திருக்கோகர்ணம் என்னும் தலத்தில் உள்ள மகாபலேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரது தேவாரப் பாடல்களைப் பெற்றது. இது கர்நாடகா மாநிலத்தில் அமைந்து உள்ள கோவில்.
மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.
கர்நாடகா கோவில்கள் சென்றதைப் பதிவாக்கி வருகிறேன் , அதில் இன்று திருக்கோகர்ணம்.
சுவாமி பெயர் :- மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
அம்மன் பெயர் :- கோகர்ணேஸ்வரி, தாமிரகெளரி
தலமரம்:- வில்வம்
தீர்த்தம் :- கோடி தீர்த்தம்
கோவிலை வழிபட்டவர்கள் :- இராவணன், பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், நாகராஜன்.
தேவாரம் பாடியவர்கள்;- சம்பந்தர், அப்பர்
"பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலிகாண்
கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடினான்காண்
ஆடினான் காண்பாணியாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே
- - அப்பர் தேவாரம்
பேதைமட மங்கையொரு பங்கிட
மிகுத்திடப மேறியமர்
வாதைபட வண்கடலெ ழுந்தமிட
முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடு மாயவர்கள் வந்தடி
மிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்
கின்றவார் கோகரணமே.
-சம்பந்தர்
இந்தக் கோவிலுக்கு இரண்டு மூன்று தல வரலாறு இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவில் அமையக் காரணமாக இருந்த விபீசணன் போல, இந்தக் கோவில் அமைய இராவணன். இரண்டு கதையிலும் விநாயகரும் வருகிறார்.
திருக்கோகர்ணத்தில் உள்ள ஆத்மலிங்கமானது இலங்கை வேந்தன் இராவணன் இலங்கையை அழியாமல் காக்க சிவனை நினைத்து கடுந்தவம் இருந்து கைலையில் சிவபெருமானிடம் பெற்றுவந்தது என்பார்கள். சிவபெருமான் கீழே வைக்க கூடாது இலங்கை செல்லும் வரையில் என்று சொல்லிக் கொடுக்கிறார்.
இராவணன் மாலை நேரத்தில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பதால் அங்கு பக்கத்தில் இருந்த மாடு மேய்க்கும் சிறுவனிடம் லிங்கத்தைக் கொடுத்து "கீழே வைக்காமல் கையில் வைத்துக் கொள் , சிறிது நேரத்தில் வருகிறேன் "என்று சொல்கிறார். சிறுவனாக வந்த கணபதி சிறிது நேரம் தான் கையில் வைத்து இருப்பேன் அதற்குள் வரவில்லை என்றால் கீழே வைத்து விடுவேனென்று நிபந்தனை விதிக்கிறார்.
குறிப்பிட்ட நேரம் கடந்துவிட்டதால் சிறுவன் கீழே வைத்து விடுகிறான். இராவணன் கீழே வைத்து விட்ட சிவலிங்கத்தை எடுக்கும்போது சிவலிங்கம் பசுவின் காது போல் குழைந்ததாம் அதனால் சிவனுக்குக் கோகர்ணேஸ்வரர் என்று பெயர். லிங்க அமைப்பாய் இல்லாமல் திருகிய தோற்றத்தில் பசுவின் காது போல் இருக்கும்.
தன் முழு பலத்தைக் காட்டியும் எடுக்க முடியாமல் இராவணன் இங்கேயே விட்டுச் சென்றதால் இங்கு உள்ள சிவனுக்கு மகாபலேஸ்வரர் என்ற பெயரும், பசுவின் காது போல் லிங்கம் இருப்பதால் கோகர்ணம் என்றும் அழைக்கப்படுகிறது. (கோ என்றால்- பசு ; கர்ணம் என்றால் காது.)
மஹா கணபதி கோவில்
சிறுவனாக வந்து சிவலிங்கத்தைப் பெற்று கீழே வைத்த கணபதிக்குக் கோவில் இருக்கிறது, நின்ற வடிவில் இருக்கிறார். (கீழே உள்ள படத்தில் இருப்பது போல்தான் இருப்பார்) கோவிலுக்கு முன்பு அவரை வணங்கிய பின் தான் மகாபலேஸ்வரரை வணங்கக் கோவில் உள் போகிறோம்.
கடைசிப் படத்தில் உள்ளது போல்தான் இருக்கும். சாளக்கிரம பீடத்தில் சொர்ணரேகையுடன் வெள்ளை கலரில் உள்ளங்கை அளவு பள்ளம் உள்ளது அதில் சிறியஅளவு சிவலிங்கத்தின் தலைப்பகுதி தெரியும்.
நாமே அபிஷேகப் பொருட்கள் கொண்டு சென்று செய்யலாம், நாங்கள் கொண்டு போகவில்லை .
ஆவுடையாரின் மேல் தெரியும் துளையில் நம் கையை நீட்டச் சொல்வார் குருக்கள் கை வழியே பால் விடுவார் .நம் கையில் மலர்கள் காசு வைத்துக் கொண்டு உள்ளே போட்டு விட்டுக் கையை வைத்துக் காது போன்ற அமைப்பைத் தொட்டு வணங்கலாம். வரிசையில் வந்துஇரண்டு தடவை தொட்டு வணங்கினோம்.
உள்ளே இருக்கும் ஆத்மலிங்கத்திற்கு 40 வருடத்திற்கு ஒரு முறைதான் பீடத்தை அகற்றி பூஜை செய்வார்களாம், பக்தர்களுக்கும் தரிசனம் உண்டாம்.(மூன்றாவது படத்தில் இருப்பது போல் இருக்குமாம் உள்ளே )
இந்தப் படம் உறவினர்களுக்கு வாங்கிக் கொடுத்தேன் எங்களுக்கும் வாங்கினேன்.
கடும் தவம் செய்யும் இராவணன்.
சிவபெருமான் தடுத்து ஆத்மலிங்கத்தைத் தருகிறார்
சந்தியா வந்தனம் செய்து வருகிறேன் சிறிது நேரம் வைத்துக் கொள் கீழே வைக்காமல் என்று மாடு மேய்க்கும் சிறுவனிடம் கொடுப்பது, சிறுவன் மூன்று முறை அழைப்பேன் அதற்குள் வந்து விட வேண்டும் என்று சொல்லும் காட்சி.கீழே வைக்க கூடாது என்று சொல்லியும் கீழே வைத்து விட்டதால் இராவணன் கோபத்தில் சிறுவன் கணபதியை தலையில் கொட்டுவது.
லிங்கத்தை எடுக்க முயலும் போது லிங்கம் திருகிக் கொண்டு பசுவின் காதுபோல் குழைவது.
இந்த கதையை முருடேஷ்வரர் கோவிலில் காட்சியாக அமைத்து இருக்கிறார்கள்.
பின்னால் இந்த கோவில் பதிவாக வரும். இக் கதையின் தொடர்பு உடைய படம் என்பதால் சேர்த்து இருக்கிறேன்.
உட் பிரகாரத்திலிருந்து எடுத்த கோபுர கலசப் படம். கலசத்திற்கு அருகில் இருக்கும் விளக்கின்மேல் காகம் அமர்ந்து இருக்கிறது.
இது இன்னொரு கோணத்தில் எடுத்த படம்.
தமிழ் நாட்டுக் கோவில்போல் இருக்காது. கேரள பாணியில் இருக்கும்
பிரகாரத்தில் இருந்த ஒரு சிவலிங்கம்
கோவில் உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. அம்மன் சன்னதில் தாமிர குண்டம் எனும் தடாகம் இருக்கிறது.அம்மனுக்கு நல்ல அலங்காரம் செய்து இருந்தார்கள்.
கோவிலுக்கு வரும் வாசல் பக்கம் உள்ள கோவில்
கோவில் வாசல் பக்கம்- இருபக்கமும் கட்டிடங்களும் கடைகளும்
கோவில் அருகில் கடற்கரை இருப்பதால் கோவிலைச் சுற்றி உள்ள வீடுகளில் வெளிநாட்டவர் நிறைய பேர் இருக்கிறார்களாம். கடைவீதிகளில் அவர்களைப் பார்க்க முடிந்தது.
ஆதிவாசிகள் போல் உடை அணிந்தவர்கள் பவளம், முத்துக்களால் செய்த மணிமாலைகளை விற்றுக்கொண்டு இருந்தார்கள். பிள்ளையார்கோவில் வாசலில் படத்தில் இருப்பார்கள் அந்தப் பெண்கள்
இசை வாத்திய கடைகள். வெளி நாட்டவர் நிறைய பேர் வாங்கி கொண்டு இருந்தார்கள்.
இரவு நேரம் ஆகி விட்டதால் கடற்கரை செல்லவில்லை.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
=========================================================================
படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை...தரிசித்தோம்...வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோவில் தரிசனமும் படங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குலிங்கம் படங்களையெல்லாம் போட்டிருக்கிறீர்கள். மிக நல்ல தரிசனம் கிடைத்தது என்பதறிந்து மகிழ்ச்சி.
கடைகளில் ஏதேனும் வாங்கினீர்களா?
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குநன்றாக தரிசனம் கிடைத்தது. எங்கள் குழுவில் உள்ளவர்கள் எல்லோரும் மகிழ்ந்தோம்.
லிங்கம் படம் தான் கோவில் கடையில் வாங்கினேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி .
நல்ல தரிசனம் செய்து வைத்தீர்கள். நாங்க திருக்கோகர்ணம், முருடேஷ்வர் இரண்டும் போகவில்லை. ஷிமோகா எனப்படும் சிவமோகா கூடப்போக எண்ணி முடியலை. நேரம் இல்லை. ரயிலில் முன் பதிவு செய்திருந்ததால் உடுப்பிக்கு மட்டும் இரண்டாம் தடவை போயிட்டு மங்களூர் திரும்பிட்டோம். இங்கே புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் கோயிலுக்குப் போயிருக்கோம்! அரைக்காசு அம்மனைப் பார்த்திருக்கோம். அங்கேயும் அரண்மனைக்குள் உள்ள புவனேஸ்வரி பீடம் பார்க்கப் போக முடியவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//நாங்க திருக்கோகர்ணம், முருடேஷ்வர் இரண்டும் போகவில்லை. //
வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள் இரண்டு கோவில்களும் கடற்கரையும் நன்றாக இருக்கும்.
//புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் கோயிலுக்குப் போயிருக்கோம்! அரைக்காசு அம்மனைப் பார்த்திருக்கோம். அங்கேயும் அரண்மனைக்குள் உள்ள புவனேஸ்வரி பீடம் பார்க்கப் போக முடியவில்லை.//
நாங்கள் திருக்கோர்ணம் கோயிலும் , புவனேஸ்வரி பீடமும் மூன்று முறைகளுக்கு மேல் பார்த்து இருக்கிறோம் உறவினர் இருப்பதால் வாய்ப்பு கிடைத்தது.
படங்கள் எல்லாமும் அருமையாக எடுத்திருக்கீங்க. பொதுவாகக் கர்நாடகக் கோயில்களிலேயே உள்ளே படங்கள் எடுக்க முடியாது. அதே போல் திருவனந்தபுரத்திலும், திருவட்டாறிலும் படங்கள் எடுக்க முடியலை. விபரங்கள் எல்லாம் நன்றாக விளக்கிச் சொல்லி இருப்பதற்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்களை பாராட்டியதற்கு நன்றி. சில கோவில்களில் படங்கள் எடுக்க அனுமதி இல்லை. வெளிபக்கம் எடுக்கலாம் உட் பகுதியில் எடுக்க தடை.
நீக்குதிருவனந்தபுரத்தில் வெளியே கோபுரத்தை எடுத்துக் கொள்ளலாம் வேறு எங்கும் எடுக்க அனுமதி இல்லை.
உள்ளே ஆலயத்தைப்பற்றிய குறிப்புகள் கொஞ்சமே கொடுத்து இருக்கிறேன். பல வருடங்கள் ஆகி விட்டது. அதனால் நினைவில் உள்ளதை மட்டும் சொல்லி இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கீசா மேடம்... கேரள கோவில்களில் பெரும்பாலும் படங்கள் எடுக்க விடமாட்டாங்க. கோவில் வெளிப்புறத்தில் ஓகே, ஆனால் கோவிலுக்குள் நோ என்று ஸ்டிரிக்டாகச் சொல்லிடுவாங்க. ஆனால் எனக்கு மிக அதிசயமாக திருவட்டார் கோவிலில் உள் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதை ஒரு சமயம் பகிர்கிறேன். திருநாவாய் என்ற கோவில்ல, உள்ள (அதாவது கோவில் சுற்றுப்புறத்தில்) படம் எடுத்ததற்கே, டிலீட் பண்ணுங்க என்று சொன்னாங்க)
நீக்குபடங்களும் பகிர்வும் அருமை
பதிலளிநீக்குபுதுக்கோட்டைக்க அருகிலும் ஒரு திருக்கோகர்ணம் உள்ளது
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்கு//புதுக்கோட்டைக்க அருகிலும் ஒரு திருக்கோகர்ணம் உள்ளது//
ஆமாம், நாங்கள் பார்த்து இருக்கிறோம் சகோ.
உங்கள் கருத்துக்கு நன்றி.
புதுக்கோட்டையில் ஒரு திருக்கோகர்ணம் உண்டு. தேவாரப்பாடல்கள் இக்கோவிலைப் பற்றியனவாக இருக்கலாம். சம்பந்தரோ, நாவுக்கரசரோ கர்நாடகம் செல்ல வாய்ப்பில்லை.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
நீக்குதுளவ நாட்டில் உள்ள தலம் என்று தேவாரம் புத்தகத்தில் உள்ளது.
திருத்தாண்டகம் (6-ம் திருமுறை)
சம்பந்தர் தேவாரம் (மூன்றாம் திருமுறை)
புதுக்கோட்டையில் உள்ள கோவிலுக்கும் போய் இருக்கிறோம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
துளுவ நாட்டுத் தலம் என்றே குறிப்பிட்டு இருக்கின்றனர்...
நீக்குஞானசம்பந்தப் பெருமான் திருக்காளத்தியில் இருந்தே திருக்கோகர்ணம் மற்றும் வடநாட்டுத் தலங்களின் தரிசனம் பெற்று திருப்பதிகம் அருளியதாகவும்
அப்பர் பெருமான் காசிக்குச் சென்று அங்கிருந்து இமாலயத்தில் திருக்கயிலாயங் கிரி சென்றதாகவும் சிவனடியார்களின் நம்பிக்கை..
நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைப்போம்..
ஓம் நம சிவாய...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//ஞானசம்பந்தப் பெருமான் திருக்காளத்தியில் இருந்தே திருக்கோகர்ணம் மற்றும் வடநாட்டுத் தலங்களின் தரிசனம் பெற்று திருப்பதிகம் அருளியதாகவும்
அப்பர் பெருமான் காசிக்குச் சென்று அங்கிருந்து இமாலயத்தில் திருக்கயிலாயங் கிரி சென்றதாகவும் சிவனடியார்களின் நம்பிக்கை..//
உங்கள் விரிவான தகவலுக்கு நன்றி.
ஓம் நம சிவாய
// மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே..//
நீக்குஎன்று திருப்பதிகம் முழுதும் திருக்கோகரணத்தை அப்பர் ஸ்வாமிகள் (கடற்கரைத் தலம் என்பதை) அடையாளப் படுத்துகின்றார்...
அப்பர் ஸ்வாமிகள் கர்நாடகம் சென்று திருக்கோகர்ணத்தை தரிசனம் செய்திருப்பது இதன் மூலம் உறுதியாகின்றது...
இதனை நேற்றே குறிப்பிட இருந்தேன்..
இணைய வேகம் இல்லாததால் இயலவில்லை...
// மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே..//
நீக்குஎன்று திருப்பதிகம் முழுதும் திருக்கோகரணத்தை அப்பர் ஸ்வாமிகள் (கடற்கரைத் தலம் என்பதை) அடையாளப் படுத்துகின்றார்...
ஆமாம் சகோ
6 திருமுறையில் உள்ள திருத்தாண்டகம் 10 பாடல்களிலும் "மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே"
என்று தான் முடித்து இருப்பார்.
சம்பந்தர் பாடிய 9 வது பாடலில் "எல்லையில் வரைந்த கடல் வட்டமு"
என்று சொல்கிறார்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.
பாடல் பெற்ற இந்த திருகோகர்ணம் பார்க்கத்தான் இந்த கர்நாடகா பயணமே !
நீக்குஇறை அருளால் அது கை கூடியது.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. திருக்கோகர்ணம் கோவில் படங்களுடன் விபரமாக எழுதி தந்திருந்த விதம் கோவிலை உங்களுடன் நானும் சேர்ந்து தரிசித்த உணர்வை தந்தது.
படங்கள் அனைத்தும் அழகாக எடுத்துள்ளீர்கள். கோவிலைப்பற்றி, அங்குள்ள தெய்வங்களின் பெயர்கள், மற்றும் பிற விபரங்கள் பற்றி தொகுத்த விபரங்களும் அருமை.
அழகான ஒவ்வொரு படத்திற்கும் அருமையாக விளக்கம் தந்து கூறியிருப்பது சிறப்பாக உள்ளது. கோபுர தரிசனம் செய்து கொண்டேன். காகம் வடிவில் அங்கு தரிசித்துக் கொண்டிருந்த ஸ்ரீ விநாயகப் பெருமானையும் தரிசித்துக் கொண்டேன்.
ஸ்தல புராணம் விபரமாக தெரிந்து கொண்டேன். நாங்கள் முருடேஷ்வர் கோவிலுக்குச் சென்று வந்தோம். இந்தக் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த குறையே தெரியாத வண்ணம் தங்கள் பதிவை படித்ததும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
//காகம் வடிவில் அங்கு தரிசித்துக் கொண்டிருந்த ஸ்ரீ விநாயகப் பெருமானையும் தரிசித்துக் கொண்டேன்.//
அகத்தியர் கமண்டலத்திலிருந்து காவிரியை விடுவித்த ஸ்ரீ விநாயகப் பெருமானைப் பார்த்து தரிசனம் செய்து விட்டீர்களா! மகிழ்ச்சி.
//முருடேஷ்வர் கோவிலுக்குச் சென்று வந்தோம். //
முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.
பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது போய் தரிசனம் செய்து வாருங்கள்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
அன்பு கோமதி மா.
பதிலளிநீக்குஅற்புத தரிசனம் கிடைத்தது. நாங்களும்
ஷிமோகா, ஜோக் நீர்வீழ்ச்சி
என்று பார்த்து வந்தோம்.
முருடேஷ்வர் கோவிலும் சென்றோம்..
கோகர்ணம் செல்ல வில்லை.
நீங்கள் அளித்திருக்கும் படங்களும் கூடவே வரும் விளக்கங்களும் அருமை.
அதுவும் ராவண வரலாறு தத்ரூபமாக இருக்கிறது.
சிவலிங்க தரிசனம் பாப விமோசனம்.
உங்கள் வழியாக இன்று எங்களுக்கு அருளி இருக்கிறார்.
கடைகண்ணிகளைப் பார்க்கும் போது
இந்திய நினைவுகளைக் கொண்டு வருகின்றன.
நன்றி மா கோமதி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//ஷிமோகா, ஜோக் நீர்வீழ்ச்சி
என்று பார்த்து வந்தோம்.//
ஓ அப்படியா , நாங்கள் அங்கு செல்லவில்லை.
//அதுவும் ராவண வரலாறு தத்ரூபமாக இருக்கிறது.//
முருடேஷ்வர் கோவிலில் இதை மிக அழகாய் அமைத்து இருக்கிறார்கள். டிக்கட் உண்டு பார்க்க. அனைத்தும் மிக அருமையாக இருக்கும்.
கோவிலுக்கு வெளிப்புறம் நிறைய கடைகள் இருக்கிறது அக்கா .மணிமாலை விற்பவர்கள் வேறு நம்மை முற்றுகை இடுவார்கள். எங்களுடன் உடன் வந்தவர்கள் கடைகளில் நிறைய வாங்கினார்கள். கோகர்ணம் வெளி நாட்டவர்களுக்கு கோவா போலவாம் . நிறைய பேர் இருக்கிறார்களாம் வெளிநாட்டினர் இங்கு.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
உங்களுடன் நாங்களும் தரிசனம் செய்தோம்...
பதிலளிநீக்குஅரிய செய்திகள் மற்றும் படங்களுடன் விவரமான பதிவு...
ஈசன் அருளால் அனைத்தும் நலமாகட்டும்...
நலம் வாழ்க...
தரிசனம் செய்து கொண்டது மகிழ்ச்சி.
நீக்குநீங்கள் சொல்வது போல் ஈசன் அருளால் அனைத்தும் நலமாட்டும்.
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்கோகர்ணம் குடைவரைக் கோயில்..
பதிலளிநீக்குதரிசனம் செய்திருக்கிறேன்...
ஸ்ரீ பிரகதாம்பிகை அரைக்காசு அம்மன் எனப் புகழ் பெற்றவள்..
புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் படங்களும் இருக்கிறது ஒரு நாள் பதிவு போட வேண்டும். நீங்களும் தரிசனம் செய்து இருப்பது மகிழ்ச்சி.
நீக்குஸ்ரீ பிரகதாம்பிகை அரைக்காசு அம்மனை வேண்டிக் கொள்வேன் கை மறந்தால் போல் வைக்கும் பொருளை அம்மா தேடி கொடுத்து விடுவார்கள். எப்போதும் வழிபட ஆலயம் ஆன்மீக பத்திரிக்கையில் படம் கொடுத்து இருக்கிறார்கள். எங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கிறார்.
கையிலைக்கு எங்களுடன் வந்த ஒரு அம்மா கம்மல் கீழே விழுந்து விட்டது அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக் கொள்ளுங்கள் கிடைத்து விடும் என்றேன். நானும் அவர்களும் வேண்டிக் கொண்டு தேடினோம் கிடைத்து விட்டது. அம்மன் சக்தி வாய்ந்தவர்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம்..இங்கு சென்றது இல்ல மா ..குறித்து வைத்துக் கொள்கிறேன் ..அம்மன் அருளால் அங்கு செல்லும் பாக்கியம் கிடைக்க வேண்டும் ..
நீக்குவணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்கு//அம்மன் அருளால் அங்கு செல்லும் பாக்கியம் கிடைக்க வேண்டும் ..//
அம்மன் அருளால் அங்கு செல்லும் பாக்கியம் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான படங்களும், விளக்கிய கதைகளும் அருமை.
பதிலளிநீக்குதரிசனத்துக்கு நன்றி சகோ.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள், தகவல்கள் என அனைத்துமே சிறப்பு. கர்நாடகம் பக்கம் அதிகம் பயணித்ததில்லை. சிறு வயதில் அங்கே சில இடங்களுக்குச் சென்று வந்ததுண்டு. பிறகு பெங்களூரு சில முறை பயணித்திருக்கிறேன். கர்நாடகா பக்கம் செல்ல வேண்டும். பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்கிறது என!
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குவாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள்.
நீங்கள் கர்நாடகா பயணம் செய்தால் அருமையான பயணக் கட்டுரை கிடைக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பகிர்வு நன்று. முருடேஷ்வர் கோயிலில் திருக்கோகர்ணம் கோயில் தல புராணத்தை விவரிக்கும் சிற்பங்களை சிரத்தையுடன் படமாக்கியுள்ளீர்கள். கர்நாடகாவின் மங்களூர் டு உடுப்பி தலங்களுக்கு போக நினைத்து விட்டுப் போயிற்று. உங்கள் பதிவுகளில் தொடர்ந்து தரிசிக்கக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//தல புராணத்தை விவரிக்கும் சிற்பங்களை சிரத்தையுடன் படமாக்கியுள்ளீர்கள்.//
நிறைய காட்சிகள் இருந்தன, நான் கொஞ்சம் தான் படம் எடுத்தேன்.
இறையருளால் அவை இந்த பதிவுக்கு பயன்பட்டது.
//மங்களூர் டு உடுப்பி தலங்களுக்கு போக நினைத்து விட்டுப் போயிற்று.//
மீண்டும் வாய்ப்பு கிடைக்கட்டும் இறையருளால்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
காட்சியாக அமைந்துள்ளதை வியந்தேன்...
பதிலளிநீக்குதிருக்கோகர்ணம் கோவில் படங்கள் அனைத்தும் அருமை...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஆமாம், நாங்களும் வியந்து தான் பார்த்தோம் காட்சிகளை .
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோகர்ணா ...மிக அழகிய இடம்
பதிலளிநீக்குஅதிலும் மூலவரை தொட்டு தரிசனம் என்பதால் எனக்கு மிகவும் பரவசமாக இருந்தது அம்மா ..மிக ரசித்து தரிசனம் செய்தோம் ..
அப்படியே கடற்கரையில் நடந்தால் முதலில் ராமர் கோவிலும் ...கொஞ்சம் மலை ஏற லக்ஷ்மனர் கோவிலும் ...இன்னும் மலை ஏற பரதர் கோவிலும் உள்ளன மா ..இன்னும் ஏறி இறங்கினால் அடுத்த கடற்கரை வந்துவிடும் ..ஆனால் இதற்கு ஒரு முழுநாள் ஆகி விடும் ..
பரவசமான பயணங்கள் ...
தாங்கள் பதிவு செய்துள்ளது நாங்கள் தரிசனம் செய்ததை மீண்டும் காண முடிந்தது. நன்றி
பதிலளிநீக்கு