செவ்வாய், 24 டிசம்பர், 2024

சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி



வருடா வருடம் நான்போடும் கோலம்   கிறிஸ்மஸ் தாத்தா ( Santa Claus)  
 
டிசம்பர் 24 இரவில் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருவார் என்று  குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதை. அன்பும், கருணையும் உள்ள நல்ல குழந்தைகளாக இருப்பவர்களுக்கு அன்பளிப்புகள் தருவார் என்று குழந்தைகளுக்கு பெரியவர்கள் சொல்லும் கதை. 



ஏசு பிறந்த மாட்டுத் தொழுவ குடில்


இந்த வருடம் அமைத்த குடிலுக்கு கீழே ரயில் வண்டியை  வைத்து கொண்டு இருந்த போது எடுத்த படம் 

ஏசு கிறித்து குடில் அமைத்து விட்டான்.  நல்ல மேய்ப்பன்கள் இருவரும் இருக்கிறார்கள்.  பின்னால் ஆநிறைகளை காத்த ஆயர்குலவிளக்கு கண்ணனும்  இருக்கிறார்.


"சின்ன சின்ன  ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி" நான் சின்ன வயதில் திருநெல்வேலியில் "சாராடக்கர்" பள்ளியில் படித்த போது பாடிய பாடல். பேரன் சிறு வயதில் கிறிஸ்துமஸ் மரத்துக்கு கீழ் ரயில் வண்டிய வைக்கும் போது எல்லாம் நான் பாடுவேன் அவனுடன்  மகன் படித்த மாயவரம் கிறித்துவ பள்ளியிலும் இந்த பாடல் சிறு வயதில் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள், அவனும் பாடுவான்.

மழையும் மகிழ்ச்சியும் என்று 2009 ம் ஆண்டு நான் எழுதிய  பதிவில் சிறு வயதில் சாரா டக்கரில் படித்த செய்திபற்றி சொல்லி இருப்பேன்.


//மழைக் காலம் என்றால் குடை அவசியம். எனக்கு,என் அக்காவிற்கு, என் அண்ணனுக்கு ,மூன்று பேருக்கும் புதிதாகக் குடை வாங்கிப் பள்ளியில் மாறி விடக் கூடாது என்பதற்காகக் குடையில்,எங்கள் முதல் எழுத்தையும்,ஒரு பூவும் அழகாகத் தைத்துக் கொடுத்தார்கள்,அம்மா..

பாளையங்கோட்டையிலுள்ள சாராடக்கர் பள்ளியில் நடந்த கிறிஸ்மஸ்விழாவில் கலந்து கொண்டு பள்ளியில் கொடுத்த பரிசுப் பொருட்கள், தின்பண்டங்களை அம்மாவிடம் காட்டும் ஆவலில் குடையை பஸ்ஸிலேயே விட்டு விட்டு வந்துவிட்டோம், மூவருக்கும் நினைவு இல்லை.//

அம்மாவின் திட்டில் இருந்து தப்பிக்க நாங்கள் என்ன செய்தோம் அதன் விளைவு என்ன என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

சரி விஷயத்திற்கு வருவோம் அங்கு படித்த பாடலை இன்று உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன். 


சின்ன சின்ன ஜீவ வண்டி 
தேவன் அமைத்த ஜீவ வண்டி

ஆச்சிரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி-சின்ன

போகும் தூரம்  வெகுதூரம்
போகும்  வண்டி இதுவே தான் -சின்ன

ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான் 
தங்கடிக்கட் கொடுப்பாரம் -சின்ன

போகும் திக்கு இரண்டேதான்
மோட்சம் நரகம் என்பதுதான் - சின்ன

எல்லா மதங்களிலும் சொர்க்கம், நரகம் உண்டு. நல்லது செய்தால்  சொர்க்கம், கெட்டது செய்தால் நரகம்.

குழந்தைகளை நல்வழிபடுத்த, ஓழுக்கம், கீழ்படிதலுடன் நடக்க என்று சொல்லி கொடுக்கப்பட்ட பாடல்.



நல்ல மேய்ப்பர் மகன்  சிறு வயதில் வரைந்த படம்.


மகன் வீட்டில் கிறிஸ்மஸ் அலங்காரம்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு மருமகளும், பேரனும் செய்த கைவேலை. மகன் அனுப்பிய காணொளி, படங்கள் 

செயற்கை பனியில்  பொம்மைகள்

பனி சறுக்கு விளையாட்டு
புதிதாக வாங்கிய பொம்மை   ஏசு அன்னை, தந்தையுடன்

இந்த ஆண்டு புதிதாக வாங்கிய சாண்ட கிளாஸ்

கிறித்துமஸ் மரத்திற்கு மேல்  8 கலைமான்களை  கொண்ட திறந்த வண்டியில்  பனிவிழுந்து இருக்கும் பாதையில் சறுக்கி கொண்டு வேகமாக  வருவார். என்றும் இரவு கதவு பூட்டி இருந்தாலும் புகை போக்கி  வழியாக வந்து  விடுவார் என்ற கதைகளை கேட்டு வளர்ந்த பிள்ளைகள்  தங்கள் விருப்பங்களை இரவு சாண்டா கிளாஸிடம் சொல்லி விட்டு  அவருக்கு உணவும் பருக நீரும் வைத்து விட்டு படுத்து விடுவார்கள்.

முன்பே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த தாத்தாவைப்பார்த்து  அவரிடம் தங்களுக்கு வேண்டிய பரிசு பொருளை குழந்தைகள் எழுதி கொடுத்து விடுவார்கள். எதிர்பார்ப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய பரிசு  பொருளை  பெற்றோர்கள்   கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு   கிறிஸ்துமஸ் மரத்துக்கு கீழ் வைத்து விடுவார்கள். மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கவும் மரத்தை சுற்றி பரிசு வைத்து விடுவார்கள்.

மகன், மருமகள் இன்றும்  பேரன் விருப்பபட்ட பொருளை வாங்கி வைக்கிறார்கள். அவர்களுக்கும் மகிழ்ச்சி, பேரனுக்கும்  மகிழ்ச்சி. மற்ற குழந்தைகளுக்கும் பரிசு பொருள் கொடுத்து மகிழ்கிறார்கள்.

கிறிஸ்துமஸ்  நாளன்று எல்லோருக்கும் அன்பையும், இறை நம்பிக்கையும் கிறிஸ்துமஸ் தாத்தா தரட்டும்.

கிறிஸ்துமஸ் நாளன்று நமக்கு பரிசுகளை கொண்டு வருவார் என்கிற நம்பிக்கையுடன்  காத்திருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பியதை அளிக்கட்டும் கிறிஸ்துமஸ் தாத்தா.




புனித அந்தோனியார் படத்தில் வாணி ஜெயராம் பாடியது பிடித்த பாடல்.  பாடல் வரிகளுடன் பட காணொளி இருக்கிறது.இதை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி. காலத்தால் அழியாத  இனிமையான பாடல்



பி.சுசீலா பாடிய பழைய இனிமையான பாடல். 
நிறைய பாடல் எனக்கு பிடித்த பாடல் இருக்கிறது. பகிர ஆசைதான்.



பாடலை சுட்டியில் போய் கேட்கலாம்.


ஜிக்கி பாடிய  அன்பே பிரதானம் பாடல்
பாடல் வரிகள் எல்லாம் மிக அருமையாக இருக்கும்.



பாடலை சுட்டியில் போய் கேட்கலாம்

ஏசுபிரான் எங்கள் ஏசுபிரான் பாடல் எல். ஆர் ஈஸ்வரி  குரல் மிக இனிமையாக இருக்கும்

இசை பிரியர்கள் கேட்டு மகிழலாம்.


அனைத்து கிறித்துவ அன்பர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!


வாழ்க வையகம்!  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !

-----------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. கிறிஸ்துமஸ் திருநாள் நாளை அல்லது இன்றிரவு வருகிறது. நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கிறிஸ்துமஸ் திருநாள் நாளை அல்லது இன்றிரவு வருகிறது. நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  2. கிறித்தவ பாடல்களில் எனக்கும் பிடித்த நிறைய பாடல்கள் உண்டு.  மகன் வீட்டில் இந்த வருட கிறிஸ்துமஸ் அலங்காரம் அருமை.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிறித்தவ பாடல்களில் எனக்கும் பிடித்த நிறைய பாடல்கள் உண்டு. மகன் வீட்டில் இந்த வருட கிறிஸ்துமஸ் அலங்காரம் அருமை. //

      நிறைய பாடல்கள் உண்டு. பாடல்களை தேர்ந்து எடுத்து போட்டால் காணொளி வர மாட்டேன் எங்கிறது, பாடல் சுட்டி மூலம் கேட்டு பாருங்கள். நான் நிறைய பாடல்கள் கேட்டேன் நேற்று.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் பள்ளியில் படித்த போது உங்கள் அம்மா கைவேலை செய்து தந்த குடை தொலைந்துப் போனதை உங்களின் ஏதோ ஒரு பதிவில் நான் படித்து அறிந்துள்ளேன். அதன் பின் அந்த சம்பவத்தை எப்படி சமாளித்தீர்கள் என்பதை அறிய நீங்கள் தந்த சுட்டியில் சென்று பார்க்கிறேன்.

    நீங்கள் பகிர்ந்த பாடல்கள் இனிமை. வாணி ஜெயராம் அவர்களின் பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.

    தங்கள் மகன் வீட்டில் செய்த அலங்காரங்களும் , மகன் வரைந்த ஓவியமும் அருமை. தங்கள் பள்ளியில் படித்த பாடலும் நன்றாக உள்ளது. தங்கள் மகன் வீட்டில் செய்த கைவேலைகள் அழகாக இருக்கிறது. தங்கள் மகன் மருமகள் பேரன் கவின் அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்கள். இந்த நன்நாளில், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.//

      நன்றி.

      //நீங்கள் பள்ளியில் படித்த போது உங்கள் அம்மா கைவேலை செய்து தந்த குடை தொலைந்துப் போனதை உங்களின் ஏதோ ஒரு பதிவில் நான் படித்து அறிந்துள்ளேன்.//

      அப்படியா எதில் போட்டேன் நினைவு இல்லை.

      //அதன் பின் அந்த சம்பவத்தை எப்படி சமாளித்தீர்கள் என்பதை அறிய நீங்கள் தந்த சுட்டியில் சென்று பார்க்கிறேன்.//

      நேரம் கிடைக்கும் போது படிங்க.


      //நீங்கள் பகிர்ந்த பாடல்கள் இனிமை. வாணி ஜெயராம் அவர்களின் பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.//

      வாணி ஜெயராம் பாடல் மிகவும் நன்றாக இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று தான் பகிர்ந்தேன்.

      //தங்கள் மகன் வீட்டில் செய்த அலங்காரங்களும் , மகன் வரைந்த ஓவியமும் அருமை. தங்கள் பள்ளியில் படித்த பாடலும் நன்றாக உள்ளது. தங்கள் மகன் வீட்டில் செய்த கைவேலைகள் அழகாக இருக்கிறது. தங்கள் மகன் மருமகள் பேரன் கவின் அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்கள். இந்த நன்நாளில், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து படித்து கருத்து சொல்லி, மகன் குடும்பத்தை வாழ்த்தி நன்றாக வாழ பிரார்த்தனைகளும் செய்து கொண்டதற்கு நன்றி நன்றி.

      நீக்கு
  4. காணொளி கண்டேன், ரசித்தேன்.  இவ்வளவு அர்ப்பணிப்புடன், சுவாரஸ்யத்துடன் எல்லா விசேஷங்களையும் விடாமல் கொண்டாடுவது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளி கண்டேன், ரசித்தேன். இவ்வளவு அர்ப்பணிப்புடன், சுவாரஸ்யத்துடன் எல்லா விசேஷங்களையும் விடாமல் கொண்டாடுவது பாராட்டுக்குரியது.//

      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  5. புனிதஅந்தோணியார் பாடல், வானாதி வானங்களில், உனையன்றி எனைக் காக்க உலகினில் யார் பாடல் ஆகியவற்றைப் பாடி என் கிறிஸ்துவ நண்பர்களுக்கு இரவு வாழ்த்து அனுப்பினேன்!  பாவம் அவர்கள்!!  வாணி ஜெயராமின் அந்த மகா இனிமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புனிதஅந்தோணியார் பாடல், வானாதி வானங்களில், உனையன்றி எனைக் காக்க உலகினில் யார் பாடல் ஆகியவற்றைப் பாடி என் கிறிஸ்துவ நண்பர்களுக்கு இரவு வாழ்த்து அனுப்பினேன்! பாவம் அவர்கள்!! வாணி ஜெயராமின் அந்த மகா இனிமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.//

      உங்கள் குரல் இனிமையாக இருக்குமே! அவர்களுக்கு முன்பு பாடி காட்டி ரசித்து இருப்பார்கள் தானே? அவர்கள் ரசித்து கேட்டதால் தானே அனுப்பி இருப்பீர்கள்.

      எனக்கும் பிடித்த பாடல்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. முதலில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் அக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா வாழ்க வளமுடன்
      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. என் மகனும் கவின் போல இப்படி ரயில் வண்டியை வைத்துக் கொண்டு விளையாடினான் பருவ வயதிலும் கூட அதன் பின் 10 ஆம் வகுப்பு 12 வரை என்றும் சொல்லலாம். எங்கள் இருவருக்குமே ரயில் ரொம்பப் பிடிக்கும்.

    ரொம்பச் சின்ன வயதில் சென்னை, தில்லிக்குப் பயண சமயத்தில் - 2-3-4-5 வயது வரையில், எந்த ஸ்டேஷனில் இஞ்சின் மாத்துவாங்கன்னு அவனுக்குத் தெரியும். அந்த ஸ்டேஷனில் ரயில் 20 நிமிடங்கள் நிற்கும் (ஈரோடு) அவன் இரவில் தூங்காமல் ஜன்னல் வழி பார்த்துக் கொண்டே வருவான் என்னிடம் பேசிக் கொண்டே. ஆனால் 2 வயது ஆகியும் பேச்சு வரவில்லை ஆனால் சைகையால்....அதன் பின் பேச்சு தொடர்ந்து வரவில்லை வார்த்தைகள் நான் புரிந்து கொள்வேன். பார்ப்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே. ஸ்டேஷன் வந்ததும் சைகையால் சொல்லுவான் எஞ்சின் கப்ளிங்க் செய்வதைப் பார்க்க வேண்டும் என்று. நான் இறக்கிக் கூட்டிச் செல்வேன். ஜாயின் செய்ததும் மீண்டும் பெட்டிக்கு வருவோம். ரயில் கிளம்பிவிடும் என்று அவனிடம் சொல்லி...

    கவின் ரயிலுடன் இருப்பதைப் பார்த்ததும் பல நினைவுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் மகனும் கவின் போல இப்படி ரயில் வண்டியை வைத்துக் கொண்டு விளையாடினான் பருவ வயதிலும் கூட அதன் பின் 10 ஆம் வகுப்பு 12 வரை என்றும் சொல்லலாம். எங்கள் இருவருக்குமே ரயில் ரொம்பப் பிடிக்கும்.//

      ஆமாம் , ரயில் பயணம் பிடிக்கும் என்பதை சொல்லி இருக்கீற்கள்.
      மகனும் ரயில் விளையாட்டு விளையாடியது அறிந்து மகிழ்ச்சி..
      எனக்கும் ரயில் பயணம் பிடிக்கும் ஜன்னல் பக்கம் இருக்கை மிகவும் பிடிக்கும். சிறு வயது முதலே குழந்தைகளாக இருக்கும் போது ரயில் விளையாட்டு விளையாடுவோம்.

      பேரன் நிறைய ரயில்கள் வாங்கி இருக்கிறான், கிறிஸ்துமஸ் அன்று பரிசாக ரயில்கள் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.

      சில குழந்தைகள் மெதுவாக பேசுவார்கள்.
      உங்கள் மகனின் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.



      நீக்கு
  8. எல்லா விழாக்களையும் இப்படி ஆர்வமாகக் கொண்டாடுவது மிகப் பெரிய விஷயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். நல்ல நேர்மறை எண்ணங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லா விழாக்களையும் இப்படி ஆர்வமாகக் கொண்டாடுவது மிகப் பெரிய விஷயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். நல்ல நேர்மறை எண்ணங்கள்.//

      மகிழ்ச்சியாக இருப்பதற்கு , நம்மை உற்சாக படுத்தி கொள்வதற்கும் தான் பண்டிகைகள்.

      நானே வாசலில் கோலம் போடுவது என்னை சுறு சுறுப்பாக வைத்து கொள்ளவும் கோலத்தைப்பார்க்கும் போது எல்லாம் மகிழ்ச்சியும் தரும் அதற்குத்தான்.

      நீக்கு
  9. சின்ன சின்ன ரயில் வண்டி ஆமாம் நானும் கற்றிருக்கிறேன். பள்ளியில் தான் நான் படித்ததும் கிறித்தவ பள்ளியில்தான்.

    நீங்கள் சாராடக்கரிலா...ஆஹா அது மிகவும் புகழ்பெற்ற பள்ளி, கல்லூரி திருநெல்வேலியில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சின்ன சின்ன ரயில் வண்டி ஆமாம் நானும் கற்றிருக்கிறேன். பள்ளியில் தான் நான் படித்ததும் கிறித்தவ பள்ளியில்தான்.

      நீங்கள் சாராடக்கரிலா...ஆஹா அது மிகவும் புகழ்பெற்ற பள்ளி, கல்லூரி திருநெல்வேலியில்.//

      ஆமாம், நான், மகன், மகள் எல்லாம் சிறிது காலம் கிறிஸ்துவ பள்ளியில் படித்து இருக்கிறோம்.
      சாராடக்கரில் படிப்பை தொடர முடியாமல் அப்பாவுக்கு மாற்றல் ஆகி விட்டது தூத்துக்குடிக்கு. அங்கேயே படித்து இருந்தால் நன்றாக படித்து இருப்பேன்.

      நீக்கு
  10. மாலையில் வாசிக்கிறேன் அக்கா, குடை மறந்த நிகழ்வு அம்மா என்ன சொன்னார் என்பதனை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாலையில் வாசிக்கிறேன் அக்கா, குடை மறந்த நிகழ்வு அம்மா என்ன சொன்னார் என்பதனை...//

      அம்மாவிடம் என்ன கிடைக்கும் திட்டுதான். கோபம் அதிகமானதற்கு நாங்கள் தப்பாக முடிவு எடுத்தது.

      நீக்கு
  11. மகன் சிறு வயதில் வரைந்த படம் சூப்பரா இருக்கு அக்கா. அதான் கவினுக்கும் அம்மா அப்பா, தாத்தா பாட்டி, அத்தை எல்லோரது ஜீனும் வந்துள்ளது வளர்ப்பில் உள்ள ஆர்வங்களூம்! நல்ல விஷயங்களும். நல்ல சூழலில் குழந்தை வளர்கிறார். இறைவன் எல்லா நன்மைகளையும் ஆசிர்வதிக்கட்டும்.

    பாருங்க அம்மாவும் மகனும் அழகா கை வேலை செய்யறாங்க. காணொளியை மிகவும் ரசித்தேன் அவர்கள் பேசுவதும் கைவேலைத் திறமையையும் மிகவும் ரசித்தேன். கற்பனையும் கைத்திறனும் அபாரம்! பாராட்டுகளை அவர்களுக்குச் சொல்லிவிடுங்கள் அக்கா.

    என் பழைய நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

    //மகன், மருமகள் இன்றும் பேரன் விருப்பபட்ட பொருளை வாங்கி வைக்கிறார்கள். அவர்களுக்கும் மகிழ்ச்சி, பேரனுக்கும் மகிழ்ச்சி. மற்ற குழந்தைகளுக்கும் பரிசு பொருள் கொடுத்து மகிழ்கிறார்கள்.//

    சூப்பர் சூப்பர் கோமதிக்கா. இங்கும் அப்படியே....ஆனா மகனுக்கு எதுவும் சொல்லத் தெரியாது...இப்பவும் கூட... தன் விருப்பங்களை. நாங்களாகப் பார்த்து புரிந்து கொண்டு செய்தது.....விரும்பித் தயக்கத்துடன் கேட்டவை ஒன்று..... கருத்து பெரிதாகிவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் சிறு வயதில் வரைந்த படம் சூப்பரா இருக்கு அக்கா.//
      9 ம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். அவன் பரிசு பெற்ர புத்தகத்தின் அட்டை படம் அதைப்பார்த்து வரைந்தான்.

      //அதான் கவினுக்கும் அம்மா அப்பா, தாத்தா பாட்டி, அத்தை எல்லோரது ஜீனும் வந்துள்ளது வளர்ப்பில் உள்ள ஆர்வங்களூம்! நல்ல விஷயங்களும். நல்ல சூழலில் குழந்தை வளர்கிறார். இறைவன் எல்லா நன்மைகளையும் ஆசிர்வதிக்கட்டும்.//

      உங்கள் கருத்துக்கும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என்று வாழ்த்தியதும் அருமை, நன்றி.

      //சூப்பர் சூப்பர் கோமதிக்கா. இங்கும் அப்படியே....ஆனா மகனுக்கு எதுவும் சொல்லத் தெரியாது...இப்பவும் கூட... தன் விருப்பங்களை. நாங்களாகப் பார்த்து புரிந்து கொண்டு செய்தது.....விரும்பித் தயக்கத்துடன் கேட்டவை ஒன்று..... கருத்து பெரிதாகிவிடும்.//

      மகன் கேட்டதை சொல்லவே இல்லையே!

      நீக்கு
  12. மண்ணுலகில் இந்த தேவன் அருமையான பாடல் கேட்டு ரசித்த பாடல்.

    அடுத்த பாடல் கேட்டதில்லை இப்பதான் கேட்கிறேன் நன்றாக இருக்கிறது

    மற்றவை மாலையில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மண்ணுலகில் இந்த தேவன் அருமையான பாடல் கேட்டு ரசித்த பாடல்.

      அடுத்த பாடல் கேட்டதில்லை இப்பதான் கேட்கிறேன் நன்றாக இருக்கிறது//

      அடுத்த பாடலூக்கு மகள் கோலாட்டம் ஆடி இருக்கிறாள் பள்ளியில்.
      நல்ல பாடல். நல்ல இசைஅமைப்பு.

      மற்றவை மாலையில்//

      மெதுவாக வாங்க கீதா, அத்தனை வேலைக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி கீதா.

      நீக்கு
  13. அனைத்து பகுதிகளும் அருமை அம்மா... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோ தங்களது கிருஸ்துமஸ் பதிவு அருமை .

    காணொளி கண்டேன் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //வணக்கம் சகோ தங்களது கிருஸ்துமஸ் பதிவு அருமை .

      காணொளி கண்டேன் சிறப்பு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. உங்கள் பேரன் ,மருமகளின் கைவண்ணங்கள் அருமை.

    கிறிஸ்மஸ்ட் அலங்காரங்கள் அனைத்தும் கவர்கின்றன.பேரனுக்கு வாழ்த்துகள்.

    எனது பேரனும் நகரவீட்டிலும்,ஊரிலும் கிறிஸ்மஸ்ட் அலங்காரங்கள் செய்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //உங்கள் பேரன் ,மருமகளின் கைவண்ணங்கள் அருமை.//

      நன்றி.

      //கிறிஸ்மஸ்ட் அலங்காரங்கள் அனைத்தும் கவர்கின்றன.பேரனுக்கு வாழ்த்துகள்.//

      நன்றி மாதேவி.

      //எனது பேரனும் நகரவீட்டிலும்,ஊரிலும் கிறிஸ்மஸ்ட் அலங்காரங்கள் செய்தார்.//

      உங்கள் பேரனும் அலங்காரங்கள் செய்த விவரம் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு