சனி, 12 செப்டம்பர், 2020

கொல்லூர்ஸ்ரீ மூகாம்பிகை கோவில்

கேரளா பாணியில்  கொல்லூர் மூகாம்பிகை அம்மன்கோவில் உள்ளது.

மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.  அதைப் பதிவாக்கி வருகிறேன். இன்று கொல்லூர் மூகாம்பிகை கோவில் .

மங்களூரிலிருந்து  4 மணி நேரத்தில்  கொல்லூர் மூகாம்பிகை கோவிலை அடையலாம். இக் கோவில்  சக்தி பீடங்களில் ஒன்று,  அர்த்தனாரி சக்திபீடம் என்பார்கள்.


கருவரை விமானம் தங்கத் தகட்டினால் செய்யப்பட்டு இருக்கிறது.
அர்சசனை, அபிஷேகம், அட்சராப்பியாசம் செய்ய டிக்கட் வாங்கி வரிசையாக உள்ளே போகும் வழி

ஒரே கல்லினால் செய்யப்பட்ட விளக்குத்தூண் 1000 விளக்குகள் ஏற்றலாமாம்
பூக்களைப் பிரம்புக் கூடையில் தூக்கிச் செல்கிறார் 
கொடிமரத்திற்கும் அழகிய வேலைப்பாடுகளுடன் தங்கத் தகடுவேயப்பட்டு இருக்கிறது.
பிரார்த்தனை செய்துகொண்டு விளக்கு வாங்கி வைப்பார்கள் போலும். ஏகப்பட்ட விளக்குகள் மேசைகளில் ஏற்றப்பட்டு இருக்கிறது, கீழே பெரிய அண்டாக்களில் மேலும் விளக்குகள் நிறைய இருக்கிறது இதற்கு 300 பணம் கட்டிச்  சீட்டுக்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமாம்.. 

 கோவில் உள்ளே போனவுடன் இடது பக்கம் மண்டபம் உள்ளது அதற்கு சரஸ்வதி மண்டபம் என்று பேர் . இங்குதான் ஆதி சங்கரர் ஸ்ரீ மூகாம்பிகையை நினைத்து  சவுந்தர்யலஹரியை எழுதியதாகச் சொல்கிறார்கள் .  சரஸ்வதி மண்டபத்திற்குப் பின்புறம் அவர் அமர்ந்து மனமுருகி எழுதிய இடத்தில் சங்கரர் பீடம் இருக்கிறது 
சரஸ்வதி உற்சவ அம்மன் முன்
குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்துகொண்டு இருந்தார்கள். 

பிரகாரத்தில் 
கேரளா போல்  இங்கும் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக்கூடாது
கோவிலைச்சுற்றி வரிசை போகிறது அம்மனைத் தரிசிக்க. ஆனால் விரைவில் நகர்ந்து விட்டது  வரிசை.  கஷ்டமாகத் தோன்றவில்லை
பிரகாரத்தில் தெரியும் இடைவெளியில் படம் எடுத்தேன் 
-கலசமும் மலைத்தொடரும் 
கோவில் திண்ணையில் அழகான இரண்டு பொம்மைகள்

'நகரா' என்ற இரட்டை முரசு பூஜை சமயத்தில் வாசிக்கப்படுகிறது 



மூலவர் அன்னையின் பக்கத்தில் இரண்டு சிறு தேவியர்கள் உள்ளார்கள்.(காளி, சரஸ்வதி) அதில் ஒரு தேவி விக்கிரகத்தை மூன்று வேளையும் பரம்பரையாக அலங்காரம் செய்பவர்கள்  தொட்டு தூக்கி தலையில் வைத்து உட் பிரகாரத்தில்   வலம் வருவார்கள், உள்ளே இருக்கும் எல்லா சன்னதிகளிலும் பூஜை முடிந்தபின் 


இந்த நீண்ட பல்லாக்கில் ஒரு முறை வலம் வருவார்
அடுத்து இந்தப் பல்லாக்கிலும் வலம் வருவார் ஒரு முறை.

(இந்த பல்லாக்கின் மேல் இரண்டு குருவிகள் இருக்கிறது)
 
காலை, இரவு வேளைகளில் அம்மனை இந்தத் தேரில் அமர்த்தி வெளிப் பிரகாரத்தில் ஊர்வலமாக அழைத்து வருவார்களாம்.
மணியின் கீழ் வீரபத்திரர் சிலை  போல் இருக்கிறது , அல்லது துவாரபாலகரோ தெரியவில்லை .  நான் ஒரு படம் தான் எடுத்து இருக்கிறேன்.

இரவு எழுமணிக்கு அம்மனுக்கு   சிறப்பு  பூஜை நடக்கும். வீரபத்திரர் சன்னதியிலும் சிறப்பாக நடக்குமாம். அம்மனை வழிபட்டபின் வீரபத்திரரை வணங்க வேண்டுமாம். அம்மன் சன்னதியின் இருபுறமும் தியான மண்டபம் இருக்கிறது. அமர்ந்து அம்மனை நினைத்துத் தியானம் செய்யலாம்.

அம்மனை வரிசையில் போகும் போதே நன்கு வணங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் சிறிது நேரம் நின்று நன்றாக வணங்கினோம். சிவப்புப் பட்டாடை கட்டி இருந்தார்.

கருவரையில் ஸ்ரீ மூகாம்பிகை இதுபோல்  பத்மாசனத்தில்     அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.பஞ்சலோகத்தாலான அம்மனுக்கு முன்பு அன்னை சுயம்பாய் லிங்கரூபத்தில் இருக்கிறார். 
தாய் மூகாம்பிகை  படத்தில்  இளையராஜா பாடிய 'ஜனனி ஜனனி'பாடலில்  
சுவர்ணரேகையுடன் சுயமாகி  வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே என்ற  பாடல்  வரியில் காட்சியாக வரும். மூம்மூர்த்திகளும், மூன்று தேவியரும் இந்த லிங்க ரூபத்தில் இருப்பதாக ஐதீகம்.


விழாக் காலத்தில் இந்த மாதிரி அலங்காரமாய் இருப்பாராம் அம்மன். முன் பக்கம் பத்மாசனத்தில் அமர்ந்த கோலமும் பின் பக்கம் சிம்மத்தில் அமர்ந்த கோலமும் இருக்கும்   இந்தப் படம் உறவுகளுக்கு நட்புகளுக்கு கொடுக்க வாங்கினேன்.

அம்மனுக்கு இருபக்கமும் இருக்கும் இந்த  உற்சவ சிலைகளில் ஒரு உற்சவசிலையை  சரஸ்வதி மண்டபத்திற்கு கொண்டுவந்து பூஜை நடைபெறுமாம், இந்த பூஜை பிரதோஷ பூஜை என்று அழைப்பார்களாம்.
இரவு 7 மணிக்கு இசை, நடன நிகழ்ச்சிகள் தினமும் உண்டாம்.

இரவு 9 மணிக்கு கசாய தீர்த்தம் கொடுப்பார்களாம் . அதில் இஞ்சி, குருமிளகு, ஏலக்காய், திப்பிலி, இலவங்கம், வெல்லம் ஆகியவை கலந்து இருக்குமாம்.
தங்க அன்னபூரணி கோவிலில் கொடுப்பது போல்  இங்கும் உண்டாம். ஆனால் இங்கு இரவு ஒன்பது மணிக்கு என்பதால் நாங்கள் குடிக்கவில்லை.  காலையில் போனோம். அதனால்  குடிக்கவில்லை கசாய தீர்த்தம்.

கோவில் யானை
குழந்தைகளை ஆசீர்வாதம் செய்கிறது

கோவிலுக்கு நேர்ந்து விட்டு இருப்பார்கள் போலும் காதில் அடையாள அட்டை  தொங்க விடப் பட்டு இருக்கிறது -கோவில் வாசலில் நின்றது.


 நாங்கள் தங்கி இருந்த தங்கும் விடுதி சகல வசதிகளும் அமைந்த அழகான பெரிய இல்லம்-எங்களுடன் உடன் வந்தவர்கள் - நாங்கள் பயணம் செய்த வண்டி .

 அடுத்து  'அன்னேகுட்டே' என்ற இடத்தில் உள்ள விநாயகப் பெருமானை வணங்கினோம் . அந்தக் கோவில் படங்கள் , போகும் வழியில் சிறு ஓடையில் நின்ற அழகான கொக்குகள் , விடுதியில் எடுத்த பூக்கள் படங்கள் எல்லாம் இன்னொரு பதிவில் பார்ப்போம்.

மாயவரத்தில் இருக்கும் போது வருட வருடம்  தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை விசுவுக்கு) திருவிடைமருதூர் போவோம் அப்போது அங்கு உள்ள மூகாம்பிகையை வணங்கி வருவோம். கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கும் பாக்கியம் 2015ல் கிடைத்தது.

அன்னை மூகாம்பிகை அனைத்து வித சக்தியையும் பெற்று மூகாசுரனை   அழித்தமாதிரி இப்போது வந்து இருக்கும் இந்த தொற்று என்ற அசுரனை அழித்து அனைவரையும் காக்க வேண்டும். 


                            வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

35 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். விரிவான விளக்கங்களுடன் பதிவு அருமையாக உள்ளது. உங்களுடன் நானும் அன்னை மூகாம்பிகையை மனமாற வணங்கிக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசித்து படம் எடுத்துள்ளீர்கள். உங்களின் கலை ஆர்வத்திற்கும், விபரங்கள் விசாரித்து படங்கள் எடுத்த பொறுமைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.எல்லா படங்களும் நன்றாக உள்ளது.

    அங்கும் குருவிகள் இரண்டும் சப்பரத்தில் அமர்ந்தபடி உங்கள் வருகைக்காகத்தான் காத்திருந்தனவோ? பறவைகளின் நேசர் வரப் போவதை அறிந்து புகைப்படத்திற்கு போஸ் தந்திருப்பது மிக அழகாக உள்ளது.

    மூகாம்பிகை கோவில் நாங்களும் சென்று தரிசித்தோம். அங்கு கோவில் பிரகாகாரத்திலா என்று சரியாக நினைவில்லை..தமிழக முதல்வர் தந்த தங்க வாள் ஒன்று பார்வைக்கு வைத்திருந்தனர்.

    கோவிலின் விபரங்கள் தாங்கள் எழுதும் போது மனதில் நன்றாகப் பதிகிறது. நாங்கள் சென்ற போது புகைப்படங்கள் ஏதும் (கேமிரா வசதி ஏதும் அப்போது எங்களிடம் இல்லை) எடுக்காததால் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. அங்கெல்லாம் சென்று வந்ததற்கு அடையாளமாக அம்மனின் புகைப்படம் எங்கள் வீட்டு பூஜையறையில் உள்ளது.இன்று கண் குளிர நீங்கள் எடுத்த படங்களையும், தந்த விபரங்களையும் மனதில் பதித்துக் கொண்டேன்.

    /அன்னை மூகாம்பிகை அனைத்து வித சக்தியையும் பெற்று மூகாசுரனை அழித்தமாதிரி இப்போது வந்து இருக்கும் இந்த தொற்று என்ற அசுரனை அழித்து அனைவரையும் காக்க வேண்டும். /

    ஆம் நானும் மனதாற பிரார்த்தித்து வங்கிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      எனக்கும் முன்பு பல கோவில்களுக்கு போகும் போது காமிரா இல்லை அதனால் படங்கள் எடுக்கவில்லை. அப்படியே கொண்டு போனாலும் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் சில கோவில்களில்.

      .//தமிழக முதல்வர் தந்த தங்க வாள் ஒன்று பார்வைக்கு வைத்திருந்தனர்.//

      வெளிப்பக்கம் இல்லை உள்ளே இருக்கும் போல அதுதான் நான் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். எனக்கும் பார்த்த நினைவு இல்லை.


      இங்கு வெளிப்பக்கம் எடுக்க தடை இல்லை அதனால் எடுத்தேன்.

      கோவில் பார்க்க போகும் போதும் அதைப் பற்றி எழுதும் போது விவரங்கள் படிக்கிறேன்.
      அதை நான் எடுத்த படங்களுக்கு பொருத்தமாய் உள்ளதை சேர்த்துக் கொள்கிறேன்.

      படங்கள் எடுக்கவில்லை என்றால் எனக்கும் மறந்து இருக்கும், நான் பார்த்தும் 5 வருடம் ஆச்சு.

      குருவிகள் கர்நாடகா கோவில்களில் நிறைய பார்க்கலாம்.

      தாய் மூகாம்பிகை சினிமாவில் கோவில் முழுவதும் சுற்றி காட்டுவார்கள். கோவில் குருக்களாக நடிக்கும் மேஜர் சுந்தர்ராஜன் தாய் மூகாம்பிகை சிலையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கோவிலை வலம் வருவதை காட்டுவார்கள். ஊமையை பேச வைத்த கதை எல்லாம் உண்டு. அங்கு தினம் நடக்கும் பாட்டு கச்சேரி கதையில் வரும்.

      இப்படி கோவிலைப்பற்றி குறிப்புகள் படித்தவற்றை பதிவில் சேர்த்துக் கொள்கிறேன். சில கோவில்களுக்கு தலவரலாறு வாங்குவோம். தொலைக்காட்சிகளில் தினம் ஒரு ஆலயம் நிகழ்ச்சிகளில் கேட்டது பார்த்தது அதை வைத்தும் எழுதுவேன்.

      உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

      நீக்கு
  2. ஸ்ரீ மூகாம்பிகை அம்மனைத் தரிசிக்க வேண்டும்... எப்போது நேரம் கூடி வருமோ தெரியவில்லை...
    எனது லாக்கருக்குள்
    ஸ்ரீ மூகாம்பிகையின் படமும் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாராஜூ, வாழ்க வளமுடன்
      இறையருள் கூட்டி வைக்கும் நேரம் வரும் போது.
      ஸ்ரீ மூகாம்பிகை படம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  3. ஜனனி.. ஜனனி... - பாடலுக்கு முன்பே இளையராஜா அவர்கள் இசைத் தொகுப்பு ஒன்றில் -

    முதலே முடிவே மூகாம்பிகையே... - என்றும்,

    எனக்கொரு அன்னை..
    வளர்த்தனள் என்னை..
    அவள் பெயர் மூகாம்பாள்!...
    என்றும் பாடியிருப்பார்...

    கேட்டிருக்கின்றீர்களா அந்தப் பாடல்களை!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளையராஜா பாடல் கேட்டு மகிழ்ந்தேன். முன்பு கேட்ட நினைவு இல்லை.

      அவர் அந்த கோவிலுக்கு நிறைய நிதி உதவிகள் செய்து இருப்பதாய் கேள்வி பட்டு இருக்கிறேன்.
      அந்த பாடலில் அவர் மனமுருகி தீமைகளை அழித்து நல்லது செய்வாய் அம்மா என்கிறார் அதுதான் நமக்கு இப்போது வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கும் பாடல் பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  4. காலையில் மூகாம்பிகை தரிசனம் கிடைத்தது. அழகிய படங்கள் விளக்கங்கள் அருமை.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      தொடர்வதுக்கும் நன்றி.

      நீக்கு
  5. மிக மிக அருமையான தரிசனம்.
    மூகாம்பிகை படம் பார்த்த நினைவும் வருகிறது. எத்தனை சுத்தமான கோவில்.
    இவ்வளவு அழகான படங்களை ஒரு கோணம் விடாமல் எடுத்திருக்கிறீர்கள்.
    அன்பு கோமதி என்றும் வாழ்க வளமுடன்.

    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே..
    அன்னை சரஸ்வதி அனைவரையும் ரட்சிக்கட்டும்.
    யானை மிக அழகு.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
    மூகாம்பிகை படம் பார்த்த நினைவு வந்து விட்டதா? கோவில் நல்ல பராமரிப்பு.
    எடுக்க முடிந்தால் எடுத்து விடுகிறேன் நிறைய இருக்கிறது . படங்களை தேடி தொகுத்து போடுவது தான் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது. படங்களை பேர் கொடுத்து இப்பொழுது சேமிக்க கற்றுக் கொண்டு சேமித்து வருகிறேன்.

    //அன்னை சரஸ்வதி அனைவரையும் ரட்சிக்கட்டும்.//

    ஆமாம் அக்கா, அதுதான் வேண்டும் இப்போதும் எப்போதும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  7. கோயிலை நாங்களும் உங்களுடன் வலம் வந்த உணர்வைத் தருகின்றன வரிசையாகப் பகிரப்பட்ட படங்களும் பகிர்வும். தீபங்களோடு எப்படி ஜொலிக்கும் என இணையத்தில் தேடிப் பார்க்கும் ஆவலைத் தந்து விட்டது ஆயிரம் விளக்குத் தூண் குறித்த பகிர்வு. மூகாம்பிகை அருளால் தொற்று மறைந்து மக்கள் நலம் வாழட்டும். அன்னேகுட்டே கோயில் பற்றி அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //தீபங்களோடு எப்படி ஜொலிக்கும் என இணையத்தில் தேடிப் பார்க்கும் ஆவலைத் தந்து விட்டது ஆயிரம் விளக்குத் தூண் குறித்த பகிர்வு.//

      எனக்கும் தேடி பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள் ராமலக்ஷ்மி, மாலை பார்க்க வேண்டும். கேரளா கோவிலில் இப்படி விளக்கு ஏற்றிய காணொளிகள் பார்த்து இருக்கிறேன் அது கல்தூண் இல்லை வெண்கலம்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  8. மிக அற்புத தரிசனம் மா ..

    இனிமையாக இருக்கிறது ..எங்களின் பயணத்தில் கண்டு ரசித்த அம்மன் கண் முன்னே ..

    நாங்கள் மாலை இங்கு சென்றதால், இரவு தரிசனத்தில் நீங்கள் கூறிய அம்மனின் பல்லக்கு மற்றும் சிறுதேர் தரிசனம் சிறப்பாக எங்களுக்கு கிடைத்தது ...அதே போல இரவு அங்கயே தங்கியதால் விடியற்காலை சென்றும் அம்மனின் தரிசனம் பெற்றோம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      அம்மன் கண் முன்னே வந்து விட்டாளா! மகிழ்ச்சி.

      மாலை பிரதோஷபூஜை பார்த்தீர்களா கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
      காலையும் பூஜை பார்த்தீர்களா? நன்றாக இருந்து இருக்கும் .

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. என்னுடைய இரண்டு பேத்திகளுக்கு வித்யாரம்பம் செய்ய என்று இருமுறை கொல்லூர் சென்று வந்தோம். சீவேலி, பல்லக்கு ஊர்வலம், தேர் ஊர்வலம் என்று எல்லாம் கண்டோம். கசாயம் குடித்தோம். 

    சுற்று சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன். மறுத்து விட்டார்கள். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்

      //என்னுடைய இரண்டு பேத்திகளுக்கு வித்யாரம்பம் செய்ய என்று இருமுறை கொல்லூர் சென்று வந்தோம். சீவேலி, பல்லக்கு ஊர்வலம், தேர் ஊர்வலம் என்று எல்லாம் கண்டோம். கசாயம் குடித்தோம். //

      ஓ! மகிழ்ச்சி.


      //சுற்று சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன். மறுத்து விட்டார்கள். //

      ரவி வர்மா ஓவியங்கள் சரஸ்வதி மண்டபத்திற்குள் அல்லவா இருக்கிறது. உள்ளே படம் எடுக்கத் தான் அனுமதி இல்லையே .

      அட்சராப்பியாசம் செய்யும் காட்சியை வெளியே இருந்து ஜூம் செய்து எடுத்தேன் காமிராவில்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. அழகான படங்கள்.

    அன்னை மூகாம்பிகையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    ஜனனி ஜனனி பாடல் - எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும். இங்கேயும் கேட்டு மகிழ்ந்தேன்.

    சிறப்பான பயணம். தொடரட்டும் பயணங்களும் தகவல்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //அன்னை மூகாம்பிகையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.//
      ஆமாம் வெங்கட் , அனைவருக்கும் கிடைக்கட்டும்.
      ஜனனி ஜனனி பாடல் கேட்டு மகிழ்ந்தது அறிந்து மகிழ்ச்சி.

      உங்கல் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. முருடேஷ்வரையும், திருக்கோகர்ணத்தையும் தவிர மற்ற இடங்கள் நாங்களும் போனோம். ஆனால் குழுவாக இல்லை. பெரும்பாலும் நாங்க தனியாகவே இரண்டு பேருமாகப் போகிறோம். இது சிருங்கேரி போன அதே வருஷம் 2006 ஆம் ஆண்டில் சிருங்கேரி போகும் முன்னர் போனோம். எங்களையும் தங்கி இரவு தேரெல்லாம் பார்த்துட்டுப் போங்க என்றார்கள். எம்.ஜி.ஆர் கொடுத்த தங்கவாளை அம்மனுக்குச் சாத்தி இருந்தார்கள். அதைக் காட்டினார்கள். சுற்றிச் சுற்றிப் போய்விட்டு வந்து 2,3 முறை பார்த்தோம். எதுவும் சொல்லவில்லை. நல்ல தரிசனம் கிடைத்தது. ஆனால் அப்போதெல்லாம் காமிராவோ அலைபேசியோ இல்லை என்பதால் படங்களே எடுக்கவில்லை. ஃபில்ம் மாற்றும் சின்னக் கைக் காமிரா பழுதாகி இருந்ததால் சரி பண்ணக் கொடுத்திருந்தோம். அதைத்தான் அதன் பின்னர் சென்ற கயிலை யாத்திரைக்கு எடுத்துச் சென்றோம். ஃபில்ம் நேபாளத்திலேயே தீர்ந்துவிட்டது. கிடைக்கவும் இல்லை. ஆகவே கயிலைப்படங்கள் ஒன்றிரண்டு அபூர்வமாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      முந்தின உடுப்பி பதிவு படித்தீர்களா?

      முன்பு சொல்லி இருக்கிறீர்கள் பெரும்பாலும் தனியாகத்தான் போவீர்கள் என்று.
      தங்கவாளை பார்த்தீர்களா மகிழ்ச்சி. நாங்களும் நன்றாக தரிசனம் செய்தோம்.கூட்டம் இருந்தாலும் எல்லோரும் சரஸ்வதி மண்டபத்திலும், விளக்கு வைக்கும் இடத்தில் இருந்தார்கள் அதனால் அம்மன் சன்னதிக்கு போகும் வரிசையில் அவ்வளவாக இல்லை இருந்த கூட்டமும் விறு விறு என்று போய் விட்டது.

      முன்பு சொல்லி இருக்கிறீர்கள் காமிரா இல்லாமல் படங்கள் எடுக்கவில்லை என்று.
      என்ன செய்வது சில கோவில்கள் கலை அம்சம் நிறைந்த கோவில்கள் போன போது படம் எடுக்க முடியவில்லைதான் எங்களுக்கும்.

      நீக்கு
  12. நல்ல தேர்ந்த புகைப்படக் காரரைப் போல் மிக அழகாகப் படங்கள் வந்திருக்கின்றன. விளக்கங்களும் அருமை. குருவிகள் மட்டுமல்ல பொதுவாகப் பறவைகளே மேற்கே போகப் போக அதிகம் பார்க்கலாம். அளவிலும் பெரிதாக இருக்கும். நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போ காகம், கிளி, மைனா ஆகியவை இங்குள்ளவற்றை விட ஒரு சுற்றுப் பெரிதாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். அதே போல் கழுகுகளும்! மேலே பறந்தால் சூரியனே மறைந்துவிடும் அளவுக்கு இறக்கைக பெரிதாகக் கழுகுகளும் பெரிதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படங்களை பாராட்டியதற்கு நன்றி.
      ராஜஸ்தான் அனுபவங்கள் , அங்குள்ள
      பறவைகளைப்பற்றிய உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.

      நாங்களும் அங்கு எல்லாம் போய் இருந்த போது பார்த்து இருக்கிறோம். மயில்களை, கழுகுகளை.

      நீக்கு
  13. இந்த மாதிரி தீபஸ்தம்பங்களை மேற்கே உள்ள மாநிலங்களின் கோயில்களிலும் வடக்கே, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மத்யபிரதேசம் ஆகிய மாநிலங்களின் கோயில்களிலும் காணலாம். கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோயிலிலும் பார்த்த நினைவு. நாங்க பத்தரை , பதினோரு மணி அளவில் போனதால் அப்போவும் அக்ஷராப்பியாசங்கள் நடந்து கொண்டிருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களிலும் தீபஸ்தம்பங்கள் இருக்கும். இந்த விளக்கு ஒரே கல்லில் ஆன உயரமான தீபஸ்தம்பம் என்று சொல்கிறார்கள்.

      நாங்கள் காலை தான் கோவில் போனோம். கோவிலில் எல்லா நேரமும் அட்சராப்பியாசம் நடக்குமாம்.
      உங்கள் கருத்துக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  15. படங்கள் அனைத்தும் அருமை... இரண்டு குருவிகள் - சிறப்பு (எனக்கு வியப்பு...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      //இரண்டு குருவிகள் - சிறப்பு (எனக்கு வியப்பு...)//
      ஜோடி குருவிகள் என்பதால் வியப்பா?

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. கொல்லூர் மூகாம்பிகை கோவில் படங்கள் கொள்ளையழகு.

    நான் இன்னும் தரிசனம் செய்யலை, அவள் அருள் வேணும்.

    இந்தக் கோவிலைப் பற்றிப் படித்தாலே எம்.ஜி.ஆர், ஜானகி அவர்களின் நம்பிக்கை, பலவித விஷயங்கள் (புத்தகங்களில் படித்தது) நினைவுக்கு வந்துவிடும். ஜானகி அவர்களிடம் இனி இந்தக் கோவிலுக்கு வர எம்ஜிஆருக்கு பாக்கியம் கிடையாது என்ற விஷயத்தை அந்தக் கோவிலில் உள்ள தந்திரி கூறினார் என்று படித்திருக்கிறேன். இதுபோல, அந்தச் சமயத்தில் இளையராஜா வீட்டிற்கு வந்திருந்த ஒரு பெண் சித்தரை தரிசனம் செய்வதற்காக எம்ஜிஆர் புறப்பட்டு வந்ததாயும், அவர் வருவதற்கு முன்னால் அந்தச் சித்தர் எழுந்து சென்றுவிட்டதாகவும் சொல்வார்கள். நம் வாழ்க்கையே நமக்குத் தெரியாத, ஆனால் எழுதி வைத்த பாதையின் வழி பயணிக்கிறது என்றும், சக்தி உள்ளவர்களுக்கு அது அப்பட்டமாகத் தெரியும் என்றும் சொல்வார்கள்.

    இடுகையைப் படிக்கும்போது நினைவலைகள் எங்கெங்கோ செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      படங்களைப் பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.

      அன்னை மூகாம்பிகை விரைவில் அருளட்டும்.

      நிறைய படித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

      நம் வாழ்க்கை நமக்கு தெரியாது அவன் எழுதி வைத்த பாதையில் தான் பயணிக்கிறது என்பது உண்மை.
      சென்ற காலம், நிகழ்காலம்,வருங்காலம், தெரிந்த சித்தர்கள் நிறைய இருக்கிறார்கள்.
      இருக்கும் காலத்தை நல்லபடியாக வாழ்த்து கழிக்க வேண்டும் இறையருள் துணையுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. உங்களின் இப்பதிவு, நான் பார்க்காத, ஆனால் பார்க்க ஆசைப்படுகின்ற மற்றொரு கோயிலுக்கு இட்டுச் சென்றது. 1980வாக்கில் கோவையில் பணியாற்றியபோது குருவாயூரப்பனைப் பார்க்கவேண்டும் என்ற நெடுநாள் ஆசை நிறைவேறியது. அதுபோல பார்க்கவேண்டியஇடங்களைப் பற்றி இவ்வாறு படிக்கும்போது இதுபோன்ற தலங்களைப் பார்க்கும் ஆசை இன்னும் மேம்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

      //கோவையில் பணியாற்றியபோது குருவாயூரப்பனைப் பார்க்கவேண்டும் என்ற நெடுநாள் ஆசை நிறைவேறியது//

      என் அப்பாவும் ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊர் மாற்றல் ஆகி போகும் முன் அந்த ஊர் கோவில்கள், மற்றும் அந்த ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு அழைத்து சென்று விடுவார்கள்.


      //இவ்வாறு படிக்கும்போது இதுபோன்ற தலங்களைப் பார்க்கும் ஆசை இன்னும் மேம்படுகிறது.//

      நீங்கள் சொல்வது சரிதான். நாம் பார்க்க நினைத்த கோவில்களை தொலைக்காட்சியில் காட்டும் போது பத்திரிக்கையில் படிக்கும் போது குறித்து வைத்துக் கொள்வோம் போக வேண்டும் என்று.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.



      நீக்கு
  18. அன்னை மூகாம்பிகை பார்ப்பதற்கு மிக அழகு.

    பதிலளிநீக்கு