இரண்டு நாட்கள் முன்பு மாலை நேரம் ரோட் ரன்னர் பறவை மகன் வீட்டு முன் பக்கம் வந்து நடந்து கொண்டு இருந்தது, நான் பேரனை "காமிராவை எடுத்துவா படங்களை எடுக்கலாம்" என்றேன், கவின் காமிராவை எடுத்து வந்து "நானே எடுக்கிறேன்" என்று அதன் பின்னலேயே போய் படங்ககளும், காணொளியும்
எடுத்து வந்தான்.
எடுத்து வந்தான்.
ரோட் ரன்னர் -2
இதற்கு முன்னர் போட்ட ரோட் ரன்னர் பறவை பதிவுகள் படித்து இருப்பீர்கள்.
பேரன் எடுத்த காணொளி இந்த பறவை காலை எட்டி வைத்து நடப்பது, கீழே மண்ணை தோண்டி சிறகை விரிந்து அமர்வது எல்லாம் பார்க்கலாம் சின்ன காணொளி தான். கோடைக்கு குளிர்ச்சியை தேடுகிறது. மாலை நேரம் எடுத்த படங்கள், காணொளி
கோடை காலம் வந்து விட்டதால் முன்னாலும், பின்னாலும் பறவைகளும் உணவும் நீரும் வைத்து இருக்கிறது.
தேன் சிட்டுக்கு என்று வைத்து இருக்கும் தண்ணீர் ஜாடி
தேன் சிட்டு குடிப்பது தெரிகிறதா?
மாலை நேரம் தினம் தேன் சிட்டு நீர் அருந்த வருகிறது.
பூ அமைப்பில் தான் தன் நீண்ட ஊசி போன்ற அலகை வைத்து உறிஞ்சி குடிக்கும்
பேரன் எடுத்த படங்கள்
மகன் எடுத்த படம், காணொளி
https://www.youtube.com/watch?v=h_zHJk0Bfh4
தேன் சிட்டு வரும் நேரம் காத்து இருந்து எடுத்த காணொளி
மலர்களில் மாறி மாறி அமர்ந்து தேன் அருந்துவது போல தண்ணீர் ஜாடியில் உள்ள நான்கு பக்க மலர்களிலும் நீர் அருந்துகிறது. கொஞ்சம் நீர் அருந்தி விட்டு தன் அலகை தேய்த்து சுத்தப்படுத்தி விட்டு அடுத்த மலரில் அமர்ந்து நீர் அருந்துகிறது. பின் கண்ணாடி ஜாடியில் தன் முகம் பார்த்து பேசுகிறது. பார்த்து கொண்டே நிற்கிறது. பின் பறந்து போகிறது. மகன் எடுத்த காணொளி.
மாலை நேரம் மகன் செடிகளுக்கு தண்ணீர் விடும் போது கொஞ்சமும் பயமில்லாமல் முருங்கைப்பூவில் தேன் அருந்துகிறது. இதுவும் மகன் எடுத்த காணொளிதான்.
படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது பெயரன், பெயர்த்திக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் சகோ தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//
நன்றி.
//தங்களது பெயரன், பெயர்த்திக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்//
முதலில் வந்து வாழ்த்துகள் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஜி.
காணொளிகள் அனைத்தும் கண்டேன்.
பதிலளிநீக்கு//காணொளிகள் அனைத்தும் கண்டேன்.//
நீக்குநன்றி .
இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசாலையில் ஓடும் பறவைப் படங்கள் அருமை.
தேன்சிட்டு நீர்ருந்தும் காணொளி புதுமை. பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது புண்ணியத்துக்குரிய செயல்.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//
இருவருக்கும் உங்கள் வாழ்த்துகள் கிடைத்தது மகிழ்ச்சி.
//சாலையில் ஓடும் பறவைப் படங்கள் அருமை.//
நன்றி.
//தேன்சிட்டு நீர்ருந்தும் காணொளி புதுமை. பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது புண்ணியத்துக்குரிய செயல்.//
உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத்தமிழன்.
பேத்தி, கவின் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோமதிக்கா.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை. ரோட் ரன்னர் படங்கள் காணொளிகள் தேன் சிட்டு நீர் அருந்தும் காணொளி, தேன் எடுக்கும் காணொளி எல்லாமே மிக அருமை. நல்லா வந்திருக்கு மகனும், பேரனும் எடுத்தவை மிகத் தெளிவாக வந்திருக்கின்றன கோமதிக்கா. யுட்யூபிலும் பார்த்துவிட்டேன்.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//பேத்தி, கவின் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோமதிக்கா.//
நன்றி கீதா
//படங்கள் எல்லாம் அருமை. ரோட் ரன்னர் படங்கள் காணொளிகள் தேன் சிட்டு நீர் அருந்தும் காணொளி, தேன் எடுக்கும் காணொளி எல்லாமே மிக அருமை. நல்லா வந்திருக்கு மகனும், பேரனும் எடுத்தவை மிகத் தெளிவாக வந்திருக்கின்றன கோமதிக்கா. யுட்யூபிலும் பார்த்துவிட்டேன்.//
அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
தேன் சிட்டு நீர் அருந்துவது தெரிகிறது. பின் பக்கம் தெரிகிறது.
பதிலளிநீக்கு//மாலை நேரம் மகன் செடிகளுக்கு தண்ணீர் விடும் போது கொஞ்சமும் பயமில்லாமல் முருங்கைப்பூவில் தேன் அருந்துகிறது.//
ஆச்சரியமான விஷயம் கோமதிக்கா. எப்படி அவை பயமில்லாமல் இருந்தது என்பது. பழைய வீட்டில் கறிவேப்பில்லை மரத்திற்கு வரும். அப்படி வரப்ப நான் எடுக்க கொஞ்சம் அருகில் சென்றால் உடனே ஓடி விடும். படங்கள் ரொம்பத் தெளிவா இல்லாததால் நான் போடாம வைச்சிருக்கேன்.
எனக்கு இவ்வளவு தெளிவாக எடுக்க வந்ததில்லை. நம் வீட்டுக்கு வந்த தேன்சிட்டு மஞ்சள் உடலும் கழுத்துப் பக்கம் கொஞ்சம் நீலமாகவும் இருக்கும்.விர் விர் என்று சத்தம் வரும் பறக்கும் போது. ரொம்ப அழகாகத் தெளிவாக வந்திருக்கு கோமதிக்கா மகன், பேரன் இருவரிடமும் சொல்லுங்க.
கீதா
//தேன் சிட்டு நீர் அருந்துவது தெரிகிறது. பின் பக்கம் தெரிகிறது.//
நீக்குமகனிடம் எப்போது வந்து தண்ணீர் குடிக்கிறது என்றே தெரிய மாட்டேன் என்கிறது. தேன் சிட்டு தண்ணீர் குடிப்பதை பார்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டே இருந்தேன்.
//ஆச்சரியமான விஷயம் கோமதிக்கா. எப்படி அவை பயமில்லாமல் இருந்தது என்பது. பழைய வீட்டில் கறிவேப்பில்லை மரத்திற்கு வரும். அப்படி வரப்ப நான் எடுக்க கொஞ்சம் அருகில் சென்றால் உடனே ஓடி விடும். படங்கள் ரொம்பத் தெளிவா இல்லாததால் நான் போடாம வைச்சிருக்கேன்.//
கோடை ஆரம்பித்தவுடன் ஒரு தேன் சிட்டு மாலை நேரம் தினம் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தது. ஆரம்பித்தில் கண்ணாடி கதவு வழியாக நம்மை பார்த்தால் பறந்து விடும் பிறகு பழக ஆரம்பித்து பயபடவில்லை. அதுதான் மகன் தோட்டத்து கதவை திறந்து வெளியே போய் வரும் நேரம் காத்து இருந்து எடுத்து தந்தான் .
அது போல முருங்கை மரத்துக்கு தண்ணீர் விடும் போதும் பயமில்லாமல் நின்றது.
//எனக்கு இவ்வளவு தெளிவாக எடுக்க வந்ததில்லை. நம் வீட்டுக்கு வந்த தேன்சிட்டு மஞ்சள் உடலும் கழுத்துப் பக்கம் கொஞ்சம் நீலமாகவும் இருக்கும்.விர் விர் என்று சத்தம் வரும் பறக்கும் போது. ரொம்ப அழகாகத் தெளிவாக வந்திருக்கு கோமதிக்கா மகன், பேரன் இருவரிடமும் சொல்லுங்க.//
மாயவரத்திலும், திருவெண்காட்டிலும் எங்கள் வீட்டில் கூடு கட்டியது மஞ்சள் , நீலமாகவும் உள்ள தேன் சிட்டுதான்.
இங்கு இந்த வகை தேன் சிட்டை மட்டுமே பார்க்கிறேன்.
இருவரிடமும் சொல்கிறேன் .
ரோட் ரன்னர் காணொளி (கவின் எடுத்தது) ரசித்துப் பார்த்தேன். இங்கும். ஆமாம் மண்ணைத் தோண்டி சிறகை விரித்து அமர்வது செம அழகு! சிறகு ஃபேன் போல ரொம்ப அழகா இருக்கு.
பதிலளிநீக்குஒரு படத்தில் ரோட் ரன்னர் வாயில் எதையோ வைத்திருப்பது தெரிகிறது. இந்தப் பதிவில் ரோட் ரன்னர் பறவை மிகவும் தெளிவாகத் தெரிந்ததுகோமதிக்கா. அதன் கண்ணின் வட்ட பாப்பாவின் மறு புறம் ஆரஞ்சு கலர்ல இருப்பதும் தெரிந்தது, எல்லாமும் பார்த்து ரசித்தேன்.
தேன்சிட்டு நீர் அருந்த ஜாடி வைத்திருப்பது அந்த ஜாடி மிக அழகாக இருக்கு கீழே தேன் சிட்டு அந்த பூ வடிவில் இருப்பதில் நீர் அருந்துவதும் தெரிகிறது. என்ன அழகான ஜாடி! எல்லாமே மிகவும் ரசனையோடு தயாரிக்கறாங்க!
கீதா
//ரோட் ரன்னர் காணொளி (கவின் எடுத்தது) ரசித்துப் பார்த்தேன். இங்கும். ஆமாம் மண்ணைத் தோண்டி சிறகை விரித்து அமர்வது செம அழகு! சிறகு ஃபேன் போல ரொம்ப அழகா இருக்கு.//
நீக்குகவின் அது போகும் இடமொல்லாம் அதை பின் தொடர்ந்து போய் எடுத்து தந்தான். நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெரியும் அதுதான் பதிவு செய்தேன்.
//ஒரு படத்தில் ரோட் ரன்னர் வாயில் எதையோ வைத்திருப்பது தெரிகிறது. இந்தப் பதிவில் ரோட் ரன்னர் பறவை மிகவும் தெளிவாகத் தெரிந்ததுகோமதிக்கா. அதன் கண்ணின் வட்ட பாப்பாவின் மறு புறம் ஆரஞ்சு கலர்ல இருப்பதும் தெரிந்தது, எல்லாமும் பார்த்து ரசித்தேன்.//
நீங்களும் ஆரஞ்சு கலர் பின் பகுதி வரை இரண்டு பிரிவாக தெரிகிறது.
நீங்களும் நங்கு கவனித்து இருக்கிறீர்கள்.
//தேன்சிட்டு நீர் அருந்த ஜாடி வைத்திருப்பது அந்த ஜாடி மிக அழகாக இருக்கு கீழே தேன் சிட்டு அந்த பூ வடிவில் இருப்பதில் நீர் அருந்துவதும் தெரிகிறது. என்ன அழகான ஜாடி! எல்லாமே மிகவும் ரசனையோடு தயாரிக்கறாங்க!//
தேன் சிட்டு குணம் அறிந்து அதற்கு வசதியாக தயார் செய்து இருக்கிறார்கள்.
வாயில் எதுவும் வைத்திருக்கவில்லை. நீங்கள் படம் எடுத்த அந்தக் கோணம் செம ஷாட். அந்தப் பக்கம் இருக்கும் கற்களின் வரிசையில் உள்ள வெள்ளைக் கல் இரு அலகுகளுக்கும் இடையில் தெரிவதால் அது வாயில் இருப்பது போன்று செம ஷாட்!!!!
நீக்குசிலர் தாஜ்மஹால், நிலவு இதை எல்லாம் கையில் அல்லது தலைக்கு மேல் வைத்திருப்பது போல் படம் எடுப்பாங்களே அப்படி!!!
கீதா
ரோட் ரன்னர் பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. முன்பும் போட்டிருந்தீர்கள் என்பதும் தெரிந்தது. அதையும் பார்த்தேன்.
பதிலளிநீக்குபறவை நடப்பதும், மண்ணைத் தோண்டி அமர்வதும், தேன் சிட்டு நீர் அருந்தும் காணொளியும் எல்லாமுமே அழகு. காணொளிகள் படங்கள் எல்லாமே அருமையாக வந்திருக்கின்றன.
பேத்திக்கும் பேரனுக்கும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! இறைவன் எல்லா நன்மைகளும் ஆசிர்வதிக்கப் பிரார்த்தனைகள்.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//ரோட் ரன்னர் பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. முன்பும் போட்டிருந்தீர்கள் என்பதும் தெரிந்தது. அதையும் பார்த்தேன்.//
பழைய பதிவுகளை பார்த்தது மகிழ்ச்சி, நன்றி.
//பறவை நடப்பதும், மண்ணைத் தோண்டி அமர்வதும், தேன் சிட்டு நீர் அருந்தும் காணொளியும் எல்லாமுமே அழகு. காணொளிகள் படங்கள் எல்லாமே அருமையாக வந்திருக்கின்றன.//
கோழி, நாய் எல்லாம் மண்ணை கிளறும் பின் அமரும் அது போல இருந்தது இதன் செயல். காணொளிகளை ரசித்தமைக்கு நன்றி.
//பேத்திக்கும் பேரனுக்கும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! இறைவன் எல்லா நன்மைகளும் ஆசிர்வதிக்கப் பிரார்த்தனைகள்.//
உங்கள் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகளுக்கு மகிழ்ச்சி, நன்றி.
பேத்தி, பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். படங்களை ரசித்தேன். காணொளிகளும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//பேத்தி, பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். படங்களை ரசித்தேன். காணொளிகளும்.//
படங்களை, காணொளிகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.
மாதங்கி, கவின் இருவருக்கும் என் அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குரோடு ரன்னர் குறித்த முந்தைய பதிவுகள் நினைவில் உள்ளன. இந்தப் பதிவிலும் பல கோணங்களில் அருமையான படங்கள். காணொளிகளும் சிறப்பு.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//மாதங்கி, கவின் இருவருக்கும் என் அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!//
மாதினி, கவின் இருவருக்கும் உங்கள் அன்பான வாழ்த்துகள் கிடைத்தது மகிழ்ச்சி.
//ரோடு ரன்னர் குறித்த முந்தைய பதிவுகள் நினைவில் உள்ளன. இந்தப் பதிவிலும் பல கோணங்களில் அருமையான படங்கள். காணொளிகளும் சிறப்பு.//
படங்களை, காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. தங்கள் பேரனுக்கும், மகனுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
மேலும் கவினுக்கும், தங்களின் பேத்திக்கும் என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை . தெரிவியுங்கள். இருவரும் நன்றாக படித்து சீரும் சிறப்புமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
கவின் எடுத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. போட் ரன்னர் பறவையின் படங்களை ரசித்தேன். எல்லா காணொளிகளும் நன்றாக உள்ளது. தேன் சிட்டுப்பறவை தண்ணீரை தன் நீண்ட அலகால் ஊறிஞ்சி குடிக்கும் அருமையான காணொளியை பார்த்து ரசித்தேன். அந்த ஜாடியும் மிக அழகு. முன்பே இதை பகிர்ந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். இருப்பினும் இது புத்தம் புதிதாக உள்ளது. இது வேறோ?
நேற்று மதியமே வர வேண்டுமென நினைத்தேன். வீட்டு வேலைகளோடு மதியம் வெளியில் செல்லும் ஒரு வேலையும் வந்து விட்டது. அதனால் நேற்றே உடனடியாக வர இயலவில்லை.அதனால் இன்று சீக்கிரமாக 4.15க்கு முழிப்பு வந்தவுடன் வந்து விட்டேன். பிறகு நிறைய வேலைகள் வந்து விடும். ஆனாலும் தாமதமாக தங்கள் பேரன் கவினுக்கு வாழ்த்துச் சொன்னதற்கு வருந்துகிறேன்.
இன்று என் பேத்திக்கும் பிறந்த நாள். சிறப்பான ஆனி மாதத்தில் பிறந்திருக்கும் நம் வீட்டு குழந்தைகள் வாழ்வில் என்றும் சுபிட்சமாக இருக்க வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. தங்கள் பேரனுக்கும், மகனுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.//
வாழ்த்துகளுக்கு நன்றி.
//கவினுக்கும், தங்களின் பேத்திக்கும் என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை . தெரிவியுங்கள். இருவரும் நன்றாக படித்து சீரும் சிறப்புமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.//
உங்கள் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
//கவின் எடுத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. போட் ரன்னர் பறவையின் படங்களை ரசித்தேன். எல்லா காணொளிகளும் நன்றாக உள்ளது. தேன் சிட்டுப்பறவை தண்ணீரை தன் நீண்ட அலகால் ஊறிஞ்சி குடிக்கும் அருமையான காணொளியை பார்த்து ரசித்தேன்.//
ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//அந்த ஜாடியும் மிக அழகு. முன்பே இதை பகிர்ந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். இருப்பினும் இது புத்தம் புதிதாக உள்ளது. இது வேறோ?//
வெறும் ஜாடி படம் முன்பு போட்டு இருக்கிறேன். ஆனால் இந்த பதிவில் தேன்சிட்டு நீர் அருந்துகிறது அதில் புது படம்.
//நேற்று மதியமே வர வேண்டுமென நினைத்தேன். வீட்டு வேலைகளோடு மதியம் வெளியில் செல்லும் ஒரு வேலையும் வந்து விட்டது. அதனால் நேற்றே உடனடியாக வர இயலவில்லை.//
பரவாயில்லை கமலா. வீட்டு வேலைஅக்ளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//அதனால் இன்று சீக்கிரமாக 4.15க்கு முழிப்பு வந்தவுடன் வந்து விட்டேன். பிறகு நிறைய வேலைகள் வந்து விடும். ஆனாலும் தாமதமாக தங்கள் பேரன் கவினுக்கு வாழ்த்துச் சொன்னதற்கு வருந்துகிறேன்.//
வாழ்த்து எப்போதும் கொடுக்கலாம். உங்கள் ஆசீர்வாதங்கள் குழந்தைகளுக்கு கிடைத்தது மகிழ்ச்சி.
அதிகாலையில் வந்து வாழ்த்துக்கள் சொன்னது மகிழ்ச்சி, நெகிழ்வு.
//இன்று என் பேத்திக்கும் பிறந்த நாள். //
பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், ஆசீர்வாதங்கள்.
எல்லா வளங்களும், எல்லா நலங்களும் இறைவன் அருள பிரார்த்தனைகள்.
//சிறப்பான ஆனி மாதத்தில் பிறந்திருக்கும் நம் வீட்டு குழந்தைகள் வாழ்வில் என்றும் சுபிட்சமாக இருக்க வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
சிறப்பான ஆனி மாதம் தான் உங்கள் மனம் நிறைந்த பிரார்த்தனைகள் பிரம்ம மூகூர்த்தம் சமயம் சொல்லி இருக்கிறீர்கள்.
இறைவன் நிறைவேற்றி வைப்பார்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி நன்றி.
படங்கள் அனைத்தும் அழகு. ரோட் ரன்னர் பறவை குறித்த உங்கள் முந்தைய பதிவுகள் நினைவுக்கு வந்தன.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் அழகு. ரோட் ரன்னர் பறவை குறித்த உங்கள் முந்தைய பதிவுகள் நினைவுக்கு வந்தன.//
பழைய பதிவுகள் நினைவு வைத்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பொறுமையுடன் காத்திருந்து படங்களும் காணொளிகளும் எடுத்து எங்களுக்கு சூடாறாமல் பரிமாறியதிற்கு நன்றி. அழகான படங்கள், காணொளிகள்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பொறுமையுடன் காத்திருந்து படங்களும் காணொளிகளும் எடுத்து எங்களுக்கு சூடாறாமல் பரிமாறியதிற்கு நன்றி. அழகான படங்கள், காணொளிகள்.//
படங்களை, காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பறவைகள் காணொளி தேன்சிட்டு என அருமையான படங்கள்.
பதிலளிநீக்குபேரன் பேத்தி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசீர்வாதமும்.