கர்நாடகா பயணத் தொடரில் இந்தக் கோவிலும் உண்டு.குக்கி சுப்பிரமணியா கோவில் போய்விட்டு வழியில் உள்ள இந்த ராமர் கோவில் போனோம்.
ஸ்ரீ ராம ஷேத்ரா என்று அழைக்கப்படுகிறது. 1978 ல் ஸ்ரீ ஆத்மானந்த சரஸ்வதி என்பவர் மூன்றடுக்குகள் உள்ள இந்த கோவிலைக் கட்டி இருக்கிறார்.
இராமாயணம் பற்றிய சிற்பங்கள் முகப்பில் உள்ளன.
மங்களூரிலிருந்து 74 கி.மீ, தர்மஸ்தலாவிலிருந்து 3 1/2 கி.மி தூரத்தில் கன்யாடியில் ஸ்ரீ ராம க்ஷேத்ரா என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீராமர் கோவில் உள்ளது.
பட்டாபிஷேகக் காட்சியில் ராமர் அழகாய் கொலுவீற்று இருக்கும் கோவில்.
இருபக்கமும் இது போல் யானை உள்ளது போல்மண்டபம் இருக்கிறது. அடிக்கடி மழை பொழிவதால் படிகளுக்கும் மேல் கூரை அமைத்து இருக்கிறார்கள்.
இராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்ட அழகான முகப்பு மண்டபம்
அழகுக்கு வளர்க்கப்படும் புற்கள் என்று அழகாய் ஒரு தோட்டம் நடுவில் இருக்கிறது
இந்த மண்டபத்திற்குள் மனிதத் தலையுடன் பாம்பு நடுவில் இருக்கிறது, சிலைக்கு இரு பக்கமும் ஐந்துதலைகளுடன் நாகம் இருக்கிறது.
நாங்கள் போய் இருந்த போது ஐயப்ப பக்தர்கள் நிறைய பேர் வந்து இருந்தார்கள்.
கீழ்த் தளம், அப்புறம் மேலே இரண்டு மாடியில் மிக அழகாய் அமைந்த கோவில்.
முதல் தளத்தில் பெரிய தூண்களை உடைய அழகிய பஜனை மண்டபம் உள்ளது.(நிறைய பேர் அமர்ந்து பஜனை செய்யலாம்) படம் எடுக்க அனுமதி இல்லை உள்ளே.
சலவைக் கல்லால் ஆன கோபுரம். கோவில் உள்ளே எல்லா உருவச்சிலைகளும் சலவைக்கல்லால் செய்யப்பட்டது. மிக அழகாய் ஆடை அணிகலன்கள் , மலர் மாலைகளுடன் கண்கவர் தோற்றத்தில் காட்சி அளித்தார்கள்.
நவக்கிரகங்கள், அவரவர்களுக்கு உரிய வாகனங்களில் இருக்கிறார்கள். நவக்கிரகங்கள் சிலைகள் கல்லில் வடிக்கப்பட்டு இருக்கிறது.
ராமருக்கும், அனுமனுக்கும் தனித்தனியாக மரத்தேர்கள் உள்ளன. 188 உயர வெள்ளித் தேர் இருக்கிறது.
அனுமன், நவதுர்க்கா இருக்கிறார்கள். ராம நவமி சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
கோவிலுக்கு உள்ளே கடைகள் நிறைய இருக்கின்றன.
இக்கோயிலை வணங்கியபின் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்றோம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகன்யாடி ஸ்ரீ ராமர் கோவில் அருமையாக உள்ளது. படங்களும், அழகாக எடுத்துள்ளீர்கள். இந்தக் கோவில் பெயர் இதுவரை அறிந்ததில்லை. நல்ல அமைப்பாக ஸ்தூபி மாதிரி உள்ள சலவைக்கல் கோபுரங்களும், வெள்ளித் தேரும் அம்சமாக உள்ளது.
தாங்களும் தங்கள் கணவருமாக கோவில் முன்புறத்தில் இருக்கும் போட்டோ நன்றாக உள்ளது. தாங்கள் படங்களுக்கேற்ப விளக்க விளக்க ஸ்ரீ ராமரை மனக்கண்ணில் ஆனந்தமாக தரிசித்து கொண்டேன். அருமையான விபரங்கள் தங்களுடன் வந்த உணர்வை தோற்றுவித்தது. நானும் உங்களுடன் சேர்ந்து அனைவரும் நலம் பெற வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபயணத்திட்டத்தில் இல்லை இந்த கோவில் . தர்மஸ்தலா போகும் வழியில் இந்த கோவில் இருந்தது, எங்களுடன் வந்தவர்கள் இந்த கோவிலை பார்த்து விட்டு போகலாம் என்றதால் போனோம். கோவில் உள்ளே மிகவும் அழகாய் இருந்தது. கோவில் ஒரு காணொளி பார்த்தேன் அதில் உள்ளே எல்லாம் காட்டினார்கள். அதை தரலாம் என்று இன்று தேடினேன் கிடைக்கவில்லை.
நீங்கள் ஆனந்தமாக தரிசித்து கொண்டது மகிழ்ச்சி. படங்களைப் பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.
அனைவரும் நலம் பெற வேண்டிக் கொள்வோம்.
புதிதாகக் கட்டப்பட்ட ஸ்ரீராமர் கோவிலா? மிக மிக அழகாக இருக்கு.
பதிலளிநீக்குஎப்படியோ அதனையும் போய் தரிசனம் செய்துவிட்டீர்கள்.
ரொம்ப சுத்தமாக கோவில் இருக்கு. நல்ல விஸ்தாரமாகவும்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குதர்மஸ்தலா போகும் பாதையில் இருப்பதால் இந்த அழகான கோவில் தரிசனம் கிடைத்தது. கோவில் மிகவும் சுத்தமாக இருக்கிறது , தனியார் கோவில் என்பதால்.
கெடுபிடி அதிகம் வெளிப்பக்கம் மட்டும் தான் படம் எடுக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் ரொம்ப அழகு. புத்தம் புதுசாக எல்லாம் பளிச்சென்று இருக்கின்றன. ஆனால் அதென்னவோ ஒரு கோவிலுக்கான ஃபீல் இல்லை! நவீன மண்டபம் போல உள்ளது. ரொம்ப ரிச் ஆக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு1978 ல் கட்டினாலும் நன்றாக பராமரிக்கிறார்கள்.
//ஒரு கோவிலுக்கான ஃபீல் இல்லை! நவீன மண்டபம் போல உள்ளது. ரொம்ப ரிச் ஆக இருக்கிறது.//
வட நாட்டு கோவில் போல தான் இருக்கிறது.
தனியார் கோவில் ரிச்சாகத்தானே இருக்கிறது.
மூன்று அடுக்குகளா? மூன்று தளங்களுக்கும் பக்தர்கள் செல்ல முடியுமா?
பதிலளிநீக்குமூன்று தளங்களுக்கும் பக்தர்கள் செல்ல முடியும்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
புதிதாக ஒரு தலத்தை அழகான படங்களுடன் அறிந்து கொள்ள முடிந்தது...
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
ஜெய் ஸ்ரீராம்...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
அழகான முறையில் படம் எடுத்து இருக்கிறீர்கள். விவரங்கள் அருமை.
பதிலளிநீக்குஜெய் ஸ்ரீராம். வாழ்க வளமுடன்...
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ஜெய் ஸ்ரீராம்.
படங்கள் விளக்கங்கள் அருமை அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் ஈர்க்கின்றன. தகவல்களுக்கும் அருமை சகோதரி
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் மிக அழகாக இருக்கின்றன கோமதிக்கா
பதிலளிநீக்குகோயில் பூரி கோயில் கோபுரம் போன்று இருக்கிறது. ஆனால் டக்கென்று பார்க்கும் போது கோயில் போல் இல்லை குறிப்பாக நீங்களும் மாமாவும் நிற்கும் பேக் க்ரவுண்டில் இருக்கும் படத்தைப் பார்த்ததும் எனக்கு நம் ராமகிருஷ்ணா பரமஹம்ஸ தியான மண்டபம் ஹால் எமற்றும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் நினைவுக்கு வந்தது!
அடுக்காகத் தளங்களுமா? வித்தியாசமான கோயில். சலவைக்கல் என்று நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் வட இந்திய கோயில் பெரும்பாலும் சலவைக்கல்லால் கட்டப்பட்டிருக்கும் அப்படித்தான் இருக்கும் போல என்றால் கோபுரம் பூரி கோயில் போல இருக்கு.
ஆனால் தென்னிந்திய வகை போல இல்லை.
படங்கள் ரொம்ப நல்லாருக்கு கோமதிக்கா.
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//நம் ராமகிருஷ்ணா பரமஹம்ஸ தியான மண்டபம் ஹால் எமற்றும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் நினைவுக்கு வந்தது!//
ஓ! அவர்களுக்கு பிடித்த மாதிரி கட்டி இருக்கிறார்கள் உட்புறம் மிக அழகாய் கலை நுணுக்கத்துடன் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான, நிறைவான கோயில் உலா. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பு கோமதி.,
பதிலளிநீக்குஎன் நாத்தனார் பங்களூரில் இருந்த போது
இந்தக் கோவில் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.
நவக்ரஹங்களுக்காக ஆரம்பித்த கோவில் ராம
பரிவாரத்துக்கும் அனுமனுக்கும்
விரித்து செய்யப் பட்டதாகச் சொல்வார்கள்.
எப்படியோ நமக்கு நல்ல அம்சத்துடன் அமைந்த கோவில் கிடைத்தது.
பிரம்மாண்டமாக இருக்கிறது.'
நல்ல கலை நயம்.
ஸ்ரீராமன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
அழகான படங்கள் அம்மா. நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஇந்த கோவில் பற்றி மேலும் நீங்கள் சொன்ன விவரங்களுக்கு நன்றி அக்கா.
//எப்படியோ நமக்கு நல்ல அம்சத்துடன் அமைந்த கோவில் கிடைத்தது.
பிரம்மாண்டமாக இருக்கிறது.'
நல்ல கலை நயம்.//
ஆமாம், அக்கா நமக்கு இறைவனை வேணட அருமையான இடம் கிடைத்து இருக்கிறதுதான்.
ஸ்ரீராமன் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
அழகான கோவில் பூரி ஜகந்நாதர் கோவிலை படங்களில் பார்த்திருக்கேன். அது மாதிரி இருக்கு. நீங்களும் ,சாரும் நிற்கும் போட்டோ அட்டகாசமா இருக்கு. பின்புற பிண்ணனி சூப்பர். உங்க ஆரஞ்ச் வண்ண சேலை சூட் ஆக இருக்கு.
பதிலளிநீக்குஇராமயண காட்சிகள் கொண்ட மண்டபம் அழகா இருக்கு. வெளிநாட்டில் இருக்குமாப்போல இருக்கு. அழகா படங்கள் எல்லாம் இருக்கு. நீங்கள் முகப்பில் போட்டிருக்கும் கோபுரம் எந்த கோவிலுடையது அக்கா?
வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வெளி நாட்டு கோவில் போல இருக்கா!
முகப்பில் போட்டு இருக்கும் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோபுரம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அம்மு.
ஸ்ரீ ராம ஷேத்ரா தரிசனம் கண்டேன் மா ...
பதிலளிநீக்குஇராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்ட அழகான முகப்பு மண்டபம் ...மிக அழகு
வித்தியாசமான அமைப்பில் கோவில் மிக அருமையாக உள்ளது ...
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்கு//இராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்ட அழகான முகப்பு மண்டபம் ...மிக அழகு//
அந்த அழகு தான் எங்களை அந்த கோவிலை பார்க்க வைத்தது.
வித்தியாசமான் கோவில்தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி அனு.
இந்தப் பதிவையும் இப்போத் தான் பார்க்கிறேன். கோயிலையும் பார்த்ததில்லை. நாங்க தர்மஸ்தலா போனப்போ யாரும் இதைப் பற்றிச் சொல்லவும் இல்லை. தர்மஸ்தலாவில் தான் சாப்பாட்டுக்குக் கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்துட்டுச் சாப்பிடவில்லை. வெளியேயும் கிடைக்காமல் தவித்தோம். கஜபூஜை நடந்து யானை பிளிறி ஸ்வாமியிடம் விடைபெற்றுக்கொண்டது எல்லாம் பார்த்தோம். ஆனால் ராமர் கோயில் பற்றித் தெரியாததால் போகவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குநாங்கள் போகும் வழியில் இருந்ததால் உடன் வந்தவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள் பார்க்க அதனால் பார்க்க முடிந்தது.
தர்மஸ்தலாவில் கோவிலிலும் கூட்டம் காத்து இருந்து தான் சாமி பார்த்தோம். சாப்பிடவும் இல்லை. வெளியே ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம்.
கஜபூஜை பார்த்தது மகிழ்ச்சி.
படங்கள் எல்லாமும் நன்றாக வந்திருக்கின்றன. முகப்பு மண்டபம் அழகோ அழகு! காணொளியில் என்ன காட்டினார்கள்?
பதிலளிநீக்குமுகப்பு மண்டபத்தின் அழகுதான் அந்த கோவிலைபார்க்கும் ஆவலை தூண்டியது.
நீக்குகாணொளியில் அந்த கோவிலி தேர் திருவிழா, கோவில் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டது, ராமர் பட்டாபிஷேகக் காட்சியில் அழகாய் கொலுவீற்று இருக்கும்
இடம் மற்றும் கோவிலைசுற்றி காட்டினார்கள்.
உங்கள் கருத்துக்குக்கு நன்றி.
உங்களின் இந்த பதிவை படித்து விட்டேன் என்று நினைத்து தவற விட்டு விட்டேன் போலிருக்கிறது. கோவிலை நேரில் தரிசித்த உணர்வை தரும் படங்கள். கோவில் நன்றாக பராமரிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது. சுத்தமாக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடஷேவரன், வாழ்க வளமுடன்
நீக்குகோவிலை நன்றாக பராமரிக்கிறார்கள்.
பதிவையும் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.