1. அழகிய கள்ளிச்செடிகள் -  ஆக்சிமோரான்?!!  ஆனாலும் அழகாகத்தான் இருக்கிறது.  அதைவிட இலைகளே மலர்போல் காட்சியளிப்பது இன்னும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அழகிய கள்ளிச்செடிகள் - ஆக்சிமோரான்?!! ஆனாலும் அழகாகத்தான் இருக்கிறது. அதைவிட இலைகளே மலர்போல் காட்சியளிப்பது இன்னும் அழகு.//

      ஆக்சிமோரான் என்று வஞ்ச புகழ்ச்சி செய்யவில்லை ஸ்ரீராம். கள்ளியும் அழகிய தோற்றங்களில் இங்கு பார்க்கிறேன்.
      பாலைவனத்தை அழகு படுத்துகிறது இந்த கள்ளி செடிகள்.

      இலைகளே மலர்கள் போல இருப்பதின் பெயரை கூகுள் செய்து பார்த்த போது

      "ஏயோனியம் கேனரியன்ஸ், கேனரி ஏயோனியம் அல்லது ஜெயண்ட் வெல்வெட் ரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது!"
      இப்படி சொல்கிறது. இந்த செடி பல வண்ணத்தில் பூக்கள் இருக்கிறது.
      பார்க்க அழகாய் இருக்கிறது, இயற்கை வெகு அழகானது.

      நீக்கு
  2. வழக்கமான கடைகள், மேசை நாற்காலிகளுடன்.  நீங்களே சொல்லி இருப்பது போல மாலையில் வந்து பார்த்தால் களைகட்டியிருக்குமோ..  வெயில்!  காலியாய் ஜாலியின்றி ட்ரை ஆக இருப்பது போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வழக்கமான கடைகள், மேசை நாற்காலிகளுடன். நீங்களே சொல்லி இருப்பது போல மாலையில் வந்து பார்த்தால் களைகட்டியிருக்குமோ.. வெயில்! காலியாய் ஜாலியின்றி ட்ரை ஆக இருப்பது போல இருக்கிறது!//

      ஆமாம், வெயில் என்பாதல் மக்கள் கூட்டம் இல்லை என்றே நினைக்கிறேன்.மாலை நேரம் வண்ணவிளக்குகள் ஒளிர நன்றாக இருக்கும் .

      நீக்கு
  3. அந்த மாடிப்படிகள் அழகாய் இருக்கிறது.  பால்கனியும்.  வெளியே நிற்கும் வண்டியில்தான் நகருக்குள் உங்கள் பயணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த மாடிப்படிகள் அழகாய் இருக்கிறது. பால்கனியும். வெளியே நிற்கும் வண்டியில்தான் நகருக்குள் உங்கள் பயணமா?//
      108 என்று போட்டு இருக்கும் வண்டியில் தான் எங்கள் பயணம், அது பாதியில் நின்று போய் வேறு வண்டி அதி விரைவில் வந்து அதில் பயணம் செய்தோம்.

      இன்னொரு வாகனம் ஆட்டோ போல இருப்பது தான் ஊர் முழுவதும் நிற்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் அருமையாக உள்ளது.
    கள்ளிச்செடி படங்களும் அழகு.
    பயண தகவல்கள் சிறப்பு.
    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாம் அருமையாக உள்ளது.
      கள்ளிச்செடி படங்களும் அழகு.
      பயண தகவல்கள் சிறப்பு.
      தொடர்ந்து வருகிறேன்....//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கும், தொடர்வதாக சொன்னதற்கும் நன்றி.

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் அழகு. தகவல்களும் சிறப்பு. மாலை நேரங்களில் விளக்கொலியில் அதிக கூட்டத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அழகு.தகவல்களும் சிறப்பு.//

      நன்றி.


      //மாலை நேரங்களில் விளக்கொலியில் அதிக கூட்டத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.//

      ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன்.
      உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி


      நீக்கு
  6. வணக்கம்
    அம்மா

    கண்ணுக்கு விருந்தான படங்கள் அறியாத விடயங்களை கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தொடருகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன், நலமா? வாழ்க வளமுடன்
      உங்களை போன பதிவில் குறிபிட்டு இருந்தேன்.
      வலைச்சர காலங்களை சொல்லி என் பதிவும் வலைச்சரத்தில் இடம் பெற்றால் நீங்களும், திண்டுக்கல் தனபாலனும் வந்து முதலில் சொல்வீர்கள் என்று சொல்லி இருந்தேன்.

      தொடர்வது மகிழ்ச்சி.

      //கண்ணுக்கு விருந்தான படங்கள் அறியாத விடயங்களை கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தொடருகின்றேன்.//

      உங்கள் வரவுக்கும் , கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவும் படங்களும் வழக்கம் போல அருமையாக உள்ளது. மெக்ஸிகோ ஹோட்டலின் அழகு மனதை கவர்கிறது. அழகான கள்ளிச் செடிகளும், மலர்களைப் போலவே இலைகளுடன் இருக்கும் தாவரங்களும் மிக அழகாக இருக்கிறது.

    பல படங்களை நான் இன்னமும் பெரிதாக்கிப் பார்க்கவில்லை. (என்னவோ நேரங்கள் காற்றாக பறக்கிறது) எல்லாவற்றையும் பார்த்து விட்டு பிறகு கண்டிப்பாக வருகிறேன். தங்களின் சென்ற கப்பல் பதிவையுப் படிக்க வேண்டும்.

    உங்களால் நல்ல நல்ல விஷயங்களயும், தெரியாத பல இடங்களின் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவும் படங்களும் வழக்கம் போல அருமையாக உள்ளது. மெக்ஸிகோ ஹோட்டலின் அழகு மனதை கவர்கிறது. அழகான கள்ளிச் செடிகளும், மலர்களைப் போலவே இலைகளுடன் இருக்கும் தாவரங்களும் மிக அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      //பல படங்களை நான் இன்னமும் பெரிதாக்கிப் பார்க்கவில்லை. (என்னவோ நேரங்கள் காற்றாக பறக்கிறது) எல்லாவற்றையும் பார்த்து விட்டு பிறகு கண்டிப்பாக வருகிறேன். தங்களின் சென்ற கப்பல் பதிவையுப் படிக்க வேண்டும்.//

      நேரம் காற்றாக பறந்தால் நல்லது கமலா. விருந்தினர் வந்து விட்டார்களா?
      நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். பதிவு எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம்.

      //உங்களால் நல்ல நல்ல விஷயங்களயும், தெரியாத பல இடங்களின் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.





      நீக்கு
  8. அக்கா பதிவு பார்த்து விட்டேன்...வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா பதிவு பார்த்து விட்டேன்...வருகிறேன்.//

      வாங்க வாங்க கீதா.

      நீக்கு
  9. முதல் படத்தைப் பார்த்ததும் ஏனோ நம் சென்னையின் சென்ட்ரல் போகும் வழியில் கூவமும் பாலமும் நினைவுக்கு வந்தது.

    அங்கு சுத்தமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் படத்தில் தெரியவில்லை பெரிதாக்கிப்பார்க்க நினைத்தேன் முடியலை. பாலத்தின் அந்தப் பக்கம் தண்ணீர் இல்லை வறண்டு உள்ளதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதல் படத்தைப் பார்த்ததும் ஏனோ நம் சென்னையின் சென்ட்ரல் போகும் வழியில் கூவமும் பாலமும் நினைவுக்கு வந்தது.//

      கூவம் போல இருந்ததா? தண்ணீர் ஓடை போல ஓடுவதாலா? அல்லது இரண்டு பக்கம் வெள்ளையாக தெரிவது வெள்ளை கற்கள்.

      //அங்கு சுத்தமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் படத்தில் தெரியவில்லை பெரிதாக்கிப்பார்க்க நினைத்தேன் முடியலை. பாலத்தின் அந்தப் பக்கம் தண்ணீர் இல்லை வறண்டு உள்ளதோ?//

      சுத்தமாக இருந்தது கீதா. வாத்துகள் நீந்தி கொண்டு இருக்கிறது. பஸ்ஸில் போகும் போது அலைபேசியில் எடுத்த படம்.
      பாலத்துக்கு அந்த பக்கம் தண்ணீர் தெரியவில்லை, பெரிது செய்து பார்த்தேன். வறண்டு போய் இருக்கிறதா? அல்லது இந்த பக்கம் மட்டும் தான் தண்ணீர் வரத்தா தெரியவில்லை.

      நீக்கு
  10. படங்கள் ஹோட்டல் பற்றிய தகவல்கள் எல்லாமே அருமையாக இருக்கு கோமதிக்கா.

    இப்படி நம் தலையை முகத்தை நுழைத்துப் படம் எடுப்பது நிறைய இடங்களில் அங்கு இருக்கும் போல. முன்பு இப்படிச் செய்து கொடுத்து கவின் எல்லாம் கூட முகம் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்ட நினைவு வருது. ஒரு நிகழ்வில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் ஹோட்டல் பற்றிய தகவல்கள் எல்லாமே அருமையாக இருக்கு கோமதிக்கா.//

      நன்றி.

      //இப்படி நம் தலையை முகத்தை நுழைத்துப் படம் எடுப்பது நிறைய இடங்களில் அங்கு இருக்கும் போல. முன்பு இப்படிச் செய்து கொடுத்து கவின் எல்லாம் கூட முகம் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்ட நினைவு வருது. ஒரு நிகழ்வில்.//

      ஆமாம் , இங்கு நிறைய இடங்களில் இருக்கிறது. இதை நிறைய பதிவுகளில் பதிவு செய்து இருக்கிறேன்.
      மகன் செய்து இருந்தார் இரண்டு , மூன்று. பேரன் , மற்றும் சிறுவர்கள் எடுத்து கொண்டார்கள் படம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  11. மதுவகை அருந்தும் - அந்தப் படத்தில் தெரியும் கட்டிடத்தில் கேரளத்து பாணி போல வலப்புறம் தெரியும் இடம் அரசவை மாடம் போலத் தெரிகிறது.

    கடைகள் அழகு சிப்பிப் பொருட்கள் நம்மூரில் கண்ணாடி சுற்றி இப்படி இதயவடிவில் செய்திருப்பாங்களே அது போல!

    எனக்குப் பீங்கான் பொருட்கள் கடை ரொம்பப் பிடித்தது. பீங்கான், கண்ணாடிப் பொருட்கள் ரொம்பப் பிடிக்கும் அதாவது அடுக்களையில் பயன்படுத்த. அந்தக் கடை மனதை ஈர்க்கிறது

    அட நம்ம ஊர்ல வாசலில் வைப்பது போல கை வாழ்க வளமுடன் என்று சொல்வது பொல!!!

    பச்சை சிவப்புக் கல் நடுல இருப்பதால் ஒரு வேளை வீட்டில் யாரும் இல்லை என்பதைக் குறிக்க சிவப்பும், உள்ளே இருக்கோம்னு சொல்ல பச்சையுமாக இருக்குமோ?

    மீன் எலும்புகளில் செய்தவையாக இருக்கும் என்றே தோன்றுகிறது கோமதிக்கா

    கீதா




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுவகை அருந்தும் - அந்தப் படத்தில் தெரியும் கட்டிடத்தில் கேரளத்து பாணி போல வலப்புறம் தெரியும் இடம் அரசவை மாடம் போலத் தெரிகிறது.//

      ஆமாம், மர வேலைப்பாடு கேரளபாணி போலதான் இருக்கிறது.

      //கடைகள் அழகு சிப்பிப் பொருட்கள் நம்மூரில் கண்ணாடி சுற்றி இப்படி இதயவடிவில் செய்திருப்பாங்களே அது போல!//

      நம் ஊர் கடற்கரை பகுதிகளில் இப்படிதான் விற்பார்கள்.
      இதுவும் கடற்கரை பக்கம் தானே இருக்கிறது. பக்கத்தில் பீச் இருக்காம். அவர்கள் கூட்டிப்போகவில்லை.

      //எனக்குப் பீங்கான் பொருட்கள் கடை ரொம்பப் பிடித்தது. பீங்கான், கண்ணாடிப் பொருட்கள் ரொம்பப் பிடிக்கும் அதாவது அடுக்களையில் பயன்படுத்த. அந்தக் கடை மனதை ஈர்க்கிறது//

      ஆமாம், பீங்கான், கண்ணாடி பொருட்கள் அழகுதான்.

      //அட நம்ம ஊர்ல வாசலில் வைப்பது போல கை வாழ்க வளமுடன் என்று சொல்வது பொல!!!//

      நாங்கள் கார்த்திகை மாதம் அரிசிமாவால் கை பதிப்போம் கதவில்.

      //பச்சை சிவப்புக் கல் நடுல இருப்பதால் ஒரு வேளை வீட்டில் யாரும் இல்லை என்பதைக் குறிக்க சிவப்பும், உள்ளே இருக்கோம்னு சொல்ல பச்சையுமாக இருக்குமோ?//

      தெரியவில்லை கீதா, மூன்று கலர் கை இருக்கு பாருங்க.
      கருப்பு, பச்சை, சிவப்பு இருக்கிறது.

      //மீன் எலும்புகளில் செய்தவையாக இருக்கும் என்றே தோன்றுகிறது கோமதிக்கா//

      இருக்கலாம் கீதா, கவன் கல் கிட்டே அந்த போர்ட் இருந்தது, கவன் கல் மரக்கைபிடி. மற்ற பொருட்கள் மீன் எலும்பில் செய்து இருக்கலாம்.

      நீக்கு
  12. பொம்மலாட்ட பொம்மைகள் மிக அழகு.

    ஆ! மேலே பார்த்த அந்த மாடம் கீழே இன்னும் தெளிவாக வந்துவிட்டது! மேலே சொன்ன அதே கருத்துதான் அப்படித்தான் தெரிகிறது. கேரளத்து வீடு போல இருக்கு,

    பழைய கால கண்ணாடி ஜன்னல்கள் படங்கள் எல்லாமே நினைவுகளைச் சுமப்பவையாக இருக்கும். ஏதேனும் கதைகள் பின்னணியில் இருக்கக் கூடும்.

    மது என்பது நாம் நினைக்கிறோம் இப்பத்தான் வந்தது என்று. இல்லை அது முந்தைய காலங்களிலும் உண்டு. புராணங்களில் கூட வருமே!

    மேலே மரத்தால் ஆன கூரை, அலங்கார மரப்படிகள் அதற்கு முந்தைய படம் எல்லாமே கேரளத்தை நினைவுபடுத்துகின்றன.

    தொடர்கிறோம் கோமதிக்கா. எல்லாமே சும்மா அம்சமா இருக்கு ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொம்மலாட்ட பொம்மைகள் மிக அழகு.//
      குழந்தைகள் எல்லாம் வாங்கி கையில் வைத்து ஆட்டிக் கொண்டே போனார்கள். மெக்சிகன் தொப்பி எல்லோரும் வாங்கி போனார்கள்.பேரம் முன்பே வாங்கி வாங்கி விட்டதால் இந்த தடவை வாங்கவில்லை.

      //ஆ! மேலே பார்த்த அந்த மாடம் கீழே இன்னும் தெளிவாக வந்துவிட்டது! மேலே சொன்ன அதே கருத்துதான் அப்படித்தான் தெரிகிறது. கேரளத்து வீடு போல இருக்கு,

      பழைய கால கண்ணாடி ஜன்னல்கள் படங்கள் எல்லாமே நினைவுகளைச் சுமப்பவையாக இருக்கும். ஏதேனும் கதைகள் பின்னணியில் இருக்கக் கூடும்.//

      நிறைய கதைகள் இருக்கும் கீதா. பழைய கால படங்கள் நிறைய இருந்தன நான் ஒன்று, இரண்டு தான் எடுத்தேன்.

      //மது என்பது நாம் நினைக்கிறோம் இப்பத்தான் வந்தது என்று. இல்லை அது முந்தைய காலங்களிலும் உண்டு. புராணங்களில் கூட வருமே!//

      ஆமாம், கீதா.

      //மேலே மரத்தால் ஆன கூரை, அலங்கார மரப்படிகள் அதற்கு முந்தைய படம் எல்லாமே கேரளத்தை நினைவுபடுத்துகின்றன.

      தொடர்கிறோம் கோமதிக்கா. எல்லாமே சும்மா அம்சமா இருக்கு ரசித்தேன்//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.




      நீக்கு