வியாழன், 19 நவம்பர், 2020

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி- குமரன் மலை

குமரன் மலை

சில வருடங்களுக்கு முன் என் தங்கையின் மகள் இருக்கும் புதுக்கோட்டை ஊருக்குப் போய் இருந்தோம். அப்போது கார்த்திகை சோமவார நாள்.   என் தங்கை மகளிடம்  " முருகன் கோவில் பக்கத்தில் இருக்கா" என்று கேட்டேன். அவள் இந்தக்  கோயிலுக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் சொன்னதால் இந்த அழகிய கோவிலையும், மிக அழகான பாலதண்டாயுத குமரனையும்  தரிசனம் செய்யக் கிடைத்தது.

புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் வழியில் குமரன் விலக்கு என்ற இடத்தில் இருக்கிறது இந்த குமரன் மலை. புதுக்கோட்டையிலிருந்து 12 மைல் தூரத்தில் இருக்கிறது.

திங்கள், 16 நவம்பர், 2020

மாமாவும் கந்த சஷ்டி விழா நினைவுகளும்





கந்தர் சஷ்டி விழா நேற்று ஆரம்பம். அப்போது தனது தந்தையின் நினைவுகளை என் கணவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.  1951ல்  மாமா அவர்கள் கோவை ஆர்.எஸ்.புரம் அருள்மிகு இரத்தினவிநாயகர் திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா சமயம் கந்தபுராணத் தொடர் சொற்பொழிவு செய்து இருக்கிறார்கள். அந்த விழா அழைப்பிதழைக் காட்டினார்கள்.

சனி, 14 நவம்பர், 2020

தீபாவளி வாழ்த்துக்கள்.

 அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

வாழ்க நலமுடன்.




சனி, 7 நவம்பர், 2020

ஐயனார் கோவிலில் நவராத்திரி

ஐயனார் -அழகான அலங்காரம்


போன வருடம்  எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் போய் நவராத்திரி கொலு படங்கள் போட்டேன் பதிவாக. இந்த முறை ஒரே ஒரு நாள் சரஸ்வதி பூஜை அன்று  காலையில் போய் வந்தோம் பக்கத்தில் இருக்கும் ஐயனார் கோவில்  கொலுவிற்கு . அன்று  சுவாமி அலங்காரம், மற்றும் கொலு  எல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன் . 

(எங்கள் வீட்டுக் கொலு அன்றும் இன்றும் என்ற போன பதிவில்  சொல்லி இருந்தேன். )

கோவில் கொலு சுவாமி அலங்காரங்கள் கீழே வருகிறது.

வியாழன், 29 அக்டோபர், 2020

எங்கள் வீட்டுக்கொலு அன்றும், இன்றும்

எங்கள் வீட்டுக் கொலு

சரஸ்வதி பூஜை அன்று  என் கணவர் செய்த சரஸ்வதி அம்மன்

எல்லோரும் நலம்தானே? கொலுவுக்கு அழைக்காமல் கொலு முடிந்த பின்பு படம் காட்டுகிறாள் என்று நினைக்காதீர்கள்.  கொலு சமயத்தில் வலைத்தளம் வரவே முடியவில்லை.

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

முருடேஸ்வர் கோயில் பகுதி-2


மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

முருடேஸ்வர் முதல் பகுதி போன வியாழன் போட்டேன் இப்போது அதன் நிறைவுப் பகுதி. முதல் பகுதி படிக்காதவர்கள் படிக்கலாம்.

வியாழன், 8 அக்டோபர், 2020

முருடேஸ்வர் கோயில்



மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.  அதைப் பதிவாக்கி வருகிறேன். இன்று  முருடேஸ்வர் கோவில்.

கர்நாடகத்தில் உத்திர கன்னட  மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது 
இந்த கோவில். மூன்று பக்கம் கடலால் சூழந்து இயற்கை அழகுடன்  இருக்கிறது. இந்த கோவில் கண்டூகம் என்ற சிறிய மலையின் மேல் அமைந்து இருக்கிறது.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

காந்தி நினைவு இல்லம்



2017ஆம் ஆண்டு காந்தி அருங்காட்சியகம் சென்று வந்தோம்  . காந்தி ஜெயந்தி நாளில்  போட வேண்டும் என்று நினைத்தது. இந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்குத்தான்  கைகூடி வந்து இருக்கிறது. 

அப்பாவுடன் நினைவு இல்லத்தில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கு 1972ல் போய் இருக்கிறேன்.   விடுமுறைக்கு மதுரை வரும் போதெல்லாம்  உறவினர்கள், மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் இருக்கிறோம். 

இந்த முறை பேரனுக்கு என்று போனது .

திங்கள், 21 செப்டம்பர், 2020

ஆனேகுட்டே கோவில், கும்பாசி





ஆனேகுட்டே கோவில் 

மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.  அதைப் பதிவாக்கி வருகிறேன். மூகாம்பிகை கோவில் போய்விட்டு வரும் வழியில் உள்ள  ஆனேகுட்டே விநாயகர் கோவில் போனோம்  , சிறிது தூரத்தில் இருந்த கடற்கரை போனோம்  அவை இங்கே இந்த பதிவில் காணலாம்.

சனி, 12 செப்டம்பர், 2020

கொல்லூர்ஸ்ரீ மூகாம்பிகை கோவில்

கேரளா பாணியில்  கொல்லூர் மூகாம்பிகை அம்மன்கோவில் உள்ளது.

மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.  அதைப் பதிவாக்கி வருகிறேன். இன்று கொல்லூர் மூகாம்பிகை கோவில் .

மங்களூரிலிருந்து  4 மணி நேரத்தில்  கொல்லூர் மூகாம்பிகை கோவிலை அடையலாம். இக் கோவில்  சக்தி பீடங்களில் ஒன்று,  அர்த்தனாரி சக்திபீடம் என்பார்கள்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

உடுப்பி கிருஷ்ணர் கோவில்


மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

 கர்நாடகா கோவில்கள் சென்றதைப் பதிவாக்கி வருகிறேன்  , அதில் இன்று உடுப்பி கிருஷ்ணர் கோவில்.

இன்று கிருஷ்ணஜெயந்தியைக் கொண்டாடும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

சனி, 5 செப்டம்பர், 2020

திருக்கோகர்ணம்




திருக்கோகர்ணம் என்னும் தலத்தில் உள்ள மகாபலேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்  ஆகியோரது தேவாரப் பாடல்களைப் பெற்றது. இது கர்நாடகா மாநிலத்தில் அமைந்து உள்ள கோவில்.

மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

 கர்நாடகா கோவில்கள் சென்றதைப் பதிவாக்கி வருகிறேன்  , அதில்  இன்று திருக்கோகர்ணம்.

சனி, 22 ஆகஸ்ட், 2020

பிடித்து வைத்தாலும் பிள்ளையார்

இந்த வருடம்  மஞ்சளில் நான் செய்த பிள்ளையார் 

களிமண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல் கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம், போன்ற ரத்தினங்கள் தந்தம்  , வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம் , வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர்  வடிவத்தை அமைக்கலாம். என்று சொல்வார்கள். ஆனால் எளிமையாக மஞ்சள், பசுஞ் சாணத்தில் செய்து வணங்கினாலே மகிழ்ந்து போவார் பிள்ளையார்.

புதன், 19 ஆகஸ்ட், 2020

சிட்டுக்கள்! சின்னச் சிட்டுக்கள்!




என் வீட்டு ஜன்னலில்

சிட்டுக்குருவிகள் பக்கத்துவீட்டுச் சுவரில் ஒவ்வொரு தடவையும்  கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.  இந்த இடம் உங்களுக்குத் தெரிந்த இடம் தான். ஓவ்வொரு முறை குஞ்சு பொரித்துப் போகும்போதும் பதிவுகள் போட்டு இருக்கிறேன்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

கிருஷ்ணஜெயந்தி

கண்ணன் பிறந்தான்   மனக்கவலைகள் போக்க மன்னன் பிறந்தான்.
எங்கள் வீட்டில் கண்ணன்!

வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே.
-பெரியாழ்வார் திருமொழி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

கன்யாடி ஸ்ரீ ராமர் கோவில், தர்மஸ்தலா

 கர்நாடகா பயணத் தொடரில்  இந்தக் கோவிலும் உண்டு.குக்கி சுப்பிரமணியா கோவில் போய்விட்டு   வழியில் உள்ள இந்த ராமர் கோவில் போனோம்.

ஸ்ரீ ராம ஷேத்ரா என்று அழைக்கப்படுகிறது. 1978 ல்  ஸ்ரீ ஆத்மானந்த சரஸ்வதி என்பவர் மூன்றடுக்குகள் உள்ள இந்த கோவிலைக் கட்டி இருக்கிறார்.
இராமாயணம் பற்றிய  சிற்பங்கள் முகப்பில் உள்ளன.

மங்களூரிலிருந்து 74 கி.மீ,  தர்மஸ்தலாவிலிருந்து 3 1/2 கி.மி தூரத்தில் கன்யாடியில்  ஸ்ரீ ராம க்ஷேத்ரா என்று அழைக்கப்படும் இந்த   ஸ்ரீராமர் கோவில்  உள்ளது. 
பட்டாபிஷேகக் காட்சியில்  ராமர்  அழகாய் கொலுவீற்று இருக்கும் கோவில்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

சிறு தேர் உருட்டல்


சிறு தேர்  உருட்டல்

ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு  சிறுதேரை உருட்டி கொண்டு போய்  விளையாடியவர்களுக்கு  நினைவுகள்  வரலாம்.

இன்று ஆடிப் பெருக்கு!  வருடா வருடம் மக்கள் எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடும் பண்டிகை. இந்த முறை மக்களிடம் உற்சாகமாய்க் கொண்டாட முடியாத சூழல்.

ஆடிப் பெருக்கு அன்று குழந்தைகள் சிறு தேர் செய்து ஆற்றுக்கு எடுத்துச் சென்று விளையாடி மகிழ்வார்கள். மாயவரத்தில் இருந்த போது பார்த்த காட்சிகள். 

நடந்தாய் வாழி காவேரி

இன்று காவிரி இருக்கும் நிலை! காவிரியில் ஆடிப்பெருக்குக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட பின்னும் மயிலாடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று மாலை 6 மணிக்கு இப்படி தோற்றமளிக்கிறது! இன்று காலை அகத்தியர் படத்தில் வந்த நடந்தாய் வாழி காவேரி என்ற பாடல் டீ.வீ யில் கேட்டேன். ‘ இன்று ஆடி பெருக்கு அல்ல்வா அதனால் காவேரி பாடல்கள் வைக்கிறார்கள் நாம் போன வருடம் ஆடிப் பெருக்குப் பற்றி எழுதினோம் அல்லவா’ என்று நினைவு வந்தது. நம் ஊருக்கு தண்ணீர் வரவில்லையே ஆத்துக்கு போய் சாமி கும்பிடுபவர்கள் என்ன செய்தார்களோ என்று நினைத்துக் கொண்டேன். அகத்தியர் படப் பாடல்: /அடர்ந்த மலைத் தொடரில் அவதரித்தாய்! அழகு தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்! நடந்த வழி யெல்லாம் நலம் பயத்தாய்! நங்கையர் உன்னை வணங்கவும், அழகு கொஞ்சும் சோலைகள் விளங்கவும் .... .... .... .... நாடெங்குமே செழிக்க நன்மை யெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி./ இப்படி அந்த காலத்தில் காவேரி அகன்ற காவேரியாய்= அவள் நடந்து வந்த பாதையெல்லாம் எல்லோருக்கும் எல்லா வளங்களையும் அள்ளி வழங்கினாள் என்று தெரிகிறது.ஆனால் இன்று சுருங்கி ,வற்ண்டு காவேரி கடலில் கலப்பதும் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை. மறுபடியும் காவேரி நடந்து வர வேண்டும்,நாடு செழிக்க வேண்டும்.எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும். அதற்கு காவேரித் தாய் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆடிக் காற்றில் அம்மியும் அசையும் என்பார்கள்.இப்போது காற்று மருந்துக்குகூட இல்லாமல் வெப்ப சலனமாய் உள்ளது.அங்கு அங்கு மழை பெய்கிறது.இங்கு மழையே இல்லை. சீனா,பாகிஸ்தானில் வெள்ளம்.ஒரு இடத்தில் தண்ணீரால் கஷ்டம்,ஒரு இடத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டம். இயற்கையின் திருவிளையாடல் புரியவில்லை. இயற்கையைப் போற்றுவோம். / ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய்ப் பொழிய வாழ்க வளமுடன்./ ”மாரி மழை பொழிய வேண்டும்,மக்கள் சுற்றம் வாழ வேண்டும் காடு கரை நிறைய வேண்டும்,மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.”

வெள்ளி, 31 ஜூலை, 2020

வரமருளும் அன்னை



                                                            
                                                          
                                       எங்கள் வீட்டில் இன்று காலை வழிபாடு வரலக்ஷ்மிக்கு
வரலக்ஷ்மி விரதம் இருக்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை, ஆனால் வெள்ளிக் கிழமை லட்சுமி வழிபாடு உண்டு

திங்கள், 27 ஜூலை, 2020

தம்பிரான் தோழர்


இன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை. சேரமான் நாயனார் குருபூஜை.
கயிலாயத்தில் ஆலாலசுந்தரர் எனவும், பூவுலகில் வாழ்ந்த போது ஆளுடைநம்பி, ஆரூரர், வன்றொண்டர் எனவும் அழைக்கப்பட்டவர் சுந்தரர்.
சிவபெருமானால் தம்பிரான்தோழர் எனவும் சிறப்பிக்கப் பட்டார். 
தோழமையுடன் இறைவனை அணுகியவர். உரிமையுடன் அனைத்தையும் வேண்டிப்பெற்றவர்.

சுந்தரர்  வெள்ளை யானையில்,  சேரமான்  நாயனார் குதிரையில் கயிலை சென்ற காட்சி.


யூடியூப்பில் தெரிய வில்லை என்றால்  இந்த சுட்டியைப் பயன்படுத்திப் பாடலைக் கேட்கலாம்.

மாமா அவர்கள் இளமையாக இருக்கும்போது பாடிப் பதிவு செய்து வைத்துக் கொள்ளாதது ஒரு பெரிய வருத்தம் எல்லோருக்கும். வயதான பின் ஒலி நாடாவில் பதிந்த பாடல்களை இப்போது என் கணவரின்  தம்பி யூடியூப் பதிவாக பதிவு செய்து வருகிறார்கள். 

சுந்தரர்  பற்றிய வரலாறை சகோ திரு. துரைசெல்வராஜூ அவர்கள் அவர்களுக்கே உரிய அழகான எழுத்து நடையில்  அருமையாக எழுதி இருக்கிறார்கள்.


மூன்று நாட்கள் இந்த பயிலரங்கத்தில் கலந்து கொண்டேன்.

சுந்தரர் குருபூஜையை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி.


சுந்தரர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவர் பாடல்களில்  இசைக்கருவிகள் இடம்பெற்ற பாடல்களைப் பாடினார். அவை இங்கே-

முதலில் இருப்பவர் கலைமாமணி  முனைவர் சுரேஷ்சிவன் அவர்கள் அவர்தான் தேவார ஆசிரியர். இரண்டாவது  படத்தில் இருக்கும் முனைவர் யாழ் சந்திரா அவர்கள் தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியாராக இருப்பவர்கள் அவர்கள் வாழ்த்துரையுடன் நிகழச்சி ஆரம்பம் ஆனது.

முழவு எனும் மிருதங்க வாத்தியம் பற்றி  மிருதங்க வித்வான் தியாகராஜன்  அவர்கள் பேசினார்கள். மிருதங்க வாத்தியக் கருவியின் படிப்படியான வளர்ச்சி.எந்த மரங்களில் செய்யப்படுகிறது என்று எல்லாம் சொன்னார்கள். இப்போது பலாமரத்தில்தான் அதிகம் செய்யப்படுகிறதாம்.

மிருதங்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதி இருக்கிறார்கள் என்றும், 30 ஆண்டுகளாய் மதுரையில் நிறைய மிருதங்கம் வாசிக்கும் மாணவர்களைத் தயார் செய்து இருப்பதாகச் சொன்னார்கள்.










இந்த குடமுழா வாத்தியத்தை பிரம்மா வாசிப்பது போல் உள்ள சிற்பம் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடிமரத்திற்கு பின்புறம் உள்ள தூணில் இருந்தது முன்பு எடுத்தேன் அந்தப் படத்தைத் தேட வேண்டும்.




காலுக்குக் கீழ்  நின்று வாசிக்கிறார் பாருங்கள்.
மணக்குடிக் கோவிலுக்கு திருவாதிரைக்குப் போய் இருந்தோம்,மாயவரத்தில் இருக்கும்போது. மாயவரத்திலிருந்து 6 கி.மீ  தூரத்தில் இருக்கும் கோவில். அந்த கோவிலில் நடராஜர் காலுக்கு அடியில்  குடமுழா வாத்தியத்தை ஒருவர் வாசிப்பார் . இந்த கோவில் பதிவு போட்டு இருக்கிறேன். தேட வேண் டும்.

நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாடப்பட்ட சுந்தரர் தேவாரத்தை இங்கு பகிர்ந்து இருக்கிறேன். தேவாரம்  பாட  விருப்பம் இருந்தால் அவர் போன் நம்பருக்கு போன் செய்து இணைந்து கொள்ளலாம். புதன் கிழமைதோறும் சொல்லித் தருகிறார். 

மூன்று நாளும் நன்றாக இருந்தது. நிறைய அன்பர்கள் கலந்து கொண்டார்கள். ஞாயிறு காலை அண்ணாமலை ரெட்டியார் அவர்களின்  காவடி சிந்து  பாடல்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்தது. 

சுரேஷ்சிவன் அவர்கள் பல வருடமாய் இலவசமாக தேவாரம் கற்றுக் கொடுக்கிறார், தேவாரத்தலங்களுக்குத் தன்னிடம் பயில்பவர்களை அழைத்து சென்று அங்கு தேவாரங்களைப் பாட வைக்கிறார். என் தங்கைகள், என் அண்ணி எல்லாம் கலந்து கொள்கிறார்கள்.

சான்றிதழல்  கிடைத்து இருக்கிறது  மகிழ்ச்சி  அளிக்கிறது.

வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த நாளில் இறைவனைப்பற்றிச் சிந்திக்கவும், அவன் புகழைப் பாடவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இறைவனுக்கு நன்றி. சுரேஷ்சிவன் அவர்களுக்கு நன்றி.

சுந்தரர் குருபூஜையில் சுந்தரர்தேவார பாடல்கள், என் மாமனார் அவர்கள் பாடிய சுந்தரர் தேவாரம் பகிர்ந்து கொண்டேன்.

இன்னொரு குழுவிலும் சேர்ந்து இருக்கிறேன். திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் பாடுதல் உண்டு அதில் திருமதி. கோடீஸ்வரி  அவர்கள் (85 வயது)  தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திருப்புகழ், மற்றும் தனிப் பாடல்கள் எல்லாம் ஒரு மணி நேரம் சொல்லித் தருகிறார். அவர்கள் கோவையில் இருக்கிறார்கள், என் மாமனார் இறந்தபோது வந்து திருவாசகம் படித்தார்கள்.  என் மாமாவின் பெயரைச்சொல்லி அவர்கள் மருமகள் அம்மா என்று போனில் அறிமுகப்படுத்திக் கொண்டபோது மகிழ்ந்து போனார்கள். வீடியோ கிடையாது. லேண்ட் லைனில் என்னை இணைத்து இருக்கிறார்கள்.

இன்று மாலை சுந்தரர் தேவாரம் படித்தோம். நிறைய பாடல்களைச் சொல்லித் தந்தார்கள். 85 வயதுக்கு மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் எண்ணம்  மிக உயர்ந்தது. அதுவும் மகிழ்வாய் சிரித்துச் சிரித்து, பாடல் இடம்பெற்ற ஊர், பாடல் பாடப்பெற்ற காரணம், பாடினால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் சொல்கிறார்கள். 

 என் மாமனார் அவர்கள் 80 வயது வரை கற்றுக் கொடுத்தார்கள், பாடசாலை சென்று . அப்புறம் சிறிது காலம் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள் விநாயகர் கோவிலில் சொல்லிக் கொடுத்தார்கள்.


அவன் அருளால் அவன் தாள் வணங்கி மகிழ்வோம்.



                                                    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !


==========================================================================


சனி, 11 ஜூலை, 2020

ஹொரநாடு அன்னபூரணேஸ்வரி



கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில்  அமைந்து இருக்கிறது அன்னபூரணி கோவில்; மேற்கு தொடர்ச்சி மலை அருகில் பத்ரா நதிக்கரையில்  இருப்பதால் இயற்கை எழிலோடு அமைந்து இருக்கும் கோவில். 

நிறைய கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை. வரும் வழி எல்லாம் இயற்கை எழில் நம்மை மெய் மறக்கச் செய்யும்.

மழைக்காலத்தில் விடாது மழை பெய்யும்போது முன்பெல்லாம் பயணம் செய்வது மிகவும் கஷ்டமாம் . இப்போது பாதை நன்றாக  இருக்கிறது. 

ஞாயிறு, 5 ஜூலை, 2020

சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் - நிறைவுப் பகுதி

அடுத்த பதிவில் ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும்  'குரு நிவாஸ்' . மிக அழகாய் பாக்குமரமும், அதைச் சுற்றி மிளகுக்கொடி  படர்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டே  போகலாம்.   பல மரங்களும்  சூழ்ந்து இருக்கும் இடத்தில் அமைந்து இருக்கிறது "குருநிவாஸ்" என்ற பெயரில்  அழகிய பிரம்மாண்ட கட்டிடம். அங்கே ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதிதீர்த்தசுவாமிகளைப் பார்க்கப்  போகலாம் என்று சொன்னேன் .

இந்தக் கதவு திறந்தால்தான் அக்கரையில் இருக்கும் குருவைப்பார்க்கப் போக முடியும்.  மாலை திறக்கும் வரை காத்து இருந்தோம். மாலை 3.30க்கோ 4.30க்கோ திறந்தது.(சரியாக நினைவு இல்லை) கதவு திறந்து விட்டது, வாங்க! போகும் வழியின் அழகைப் பார்த்துக் கொண்டு செல்வோம்.

செவ்வாய், 30 ஜூன், 2020

சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் -பகுதி-2


காலடியில் உள்ள பூர்ணா நதியில் சங்கரர் தன் தாயோடு  குளிக்கப் போகும் போது  முதலை  சங்கரரின் காலைக் கவ்வியது,  துறவறம் மேற்கொள்ள சங்கரர்  அனுமதி கேட்கும் காட்சி.

சங்கரரின்  தாய் தனது மகன் துறவறம் மேற்கொள்வதை விரும்பவில்லை.
'அம்மா! துறவறம் மேற்கொள்ள அனுமதி கொடுத்தால் இந்த முதலை என் காலை விட்டு விடும் " என்று சொல்ல , தாய் சம்மதிக்கிறார்.
ஆதி சங்கரர்  துறவறம் மேற்கொள்ள தன் அம்மா  ஆர்யாம்பாளிடம்  அனுமதி பெற்றது இப்படித்தான். அதைச் சித்தரிக்கும் காட்சி.

சனி, 27 ஜூன், 2020

சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்


துங்கா  நதியின் எதிர்க்கரையிலிருந்து எடுத்த கோபுரக் காட்சி

2015 ஜனவரி முதல் வாரத்தில் கர்நாடகாவிற்கு ஆன்மீகச் சுற்றுலா 6 நாள்  பயணம் செய்தோம் அதில் அருள்மிகு  குக்கி சுப்பிரமணியர் திருக்கோவில்  போனதை மட்டும் முன்பு பதிவு போட்டு இருந்தேன் அப்புறம் பதிவு தொடரவில்லை.

மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர்  . உடுப்பி கிருஷ்ணன்.

இந்த கொரோனா காலத்தில் கோவில் போக முடியவில்லை. போன கோவில்கள் பற்றிப்பதிவு போடலாம் என்று ஆரம்பித்து இருக்கிறேன். 

வியாழன், 25 ஜூன், 2020

பாலமலை அரங்கநாதர் திருக்கோயில்

                                                    பாலமலை அரங்க நாதர் கோவில்
இப்போது பெளர்ணமிக்கு 'சத்ய நாராயணா பூஜை' நடைபெறும் போலும்! படம் இருக்கிறது 

நாங்கள்  கோவைக்குப் போயிருந்தபோது பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து 12.கி.மீ  தூரத்தில் உள்ள  பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு  
18. 02. 2012ல் போனோம். நாங்கள் போன அன்று வைஷ்ணவ ஏகாதசி. சனிக்கிழமை. என் கணவரின்  தம்பி குடும்பத்தினருடன்  டாக்ஸி வைத்துக் கொண்டு போனோம். டிரைவர் பேர் வாசுதேவன் மிகவும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

இந்த கோவிலைப் பதிவில் போடலாம் என்று நான் எடுத்த படத்தைத் தேடினால் கிடைக்கவில்லை.  ஒரு படமும் இல்லை. பாலமலை குறிப்பு எழுதி சேமித்து வைத்தது மட்டும் இருந்தது.


போகவர எவ்வளவு  தூரம்  கோவில் வரலாறு பற்றிச் சிறுகுறிப்பு எழுதி வைத்தது எல்லாம் இருக்கிறது, படங்களை மட்டும் காணோம்.

அக்குறிப்பு;-

வியாழன், 11 ஜூன், 2020

மாடித்தோட்டம்



தங்கையின் வீட்டு மாடித்தோட்டம் 

தோட்டக்கலை என்பது நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்ல- மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தைத் தரும.

வீட்டுத்தோட்டத்தால் மனதுக்கு மகிழ்ச்சி, தோட்டத்தில் வேலைபார்ப்பதால்  உடல் ஆரோக்கியம்.  எல்லாம் கிடைக்கிறது. தோட்டத்தில் வைத்த செடிகளில் அதன் படிப்படியான வளர்ச்சி நிலைகளைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தினசரி ஒரே மாதிரி வேலைகளால் அலுப்பும் சலிப்பும் ஏற்படாமல் தடுக்கும் இந்த தோட்டக்கலை.

நம்மைச் சுற்றி உள்ள காற்றைச் சுத்தப்படுத்தி  ஆரோக்கியம் நிறைந்த சூழலைத் தருகிறது.

ஞாயிறு, 31 மே, 2020

ஜன்னல் வழியே



'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,.

குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நாள் இருந்தது. இன்று பழகி விட்டது.