சனி, 7 நவம்பர், 2020

ஐயனார் கோவிலில் நவராத்திரி

ஐயனார் -அழகான அலங்காரம்


போன வருடம்  எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் போய் நவராத்திரி கொலு படங்கள் போட்டேன் பதிவாக. இந்த முறை ஒரே ஒரு நாள் சரஸ்வதி பூஜை அன்று  காலையில் போய் வந்தோம் பக்கத்தில் இருக்கும் ஐயனார் கோவில்  கொலுவிற்கு . அன்று  சுவாமி அலங்காரம், மற்றும் கொலு  எல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன் . 

(எங்கள் வீட்டுக் கொலு அன்றும் இன்றும் என்ற போன பதிவில்  சொல்லி இருந்தேன். )

கோவில் கொலு சுவாமி அலங்காரங்கள் கீழே வருகிறது.


பெரிய திண்ணையில் பெரிய கொலு

சுவாமி புறப்பாடு
திருவிழாவில் சுவாமியும் அம்மனும் வீதி உலா

கோவிலும் கோவில் குளமும்


கொலுவில் உள்ள சில அழகான பொம்மைகள் , பாட்டுக் கச்சேரி நடக்கிறது
                                                      முனீஸ்வரன்- குதிரை மேல்
குட்டிக்குருக்கள் -முன்பு இந்த ஊருக்கு வந்த  சமயம் இந்த   கோவில்  பதிவு போட்டபோது இந்த குட்டிக்குருக்கள் தன் தாத்தாவிற்கு உதவியாக இருந்தார் என்று போட்டு இருந்தேன். மூன்று வருடம் கழித்து மீண்டும் இவர்கள் பூஜை செய்யும் முறை வந்து இருக்கிறது. பூஜை செய்யும் முறைஉடைய குடும்பங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், ஆண்டுக்கு ஒரு குடும்பம்  பூஜை செய்கிறார்கள்.
மஹிஷாசுர மர்த்தினி தோற்ற அலங்காரம். 
கொரோனா என்ற அரக்கனை அடியோடு அளிக்க வேண்டும் அன்னை. உலகத்தினர் அனைவரும் நலமாக வாழ அருள்புரியவேண்டும்.

எங்கள் வீட்டுக் கொலுவிற்கு வந்த கும்பிடு பூச்சி. கண்ணாடி அலமாரியில் இருக்கும் பொம்மைகளைப் பார்க்க வந்த கும்பிடு பூச்சி.


தீபாவளிக்கு ஊருக்குப் போகும் அன்பர்களுக்குத் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

 1. அழகுமிகு மேனியில் சந்தனத் திருக்காப்பு
  ஐயனேநின் திருசேவடிகள் கதிகாப்பு..
  அன்பருக் கருள் புரியும் மெய்யனே
  அபயம் நின் சந்நிதி ஐயனே..

  ஆனை புலி குதிரை என வாகனம்
  அதில் வந்து எமை நீயும் காக்கணும்
  ஆறாத வலி தன்னைத் தீர்க்கணும்
  தீராத நலந் தன்னில் சேர்க்கணும்..

  அடைக்கலம் காத்தனை அருஞ்சுனை காத்தனை
  ஆனந்த வெள்ளத்தில் அன்பரைச் சேர்த்தனை
  தீயெனும் தீவினை நெருங்காது
  தீர்த்தனை
  தாயெனும் தன்மையில் தாங்கியெனை
  வாழ்த்தினை..

  சந்தனத் திருமேனி சேர்ந்திடும் சந்தனம்
  நானதுவாக வரம் தந்திடும் உன்மனம்
  சத்தியத் திருப்பெயர் தேனான மந்திரம்
  மன்னவன் திருவடிக்கு மாறாத வந்தனம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்

   காலையில் ஐயனுக்கு கவிதை ! படித்து மகிழ்ந்தேன்.
   நேற்று சனிக்கிழமை குலதெய்வத்தை வழிபட்டேன் நீங்கள் கவிதை எழுதி அனுப்பியதை படித்து வணங்கினேன். இங்கு உள்ள ஐயனாரை எங்கள் குலதெய்வமாக நினைத்து வணங்குவேன். அவருக்கும் கவிதை தந்து விட்டீர்கள்.

   //ஆறாத வலி தன்னைத் தீர்க்கணும்
   தீராத நலந் தன்னில் சேர்க்கணும்..//

   அருமையான வரிகள்.
   கண்ணில் நீர்துளிகளுடன் நன்றி நன்றி என்று சொல்கிறேன்.


   அனைவருக்கும் அருள்புரிவான் ஐயன்.

   நீக்கு
  2. துரை செல்வராஜூ ஸாரின் கவிதையை ரசித்தேன்.  எங்களுக்கும் அவரே குலதெய்வம்.  பாலசாஸ்தா.  சென்ற வாரம் எங்கள் குலதெய்வம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.  செல்ல முடியவில்லை.

   நீக்கு

  3. சகோவின் கவிதை மகிழ்ச்சி அளிக்கிறது .எங்கள் குலதெய்வ கோவிலிலும் கும்பாபிஷேக வேலைகள் நடக்கிறது.
   காலம் கூடி வரும் போது போய்பார்த்து வாருங்கள் பாலசாஸ்தாவை.

   நீக்கு
 2. அழகான கொலு..
  கண்கொள்ளாக் காட்சி..

  அதுவும் அந்த ரிஷப வாகனம் நெஞ்சை அள்ளுகின்றது..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதுவும் அந்த ரிஷப வாகனம் நெஞ்சை அள்ளுகின்றது..//
   ஆமாம் மனம் கவர்ந்த ரிஷப வாகன காட்சி.

   கொலுவை ரசித்து கருத்து சொன்னதற்கு.
   முன்பு சில படங்கள் போட்டு இருக்கிறேன்.
   ஒவ்வொரு பொம்மைகளும் அழகாய் இருக்கும். பழைய காலத்து பொம்மைகள்.

   உங்கள் கருத்துக்களுக்கும் அருமையான கவிதைக்கும் நன்றி நன்றி.

   நீக்கு
 3. கொலு படங்களை ரசித்தேன்.  எல்லாமே அழகு.  குட்டி குருக்களின் பொறுப்பு சந்தோஷப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   குட்டிக் குருக்கள் நாம் போனால் ஓடி வந்து பூஜை செய்வார் உற்சாகமாக . தாத்தாவிற்கு பொறுப்பாக உதவ வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். பெரிய வெண்கலமணியை இடது கையில் தூக்கி அடித்துக் கொண்டு தீபாராதனை செய்வது வியப்பை அளிக்கும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 4. கருணை பொங்கும் விழிகளுடன் காட்சி அளித்த ஐயனாரை மனமார தரிசித்துக் கொண்டேன். மற்ற அலங்காரங்களும் சிறப்பு. கொலுவில் உள்ள ரிஷப வாஹன வீதி உலா மிகவும் சிறப்பாக உள்ளது. எல்லா பொம்மைகளுமே மிக அழகாக அமைந்திருக்கின்றன. நிதானமாகவும் அழகாயும் படங்கள் எடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்த உங்களுக்கும் நன்றி.துரையின் பாடல் பதிவை மேலும் சிறப்பித்துள்ளது. உங்கள் பதிவு ஒவ்வொன்றும் இம்மாதிரிப்பாடல்களால் அலங்கரிக்கப்படுவது மேலும் சிறப்பு ஊட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   கருணை பொங்கும் விழிகளுடன் காட்சி தருவது உண்மைதான்.
   கொலு படங்களை ரசித்து உற்சாகம் ஊட்டும் கருத்து சொன்னதறக்கு நன்றி.

   //துரையின் பாடல் பதிவை மேலும் சிறப்பித்துள்ளது.//

   உண்மை உண்மை.


   //உங்கள் பதிவு ஒவ்வொன்றும் இம்மாதிரிப்பாடல்களால் அலங்கரிக்கப்படுவது மேலும் சிறப்பு ஊட்டுகிறது.//
   நன்றி. கமலா ஹரிஹரன் அவர்கள் கொலுவிற்கும் அழகான கவிதை எழுதி இருக்கிறார்கள்.

   இறையருள் அவருக்கு கிடைக்க வேண்டும்.
   உங்கள் எல்லோருடைய அன்புக்கும் நன்றி.


   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

   என்னதான் வீட்டிலிருந்து இறைவனை கோவிலுக்கு போய் வணங்கி வந்தால் மனம் நிறைந்துதான் போகிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரி

  தங்கள் அருமையான பதிவை காலையில் எழுந்ததும் கண்டேன். என் தளத்தில் வருகை தந்தவர்களுக்கு காலையில் (எனக்கு அதன் பின் வேலைகள் தொடர்ச்சியாக வந்து விடுவதால் கைப் பேசியை கையில் எடுத்து பதிலளிக்க தாமதமாகி போய் விடுகிறது.) அமர்ந்து பதில் கருத்துரைகள் தந்து கொண்டிருந்ததில் உடன் வர இயலவில்லை.

  ஐய்யனார் படங்கள் அலங்காரத்துடன் அழகாக உள்ளன. அனைவரையும் நலமாக வைத்தருள மனமாற தரிசித்து பிரார்த்தித்துக் கொண்டேன். அங்கு கோவிலில் வைத்திருக்கும் கொலுவும் மிகவும் அழகாக உள்ளது. மஹிஷாசூரமர்த்தினி படமும் மிகவும் அழகாக உள்ளது. அன்னையையும் மனமாற தரிசித்து கொண்டேன்.

  என் பதிவில் தங்களுக்கு இப்போதுதான் நீங்கள சேகரித்து வைத்திருக்கும் பதிவுகளை இடுங்கள் எனக் கூறி வந்தேன். தாங்களும் இங்கு பதிவை போட்டிருப்பதை கண்டதும் மகிழ்வாக உள்ளது.

  ஸ்வாமியும் அம்மனும் வீதி உலா பொம்மைகள், கோவிலும் குளமுமான பொம்மைகள் பாட்டுக் கச்சேரி செய்யும் பொம்மைகள் என அனைத்து கொலு பொம்மைகளும் கண்களை கவர்கின்றன.

  தங்கள் பதிவில் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய ஐய்யானரைப் பற்றிய கவிதையும் அருமை. என் பதிவிலும் அன்னை ஈஸ்வரிக்கு அழகான பாமாலை ஒன்று அவர் சூட்டியுள்ளார். அவரின் தமிழ் புலமைக்கு என் பணிவான வணக்கங்கள். தங்கள் வாக்குப்படி இறையருள் அவருக்கு என்றும் சிறப்பாக நீடித்து கிடைத்திட நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  மழைப் பூச்சியை அழகாக படமெடுத்துள்ளீர்கள். அதன் பெயர் நீங்கள் சொல்வதை இப்போதுதான் அறிகிறேன். நாங்கள் மழைப்பூச்சியென சொல்வோம். உங்கள் வீட்டு பொம்மைகள் கொலுவை காண அதுவும் வந்து நமஸ்கரித்துள்ளதை பார்த்து சந்தோஷமாக உள்ளது. உங்கள் ஜீவகாருண்யமான செயல் பாராட்டுக்குரியது. அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   உங்களுக்கு ஞாயிறு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இல்லையா?
   நீங்கள் உங்கள் தளத்தில் பின்னூட்டங்களுக்கு பதில் அளித்து விட்டு இங்கும் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

   நானும் காலை நேர வேலைகளுக்கு இடை இடையேதான் வந்து பின்னூட்டங்களைப் பார்த்து பதில் அளித்துக் கொண்டு இருக்கிறேன். பேரன் வருவதற்குள் காலை வேலைகளை முடிக்க வேண்டும் என்பதால் காலை இப்போது வலை பக்கம் வருவது இல்லை, ஆனால் நம் பதிவுக்கு நேரம் ஒதுக்கி வந்து கருத்து சொல்பவர்கள் கருத்துக்கு பதில் அளிக்க மட்டும் காலையில் வருகிறேன். இல்லையென்றால் மதியம்தான் மற்றவர்கள் தளங்களுக்கு செல்கிறேன்.

   //என் பதிவில் தங்களுக்கு இப்போதுதான் நீங்கள சேகரித்து வைத்திருக்கும் பதிவுகளை இடுங்கள் எனக் கூறி வந்தேன்.//

   ஓ ! எனக்கு நேற்றே உங்கள் எண்ணம் வந்து விட்டது.
   இன்னும் உறவினர் வீட்டு கொலுக்கள் இருக்கிறது போட வேண்டும்.

   கொலுவில் இடம்பெற்ற அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   //என் பதிவிலும் அன்னை ஈஸ்வரிக்கு அழகான பாமாலை ஒன்று அவர் சூட்டியுள்ளார். அவரின் தமிழ் புலமைக்கு என் பணிவான வணக்கங்கள். தங்கள் வாக்குப்படி இறையருள் அவருக்கு என்றும் சிறப்பாக நீடித்து கிடைத்திட நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

   நான் அந்த பாமாலையை படித்தேன், நன்றாக இருந்தது. சேர்ந்து பிரார்த்திப்போம் நன்றி.

   //மழைப் பூச்சியை அழகாக படமெடுத்துள்ளீர்கள். அதன் பெயர் நீங்கள் சொல்வதை இப்போதுதான் அறிகிறேன். //
   ஓ ! நீங்கள் மழைப்பூச்சி என்பீர்களா? இரண்டு கால்களும் முன்பக்கம் சேர்த்து வைத்து இருக்கும் அது பார்க்க கும்பிடுவது போல் இருக்கும் (கும்பிடும் நிலையில் முன் பக்கம் வைத்து இருக்கும்) அதனால் நாங்கள் இதை கும்பிடுபூச்சி என்போம்.


   //உங்கள் வீட்டு பொம்மைகள் கொலுவை காண அதுவும் வந்து நமஸ்கரித்துள்ளதை பார்த்து சந்தோஷமாக உள்ளது.//

   இரண்டு நாள் வீட்டுக்குள் சுற்றி சுற்றி வந்தது, பின் அதை பிடித்து பால்கனியில் வைத்து இருக்கும்(சிறு தோட்டத்தில்) தொட்டியில் விட்டேன். வழி தெரியாமல் வீட்டுக்குள் சுற்றிக் கொண்டு இருந்தது.

   உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.   நீக்கு
 7. படத்திலேயே கதை சொல்லி இருக்கிறீர்கள். சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. அழகிய கொலுக் காட்சிகள் சகோ
  வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. யாவும் கொள்ளை அழகு அன்புடன்

   நீக்கு
  3. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. கொலு மிகவும் மனம் கவர்ந்தது அம்மா... அருமை... ஐ கும்பிடு பூச்சி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. கொலு காட்சிகள் அழகு. அம்மன் அலங்காரங்கள் நிறைவு.

  பதிலளிநீக்கு
 11. அன்பு கோமதிமா,
  தாமதமாக வருகிறேன்.

  இந்தத் தடவை கொலுப் பதிவு அற்புதம் என்று நினைத்தேன் அதைவிட அற்புதமாக
  அய்யனார் ஸ்வாமி வந்து விட்டார்.
  முதல் அலங்காரம் அமோக அழகு.
  பிறகு குதிரை வாகனும்,
  மஹிஷாசுர மர்த்தன அலங்காரமும்.
  சின்ன பொம்மைகள் பெரிய பொம்மைகள் என்று எல்லாமே
  பழைய கால வண்ணங்களுடன் மிக அருமை.

  கண்கொள்ளாக் காட்சி.

  அன்பு துரை தந்திருக்கும் கவிதை மனத்தை நிறைக்கிறது.
  இப்படி ஒரு தமிழைக் கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.

  ப்ரேயிங்க் மாண்டிஸ்....கும்பிடும் வெட்டுக்கிளி
  வெகு அழகு. அவை எல்லாம் நீங்கள் படங்கள் எடுப்பதற்காகவே உங்க
  வீட்டுக்கு வருகிறது என்று நினைக்கிறேன்.
  வாழ்க வளமுடன் அன்புத் தங்கச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   அய்யனார் கோவில் கொலுவை பார்த்து ரசித்து மிக அருமையான கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

   //அன்பு துரை தந்திருக்கும் கவிதை மனத்தை நிறைக்கிறது.
   இப்படி ஒரு தமிழைக் கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.//

   ஆமாம் அக்கா, கொடுத்து வைத்து இருக்கிறோம்.

   கும்பிடுபூச்சி உங்களை கவர்ந்து விட்டது மகிழ்ச்சி.

   உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

   நீக்கு
 12. அதென்னமோ தெரியல்ல கோமதி அக்காவின் போஸ்ட் மட்டும் கண்ணில லேட்டாத்தான் படுது எனக்கு.. இருப்பினும் கோமதி அக்கா, அதிராவுக்கு தமிழ்ல டி எல்லோ.. இங்கின ஆருக்கும் அப்பூடி இல்லை என்பதால ஆரும் கண்டுபிடிக்கவில்லையாக்கும்.. தலைப்பில் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊ.. கோவிலில் என்பதனை கோலில் எனப் போட்டுவிட்டீங்கள் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அல்லிராணி அதிரா, வாழ்க வளமுடன்
   கண்ணில் லேட்டாபட்டாலும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   //அதிராவுக்கு தமிழ்ல டி எல்லோ.. இங்கின ஆருக்கும் அப்பூடி இல்லை என்பதால ஆரும் கண்டுபிடிக்கவில்லையாக்கும்.. தலைப்பில் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊ.. கோவிலில் என்பதனை கோலில் எனப் போட்டுவிட்டீங்கள் என்ன?//

   அதிராவின் கண்டுப்பிடிப்புக்கு நன்றி நன்றி. நீங்கள் தமிழ் டி தான் ஒத்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி. நானும் பார்க்கவில்லை, மற்றவர்களும் பார்க்கவில்லை போலும்.

   நீக்கு
 13. கொலு அழகோ அழகு.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

  //மஹிஷாசுர மர்த்தினி// இந்த அம்மனைப் பாடல் வரியில் பாடியிருக்கிறேன் ஆனால் இப்போதுதான் பார்க்கிறேன், கொஞ்சம் காளி அம்மனைப்போல இருக்கிறா..

  கும்பிடுபூச்சி பச்சை நிறமோ?.. இது வெட்டுக்கிளிபோல எல்லோ தெரியுது ஹா ஹா ஹா...

  அம்மன், ஐயனார் அருள் அதிராவுக்கும் கிடைக்கட்டும்.. அழகிய போஸ்ட் கோமதி அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கொலு அழகோ அழகு.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.//

   ஒவ்வொரு பொம்மையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதிரா

   //கொஞ்சம் காளி அம்மனைப்போல இருக்கிறா..//
   ஆமாம் அதிரா, பச்சைக்காளி, பவளக்காளி எல்லாம் இருக்கிறது அதிரா. பச்சைக்காளி அம்மன் மாதிரிதான் அலங்காரம் செய்து இருக்கிறார்கள். மஹிஷாசுர மர்த்தினி பத்து கரங்கள் உண்டு, சண்டிகாவாக இருக்கும் போது 20 கரங்கள் உண்டு.

   பேச்சி அம்மனை மஹிஷாசுர மர்த்தினியாக அலங்காரம் செய்து இருக்கிறார்கள்.

   //கும்பிடுபூச்சி பச்சை நிறமோ?.. இது வெட்டுக்கிளிபோல எல்லோ தெரியுது ஹா ஹா ஹா...//

   கும்பிடுபூச்சி வெட்டுக்கிளி வகையை சேர்ந்தது தான். கும்பிடுப்பூச்சி இரண்டு மூன்று வண்ணத்தில் உண்டு அதிரா.

   //அம்மன், ஐயனார் அருள் அதிராவுக்கும் கிடைக்கட்டும்.. அழகிய போஸ்ட் கோமதி அக்கா//

   அதிராவிற்கு அம்மன், ஐயனார் அருள் உண்டு. அனைவருக்கு அருள் வழங்கும் போது அதிராவை விட்டு விடுவார்களா? உண்டு உண்டு.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 14. கோமதி அக்கா நீங்கள் வீட்டில் அனைவரும் நலம்தானே .கொலு அழகோ அழகு .குட்டி குருக்கள் பொறுமையா பயபக்தியா பூஜை செய்வது அழகு .கும்பிடுப்பூச்சி சாமி கும்பிட வந்திருக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
   எல்லோரும் நலம் தான் ஏஞ்சல். நீங்கள், உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா?
   எங்கள் வீட்டு கொலு பார்த்தீர்களா?
   குட்டி குருக்கள் எப்போதும் பயபக்தியாக பூஜை செய்வார்.கும்பிடுப்பூச்சி சாமி கும்பிட வந்து மூன்று நாள் வீட்டுக்குள் இருந்தது.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 15. கொலு வெகு அழகு! அய்யனாரின் அழகு  அடடா!

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. உங்கள் , குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
   உங்களை நினைத்துக் கொண்டு இருந்தேன். நான் தீபாவளி பதிவு போட்டால் வந்து வாழ்த்து சொல்லுவீர்கள். இன்று போட முடியவில்லையே என்று நினைத்தேன், உங்கள் அருமையான வாழ்த்து மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது.

   உங்கள் வரவுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நன்றி.

   நீக்கு
 19. பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.
   உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

   நீக்கு