வைகாசி பெளர்ணமி முருகன் அவதரித்த நாள்.
https://www.youtube.com/watch?v=x4r9n4ggxoQ
முருகனை வணங்கி நிலவை பார்ப்போம்.
என் கணவருக்கு பிடித்த முருகன் பாடல்.
இன்று வந்த நிலவுதோட்டத்திலிருந்து எடுத்த படங்கள்
நேற்று இரவு மாலை நேரம் பூங்கா போன போது எடுத்த முழு நிலா படங்கள்
மணி 7.25 காட்டுகிறது பூங்கா மணிக்கூடு . பூங்கா படங்கள் இன்னொரு பதிவில்
அந்தி மாலைச்சூரியன்
இரவு மணி 7.25 க்கு சூரியன் மறையும் நேரம் எடுத்த படம் நிலவு போல இருந்தது.
இன்று உங்களுக்கு என்ன என்ன நிலவு பாடல் மனதில் , நினைவில் வந்ததோ பாடி கொள்ளுங்கள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------
மரங்களோடு எடுத்த நிலவுப் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குகாணொளி பாடல்கள் சிறப்பு.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//மரங்களோடு எடுத்த நிலவுப் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.//
எனக்கு மரங்களுடன் எடுக்கும் நிலவு படங்கள்தான் பிடிக்கும்.
உங்களுக்கும் பிடித்து இருந்தது அறிந்து மகிழ்ச்சி.
நம்மூரில் தென்னைமரங்களுக்கு பக்கம் தெரியும் நிலா மிகவும் பிடிக்கும்.
//பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், //
என்று பாரதி பாடியது போல
//காணொளி பாடல்கள் சிறப்பு.//
பாடல்களை கேட்டது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அழகு. நிலா படங்கள் தட்டில் ஊற்றிய மைசூர்பா போல உள்ளது! இவ்வளவு தெளிவாக எனக்கு எடுக்க வருவதில்லை.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அழகு. நிலா படங்கள் தட்டில் ஊற்றிய மைசூர்பா போல உள்ளது! இவ்வளவு தெளிவாக எனக்கு எடுக்க வருவதில்லை.//
காமிராவில் எடுத்தேன், சந்திரன் வரும் போது எடுத்தால் நல்ல மஞ்சள் நிறம் வரும் .
காமிராவில் ஜூம் செய்து எடுக்கும் போது ஆடாமல் எடுக்க வேண்டும் கொஞ்சம் கஷ்டம் தான் எனக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
எப்போதும் ஶ்ரீராமுக்கு தி கதிவு நினைப்புதானா?
நீக்குவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//எப்போதும் ஶ்ரீராமுக்கு தி கதிவு நினைப்புதானா?//
திங்கள் பதிவு நினைப்புதானா என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நிலவு படங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குசூலமங்கலம் பாடல்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. முருகனுக் கொருநாள் திருநாள் பாடல் உட்பட. ரசித்துக் கேட்டேன்.
//நிலவு படங்கள் மிக அழகு.
நீக்குநன்றி.
//சூலமங்கலம் பாடல்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. முருகனுக் கொருநாள் திருநாள் பாடல் உட்பட. ரசித்துக் கேட்டேன்.//
பாடலை கேட்டு ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நெல்லை.
நிலவு என்றதும் ஏகப்பட்ட திரைப்படப் பாடல்கள் மனதில் வந்துபோகிறது. எல்லாமே நல்லா இருக்கும், நிலா காய்கிறது உட்பட
பதிலளிநீக்கு//நிலவு என்றதும் ஏகப்பட்ட திரைப்படப் பாடல்கள் மனதில் வந்துபோகிறது. எல்லாமே நல்லா இருக்கும், நிலா காய்கிறது உட்பட//
நீக்குஆமாம், நம் மனநிலைக்கு ஏற்றார் போல கேட்கலாம் அவ்வளவு நிலா பாடல்கள் இருக்கிறது. அனைத்தும் அருமையான பாடல்கள்.
முந்தின இரண்டு பதிவுக்கு உங்களை காணோமே! ஊருக்கு போய் விட்டீர்களா?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
கோமதிக்கா நிலவு இவ்வளவு கிட்ட தெரிகிறதா!!! அப்படி இருக்கிறது மிக அழகாக உங்க படங்கள்.
பதிலளிநீக்குபூங்காவில் எடுத்த படங்களும் சரி, தோட்டத்திலிருந்து எடுத்த படங்களும் சரி அவ்வளவு தெளிவாக என்னவோ மிக அருகில் இருக்காப்ல அவ்வளவு அழகா இருக்கின்றன.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா நிலவு இவ்வளவு கிட்ட தெரிகிறதா!!! அப்படி இருக்கிறது மிக அழகாக உங்க படங்கள்.//
நன்றி கீதா.
மாலை 7 மணிக்கு பக்கத்தில் தெரியும் போது எடுத்த படம். தோட்டத்து மதில் சுவருக்கு அந்த பக்கம் தெரியும். நேரம் ஆக ஆக மேலே போய் விடும் எடுக்க முடியாது.
இன்று இரவு எட்டுமணிக்கு தான் வரும் என்று வானிலை அறிக்கை சொன்னது, நாங்கள் பார்க்க முடியவில்லை.
பூங்காவில் 1.25. மேலே தான் தெரிந்தது. அதுதான் வெள்ளை கலரில். பக்கத்தில் தெரியும் போது மஞ்சளாக எடுக்கலாம்.
நிலா என் கேமராவில் இப்படி எல்லாம் வந்ததில்லை கோமதிக்கா. மொபைலிலும்.
பதிலளிநீக்குமணி 7.25 இன்னும் அங்கு இரவு வரலை......வெளிச்சமாக இருக்கு. அதுவும் உங்க இடம் மேற்கின் அருகில். கலிஃபோர்னியாவுல இன்னும் கொஞ்சம் வெளிச்சமா இருக்கும் இந்த நேரத்தில்.
கீதா
//நிலா என் கேமராவில் இப்படி எல்லாம் வந்ததில்லை கோமதிக்கா. மொபைலிலும்.//
நீக்குஏதோ எனக்கு தெரிந்தவரை எடுத்து இருக்கிறேன் கீதா.
//மணி 7.25 இன்னும் அங்கு இரவு வரலை......வெளிச்சமாக இருக்கு. அதுவும் உங்க இடம் மேற்கின் அருகில். கலிஃபோர்னியாவுல இன்னும் கொஞ்சம் வெளிச்சமா இருக்கும் இந்த நேரத்தில்.//
கோடை காலம் இங்கு மெதுவாய்தான் இருட்டும். குளிர்காலம் விரைவில் இருட்டி விடும்.
சூரியன் மறையும் நேரம் ஆமா நிலவு போல!!!
பதிலளிநீக்கு௳ரத்தின் இடையே உள்ள நிலவும அழகு படங்கள். கோமதிக்கா
நிலா பாடல்கள் நிறைய இருக்கு இந்தப் பாடலும் மிகவும் பிடித்த ஒன்று
முருகன் பாடலும் கேட்டிருக்கிறேன் இன்றும் ரசித்தேன் கோமதிக்கா
கீதா
//சூரியன் மறையும் நேரம் ஆமா நிலவு போல!!!
நீக்கு௳ரத்தின் இடையே உள்ள நிலவும அழகு படங்கள். கோமதிக்கா//
நன்றி கீதா
//நிலா பாடல்கள் நிறைய இருக்கு இந்தப் பாடலும் மிகவும் பிடித்த ஒன்று
முருகன் பாடலும் கேட்டிருக்கிறேன் இன்றும் ரசித்தேன் கோமதிக்கா//
அனைத்தையும் ரசித்துபார்த்து, கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. நிலா படங்கள் அனைத்துமே மிக அழகாக இருக்கிறது. மாலைச் சூரியனின் படமும் அழகாக இருக்கிறது. எல்லோரும் சொல்வது போல் எனக்கும் நிலா படங்களை எடுக்கும் சமயம் இவ்வளவு அழகாக வந்ததில்லை. உங்களுக்கு அவ்வளவு அழகாக வந்துள்ளது. என்னிடம் கேமரா இல்லை. எனவே மொபைலில்தான் இது மாதிரியான படங்கள் எடுக்கிறேன்.சுமாராகத்தான் இருக்கும்.
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகன் பக்திப்பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அதுவும் நீங்கள் பிடித்தமான சொல்லி பகிர்ந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். நிறைய தடவை கேட்டு மனப்பாடம். இப்போதும் ரசித்துக் கேட்டேன்.
"வானத்திலேறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா?" என்ற பாடலைப் போல உங்கள் நிலா படங்களை பார்க்கும் போது சந்திரனுக்கே சென்று வந்த மாதிரி இருக்கிறது. ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. துல்லியமான படங்களுக்கு பாராட்டுக்கள் சகோதரி.
மரங்களுக்கு இடையே தெரியும் நிலவுகளும் அழகு. ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தேன்.
நிலா பாடல்கள் நிறைய உள்ளன. நீங்கள் பகிர்ந்த நிலாபாடலும் அருமையாக உள்ளது. பல நிலா பாடல்களும் நினைவுக்கு வந்தன. அழகான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. நிலா படங்கள் அனைத்துமே மிக அழகாக இருக்கிறது. மாலைச் சூரியனின் படமும் அழகாக இருக்கிறது.//
எல்லோரும் சொல்வது போல் எனக்கும் நிலா படங்களை எடுக்கும் சமயம் இவ்வளவு அழகாக வந்ததில்லை. உங்களுக்கு அவ்வளவு அழகாக வந்துள்ளது. என்னிடம் கேமரா இல்லை. எனவே மொபைலில்தான் இது மாதிரியான படங்கள் எடுக்கிறேன்.சுமாராகத்தான் இருக்கும்.//
நன்றி.
//சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகன் பக்திப்பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அதுவும் நீங்கள் பிடித்தமான சொல்லி பகிர்ந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். நிறைய தடவை கேட்டு மனப்பாடம். இப்போதும் ரசித்துக் கேட்டேன்.//
ஆமாம், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.
என் கணவர் முன்பு பிடித்த பாடல்களை எழுதி வைத்து இருப்பார்கள் அதில் இந்த பாடலும் ஒன்று. டேப் ரிக்காடர் வாங்கிய பின் இந்த பாடலை பதிவு செய்து வைத்து கொண்டார்கள், கார் வாங்கிய பின் சூலமங்கலம் பாடல்கள் தொகுப்பு சிடி வாங்கி கேட்டு கொண்டு போவார்கள். கணினி வாங்கிய பின் பிடித்த பாடல்களை விழா காலங்களில் போட்டு ரசித்தார்கள்.
//"வானத்திலேறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா?" என்ற பாடலைப் போல உங்கள் நிலா படங்களை பார்க்கும் போது சந்திரனுக்கே சென்று வந்த மாதிரி இருக்கிறது. ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. துல்லியமான படங்களுக்கு பாராட்டுக்கள் சகோதரி.//
இந்த பாடலை நானும் போன பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன். காலத்தால் அழியாத பாடல்கள். உங்கள் பாராட்டுக்கு நன்றி.
//மரங்களுக்கு இடையே தெரியும் நிலவுகளும் அழகு. ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தேன்.//
நீங்கள் ரசித்துப் பார்த்தது மகிழ்ச்சி.
//நிலா பாடல்கள் நிறைய உள்ளன. நீங்கள் பகிர்ந்த நிலாபாடலும் அருமையாக உள்ளது. பல நிலா பாடல்களும் நினைவுக்கு வந்தன. அழகான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.//
பதிவை ரசித்து அழகான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
படங்கள் அழகு. நிலவு இவ்வளவு பெரிதாக, தெளிவாக வந்திருப்பதை ரசித்தேன். பாடல்கள் அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அழகு. நிலவு இவ்வளவு பெரிதாக, தெளிவாக வந்திருப்பதை ரசித்தேன். பாடல்கள் அருமை.//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வைகாசி முழுநிலவும் அந்திச்சூரியனும் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//வைகாசி முழுநிலவும் அந்திச்சூரியனும் அழகு.//
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
வைகாசி பெளர்ணமி படங்கள்?அழகாக இருக்கின்றன. நிலாவை பார்த்தாலே மனதுக்கு குளுமை வந்துவிடுகிறது.
பதிலளிநீக்குபெளத்தர்களுக்கு வெசாக் எங்கள் நாடே களைகட்டி நிற்கும் காலம்.
முருகன் அவதரித்த நாள் அவனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//வைகாசி பெளர்ணமி படங்கள்?அழகாக இருக்கின்றன. நிலாவை பார்த்தாலே மனதுக்கு குளுமை வந்துவிடுகிறது.//
ஆமாம், நிலவை பார்த்தாலே மனதுக்கு குளுமைதான்.
//பெளத்தர்களுக்கு வெசாக் எங்கள் நாடே களைகட்டி நிற்கும் காலம்.//
ஆமாம், களைகட்டி இருக்கும். இலங்கை வந்த போது புத்தர் மீது பற்றும் பக்தியும் பார்த்தேன்.
//முருகன் அவதரித்த நாள் அவனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.//
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.