வியாழன், 5 செப்டம்பர், 2024

கற்பக விநாயகா போற்றி ! கருணை கடலே போற்றி!



இந்த முறை மகா கண்பதி கோவிலுக்கு மகன்  செய்து கொடுத்த பிள்ளையாருடன் பேரன் இருக்கிறான்.


"மகா கணபதி ஆலயம் "அரிசோனாவில் இருக்கிறது. இந்த கோவிலில்  வருடா வருடம்  பிள்ளையார் சதுர்த்தி   விழா சிறப்பாக நடக்கும்.
பிள்ளையார் சதுர்த்திக்கு சில தினங்களுக்கு முன் குழந்தைகள் களிமண்ணால் தங்கள் கைகளால்  பிள்ளையார் செய்வார்கள். அதற்கு விளம்பர பலகைகள் மகன் செய்து தருவான். பல இடங்களில் இந்த கோவிலின் சார்பாக நடைபெறும்.    இந்த முறை 24  இடங்களில் நடைபெறுகிறது. அதற்கு 6 பிள்ளையார்கள்  செய்து கொடுத்து இருக்கிறான் மகன்.
தாங்கள் செய்த பிள்ளையாரை வைத்து பிள்ளையார் சதுர்த்திக்கு பூஜை செய்வது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி.

உங்கள் அனைவருக்கும் "பிள்ளையார் சதுர்த்தி" வாழ்த்துகள்.




யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு  நன்றி
ஒளவையார் அருளிய இந்த பாடலை சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடியதை  கேட்டுக் கொண்டே படங்களை பார்க்கலாம்

வீட்டிலிருந்து கோவிலுக்கு போகும் முன் 

மகன் வீட்டுத்தோட்டத்தில் பிள்ளையாருடன் பேரன்



மகா கணபதி ஆலயத்தில் 


சின்மயா மிஷனில்  நடந்த போது அங்கு உள்ள குழந்தைகள் தாங்கள் செய்த பிள்ளையார்களுடன் மகிழ்ச்சியாக


குழந்தைகள் செய்கிறார்கள், அவர்களுக்கு பெரியவர்கள் உதவி செய்கிறார்கள்.

பிள்ளையார் செய்யும் குடியிருப்பு பகுதியில் பிள்ளையார் செய்யும் குழந்தைகளுக்கு உதவும்  தன்னால்வர்கள்    பிள்ளையாருடன்


குழந்தைகள் அச்சில் களிமண் வைக்கிறார்கள் இரண்டு மூன்று வடிவத்தில் பிள்ளையார் அச்சு இருக்கிறது, குழந்தைகளுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்கிறார்கள்.

பேரன் பிள்ளையார்பட்டி பிள்ளையார் தேர்வு செய்து இருக்கிறான்

செய்து விட்டான்




பேரனும் மகனின் நண்பர் பெண்ணும் 



பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் அனைவருக்கும் அனைத்து நலன்களும் அருள பிரார்த்திக்கிறேன்.


//அற்புதக் கீர்த்தி வேண்டின்

ஆனந்த வாழ்க்கை வேண்டின்

நற்பொருள் குவிதல் வேண்டின்

நலமெலாம் பெருக வேண்டின்

கற்பக மூர்த்தி தெய்வக்

களஞ்சிய திருக்கை சென்று

பொற்பதம் பணிந்து பாரீர்

பொய் இல்லை கண்ட உண்மை!//

- கண்ணதாசன் அவர்கள்

https://www.youtube.com/watch?v=-YXOgUN-ngM&list=RD-YXOgUN-ngM&start_radio=1

யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு  நன்றி

கற்பக விநாயகர் பாடல் டி.எல் .மகாராஜன் அவர்கள்  பாடிய பாடல் வரிகளுடன் இருக்கிறது.


மகளின் உறவினர் எனக்கு  பரிசாக கொடுத்த பிள்ளையார் இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி விழாவில் இடம் பெறுவார்.
 பிள்ளையார்.பிள்ளையார் சதுர்த்திக்கு மகளுடன் மகன் வீட்டுக்கு போகிறோம்.  மகள் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. 


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

33 கருத்துகள்:

  1. மகன் வடிவமைத்த பிள்ளையார்கள் அழகு. அதிலும் அந்த செல்ஃபி பிள்ளையார் குறும்பு. பிள்ளைகள் ஆர்வத்துடன் பிள்ளையார் சிலைகள் செய்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. குடும்பத்தோடு பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்

      //மகன் வடிவமைத்த பிள்ளையார்கள் அழகு. அதிலும் அந்த செல்ஃபி பிள்ளையார் குறும்பு.//

      ரசித்தமைக்கு நன்றி.

      //பிள்ளைகள் ஆர்வத்துடன் பிள்ளையார் சிலைகள் செய்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.//
      ஆமாம், குழந்தைகள் மகிழ்ச்சிக்கு தான் இந்த ஏற்பாடு.

      //குடும்பத்தோடு பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுங்கள். வாழ்த்துகள்.//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதமஞ்சரி

      நீக்கு
  2. அருமை.  அரிசோனா கோவிலுக்கு மகன் பிள்ளையார் செய்து கொடுத்திருப்பது அருமை.  குறும்புப் பார்வையுடன் அழகாக இருக்கிறார் பிள்ளையார்.  கவினுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //அருமை. அரிசோனா கோவிலுக்கு மகன் பிள்ளையார் செய்து கொடுத்திருப்பது அருமை. குறும்புப் பார்வையுடன் அழகாக இருக்கிறார் பிள்ளையார். கவினுக்கும் வாழ்த்துகள்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. முன்பும் இது போல அச்சில் குழந்தைகள் பிலாலியார் பிடிடிபிப்பதை பதிவாக தந்து இருக்கிறீர்கள்.  இந்தியாவில் இருந்தால் கூட இபப்டி ஒரு ஈடுபாடு வருமா என்பது சந்தேகம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பாரம்பரிய பண்பாடுகளை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முன்பும் இது போல அச்சில் குழந்தைகள் பிலாலியார் பிடிடிபிப்பதை பதிவாக தந்து இருக்கிறீர்கள்.//

      ஆமாம் ஸ்ரீராம். சில வருடங்களாக கோவிலுக்கு செய்து கொடுக்கிறான் மகன்.

      //இந்தியாவில் இருந்தால் கூட இபப்டி ஒரு ஈடுபாடு வருமா என்பது சந்தேகம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பாரம்பரிய பண்பாடுகளை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. //

      இந்தியாவில் இப்போது பிள்ளையார் சதுர்த்தி விழா பெரிய அளவில் மாறி விட்டது.

      //வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பாரம்பரிய பண்பாடுகளை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. //

      அங்கு களிமண் பிள்ளையார் விற்க மாட்டார்கள் என்பதால் இப்பிடி ஏற்பாடு. கரைக்கும் விழாவும் கோவிலில் நடைபெறும் அப்போதும் கூட்டம் இருக்கும் கோவிலில். குழந்தைகளுக்கு நண்பர் போன்றவர் பிள்ளையார் அதனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக செய்கிறார்கள்.

      நீக்கு
  4. விநாயகர் அகவல் முன்பு எங்கள் வீட்டில் கேசெட்டில் தினமும் ஒலிக்கும்.  அதைத் தொடர்ந்து கண்டார் சஷ்டி கவசம், சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் என்று ஒலிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விநாயகர் அகவல் முன்பு எங்கள் வீட்டில் கேசெட்டில் தினமும் ஒலிக்கும். அதைத் தொடர்ந்து கண்டார் சஷ்டி கவசம், சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் என்று ஒலிக்கும்.//

      எங்கள் வீட்டிலும் அப்படித்தான். தினம் விநாயகர் அகவலும், சஷ்டி கவசமும் படித்து விடுவேன்.சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் தொலைக்காட்சியில் கேட்டு விடுவேன்.

      நீக்கு
  5. காணொளி பக்கங்களை தனி ஜன்னலில் திறக்குமாறு அமைத்தால் வசதியாக இருக்கும்.  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளி பக்கங்களை தனி ஜன்னலில் திறக்குமாறு அமைத்தால் வசதியாக இருக்கும்.//
      அடுத்த பதிவில் செய்து பார்க்கிறேன்.

      //விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.//

      உங்கள் கருத்துக்களூக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. எல்லா படங்களும் மிக அழகாக இருக்கிறது. தாங்கள் மகன் செய்திருக்கும் பிள்ளையார் மிக அழகாக இருக்கிறது செல்ஃபி எடுத்துக் கொள்ளும் பிள்ளையாரை அற்புதமாக வடிவமைத்துள்ளார். தாங்கள் பேரன் தன் அப்பா செய்திருக்கும் எல்லா பிள்ளையார்களுடன் நின்று போஸ் தரும் படங்கள் அருமையாக உள்ளது.

    கவின் செய்திருக்கும் அச்சுப் பிள்ளையார்( கற்பக விநாயகர்) நன்றாக உள்ளது. தாங்கள் மகனுக்கும், பேரன் கவினுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.

    மேலும் அங்கு கலந்து கொண்ட குழந்தைகள் ஆர்வத்துடன் இதிலெல்லாம் பங்கெடுத்துக் கொள்வது பார்க்கும் போதே மனதுக்கு மகிழ்வாக உள்ளதல்லவா?

    சீர்காழி அவர்களின் விநாயகர் அகவல் கேட்டேன். இதுபோல் பாடி டி. எல் மகராஜன் அவர்களும், இரட்டை விநாயகருக்கு செய்யும் அபிஷேகத்துடன் கூடிய வீடியோ ஒன்றும் அடிக்கடிப் பார்ப்போம். விநாயகர் அகவல் எனக்குப் பிடித்தமான ஸலோகங்களில் ஒன்று. அதை இன்று நீங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    டி. எல் மகராஜன் அவர்கள் பாடிய பாடலையும் கேட்டு மகிழ்ந்தேன்.

    தாங்கள் மகளின் உறவினர் தங்களுக்கு பரிசளித்த பிள்ளையார் படமும் வெகு அழகாக இருக்கிறது. இந்த வருட பூஜையில் அவரும் இடம் பெறுகிறார் என்ற செய்திக்கும் மனம் மகிழ்வுறுகிறது. தங்களுக்கும் தாங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் என் அன்பான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். விழாவை அனைவரும் சேர்ந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. எல்லா படங்களும் மிக அழகாக இருக்கிறது. தாங்கள் மகன் செய்திருக்கும் பிள்ளையார் மிக அழகாக இருக்கிறது செல்ஃபி எடுத்துக் கொள்ளும் பிள்ளையாரை அற்புதமாக வடிவமைத்துள்ளார். தாங்கள் பேரன் தன் அப்பா செய்திருக்கும் எல்லா பிள்ளையார்களுடன் நின்று போஸ் தரும் படங்கள் அருமையாக உள்ளது.//

      நன்றி

      //கவின் செய்திருக்கும் அச்சுப் பிள்ளையார்( கற்பக விநாயகர்) நன்றாக உள்ளது. தாங்கள் மகனுக்கும், பேரன் கவினுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.//

      கண்டிப்பாய் சொல்கிறேன், நன்றி.

      //மேலும் அங்கு கலந்து கொண்ட குழந்தைகள் ஆர்வத்துடன் இதிலெல்லாம் பங்கெடுத்துக் கொள்வது பார்க்கும் போதே மனதுக்கு மகிழ்வாக உள்ளதல்லவா?//

      ஆமாம்.

      //சீர்காழி அவர்களின் விநாயகர் அகவல் கேட்டேன். இதுபோல் பாடி டி. எல் மகராஜன் அவர்களும், இரட்டை விநாயகருக்கு செய்யும் அபிஷேகத்துடன் கூடிய வீடியோ ஒன்றும் அடிக்கடிப் பார்ப்போம். விநாயகர் அகவல் எனக்குப் பிடித்தமான ஸலோகங்களில் ஒன்று. அதை இன்று நீங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.//

      மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கு பிடித்தபாடலை பகிர்ந்தமைக்கு.

      //டி. எல் மகராஜன் அவர்கள் பாடிய பாடலையும் கேட்டு மகிழ்ந்தேன்.

      தாங்கள் மகளின் உறவினர் தங்களுக்கு பரிசளித்த பிள்ளையார் படமும் வெகு அழகாக இருக்கிறது. இந்த வருட பூஜையில் அவரும் இடம் பெறுகிறார் என்ற செய்திக்கும் மனம் மகிழ்வுறுகிறது. தங்களுக்கும் தாங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் என் அன்பான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். விழாவை அனைவரும் சேர்ந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      காணொளிகள் பார்த்து பதிவை படித்து விரிவான கருத்து சொனனதற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நன்றி.




      நீக்கு
  7. பிள்ளையார் அழகு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //பிள்ளையார் அழகு. அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  8. மகன்வடிவமைத்திருக்கும் பிள்ளையார்கள் மிக அழகு. அதனுடன் பேரனின் போஸும் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //மகன்வடிவமைத்திருக்கும் பிள்ளையார்கள் மிக அழகு. அதனுடன் பேரனின் போஸும் சூப்பர்//

      மகன் செய்த பிள்ளையாரையும், பேரன் படத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  9. கோவில்களுக்காகச் செய்ததை ரசித்தேன்.

    களிமண்ணில் பிள்ளையார் செய்வது - குழந்தைகளுக்கான நல் முயற்சி. வருடா வருடம் நடப்பது மகிழ்ச்சி.

    படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவில்களுக்காகச் செய்ததை ரசித்தேன்.

      களிமண்ணில் பிள்ளையார் செய்வது - குழந்தைகளுக்கான நல் முயற்சி. வருடா வருடம் நடப்பது மகிழ்ச்சி.

      படங்கள் அழகு//

      வருடா வருடம் இப்போது பிள்ளையார் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதுவே ஏற்பாடு செய்யும் கோவில் நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. கோவிலுக்கு வருபவர்களுக்கு மோதகம் உண்டா?

    பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவிலுக்கு வருபவர்களுக்கு மோதகம் உண்டா?//

      மோதக பிரசாதம் உண்டு. அறுசுவை உணவும் உண்டு.

      எங்கள் குடியிருப்பிலும்( மதுரை) தடபுடலாக விழா ஏற்பாடு நடக்கிறது.

      //பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது கவர்கிறது.//

      ஆமாம், அங்கு உள்ளவர்கள் எல்லா பண்டிகைகளையும் தங்களுக்கு சொல்ல இது போன்ற விழாக்கள் உதவுகிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. மகன் செய்து கொடுத்திருக்கும் பிள்ளையார் சூப்பரா இருக்கு கோமதிக்கா.

    நிகழ்வுகள் படங்கள் அனைத்தும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      //மகன் செய்து கொடுத்திருக்கும் பிள்ளையார் சூப்பரா இருக்கு கோமதிக்கா.

      நிகழ்வுகள் படங்கள் அனைத்தும் அருமை//

      நன்றி கீதா

      நீக்கு
  12. ஆம்ஆம் அக்கா பாடலைக் கேட்டுக் கொண்டே பதிவையும் படங்களையும் பார்க்கின்றேன்!

    குழந்தைகள் பிள்ளையார் செய்வதை முன்பும் பகிருந்திருந்தீர்கள் இல்லையா நினைவு இருக்கு கோமதிக்கா

    பேரன் பிள்ளையார்பட்டி பிள்ளையார் தேர்வு செய்து இருக்கிறான்//

    சூப்பர்!

    குட்டீஸ் தாங்கள் செய்த பிள்ளையாருடன் நிற்பதும் பேரன் மற்றும் நண்பரின் மகள் நிற்பது எல்லாமே அவர்களுடைய மகிழ்ச்சியைக் காட்டுகிறது!

    பேரன் வடித்திருக்கும் பிள்ளையார் அருமையாக இருக்கிறார் பிள்ளையார்பட்டி பிள்ளையார்!!

    மகளின் உறவினர் எனக்கு பரிசாக கொடுத்த பிள்ளையார் இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி விழாவில் இடம் பெறுவார்.//

    நல்ல விஷயம் கோமதிக்கா

    ஓ மகளுடன் மகன் வீட்டிற்க்குப் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட!! மகிழ்ச்சியான விஷயம்.

    உங்களுக்கும் உங்கள் மகன் மகள் குடும்பத்தாருக்கும் கவினுக்கும் மனமார்ந்த பிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. பிள்ளையார் அச்சு இந்தியாவிலிருந்து கொண்டு வந்ததா? பிள்ளைகள் செய்ய சுலபமாக ஒரு பக்கம் மட்டுமே இருக்கிறது. பின் பக்கம் இல்லை. படங்கள் அழகாக இருக்கின்றன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
      //பிள்ளையார் அச்சு இந்தியாவிலிருந்து கொண்டு வந்ததா? //

      அப்படித்தான் இருக்கும்.

      //பிள்ளைகள் செய்ய சுலபமாக ஒரு பக்கம் மட்டுமே இருக்கிறது. பின் பக்கம் இல்லை.//

      ஆமாம்.

      //படங்கள் அழகாக இருக்கின்றன.//

      நன்றி.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. உங்கள் மகன் செய்திருக்கும் விநாயகர் மிக அழகு. கட் அவுட்டா? பேரன் செய்திருக்கும் பிளையாரும் அழகு. தாங்கள் செய்த பிள்ளையார்களை கைகளில் ஏந்தி நிற்கும் குழந்தைகளின் சிரிப்பு கொள்ளை கொள்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //உங்கள் மகன் செய்திருக்கும் விநாயகர் மிக அழகு. கட் அவுட்டா?//

      ஆமாம் கீழே வைத்து அதனுடன் பிள்ளைகள் படம் எடுத்துக் கொள்ள தயார் செய்தது.

      //பேரன் செய்திருக்கும் பிளையாரும் அழகு. தாங்கள் செய்த பிள்ளையார்களை கைகளில் ஏந்தி நிற்கும் குழந்தைகளின் சிரிப்பு கொள்ளை கொள்கிறது.//

      ஆமாம், அவர்களே செய்த பெருமித சிரிப்பு.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. மகன் செய்த பிள்ளையார் மிகவும் அழகாக இருக்கிறார். கொஞ்சம் குறும்புத்தனமாக இருப்பது போலவும் இருக்கிறார். பிள்ளையார் செய்ய்ய வந்த குழந்தைகளும் முகம் நிறைய சிரிப்புடனிருப்பதைப்பார்த்து ரசித்தேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      //மகன் செய்த பிள்ளையார் மிகவும் அழகாக இருக்கிறார். கொஞ்சம் குறும்புத்தனமாக இருப்பது போலவும் இருக்கிறார். பிள்ளையார் செய்ய்ய வந்த குழந்தைகளும் முகம் நிறைய சிரிப்புடனிருப்பதைப்பார்த்து ரசித்தேன்!!//

      ஆமாம், குழந்தைகள் மகிழ்ச்சி நமக்கும் மகிழ்ச்சியை தருகிறது.
      பிள்ளையாரை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. மகன் செய்த பிள்ளையார்கள், பேரன் பிரமாதமாகச் செய்திருக்கும் கற்பக விநாயகர், தங்களுக்குப் பரிசாக அருள் செய்ய வந்த கணபதி, நிகழ்வின் தொகுப்பு யாவும் அருமை, நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      பதிவில் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    நான் தங்களது பதிவை எதிர் பார்த்தேன் ஆனாலும் விடுபட்டு இருக்கிறது.

    அழகிய படங்களுடன் தரிசனம் கிடைத்தது நன்றி.

    சீர்காழியார் பாடல் நன்று.

    டி.எல்.மகாராஜன் பாடல் தினமும் கேட்டு மகிழ்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

      நான் தங்களது பதிவை எதிர் பார்த்தேன் ஆனாலும் விடுபட்டு இருக்கிறது.//

      நினைத்தேன்.

      //அழகிய படங்களுடன் தரிசனம் கிடைத்தது நன்றி.

      சீர்காழியார் பாடல் நன்று.

      டி.எல்.மகாராஜன் பாடல் தினமும் கேட்டு மகிழ்வது.


      அழகிய படங்களுடன் தரிசனம் கிடைத்தது நன்றி.//
      நீங்கள் தினம் கேட்டு மகிழும் பாடல் என்பது அறிந்து மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு