சனி, 14 நவம்பர், 2020

தீபாவளி வாழ்த்துக்கள்.

 அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

வாழ்க நலமுடன்.






மதினி வீட்டுக் காவிரி அம்மன்

எங்கள்  அண்ணி  ஜப்பசி மாதம் முதல் தேதியில் காவிரி அம்மனை வழிபட ஆரம்பிப்பார்கள்.மாதக் கடைசியில் எல்லோரையும் அழைத்து  மஞ்சள் சரடு , மஞ்சள் குங்குமம் கொடுப்பார்கள்.  அன்று அம்மனுக்குக் கட்டு சாதம் மற்றும் பலவகை பிரசாதங்கள் , காப்பரிசி, பானகம் எல்லாம் வைத்து வழிபாடு நடக்கும். புதன் கிழமை அழைத்து இருந்தார்கள் . தீபாவளி வருவதால் முன்பே அழைத்து விட்டார்கள்.

சனிக்கிழமை தீபாவளி, அடுத்து நாளை காலை அமாவாசைவிரத பூஜை செய்ய வேண்டும். அப்புறம் சஷ்டி வருகிறது.அதனால் காவேரி அம்மன் பூஜைக்கு முன்பே அழைத்து விட்டார்கள். 

அப்போது- போனபோது அண்ணி, தங்கைகள், தம்பி எல்லோரும் தீபாவளிப் பலகாரம் கொடுத்துவிட்டார்கள். அதனால் நான்  கொஞ்சமாக வெள்ளிக்கிழமை சோமாசி மட்டும் செய்தேன்.  
மகனது ஊரில் இரண்டு முறை தீபாவளி கொண்டாடியபோது மருமகள் மாமாவுக்கு(என் கணவர்) பிடிக்கும் என்று செய்து கொடுத்தாள். அதை இன்று அவளுடன் பேசும் போது பகிர்ந்து கொண்டேன்.

இன்று உருளைக்கிழங்கு போண்டா, சுசியம் மட்டும்.


 தீபாவளிக்கு  என்மகன் தனது அப்பாவழி, உறவினர்களுக்கும், அம்மா வழி   உடன் பிறந்தவர்களுக்கும்   தீபாவளிப் பரிசு (மேலே படத்தில் காண்க)அனுப்பினான். அதில் இன்று பிரசாதங்கள் வைத்து சாமி கும்பிட்டுவிட்டேன்.

காலையில் இட்லி தேங்காய், மாங்காய் சட்னியுடன் சிற்றுண்டி,
 மதியத்தில் குலதெய்வக்கோயில் பிரசாதம்.
 ( எங்களுக்குக் குலதெய்வம் சாஸ்தா)  அதனால் அருகில் இருக்கும் அய்யனை குலதெய்வமாக வழிபாடு செய்கிறேன்.சாஸ்தா வழங்கிய பிரசாதம்  புளியோதரை, சர்க்கரைப் பொங்கல்.

சில நினைவுகள் என்று  2018ல் 
 எழுதிய பதிவில்   உள்ளது- கீழே வருவது:
 

//தீபாவளிக்கு அத்தனை பலகாரம் இருந்தாலும். எல்லோருக்கும் சுடச்சுட  இட்லியும் சட்னியும் தான் மிகவும் பிடிக்கும். அதுவும் அத்தையின் கையால் செய்த பஞ்சு போன்ற இட்லி.  அது ருசியாக இருக்கக் காரணம் அவர்களுக்குப் பிடிக்குமே என்ற நினைவுடன் செய்வது. அவர்களின் இட்லிக்கு மகன்கள், மருமகள்கள், பேத்திகள், பேரன்கள், கொள்ளுப் பேரன் பேத்திகளும் பிரியர்கள்.//

இந்த  தீபாவளியைக் குடும்பத்துடன் இணையவழியின் உதவியோடு  இறைவன் அருளால் கொண்டாடிவிட்டோம். பக்கத்தில் இருக்கும் அய்யன் கோவிலுக்கும் போய் நன்றி சொல்லிவிட்டு வந்தோம்.


இறைவன் அனைவருக்கும் நலமான வாழ்வு அளிக்க வேண்டி வந்தேன்.

வாழ்க வளமுடன்


 =========================================================================


46 கருத்துகள்:

  1. தீபங்கள் தீபங்கள் ஒளிரட்டும்...
    தீமைகள் திசைமாறி விலகட்டும்..
    மங்கலம் மனைதனில் பொலியட்டும்..
    மனதினில் ஞானமே நிறையட்டும்..

    அன்பின் இனிய
    தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      கவிதை வாழ்த்து அருமை.

      அன்பான வாழ்த்துக்கு நன்றி.
      உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. சிறப்பான கவிதை துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    3. அழகான வாழ்த்துக் கவிதை.

      நீக்கு
    4. சகோ வரகவி, அவர்கள் எழுதுவதற்கு கேட்க வேண்டுமா!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. அன்பு வாழ்த்துகள் கோமதி. அருமையான பதிவு.
    அடுத்த தீபாவளிக்காவது நாம் எல்லோரும் பார்த்துக் கொள்ள முடியும்
    என்று நினைக்கிறேன்.
    குடும்பம் நோயின்றீ இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //அடுத்த தீபாவளிக்காவது நாம் எல்லோரும் பார்த்துக் கொள்ள முடியும்
      என்று நினைக்கிறேன்.//

      அப்படியே ஆகட்டும் அக்கா. இறைவன் அருள்புரிய வேண்டும்.

      //குடும்பம் நோயின்றீ இருக்க வேண்டும்.//

      ஆமாம் அக்கா, அதுதான் வேண்டும்.

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  4. பலகாரம் படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு கோமதிக்கா. 4,5 நாட்களாக வர இயலவில்லை.

    உங்கள் மகன் அனுப்பிய பரிசுப் பொருள் மிகவும் அழகாக இருக்கிறது. இட்லி மாங்காய் தேங்காய் சட்னி ஆஹா! இட்லி பார்க்கவே சுவையா இருக்கு...சுகியன், சோமாசி எல்லாமே மிகவும் பிடிக்கும் ஆனா ஸ்வீட்டு!! ஹா ஹா ஹா

    நலம் விளையட்டும் கோமதிக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      சில நேரங்களில் இப்படித்தான் வலை பக்கம் வரமுடியாமல் போய் விடுகிறது. நேறம் கிடைக்கும் போது வருவோம்.

      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  5. மூன்றாவது படத்தில் பேனா போலவும், புல்லாங்குழல் போலவும் காட்சி அளிப்பது என்ன என்று அறிய ஆவல்.  படங்கள் அருமை.  தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      கோலாட்ட குச்சி ஸ்ரீராம். காவேரி அம்மன் கும்மி என்று பாடுவார்கள் கும்மி கொட்டி
      //வாருங்கம்மா காவேரி
      வந்தேன் அம்மா காவேரி
      கண்ணால் என்னைப் பாரம்மா
      மனதில் கவலையைத் தீரம்மா//

      இன்னும் நிறைய வரிகள் இருக்கிறது. இந்த பாட்டை பாடி அண்ணன் பேத்திகள் கோலாட்டம் செய்தார்கள்.

      தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. கோலாட்டக் குச்சியை ஸ்ரீராமுக்கு அடையாளம் தெரியலையே! வடக்கே எல்லாம் இன்னமும் நீளம் அதிகம் இருக்கும். என்னுடையதையும் கொலுவில் வைப்பேன்.

      நீக்கு
    3. நானும் கொலுவில் என் கோலாட்டக் குச்சியை வைப்பேன்.
      இப்போது அது என் பேத்திக்கு கொடுத்து விட்டேன். வேறு வாங்க வேண்டும்.
      வடக்கே பெரிய குச்சி தான் அந்த ஆட்டத்திற்கு தாண்டியா நடனம் என்று பெயர் இல்லையா?

      நீக்கு
    4. ஆமாம், டாண்டியா என்பார்கள். ஹிந்தித் திரைப்படங்களில் அதிகம் இந்த நடனத்தைப் பார்க்கலாம்.

      நீக்கு
    5. தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட என்று தமிழ் பாட்டு உண்டு.
      ஹிந்தி திரைப்படங்கள் ராஜஸ்தான் ஓவியங்களில் நிறை இடம் பெறும்.

      நீக்கு
  6. எப்போதோ கடையில் சோமாசி வாங்கிச் சாப்பிட்டது.  வீட்டில் செய்தால் எல்லாம் அளவாக நன்றாக இருக்கும்,  சில வீடுகளில் தீபாவளி காலை இட்லியுடன் பஜ்ஜி செய்வார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோமாசி சாருக்கு பிடித்த பலகாரம். நான் வேலை அதிகம், நிறைய செய்ய முடியாது தனியாக (எல்லோருக்கும் வைத்துக் கொடுப்பதற்கு ஏன்றால் நிறைய செய்யவேண்டும்)
      என்ற காரணத்தால்.

      இப்போது அவர்கள் இனிப்பு நிறைய சாப்பிட முடியாது. நம் வீட்டில் செயவதில் இனிப்பி குறைவாக போட்டு அவர்களுக்கு மட்டும் சோமாசி செய்து இருக்கிறேன்.

      எங்கள் வீட்டிலும் பஜ்ஜி பலவகை, இரண்டு வகை வடைகள், எல்லாம் இடலியுடன் உண்டு.

      ஒரு சுட்டி கொடுத்து இருக்கிறேன் பாருங்கள் நேறம் கிடைக்கும் போது அதில் வித விதமான பஜ்ஜிகள் படம் இருக்கும்.

      நீக்கு
    2. எங்க அப்பா வீட்டில் இட்லியோடு வெள்ளையப்பம். மதுரைச் சிறப்பு உணவு.

      நீக்கு
    3. எங்கள் வீட்டில் வெள்ளை அப்பம் கிடையாது, இனிப்பு அப்பம் உண்டு.
      செட்சி நாட்டு சிறப்பு வெள்ளை அப்பம். அவர்கள் வீட்டுக் கல்யாணத்தில் அது தவறாமல் இடம்பெறும்.

      நீக்கு
  7. சாஸ்தா பிரசாதம் அருமை.  அய்யனை படத்தில் கண்டு தரிசித்தேன்.  நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாருக்கு பிடித்த புளியோதரை கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது.
      கோவில் பிரசாதம் என்பதால் மேலும் மகிழ்ச்சி.
      அய்யன் எல்லோருக்கும் நலமான வாழ்வு அருள வேண்டும்.

      நீக்கு
  8. //பஞ்சு போன்ற இட்லி. //

    இதுதான் முக்கியம்.  இதுபோன்று வருவது ரொம்பக் கஷ்டம்!  அப்படி இருந்தால் எத்தனை இட்லி வேண்டுமானாலும் உள்ளே செல்லும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாமியார் அவர்கள் சொல்வது இடலி பஞ்சு போல் இருக்கு கணக்கு பார்க்காமல் சாப்பிடு என்று தான் சாரிடம் சொல்வார்கள். இவர்கள் பேரைச்சொல்லி அவனுக்கு சூடாய் இருந்தால்தான் பிடிக்கும். "உனக்கு சூடாய் வருது வெயிட் பண்ணு எழுந்து விடாதே" என்பார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. இனிய தீபாவளி வாழ்த்துகள். அருமையாகக் கொண்டாடி இருக்கிறீர்கள் தீபாவளியை. கோயில் படங்களும் அழகு. பக்ஷணங்கள் எல்லாம் சுவைக்கத் தூண்டுகின்றன. முந்திரிக் கொத்து என நினைத்தேன். சுகியமா அது? இரண்டாம் படத்தில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்
      இறைவன் அருளால் கொண்டாடி விட்டோம்.
      கோவிலில் அனைத்து சுவாமிகளும் புத்தாடையில் இருந்தது பார்க்க நிறைவு.

      முந்திரி கொத்து இல்லை தங்கை செய்து இருந்தாள் கொடுத்தாள். முந்திரி கொத்து சாப்பிட பல் நன்றாக இருக்க வேண்டும். சுகியம் தான். மூன்றாக வைத்து இருப்பதால் கொத்து போல் தெரிந்து இருக்கும். மேல் மாவில் மஞ்சள் தூள் போடுவார்கள் முந்திரி கொத்தில். அரிசி மாவு கொஞ்சம் அதிகமாய் இருக்கும்.

      நீக்கு
    2. //நீங்கள் கொஞ்சம் போல் எண்ணெய்ச் சட்டி வைத்துப் பண்ணி இருந்திருக்கலாம்//

      கீதா உங்களால் தான் இந்த முறை கொஞ்சம் போல் எண்ணெய்ச் சட்டி வைத்து சோமாசி செய்தேன்.
      உங்களுக்கு நன்றி.


      போன வருடம் எல்லோரும் கொடுத்து விட்டார்கள் போதும் என்று தீபாவளி காலை வடை, சுகியம் மட்டும் செய்தேன். வேறு பலகாரம் செய்யவில்லை.

      நீக்கு
  10. உங்கள் மகன் அனுப்பி இருக்கும் இதே பரிசு எனக்கும் சிநேகிதி அனுப்பி வைத்திருந்தார். இதன் பயன்பாடு தெரியாமல் பிரித்துப் பார்த்ததோடு சரி. ஒரு நாள் நானும் ஸ்வாமி முன் வைத்து வணங்க வேண்டும். பேத்திக்குக் கொடுக்க நினைத்திருக்கோம். அதிலாவது அவள் சாப்பிட ஆரம்பிப்பாளா என்னும் எண்ணம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் தீபாவளிக்கு என்று அனுப்பியதால் அதை சுவாமி முன் வைத்து வணங்கினேன்.
      துர்காவிற்கு கொடுங்கள். ஸ்வாமி முன் வைத்து வணங்கி விட்டு ஆசீர்வாதம் செய்து கொடுங்கள் பேத்தியிடம்.சாப்பிட ஆரம்பித்து விடுவாள் குழந்தை,பேத்திக்கு வாழ்த்துக்களும், அன்பும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. அழகான புகைப்படங்கள் சொல்லிய விசயங்கள் ரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கும் சாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பிரசாதங்கள் அருமை.

    கோவிலுக்குச் சென்று வழிபட்டது சிறப்பு.

    என்னதான் பலகாரங்கள் என்றாலும் இட்லி (ரொம்ப சூடான, மென்மையான) சட்னி போல வராது. அங்க மாங்காய் வர ஆரம்பித்துவிட்டதா? மாங்காய் சட்னி செய்திருக்கிறீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      பிரசாதங்கள் காலையிலிருந்து வேலை பார்த்த களைப்புக்கு மதியம் சமைக்க வேண்டாம் என்று இறைவன் கொடுத்தது போல் உணர்ந்தேன். நன்றாக செய்து இருந்தார்கள்.

      எப்போதும் கோவையில் அத்தை , மாமாவுடன் கொண்டாடும் தீபாவளிக்கு வீட்டுக்கு அருகில் உள்ள "அருள் விநாயகர்" கோவிலுக்கு குடும்பத்தினர் அனைவரும் போய் வந்த பின் தான் சாப்பாடு. மாலை போட்டோ எடுப்பது அப்புறம் (முன்பு ஸ்டியோ போய் குடும்ப படம் எடுப்போம் ஒவ்வொரு தீபாவளிக்கும் அது மாமாவின் விருப்பம்) வேறு கோயில் வழிபாடுகள் நடக்கும். அதே பழக்கம் இப்போதும் கடைபிடிக்கிறோம் அனைவரும்.

      இன்று மாமா அவர்களின் 111 வது பிறந்த நாள். நேற்று அத்தை அவர்களின் பிறந்த நாள் 98.
      போய் வந்த பின் இலையில் பலகாரங்கள், அதன் பின் சூடாய் இட்லி.

      மாங்காய் வர ஆரம்பித்து விட்டது, போன மாதம் முதல் வருகிறது. மாங்காய் கிடைக்கும் சமயம் புளி அவ்வளவாக சேர்க்காமல் மாங்காய் சேர்த்துக் கொள்வேன், சட்னி, மற்றும் சாம்பாரில். பட்டாணி சுண்டல் செய்தால் மாங்காய் துண்டங்கள் உண்டு.

      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. இங்கே மாங்காய் எப்போதும் கிடைக்கும். நானும் சுண்டலுக்கு மாங்காய் சேர்ப்பேன். சில சமயங்களில் அபூர்வமாக அவியலில் மாங்காய் சேர்ப்பதும் உண்டு. அப்போது தயிரோ, புளி ஜலமோ சேர்க்க மாட்டேன்.

      நீக்கு
    3. கூட்டாம் சோறு, அவியலில் மாங்காய் கண்டிப்பாய் உண்டு. கொஞ்சமாய் தயிர் சேர்ப்பேன் மங்காய் போட்டால். தயிர் சேர்த்தால் அவியல் பார்க்க அழகாய் இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி.

      நீக்கு
    4. இங்க மாங்காய் கிலோ 120 ரூ என்று கிளிமூக்கு மாங்காய் மட்டும் அவ்வப்போது கிடைக்கிறது. வரும் வாரம் வாங்கி மாங்காய் சாதம் செய்யச் சொல்லணும்.

      அவியலில் எனக்கு மாங்காய் போட ரொம்பவும் பிடிக்கும். கொஞ்சம் புளிப்புச் சுவையுடன் வாசனையாக இருக்கும்.

      எங்க ஊர்ல (அம்மா வீட்டுல) அவியலுக்கு புளி ஜலமும் சேர்ப்பார்கள்.

      நீக்கு
    5. இங்கும் மாங்காய் அந்த விலைதான் விற்கிறது. கிளிமூக்கு மாங்காய் வரவுதான் இங்கும்.

      நானும் ஒரு நாள் மாங்காய் சாதம் செய்தேன். நிறைய அவியல் செய்பவர்கள் கொஞ்சம் புளி தண்ணீர் விடுவார்கள். கொஞ்சமாய் செய்கிறோம். இரண்டு மூன்று மாங்காய் துண்டு போட்டாலே போதும் புளிப்பு இருக்கும்.

      பச்சை மாங்காய் ஊறுகாய் காரம் போட்டு தாளித்து கொட்டி செய்வது பிடிக்கும் கிளி மூக்கு மாங்காயில்.

      பள்ளி பருவத்தில் சிவப்பும் பச்சையுமாக இருக்கும் கிளி மூக்கு மாங்காய் 10 காசுக்கு கிடைக்கும் அப்படியே அழகாய் துண்டுகள் போட்டு மிளகாய் பொடி தூவி தருவார்கள் சாப்பிடுவோம் கண் சிமிட்டாமல்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
    6. கோமதி அரசு மேடம்... உங்க மறுமொழில எப்போதுமே வாழ்க வளமுடன் இருக்குமே. அதை விட்டுடாதீங்க. நன்றி

      நீக்கு
    7. நெல்லைத் தமிழன் வாழ்க வளமுடன்.
      மறு மொழி முதலில் கொடுக்கும் போது வணக்கம் சொல்லி வாழ்க வளமுடன் சொல்லிதான் பதில் தருவேன்.
      அப்புறம் மீண்டும் வரும் போது கொடுப்பது இல்லை, இனி அதற்கும் கொடுத்து விடுகிறேன்.
      நன்றி

      நீக்கு
  14. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். படங்களும் பகிர்வும் அருமை. எத்தனை தொலைவில் இருந்தாலும் இணையம் உறவுகளோடு இணைந்திருக்கும் உணர்வைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான், எத்தனை தொலைவில் இருந்தாலும் உறவுகளை இணைக்கும் பாலமாக இருக்கிறது. தினம் பார்த்து பேசுவதால் மனது சமாதானம் ஆகிறது.

      எங்கள் வீட்டு தீபாவளி பூஜைக்கு அவர்களும், அவர்கள் வீட்டுத்தீபாவளிக்கு நாங்களும் கலந்து கொண்டோம். தனிமையில் தீபாவளி கொண்டாடும் உணர்வை போக்கியது உண்மை.

      உங்கள் கருத்துக்கும் நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு