திங்கள், 22 ஜூலை, 2024

குரு பூர்ணிமாவும்,குரு வணக்கமும்


முழு நிலவு 


சனிக்கிழமை  குரு பூர்ணிமாவுக்கு முந்தின நாள் அரிசோனாவில் இருக்கும் சாய் கோவில் போய் இருந்தோம். 
அங்கு நடந்த நிகழ்வுகள் படங்கள், மற்றும் குருமார்களை பற்றிய செய்திகளும்  இந்த பதிவில் இடம் பெறுகிறது.


இரவு  9 மணிக்கு எடுத்த நிலவு படங்கள்.

குரு பூர்ணிமா அன்று முழு நிலவையும்,  நமக்கு கற்றுக் கொடுத்த  குருமார்களையும்  வணங்கும் நாள்.

முதல் குரு நம் தாய், தந்தை பின் நமக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருமார்கள். பின் நாம் குருவாக ஒருவரை ஏற்றுக் கொண்டவர், நாள் தோறும் நமக்கு ஒவ்வொருவரும் பாடம் கற்றுக் கொடுக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றிகளும், வணக்கங்களும். 




வானத்தில் ஒளிரும் நிலவின் ஒளியும், சாய் கோவில் வாசலில் தெரியும் குழல் விளக்கின் ஒளியும்.

விழா காலங்களில் சுவாமி எழுந்தருள  செய்ய பலகை,   பிரசாதம் வைக்கும் பலகை  இரண்டையும் மகனும், மருமகளும்   இணைந்து செய்து இருந்தார்கள். அதை நேற்று குருகாணிக்கையாக கோவிலுக்கு கொடுத்தார்கள். காரிலிருந்து கோவிலுக்கு எடுத்து வர மகனின் நண்பரும் அவர் துணைவியும் உதவி செய்தார்கள்.


அனுமன், லட்சுமணன், ராமர் , சீதை  உற்சவ மூர்த்திகள்  முன் வைத்தோம்.



பலகையில்  தாமரை மலர் வரைந்தது மருமகள்.


பெருமாள், முருகன் வள்ளி தெய்வானையுடன் , சிறிய முருகன் வள்ளி, தெய்வானை 


முன்பு இருந்த  சாய் பாபா, தத்தாத்ரேயர், பெரிய பாபா முன் பிள்ளையார், சிவன், நடராஜர், கண்ணன் ராதை  உண்டு. அனைத்து  விழாக்களும் நடக்கிறது இந்த கோவிலில். 

பஜனை பாடல்கள் நன்றாக பாடினார்கள் 



அங்கு நடந்த நிகழ்வுகளை  இந்த காணொளியில் காணலாம். நேரம் இருந்தால் பாருங்கள்.  பஜன் இருக்கும், தெரிந்த பாடல்களை பாடினார்கள். 

இது மகன் எடுத்த சிறிய காணொளி

சாய் படத்தை பல்லாக்கில் வைத்து   ஊர்வலமாக கோவிலை சுற்றி வந்தது இந்த காணொளியில் இருக்கும்.




தியான கூடத்தில் உள்ள சாய்




கோவில் வாசலில் அழகாய் போட்டு இருந்த கோலம்


மருமகள் பாபாவுக்கு  சிவப்பு, பச்சை, வெள்ளை கல்லால் செய்த செயற்கை   ஆபரணம் வாங்கி   கொடுத்தாள். ஞாயிறு காலை  அணிவித்தனர்.

சனிக்கிழமை கோவிலுக்கு போன போது இரவு பல்லாக்கு ஊர்வலம் முடிந்து இரவு ஆரத்தி ஆரம்பித்து விட்டது. ஞாயிறு குரு பூர்ணிமா அன்று சாற்றுகிறோம் என்று கோவில் அறங்காவலர் பொறுப்பில் இருந்தவர்கள் சொன்னார்கள். ஞாயிறு காலை அணிவித்து விட்டார்கள். 


innUyir



 இந்த பதிவை படித்து பாருங்கள் குரு பூர்ணிமாவுக்கு சிறந்த பதிவு.


காட்கே மஹராஜ் என்ற உயர்ந்த கர்மயோகியை பற்றி கபீரன்பன்   அவர்கள் எழுதிய பதிவு படித்து பாருங்கள். 


மன ஆறுதலை தரும். கீழே வருவது அவர் பதிவிலிருந்து கொஞ்சம் கொடுத்து இருக்கிறேன். முழுவதையும் பதிவில் சென்று படித்து பாருங்கள் பிடிக்கும்.


அரசியலுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதியான காட்கே மஹராஜுக்கு 1954 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது  கொடுத்து அந்த விருதிற்கு பெருமை சேர்த்தது இந்திய அரசு. 


//அவர் பிறந்தது  பிப்ரவரி 23, 1876

குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட அவருடைய தந்தையை இளவயதிலேயே இழந்த அவருள்  சமுதாய மாற்றத்திற்கான அவசியம் ஆழப்பதிந்தது.

பதினெட்டு வயதில் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையுமானார். 

தாய்மாமனுடன் விவசாயத்தில் கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றிய போதும் தன் கீர்த்தனங்களை நிறுத்தவில்லை.  அவரது 29 வது வயதில் ஒரு  கடன் பத்திர மோசடி மூலம் தன் நிலத்தையும் இழக்க நேர்ந்த போது எழுத்தறிவுக் கல்வியின் அவசியம் புரிந்தது. அதற்கெனவே வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டு குடும்ப வாழ்வை துறந்தார்.

ஊர் ஊராக சென்று தனி மனித விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். கையில் எப்பொழுதும் ஒரு விளக்குமாறு,  தலைமேல் கவிழ்க்கப்பட்ட -உடைந்த -மண் ஓடு (காட்கே- Gadge).  இதுதான் அவருடைய அடையாளங்கள். (தற்கால மொழியில் சொல்வதானால் 'பிராண்ட் இமேஜ்' ).

ஒரு கிராமத்தை அடைந்ததும் தெருவுகளையும்,  சாக்கடைகளையும் சுத்தம் செய்ய ஆரம்பிப்பார். உடன் சேர்ந்து கொள்பவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப் படுவதில்லை. யாரேனும் உணவளித்தால் மண் ஓடு பிட்சை பாத்திரமாகும்.  மாலையில் கீர்த்தனங்கள். இடையிடையே கேள்வி பதில் பாணியில் சீர்திருத்தக் கருத்துகள். இவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அடுத்த நாள் மற்றொரு கிராமம்.

அவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஈடுபாடு கொள்ளவில்லை. ஆனால் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு நலிந்தவருக்கும் வறியவர்களுக்கும் சேவை செய்வதில் அக்கறை காட்டினார். 

அவர் கபீரைப் போலவும் வள்ளலாரைப் போலவும் தெய்வத்தை உயிருள்ள ஜீவனில் கண்டார். கல்லில் காணவில்லை.  அவருடைய கீர்த்தனங்களில்  நாமதேவரின் அபங்கங்களும்  கபீரின் தோஹாக்களும்  மிக அதிகமாக இடம் பெற்றன.  

கபீர் சொல்வது போல பேசாத சிலைகளை விட நடமாடும் ஆத்மாக்களிடையே இறைவனைக் காண்பாய் என்பதை அவர் நடைமுறையில் செய்து காட்டினார்.

விவேகானந்தரின் சொற்பொழிவுகள் காட்கே மஹராஜரினுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மானவ சேவையே  மாதவன் சேவை  என்பதில் அவர் குறியாக இருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தையும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதிலும்,  யாத்திரிகர்களுக்கு அன்ன சத்திரங்கள், மருத்துவ மனைகள், கோசாலைகள், தொழுநோயாளிகளின் சிகிச்சை கூடம், அபலையர் நலிவுற்றோர் இல்லம் கட்டுவதில் செலவிட்டார்.
ஏழைகளோடு ஏழையாகவே வாழ்ந்தார்.//


நல்லாரிணக்கம் எப்போதும் வேண்டும் நமக்கு


பாரதியாரின் பிறந்த நாளை "பாரதீய பாஷா திவாஸ்" என்ற பெயரில் பல அமைப்புகள் மூலம் பள்ளி கல்லூரிகளில் நாடெங்கும் கொண்டாடி  உள்ளனர்.
அதில் ஒரு அங்கமாக சென்னையில் உள்ள

 செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ( Central Institute of Classical Tamil) தமிழக ஆளுனர் மாளிகையில் பல மொழி பெயர்ப்பாளர்களை அழைத்து கௌரவித்தது. 


அதில் இவர் எழுதிய "மக்குத்திம்மன் கவிதைகள்" மொழி பெயர்த்த நூல் தேர்வு செய்யப்பட்டதை மகிழ்வுடன் எனக்கு  தெரிவித்து  டிசம்பர் மாதம் மூன்று புத்தகங்களை அனுப்பி வைத்தார். 

அவை அங்கு விழாவில் கொடுக்க  அவசரமாக அச்சடித்த புத்தகம்   என்று சொல்லி இருந்தார்.  அதை முழுமையாக படித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் அவை ஊரில் இருக்கிறது.  

 கபீரின் கனிமொழிகள் என்ற   வலைத்தளம் வைத்து இருக்கிறார். "மக்குதிம்மான் கவிதைகள்" அவர் வலைத்தளத்தில் பகிர்ந்தவை . படித்து இருக்கிறேன். நன்றாக இருக்கும் அவர் வலைத்தளத்தில் படித்து பார்க்கலாம். 

மக்குதிம்மான்  கவிதைகளை இலவச மென் புத்தகத்தில் படிக்கலாம். 

இலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.
இதை தரவிறக்கம்
செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.
https://goo.gl/uOfjt5


இவரின் வலைத்தளங்கள். 


2006 ஆம் ஆண்டில் வலைத்தளம் ஆரம்பித்து  இருக்கிறார்.

குருபெருமை   என்ற பதிவில் 

//குரு கோவிந்த் தோஹூ கடே காகே லாகூம் பாய்
பலிஹாரீ குரு ஆப்னே கோவிந்த் தியோ பதாய்

குருவும் கோவிந்தனும் சேரவரின் பற்றும் சேவடி எவரதுவே
குருவின் கழலை வரித்திடு கோவிந்தன் வரவும் அவனருளே

கடவுளிடம் மனிதனை அழைத்துச் செல்வதே குருவின் திருவருள் தான். அதை எக்காலத்தும் மறக்கக்கூடாது என்பதை வேடிக்கையாகவும் நாசூக்காகவும் குறிப்பிடுகிறார் கபீர். கோவிந்தன் வடிவமாக கடவுளை உருவகித்து கபீர் சொல்வது என்னவெனில் கடவுளே நேரிலே வந்து விட்டாலும் குருவின் திருவடிகளை ஒருவன் மறக்கக் கூடாது என்பதே.//

குருவின் பெருமையை சொல்லும் பதிவு படித்துப்பார்க்கலாம்.

இவருடை பதிவுகள்  எனக்கு  பிடிக்கும். 
சில நேரம் என் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.



//கபீரன்பன் வெகு நாட்களுக்கு பின் வந்து அருமையான பதிவை தந்தமைக்கு முதலில் நன்றி.

சில நேரங்களில் நாம் நல்லவிதமாய் தானே நடந்து கொள்கிறோம்! நமக்கு ஏன் இந்த நிலை ! என்ற நினைப்பு எனக்குள் நடக்கும் அப்போது எல்லாம் இறைவனிடமிருந்து வரும் அருள்வாக்கு போல் நல்ல விஷயங்கள் காதில், கண்ணில் படும். அது போல் இன்று கபீரின் நற்சிந்தனை கிடைத்தது.//

இப்படி இந்த பதிவில் சொல்லி இருப்பேன்.


இவர் தளத்தை என் மகள் தான் அறிமுகபடுத்தி வைத்தாள் உங்களுக்கு பிடிக்கும் படித்து பாருங்கள் என்று. ஜீவி சார், ஜி. எம் . பாலசுப்பிரமணியம் சார்,  கீதா சாம்பசிவம் எல்லாம் அவர் வாசகர்கள். 


மனித குலத்திற்கு நல் வழி காட்டிய அனைத்து குருமார்களுக்கும் வணக்கம்


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

50 கருத்துகள்:

  1. உங்கள் மகன் சுறுசுறுப்பாக எதையாவது அங்கே செய்து கொண்டே இருக்கிறார்.  இதுவும் சிறப்பு.  பலகை அழகாக இருக்கிறது.  வசதியாகவும் இருக்கும்.  மருமகள் வரைந்த தாமரை மலர் நீட்டாக செய் நேர்த்தியுடன்  மிக அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //உங்கள் மகன் சுறுசுறுப்பாக எதையாவது அங்கே செய்து கொண்டே இருக்கிறார். இதுவும் சிறப்பு. பலகை அழகாக இருக்கிறது. வசதியாகவும் இருக்கும். மருமகள் வரைந்த தாமரை மலர் நீட்டாக செய் நேர்த்தியுடன் மிக அழகாக இருக்கிறது.//

      மகன் , மருமகள் இருவருக்கும் பொழுது போக்கு போல கைவேலைகள்.
      நன்றி.

      நீக்கு
  2. சிறிய காணொளி பார்த்தேன்.  ரொம்ப லாங் ஷாட்டாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறிய காணொளி பார்த்தேன். ரொம்ப லாங் ஷாட்டாக இருக்கிறது.//

      செல் மூலமாக தூரத்திலிருந்து எடுத்த படம்.
      பஜன் காணொளியில் அருகிலிருந்து எடுத்தது இருக்கும் பல்லாக்கு.

      நீக்கு
  3. குரு பூர்ணிமா அன்று எனக்கு நினைவில்லை.  உங்கள் பதிவு படித்த உடன் எனக்கான ஆசிரியர்களை, குருக்களை நினைவில் கொண்டு வணங்கி, பணிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குரு பூர்ணிமா அன்று எனக்கு நினைவில்லை. உங்கள் பதிவு படித்த உடன் எனக்கான ஆசிரியர்களை, குருக்களை நினைவில் கொண்டு வணங்கி, பணிகிறேன்.//

      மகிழ்ச்சி ஸ்ரீராம். இப்போது வாட்ஸ் அப் பகிர்வுகள் நிறைய வருகிறது ஒவ்வொரு தினத்தையும் நினைவூட்ட.

      நீக்கு
  4. கட்கே  மஹராஜ் வணங்குகிறேன்.  எவ்வளவு உயர்ந்த மனிதர்.  அவரை அடையாளம் காண அரசாங்கத்துக்கு அவ்வளவு வருடங்கள் ஆகி இருக்கிறது...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கட்கே மஹராஜ் வணங்குகிறேன். எவ்வளவு உயர்ந்த மனிதர். அவரை அடையாளம் காண அரசாங்கத்துக்கு அவ்வளவு வருடங்கள் ஆகி இருக்கிறது... //

      கபீரன்பன் பதிவு மூலம் நிறைய மகான்களை அறிந்து கொள்ளலாம்.
      நான் இவர் பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன்.

      நீக்கு
  5. கபீரன்பன் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை. சென்று பார்க்கிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி பக்கம் வரவில்லை, திறக்கவில்லை 404 எர்ரர் என்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கபீரன்பன் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை. சென்று பார்க்கிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி பக்கம் வரவில்லை, திறக்கவில்லை 404 எர்ரர் என்கிறது.//

      கபீரன்பன் பதிவுகள் படித்து பாருங்கள் பிடிக்கும்
      அவர் தளத்தில் உள்ளதை காப்பி, பேஸ்ட் செய்தேன்.
      நீங்கள் அங்கு போய் பாருங்கள் திறக்க முடியலாம்.
      இல்லையென்றால் அவர் தளத்தில் படிக்கலாம்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. நிலவு படங்களும், இருளும் ஒளியும் படங்களும் அழகாக உள்ளன.
    குரு பூர்ணிமா பதிவை சாய் பஜனுடன் முடித்திருக்கலாம்.
    காட்கே பற்றி சொல்ல வந்து அதன் அடிப்படையில் வாசகர்களை கபீரின் பதிவுக்கும் மற்றும் கொண்டு சென்ற விவரங்களை தனி பதிவாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //நிலவு படங்களும், இருளும் ஒளியும் படங்களும் அழகாக உள்ளன.//

      நன்றி.

      //குரு பூர்ணிமா பதிவை சாய் பஜனுடன் முடித்திருக்கலாம்.
      காட்கே பற்றி சொல்ல வந்து அதன் அடிப்படையில் வாசகர்களை கபீரின் பதிவுக்கும் மற்றும் கொண்டு சென்ற விவரங்களை தனி பதிவாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.//

      பதிவு பெரிதாகி விட்டதா?

      பதிவை போட சரியான சமயம் குரு பூர்ணிமா தான் அதனால் தான் பகிர்ந்து கொண்டேன்.
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.





      நீக்கு
  7. கோமதிக்கா, முதலில் உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்! நிறைய தன்னார்வத்துடன் செய்கிறார்கள் இது அப்படியே பேரன் கவினுக்கும் வந்துவிடும்! எல்லோருக்கும் எல்லா திறமைகளும் இறைவன் ஆசிர்வதித்திருக்கிறார் என்பது மிகவும் மகிழ்வான விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா, முதலில் உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்! நிறைய தன்னார்வத்துடன் செய்கிறார்கள் இது அப்படியே பேரன் கவினுக்கும் வந்துவிடும்! எல்லோருக்கும் எல்லா திறமைகளும் இறைவன் ஆசிர்வதித்திருக்கிறார் என்பது மிகவும் மகிழ்வான விஷயம்.//

      உங்கள் வாழ்த்துகள், பாராட்டுகளுக்கு நன்றி கீதா. இறைவன் ஆசீர்வாதம் மற்றும் உங்களை போன்ற நட்புகளின் வாழ்த்துகள் கிடைத்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  8. பலகையும் அழகு, மருமகள் அதில் வரைந்திருப்பதும் மிக அழகு. ரொம்ப ப்ரொஃபெஷனலாக வரைந்திருக்கிறார்.

    படங்களும் குருபூர்ணிமா நிகழ்வுகளும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பலகையும் அழகு, மருமகள் அதில் வரைந்திருப்பதும் மிக அழகு. ரொம்ப ப்ரொஃபெஷனலாக வரைந்திருக்கிறார்.

      படங்களும் குருபூர்ணிமா நிகழ்வுகளும் அருமை.//

      நன்றி கீதா

      நீக்கு
  9. கபீரன்பன் அவர்கள் தளம் தெரியும் வாசிப்பதுண்டு ஆனால் கருத்து இடுவதில்லை. அவருடைய மற்ற தளங்களும் தெரியும். பார்த்ததுண்டு. அதுவும் இப்போதெல்லாம் கருத்திடுவது குறைந்துவிட்டது வாசித்தாலும். நம் வட்டத்தில் மட்டுமே கருத்திடுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கபீரன்பன் அவர்கள் தளம் தெரியும் வாசிப்பதுண்டு ஆனால் கருத்து இடுவதில்லை. அவருடைய மற்ற தளங்களும் தெரியும். பார்த்ததுண்டு. அதுவும் இப்போதெல்லாம் கருத்திடுவது குறைந்துவிட்டது வாசித்தாலும். நம் வட்டத்தில் மட்டுமே கருத்திடுகிறேன்.//

      கபீரன்பன் அடிக்கடி பதிவுகள் போட மாட்டார். அடுத்த பதிவுக்கு நிறைய இடைவெளி இருக்கும்.

      நல்ல கருத்துக்களை பகிர்வதால் அவர் பதிவு போட்டதும் போய் படித்து விடுவேன்.

      நீக்கு
  10. காட்கே மஹராஜ் பற்றியும் வாசித்திருக்கிறேன் கோமதிக்கா. எனக்கு மிகவும் பிடித்த மாமனிதர். அவரது மொழிகள் ரொம்பப் பிடிக்கும். என் மகனுக்கும் அதுவும் நீங்கள் இங்கு பெட்டிக்குள் கொடுத்திருப்பது எங்கள் இருவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

    மிகப் பெரிய சமூகச் சேவகர் ஆனால் அவரைப் பற்றி நம் அரசு தெரிந்து கொண்டது மிகவும் தாமதம். ஆனால் பொதுவாகவே பார்த்தீங்கனா நிறைகுடம் தளும்பாது என்பதுதான். இப்படி அமைதியாகச் செய்வதுதான் நலல்து என்றும் தோன்றும். வலது கை கொடுப்பதும் செய்வதும் இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பது போல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காட்கே மஹராஜ் பற்றியும் வாசித்திருக்கிறேன் கோமதிக்கா. எனக்கு மிகவும் பிடித்த மாமனிதர். அவரது மொழிகள் ரொம்பப் பிடிக்கும். என் மகனுக்கும் அதுவும் நீங்கள் இங்கு பெட்டிக்குள் கொடுத்திருப்பது எங்கள் இருவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.//

      உங்களுக்கு முன்பே தெரியுமா? மகிழ்ச்சி.
      எனக்கு இப்போது கபீரன்பன் பதிவு மூலமே தெரியும்.
      நல்ல மனிதர்தான்.

      //மிகப் பெரிய சமூகச் சேவகர் ஆனால் அவரைப் பற்றி நம் அரசு தெரிந்து கொண்டது மிகவும் தாமதம். ஆனால் பொதுவாகவே பார்த்தீங்கனா நிறைகுடம் தளும்பாது என்பதுதான். இப்படி அமைதியாகச் செய்வதுதான் நலல்து என்றும் தோன்றும். வலது கை கொடுப்பதும் செய்வதும் இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பது போல்!//

      ஆமாம், உண்மை.

      நீக்கு
  11. குரு பூர்ணிமா பற்றிய விரிவான விளக்கங்கள். எல்லாம் நன்றாக இருந்தது.

    ஏராளமான தகவல்களையும் தெரிந்து கொண்டோம் குறிப்பாக காட்கே மஹராஜ் பற்றியும்.

    உங்கள் மகனும் மருமகளும் எல்லாவற்றிலும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு நற்பணி செய்வது மிகவும் மகிழ்வான காரியம். பாராட்டுகள்.

    படங்களும் காணொளிகளும் மிக நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      //குரு பூர்ணிமா பற்றிய விரிவான விளக்கங்கள். எல்லாம் நன்றாக இருந்தது.

      ஏராளமான தகவல்களையும் தெரிந்து கொண்டோம் குறிப்பாக காட்கே மஹராஜ் பற்றியும்.//

      நன்றி.


      //உங்கள் மகனும் மருமகளும் எல்லாவற்றிலும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு நற்பணி செய்வது மிகவும் மகிழ்வான காரியம். பாராட்டுகள்.

      படங்களும் காணொளிகளும் மிக நன்றாக இருக்கின்றன.//

      மகன், மருமகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து பதிவை பற்றி கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி சகோ.

      நீக்கு
  12. அக்கா கவின் மிகவும் உயரமாக வளர்ந்துவிட்டார். உங்கள் மகனுக்கு நிகராக!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா கவின் மிகவும் உயரமாக வளர்ந்துவிட்டார். உங்கள் மகனுக்கு நிகராக!//

      ஆமாம், வளர்ந்து விட்டான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. சிறப்பான குரு பூர்ணிமா விழாக்களும், பதிவும். கபீரன்பன் பக்கம் படித்திருக்கும் நினைவு.

    உங்கள் மகனும் பேரனும் செய்திருக்கும் வேலைப்பாடு அழகு. அதன் மீது மருமகள் வரைந்த தாமரை மலர் கோலமும் சிறப்பு.

    கட்கே மஹராஜ் - அற்புதமான மனிதர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //சிறப்பான குரு பூர்ணிமா விழாக்களும், பதிவும். கபீரன்பன் பக்கம் படித்திருக்கும் நினைவு.//

      படித்து இருப்பீர்கள்.


      //உங்கள் மகனும் பேரனும் செய்திருக்கும் வேலைப்பாடு அழகு. அதன் மீது மருமகள் வரைந்த தாமரை மலர் கோலமும் சிறப்பு.//

      நன்றி.


      //கட்கே மஹராஜ் - அற்புதமான மனிதர்.//

      அவரை பற்றி படித்ததும் மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. இப்படி மனிதநேயம் உள்ள தன்னலமற்றவர்கள் தொண்டால் நலிந்தவர்கள் வாழ்க்கை மேம்படுகிறது.
      அற்புத மனிதர் தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. குரு பூர்ணிமாவுக்காக சிறப்பான பதிவு, அழகிய நிலவின் படங்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      நிறைய பதிவுகளுக்கு நீங்கள் வரவே இல்லை, அதனால் பயணத்தில் இருக்கிறீர்கள் போல அதுதான் பின்னூட்டம் இல்லை என்று நினைத்து
      இருந்தேன்.

      //குரு பூர்ணிமாவுக்காக சிறப்பான பதிவு, அழகிய நிலவின் படங்களுடன்//

      நன்றி.

      நீக்கு
  15. சுவாமியை எழுந்தருளச்செய்யும் பலகையின் வேலைபபாடும் அமைப்பும் கண்ணைக் கவர்கிறது.

    அதுபோலவே பிரசாதம் வைக்கும் பலகையும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுவாமியை எழுந்தருளச்செய்யும் பலகையின் வேலைபபாடும் அமைப்பும் கண்ணைக் கவர்கிறது.

      அதுபோலவே பிரசாதம் வைக்கும் பலகையும்//

      நன்றி. மகன், மருமகளிடம் சொல்கிறேன்.

      நீக்கு
  16. கட்கே மஹராஜின் கதை என்னைக் கவர்ந்தது.

    ஷீரடி சாய்பாபாவின் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கட்கே மஹராஜின் கதை என்னைக் கவர்ந்தது.//

      கட்கே மஹராஜின் வாழ்க்கை வரலாறு பிடித்து இருந்தது மகிழ்ச்சி.

      //ஷீரடி சாய்பாபாவின் படங்களும் அருமை.//

      நன்றி.

      அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நெல்லை.

      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம் சகோ ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. நிலவு மற்றும் அனைத்துப் படங்களும் பதிவும் நன்று. கோயிலுக்கு செய்து அளித்த பலகைகளும் அதில் மருமகள் வரைந்த தாமரை மலரும் பாபாவுக்கு அளித்த ஆரமும் சிறப்பு. பல்லக்கு, ஊர்வலம் உட்பட சிறப்பான வழிபாடு. கபீரன்பன் வலைத் தளம் தமிழ்மணம் காலத்தில் சென்றிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //நிலவு மற்றும் அனைத்துப் படங்களும் பதிவும் நன்று. கோயிலுக்கு செய்து அளித்த பலகைகளும் அதில் மருமகள் வரைந்த தாமரை மலரும் பாபாவுக்கு அளித்த ஆரமும் சிறப்பு. பல்லக்கு, ஊர்வலம் உட்பட சிறப்பான வழிபாடு.//

      நன்றி.

      //கபீரன்பன் வலைத் தளம் தமிழ்மணம் காலத்தில் சென்றிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.//

      ஆமாம், முன்பு நிறைய பதிவர்கள் எழுதினார்கள் படித்தோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. தங்களது மகன் குடும்பத்தினர் செய்வது சிறப்பான செயல்கள்.

    இறையருள் பூரணமாக கிடைக்கும்.

    படங்களும் தகவல்களும் அருமை.

    முதல் காணொளி பிறகு காணவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்

      //தங்களது மகன் குடும்பத்தினர் செய்வது சிறப்பான செயல்கள்.

      இறையருள் பூரணமாக கிடைக்கும்.

      படங்களும் தகவல்களும் அருமை.

      முதல் காணொளி பிறகு காணவேண்டும்//

      உங்கள் வாக்கு படியே இறையருள் மகன் குடும்பத்திற்கு கிடைக்கட்டும்.
      உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  20. காட்கே மஹராஜ் ஜி அவர்கள் பற்றி சிறப்பான செய்திகள்.. ரொம்பவும் தாமத வருகை நான்..

    நேற்று மூலிகைப் பண்ணை சிகிச்சைக்குச் சென்று திரும்பியதில் தாமதம்..

    சிறப்பான நிகழ்வுகள்.. அருமையான தொகுப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //காட்கே மஹராஜ் ஜி அவர்கள் பற்றி சிறப்பான செய்திகள்.. ரொம்பவும் தாமத வருகை நான்..

      நேற்று மூலிகைப் பண்ணை சிகிச்சைக்குச் சென்று திரும்பியதில் தாமதம்..

      சிறப்பான நிகழ்வுகள்.. அருமையான தொகுப்பு..//

      முடிந்த போது படிக்கலாம். உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. குரு பூர்ணிமா என்றில்லை...

    எல்லா நாட்களுமே வணக்கத்துக்கு உரியவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குரு பூர்ணிமா என்றில்லை...

      எல்லா நாட்களுமே வணக்கத்துக்கு உரியவை..//

      எல்லா நாளும் இறைவனை , பெற்றோரை, குரு வணங்குவோம்.
      சிறப்பான விழா காலங்களில் இறைவனை வணங்குவது போல , பெற்றோர்களிடம் ஆசிகள் வாங்குவது போல , குருவிற்கும் சில நாட்கள் சிறப்பு. அதில் குரு பூர்ணிமாவும் ஒன்று.
      எல்லா நாட்களும் வணங்கி ஆசிகளை பெறலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. மகன் செய்த பீடமும் மருமகளின் கோலமும் அவ்வளவு அழகாக உள்ளன. குருபூர்ணிமா தினம் என்று தெரியாமலேயே பூரண நிலவை வியந்துபார்த்துப் பிரமித்தேன். பிறகுதான் தெரிந்து படம் பிடித்தேன்.

    காட்கே மகராஜ் பற்றி இப்போதுதான் அறிந்தேன். கபீரன்பன் தளத்தில் சில பதிவுகள் வாசித்திருக்கிறேன். முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தி வகுப்பில் கபீர்தாஸ் கவிவரிகளைப் படித்து வியந்ததோடு மற்றவர்களுக்கும் சொல்லி சிலாகித்திருக்கிறேன். அந்நாளைய நினைவுகள் மீண்டும் எழுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்

      //மகன் செய்த பீடமும் மருமகளின் கோலமும் அவ்வளவு அழகாக உள்ளன. குருபூர்ணிமா தினம் என்று தெரியாமலேயே பூரண நிலவை வியந்துபார்த்துப் பிரமித்தேன். பிறகுதான் தெரிந்து படம் பிடித்தேன்.//

      உங்கள் பூரண நிலவை முகநூலில் கண்டேன்.

      //காட்கே மகராஜ் பற்றி இப்போதுதான் அறிந்தேன். கபீரன்பன் தளத்தில் சில பதிவுகள் வாசித்திருக்கிறேன். முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தி வகுப்பில் கபீர்தாஸ் கவிவரிகளைப் படித்து வியந்ததோடு மற்றவர்களுக்கும் சொல்லி சிலாகித்திருக்கிறேன். அந்நாளைய நினைவுகள் மீண்டும் எழுகின்றன.//

      கபீரின் கவிதைகளை இவர் தளத்தில் தான் படித்தேன்.

      கபீர்தாஸ் பற்றி பாடத்திலும் பாகவத புராணத்திலும் படித்தேன், கபீர்ன்பன் நடத்திய போட்டியிலும் கலந்து கொண்டு ராமகிருஷ்ணவிஜயம் ஒரு ஆண்டு சந்தா பெற்றேன் அவரிடமிருந்து.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  23. புகைப்படங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை!
    பிரசாதப்பலகை மிக அழகு! அழகாக வரைந்திருக்கும் உங்கள் மருமகளுக்கு என் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //புகைப்படங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை!
      பிரசாதப்பலகை மிக அழகு! அழகாக வரைந்திருக்கும் உங்கள் மருமகளுக்கு என் வாழ்த்துக்கள்!!//

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  24. படங்களும், பதிவும் அழகு, தெளிவு. உங்கள் மகனும், மருமகளும் சேர்ந்து செய்த பலகை மிகவும் அழகாக இருக்கிறது. நல்ல காணிக்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //படங்களும், பதிவும் அழகு, தெளிவு. உங்கள் மகனும், மருமகளும் சேர்ந்து செய்த பலகை மிகவும் அழகாக இருக்கிறது. நல்ல காணிக்கை.//
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  25. குருபூர்ணிமா வாழ்த்துகள்.

    மகன் மருமகள் செய்த எடுத்துச் செல்லும் பலகை அழகாக இருக்கிறது.

    அனைவரையும் குரு சாய் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //குருபூர்ணிமா வாழ்த்துகள்.

      மகன் மருமகள் செய்த எடுத்துச் செல்லும் பலகை அழகாக இருக்கிறது.

      அனைவரையும் குரு சாய் காக்கட்டும்.//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு