ஞாயிறு, 31 மே, 2020

ஜன்னல் வழியே'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,.

குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நாள் இருந்தது. இன்று பழகி விட்டது.

நம் வீட்டுக்கு வரும்  பழைய வெள்ளைப் புறாதான் .
எதிர் வீட்டு பால்கனி கம்பியில் அமர்ந்து இருந்தபோது பார்த்து வேகமாய் எடுத்தேன், புறாவும் பறக்கத் தயாராக இருக்கிறது. துளசிச் செடி பின்னணி அழகுதானே!

துளசிச் செடி, புறாவிற்கு மயில் தோகை கொடுத்தது போல் இருக்கா?

எங்கள் பால்கனிக் கொடிக்   கம்பியில் அமர்ந்த போது
தட்டு காலி - ஏதாவது போடமாட்டாளா என்ற பார்வை 

புறா படங்களுடன் ஏதாவது செய்தி போடலாம் என்று சிலவற்றைப் படித்தேன். அவற்றில்  படித்த செய்தி ஒன்றும், படித்த கதைப்பகிர்வும் கொஞ்சம். 

சிங்கப்பூரில் பாடும் புறாக்கள் பற்றிப்  படித்த செய்தி;-

//பாட்டு பாடும் பறவை என்றால் அது குயில் தான், ஆனால் புறாவும் பாட்டு பாடும் என்றால் நம்ப முடியுமா?. அது மட்டும் இல்லாமல் சிங்கப்பூரில் புறாக்களுக்கான பாட்டு போட்டி நடத்தியுள்ளார்கள்.

இந்த போட்டியில் 150 பேர் தங்கள் வளர்த்த புறாக்களை கொண்டு வந்தனர். இது பார்வையாளர்களுக்கு செவி விருந்தாக அமைந்தது.

ஒரு மைதானத்தில் உயரமான கம்பத்தின் மீது வைக்கப்பட்ட கூண்டில் கருப்பு மற்றும்  வெள்ளை நிறம் கொண்ட மெர்பொக் புறாக்கள் அடைக்கப்பட்டன.

இதில் இனிமையான சத்தம் எழுப்பிய புறாவின் உரிமையாளருக்கு கோப்பை வழங்கப்பட்டது. 4 மணி நேரம் நடந்த இந்த போட்டியில், பறவைகளின் சத்தம் மனிதர்கள் பாடுவது போல மிகவும் இனிமையாக இருந்ததாம்.//

பாடல் காணொளி இணைத்து இருக்கலாம் அவர்கள் நாமும் புறாக்கள் பாட்டை கேட்டு இருக்கலாம்.

புறா பித்து -எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதை. விகடனில் வந்த கதை , படித்தேன். விகடனில் வந்ததால் சிலர் படித்து இருக்கலாம்.

 கதையில்  ஓய்வு பெற முன்று வருடங்களே இருக்கும்   குமாஸ்தா கோவர்தன் . தன் வேலைகளுக்கு இடையே  அலுவலகக் கட்டிடத்தில் எதிர்புறம் உள்ள உணவு சேமிப்புக் கிடங்கின் மதில் மேல் இருக்கும் புறாக்களைப் பார்த்து அவற்றை எண்ணிப் பார்க்கிறார், புறாக்களை எண்ணுவதற்கு ஒரு காரணம் சொல்கிறார் கதாசிரியர்.

//கோவர்தனுக்கு, ஒவ்வொரு நாள் அலுவலகத்துக்கு வரும்போதும் விருப்பமே இல்லாத வேலையைச் செய்வதாகவே தோன்றும். டிபன்பாக்ஸை மேஜைக்குக் கீழே வைத்துவிட்டு மேஜை டிராயரை இழுக்கும்போது 30 வருடங்களை இழுப்பதுபோலவே தோன்றும். அலுவலகத்தில் மட்டுமல்ல, தன் மீதும் சிலந்திவலை படிந்து கொண்டேவருகிறது. அதைத் துடைத்துச் சுத்தம் செய்ய முடியாது. இனி, தான் ஒரு சிலந்திவலை படிந்த மனிதன் மட்டுமே என நினைத்துக்கொள்வார்.
இப்படிச் சொல்ல முடியாத மனவேதனையும் இறுக்கமும் சலிப்புமான ஒரு நாளில்தான் கோவர்தன் அந்தப் புறாக்களை
வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
ஐந்து நிமிடம் பார்த்தபிறகு அந்தப் புறாக்களின் வெண்மை மீது ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது.//

 

//உண்மையில் 30 வருடங்களுக்குமேல் அரசுப் பணிபுரிந்தவர்களுக்கு, அரசாங்கத்தின் குணங்கள் வந்துவிடுகின்றன; அவர்களை அறியாமலேயே முகமும் உடலும் செய்கைகளும் மாறிவிடுகின்றனஅரசு அலுவலக நாற்காலி மேஜைகளைப்போல அவர்களும் உருமாறிவிடுகிறார்கள். அதுவும் காலையில் அலுவலகம் வந்தது முதல் இரவு வரை வெறும் கூட்டல் கழித்தல் டோட்டல் என எண்ணிக்கைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவருக்கு, எதைப் பார்த்தாலும் எண்ணத்தானே தோன்றும்!

ஜன்னலில் நீண்டநேரம் சாய்ந்தபடி புறாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பின்னால் நின்றபடி ஹெட்கிளார்க்  சுந்தரம் சொன்னார், “முன்னாடியெல்லாம் நிறைய புறாக்கள் வரும் சார். இப்போ குறைஞ்சிருச்சு.’’
“நீங்க வாட்ச் பண்ணியிருக்கீங்களோ?’’ எனக் கேட்டார் கோவர்தன்.
“சும்மா பார்ப்பேன். இந்த ஆபீஸ்ல பொழுதுபோக வேற என்ன இருக்கு?’’ என்றபடியே தைலத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக்கொண்டார்.


 //இந்தப் புறாக்கள் ஏன் இடிபாடுகளுக்குள்ளேயே அதிகம் வாழுகின்றன? புறாக்கள் துறவிகளா, ஏன் அவை எதற்காகவும் உரத்துச் சண்டையிடுவதில்லை? மசூதிகளில், கோயில்களில், தேவாலயங்களில் ஏன் அதிகம் புறாக்கள் காணப்படுகின்றன? ஒருவேளை, புறாக்கள்தான் வானுலகின் தூதுவர்களா!  பார்க்கப் பார்க்க, புறா விசித்திரமான பறவையாகத் தோன்ற ஆரம்பித்தது.


புறாக்கள்  வரிசையாக உட்கார்ந்திருந்தன. எதற்கோ காத்திருப்பது போன்ற அதன் பாவனை. இவற்றில் யார் பாஸ், யார் ஸ்டெனோ, யார் ஹெட்கிளார்க்? புறாக்களுக்குள் ஒரு பேதமும் இல்லை. ஒரு புறா, சிறகைக் கோதிவிட்டபடியே இருந்தது. இன்னொரு புறா, பறக்க எத்தனிப்பதுபோல் தயாராக இருந்தது. இரண்டு புறாக்கள், ஒன்றோடு ஒன்று அலகை உரசிக்கொண்டிருந்தன. இந்த வரிசையைவிட்டு ஒரு புறா தனியே விலகி உட்கார்ந்திருந்தது. தன்னைப்போல அதற்கும் இந்த நகரம் சலிப்பாகியிருக்கும்போல!
கோவர்தன் புறாக்களையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென எல்லாப் புறாக்களும் கோட்டைச் சுவரைவிட்டு வானில் பறந்தன. எங்கே போகின்றன? இந்தப் புறாக்கள் எங்கே தங்கியிருக்கின்றன? எதற்காக இந்த அவசரம்?//

இந்தக் கதையில் கோவர்தனத்தின் சிறுவயது நினைவுகள், வேலைபார்த்த ஊர்கள் , திருமணத்திற்கு முன், பின் , வயதான பின் உடம்பு  சொல்லும் மொழிகள் எல்லாம் வருகின்றன.

 அவர், தன்னைப் போலவே புறாப்பித்துப் பிடித்த பெண்ணை ஷேர் ஆட்டோவில் போகும்போது பார்க்கிறார் .  புறாக்கள் எங்கு எங்கு இருக்கும். எவ்வளவு புறாக்கள்  இருக்கும் என்று எழுதி வைத்து இருந்த குறிப்பு நோட்டை அந்தப் பெண் கேட்டதும் கொடுத்துவிடுகிறார்.அப்புறம்  சில நினைவுகளுடன் அவர் இருப்பது என்று நிறைய விஷயம் இருக்கிறது.

ஓய்வு நேரத்தில் கதைபடிக்க விருப்பம் இருந்தால் படிக்கலாம்.

                           வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

59 கருத்துகள்:

 1. புறா படங்கள் அருமை.

  அது துளசிச் செடி மாதிரி தெரியவில்லையே... மரம் போல (பிருந்தாவனத்தில் பார்த்தது போல) அடர்த்தியாக இருக்கே.

  எங்கள் வீட்டு பால்கனி (அது ரொம்பப் பெரிசு) தாண்டி, ஹாலுக்குள்ள ஒரு புறா வந்து ஃபால்ஸ் சீலிங்கில் உட்கார முயற்சித்து, நான் வேகமாக வந்து அதுக்கு ஹாலின் கதவை நோக்கி அனுப்பினேன்... அது வெளியே போய்விட்டது. ஆனால் ஹாலுக்குள்ள நுழைந்தபோது அது படபடப்பாக இருந்தது என உணர முடிந்தது (என்னடா இது ஏதோ வீட்டுக்குள்ள வந்துவிட்டோமே என்று).

  புறாக்கள் பாடுகிறது... ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நெல்லைதமிழன், வாழ்க வளமுடன்
  அவர்கள் பால்கனிக்கு நல்ல வெயில் வரும் காலை அதனால் துளசி நன்றாக வளர்ந்து இருக்கிறது. விதைகள் எடுக்கபடாமல் இருக்கிறது,அதுவே ஒரு அழகு. முன்பு அந்த இடத்தில் வெள்ளை ரோஜா வைத்து இருந்தார்கள் அது என்னாச்சௌ என்று தெரியவில்லை இப்போது துளசி இரண்டு தொட்டிகளில் வைத்து இருக்கிறார்கள் போலும்.

  உங்கள் வீட்டுக்குள் புறா வந்து போனதா? பட படவென இறக்கை அடித்துக் கொண்டதோ?


  ஆமாம். அது அரற்றும் ஓசைதான் கேட்டு இருக்கிறோம் பாடுவதை கேட்டதில்லை

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பொறுமையாக புறாக்களை படம் பிடித்தமைக்கு நன்றி.

  எஸ்.ரா.கதைக்கு போனேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   எஸ் .ரா. கதை படித்தீர்களா ?
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  ஜன்னல் வழியே புறா படங்கள் அருமை. வெள்ளைப்புறா அழகாக இருக்கிறது. ஆமாம் . அந்த துளசி செடியின் அமைப்பு மயில் தோகை போலத்தான் உள்ளது. மேலே குயில் தோற்றத்துடன் புறா வந்து அமர்ந்துள்ளதென கூறினீர்கள். இது மயிலின் தோகை போல் தன்னிலையை மாற்றிக் கொண்டு உங்களுக்கு போஸ் தந்துள்ளது. உங்கள் கற்பனைகள் இரண்டையுமே ரசித்தேன்.

  ஒரு நாள் தனியே அமர்ந்திருந்த புறா ஒன்று கானம் இசைத்து நான் கேட்டிருக்கிறேன். அக்கோ பட்சி என்பது இதுதா‌னா? இல்லை அது வேறேயா? புறா துறவிக்கு சமானம் என்று நானும் படித்துள்ளேன். நாளைக்காக எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதாம். காக்கை கூட தான் உண்ணும் பொருளை பிறகு உண்ணலாம் என ஏதோவொரு மர இடுக்கு, சுவர் இடுக்கு என பத்திரப்படுத்திக் கொள்ளுமாம். பிறகு அதற்கு நினைவிருக்குமா என்பதுதான் தெரியவில்லை.

  /புறாக்கள் துறவிகளா, ஏன் அவை எதற்காகவும் உரத்துச் சண்டையிடுவதில்லை? மசூதிகளில், கோயில்களில், தேவாலயங்களில் ஏன் அதிகம் புறாக்கள் காணப்படுகின்றன? ஒருவேளை, புறாக்கள்தான் வானுலகின் தூதுவர்களா! பார்க்கப் பார்க்க, புறா விசித்திரமான பறவையாகத் தோன்ற ஆரம்பித்தது/

  எனக்கும் புறாவை பார்க்கும் போது இப்படியெல்லாம் தோன்றும். இங்கும் எங்கள் அப்பார்ட்மெண்ட் சுற்றி ஒரே புறாக் கூட்டம்தான்.
  புறாவை பற்றி கதை எழுதிய கதாசிரியர் அழகாக விவரித்துள்ளார். நீங்களும் மிக ரசனையுடன் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். கதை நன்றாக இருக்குமென தோன்றுகிறது பிறகு படிக்கிறேன். அழகான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   புறாக்கள் சில நேரம் இப்படி அழகாய் அமரும், நம்மை படம் எடுக்க சொல்வது போல்.
   என் கற்பனையை ரசித்தமைக்கு நன்றி.

   புறா கானம் இசைத்து கேட்டு இருக்கிறீர்களா?
   அக்கோ பட்ட்சி வேறு.

   //காவிரி தீரத்தில் வாழும் ஒருவகை பறவைகளை அக்கோ குருவிகள் என்று அழைப்பார்கள். இந்தப் பெயருக்குப் பின்னணியாக சுவாரஸ்ய கதையொன்று உண்டு!

   காவிரிக்கரையோரம் சகோதரிகளான இரண்டு குருவிகள் வசித்தன. காவிரி வறண்டு காணப்பட்ட ஒருநாள், மணற்பரப்பில் உலர்த்தி இருந்த பொருட்களை தின்றுகொண்டு இருந்தபோது, காவிரியில் வெள்ளம் திடீரென வந்தது. தங்கைக்குருவி உடனடியாக பறந்து மரத்தில் அமர்ந்துவிட்டது. அக்காள் குருவி கவனிக்காததால், வெள்ளத்தோடு அடித்து சென்று விட்டது. அதைக் கண்ட தங்கைக்குருவி, ‘அக்கோ, அக்கோ’ என கதறி அழுதது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்காள் குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் காவிரி கரை ஓரத்தில் மறத்தில் அமர்ந்து கொண்டு, அக்கோ…. அக்கோ…. என்று குரல் எழுப்பி, அக்காள் குருவியை தேடுமாம். இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்தக் குருவியின் குரலைக் கேட்கலாம் என்கிறார்கள் அந்தப் பகுதியில் வாழும் பெரியவர்கள்!//

   https://senthilvayal.com/2015/07/28/ இவர் பதிவில் படித்தேன்.

   காக்கை ஒளித்து வைப்பதை பார்த்து இருக்கிறேன்.

   அமைதிக்கு புறாவைதானே சொல்கிறார்கள்.

   வெளி உலகத்தைப் பார்க்க முடியாது எனக்கு, இந்த பற்வைகளைத்தான் பார்க்க முடியும்.
   உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.
   உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   இந்தக்கதை எனக்கு தெரியும். சிறு வயதிலேயே.தி. லியிலேயே எங்கள் வீட்டில் இருக்கும் போது, பாட்டி இந்தக் கதையை சொல்லி கேட்டு இந்த அக்கோ பட்சி அடிக்கடி கத்தும் போதும் இந்தக் கதையை சொல்லும்படி கேட்பேன். இந்தவாட்டியாவது அதன் அக்கா வந்து விடுமா என நானும் அந்தப் பறவை மாதிரி கேட்பேன். அந்த கதையின் சோகம் மனதை என்னமோ பண்ணும். ஆனால் இந்த பட்சியை கண்ணால் பார்த்ததில்லை. வெயில் காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் இந்த குரலை அடிக்கடி கேட்டுள்ளேன். இப்போது இங்கு வந்த பின் ஒரு நாள் இதன் குரல் அருகில் உள்ள ஒரு மரத்தில் கேட்டதும், கண்ணுக்கெதிரேயே அது "அக்கோவ்" என இழுத்து கூவிக் கொண்டிருந்தது. அது அச்சு அசல் புறா மாதிரியே இருந்தது. அதனால்தான் ஐயப்பாட்டுடன் கேட்டேன். உங்கள் அழகான அக்கோ பட்சியின் கதைக்கும்,அதன் தொடர்பான விரிவான செய்திகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். (அன்று எங்கள் பாட்டி வழி கதை கேட்டது போல் எனக்கு இன்றும் ஒரு இனம் புரியாத மன சஞ்சலம் எழுந்தது)

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   பழைய கதைகள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைத்தேன், உங்களுக்கு தெரிந்து இருக்கிறது. பாட்டிகள் நிறைய கதை சொல்வார்கள் நான் என் பேத்திக்கு கதைகள் சொன்னேன், இப்போது உள்ள பிள்ளைகள் நமக்கு கதை சொல்கிறார்கள்.
   அவர்கள், குழந்தை பாடல்கள், கதைகள் இணையத்தில் படித்து கேட்டுக் கொள்கிறார்கள்.ஒளி, ஒளி சித்திரமாய் பார்க்கிறார்கள்.

   பாட்டியின் நினைவுகள் வந்து மன சஞ்சலம் எழுந்ததா?

   சஞ்சல படாதீர்கள்.

   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. க்கூம் கூம் கூம் என்று தொண்டைக்குள் சப்தம் எழுப்பித் தான் பார்த்திருக்கேன். பாடிக் கேட்டதில்லை. புது விஷயம். துளசி நன்றாக வளர்ந்திருக்கிறதே! அதன் பச்சைப்பின்னணியில் வெள்ளையும், கறுப்புமாகச் சேர்ந்த புறா பார்க்க அழகு தான். உங்கள் வீட்டைத் தேடிப் பறவைகள் வருவதும் நல்ல பொழுதுபோக்கு! இங்கே பால்கனி சின்னது தான். தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைச்சிருக்கோம். குரங்கார் உள்ளே வந்துவிடுவதால் கண்ணாடிக்கதவு தள்ளும்படி போட்டிருக்கோம். அதனால் அந்தக் கதவைத் தள்ளினால் எல்லாம் பறந்து ஓடிவிடுங்க. கண்ணாடிக்கதவைத் திறந்தே வைப்பதும் ஆபத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   புறா வளர்ப்பவர்கள் பாட கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள் போலும், நானும் பாடி கேட்டது இல்லை.

   துளசி பின்னணியில் வெள்ளைப்புறா பார்க்க நன்றாக இருந்தது அதனால்தான் இந்த பகிர்வு. இடை, இடையே வானம், பறவைகள் பார்ப்பதுதான் பொழுது போக்கு.

   குரங்கார் வருகை என்றும் பால்கனி கதவு கண்ணாடி கதவு போட்டு வைத்து இருப்பதும் முன்பு சொல்லி இருக்கிறீர்கள். குரங்கு வரும் போது என்ன செய்வது மூடி தான் வைக்க வேண்டும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. குயில் கலரில் புறா புதிய வரவு பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பச்சை தோகை விரித்திருக்கும் வெள்ளைப்புறா அழகு. இங்கும் வெள்ளைப் புறாக்கள் வட்டமிட்டபடியே திரியும்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
  புறாக்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தருவது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
  உங்கள் ஊரில் மரம் முழுக்க பலவித பறவைகள் பார்த்து இருக்கிறேன்.
  நீங்கள் உங்கள் "ரம்யத்தில்" போடுங்கள் வெள்ளைப்புறா படங்களை மாதேவி.
  உங்கள் கருத்துக்கு ந்னறி .

  பதிலளிநீக்கு
 8. எவ்வளவு அழகாக உள்ளது... அருமையாக படம் பிடித்துள்ளீர்கள் அம்மா...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
  படத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வழக்கம் போல அழகான பதிவு...
  புறாக்கள் பற்றிய செய்திகள் அருமை..

  கைபேசியில் அதிகம் தட்டச்சு செய்ய இயலவில்லை... நாளை மீண்டும் வருகிறேன்.. நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
  கைபேசியில் நம் கமலா ஹரிஹரன் கைபேசியில் பெரிய பதிவே போடுகிறார், பின்னூட்டங்கள் அதில்தான் கொடுக்கிறார். அவர்களுக்கு அது பழகி விட்டது.
  நமக்கு கணினி பழகி விட்டது.

  உடல் நலம் தானே?
  நேரம் கிடைக்கும் போது வாங்க.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. எங்கள் வீட்டுக்கருகிலும் நிறைய புறாக்கள் இருக்கின்றன.  ஆனால் வீட்டுப்பக்கம் வருவதில்லை.  உங்கள் வீட்டருகில் வந்து எப்படி உடனே பறந்து செல்லாமல் இருக்கிறது?  நாள் முழுக்க அங்கே தங்குகிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நீங்கள் மொட்டைமாடி சென்று பாருங்கள், நேரம் கிடைக்கும் போது காலை, அல்லது மாலை அங்கு வரும் என்று நினைக்கிறேன்.
   என் தலையை பால்கனியில் கண்டால் உடனே பறந்து வந்துவிடும் ஏதோ உணவு வைக்க போகிறாள் என்று. காலை முதல் மாலை வரை இருக்கும் அப்புறம் எங்கு தங்குகிறது என்று தெரியவில்லை ஸ்ரீராம். எஸ்.ரா கதையில் கோவர்தனுக்கு வரும் நினைவு போல் உங்களுக்கும் வந்து விட்டதே! பறவைகள் இரவு எங்கு தங்கும் என்று.

   இந்த வீட்டுக்கு வந்த போது அவைகளைப்பார்த்து காமிரா, செல் எடுத்து கொண்டு படம் எடுக்க போனால் பயப்படும், இப்போது பழகி விட்டது நம்மை ஒன்று செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கை வந்து விட்டது அதனால் நிற்கிறது .
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 13. ஆமாம் புறாவுக்கு தோகை அமைத்தது போல இருக்கிறது துளசி...  ஸ்டூடியோவில் படம் எடுத்தால் பின்னணி அமைப்பார்களே, அது போல இயற்கையாக அமைந்து விட்டது போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம் இயற்கை அமைத்துக் கொடுத்த பின்னணி.நீங்கள் சொல்வது போல்
   அந்தக்காலத்தில் ஸ்டுடியோவில் இப்படி பின்னணி அமைத்து படம் எடுப்பார்கள்தான்.
   நிலா, வானம் எல்லாம் பின்னணியில் வைப்பார்கள்.என் தோழியின் தங்கை பெரியவள் ஆனபோது சடங்கு செய்தார்கள் அதில் முருகபெருமான் மயில் தோகைமேல் இருப்பது போலவும், அரைவட்ட நிலவில் அமர்ந்து இருப்பது போல் எல்லாம் படம் எடுத்தார்கள். 16 நாட்களும் ஒவ்வொரு அலங்காரம் அந்தக் காலத்தில் செய்து மகிழ்வார்கள்.

   நீக்கு
 14. எஸ்ரா கதையில் அரசு அலுவலகம் பற்றி எழுதி இருப்பது ஒத்துக்கொள்ள முடியவில்லை.  அவ்வளவு விஸ்ராந்தியான அலுவலகம் எங்கே இருக்கிறது என்று அறிய ஆவல்!   பரபரப்பான அலுவல்களையே நாங்கள் தினமும் சந்திக்கிறோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கோவர்தனுக்கு, ஒவ்வொரு நாள் அலுவலகத்துக்கு வரும்போதும் விருப்பமே இல்லாத வேலையைச் செய்வதாகவே தோன்றும். டிபன்பாக்ஸை மேஜைக்குக் கீழே வைத்துவிட்டு மேஜை டிராயரை இழுக்கும்போது 30 வருடங்களை இழுப்பதுபோலவே தோன்றும். அலுவலகத்தில் மட்டுமல்ல, தன் மீதும் சிலந்திவலை படிந்து கொண்டேவருகிறது. அதைத் துடைத்துச் சுத்தம் செய்ய முடியாது. இனி, தான் ஒரு சிலந்திவலை படிந்த மனிதன் மட்டுமே என நினைத்துக்கொள்வார்.
   இப்படிச் சொல்ல முடியாத மனவேதனையும் இறுக்கமும் சலிப்புமான ஒரு நாளில்தான் கோவர்தன் அந்தப் புறாக்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
   ஐந்து நிமிடம் பார்த்தபிறகு அந்தப் புறாக்களின் வெண்மை மீது ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது.//

   விருப்பம் இல்லாத அலுவலக வேலையும், வீட்டு பொறுப்புகளும் சிலந்தி வலையாக பின்னிக் கொண்ட இடைபட்ட நேரத்தில் ஐந்து நிமிடம் பார்க்கிறார் அதுதான் புறாக்களின் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது.

   பரபரப்புக்கு இடையில் கிடைக்கும் மகிழ்ச்சி ஸ்ரீராம். உங்கள் அலுவலகத்தில் கூட முன்பு அணில் குஞ்சு உங்கள் கவனத்தை கவர்ந்த அனுபவம் சொல்லி இருக்கிறீர்கள்.
   மரக்கிளையை பிடித்து தொங்கி கொண்டு இருப்பவர் கூட (எந்த நேரமும் கீழே விழுந்து விடுவான் எனும் நிலையிலும்) தேன்கூட்டிலிருந்து சிறு துளி தேன் வாயில் பட்டால் சுவைப்பது இல்லையா அது போல்தான் இதுவும்.

   நீக்கு
  2. புறாக்களின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டவுடன் புறாக்களை தேடி, தேடித் போய்ப்பார்க்கிறார், அவை இருக்கும் இடம் தேடிபோய் பார்க்கிறார், அவற்றின் இருப்பிடங்களை டையிரியில் குறித்து வைக்கிறார்.

   நீக்கு
 15. படங்கள் நன்று.

  புறாக்கள் இங்கே நிறையவே உண்டு. நண்பர் ஒருவர் வீட்டில் வளர்க்கிறார். சாலை சந்திப்புகளில் இங்கே புறாக்களுக்கு தீனி போடுபவர்களும் அதிகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
   முன்பு புறாக்களுக்கு தீனி கொடுக்க பள்ளி வாசல் சென்று கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய தானியங்களை கொடுத்து வருவார்கள்.
   இப்போது எல்லா இடங்களிலும் புறாக்கள் காணப்படுகிறது.

   டெல்லியில் காலையில் அரசமரத்தடி எறும்புகளுக்கு அரிசி வெல்லம், பறவைகளுக்கு உணவு,தெருவில் திரியும் நாய்களுக்கு உணவு, குளிரில் கம்பிளி ஸ்வெட்டர் போட்டு விடும் மனிதர்களை பார்த்து இருக்கிறேன் வெங்கட்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. //'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். //

  அதுதானே..

  //நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,//
  ஹா ஹா ஹா புறப்பிள்ளையைப் பார்த்தால், அவர் உங்களைப் படமெடுக்கிறார்போல இருக்கு:)).. அல்லது ஸ்மார்ட்டாகப் போஸ் குடுக்கிறாராக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

   நீங்கள் சொல்வது போல் புறாக்கள் நம்மை படமெடுப்பது போல்தான் பார்க்கும் . நம்மை கழுத்தை வளைத்து நம்மை பார்ப்பது அழகாய் இருக்கும் அதிரா .

   நீக்கு
 17. இந்த வெள்ளை கறுப்புப் புறாக்கள் இங்கில்லை[எங்கள் ஊரில்] எங்கள் கார்டினுக்கு வருவதில்லை, இங்கு கறுப்பு மற்றும் சாம்பல்தான் அதிகம்.. இங்கும் வெளியே எங்காவது இருக்கலாம், இனிமேல் கவனிக்கிறேன்.

  துளசிக்கு வயசு அதிகம் இருக்கும்போல இருக்கிறதே... புதினாவில் பலவகை உள்ளதைப்போல துளசியிலும் இருக்குதெல்லோ கோமதி அக்கா..

  மற்ற மரம் பார்க்க நெல்லிக்காய் மரம் போலவும் இருக்குது, வாகை? அல்லது வாதநாராணி? அது என்ன மரம் கோமதி அக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெள்ளை கறுப்புப் புறாக்கள் இல்லையா?எங்காவது பார்க்க ஆசை வந்து விட்டதா?
   இனி கவனிப்பு நமக்கு வந்து விடும்.
   துளசிக்கு வயசு ஆச்சு பெரிய பிள்ளைதான்.
   துளசியில் நிறைய வகை இருக்கிறது.
   எங்கள் வீட்டில் முன்பு கிருஷ்ணதுளசி இருந்தது, துளசி இலையில் வைலட் கலரும் பச்சையும் கலந்து இருக்கும்.

   நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி என்று நிறைய இருக்கும்.

   வாதநாராயணி போல ஆனால் வாதநாராயணி இல்லை கொன்றை பூ கீழ் நோக்கி இருப்பது போல் இதில் மஞ்சள் பூ மேல் நோக்கி இருக்கும்.

   நீக்கு
  2. ஓ துளசியில் இவ்வளவு வகை உண்டோ? அதென்ன நாய்த்துளசி ஹா ஹா ஹா.. ஏசுவதைப்போல இருக்கு துளசியைப் பார்த்து...

   ஓ அப்போ ஒருவகை வாகைதான்போலும்..

   நீக்கு
  3. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   துளசியில் நிறைய வகை உண்டுதான்.
   நாய்கள் உடம்புக்கு வந்து விட்டால் இப்படி மூலிகைகளை உண்டு பின் கக்கி விடும். இவ்வகை துளசியை அது உண்ணலாம் அதுதான் அந்த பெயர் கொடுத்து இருப்பார்கள் ஏசுவது இல்லை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 18. சிங்கப்பூர்ச் செய்தி அழகு... நீங்கள் சொன்னதும்தான் நானும் யோசிக்கிறேன், புறாக்கள் பாடுவதில்லை, ஆனா கூடு கட்டி முட்டையிடும் காலத்தில் ஒருவித சவுண்ட் விட்டபடி இருப்ப்பினம்... ம்ஹூம்..ம்ஹூம்ம்.. என்பதைப்போல.

  எஸ் ரா கதை நன்றாகத்தான் இருக்கும்போல இருக்கு.. படித்தால் சொல்கிறேன் இங்கு.
  உண்மைதான் புறாக்கள் சண்டையிட்டு நாம் பார்த்ததில்லை, அவர்களுக்கு கூடுகட்டத்தெரியாது, அத்தோடு பெரிதாக பலன்ஸ் உம் இல்லை என நினைக்கிறேன், அதனாலேயே கட்டிடங்களில் தஞ்சமாகின்றன..

  இவை ஒருவகை தாரா, கோழி இனத்தைச் சேர்ந்தவைதான்போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிங்கப்பூர் புறாக்கள் பாடிய காணொளி போட்டு இருக்கலாம்.
   எப்படி பாடுகிறது என்று கேட்கலாம்.

   படித்துப் பாருங்கள் நேரம் கிடைக்கும் போது புறாக்களை கவனிப்பது வந்ததால் நான் பகிர்ந்தேன். அலுப்பு தட்டும் வாழ்வில் சில நேரம் மனதுக்கு மகிழ்ச்சிதரும் பறவைகளை கவனிப்பது.

   சண்டை என்றால் தான் அமர்ந்து இருக்கும் இடத்தில் வேறு புறா வந்தால் துரத்தும் சத்தம் போட்டு சண்டையிடாது. தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, மைனா வெறித்தனமாக சண்டையிடும்.

   கூடு கட்ட தெரியாதுதான் அது கூடு வைக்கும் இடங்கள் பயத்தை கொடுக்கும் கீழே விழுந்துவிடுவது போல் இருக்கும்.

   தாரா, கோழி இவைகளும் கண்ட இடத்தில் முட்டையிடும் அதனால் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 19. இன்று ஜன்னல்வழியே புறாப்பிள்ளை மட்டும்தான் வந்திருக்கிறாக!!:).. இங்கு எங்களுக்கும் கோமதி அக்கா.. இம்முறை பறவைகளின் விதம் விதமான ஓசை நாலா பக்கமும் ஒலிக்குது, அதிலும் இரவில் காலையில் கலகலகல எனச் சிட்டுப்பறபதும், பறவைகள் கத்தும் ஓசையும் மனதுக்கு ஹப்பியைத் தருது.... இப்போ கொரோனாவால வாகன ஓட்டம் குறைவாக இருப்பதனால்கூட இருக்கலாம்..

  பதிலளிநீக்கு
 20. முன்பு பறவைகள் வித விதமாக வரும். இப்போது குயில், மைனா, புல் புல், புறாக்கள் வருகிறது தினம். தவிட்டுக்குருவி ஓரத்து வீட்டுக்கு வந்துவிட்டு பறந்து விடுகிறது இந்த பக்கம் வருவது அவ்வளவாக இல்லை.

  பறவைகள் சத்தம் நாலு மணியிலிருந்து கேட்க ஆரம்பித்துவிடும்.


  //இம்முறை பறவைகளின் விதம் விதமான ஓசை நாலா பக்கமும் ஒலிக்குது, அதிலும் இரவில் காலையில் கலகலகல எனச் சிட்டுப்பறபதும், பறவைகள் கத்தும் ஓசையும் மனதுக்கு ஹப்பியைத் தருது...//

  அந்த பறவைகளின் ஒலிகள் காலை நம்மை எழுப்புமொழிகள், எங்கும் மகிழ்ச்சியை பரப்பும் ஒலிகள். நம்மை என்றும் மகிழ்ச்சிபடுத்தும் ஒலிகள் அதிரா.

  உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நனறி.

  பதிலளிநீக்கு
 21. பதிவுகளின் பின்னூட்டக் கருத்துகள் வருவதில்லை. அதற்கு நீங்கள் கொடுக்கும் பதில்கள் மட்டும் வருகின்றன. இது ஒரு பத்துநாட்களாக இப்படி நடக்குது! என்னனு தெரியலை. மற்றப் பதிவுகளில் எங்கள் ப்ளாகில் மட்டும் கருத்து, பதில்கள் இரண்டும் வருகின்றன. மற்றவற்றில் இதே போல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காரணம் தெரியவில்லை எனக்கு. திண்டுக்கல் தனபாலன் அவர்களை கேட்க வேண்டும்.

   பத்து நாட்களாய் டேஸ்போர்ட் புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நான் மாற்றம் செய்யாமலே. அது போல் பேஸ்புக்கும் மற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
   பழைய மாடல்தான் நன்றாகவும் எளிமையாக இருந்தது இப்போது உள்ள மாற்றம் கொஞ்சம் புரிய நாள் ஆகும் போல.
   முன்பு ஒரு தடவை ஸ்ரீராம் இப்படிச் சொன்னார்.

   நீக்கு
 22. இப்போது தஞ்சையில் நாங்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து அரை கி.மீ.. தொலைவில் புது ஆறு எனப்படும் சிற்றாறு.. வீட்டைச் சுற்றி மா, பலா, எலுமிச்சை... சுற்று வட்டாரமும் அப்படியே..

  நான் இங்கிருந்து எப்போது தொலைபேசியில்ப் அழைத்தாலும் காக்கை, மைனா, அணில்களின் ஒலி தான்.. அவற்றுடன் அக்காக் குருவிகளின் தேடலும்...

  பறவைகளின் ஒலி காதுக்கு இனிமையாக...

  இங்கே அதிகபட்சமாக போக்குவரத்து சத்தம் தான்...(இப்போது 3 மாதங்களாகத்தான் சாலைகள் சத்தமில்லாமல் கிடக்கின்றன..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வாங்க சகோ, வாழ்க வளமுடன்

   உங்கள் வீடு இருக்கும் இடம் மிக அழகாய் இருக்கும் என்று தெரிகிறது.
   இயற்கை எழில் கொஞ்சும் என நினைக்கிறேன்.

   பறவைகளும் உங்களுடன் தொலைபேசியில் பேசும் போலவே!
   பறவைகளின் ஒலி காதில் இனிமையாக அக்காக் குருவியின் தீனக்குரலும் கேட்குதோ!

   போக்குவரத்து சத்தம் இல்லாமல் இருப்பது இப்போது ஏதோ குறைவது போல் இருக்கும்.

   உடல்நிலை சகஜநிலைக்கு திரும்பிவிட்டதா?
   இயல்பு வாழ்க்கை திரும்பவேண்டும் தொற்று பயமில்லாமல் அதற்கு இறைவன் அருள வேண்டும்.

   நீக்கு
 23. புறாக்களின் படங்களும் அதை பற்றி நீங்கள் தேடித் தந்த தகவல்களும் அருமை.

  கதையை வாசிக்கிறேன்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும் ,கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 24. ஆமாம் அக்கா அந்த வெள்ளையழகி நீங்க சாப்பாடு வைக்கப் போறீங்களான்னு பார்க்கிறா...ஹா ஹாஹ் ஆ என்னது இது இவ்வளவு நேரம் வெயிட் செய்யறோம் ஃபோட்டோ எடுக்கறதுலயே இருக்காங்க இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைப்பாங்களான்னு ஹா ஹா ஹா ஹாஅ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
   வெள்ளையழகி நன்றாக இருக்கிறதே பேர்.
   ஆமாம், அதற்கு பொறுமை அதிகம், நம்மை பார்ப்பது மட்டும் செய்யும் . நீங்கள் சொல்வது போல் நினைக்கும். காக்கா கத்தி கூப்பிடும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

   நீக்கு
 25. புறாக்களின் படங்கள் நன்று. பகிர்ந்திருக்கும் பத்திகள் கதையை வாசிக்கத் தூண்டுகின்றன. வாசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   வாசித்து பாருங்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 26. அக்கா அந்த வெள்ளையழகிக்கு துளசிச்செடி பச்சை பேக்ரவுன்ட் ரொம்ப அழகாக இருகிறது ஏதோ பின்னே பேக்ட்ராப்ஸ் போட்டாப்ல...

  அது மட்டும் இல்லாமல் சிங்கப்பூரில் புறாக்களுக்கான பாட்டு போட்டி நடத்தியுள்ளார்கள்.//

  அட!!! ஆச்சரியமான தகவல் புறாக்கள் பாடுவதைக் கேட்கணும் எங்காவது இணைப்பு கொடுத்திருக்கீங்களான்னு பார்த்தா நீங்களும் சொல்லிருக்கீங்க இணைப்பு இல்லை என்று

  https://www.youtube.com/watch?v=81bCb8WNm-o

  aஅக்கா இந்தக் காணொளியை பாருங்க அது எப்ப்டி சத்தம் எழுப்புது என்று கழுத்தை தரை நோக்கி வளைத்து வளைத்து பார்க்க அழகாக இருக்கு..மனிதர்கள் கீழ் ஸ்தாயியில் பாடும் போது கழுத்தை தரை நோக்கி வளைப்பது போல!!!!!!

  https://www.youtube.com/watch?v=6EehkLAE9dY

  https://www.youtube.com/watch?v=tA3SvSsfF_A

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா சிங்கப்பூர் புறாக்கள் பாடும் காணொளி போடவில்லை என்றேன்.
   நீங்கள் அனுப்பிய காணொளிகள் பார்த்தேன். முதல் புறா மட்டும் நம் நாட்டு புறா போல் இருக்கு. இரண்டாவது மணிப்புறா அதன் பாட்டு இனிமை.
   மூன்றாவது மணிப்புறா வெளினாட்டுப்பறவை. அதன் பாட்டும் அது பாடும் போது அதன் உடலில் ஏற்படும் அசைவும் அருமை. சுட்டிகளை தேடி கொடுத்தமைக்கு நன்றி கீதா.

   நீக்கு
 27. எஸ் ரா கதையை வாசிக்கிறேன் அக்கா

  புறாக்களை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எஸ்.ரா கதையை வாசித்து பாருங்கள்.
   புறாக்களை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி கீதா.

   நீக்கு
 28. வெள்ளை கருப்பு பிரவுன் நிற புறாக்கள் ஹோமர் வகை வீட்டுப்புறாக்கள் எங்கள் வீட்டுக்கு ஒரு சாம்பல் நிற வீட்டு புறாவும் மற்றவை மணிப்புறாக்களும் பெரிய குண்டு புறாக்களும்தான் வராங்க . அக்கா இப்போ வெயில் காலம் கொஞ்சம் மல்லித்தழை சிரியா நங்கை இலைகளை நறுக்கி நீரில் போடுங்க நோய் அண்டாது புறாக்களை ..இப்போ அதுங்களுக்குpox வரும் சீசன் .வெள்ளைப்புறா அழகா இருக்கு பயந்த சாம்பல் புறாவும் அழகு .
  புறா மட்டுமில்ல எல்லா உயிரினமும் பற்பல விஷயங்களை நமக்கு கற்றுத்தருகின்றன .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
   வெளி நாட்டில் மணிபுறாக்கள் தான் அதிகம்.என் மகன் வீட்டுக்கு வருவது மணிப்புறாதான். உங்கள் வீட்டுக்கு வரும் குண்டுபுறா, சாம்பல் நிற புறா, மணிப்புறா இவற்றை படம் எடுத்து போடுங்கள் ஏஞ்சல்.

   முன்பும் மல்லித்தழை போட சொன்னீர்கள். முன்பு மாயவரம் தோட்டத்தில் சிறியாநங்கை வைத்து இருந்தேன் தொட்டியில். இப்போது அது கிடைத்தால் போடுகிறேன். மல்லித்தழை இருக்கு அதை போடுகிறேன்.
   கீழா நெல்லி தொட்டியில் வந்தால் புறாக்கள் அதை காலி செய்து விடுகிறது.
   அவைகளுக்கும் மருத்துவ அறிவை இறைவன் அருளி இருக்கிறார்.

   //புறா மட்டுமில்ல எல்லா உயிரினமும் பற்பல விஷயங்களை நமக்கு கற்றுத்தருகின்றன//

   ஆமாம் ஏஞ்ச்ல், நாம் நாள்தோறும் பாடம் கற்றுக் கொள்கிறோம்..

   உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 29. துளசி செடியின் பின்னணியில் வெள்ளைப்புறா வெகு அழகு. கருப்பு புறா ஏன் பயந்தாற்போல் இருக்கிறது.? புறாக்கள் பாடும் என்பது புது செய்தி. எஸ்.ரா.வின் கட்டுரைகள் படித்திருக்கிறேன். கதைகள் அதிகம் படித்ததில்லை. நல்ல தொகுப்பு. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   கருப்பு புறா புதிதாக வந்து இருக்கிறது அதுதான் கொஞ்சம் பயம் புது இடம் பழக வேண்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 30. மிக அழகான புறா கோமதி மா.
  இங்கே போராட்டங்கள் இந்த சப் டிவிஷன் மால் வரை வந்துவ்ட்டது. அந்த செய்திகளும், கர்ஃபியு போடப்பட்டதும் மன உளைச்சல்.

  எபிக்கு வந்துவிட்டு அப்படியே திரும்பி விட்டேன்.

  அதுதான் நேரம் கழித்து வருகிறேன் .கல்யாணம் முடிந்து வரும் விருந்தாளி:)

  மிகப் பொறுமையாக அழகாகப் போஸ் கொடுக்கும் புறாவும் அது
  கால்களை வைத்திருக்கும் அழகும்
  அருமை.
  உங்களுக்கு அமைதி கொடுக்கவே வந்திருக்கும் பறவை.
  அது பாடவும் செய்கிறது என்றால் அதிசயம் தான்.
  சிங்கப்பூரில் பறவைகள் பூங்காவில் விதவிதமான
  கிளிகள் பார்த்திருக்கிறேன்.
  இந்தப் பாடும் புறாக்களை வீடியோ எடுத்திருக்கலாம்.
  நாமும் அந்த எஸ் ரா கதைனாயகரைப் போல
  ஏதாவது நல்ல செய்தி கிடைக்குமா என்றே
  பார்க்கிறோம்.
  செய்திகளுக்கு மிக நன்றி.
  கோமதி மா.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

  //இங்கே போராட்டங்கள் இந்த சப் டிவிஷன் மால் வரை வந்துவிட்டது. அந்த செய்திகளும், கர்ஃபியு போடப்பட்டதும் மன உளைச்சல்.//

  பத்திரமாக இருங்கள் வெளியே போக முடியாது.
  கொரோனா ஒருபக்கம் என்றால் இனகலவரம் வேறு.

  கீதா ரெங்கன் பாடும் சுட்டிகள் கொடுத்து இருந்தார்கள் அதில் அழகாய் பாடுது புறாக்கள்.

  //அதுதான் நேரம் கழித்து வருகிறேன் .கல்யாணம் முடிந்து வரும் விருந்தாளி:)//

  நேரம் எப்போது கிடைக்கிறதோ அப்போது படிக்கலாம் அக்கா.

  பறவைகள் ஒலி கேட்பது, பறவைகளைபார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் தருகிறது என்பது உண்மை.
  உங்கள் கருத்துக்கு நன்றி.  பதிலளிநீக்கு
 32. அழகான பதிவு அக்கா. கதைய்ம் படித்தேன். நன்றாக இருக்கு. எனக்கு முன்பு புறா எனில் பயம் அதன் சத்தம். பின் அதுவே பழகிவிஅட்டது. இங்கு பார்ப்பது கிராமத்தில்)) அரிது சிட்டியில் பார்க்கலாம். அங்கு பேக்கரி களில் உணவுக்காக இருப்பாங்க. ஆட்களும் சின்னதா போடுவாங்க. கம்போடியாவில பார்த்த அளவு இங்கு பார்த்ததில்லை. ஆனா புறா என்றா உங்க நினைவு வந்தே தீரும்.
  துளசி செடியுடன் புறா இருக்கும் படம் அழகு.புறா பாடுமா. நீங்க சொன்ன மாதிரி பாட்டை இணைத்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
   அதன் சத்தம் பயமா? புறாவிற்கு உணவு கொடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
   மும்பை, டெல்லி எல்லாம் புறாக்கள் நிறைய இருக்கும் ஒரே இடத்தில் கூட்டமாய் பறந்து வந்து அமர்வது, அப்புறம் மீண்டும் பறப்பதும் பார்க்க அழகாய் இருக்கும்.
   கம்போடியாவில் நிறைய இருந்தது இல்லையா நீங்கள் பதிவில் போட்டு இருந்தீர்கள்.

   கீதா இரண்டு , மூன்று சுட்டி கொடுத்து இருக்கிறார்கள் பின்னுடத்தில் பாருங்கள் அதில் புறா பாடுகிறது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 33. ஃ போட்டோக்களும் எழுதிய விதமும் அருமை . எங்க வீட்டுக்கும் புறா வருகிறது .ஒரு கம்பி வலை வைத்து பால்கனி ஜன்னலை அடைத்து வைத்திருக்கிறேன் . புறாக்களால் நுரையீரல் நோய்கள் வரும் என்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அபயா, அருணா, வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு