சனி, 15 ஜூன், 2024

கடல் பயணத்தில் பார்த்து ரசித்த காட்சிகள்


கப்பல் பயணம் (CARNIVAL RADIANCE CRUISE )

மே மாதம் 31 தேதி முதல், ஜூன் 3 ம் தேதிவரை  கப்பல் பயணம் செய்த போது பார்த்த காட்சிகள், கடல் பயண அனுபவங்கள் தொடர் பதிவாக இடம்பெறுகிறது.

கப்பல் மேல் தளத்தில் நின்று  காலை நேரம் எடுத்த படங்கள். காலை நேரம் கொஞ்சம் குளிர் காற்றும் பனி மூட்டமும் இருந்தது.

 மேல் தளத்திலிருந்து பார்த்த பறவைகள், மற்றும் அங்கு நின்ற வேறு ஒரு கப்பலின் படங்கள்,  நின்ற இடத்திலிருந்து ஊரின் அழகு  இந்த பதிவில்  இடம்பெறுகிறது.

இதற்கு முன் போட்ட பதிவுகள்.

ஜூன் 2 ம் தேதி இந்த இடத்தில் கப்பல் நின்றது 
ஊரின் அழகு தெரிகிறதா?

இந்த கப்பல் போல் தான் எங்கள் கப்பலும் நின்றது இங்கு

சீகல் பறவை ஒன்று  வலதுஓரத்தில் பறப்பது தெரிகிறதா?


நிறைய பறவைகள் பறப்பதை எடுக்கலாம் என்று மேல் தளத்திற்கு  மகனுடன் போனேன், ஆனால் இரண்டு சீகல் பறவைகள் தான் கிடைத்தது. அவை பயமில்லாமல்  நின்றன.




காலை நேர குளிர் காற்றில் இந்த பறவையின் சிறகுகள் பறக்கும் காட்சியும், எழுந்து பறந்து போகும் காட்சியும் சிறு காணொளிதான்.

அதிகாலை வேளையில்     சீகல் பறவைகள் மூன்று தடவை முங்கி குளித்த காட்சி. நாங்கள் தங்கி இருந்த அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக எடுத்த காட்சி.  மிக சிறிய காணொளி தான் பார்கலாம்.


பெலிகன் பறவை மீனை பிடித்து உண்ணும் காட்சி. தண்ணீரில் நீந்தி பின் பறந்து கீழே மூழ்கி மீனை பிடித்து தலையை தூக்கி விழுங்கும் காட்சி மட்டுமே பார்க்க முடிந்தது. மீன் தெரியவில்லை. இரண்டு தடவை மூழ்கி எழும் பாருங்கள்.

 சிறிய காணொளிதான் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

இப்படி தெரிந்தால் நன்றாக இருக்கும். (படம் கூகுள் )

மூன்று பெலிகன் பறவைகள் பறந்து வந்தன, ஆனால் ஒன்று தான்படம் எடுக்க முடிந்தது

பெலிகன் பறவை பறப்பது

சீகல் பறவை பறப்பது

மூன்றும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கிறது , இங்கு ஒன்று, கீழே இரண்டு அமர்ந்து இருக்கிறது.


பெலிகன் பறவைகள் (கூழைகடா)




கப்பலில் பயணம் செய்து வருபவர்களை ஊரை சுற்றிக் காட்டும் பஸ்கள், சிறு வேன்கள், கார்கள் நிற்கிறது.

நாங்கள் பயணம் செய்த வண்டி  இன்னொரு பதிவில் இடம்பெறும்.

கடைசியில் தெரியும் கம்பத்தில் மெக்சிகன் கொடி பறக்குமாம். நாங்கள் பார்த்த அன்று பறக்கவில்லை



பாதுகாப்பு படகு சுற்றி சுற்றி வந்தது.

இன்னொரு பதிவில் பார்ப்போம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

18 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் அருமை.

    கப்பலில் சென்றால் கூட பறவைகள் உங்களை விடுவதில்லை போலும்....

    காணொளிகள் கண்டேன் சிறப்பு.

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாம் அருமை.//

      நன்றி.

      //கப்பலில் சென்றால் கூட பறவைகள் உங்களை விடுவதில்லை போலும்....//

      பறவைகளை என் கண்கள் தேடுகிறது எங்கு போனாலும்.
      அதன் குரல்களை காது கேட்க விரும்புகிறது.
      பறவைகள் வரட்டும் தினம் என்னைத் தேடி மகிழ்ச்சியாக இருப்பேன் நான்.

      //காணொளிகள் கண்டேன் சிறப்பு.//

      காணொளிகளை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      //தொடர்ந்து வருகிறேன்...//

      நன்றி.

      நீக்கு
  2. ஆமாம் அக்கா 2, 3 படங்களில் ஊரின் அழகு தெரிகிறது.

    இரண்டாவது, மூன்றாவது படங்களைப் பார்த்ததும், இங்கு மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது கொஞ்சம் உயரமான இடத்தில் ரயில் செல்லும் போது பெங்களூர் இப்படித்தான் jam packed ஆகத் தெரியும். அப்படி இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //ஆமாம் அக்கா 2, 3 படங்களில் ஊரின் அழகு தெரிகிறது.

      //இரண்டாவது, மூன்றாவது படங்களைப் பார்த்ததும், இங்கு மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது கொஞ்சம் உயரமான இடத்தில் ரயில் செல்லும் போது பெங்களூர் இப்படித்தான் jam packed ஆகத் தெரியும். அப்படி இருக்கிறது.//

      நெரிசலாக தெரிகிறதா? ஊட்டி, கொடைக்கானாலில் மலை மீது வீடுகள் இருப்பது போல எனக்கு தெரிகிறது.
      கொஞ்சம் பக்கம் பக்கமாக இருக்கிறது.

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் நன்று.

    பறவைகள் - பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி தான். சீகல் பறவைகள் பார்க்க எப்போதும் பிடித்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் நன்று.//

      நன்றி.

      //பறவைகள் - பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி தான். சீகல் பறவைகள் பார்க்க எப்போதும் பிடித்தவை.//

      ஆமாம், பறவைகள் பார்த்தல் மகிழ்ச்சி. சீகல் பறவைகள் பார்க்க பிடிக்கும் தான். நிறைய பதிவுகளில் அவை மிக பக்கத்தில் இருக்கும் படங்கள் போட்டு இருக்கிறேன். இருந்தாலும் எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சிதான்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. கப்பல் பிரம்மாண்டம்!

    வலப்புறம் சீகல் பறப்பது தெரிகிறது, கோமதிக்கா...சீகல் பறவைகள் மிக அழகு, அவை அதிகம் பயப்படுவதில்லை. கிட்டத்தட்ட நம் காக்கைகள் போலதான் அவை கடல் காக்கைகள்!

    கழுத்தை ஒடித்துப் பார்க்கும் படம் செம!!

    சீகல் பறக்கும் காணொளி மற்றும் டைவ் அடிக்கும் காணொளி அழகோ அழகு!

    காக்கைகளும் நீரில் இப்படித்தானே செய்யும் இல்லையா...எங்கள் வீட்டில் நாங்கள் தலைக்குக் குளிக்காமல் சும்மா சின்னதா மேல் கழுவி வந்தால் காக்கா குளி போட்டாச்சு என்றும், குளத்திலோ ஆற்றிலோ சரியா முங்கிக் குளிக்கலைனா இதென்ன காக்கா முக்கு போடறே என்றும் கலாய்த்துக் கொள்வோம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கப்பல் பிரம்மாண்டம்!//

      ஆமாம்

      //வலப்புறம் சீகல் பறப்பது தெரிகிறது, கோமதிக்கா...சீகல் பறவைகள் மிக அழகு, அவை அதிகம் பயப்படுவதில்லை. கிட்டத்தட்ட நம் காக்கைகள் போலதான் அவை கடல் காக்கைகள்!//

      வலப்புறம் சீகலை பார்த்து விட்டீர்களா? மகிழ்ச்சி.
      ஆமாம் , அவை பயப்படுவது இல்லை. கடற்கரை, நதிகள் பக்கம் நிறைய பார்த்து இருக்கிறேன், இங்கு கொஞ்சமாக பார்த்தது அதிசயம்.
      நீரில் அமர்ந்து கொண்டு தள்ளி தள்ளி இருந்தது தூரத்தில் படம் எடுக்க முடியவில்லை அவற்றை

      //கழுத்தை ஒடித்துப் பார்க்கும் படம் செம!!//

      நம்மை "நீ யாரு" என்று கேட்பது போன்ற தோற்றம்.

      //சீகல் பறக்கும் காணொளி மற்றும் டைவ் அடிக்கும் காணொளி அழகோ அழகு!//
      நன்றி. டைவ் அடிப்பது பெலிகன் பறவை

      //காக்கைகளும் நீரில் இப்படித்தானே செய்யும் இல்லையா...எங்கள் வீட்டில் நாங்கள் தலைக்குக் குளிக்காமல் சும்மா சின்னதா மேல் கழுவி வந்தால் காக்கா குளி போட்டாச்சு என்றும், குளத்திலோ ஆற்றிலோ சரியா முங்கிக் குளிக்கலைனா இதென்ன காக்கா முக்கு போடறே என்றும் கலாய்த்துக் கொள்வோம்!!//

      ஆமாம் கீதா எங்கள் வீட்டிலும் சொல்லுவாங்க "என்ன காக்கா குளி குளிக்கிறே! நல்ல குளி" என்பார்கள்.
      அவை நீரில் இறங்கி உடனே உடலை சிலிர்த்து கொண்டு மேலே வந்து விடும்.

      நீக்கு
  5. பெலிக்கன் கூழைக்கடா நீங்கள் எடுத்த காணொளி நல்லாருக்கு கோமதிக்கா டக்கென்று எடுத்திருக்கீங்க. மீன் பிடிப்பதை. அதுவும் காணொளி இல்லைனா இப்படியானதை எடுப்பது சிரமம். வாயைத் திறந்து மீனை விழுங்குவது (கூகுள்) ஏதோ வலையை விரித்துப் பிடிப்பது போல இருக்கு இல்லையா!!!

    படங்கள் காணொளிகள் எல்லாமே மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. //பெலிக்கன் கூழைக்கடா நீங்கள் எடுத்த காணொளி நல்லாருக்கு கோமதிக்கா டக்கென்று எடுத்திருக்கீங்க. மீன் பிடிப்பதை. அதுவும் காணொளி இல்லைனா இப்படியானதை எடுப்பது சிரமம். வாயைத் திறந்து மீனை விழுங்குவது (கூகுள்) ஏதோ வலையை விரித்துப் பிடிப்பது போல இருக்கு இல்லையா!!!

    படங்கள் காணொளிகள் எல்லாமே மிகவும் ரசித்தேன் கோமதிக்கா//

    மூன்று பெலிகன் பறவைகள் நீரில் வேட்டை யாடுவதை பார்த்து கொண்டு இருந்தேன், அறை ஜன்னல் வழியாக. ஆனால் ஜன்னல் வழியாக எடுக்க முடியவில்லை, பனி மூட்டத்தால். மேல் தளம் சென்ற பின் தான் எடுக்க முடிந்தது. நங்கு சூரியன் வந்த பின் எடுத்து இருந்தால் இன்னும் நன்றாக தெரிந்து இருக்கும். நாங்கள் 11 மணிக்கு ஊரை சுற்றிப்பார்க்க போய் விட்டு மாலை நாலு மணிக்கு வந்தோம். அதனால் எடுக்க முடியவில்லை.

    படங்களை, காணொளியை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கப்பலின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் ஊரின் அழகு நிறைவான படங்கள்.

    சீகல் பறவைகள் படங்கள் நன்றாக வந்துள்ளது. காணொளிகளும் கண்டேன். பறவைகள் முங்கி குளிப்பது, அது தன் இரையை தேடி உண்பது போன்ற காணொளிகள் நன்றாக உள்ளது. பறவைகள் பறக்கும் படங்களும் அற்புதமாக உள்ளது.

    நீங்கள் கூகுளில் எடுத்தப் போட்ட அது தன் இரையை உண்ணும் காட்சியும் நன்றாக உள்ளது. அந்த வலைப்பகுதியில் நீர் வடிந்து இரையாகி மீன் மட்டும் வாயின் உள்ளே சென்று விடும் போலும். இறைவனின் படைப்பு விந்தைகளை இப்படி ஒவ்வொன்றையும் பார்க்கும் போது, மனது வியந்து போகிறது. அததற்கு என்று ஒவ்வொரு ஆற்றலை தந்திருக்கிறார் இறைவன்.

    எல்லாப் படங்களும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    உங்களின் கப்பல் பயணமாகிய இரண்டாவது பதிவுக்கு பிறகு கண்டிப்பாக வருகிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கப்பலின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் ஊரின் அழகு நிறைவான படங்கள்.//

      நன்றி


      //சீகல் பறவைகள் படங்கள் நன்றாக வந்துள்ளது. காணொளிகளும் கண்டேன். பறவைகள் முங்கி குளிப்பது, அது தன் இரையை தேடி உண்பது போன்ற காணொளிகள் நன்றாக உள்ளது. பறவைகள் பறக்கும் படங்களும் அற்புதமாக உள்ளது.//

      காணொளிகளையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //நீங்கள் கூகுளில் எடுத்தப் போட்ட அது தன் இரையை உண்ணும் காட்சியும் நன்றாக உள்ளது. அந்த வலைப்பகுதியில் நீர் வடிந்து இரையாகி மீன் மட்டும் வாயின் உள்ளே சென்று விடும் போலும். இறைவனின் படைப்பு விந்தைகளை இப்படி ஒவ்வொன்றையும் பார்க்கும் போது, மனது வியந்து போகிறது. அததற்கு என்று ஒவ்வொரு ஆற்றலை தந்திருக்கிறார் இறைவன்.//

      ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆற்றலை இறைவன் தந்து இருப்பது உண்மை.

      //எல்லாப் படங்களும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

      உங்களின் கப்பல் பயணமாகிய இரண்டாவது பதிவுக்கு பிறகு கண்டிப்பாக வருகிறேன். நன்றி சகோதரி.//

      பதிவை ரசித்து பார்த்து படித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி.
      நேரம் கிடைக்கும் போது படிங்க.

      நீக்கு
  8. படங்கள் அழகு, சுவாரஸ்யம்.  ஊரைச் சுற்றி பார்க்க அந்த வண்டிகளுக்கு தனிக்கட்டணமா, கப்பல் காசு கொடுத்ததிலேயே சேர்ந்திருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு, சுவாரஸ்யம். ஊரைச் சுற்றி பார்க்க அந்த வண்டிகளுக்கு தனிக்கட்டணமா, கப்பல் காசு கொடுத்ததிலேயே சேர்ந்திருக்கிறதா?//

      ஆமாம், தனிக்கட்டணம் கொடுக்க வேண்டும். கப்பல் நின்ற இடத்திலிருந்து நடக்கிற தூரம் தான் கடைவீதி . மக்கள் நிறைய பேர் நடந்து போனார்கள். எங்களுக்கு நடக்க முடியாது என்பதால் பஸ்ஸில் அழைத்து போனான் மகன்.

      நீக்கு
  9. அசைவம் உண்டதால் அடுத்தடுத்து தலை முழுகுகிறது போல....!  அடுத்த காணொளியில் மீன் மிகவும் சிறிதாக இருந்திருக்கும்.  உப்புமாவில் இருக்கும் வெங்காயத்தை எடுத்து சாப்பிடுவது போல சட்டென சாப்பிட்டு விட்டது.. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அசைவம் உண்டதால் அடுத்தடுத்து தலை முழுகுகிறது போல....! //

      காலை எழுந்தவுடன் சுத்தமத்தமாக குளித்து சாப்பிடுகிறது

      //அடுத்த காணொளியில் மீன் மிகவும் சிறிதாக இருந்திருக்கும். உப்புமாவில் இருக்கும் வெங்காயத்தை எடுத்து சாப்பிடுவது போல சட்டென சாப்பிட்டு விட்டது.. //

      நல்ல உதாரணம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. அருமயான படங்கள். ஊரின் அழகை உங்கள் படங்கள் வாயிலாகப் பார்த்துக் கொண்டோம். சீகல் முங்கி குளிப்பது அருமை, அது போன்று கூழைக்கடா மீனைப் பிடித்த காட்சியை நீங்கள் தூரத்தில் இருந்து எடுத்ததும் மிக நன்றாக வந்திருந்திக்கிறது இப்படித் தூரத்தில் இருந்து எடுக்கும் போது பிடிப்பதைத் துல்லியமாக எடுப்பது சிரமம் தான் நம் கேமராக்களில். அதை நீங்கள் கூகுளில் இருந்து எடுத்துக் கொடுத்திருப்பது சிறப்பு.

    உங்கள் பயணக்க் குறிப்புகளை ரசித்தேன், சகோதரி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன்,வாழ்க வளமுடன்

      //அருமயான படங்கள். ஊரின் அழகை உங்கள் படங்கள் வாயிலாகப் பார்த்துக் கொண்டோம். சீகல் முங்கி குளிப்பது அருமை, அது போன்று கூழைக்கடா மீனைப் பிடித்த காட்சியை நீங்கள் தூரத்தில் இருந்து எடுத்ததும் மிக நன்றாக வந்திருந்திக்கிறது//

      நன்றி.

      //இப்படித் தூரத்தில் இருந்து எடுக்கும் போது பிடிப்பதைத் துல்லியமாக எடுப்பது சிரமம் தான் நம் கேமராக்களில். அதை நீங்கள் கூகுளில் இருந்து எடுத்துக் கொடுத்திருப்பது சிறப்பு.//

      ஆமாம், நல்ல ஜூம் காமிரா வேண்டும்.

      //உங்கள் பயணக்க் குறிப்புகளை ரசித்தேன், சகோதரி//

      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு