புதன், 7 ஆகஸ்ட், 2024

பூங்காவில் நடைபயிற்சியும், வளர்ப்பு செல்லங்களும்

ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அரிசோனாவிற்கு அருகில் இருக்கும்    ஃ பிளாக்ஸ்டாப்  என்ற இடத்தில் அமைந்துள்ள   "எருமை பூங்காவிற்கு" அழைத்து சென்றான் மகன். 

முன்பு போட்ட Buffalo Park Flagstaff, 

இந்த பதிவில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் அவர்கள் அன்பாக வளர்க்கு தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் நடைபயிற்சி செய்தார்கள், செல்லங்களுடன் ஓடினார்கள். செல்ல பிராணியாக    நாய் தான் அனைவராலும் விருப்பமாக வளர்க்கப்படுகிறது.

அவை இந்த பதிவில் இடம்பெறுகிறது.

பரந்து விரிந்து இருக்கும்   இந்த பூங்காவிற்கு மக்கள் உடற்பயிற்சி செய்ய,  மலைச்சிகரங்களில் மலையேற்றம் செய்ய  வருகிறார்கள்.

சைக்கிளில் வலம் வருகிறார்கள், நடக்க முடியாதவர்கள் சக்கர நாற்காலியை அவர்களே ஓட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். குடும்பத்தோடு மாலை நேரம் வந்து  மகிழ்ச்சியாக பொழுது போக்கி செல்கிறார்கள்.

அங்குள்ள மக்களுக்கு குடும்பம் என்றால் அவர்கள் வளர்க்கும் வளர்ப்பு செல்லங்களும் அடக்கம் அவை இல்லாமல் வெளியில் வருவது இல்லை. இரவு 12  மணி வரை நேரம்  திறந்து இருக்கும் பூங்கா.


செல்லத்தோடும் அன்பு துணையோடும் மகிழ்வாய்

செல்லத்தோடு வேக வேக நடை

தன் குட்டிக் குழந்தை நடப்பதை மகிழ்வுடன் படம் பிடிக்கும் தாய்.


இன்னொரு மகன் பாறையில் படுத்து அம்மாவை அழைத்தான்

குடும்பமே ரசிக்கும் செல்லங்கள்

மாலை மயங்கும் நேரம்  செல்லங்களோடு  நடை


செல்ல மகன் குடையோடு பின்னால், வளர்ப்பு செல்லம் முன்னே!

மழை நின்று விட்டாலும் உற்சாகமாக குடை பிடித்து போகும் சிறுவன்.

நடந்து வந்ததை பாராட்டி அதற்கு  பையிலிருந்து உணவு எடுக்கும் அம்மா




மனிதர்களை காக்கும் நாய்கள்  மனிதர்களை தாக்கும் நாய்களாக மாற நிறைய காரணங்கள் இருப்பதாய் சொல்கிறார்கள்.

இணையத்தில் படித்த செய்தி பகிர்வு.

//மனிதர்களைப் போல நாய்களால்  தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தொந்தரவுகளை வாய்விட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் , குறிப்பால் உணர்த்த முடியும்

சொல்லம்ப்போனால், மனித உடல் மொழிக்கும், நாய்களின் உடல் மொழிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை //

என்று கூறுகிறார் நாய்கள் நடத்தையியல் நிபுணரான ஸ்ரீதேவி.

அப்படி ஒரு நாய் ஏதோவொரு காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் கீழ்காணும் அறிகுறிகளைக் கொண்டு முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம் என்று கூருகிறார் ஸ்ரீதேவி

எப்போதும் பதற்றமாக இருக்கும்

நடுக்கம்

பிறர் தொடுதலை விரும்பாது

அருகில் செல்லும் போது கோவமாகச் சத்தமிடுதல்

அந்த அறிகுறிகளைக் கவனிக்காமல் மேன்மேலும் அதைத் தொந்திரவு செய்தால்  தன்னை வளர்க்கும் உரிமையாளரைக்கூட  கடிக்கும் நிலைக்கு அது செல்லலாம்.
இப்படியான நாய்களுக்கு அதன் நிலையின்  தீவிரத்தைப் பொறுத்து  மருத்துவ ஆலோசனைப்படி சிகிட்சை அளிக்க வேண்டும்.//


நாயை வெளியில் கொண்டு செல்லாமல் எப்போதும் வீட்டுற்குள் வைத்துக் கொள்வது , கூண்டுக்குள் அடைப்பது , நீண்ட நேரம் கட்டி வைப்பது போன்ற செயலில்  ஈடுபட்டாலும் நாய்களின் குணம் மாறும் என்கிறார்கள். 

// இந்தியாவை பொறுத்தவரை 2021 கணக்கெடுப்பின்படி , 2.7 கோடி வீட்டு வளர்ப்பு நாய்கள் இருப்பதாகவும், இது 2026 ஆம் ஆண்டில் 4.3 கோடியாக அதிகரிக்கலாம் என்றும் ஜெர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்டேட்டிஸ்டா  என்ற தரவு ஆய்வு நிறுவனம் கூருகிறது.// 


செல்லபிராணிகளை வளர்ப்பவர் குறிப்பாக நாய் வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறோம் என்று தெரிய படுத்தமாலே வளர்ப்பதால்  சரியாக கணக்கு சொல்லமுடியவில்லை என்றும் சொல்கிறார்கள்.


- படித்த செய்தி நன்றி கூகுள்.


//கொரோனா காலத்துக்குப்பிறகு  செல்லப்பிராணிகளை  வளர்க்கும் பழக்கம் அதிகமாகி விட்டது. லாக் டவுனில் போரடித்த நாட்களை அழகாக்கியது செல்லப்பிராணிகளே !

தற்போது நாய்களை வளர்க்க அதிகம் பேர் ஆர்வம்காட்டி வருகின்றனர்இதனால்நாய்களை எப்படி வாங்குவதுபராமரிப்பதுஆரோக்கியமாக வைத்திருப்பதுஉணவு முறையைத் தெரிந்து கொள்வது போன்ற நிறையக் கேள்விகளுக்கானப் பதிவே இதுஎல்லா நாய்களும் காவல் காக்காதுகுழந்தைகளுடன் விளையாட ஒரு வகைகாவல் காக்க இன்னொரு வகைகுழந்தைகளைப் பாதுகாக்க மற்றொரு வகைகுழந்தையில்லாதோருக்கு தான் குழந்தையாகவே இருக்க ஒரு வகை எனப் பல்வேறு வகைகள் நாய் இனங்களில் உண்டுஒவ்வொரு நாயின் குணமும் வெவ்வேறு மாதிரிஅதன் இனம்வகைப் பொறுத்து மாறுப்படும்.//

இணைத்தில் படித்த செய்திகள். நன்றி  பகிர்ந்தவர்களுக்கு.




ஆளுக்கு ஒரு செல்லம்

நடைபயிற்சி செய்யும் மக்களுக்கும், வளர்ப்பு செல்லங்களும் தண்ணீர் குடிக்க வசதி எல்லா இடங்களிலும் இந்த வசதியைப் பார்த்தேன்.



தண்ணீர் குடிக்க வைக்கிறார்கள்


முதுகில் மாட்டி இருக்கும் பையிலிருந்து  கிண்ணம் எடுத்து அதில் தண்ணீர் பிடித்து கொடுக்கிறார்

 

நடந்து வந்த களைப்பு நீங்க தண்ணீர்  அருந்தும் செல்லம்



கிண்ணத்தில் வைத்த நீரை  குடித்தாலும்  தானே குடிக்க ஆசை


வளர்ப்பு செல்லத்தோடு  ஓடுகிறார்


செல்லங்களை வளர்ப்பவர்கள் தங்கள் செல்லங்களின் கழிவை கொஞ்சம் கூட அருவருப்பு  இல்லாமல் கையில் கவரை மாட்டிக் கொண்டு எடுத்து இன்னொரு கவரில் போட்டு குப்பை கூடையில் போடுகிறார்கள்.   பூங்காவை சுத்தமாக வைத்து கொள்வது தங்கள் கடமை என நினைப்புது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. பாராட்ட வேண்டும் அவர்களை.

பூங்காவை சுத்தமாக வைத்து கொள்ள தன்னார்வலர்கள் மிகவும்  பாடுபடுகிறார்கள், களை பூண்டுகளை அளிக்க அழைப்பு விடுகிறார்கள்.  முடிந்த போது வந்து சேவை செய்ய பூங்காவை சுத்தமாக வைத்து கொள்ள அழைக்கிறார்கள். அவர்கள் சேவையில்  பூங்கா  எங்கும் சுத்தமாக இருக்கிறது.

 தன் அன்புக்குரிய  சகோதரர் மற்றும் பெற்றோருடன் இந்த  பூங்காவில் நடந்ததை பதிவு செய்கிறார்.  நினைவை போற்றும் கல்வெட்டு.  அவர் தந்தை நடந்த பாதையில் தான் பெருமையாக நடந்து போவதை சொல்கிறார்.

இரண்டு நாளும் மகனும், மருமகளும் ஒரு மையல் தூரம் நடந்து வந்தார்கள்.

நடந்து வந்து  ஓய்வு எடுக்கிறார்கள்  மகன், மருமகள். பேரன் விளையாட்டு பொருட்களை வைத்து வீடியோ செய்கிறான். 




கூரைக்கு கீழ் அமர்ந்து கொள்ள ஆசனங்கள்


சைக்கிளில் பூங்காவை சுற்றி வருதல் மற்றும் உடற்பயிற்சி செய்வோர் நிறைய பார்த்தேன், அவர்களை படம் எடுக்கவில்லை.


கோடை நாளில் ஒவ்வொன்றை பற்றியும் அறிந்து கொள்ள அழைத்து செல்பவர்களுடன் இணைந்து கவனித்து வரலாம்.
 

மகன் எடுத்த படம் பூவில் தேனை உண்ணும் தேனீ


பூங்காவில் இயற்கை அழகை இரண்டு நாட்கள் மாலை நேரம்  போய் பார்த்து மகிழ்ந்து வந்தோம். அடுத்து எங்கு போனோம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

47 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் அழகு. மாலை மயங்கும் நேரம் படம் மிக அழகு. எதிரே மலைச்சிகரங்கள்.. சாலையில் இருவர் நடந்து செல்லும் காட்சி கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படங்கள் யாவும் அழகு. மாலை மயங்கும் நேரம் படம் மிக அழகு. எதிரே மலைச்சிகரங்கள்.. சாலையில் இருவர் நடந்து செல்லும் காட்சி கவிதை.//

      படங்களை ரசித்து அழகான கருத்து சொன்னது மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நடந்து வந்த உடனே அதற்கு பாராட்டாய் உடனே உணவு கொடுத்தால் செல்லம் பெருத்து விடாதோ....   கொஞ்ச நேரமாவது இடைவெளி விடவேண்டாமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடந்து வந்த உடனே அதற்கு பாராட்டாய் உடனே உணவு கொடுத்தால் செல்லம் பெருத்து விடாதோ.... கொஞ்ச நேரமாவது இடைவெளி விடவேண்டாமோ....//

      அம்மாவுக்கு தெரியும் தானே! தன் குழந்தையின் உடல் நலம், ஏதோ கொஞ்சம் கொடுத்தார்கள்.

      நீக்கு
  3. வளர்ப்பு நாய்கள் பற்றிய குறிப்புகள் அருமை.   கொடுக்கப்பட்டுள்ள லிங்க்குக்கும் சென்று படிக்கிறேன்.  
    சமீபத்தில் வெறி ஏதும்  பிடிக்காத, வீட்டில் செல்லமாக  வளர்த்த நாய் உமிழ் நீர் பட்டே வீட்டு உரிமையாளர் - அவர் தாசில்தார் என்று படித்த நினைவு - மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு ரேபிஸ் நோயால் பரிதாபமாக இறந்தார் என்று பகிர்ந்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி, டாக்டர் சுந்தரராஜன் என்பவர் சொல்லி இருந்தார்.  

    இத்தனைக்கும் அந்த நாய்க்கு எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டிருந்தனவாம்.  

    என்னதான் செல்லங்களைப் பிடிக்கும் என்றாலும் இதை எல்லாம் படிக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.  ஏனெனில் ரேபிஸ் தாக்கினால் காப்பாற்றவே முடியாது என்பதோடு கொடூர மரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வளர்ப்பு நாய்கள் பற்றிய குறிப்புகள் அருமை. கொடுக்கப்பட்டுள்ள லிங்க்குக்கும் சென்று படிக்கிறேன். //

      படித்து பாருங்கள் மீண்டும் வளர்ப்பு செல்லம் வளர்க்க விருப்பம் இருக்கிறது என்று தெரிகிறது.

      //சமீபத்தில் வெறி ஏதும் பிடிக்காத, வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் உமிழ் நீர் பட்டே வீட்டு உரிமையாளர் - அவர் தாசில்தார் என்று படித்த நினைவு - மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு ரேபிஸ் நோயால் பரிதாபமாக இறந்தார் என்று பகிர்ந்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி, டாக்டர் சுந்தரராஜன் என்பவர் சொல்லி இருந்தார். //

      //இத்தனைக்கும் அந்த நாய்க்கு எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டிருந்தனவாம்.

      என்னதான் செல்லங்களைப் பிடிக்கும் என்றாலும் இதை எல்லாம் படிக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் ரேபிஸ் தாக்கினால் காப்பாற்றவே முடியாது என்பதோடு கொடூர மரணம்.//

      இதையெல்லாம் படிக்கும் போது பயமாகத்தான் இருக்கும்.
      நாய் வளர்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
      கடைத்தெருவில் பார்த்த நாய்களுக்கு காலில் சாக்ஸ் போன்ற ஷூஸ் அணிவித்து இருந்தார்கள்.

      நீக்கு
  4. நடப்பவர்களுக்கு, செல்லங்களுக்கும் தண்ணீர் வசதி...  நம்மூரில் பார்க்க முடியாதது.  அதையும் காசாக்கி விடுவார்கள் என்பதோடு, நடக்கும் பாதையைக் கூட சுத்தமாக பராமரிக்க மாட்டார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடப்பவர்களுக்கு, செல்லங்களுக்கும் தண்ணீர் வசதி... நம்மூரில் பார்க்க முடியாதது. அதையும் காசாக்கி விடுவார்கள் என்பதோடு, நடக்கும் பாதையைக் கூட சுத்தமாக பராமரிக்க மாட்டார்கள்!//

      நடப்பவர்களுக்கு , செல்லங்களுக்கு தண்ணீர் வசதி மட்டும் இல்லை. நடப்பவர்களுக்கு கழிப்பிட வசதியும் உண்டு.
      அதனால் பூங்கா சுத்தமாக பராமரிக்க படுகிறது.
      மக்கள் ஒத்துழைத்தால்தான் முடியும் எங்கும்.

      நீக்கு
  5. கையில் கவரை மாட்டிக்கொண்டு செல்லத்தின் கழிவை எடுத்து பையில் போட்டு...  - அசாத்திய பொறுமை வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது!  நான் என் சிறுவயதில் இரண்டு செல்லங்கள் வளர்த்தேன்.  அவை இப்படிப்பட்ட தொல்லைகள் நல்லவேளையாக கொடுத்ததில்லை.  ஓரிரண்டு முறை மோத்தி செய்தாலும் அவற்றை வேறு வகையில் சுத்தப் படுத்தி இருக்கிறேன்.  இந்த ரேபிஸ் பிரச்னையும் எனக்கு அந்த செல்லங்களுடன் - இரண்டு முறை கடிவாங்கியும் - வந்ததில்லை என்பதற்கு  இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய்களை வளர்ப்பவர்கள் இவற்றைச் செய்வதில் வியப்பில்லை. ஒரு வீட்டில் இரண்டு நாய்கள் வளர்ப்பது, பூனை போன்று குட்டி நாய்களை வளர்ப்பது போன்றவைதான் விநோதமாகத் தெரிகிறது எனக்கு

      நீக்கு
    2. நாய்களை பூங்காக்களுக்குக் கூட்டிச் செல்வதும், பூங்காவைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் என்னைக் கவர்ந்தன.

      படங்கள் எப்போதும்போல் அழகு

      நீக்கு
    3. //கையில் கவரை மாட்டிக்கொண்டு செல்லத்தின் கழிவை எடுத்து பையில் போட்டு... - அசாத்திய பொறுமை வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது!//

      பையில் போட்ட கழிவை குப்பை கூடையை பார்க்கும் வரை கையில் சுமந்து போவார்கள் அதற்கு பொறுமை வேண்டும் தான்.

      //நான் என் சிறுவயதில் இரண்டு செல்லங்கள் வளர்த்தேன். அவை இப்படிப்பட்ட தொல்லைகள் நல்லவேளையாக கொடுத்ததில்லை. //

      அதை காலை வெளியே அழைத்து சென்று விட்டு விடுவீர்கள் இல்லையா? இங்கு வெளியில் விட்டாலும் கழிவை தூக்கி சுமந்து குப்பைகூடையில் போடுகிறார்கள்.


      //ஓரிரண்டு முறை மோத்தி செய்தாலும் அவற்றை வேறு வகையில் சுத்தப் படுத்தி இருக்கிறேன்.//

      வீட்டில் என்றால் வேறு முறையில் சுத்தம் செய்ய வசதி இருக்கும் செய்யலாம்.


      //இந்த ரேபிஸ் பிரச்னையும் எனக்கு அந்த செல்லங்களுடன் - இரண்டு முறை கடிவாங்கியும் - வந்ததில்லை என்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.//

      ஆமாம், இறைவனுக்கு நன்றி.
      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
    4. நெல்லைத்தமிழன் commented on "பூங்காவில் நடைபயிற்சியும், வளர்ப்பு செல்லங்களும்"
      9 hours ago
      நாய்களை பூங்காக்களுக்குக் கூட்டிச் செல்வதும், பூங்காவைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் என்னைக் கவர்ந்தன.

      படங்கள் எப்போதும்போல் அழகு
      In Response to a comment by ஸ்ரீராம்.

      நீக்கு
    5. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //நாய்களை பூங்காக்களுக்குக் கூட்டிச் செல்வதும், பூங்காவைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் என்னைக் கவர்ந்தன.//

      ஆமாம், அவர்கள் பொறுப்புணர்ச்சி எனக்கும் பிடித்தது.

      பூங்கா என்று இல்லை எங்கு போனாலும் அழைத்து போகிறார்கள், சில கடைகளுக்கு அனுமதி இல்லை அப்போது காரில் விட்டு விட்டு போகிறார்கள். அது வேடிக்கைப்பார்த்து கொண்டு நிற்கும் கார் ஜன்னல் வழியே!

      நீக்கு
    6. //நெல்லைத்தமிழன் commented on "பூங்காவில் நடைபயிற்சியும், வளர்ப்பு செல்லங்களும்"
      9 hours ago
      நாய்களை வளர்ப்பவர்கள் இவற்றைச் செய்வதில் வியப்பில்லை. ஒரு வீட்டில் இரண்டு நாய்கள் வளர்ப்பது, பூனை போன்று குட்டி நாய்களை வளர்ப்பது போன்றவைதான் விநோதமாகத் தெரிகிறது எனக்கு
      In Response to a comment by ஸ்ரீராம்.//

      உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்க முடியாமல் இருந்தது அதனால் எடுத்து ஒட்டி பதில் அளிக்கிறேன்.

      //நாய்களை வளர்ப்பவர்கள் இவற்றைச் செய்வதில் வியப்பில்லை. ஒரு வீட்டில் இரண்டு நாய்கள் வளர்ப்பது, பூனை போன்று குட்டி நாய்களை வளர்ப்பது போன்றவைதான் விநோதமாகத் தெரிகிறது எனக்கு//

      இது போன்று நாய்களை, பூனைகளை வளர்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது நெல்லை.
      பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது, இன்னொரு காரணம் அவர்கள் மற்றவர்களிடம் பேசாமல் இருக்கும் போது இவைகள்தான் உற்ற தோழனாக அன்பு துணையாக இருப்பது போன்ற காரணங்கள் இருக்கிறது.

      எனக்கு பூனை, நாயை பார்க்க பிடிக்கும் வளர்க்க துணியவில்லை மனம்.

      சிலர் குழந்தைபோல வளர்க்கிறார்கள் அது மனதுக்கு ஆறுதலை தருகிறது. வீட்டுக்கு காவல், உற்ற தோழன். அன்பான சொந்தம் என்று சிலர் நினைப்பதால் வளர்க்கிரார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் அழகு. செல்லங்கள் உடன் நடைப்பயிற்சி - சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அழகு. செல்லங்கள் உடன் நடைப்பயிற்சி - சிறப்பு.//

      ஆமாம், செல்லங்களுடன் நடைப்பயிற்சி பார்க்க அழகு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. வளர்ப்பு செல்லங்களுடன் மகிழ்வாக உலாவரும் மக்கள் காணவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நடைப்பயிற்சி நல்ல இடம். இயற்கையை ரசித்தபடி நடக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      அனைத்து பழைய பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி, மகிழ்ச்சி.

      //வளர்ப்பு செல்லங்களுடன் மகிழ்வாக உலாவரும் மக்கள் காணவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

      நடைப்பயிற்சி நல்ல இடம். இயற்கையை ரசித்தபடி நடக்கலாம்.//

      ஆமாம் , செல்லங்களுடன் மகிழ்வாய் உலாவரும் மக்களை காணவே மகிச்சியாக இருந்தது.
      இயற்கையை ரசித்தபடி நடக்கவும் நன்றாக இருக்கும். எனக்கு கொஞ்ச தூரம் தான் நடக்க முடிந்தது, ஒரு இடத்தில் வசதியாக அமர்ந்து கொண்டு படம் எடுத்து கொண்டு இருந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  8. படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    நாய் வளர்ப்பு குறித்த தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

      நாய் வளர்ப்பு குறித்த தகவல்கள் சிறப்பு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  9. அமெரிக்கா டைரி குறிப்புகள் நன்றாக உள்ளன. படங்கள் எடுப்பதில் முன்னேற்றம் தெரிகிறது. சில லோங்ஷோட் படங்களை மிடில் ஷாட்டில் எடுத்திருக்கலாம்.

    ஆனாலும் இது போன்ற குறிப்புகளை எழுதுவதிலும் படங்கள் கோர்ப்பதிலும் துளசி டீச்சரை மிஞ்ச முடியாது. .

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன், வாழ்க வளமுடன்
      //அமெரிக்கா டைரி குறிப்புகள் நன்றாக உள்ளன.//
      ஆமாம், என் நினைவுகளை பதிவு செய்வது போல என்பதால் டைரி குறிப்புதான்.

      //படங்கள் எடுப்பதில் முன்னேற்றம் தெரிகிறது. சில லோங்ஷோட் படங்களை மிடில் ஷாட்டில் எடுத்திருக்கலாம்.//

      நான் ஏதோ எடுக்கிறேன் சார், தொழில்நுட்பங்கள் கற்றுக் கொண்டு எடுக்கவில்லை.கற்றுக் கொள்ள வேண்டும்.

      //ஆனாலும் இது போன்ற குறிப்புகளை எழுதுவதிலும் படங்கள் கோர்ப்பதிலும் துளசி டீச்சரை மிஞ்ச முடியாது. .//

      துளசி அவர்கள் பன்முக திறமையாளர். அருமையாக பயணக்கட்டுரை எழுதுவார், அதை புத்தகம் ஆக்குவார்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. நடந்து வந்ததை பாராட்டி, செல்லத்துக்கு பிஸ்கட் - ஆமாம் இப்படி ட்ரீட் எல்லாம் கொடுப்பாங்க உற்சாகப்படுத்த. செல்லங்கள் அடுத்த முறையும் கிடைக்கும் என்று அதற்காகவே நடக்கும். சமத்தாகவும் இருக்கும்!!

      கொரோனா காலத்தில் நாய்களை வெளியில் விட்டவங்கள் நிறைய பேர் கோமதிக்கா. இங்கு அப்படி வெளியில் துரத்தப்பட்டவை abandon செய்யப்பட்டவை அதிகம். அவற்றில் பல மிக மிக வேதனை அடைந்து பாவமாகச் சுற்றியவை உண்டு. கழுத்தில் காலர் இருக்கும். அப்படியானவற்றைப் பார்த்தாலே தெரிந்துவிடும் வளர்க்கப்பட்ட செல்லம் என்று.

      கீதா

      நீக்கு
    3. நடைபயிற்சி செய்யும் மக்களுக்கும், வளர்ப்பு செல்லங்களும் தண்ணீர் குடிக்க வசதி எல்லா இடங்களிலும் இந்த வசதியைப் பார்த்தேன்.//

      பாருங்க எவ்வளவு வசதிகள் இல்லையா? இங்கெல்லாம் இப்படி இருப்பதில்லை. ஆனா இன்னும் கொஞ்ச நாட்களில் இங்கும் வந்துவிடலாம். இங்கு இன்னும் இப்படி பார்க்கில் எல்லாம் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காரணம் நம் மக்களுக்கு அவற்றின் கழிவுகளைச் சுத்தம் செய்யும் பழக்கம் இல்லையே வெளியே செல்லும் போது கவர் எதுவும் எடுத்துச் செல்வது கிடையாது.

      நம் வீட்டில் செல்லங்கள் இருந்தப்ப அவை நடு ரோட்டில் எங்கும் செல்லாது. குப்பைகள் குவிந்திருக்கும் பகுதியில் தான் போவார்கள். ஆனால் நான் ப்ளாஸ்டிக் கவர் மற்றும் குப்பை அள்ளும் ப்ளாஸ்டிக் முறம் கொண்டு செல்வேன். வீட்டிற்கு வந்ததும் கால் கழுவி விடுவேன்!

      கீதா

      நீக்கு
    4. அட! தானே குடிக்கிறதே அந்தச் செல்லம். பழக்கம் போலும்.

      எல்லாச் செல்லங்களும் அழகு!

      பூங்காவை சுத்தமாக வைத்து கொள்ள தன்னார்வலர்கள் மிகவும் பாடுபடுகிறார்கள், களை பூண்டுகளை அளிக்க அழைப்பு விடுகிறார்கள். முடிந்த போது வந்து சேவை செய்ய பூங்காவை சுத்தமாக வைத்து கொள்ள அழைக்கிறார்கள். அவர்கள் சேவையில் பூங்கா எங்கும் சுத்தமாக இருக்கிறது.//

      மிக நல்ல விஷயம். இங்கு பூங்காக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள கார்ப்பரேஷன் ஒவ்வொரு பூங்காவிலும் ஒரு குடுமப்த்தை வைத்திருக்கிற்து அவர்களுக்குச் சிறு அறை அலல்து வீடு கொடுத்திருக்கிறது. இதைப் பற்றி எழுத படங்களும் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் இன்னும் எழுதவில்லை.

      கீதா

      நீக்கு
    5. தன் அன்புக்குரிய சகோதரர் மற்றும் பெற்றோருடன் இந்த பூங்காவில் நடந்ததை பதிவு செய்கிறார். நினைவை போற்றும் கல்வெட்டு. அவர் தந்தை நடந்த பாதையில் தான் பெருமையாக நடந்து போவதை சொல்கிறார்//

      அட இப்படியும் பாருங்க! எல்லாமே ரசித்துச் செய்கிறார்கள். நல்ல விஷயம் இல்லையா!

      ஓரு பூங்காவுக்குள் இத்தனை விஷயங்கள். சம்மர் சீரிஸ், போன்ற நிகழ்வுகளும் நடத்துகிறார்கள்! மக்களும் அதை நிர்வகிக்க உதவுகிறார்கள்.

      இப்படி இங்கும் community service போன்று கொண்டு வரலாம். கோயிலில் செய்கிறார்களே அது போன்று.

      கடைசி பூ தேனீ தேன் எடுக்கும் படங்கள் மிக அழகு ! மகனுக்கு வாழ்த்துகள்!

      பூங்கா படங்கள் விவரங்கள் செல்லங்கள் படங்கள் எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    6. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //நடந்து வந்ததை பாராட்டி, செல்லத்துக்கு பிஸ்கட் - ஆமாம் இப்படி ட்ரீட் எல்லாம் கொடுப்பாங்க உற்சாகப்படுத்த. செல்லங்கள் அடுத்த முறையும் கிடைக்கும் என்று அதற்காகவே நடக்கும். சமத்தாகவும் இருக்கும்!!//

      ஆமாம், அப்படித்தான் இருக்கும். நல்ல விஷயம் தான். எல்லோருக்கும் பாராட்டும் , பரிசும் வேண்டி இருக்கும் தானே!

      //கொரோனா காலத்தில் நாய்களை வெளியில் விட்டவங்கள் நிறைய பேர் கோமதிக்கா. இங்கு அப்படி வெளியில் துரத்தப்பட்டவை abandon செய்யப்பட்டவை அதிகம். அவற்றில் பல மிக மிக வேதனை அடைந்து பாவமாகச் சுற்றியவை உண்டு. கழுத்தில் காலர் இருக்கும். அப்படியானவற்றைப் பார்த்தாலே தெரிந்துவிடும் வளர்க்கப்பட்ட செல்லம் என்று.//

      கொரோனா காலத்தில் மக்கள் நேசித்தார்கள் என்று கருத்து கனிப்பு சொல்கிறதே! நீங்கள் பாவமாகச் சுற்றியதாக சொல்வதை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.

      நீக்கு
    7. //பாருங்க எவ்வளவு வசதிகள் இல்லையா? இங்கெல்லாம் இப்படி இருப்பதில்லை. ஆனா இன்னும் கொஞ்ச நாட்களில் இங்கும் வந்துவிடலாம். இங்கு இன்னும் இப்படி பார்க்கில் எல்லாம் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காரணம் நம் மக்களுக்கு அவற்றின் கழிவுகளைச் சுத்தம் செய்யும் பழக்கம் இல்லையே வெளியே செல்லும் போது கவர் எதுவும் எடுத்துச் செல்வது கிடையாது.//

      குடியிருப்பில் வந்து விட்டது போலும் மஞ்சுளா ரமேஷ் கழிவுகளை சுத்தம் செய்வதை பார்த்து இருப்பதாய் பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தார்.

      //நம் வீட்டில் செல்லங்கள் இருந்தப்ப அவை நடு ரோட்டில் எங்கும் செல்லாது. குப்பைகள் குவிந்திருக்கும் பகுதியில் தான் போவார்கள். ஆனால் நான் ப்ளாஸ்டிக் கவர் மற்றும் குப்பை அள்ளும் ப்ளாஸ்டிக் முறம் கொண்டு செல்வேன். வீட்டிற்கு வந்ததும் கால் கழுவி விடுவேன்!//

      நல்லவிதமாய் பழக்கி இருக்கிறீர்கள். கால்களை சுத்தம் செய்வது நல்லதுதான்.

      நீக்கு
    8. //அட! தானே குடிக்கிறதே அந்தச் செல்லம். பழக்கம் போலும்.

      எல்லாச் செல்லங்களும் அழகு!//

      ஆமாம், அனைத்தும் அழகு.

      //மிக நல்ல விஷயம். இங்கு பூங்காக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள கார்ப்பரேஷன் ஒவ்வொரு பூங்காவிலும் ஒரு குடுமப்த்தை வைத்திருக்கிற்து அவர்களுக்குச் சிறு அறை அலல்து வீடு கொடுத்திருக்கிறது. இதைப் பற்றி எழுத படங்களும் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் இன்னும் எழுதவில்லை.//

      நல்ல விஷயம் பாராமரிக்க ஆள் வைத்து இருப்பது. பதிவு போடுங்கள்.

      நீக்கு
    9. //அட இப்படியும் பாருங்க! எல்லாமே ரசித்துச் செய்கிறார்கள். நல்ல விஷயம் இல்லையா!//

      ஆமாம்.

      //ஓரு பூங்காவுக்குள் இத்தனை விஷயங்கள். சம்மர் சீரிஸ், போன்ற நிகழ்வுகளும் நடத்துகிறார்கள்! மக்களும் அதை நிர்வகிக்க உதவுகிறார்கள்.//

      ஆமாம். ஒவ்வொன்றை பற்றியும் அறிந்து கொள்ள முடியும், அதில் கலந்து கொள்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

      //இப்படி இங்கும் community service போன்று கொண்டு வரலாம். கோயிலில் செய்கிறார்களே அது போன்று.//

      community service குறுகிய வட்டத்தில் இல்லாமல் பரந்து விரிந்து இருந்தால் தல்லதுதான்.

      //கடைசி பூ தேனீ தேன் எடுக்கும் படங்கள் மிக அழகு ! மகனுக்கு வாழ்த்துகள்!//

      நன்றி.

      //பூங்கா படங்கள் விவரங்கள் செல்லங்கள் படங்கள் எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  10. சிறப்பான பதிவு.

    வளர்ப்பு பிராணிகளுக்கான பூங்கா அழகு.. அருமை..

    தகவல்கள் புதியவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //சிறப்பான பதிவு.

      வளர்ப்பு பிராணிகளுக்கான பூங்கா அழகு.. அருமை..

      தகவல்கள் புதியவை..//

      உங்கள் வரவுக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  11. செல்லங்கள் கண்களைக் கவர்கின்றன. நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //செல்லங்கள் கண்களைக் கவர்கின்றன. நன்றி சகோதரி//

      உங்கள் வரவுக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  12. கோமதிக்கா நாய்கள் பற்றிய குறிப்புகள் எல்லாமே சூப்பர்.

    ஆமாம் அங்குள்ள மக்கள் செல்லங்களை அவர்கள் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோமதிக்கா நாய்கள் பற்றிய குறிப்புகள் எல்லாமே சூப்பர்.

      ஆமாம் அங்குள்ள மக்கள் செல்லங்களை அவர்கள் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கிறார்கள்.//

      ஆமாம், அங்கு உள்ளவர்கள் என்று இல்லை, நாய் வளர்ப்பவர்கள் எல்லோரும் தங்கள் செல்லங்களை தங்கள் குடும்ப உறுப்பினாராகத்தான் பார்க்கிறார்கள்.

      நீக்கு
  13. குடும்பமே ரசிக்கும் செல்லங்கள் கீழ் படம் செம ஷாட் அக்கா.

    பார்க்கின் பின்னணியில் மலையும், பார்க்கும் ரொம்ப அழகு.

    ஆமாம், அங்கு வெளியில் செல்லங்களை அழைத்துச் செல்லும் போது கையில் அவற்றின் கழிவுகளை சுத்தம் செய்ய கவர் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும். சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குடும்பமே ரசிக்கும் செல்லங்கள் கீழ் படம் செம ஷாட் அக்கா.

      பார்க்கின் பின்னணியில் மலையும், பார்க்கும் ரொம்ப அழகு.//

      மாலை மயங்கும் நேரம் படம் உங்களுக்கும் பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.

      //ஆமாம், அங்கு வெளியில் செல்லங்களை அழைத்துச் செல்லும் போது கையில் அவற்றின் கழிவுகளை சுத்தம் செய்ய கவர் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும். சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.//

      கையில் கவர் கொண்டு செல்கிறார்கள், கையில் பிடித்துள்ள கயிற்றில் கட்டி வைத்து இருக்கிறார்கள். நிறைய இடங்களில் பெட்டிகளில் கவர் இருக்கிறது, திறந்து எடுத்து கொள்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. காட்சிகளும், விளக்கங்களும் சுவாரஸ்யம். இங்கும் குடியிருப்புகளில் நாயை நடத்திச் செல்லுகையில் கையில் உறை மாட்டிக் கொண்டு அதன் கழிவுகளை அகற்றுவதைப் பார்க்க முடிகிறது. செல்லங்களைப் பற்றிய குறிப்புகள் நன்று. பூவும் தேனீயும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //காட்சிகளும், விளக்கங்களும் சுவாரஸ்யம்.//

      நன்றி.

      //இங்கும் குடியிருப்புகளில் நாயை நடத்திச் செல்லுகையில் கையில் உறை மாட்டிக் கொண்டு அதன் கழிவுகளை அகற்றுவதைப் பார்க்க முடிகிறது.//

      நம் குடியிருப்பை சுத்தமாக வைத்து கொள்வது நல்லதுதான், பொது இடங்களையும் அப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பது மிக நல்லது.


      //செல்லங்களைப் பற்றிய குறிப்புகள் நன்று.//
      வளர்க்க விரும்புவர்களுக்கு உதவும், எனக்கும் அவைகளை பற்றி தெரிந்து கொள்ள படித்தது.

      பூவும் தேனீயும் அழகு.//

      மகன் நிறைய எடுத்தான் நான் கொஞ்சம் பகிர்ந்தேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. படங்கள் அனைத்தும் அழகு!! ஆனால் அனைத்திலும் ஏதோ ஒரு தனிமையுணர்வு தெரிகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அழகு!! ஆனால் அனைத்திலும் ஏதோ ஒரு தனிமையுணர்வு தெரிகிறது!!//

      ஏன் அப்படி தெரிகிறது?

      தனிமையாக தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் போகும்
      படங்களைப் பார்த்தா?

      உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    நலமா? நாங்களும் நலமாக உள்ளோம் . எனக்கு ஜலதோஷம் என்று சொன்ன பிறகு நடுவில் ஒரு வாரம் ஜுரத்துடன் வீட்டு வேலைகளும் செய்தபடி கஸ்டபட்டேன். மகள் (மருத்துவரிடம் செல்லவில்லை.) வாங்கி தந்த டோலோ போன்ற மாத்திரைகளை சாப்பிட்டு இப்போது குணமாகி உள்ளது. அதனால்தான் பதிவுகளுக்கு வர இயலவில்லை.

    பதிவு நன்றாக உள்ளது. அங்குள்ளோர் வீட்டில் வளர்க்கும் தங்களின் செல்லங்களுடன் நடைப்பயிற்சி செய்வதும், மகிழ்வாக இருப்பதுமாக எடுத்த படங்கள், மேற்படி விபரங்களுடன் இந்தப்பதிவும் படிக்க நன்றாக உள்ளது.

    அனைத்துப் படங்களையும், மிக அழகாக எடுத்துள்ளீர்கள். செல்லங்களை வீட்டில் வளர்ப்பது குறித்த தகவலும் நன்று. தங்கள் பேரனும் உங்களுடன் மகிழ்வாக நடந்து வீடியோ விளையாட்டுகளை செய்தபடி உங்களை மகிழ்வாக இருககச் செய்ததும் நன்று. அனைத்தையும் ரசித்தேன். தொடர்ந்து உங்கள் பதிவு டன் வருகிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //நலமா? //

      நலமாக இருக்கிறேன்.

      //நாங்களும் நலமாக உள்ளோம் . //

      நல்லது, அதுதான் வேண்டும்.

      //எனக்கு ஜலதோஷம் என்று சொன்ன பிறகு நடுவில் ஒரு வாரம் ஜுரத்துடன் வீட்டு வேலைகளும் செய்தபடி கஸ்டபட்டேன். மகள் (மருத்துவரிடம் செல்லவில்லை.) வாங்கி தந்த டோலோ போன்ற மாத்திரைகளை சாப்பிட்டு இப்போது குணமாகி உள்ளது. அதனால்தான் பதிவுகளுக்கு வர இயலவில்லை.//

      இப்போது உடல் நலமாகி விட்டது அறிந்து மகிழ்ச்சி.
      தொடர்ந்து வேலைகள் அதிகம். அதனால் அலுப்பால் காய்ச்சல் வந்து இருக்கலாம். கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு வேலைகளை பாருங்கள்.

      //பதிவு நன்றாக உள்ளது. அங்குள்ளோர் வீட்டில் வளர்க்கும் தங்களின் செல்லங்களுடன் நடைப்பயிற்சி செய்வதும், மகிழ்வாக இருப்பதுமாக எடுத்த படங்கள், மேற்படி விபரங்களுடன் இந்தப்பதிவும் படிக்க நன்றாக உள்ளது.//

      நன்றி.

      //அனைத்துப் படங்களையும், மிக அழகாக எடுத்துள்ளீர்கள். செல்லங்களை வீட்டில் வளர்ப்பது குறித்த தகவலும் நன்று. தங்கள் பேரனும் உங்களுடன் மகிழ்வாக நடந்து வீடியோ விளையாட்டுகளை செய்தபடி உங்களை மகிழ்வாக இருககச் செய்ததும் நன்று. அனைத்தையும் ரசித்தேன். தொடர்ந்து உங்கள் பதிவு டன் வருகிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.//

      நான் தற்சமயம் மகள் வீட்டுக்கு வந்து இருக்கிறேன். 3 ம் தேதி வந்தேன்.

      அடுத்த மாதம் மகன் வீட்டுக்கு போவேன்.
      பதிவில் அனைத்தையும் ரசித்துப்பார்த்து, படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.




      நீக்கு
  17. பெரும்பான்மையான படங்கள் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. தங்களை மற்றவர்கள் படம் பிடிப்பது மேல் நாட்டினருக்கு பிடிக்காது என்பதாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //பெரும்பான்மையான படங்கள் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. தங்களை மற்றவர்கள் படம் பிடிப்பது மேல் நாட்டினருக்கு பிடிக்காது என்பதாலா?//

      நான் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்த படியே படங்களை எடுத்தது ஒரு காரணம்.

      மகன் , மருமகளை அவர்கள் நடந்து வந்த பின்னனியின் அழகை காட்ட இருந்த இடத்திலிருந்து எடுத்தேன்.

      பிறகு அவர்களிடம் அனுமதி வாங்காமல் அவர்களை படம் எடுப்பது ஒரு காரணம்.

      அனுமதியிடன் சிலரை கடைவீதியில் படம் எடுத்து இருக்கிறேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு