வியாழன், 6 ஜூன், 2024

சேத்னா காயத்ரி உணர்வு மையம் (All World Gayatri Pariwar Anaheim)

வேத மாதா காயத்ரி
மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன்.  மூன்று இரவுகள் கடற்பயணம், திங்கள் காலை  வந்தோம்.

மே 30 தேதி வியாழன்  மதியம் இரண்டு மணிக்கு மேல்  அரிசோனாவிலிருந்து கிளம்பி ஆறுமணி நேரம் பயணம் செய்து   லாஸ் ஏஞ்சல்ஸ் அடைந்தோம்,   அங்கு ஓட்டலில் தங்கி விட்டோம் இரவு . வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் தான் எங்கள் பயணம் தொடங்கும்,  அதனால் மே 31 ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் இந்த காயத்ரி கோவிலுக்கு அழைத்து சென்றார் மகன். 
 

முன் பக்க தோற்றம்.

லாஸ் ஏஞ்சலஸ்   கலிபோர்னியாவில்  இந்தியாவின் அனைத்து உலக காயத்ரி பரிவார்  இயக்கத்தை சேர்ந்தவர்கள்  இங்கு  "காயத்ரி உணர்வு மையம்" நிறுவி இருக்கிறார்கள்.

அவர்களின் நோக்கம் மனிதர்களின் தெய்வீக குணத்தை  வளர்ப்பதும்,  நேர்மறையான எண்ணங்களை, மற்றும் ஆன்மீக மனநிலையை வளர்ப்பதும். இதை அடைய மூன்று  முனை அணுகுமுறையை சொல்லி தருகிறது அவை :-   "உபாசனா", (பிரார்த்தனைகளின் சக்தி), "சாதானா"(சுய விசாரணை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் சுய - சுத்திகரிப்பு) மற்றும் "ஆராதனா" (மனித குலத்திற்கு  தன்னலமற்ற சேவை)
மத நம்பிக்கை மட்டுமல்லாமல்  சமூகத்தில் உள்ள அனைவருக்கும்  சேவை செய்வது மையத்தின்   நோக்கம்.

இந்த பதிவில் அந்த மையத்தின் படங்கள்,  அங்கு அமைத்து இருந்த தோட்டத்து மலர்கள் இடம் பெறுகிறது.



 கோபுர தரிசனம்


முதலில் போனதும் இவர்கள் இருவரையும் தரிசனம் செய்து விட்டு உள்ளே போகிறோம்.

நாகாபரணத்தோடு சிவன் கோவில் தோட்டத்தில் பூத்த மலர்களை சூடி கொண்டு இருக்கிறார்






காய்திரி தேவியின் இரு பக்கமும் அந்த மையத்தை அமைத்தவர்கள்  படமும் படத்தின் முன்  , சிறிய மண்டபத்தில் திருவடிகளும் இருக்கிறது.



அம்மன் முன் சிவன், நந்தி , சின்ன தொட்டிலில் குட்டி தவழும் கண்ணன் இருக்கிறார்கள்.

ஒரு கண்ணாடி  தடுப்புக்குள் கோவிலின் மாதிரி தோற்றம் அழகிய கலசம் 

நாங்கள் போன போது ஒருவருக்கு  75 வயது பிறந்த நாள் ஹோமங்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்து கொண்டு இருந்தது. நாம் பீமரத சாந்தி என்போம் அவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. முன் வாசல் வழியாக உள்ளே போன போது விழா நடந்து கொண்டு இருந்த காரணத்தால் 

அன்னைக்கு பக்கவாட்டில் அமைந்து உள்ள படி வழியே போய் அன்னையை தரிசனம் செய்தோம்.

உயரம் குறைவான சிறிய படியில் நான் பத்திரமாக பக்கவாட்டில் கொடுத்து இருக்கும் கம்பியை பிடித்து  இறங்கி வருவதை பார்வையிடும் பேரன்.

ஸ்ரீராம் என்ற பெயரில் நூலகம் இருந்தது வெளியில்

தங்கும் அறைகள்

சாப்பாட்டு அறை ,  விருந்து நடந்து கொண்டு இருந்தது.
பச்சை பசுமையாக அழகான புல்வெளி

அழகிய  ரோஜா செடிகள்



அழகிய செம்பருத்தி செடிகள் இருந்தன





வேறு அழகான மலர்ச்செடிகளும் இருந்தன.

 



சிறிய அழகான செயற்கை நீருற்றிலிருந்து நீர் அளவாய் வெளியாகி கொண்டு இருந்தது.



அடுத்த பதிவில்  கப்பல் பயணம்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. நல்லொழுக்கங்களை வளர்க்கும் ஆராதனை முறை பாராட்டப்பட வேண்டியது.  ஓ..   கடல் பயணமா...  சுவாரஸ்யமான அனுபவங்கள் வாய்த்திருக்கும்.  எனக்கும் படிக்கக் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //நல்லொழுக்கங்களை வளர்க்கும் ஆராதனை முறை பாராட்டப்பட வேண்டியது.//

      ஆமாம், குழந்தைகளுக்கு தனியாக வைத்து இருக்கிறார்கள், இளம் பருவத்தில் நல்லொழுக்கம் கற்றுக் கொண்டால் நல்லதுதான்.

      //ஓ.. கடல் பயணமா... சுவாரஸ்யமான அனுபவங்கள் வாய்த்திருக்கும். எனக்கும் படிக்கக் கிடைக்கும்.//

      ஆமாம், சுவாரஸ்யமாக இருந்தது. மூன்று நாட்களும் புதிய அனுபவங்கள் கிடைத்தது.

      நீக்கு
  2. விநாயகரும் ஆஞ்சநேயரும் அழகு. நாகாபரணேஸ்வரர் கவர்கிறார். வேதமாதா நிமிர்ந்த நோக்குடன் கன கம்பீரமாக காட்சி தருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விநாயகரும் ஆஞ்சநேயரும் அழகு. நாகாபரணேஸ்வரர் கவர்கிறார்.//

      ஆமாம், அழகாய் இருக்கிறார்கள்.

      //வேதமாதா நிமிர்ந்த நோக்குடன் கன கம்பீரமாக காட்சி தருகிறார்.//

      ஆமாம், அறிவை ஊக்குவிக்கும் கடவுள் அல்லவா கம்பீரம் இருக்கும் தானே!

      நீக்கு
  3. பேரனின் அன்பான அக்கறை!  ஸ்ரீராமா?  ஷ்ரீராமா?!!  ரோஜா, செம்பருத்திப் பூக்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரனின் அன்பான அக்கறை! //
      போகும் வழி யெல்லாம் கவனமாக கையை பிடித்து அழைத்து சென்றான்.
      மெதுவாய் நடந்து வருவதை பார்த்து வேகமாக வாங்க ! ஓடி வாங்க !என்று கிண்டல் செய்து கொண்டே கவனமாக கையை பிடித்து கொண்டான்.

      //ஸ்ரீராமா? ஷ்ரீராமா?!! //

      நீங்கள் சொன்னதும் தான் கவனித்தேன், நாம் ஸ்ரீராம் என்றே வைத்து கொள்ளலாம்.

      தூரத்திலிருந்து படம் எடுத்தேன்.

      ரோஜா, செம்பருத்திப் பூக்கள் அழகு.//

      ஆமாம், ரோஸ் கலர் ரோஜா மிகவும் அழகாய் இருந்தது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. பொதுவாக Shree இப்படி எழுதி இருப்பதை ஸ்ரீ என்றுதானே படிக்கிறோம்.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது சரிதான்.
      அப்படித்தான் படிக்கிறோம்.

      நீக்கு
  4. கடற் பயணமா ஆஹா!!!! நல்ல பயண அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா கோமதிக்கா!

    காயத்ரி உணர்வு மையம் படங்கள் மிக அழகு. நம் வீட்டின் மிக அருகிலும் காயத்ரி கோயில் என்று இருக்கிறது. மீதிக்கு அப்புறம் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கடற் பயணமா ஆஹா!!!! நல்ல பயண அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா கோமதிக்கா!//

      ஆமாம், கீதா நன்றாக இருந்தது. மகனும் , மருமகளும், பேரனும் முன்பு போய் இருக்கிறார்கள், இப்போது எங்கள் இரண்டு பேருக்கும் கடற்பயணம் அனுபவம் கிடைக்க வேண்டும் என்று அழைத்து சென்றார்கள், நாங்கள் இருவரும் பயணத்தை ரசித்தோம்.

      //காயத்ரி உணர்வு மையம் படங்கள் மிக அழகு. நம் வீட்டின் மிக அருகிலும் காயத்ரி கோயில் என்று இருக்கிறது. மீதிக்கு அப்புறம் வருகிறேன்//

      நாங்கள் பெங்களூர் வந்து இருந்த போது காய்த்ரி கோவில் போனோம், காயத்ரி ஐந்து தலைகளுடன் அழகாய் இருந்தார்.
      உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் காய்த்ரி எப்படி இருப்பார்?காலை நேரம் வேலைகள் இருக்கும் மெதுவாய் வாங்க.

      நீக்கு
  5. வணக்கம் சகோ
    பூக்களின் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    கோயில் படங்களும் அருமை.

    கடல் பயண விவரங்கள் அறிந்து கொள்ள ஆவல்.

    ஸ்ரீராம் நூலகம் அட எனக்கு ஒரு புகைப்படம் கிடைத்து விட்டதே... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //பூக்களின் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

      கோயில் படங்களும் அருமை.//

      நன்றி.

      //கடல் பயண விவரங்கள் அறிந்து கொள்ள ஆவல்.//

      நன்றி விரைவில் போடுகிறேன் பதிவு.

      //ஸ்ரீராம் நூலகம் அட எனக்கு ஒரு புகைப்படம் கிடைத்து விட்டதே... நன்றி.//

      நான் இந்த படத்தை போட்ட போது உங்களை நினைத்து கொண்டேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. எங்கள் வீட்டருகில் இருக்கும் காயத்ரி கோயில் என்று அங்கு காயத்ரி அம்மன் இருந்தாலும் சிவன் லிங்க உருவில் இருப்பதுதான் மெயினாகவும் அவரது இடப்புறம் காயத்ரி தேவியும், வலப்புறம் அவரின் மூத்த மகனும்!!! இங்கு பரிகாரங்கள் பல நடக்கும் அந்தப் படங்கள் வைத்திருக்கிறேன் கணினியில் சேமித்தேனா பார்க்கணும். பதிவும் போடலை போட நினைத்தும்.

    வீட்டருகில் இருக்கும் காயத்ரி வடிவம் கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். அலங்காரம் மிக அழகாகச் செய்திருப்பாங்க. நீங்க போட்டிருக்கும் படத்திற்கும் இங்குள்ள காயத்ரிக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னும் கூர்ந்து கவனித்துவிட்டு வந்து பதிவு போட்டேன் என்றால் சொல்கிறேன் கோமதிக்கா. இங்கு படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் சிலர் எடுக்கறாங்கதான். அங்கு கூடாது என்று போட்டிருப்பதால் நான் பயந்து எடுப்பதில்லை. அர்ச்சகர்களும் இருந்துகொண்டே இருப்பாங்க. தனியார் கோயில் பூசை செய்யறவங்க எல்லாம் மங்களூர் உடுப்பி பக்கத்து அர்ச்சகர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கள் வீட்டருகில் இருக்கும் காயத்ரி கோயில் என்று அங்கு காயத்ரி அம்மன் இருந்தாலும் சிவன் லிங்க உருவில் இருப்பதுதான் மெயினாகவும் அவரது இடப்புறம் காயத்ரி தேவியும், வலப்புறம் அவரின் மூத்த மகனும்!!!//

      ஓ சரி சரி.

      //வீட்டருகில் இருக்கும் காயத்ரி வடிவம் கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.//

      நான் அங்கு பார்த்ததும் கல்லால் செய்ய பட்ட சிலைதான்.

      //அலங்காரம் மிக அழகாகச் செய்திருப்பாங்க. நீங்க போட்டிருக்கும் படத்திற்கும் இங்குள்ள காயத்ரிக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

      மிக அழகாய் அலங்காரம் செய்து இருந்தாங்க . வடநாட்டில் பளிங்கு சிலைதான். அதனால் வித்தியாசம் இருக்கும்.

      //இங்கு படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் சிலர் எடுக்கறாங்கதான். அங்கு கூடாது என்று போட்டிருப்பதால் நான் பயந்து எடுப்பதில்லை. அர்ச்சகர்களும் இருந்துகொண்டே இருப்பாங்க. தனியார் கோயில் பூசை செய்யறவங்க எல்லாம் மங்களூர் உடுப்பி பக்கத்து அர்ச்சகர்கள்.//

      எடுக்க கூடாது என்றால் எடுக்காமல் இருப்பது நல்லது.
      சரஸ்வதி பூஜை காலங்களில் இந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

      நீக்கு
  7. லிங்கம் சுற்றி நாகம் இருந்தால் நாகாபரணம் என்று சொல்லப்படும் இல்லையா? தோட்டத்தில் பூத்த மலர்கள்னு தெரிகிறது. கீழே உஅள்ள படங்கள் அழகு பூக்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //லிங்கம் சுற்றி நாகம் இருந்தால் நாகாபரணம் என்று சொல்லப்படும் இல்லையா? //
      சிவன் கோவில்களில் அலங்காரம் செய்யும் போது நாகாபரணம் உண்டு. இது ஒரு அணிகலன். வெள்ளி, செம்பு, தங்கம் என்று வசதிக்கு ஏற்ப மாறுபடும்.

      //தோட்டத்தில் பூத்த மலர்கள்னு தெரிகிறது. கீழே உள்ள படங்கள் அழகு பூக்கள்!//

      பூக்கள் எல்லாம் அழகுதான்.

      நீக்கு
  8. பேரனின் அன்பும் அக்கறையும் நெகிழ்ச்சி. நன்றாக உயரமாக வளர்ந்திருக்கிறார்!

    ஷ்ரீராம் நூலகம்!! ஆ நம்ம கில்லர்ஜி நினைவுக்கு வந்திட்டாரே! அமெரிக்காவிலும் ஸ்ரீராம் நூலகம் வைத்திருக்கிறார்னு பதிவு போட்டிடுவாரே!!

    பூக்கள் படங்கள் எல்லாமே மிக மிக அழகு தெளிவாக வந்திருக்கு. செம்பருத்தி வகைகளும். ரோஜாக்களும், மற்ற பூக்களும் மிக அழகு கோயிலும் பெரிய பச்சை வளாகத்துள் என்பது பார்க்கவே குளிச்சியாக கண்ணிற்கு இதமாக இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரனின் அன்பும் அக்கறையும் நெகிழ்ச்சி. நன்றாக உயரமாக வளர்ந்திருக்கிறார்!//

      வெளியில் போனால் என்னை பொறுப்பாக கவனித்து கொள்வான்.

      //ஷ்ரீராம் நூலகம்!! ஆ நம்ம கில்லர்ஜி நினைவுக்கு வந்திட்டாரே! அமெரிக்காவிலும் ஸ்ரீராம் நூலகம் வைத்திருக்கிறார்னு பதிவு போட்டிடுவாரே!!//

      ஆமாம், எனக்கு படம் கிடைத்து விட்டது என்று சொல்லி இருக்கிறார் மேலே!

      //பூக்கள் படங்கள் எல்லாமே மிக மிக அழகு தெளிவாக வந்திருக்கு. செம்பருத்தி வகைகளும். ரோஜாக்களும், மற்ற பூக்களும் மிக அழகு கோயிலும் பெரிய பச்சை வளாகத்துள் என்பது பார்க்கவே குளிச்சியாக கண்ணிற்கு இதமாக இருக்கு.//

      அங்கு இன்னும் குளிர் இருக்கிறது. பசுமை என்றும் கண்ணுக்கு குளிர்ச்சிதான். பூக்களை எல்லாம் இறைவனுக்கு சூடி விட்டார்கள்,அதனால் செடிகளில் அவ்வளவு பூக்கள் இல்லை.
      இல்லையென்றால் நிறைய இருந்து இருக்கும் செடியில் பூக்கள்.
      பூக்கள் இறைவனுக்கு கிடைப்பது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. செம்பருத்திகளும். ரோஜாக்களும் எல்லாமே மிக மிக அழகு..

    பதிவின் தொகுப்பு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //செம்பருத்திகளும். ரோஜாக்களும் எல்லாமே மிக மிக அழகு..

      பதிவின் தொகுப்பு மகிழ்ச்சி..//

      நன்றி.

      நீக்கு
  10. நல்லொழுக்கங்களை வளர்க்கும் ஆராதனை..

    இயல்பாகவே ரத்தத்தில் கலந்திருப்பது..

    பாராட்டுக்குரிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்லொழுக்கங்களை வளர்க்கும் ஆராதனை..

      இயல்பாகவே ரத்தத்தில் கலந்திருப்பது..

      பாராட்டுக்குரிய பதிவு.//

      இயல்பாக இருந்தாலும் அது மேலும் பரிமளிக்க பயிற்சிகள் அவசியம் தான்.
      பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  11. 80 களில் சிங்கப்பூரில் கப்பல் பட்டறைப் பணியில் இருந்த போது அவ்வப்போது கடல் பயணம் வாய்த்திருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //80 களில் சிங்கப்பூரில் கப்பல் பட்டறைப் பணியில் இருந்த போது அவ்வப்போது கடல் பயணம் வாய்த்திருக்கின்றது..//

      ஓ ! நல்லது.
      இங்கும் திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஊரிலிருந்து வந்து பணிபுரியும் அன்பர்களுடன் பேசினோம். பல மொழி பேசும் இந்தியர்கள் இருந்தார்கள். தலமை சமையல்காரர் இந்தியர் தான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. இதை அடைய மூன்று முனை அணுகுமுறையை சொல்லி தருகிறது அவை :- "உபாசனா", (பிரார்த்தனைகளின் சக்தி), "சாதானா"(சுய விசாரணை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் சுய - சுத்திகரிப்பு) மற்றும் "ஆராதனா" (மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவை)
    மத நம்பிக்கை மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சேவை செய்வது//

    உண்மையிலேயே மிக நல்ல விஷயம் இது. நம் இந்து மதத்தில் கூடுதலாக மற்றுள்ளவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய தத்துவம் என்பதே இதுதான். இதை இந்த மையத்தின் நோக்கமாகக் கடைபிடிப்பது என்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    எப்படியோ உங்கள் மூலமாக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள இந்த அம்மன் கோயிலை தரிசிக்கக் கிடைத்ததற்கு மிக்க நன்றி.

    ஓ அங்கும் நம் ஸ்ரீராம் பெயரில் லைப்ரரி இருக்கிறதா. பார்த்ததும் ஆச்சரியம்.

    பூக்களும் தோட்டமும் கோயிலும் மிகவும் மனதைக் கவர்கின்றன பூக்களில் அங்கு நம் செம்பருத்திப் பூ இடம் பிடித்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வேளை இங்கிருந்து கொண்டு சென்று வளர்த்திருப்பார்களோ இல்லை இங்கிருந்து கொண்டு செல்ல அனுமதி இருக்காது என்றே நினைக்கிறேன். அங்கேயே கிடைக்கும் போல. செம்பருத்திப் பூ சூடிய இறைவனைக் கண்ட போது மனது மிகவும் மகிழ்ந்தது. அருமையான உணர்வு மையம், கோயில்.

    அதை முதன் முதலில் நிறுவியவர்களையும் அங்கு காணும் போது இப்போதும் அவர்களின் வழி இம்மையம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு நடந்து வருவது இதமாக இருக்கிறது அதுவும் அமெரிக்காவில்.

    படங்களும் விவரங்களும் அருமை

    உங்கள் கடற்பயணம் பற்றி அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //உண்மையிலேயே மிக நல்ல விஷயம் இது. நம் இந்து மதத்தில் கூடுதலாக மற்றுள்ளவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய தத்துவம் என்பதே இதுதான். இதை இந்த மையத்தின் நோக்கமாகக் கடைபிடிப்பது என்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.//

      ஆமாம். மையத்தின் நோக்கம் நல்ல விஷயம். கடைபிடிக்க வேண்டும்.

      //எப்படியோ உங்கள் மூலமாக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள இந்த அம்மன் கோயிலை தரிசிக்கக் கிடைத்ததற்கு மிக்க நன்றி.//

      உங்கள் பார்வைக்கும், என் சேமிப்பாகவும் பதிவு செய்தேன்.

      //ஓ அங்கும் நம் ஸ்ரீராம் பெயரில் லைப்ரரி இருக்கிறதா. பார்த்ததும் ஆச்சரியம்.//

      நம் கோவில்தானே ! அதனால் ஸ்ரீராம் பேரு.

      //பூக்களும் தோட்டமும் கோயிலும் மிகவும் மனதைக் கவர்கின்றன பூக்களில் அங்கு நம் செம்பருத்திப் பூ இடம் பிடித்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வேளை இங்கிருந்து கொண்டு சென்று வளர்த்திருப்பார்களோ இல்லை இங்கிருந்து கொண்டு செல்ல அனுமதி இருக்காது என்றே நினைக்கிறேன். அங்கேயே கிடைக்கும் போல.//

      அமெரிக்காவில் நிறைய இடங்களில் செம்பருத்தி பூக்களை காணமுடியும். அடுக்கு, ஒற்றை என்று பலரக பூக்களை காணலாம்.அவற்றின் மருத்துவ குணத்தையும் அறிந்து இருக்கிறார்கள்.

      //செம்பருத்திப் பூ சூடிய இறைவனைக் கண்ட போது மனது மிகவும் மகிழ்ந்தது. அருமையான உணர்வு மையம், கோயில்.//

      ஆமாம். செயற்கை பூக்கள் இல்லாமல், உண்மையான பூக்கள் இரைவனுக்கு சூடப்படபோது மகிழ்ச்சிதான். மல்லிகை, முல்லை பூக்கள் கிடைக்கிறது. மகன் வீட்டுத்தோட்டத்தில் மல்லிகை பூக்கள் பூக்கிறது.

      அருமையான உணர்வு மையம், கோயில்.

      //அதை முதன் முதலில் நிறுவியவர்களையும் அங்கு காணும் போது இப்போதும் அவர்களின் வழி இம்மையம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு நடந்து வருவது இதமாக இருக்கிறது அதுவும் அமெரிக்காவில்.//

      ஆமாம். பல ஊர்களில் இருக்கிறது போல.

      //படங்களும் விவரங்களும் அருமை

      உங்கள் கடற்பயணம் பற்றி அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.//

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வேத மாதா காயத்திரி தேவி கோவிலின் தரிசனங்கள் குறித்த பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக உள்ளது. அழகான காயத்திரி தேவியை வணங்கி கொண்டேன். அந்தக் கோவிலின் நோக்கம், அதை ஸ்தாபித்தவர்களின் நல்ல மனது விஷயங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.

    விநாயகர், ஆஞ்சநேயர் நாகாபரண சிவனார், அனைவரின் தரிசனங்களும் கிடைத்தது மிக்க மகிழ்வாக உள்ளது.

    கோவிலின் இடங்கள் அனைத்தும் படு சுத்தமாக உள்ளது.

    தங்கள் பேரனின் அன்புக்கும், அக்கறைக்கும் பாராட்டுக்கள். தங்களை பத்திரமாக அழைத்துச் செல்லும் அவரது செயல் மகிழ்வை தருகிறது.

    மலர்களின் படங்கள் அனைத்தும் அருமை. அழகிய மலர்களை பார்த்து ரசித்தேன். நம் ஸ்ரீராம் அவர்களின் பெயரில் அங்கொரு நூலகத்தைப் பார்த்ததும் எனக்கும் சகோதரர் கில்லர்ஜி அவர்கள் நினைவுக்கு வந்தார்.

    மேலும் தங்களின் கடற் பயணத்துடன் நானும் இணைகிறேன். உங்களால் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      மகன் ஊரிலிருந்து வந்து இருந்த போதும் பதிவுகளை படித்து கருத்து சொல்ல வந்தது மகிழ்ச்சி.

      //பதிவு அருமை. வேத மாதா காயத்திரி தேவி கோவிலின் தரிசனங்கள் குறித்த பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக உள்ளது//

      நன்றி.

      //அழகான காயத்திரி தேவியை வணங்கி கொண்டேன். அந்தக் கோவிலின் நோக்கம், அதை ஸ்தாபித்தவர்களின் நல்ல மனது விஷயங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.//
      நானும் அந்த கோவிலை பற்றி இணையத்தில் தேடி படித்து கொஞ்சம் கொடுத்தேன். அவர்கள் சமூக சேவை நிறைய இருக்கிறது.

      //விநாயகர், ஆஞ்சநேயர் நாகாபரண சிவனார், அனைவரின் தரிசனங்களும் கிடைத்தது மிக்க மகிழ்வாக உள்ளது.//

      வட நாடவர்களுக்கு சிவனுக்கு தினம் நீர் ஊற்றி அபிஷேகம் செய்வது பிடிக்கும் அதற்கு வசதி செய்து உள்ளார்கள்.

      //கோவிலின் இடங்கள் அனைத்தும் படு சுத்தமாக உள்ளது.//

      ஆமாம், கோவிலை சுத்தமாக பராமரிக்கிறார்கள்

      //தங்கள் பேரனின் அன்புக்கும், அக்கறைக்கும் பாராட்டுக்கள். தங்களை பத்திரமாக அழைத்துச் செல்லும் அவரது செயல் மகிழ்வை தருகிறது.//

      வீதியை கடக்கும் போது மேலும் கூடுதல் கவனம் செலுத்துவான்.
      நான் படம் எடுத்து கொண்டு இருந்தால் வரும் போது எடுத்து கொள்ளலாம் என்று இழுத்து செல்வான்.

      //மலர்களின் படங்கள் அனைத்தும் அருமை. அழகிய மலர்களை பார்த்து ரசித்தேன். நம் ஸ்ரீராம் அவர்களின் பெயரில் அங்கொரு நூலகத்தைப் பார்த்ததும் எனக்கும் சகோதரர் கில்லர்ஜி அவர்கள் நினைவுக்கு வந்தார்.//

      சனிக்கிழமை , சனிக்கிழமை பதிவு போட்டு மனதில் பதிய வைத்து விட்டார் ஜி.

      //மேலும் தங்களின் கடற் பயணத்துடன் நானும் இணைகிறேன். உங்களால் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      வாருங்கள் என்னுடன், அதுவே எனக்கு மகிழ்ச்சி.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  14. காயத்திரி மையம் மிகவும் அழகாக இருக்கிறது. எமது நாட்டிலும் நுவரெலியாவில் காயத்திரி பீடம் உண்டு.


    கடல் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். காத்திருக்கிறோம் இடங்கள் காண்பதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //காயத்திரி மையம் மிகவும் அழகாக இருக்கிறது. எமது நாட்டிலும் நுவரெலியாவில் காயத்திரி பீடம் உண்டு.//
      நாங்கள் இலங்கை வந்த போது நுவரெலியாவில் சீதை கோவிலும், தேயிலை தோட்டமும் பார்த்தோம், காய்த்திரி கோவில் பார்க்க வில்லை.


      //கடல் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். காத்திருக்கிறோம் இடங்கள் காண்பதற்கு.//

      கடல் பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. காத்து இருக்கிறோம் என்று சொன்னது மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது மாதேவி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு