வெள்ளி, 7 ஜூன், 2024

கப்பல் பயணம் (CARNIVAL RADIANCE CRUISE ) பகுதி -1




மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன்.  

"சேத்னா காயத்ரி உணர்வு மையம்" முந்திய பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்

மே 30 தேதி வியாழன்  மதியம் இரண்டு மணிக்கு மேல்  அரிசோனாவிலிருந்து கிளம்பி ஆறுமணி நேரம் பயணம் செய்து   லாஸ் ஏஞ்சல்ஸ் அடைந்தோம்,   அங்கு ஓட்டலில் தங்கி விட்டோம் இரவு .  மே 31 ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் தான் எங்கள் பயணம் தொடங்கும்,  

இந்த கப்பலில் தான் பயணம் செய்தோம். இந்த கப்பலின் பெயர்  CARNIAL RADIANCE  மே மாதம் 31 ம் தேதி வெள்ளிக்கிழமை  மதியம் இரண்டு மணிக்கு வந்தோம். 3 மணிக்கு எல்லா பரிசோதனைகள்  முடிந்து உள்ளே போக அனுமதி சீட்டு பெற்று கப்பலில் ஏறினோம்.    

வெள்ளி, சனி, ஞாயிறு  மூன்று இரவுகள் கப்பலில் இருந்தோம்.திங்கள் காலை உணவுக்கு பின் கப்பலை விட்டு இறங்கினோம்.

எங்களுக்கு பின்னால் தெரிவது வேறு ஒரு கப்பல்
பேரன் என்னை எதுவும் தூக்கவிடவில்லை, அவன் படுத்து கொள்ளும் போது வைத்து கொள்ளும்  பொம்மை தலையணை மட்டும் கையில் வைத்து கொள்ளுங்கள் என்றான்.


குறிப்பிட்ட நேரத்துக்கு முன் வந்தால் நம் பெட்டிகளை அவர்களே கப்பலுக்கு எடுத்து சென்று விடுவார்கள். நாங்கள் காயத்ரி கோவில், மற்றும்  மதியம் உணவு முடித்து வந்ததால் நீங்கள் தான் உங்கள் பெட்டிகளை எடுத்து போக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.


மோப்ப நாய்களுடன் காவலர்கள்



செயற்கை நாய் வேறு மரத்தில் கட்டி வைத்து இருந்தார்கள்
இந்த நாயை கட்டி வைக்கவில்லை
இப்படி பிரேம் வைத்து இருந்தார்கள் அதில் வித விதமாக மக்கள் நின்று படம் எடுத்து கொண்டார்கள்.


நாங்களும் எடுத்து கொண்டோம்.

பாஸ் போர்ட் பரிசோதனை  செய்யும் இடத்தில்

என்னை படம் எடுக்க மறந்து விட்டார் என் பாஸ்போர்டை  பரிசோதனை  செய்த முதிய அம்மா 

மீண்டும் என்னை படம் எடுத்து  விட்டு  வீல் சேரில்  அழைத்து செல்கிறார்கள் உதவியாளர்கள் .

பாஸ்போர்ட் பரிசோதனை , மற்றும்  நம்மை படம் எடுத்தல், நம் பெட்டிகளை சோதனை செய்தல் என்று பூர்வாங்க வேலைகள் முடிந்தபின் 
வெகு தூரம் நடக்க வேண்டும் என்பதால் வீல் சேர் ஏற்பாடு செய்து இருந்தார்கள். எனக்கும், சம்பந்திக்கும்.

பேரன் எடுத்த படம் , படத்தைப்பற்றிய வரிகளும் அவன் எழுதியதுதான். 



நாங்கள் வெற்றிகரமாக 
கப்பல் உள்ளே ஏறி விட்டோம்

இங்கு ஒரு  பரிசோதனை
நாங்கள் தங்கிய அறை கதவு

எங்கள் அறை வாசலில்

எங்கள் அறையில்  உள்ள  டி.வி திரை எங்கள் இருவரையும் வரவேற்றது 
மருமகளின் அம்மா பேர் மீனாகல்யாணி  பேரை சுருக்கி விட்டார்கள்

எங்கள் இருவருக்கும் கப்பல் பயணம்  "முதல் பயணம்" அதை சிறப்பு செய்ய அறையை அழகு படுத்தி கேக் வைத்து இருந்தார்கள். மகன், மருமகள், பேரன் மூவரும் 2015 ல்  போய் இருக்கிறார்கள். நாங்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக அழைத்து சென்றார்கள். மகன் , மருமகள் ஏற்பாடு இந்த மாதிரி அறையை அலங்கரித்து கேக் வைக்க சொல்லி,  எங்களுக்கு இனிய அதிர்ச்சி கொடுத்தார்கள்.

இருவரும் கேக் வெட்டி கொண்டாடினோம்




அறை சாவி, சாப்பாட்டு அறைக்கு போகும் போது செக் செய்வார்கள் அதற்கு எங்கள் இருவருக்கும் பத்திரமாக வைத்துக் கொள்ள கழுத்தில் மாட்டி கொள்கிற மாதிரி கொடுத்தார்கள், அதில் என் கணவர் பெயரும் இருந்தது . அவர்களும் எங்களுடன் பயணம் செய்வது போல நினைத்து கொண்டேன்.  எங்கு சென்றாலும் கழுத்தில் மாட்டிக் கொண்டு சென்றோம். 


அறையில் கொஞ்சம் ஓய்வு எடுத்தபின் மேல் தளம் சென்றோம்.  எத்தனை விதமான மனிதர்கள்! ஒவ்வொருவர் முகத்திலும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. மகிழ்ச்சி ஆரவாரம்.


மேலே இருந்து குழாய் வழியாக சறுக்கி கொண்டே வந்து நீச்சல் குளத்தில் குதிக்கும் போது மகிழ்ச்சி ஆரவாரம் காதை துளைக்கும்.



லிப்ட் வசதி உண்டு

தண்ணீர் நிரம்பியவுடன் சாய்ந்து தண்ணீரை கொட்டும் அதன் அடியில் இருப்பவர்கள் மகிழ்ச்சி கூச்சல் செய்வார்கள்.


சிறிய காணொளி தான் 

 விடுமுறையை மகிழ்ச்சியாக  அனுபவிக்க  வந்து இருக்கும்  மக்கள் கூட்டம் . நிறைய பேர் வயதான தாய் தந்தையரை அழைத்து வந்து இருந்தார்கள், நண்பர்கள் சேர்ந்து  வந்து இருந்தார்கள்.  சுற்றத்துடன் வந்து இருந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சியான முகத்தைப்பார்த்தாலே நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.



சிறு குழந்தைகள் நீரில் விளையாட்டு

பெரியவர்கள், சிறுவர்கள் நீச்சல் செய்ய தனி தனி நீச்சல் குளம் உண்டு . பாதுகாப்பு கவசம் உண்டு குழந்தைகளுக்கு, சில குழந்தைகள் அணிந்து இருந்தார்கள்.







நீச்சல் குளத்தில்  குளித்து விட்டு வெயில் காயவும் செய்தார்கள்

பெரியவர்கள் குளிக்கும் நீச்சல் குளம்







கோன் ஐஸ் சாப்பிட்டோம் எல்லோரும் எவ்வளவு வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். கொஞ்சமாக எடுத்து கொண்டோம்.


காய்கறி உள்ளே வைத்த பிரட் ரோல்,  உருளை வேக வைத்து உப்பு மட்டும் போட்டு இருந்தார்கள், மிளகு போட்டு கொள்ளலாம்.  பாஸ்தா,    உணவுக்கு முன் தக்காளி சூப் .  பாதி சூப் குடித்தபின் தான் படம் எடுக்க நினைவு வந்து  எடுத்தேன். ஊட்டி வர்க்கி போல சூப்புக்கு  கொடுத்தார்கள்.

சைவ அசைவ உணவுகள் இருக்கிறது, விரும்பியதை கேட்டு வாங்கி சாப்பிடலாம், நாமே எடுத்து சாப்பிடும் உணவு கூடமும் இருக்கிறது. பழங்கள், கேக் வைகள், உணவுக்கு பின் சாப்பிடும் இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம்  அயிட்டங்கள் என்று . 

உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் உணவு அறையும் இருக்கிறது.

நம் அறையில் இருக்கும் போனில் நாம் நம் உணவு  நேரத்தை  சொல்லலாம். நம் உணவு மேஜையும், இருக்கையும்  தயார் ஆனதும் அவர்கள் அழைப்பார்கள்.

சமையல் கூடத்தில் இருந்தவர்கள் இரண்டு பேர் ,  தமிழ் பேசுபவர்கள், ஒருவர் திருச்சி, இன்னொருவர் திருநெல்வேலி.


நாங்கள் உணவு முடித்து அறைக்கு வந்து விட்டோம். ஆனால் வாணவேடிக்கை,(வானில் சென்று அழகாய்  வெடிக்கும் ) ஆடல், பாடல் எல்லாம் இரவு மேல் தளத்தில் நடந்தன. நம் அறையில் உள்ள டிவி திரையில் பார்த்தோம்.
மக்கள் எல்லோரும் மூன்று மணி வரை  ஓடி கொண்டும், பாடி கொண்டும் இருந்தார்கள்.

இன்னும் மேலே தளங்கள் இருக்கிறது, மேலே நடைபயிற்சி செய்ய செஸ் விளையாட , உடற்பயிற்சிகள் செய்ய  என்று  நிறைய இருக்கிறது. கீழ் தளம் சாப்பாட்டு அறைகள்  , கடைகள், மற்றும் போட்டோ எடுத்து கொள்ள இடங்கள் என்று  நிறைய இருக்கிறது , அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

இன்று மகனுக்கும் மருமகளுக்கும் இனிய திருமண நாள் .
இறைவன் அருளும் உங்கள் ஆசிகளும், வாழ்த்துகளும்  அவர்களுக்கு வேண்டும்.



மீதி அடுத்த பதிவில்  .

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------

35 கருத்துகள்:

  1. // நீங்கள் தான் உங்கள் பெட்டிகளை எடுத்து போக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். //

    அச்சச்சோ...   அப்படியும் ஆள் வைத்திருக்கக் கூடாதோ...    படத்தில் உங்களுடன் நிற்பது யார்?  சம்பந்தியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அச்சச்சோ... அப்படியும் ஆள் வைத்திருக்கக் கூடாதோ..//.

      அங்கு மிகவும் கெடுபிடியாக இருந்ததால் நாங்களே பெட்டிகளை தள்ளி கொண்டு போய் விட்டோம்.
      வரும் போது அவர்கள் பெட்டிகளை எடுத்து வந்து விட்டார்கள் ஞாயிறு இரவே நம் அறைக்கு வெளியே வைக்க சொல்லி விட்டார்கள்.
      நமக்கு எந்த பூத்தில் இருக்கிறது என்று நம்பர் அனுப்பி விட்டார்கள்.
      உள்ளே இருந்து வெளியே வர போர்டரும் முன்பதிவு செய்து விட்டோம்.
      அதனால் எளிதாகி விட்டது.

      //படத்தில் உங்களுடன் நிற்பது யார்? சம்பந்தியா?//
      ஆமாம்.




      நீக்கு
  2. பின்னர் படித்ததில் அவர்கள் சம்பந்தி என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.  கொண்டாட்டங்கள் பற்றி விளக்கமாக குறிப்பிட்டு  எங்களையும் அந்த உணர்வுக்கு அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பின்னர் படித்ததில் அவர்கள் சம்பந்தி என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.//

      ஆமாம்.

      //கொண்டாட்டங்கள் பற்றி விளக்கமாக குறிப்பிட்டு எங்களையும் அந்த உணர்வுக்கு அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.//

      இன்னும் கொண்டாட்டங்கள் வரும் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. படங்களை ரசித்தேன். காணொலியையும் ரசித்தேன்.கொண்டாட பல வகை. கப்பல் இன்னும் புறப்படவில்லை அல்லவா? சிறு பயணம் உண்டுதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்களை ரசித்தேன். காணொலியையும் ரசித்தேன்.கொண்டாட பல வகை. கப்பல் இன்னும் புறப்படவில்லை அல்லவா? சிறு பயணம் உண்டுதானே?//

      கப்பல் புறப்பட்டு விட்டது ஸ்ரீராம், மெதுவாக போய் கொண்டே இருந்தது. ஞாயிறு மெக்ஸிகோவில் நின்றது. அங்கு கொஞ்சம் சுற்றிப்பார்க்க பஸ் ஏற்பாடு செய்து இருந்தார் மகன். இரவு கப்பல் கிளம்பி திங்கள் காலை 4.50க்கு எல்லாம் கரைக்கு வந்து விட்டது.
      எட்டுமணிக்கு காலை உணவு கொடுத்து அனூப்பி விட்டார்கள்.

      நீக்கு
  4. மகனுக்கும் மருமகளுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.  இந்த நாளின் இனிய நினைவுகளும், சந்தோஷங்களும் என்றென்றும் நிலைத்திருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகனுக்கும் மருமகளுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். இந்த நாளின் இனிய நினைவுகளும், சந்தோஷங்களும் என்றென்றும் நிலைத்திருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.//

      இந்திய நேரப்படி 7ம் தேதிக்கு உங்களை வாழ்த்த சொல்லி இருக்கிறேன். இப்போது மணி 6 .4 நாளை காலை 7ம் தேதி திருமண நாள்.
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்களை பார்க்கும்பொழுது நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.

    சொல்லி வரும் விவரங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

    தங்களது மகன், மருமகளுக்கு எமது இனிய திருமண நன்நாள் வாழ்த்துகள் சகோ.

    சம்பந்நிகள் இருவரும் பெயரன் கவினோடு மகிழ்ச்சியாக பொழுதை களியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்களை பார்க்கும்பொழுது நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.

      சொல்லி வரும் விவரங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.//

      நன்றி.

      //தங்களது மகன், மருமகளுக்கு எமது இனிய திருமண நன்நாள் வாழ்த்துகள் சகோ.//

      மிகவும் மகிழ்ச்சி உங்கள் வாழ்த்துக்கு .
      நன்றி நன்றி.

      //சம்பந்நிகள் இருவரும் பெயரன் கவினோடு மகிழ்ச்சியாக பொழுதை களியுங்கள்.//

      ஆமாம், அவனுக்கு விடுமுறை விட்டு விட்டார்கள். இருவருக்கும் அவனுடன் பொழுது போகிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. சொகுசுக் கப்பல் பயணம் பதிவு மிகவும் நன்று.

    ரசித்துப் படித்தேன். படங்களும் மிக நன்றாக வந்திருக்கின்றன.

    உங்களுக்கு மறக்க இயலாத பயணமாக இருந்திருக்கும். கப்பல் பயணம் இருவருக்கும் ஒத்துக்கொண்டதா? தலைசுற்று போன்றவை இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //சொகுசுக் கப்பல் பயணம் பதிவு மிகவும் நன்று.

      ரசித்துப் படித்தேன். படங்களும் மிக நன்றாக வந்திருக்கின்றன.//

      நன்றி தமிழன்.

      //உங்களுக்கு மறக்க இயலாத பயணமாக இருந்திருக்கும். கப்பல் பயணம் இருவருக்கும் ஒத்துக்கொண்டதா? தலைசுற்று போன்றவை இல்லையா?//

      கப்பல் பயணம் இனிமையாக இருந்தது, பரந்த கடலை பார்த்து கொண்டு இருந்தேன், வேறு சிந்தனைகள் இல்லை.
      சின்ன டால்பின் குதித்தது பார்க்க அழகாய் இருந்தது ஆனால் படம் எடுக்க முடியவில்லை என்று வருத்தம்.
      இருவருக்கும் தலைசுற்று போன்றவை வரவில்லை, இருவருக்கும் ஒத்து கொண்டது கடல் பயணம்.

      நீக்கு
  7. மகன் மருமகளின் திருபமண நாள் வாழ்த்துகள்.

    பேரன் எயல்கள் மனதை நெகிழ்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  8. //மகன் மருமகளின் திருபமண நாள் வாழ்த்துகள்.//

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    //பேரன் எயல்கள் மனதை நெகிழ்த்துகிறது.//
    ஆமாம், பேரன் அவன் தாத்தாவை போல நடக்கும் போது கவனம் கவனம் என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
    ஊரிலிருந்து பிள்ளைகள் வந்து இருக்கிறார்களா?
    அதுதான் போன பதிவுக்கு வரவில்லையா?
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கப்பல் ஆஹா இம்மாம் பெரிசு!!! ஆமாம் க்ரூஸ் கப்பலே மிகவும் பெரிதாகத்தான் இருக்கும்!

    ஆஹா இப்பவும் பேரன் பொம்மை வைத்திருக்கிறாரே!!! பொம்மைத்தலையணை! உங்க பெட்டியைத் தூக்கவிடாமல் அவரே எடுத்துச் சென்றது மனதை நெகிழச் செய்தது. இறைவனுக்கு நன்றி அன்புடனான பேரனுக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கப்பல் ஆஹா இம்மாம் பெரிசு!!! ஆமாம் க்ரூஸ் கப்பலே மிகவும் பெரிதாகத்தான் இருக்கும்!//

      ஆமாம், பெரிசுதான்.

      //ஆஹா இப்பவும் பேரன் பொம்மை வைத்திருக்கிறாரே!!! பொம்மைத்தலையணை!//

      ஆமாம், அவனுக்கு பிடித்த கார்டூன் கதாபாத்திரங்கள் தலையணைகள் உண்டு அவனிடம். காரில் வரும் போது கொண்டு வருவான்.

      நீங்கள் நடப்பதே கஷ்டம் அதில் பொருடகளை தூக்கி கொண்டு நடக்க வேண்டாம் என்பான்.
      இறைவனுக்கு நாளும் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.

      உங்க பெட்டியைத் தூக்கவிடாமல் அவரே எடுத்துச் சென்றது மனதை நெகிழச் செய்தது. இறைவனுக்கு நன்றி அன்புடனான பேரனுக்கு!

      நீக்கு
  10. ஓ குறிப்பிட்ட நேரத்துக்கு வந்தால்தான் பெட்டி எடுத்துக் கொண்டு செல்வாங்களா...இல்லைனா நாமதான் இல்லையா...எப்படி எல்லாம் எடுத்துப் போனீங்க?

    அட செல்லங்கள் செக்யூரிட்டி செக்கிற்கு!!!

    செயற்கை நாய்கள் - கட்டி வைக்கப்பட்டதும் வைக்கப்படாததும்!! அவர்களின் கற்பனை என்னை எப்பவுமே அதிசயிக்க வைக்கும்.

    பேரன் நிறைய உங்கள் மகன் போலவே இருக்கிறார். அதாவது உங்கள் ஜாடை! நிறைய!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ குறிப்பிட்ட நேரத்துக்கு வந்தால்தான் பெட்டி எடுத்துக் கொண்டு செல்வாங்களா...இல்லைனா நாமதான் இல்லையா...எப்படி எல்லாம் எடுத்துப் போனீங்க?//

      ஆமாம் , நாங்கள் இழுத்து செல்லும் பெட்டிதானே! மருமகள், மகன், பேரன் இழுந்து வந்து விட்டார்கள்.

      //அட செல்லங்கள் செக்யூரிட்டி செக்கிற்கு!!!//

      இதை விட பெரிசு எல்லாம் உண்டு கீதா செக்யூரிட்டி செக் செய்ய

      //செயற்கை நாய்கள் - கட்டி வைக்கப்பட்டதும் வைக்கப்படாததும்!! அவர்களின் கற்பனை என்னை எப்பவுமே அதிசயிக்க வைக்கும்.//

      ஆமாம். அவர்களுக்கு நிஜ நாய், அல்லது விளையாட்டு நாயாவது கைகளில் வேண்டும். நாய் பிரியர்கள்.

      நீக்கு
  11. என்னை படம் எடுக்க மறந்து விட்டார் என் பாஸ்போர்டை பரிசோதனை செய்த முதிய அம்மா //

    அது பிரச்சைனை ஆகியிருந்திருக்காது என்று நினைக்கிறேன், கோமதிக்கா...அடுத்த வரியும் வாசித்துவிட்டேன் உங்களை படமெ டுத்து வீல் சேரில் அழைத்துச் சென்றாங்கன்னு.

    ஃப்ளைட் போலவே இங்கும் ஏரோ ப்ரிட்ஜ் போல கடல் தண்ணீர் இல்லையா அதனால பாலம் போல இருக்கு இல்லையா...

    பேரன் எழுதியதிலிருந்து கப்பலின் பெயர் விக்டரி!!!! வெற்றிகரமாக அமைந்தது உங்க பயணமும்!

    முதல் கப்பல் அனுபவத்தை மகன் மருமகள், பேரன் எல்லாரும் இனிதாக்கி கேக் வைத்துத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி!

    அதில் என் கணவர் பெயரும் இருந்தது . அவர்களும் எங்களுடன் பயணம் செய்வது போல நினைத்து கொண்டேன்.//

    எப்பவும் மாமா கூடவே இருப்பார் கோமதிக்கா!

    ஒரு பெரிய ஊரே மால் போன்ற வளாகமே உள்ளே இருப்பது போன்று உள்ளது! அறிந்ததுண்டு ஸ்விம்மிங்க் பூல் பார்க் என்று இருக்கும் என்பதும்.

    அப்போதே இலங்கை தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரப்பவே ஆது ஒரு 3 - 4 மணி நேரப் பயணம் தான் ஆனால் அதுக்குமே கப்பலுள் குழந்தைகள் விளையாட சீசா சறுக்கு மரம் இருந்ததுண்டு!

    தன்ணீர் கொட்டுவதை காணொளியிலும் கண்டேன் யுட்யூபில்!

    உணவு மற்றும் என்ன எல்லாம் தளங்கள் இருந்தன பற்றியும் வாசித்து ரசித்தேன்.

    மகனுக்கும் மரும்களுக்கும் இனிய மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள்! என்றென்றும் மகிழ்ச்சியுடன் அன்புடன் இறைவன் அருளுடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகள்!

    அனைத்தும் ரசித்துப் பார்த்து வாசித்தேன் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அது பிரச்சைனை ஆகியிருந்திருக்காது என்று நினைக்கிறேன், கோமதிக்கா...அடுத்த வரியும் வாசித்துவிட்டேன் உங்களை படமெ டுத்து வீல் சேரில் அழைத்துச் சென்றாங்கன்னு.//

      பிரச்சனை இல்லை. விரைவில் செய்து கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்கள்.

      //ஃப்ளைட் போலவே இங்கும் ஏரோ ப்ரிட்ஜ் போல கடல் தண்ணீர் இல்லையா அதனால பாலம் போல இருக்கு இல்லையா..//

      ஆமாம்.


      //பேரன் எழுதியதிலிருந்து கப்பலின் பெயர் விக்டரி!!!! வெற்றிகரமாக அமைந்தது உங்க பயணமும்!//

      ஆமாம்.

      //முதல் கப்பல் அனுபவத்தை மகன் மருமகள், பேரன் எல்லாரும் இனிதாக்கி கேக் வைத்துத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி!//

      ஆமாம் மகிழ்ச்சிதான்.

      //எப்பவும் மாமா கூடவே இருப்பார் கோமதிக்கா!//

      ஆமாம், அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

      //ஒரு பெரிய ஊரே மால் போன்ற வளாகமே உள்ளே இருப்பது போன்று உள்ளது! அறிந்ததுண்டு ஸ்விம்மிங்க் பூல் பார்க் என்று இருக்கும் என்பதும்.//

      அனைத்து வசதிகளும் உள்ளன.

      //அப்போதே இலங்கை தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரப்பவே ஆது ஒரு 3 - 4 மணி நேரப் பயணம் தான் ஆனால் அதுக்குமே கப்பலுள் குழந்தைகள் விளையாட சீசா சறுக்கு மரம் இருந்ததுண்டு!//
      அந்த காலத்தில் நான் சிறுமியாக இருக்கும் போது அப்பாவுடன் தூத்துகுடியில் நடுகடலில் நிற்கும் சார்லஸ் என்ற பெரிய கப்பலை பார்க்க போய் இருக்கிறேன். உள்ளே அனைத்து வசதிகளும் இருக்கும்.

      அண்ணன் ராமேஸ்வரத்தில் வேலை செய்த போது பெரிய கப்பலை பார்க்க அழைத்து போய் இருக்கிறார்கள்.. நானும் என் கணவரும் மகள், மகன் (சிறுவர்களாக இருந்தார்கள்) எல்லோரும் ஏறி போய் சுற்றிப்பார்த்தோம். காப்டன் பெரிய டப்பா பிஸ்கட் தந்தார் குழந்தைகளுக்கு.அந்த நினைவுகள் வந்து போனது.

      //மகனுக்கும் மரும்களுக்கும் இனிய மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள்! என்றென்றும் மகிழ்ச்சியுடன் அன்புடன் இறைவன் அருளுடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகள்!//

      கீதா, உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.
      காணொளி பார்த்து அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. தூத்துக்குடியிலும் ராமேஸ்வரத்திலும் கப்பல்கள் நிற்கும் என்றும் பார்க்கச் செல்வார்கள் என்றும் அப்ப சொல்லிக் கேட்டதுண்டு ஆமாம் எல்லா வசதிகளும் உண்டு.

      காப்டன் பெரிய டப்பா பிஸ்கட் தந்தார்//

      இலங்கை பிஸ்கட்டுகளா? கோமதிக்கா? ஏனென்றால் இலங்கையில் பிஸ்கட் எல்லாமே மிக மிக நன்றாக இருக்கும் சுவை. எனக்கு மீண்டும் அந்த நினைவுகள் வந்தன. பேக்கரி பதார்த்தங்கள் எல்லாமே அத்தனை சுவையுடன் இருக்கும். அங்கு பான் என்று சொல்லுவாங்க ப்ரெட் சாப்பிட்டு விட்டு இங்கு வந்து ப்ரெட் பிடிக்காமல் ஆனது. சின்ன வயசுல!

      கீதா

      நீக்கு
  12. கப்பலில் ஏறிய இடம் குறிப்பிட்டிருக்கலாம். அருமையான அனுபவம். படங்கள் நன்றாக உள்ளன. சார் இல்லாதது ஒரு குறை.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //கப்பலில் ஏறிய இடம் குறிப்பிட்டிருக்கலாம். //

      இதற்கு முந்திய பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இந்த பதிவை புதிதாக படிப்பவர்களுக்கு உதவும் நீங்கள் கேட்டது. மீண்டும் அதை எழுதி விட்டேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

      //அருமையான அனுபவம். படங்கள் நன்றாக உள்ளன. சார் இல்லாதது ஒரு குறை.//

      அருமையான அனுபவத்தை கொடுத்த மகனுக்கு நன்றி.
      சார் இல்லாத குறைதான், அவர்கள் இருந்து இருந்தால் இன்னும் மகிழ்ச்சி அதிகமாகி இருக்கும் இப்படி ரசிப்பது பிடிக்கும் அவர்களுக்கு.

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.



      நீக்கு
  13. மிக அழகான படங்களும், வர்ணனையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. மகன் மருமகளுக்கு மனமார்ந்த இனிய வாழ்த்துகள்! செழுமையான சந்தோஷமான வாழ்க்கை தொடர்ந்து இறுதிவரை வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்!

    கப்பலைப் பற்றிய விவரணம், தங்கிய அறையைப் பற்றிய விவரணம், அறையுள் டீவியில் பெயருடன் வரவேற்பு, அறையிலிருந்து கண்ணாடி வழி காணும் காட்சி, கப்ப்லில் பயணிக்கும் போது நடந்த நிகழ்வுகள் அதைக் காணொளியாகவும் கொடுத்தது எல்லாமே மிகவும் சிறப்பு.

    உணவு முதல் விளையாட்டுகள் வரை எல்லாமே மிகவும் அருமை. நாங்களும் உங்களோடு உடன் பயணித்தது போன்ற உணர்வைக் கொடுத்த விவரணம். காணொளிகள் படங்கள் எல்லாமே அருமை மிகவும் ரசித்துப் பார்த்தேன். மிக்க நன்றி சகோதரி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //மகன் மருமகளுக்கு மனமார்ந்த இனிய வாழ்த்துகள்! செழுமையான சந்தோஷமான வாழ்க்கை தொடர்ந்து இறுதிவரை வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்!//

      உங்கள் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      //கப்பலைப் பற்றிய விவரணம், தங்கிய அறையைப் பற்றிய விவரணம், அறையுள் டீவியில் பெயருடன் வரவேற்பு, அறையிலிருந்து கண்ணாடி வழி காணும் காட்சி, கப்ப்லில் பயணிக்கும் போது நடந்த நிகழ்வுகள் அதைக் காணொளியாகவும் கொடுத்தது எல்லாமே மிகவும் சிறப்பு.//

      அறையின் கண்ணாடி வழியே மிக அழகிய காட்சிகளை கண்டோம்.
      கடல் அலை மட்டுமே சில இடங்களில் பார்க்க முடியும் , அப்படியும் மனம் சலிக்கவில்லை, நீண்ட கடலை தொடுவானம் வரை பார்ப்பது மகிழ்ச்சியே!



      //உணவு முதல் விளையாட்டுகள் வரை எல்லாமே மிகவும் அருமை. நாங்களும் உங்களோடு உடன் பயணித்தது போன்ற உணர்வைக் கொடுத்த விவரணம். காணொளிகள் படங்கள் எல்லாமே அருமை மிகவும் ரசித்துப் பார்த்தேன். மிக்க நன்றி சகோதரி.//

      ஆனைத்தையும் ரசித்து பார்த்து, படித்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

      நீக்கு
  15. நீங்கள் பயணித்தகப்பல் படம் கண்டோம். அழகாக இருக்கிறது.

    கேக் வைத்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்கள் மகன் மருமகள்.

    நீச்சல் குழத்தில் சிறுவர்கள் மகிழ்ந்திருப்பர். கவினுக்கும் பயணம் மிகவும் பிடித்திருக்கும்.

    மகன்மருமகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் பயணித்தகப்பல் படம் கண்டோம். அழகாக இருக்கிறது.//

      நல்ல பெரிதாக அழகாய் இருந்தது

      //கேக் வைத்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்கள் மகன் மருமகள்.//

      ஆமாம்.

      //நீச்சல் குழத்தில் சிறுவர்கள் மகிழ்ந்திருப்பர். கவினுக்கும் பயணம் மிகவும் பிடித்திருக்கும்.//

      ஆமாம், 2015ல் போன போது அவன் சிறுவன், இப்போது பெரிய பையன் அனைத்தையும் ரசித்தான்.

      //மகன்மருமகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. 80 களில் சிங்கப்பூரில் கப்பல் பட்டறையில் பலவிதமான கப்பல்களைப் பார்த்திருக்கின்றேன்..
    கடற்பயணங்களும் வாய்த்திருக்கின்றன..நெஞ்சில் பலவிதமான நினைவுகள்
    இன்றைக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //80 களில் சிங்கப்பூரில் கப்பல் பட்டறையில் பலவிதமான கப்பல்களைப் பார்த்திருக்கின்றேன்..
      கடற்பயணங்களும் வாய்த்திருக்கின்றன..நெஞ்சில் பலவிதமான நினைவுகள்
      இன்றைக்கு..//

      நினைவுகள் அழிவுவது இல்லை. உங்கள் நினைவுகளை பதிவு மீட்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  17. அன்பின் மகன் மருமகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்..
    வாழ்க நலமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அன்பின் மகன் மருமகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்..
      வாழ்க நலமுடன்..//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு