கயிலாயத்தில் ஆலாலசுந்தரர் எனவும், பூவுலகில் வாழ்ந்த போது ஆளுடைநம்பி, ஆரூரர், வன்றொண்டர் எனவும் அழைக்கப்பட்டவர் சுந்தரர்.
சிவபெருமானால் தம்பிரான்தோழர் எனவும் சிறப்பிக்கப் பட்டார்.
தோழமையுடன் இறைவனை அணுகியவர். உரிமையுடன் அனைத்தையும் வேண்டிப்பெற்றவர்.
சுந்தரர் வெள்ளை யானையில், சேரமான் நாயனார் குதிரையில் கயிலை சென்ற காட்சி.
யூடியூப்பில் தெரிய வில்லை என்றால் இந்த சுட்டியைப் பயன்படுத்திப் பாடலைக் கேட்கலாம்.
மாமா அவர்கள் இளமையாக இருக்கும்போது பாடிப் பதிவு செய்து வைத்துக் கொள்ளாதது ஒரு பெரிய வருத்தம் எல்லோருக்கும். வயதான பின் ஒலி நாடாவில் பதிந்த பாடல்களை இப்போது என் கணவரின் தம்பி யூடியூப் பதிவாக பதிவு செய்து வருகிறார்கள்.
சுந்தரர் பற்றிய வரலாறை சகோ திரு. துரைசெல்வராஜூ அவர்கள் அவர்களுக்கே உரிய அழகான எழுத்து நடையில் அருமையாக எழுதி இருக்கிறார்கள்.
மூன்று நாட்கள் இந்த பயிலரங்கத்தில் கலந்து கொண்டேன்.
சுந்தரர் குருபூஜையை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி.
சுந்தரர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவர் பாடல்களில் இசைக்கருவிகள் இடம்பெற்ற பாடல்களைப் பாடினார். அவை இங்கே-
முதலில் இருப்பவர் கலைமாமணி முனைவர் சுரேஷ்சிவன் அவர்கள் அவர்தான் தேவார ஆசிரியர். இரண்டாவது படத்தில் இருக்கும் முனைவர் யாழ் சந்திரா அவர்கள் தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியாராக இருப்பவர்கள் அவர்கள் வாழ்த்துரையுடன் நிகழச்சி ஆரம்பம் ஆனது.
முழவு எனும் மிருதங்க வாத்தியம் பற்றி மிருதங்க வித்வான் தியாகராஜன் அவர்கள் பேசினார்கள். மிருதங்க வாத்தியக் கருவியின் படிப்படியான வளர்ச்சி.எந்த மரங்களில் செய்யப்படுகிறது என்று எல்லாம் சொன்னார்கள். இப்போது பலாமரத்தில்தான் அதிகம் செய்யப்படுகிறதாம்.
மிருதங்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதி இருக்கிறார்கள் என்றும், 30 ஆண்டுகளாய் மதுரையில் நிறைய மிருதங்கம் வாசிக்கும் மாணவர்களைத் தயார் செய்து இருப்பதாகச் சொன்னார்கள்.
இந்த குடமுழா வாத்தியத்தை பிரம்மா வாசிப்பது போல் உள்ள சிற்பம் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடிமரத்திற்கு பின்புறம் உள்ள தூணில் இருந்தது முன்பு எடுத்தேன் அந்தப் படத்தைத் தேட வேண்டும்.
மணக்குடிக் கோவிலுக்கு திருவாதிரைக்குப் போய் இருந்தோம்,மாயவரத்தில் இருக்கும்போது. மாயவரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் இருக்கும் கோவில். அந்த கோவிலில் நடராஜர் காலுக்கு அடியில் குடமுழா வாத்தியத்தை ஒருவர் வாசிப்பார் . இந்த கோவில் பதிவு போட்டு இருக்கிறேன். தேட வேண் டும்.
நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாடப்பட்ட சுந்தரர் தேவாரத்தை இங்கு பகிர்ந்து இருக்கிறேன். தேவாரம் பாட விருப்பம் இருந்தால் அவர் போன் நம்பருக்கு போன் செய்து இணைந்து கொள்ளலாம். புதன் கிழமைதோறும் சொல்லித் தருகிறார்.
மூன்று நாளும் நன்றாக இருந்தது. நிறைய அன்பர்கள் கலந்து கொண்டார்கள். ஞாயிறு காலை அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் காவடி சிந்து பாடல்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்தது.
சுரேஷ்சிவன் அவர்கள் பல வருடமாய் இலவசமாக தேவாரம் கற்றுக் கொடுக்கிறார், தேவாரத்தலங்களுக்குத் தன்னிடம் பயில்பவர்களை அழைத்து சென்று அங்கு தேவாரங்களைப் பாட வைக்கிறார். என் தங்கைகள், என் அண்ணி எல்லாம் கலந்து கொள்கிறார்கள்.
சான்றிதழல் கிடைத்து இருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த நாளில் இறைவனைப்பற்றிச் சிந்திக்கவும், அவன் புகழைப் பாடவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இறைவனுக்கு நன்றி. சுரேஷ்சிவன் அவர்களுக்கு நன்றி.
சுந்தரர் குருபூஜையில் சுந்தரர்தேவார பாடல்கள், என் மாமனார் அவர்கள் பாடிய சுந்தரர் தேவாரம் பகிர்ந்து கொண்டேன்.
இன்னொரு குழுவிலும் சேர்ந்து இருக்கிறேன். திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் பாடுதல் உண்டு அதில் திருமதி. கோடீஸ்வரி அவர்கள் (85 வயது) தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திருப்புகழ், மற்றும் தனிப் பாடல்கள் எல்லாம் ஒரு மணி நேரம் சொல்லித் தருகிறார். அவர்கள் கோவையில் இருக்கிறார்கள், என் மாமனார் இறந்தபோது வந்து திருவாசகம் படித்தார்கள். என் மாமாவின் பெயரைச்சொல்லி அவர்கள் மருமகள் அம்மா என்று போனில் அறிமுகப்படுத்திக் கொண்டபோது மகிழ்ந்து போனார்கள். வீடியோ கிடையாது. லேண்ட் லைனில் என்னை இணைத்து இருக்கிறார்கள்.
இன்று மாலை சுந்தரர் தேவாரம் படித்தோம். நிறைய பாடல்களைச் சொல்லித் தந்தார்கள். 85 வயதுக்கு மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் எண்ணம் மிக உயர்ந்தது. அதுவும் மகிழ்வாய் சிரித்துச் சிரித்து, பாடல் இடம்பெற்ற ஊர், பாடல் பாடப்பெற்ற காரணம், பாடினால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் சொல்கிறார்கள்.
என் மாமனார் அவர்கள் 80 வயது வரை கற்றுக் கொடுத்தார்கள், பாடசாலை சென்று . அப்புறம் சிறிது காலம் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள் விநாயகர் கோவிலில் சொல்லிக் கொடுத்தார்கள்.
அவன் அருளால் அவன் தாள் வணங்கி மகிழ்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
==========================================================================
தேவாரப் பாடல்கள் பாடுவதை இப்போது கேட்டு நெகிழ்ந்தேன் மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஎன் மனதில், சிறிது வயதானபோதே இவ்வளவு நன்றாக பாடுகிறவர், இளமையில் எவ்வளவு கணீர் என்று பாடியிருப்பார் என்று தோன்றியது.
மற்றவற்றை இனிப் படிக்கிறேன்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஇந்த பாடல் பாடும் போது 65 வயது இருக்கும். முதலில் கேஸட்டில் பதிவு செய்த பாடல், அப்புறம் மாமாவின் 95 வது வயதில் "பொன்முழுக்கு " செய்தோம் அப்போது சிடியாக மாற்றினோம். இப்போது சாரின் தம்பி அந்த பாடல்களை ஒவ்வொரு அமாவசைக்கும் ஒரு பாடலை யூடியூப் பாடல்களாக பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்து குழுவிற்கு அனுப்பி விடுவார்கள்.
80 வயது வரை உங்கள் மாமா திருமுறைகள் கற்றுக்கொடுத்தார்கள். தற்போது 85 வயதான பெண்மணி, திருமுறைகள் கூட்டு வழிபாடு முறையில் சொல்லுகிறார்கள். தற்போது முனைவர் சுரேஷ்சிவன் அவர்கள் மற்றவர்களோடு திருமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற செய்தி ரொம்பவும் பிரமிப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குபக்தி வளர்க்க தன்னாலியன்றவற்றைச் செய்பவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
அதிலும் இணைய உபயத்தில், நேரடியாக அதில் இணைந்துகொள்ள முடியும் என்பது சிறப்பு.
சார்..திருமுறைகளைப் பாடிப் பயிற்சி எடுத்திருக்கிறாரா (அவர் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறாரா?). அவர் பாடியதை காணொளி எடுத்திருக்கிறீர்களா?
தலைமை தமிழாசிரியர், கோவை மாநகராட்சி பள்ளியில் வெளை முடித்து வந்து 5 மணிக்கு மருதநாயக முதலியார் பாடசாலைக்கு (கோயமுத்தூர்.) போய்ச் சொல்லி கொடுத்து வருவார்கள்.
நீக்குகோடிஷ்வரி அம்மாவை மிகவும் பாராட்ட வேண்டும், வீட்டில் வேலைகள் அதனுடன் இப்படி இறைத் தொண்டும் செய்து வருவது மிகவும் நல்ல விஷயம்.
சுரேஷ் சிவன் அவர்கள் நிறைய செய்து வருகிறார் . அவருக்கு ராஜா முத்தையா மன்றத்தில் பொற்கிழி வழங்கினார்கள்.
தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்வதும்.
சார் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அப்பாவிடம், தனியாக எல்லாம் ஆனால் பாடம் நடத்தும் போது பாடுவதுடன் சரி. காணொளி எடுக்கவில்லை.
சொல்கிறேன் .
திருமுறைச்செல்வர் திரு S. அருணாசலம் பிள்ளை(1910-2014), தேவார ஆசிரியர்,
நடராஜர் திருவடிக்கீழ் குடமுழா வாத்தியம் வாசிக்கும் சிற்பம் கண்ணைக் கவர்ந்தது. இதெல்லாம் யாரேனும் எடுத்துச் சொன்னால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
பதிலளிநீக்குபிரம்மா குடமுழா வாத்தியம் வாசிப்பது மீனாட்சி அம்மன் கோவிலில் எடுத்த படம் கிடைக்கவில்லை கிடைத்தால் வேறு ஒரு சமயத்தில் போடுகிறேன். முன்பு படம் எடுக்க விட்ட போது எடுத்தது.இப்போது காமிரா, செல்போன் எதுவும் உள்ளே எடுத்து போக அனுமதி இல்லை.
நீக்குநடராஜர் திருவடிக்கீழ் குடமுழா வாத்திய படம் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அவ்வளவாக யாரும் அறியாத விஷயங்களைத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். இசைக்கருவிகள் பற்றிய தகவல்கள் அருமை! அதுவும் நடராஜருக்குக்கீழ் வாத்தியம் இசைக்கும் சிற்பம் அவ்வளவு அழகாக உள்ளது! 85 வயதில் தேவாரம், திருப்புகழ் கற்றுத்தரும் அம்மையாரைப்பற்றி அறிந்த போது ' அதனால் தான் அவர்களுக்கு கோடீஸ்வரி என்ற பெயரோ? அதனால் தான் பழம்பெருமை வாய்ந்த பாடல்களை செல்வங்களாக வழங்குகிறார்களோ?' என்று தோன்றியது!!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குஇசைக்கருவிகள் பற்றிய தகவல்கள் திரு சுரேஷ்சிவன் அவர்களின் பல ஆண்டு உழைப்பு. அதை நமக்கு தெரிவித்து மகிழ்கிறார்.
அவர்கள் நீங்கள் சொன்னது போல் எண்ணத்தால் கோடீஸ்வரிதான். எனக்கு வயதாகி விட்டது எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ளுங்கள் என்னிடம் என்று வகுப்புக்கு வர முடியாமல் இருப்பவர்களை சொல்கிறார்கள்.
நம்மால் தொடர்ந்து அமர முடிய மாட்டேன் எங்கிறது பல மணி நேரம் அமர்ந்து பாடல்களை சொல்லி தருவது இறைவனின் கருணைதான்.
//நடராஜருக்குக்கீழ் வாத்தியம் இசைக்கும் சிற்பம் அவ்வளவு அழகாக உள்ளது!//
எல்லோருக்கும் அந்த சிற்பம் பிடிக்கும் என்று தேடி எடுத்து போட்டேன்.
உங்கள் அருமையான கருத்து பகிர்வுக்கு நன்றி.
மாமா குரல் அற்புதம். மிக அழகாகப் பாடுகிறார். இவர் கச்சேரிகள் கூட செய்திருக்கலாம். நல்ல குரல்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குமாமாவின் குரலை கேட்டது மகிழ்ச்சி.
மாமாவின் மாணவர்கள் கச்சேரிகள் செய்கிறார்கள்.
சுந்தரர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். பயிலரங்கத்தில் கலந்து கொண்டீர்கள் என்பது சிறப்பு. சுரேஷ் சிவன் அவர்கள் நல்ல சேவை ஆற்றுகிறார்.
பதிலளிநீக்குமூவர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் பற்றிய தகவல்கள் இருக்கிறது.
நீக்குநான் நேற்று சுந்தரர் குரு பூஜை என்பதால் அந்த தகவலை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.
முனைவர் சுரேஷ் சிவன் அவர்கள் நல்ல சேவை செய்து வருகிறார் என்பது உண்மை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தேவாரம், இசைக்கருவிகள் பற்றி அருமையான தொகுப்பு
பதிலளிநீக்குவணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை. மகிழ்ச்சி. நம் தேவாரத்திற்கு இணை ஏது? தினமும் காலை ஒரு தேவாரப்பதிகத்தைப் படித்துவருகிறேன். அவ்வப்போது பிரபந்தமும் படிக்கிறேன். இவற்றையெல்லாம் படிக்க நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்கு//தினமும் காலை ஒரு தேவாரப்பதிகத்தைப் படித்துவருகிறேன். அவ்வப்போது பிரபந்தமும் படிக்கிறேன்//
மகிழ்ச்சி . நானும் பிரபந்தம் படிப்பேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான ஆன்மிக பதிவு. எல்லாவற்றையும் விபரமாக தந்துள்ளீர்கள். உங்கள் மாமா அவர்களுக்கு நல்ல தெளிவான கம்பீரமான குரல். தேவார பயிற்சிகள் பற்றி தெரிந்து கொண்டேன். இறை பக்தியை பின்பற்றி வருவதும், வளர்ப்பதென்பதும் பூர்வ ஜென்ம புண்ணியங்களில் ஒன்றுதான் அத்தகையவர்களை மனதாற வணங்கிங் கொள்கிறேன். தகவல்கள் தந்தமைக்கு நன்றி. தேவாரத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள்பற்றிய விபரங்கள் நன்றாக உள்ளன. குடமுழா வாத்திய கருவியை பற்றிய விளக்கம் அறிந்து கொண்டேன். அந்த சிற்பமும், வாத்தியமும் கண்களை கவர்கிறது. நிறைய ஆன்மிக தகவல்களை பதிவில் தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.
இப்படி நீங்கள் பதிவிடுவதே நல்லதொரு இறைபக்தியை வளர்ப்பதுதான். இந்தப் பதிவை படிக்க வைத்தே அவன் தந்த பாக்கியந்தான்.. ஓம் நமசிவாய.. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குமாமாவின் குரலை பாராட்டியதற்கு நன்றி. தேவாரம் கற்றுக் கொடுப்பவர்களைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மைதான் அவர்களின் குரல்வளம், பாடகிடைத்த பாக்கியம் எல்லாம் இறைவன் கொடுத்த பூர்வ ஜென்ம புண்ணியம் தான்.
மாமாவின் இறைபக்தி அவர்களின் தொண்டு எங்களுக்கு கிடைத்த வரம்.
சுரேஷ்சிவன்அவர்கள், கோடீஸ்வரி அம்மா அவர்களின் சேவை மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
நான் எப்போதோ எடுத்த படம் இந்த பதிவுக்கு உதவியதும் இறையருள்தான்.
//இந்தப் பதிவை படிக்க வைத்தே அவன் தந்த பாக்கியந்தான்.. ஓம் நமசிவாய.. அவனன்றி ஓர் அணுவும் அசையாது.//
ஆமாம் , எல்லாம் அவன் செயல்.
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி கமலா.
85 வயதிலும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் சிந்தையை கொடுத்தது இறையின் பாக்கியமே ..
பதிலளிநீக்குவாழ்க அவர்தம் தொண்டு.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு85 வயதில் நினைவாற்றல், குரல்வளம் இறைவன் கொடுத்தது தான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அருமையாக பாடி உள்ளார்... யூடியூப் பதிவாக மாற்றி வைத்தது சிறப்பு...
பதிலளிநீக்குகலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பு...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமாமாவின் பாட்டு கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.
கலந்து கொண்ட நிகழச்சி சிறப்பான நிகழ்ச்சிதான். சிறப்பாக வீணை, மிருதங்கம், குழல் , நாதஸ்வரம் வாசிப்பவர்களை வைத்து நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வாசிக்க வைத்தார்கள் எல்லோரும் தேவார பாடல்களை இசைத்தனர்.
உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.
நல்ல அருமையான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். இந்தச் சமயம் தோன்றும் மன அழுத்தத்திற்குச் சிறப்பான மருந்து. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. உங்கள் மாமனார் குரல் மிக அருமை! தெளிவு. நல்ல உச்சரிப்பு. இப்போதெல்லாம் இம்மாதிரிப் பாடக்கூடியவர்கள் அபூர்வமாகத் தான் கிடைக்கின்றனர். திரு சுரேஷ் சிவன் அவர்களும் கணீர் என்று பாடுகிறார். இந்தச் சின்ன வயசில் அவர் இத்தனை ஆர்வமுடன் தேவாரம் கற்றுக்கொடுப்பதைப் பாராட்டும்போதே 85 வயதான கோடீஸ்வரி அம்மையாரும் அதிசயிக்க வைக்கிறார். மொத்தத்தில் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள். தேவாரத்தில் இசைக்கருவிகள் பற்றிய தேவாரப்பாடல்களும் அந்தக் கருவிகள் குறித்த விளக்கங்களும் அருமையாக இருக்கின்றன. மொத்தத்தில் அருமையான, அபூர்வமான பதிவு. இத்தனை நாட்கள் நீங்கள் பதிவு போடாமல் இருந்தாலும் ஒன்றே ஒன்று போட்டாலும் அதை நன்றாகப் போட்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள், நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குமாமனார் அவர்கள் பாடலை கேட்டது அறிந்து மகிழ்ச்சி.
நீங்கள் சொன்னது போல் அருமையான நிகழ்ச்சிதான் .
//மன அழுத்தத்திற்குச் சிறப்பான மருந்து. //
உண்மை மன அழுத்ததிற்கு சிறந்த அருமருந்து தான்.
முனைவர் சுரேஷ்சிவன் அவர்களுக்கும் நல்ல குரல் வளம்.
சின்ன வயதுதான் 20 வருடமாக இந்த தொண்டில் ஈடு பட்டு இருக்கிறார், சிறிய வயதிலேயே இந்த தொண்டை ஆரம்பித்து இருக்கிறார்.
என் தங்கைகளும், என் அண்ணியும் நேரடியாக அவர்களிடம் பயிலும் மாணவிகள்.
அவர்கள்ச் சொல்லி நான் இதில் கலந்து கொண்டேன்.
கோவையில் என் தோழி உமையாள் மூலம் கோடீஸ்வரி அம்மா தேவார வகுப்பில் சேர முடிந்தது.
மூவர் தேவார பாடல்களில் இசைக்கருவிகள் பற்றி அவர் நடத்திய பயிலரங்கம் யூடியூப்பில்
கேட்டு மகிழலாம். நேஅரம் கிடைக்கும் போது பாருங்கள். நிறைய தகவல்கள் சொல்கிறார்.
உங்கள் அருமையான அழகான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தேவாரத் திருவமுது... அதனைப் பருகும் தோறும் பரவசம் அன்றி வேறொன்றில்லை...
பதிலளிநீக்குதேவார மூவருள் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளியவற்றின் பெயரே அர்ச்சனைத் திருப்பாட்டு என்பதாகும்...
உயரிய செய்திகளுடன் இந்தப் பதிவு மிளிர்கின்ற்து..
இந்த சிறப்பான பதிவில் என்னையும் குறிப்பிட்டுச் சொன்னதற்கு மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
நீக்கு//தேவாரத் திருவமுது... அதனைப் பருகும் தோறும் பரவசம் அன்றி வேறொன்றில்லை//
ஆமாம், சரியாக சொன்னீர்கள்.
//தேவார மூவருள் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளியவற்றின் பெயரே அர்ச்சனைத் திருப்பாட்டு என்பதாகும்...//
ஆமாம், இறைவனை பாடலால் அர்ச்சனை செய்தவர்.
நீங்களும் அன்று பதிவு போட்டீர்கள், அழகாய் விரிவாய் அதனால் நான் குறிப்பிட்டேன்.
உங்கள் பதிவும் சிறப்புதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களும் விவரணங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குஇதே போன்று வாசித்த நினைவு வந்தது துரை செல்வராஜு சாரின் தளத்தில் என்ற நினைவு வந்தது. சுந்தரர் பற்றிய கதையும்
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குசகோ துரை செல்வராஜூ அவர்களும் சுந்தரர் பற்றி போட்டு இருந்தார்கள்.
தம்பிரான் எனபது கேரளத்தில் தம்புரான் என்று சொல்வதுண்டு அந்த அர்த்தம் தானோ? மேன்மை பொருந்திய என்ற அர்த்தம்.
பதிலளிநீக்குதுளசிதரன்
தம்பிரான் என்பது தலைவன் என்ற பொருள் . தம்பிராட்டி தலைவி.
நீக்குபடங்களை ரசித்து செய்திகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
எப்படிக் "குட்டன்" என்னும் அழகிய சொல் கேரளத்தவர் சொந்தமானதோ அதே போல் "தம்பிரான்" "தம்பிராட்டி" என்பதும் மலையாளமொழியோடு இரண்டறக் கலந்து விட்டது. இதைப் போல் நிறையச் சொற்கள். ஓர் ஆய்வே செய்யலாம்.
நீக்குஆமாம் , நிறைய ஆய்வு செய்யலாம் தான்.
நீக்குமீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நீங்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டது சிறப்பு. நல்ல விஷயம் சகோதரி.
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆமாம் ,பயிலரங்கத்தில் கலந்து கொண்டது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது எனக்கும்.
நீக்குநன்றி.
கோமதிக்கா முதல் படம் பார்த்து தலைப்பு பார்த்ததுமே துரை அண்ணா போட்டிருந்தாரே கதையோடு என்று புரிந்துவிட்டது.
பதிலளிநீக்குஅட உங்கள் மாமானார் பாடிய திருமறை பாடல்கள் ஆஹா. நன்றாக இருக்கிறது கோமதிக்காஅ. வயதானபிறகும் கூட நன்றாகப் பாடியிருக்கிறார். ஆம் இளம்வயதில் அவர் பாடிப் பதியாமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கத் தோன்றும் தான். இருந்தாலும் இதுவாவது முடிந்ததே அத்தனை சந்தோஷம் இருக்கும். வீட்டிலும் அவர் குரல் கேட்கும் போது அவர் நம்முடனேயே இருப்பது போன்று ஒரு உணர்வு இருக்குமில்லையா.
எனக்கு ஒரு ஐடியா வருது இப்படி நம்வீட்டில் இருப்பவர்களின் குரல்களைப் பதிந்து வைத்தால் அவர்கள் இல்லாத போதும் கூட நம்முடன் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும் இல்லையா
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குசகோ துரைசெல்வராஜூ கதையை அழகாய்ச் சொல்லி விட்டார்கள். அதனால் நான் அவர்கள் சுட்டிக் கொடுத்து விட்டேன்.
மாமா பாட்டை நீங்கள் கேட்டது மகிழ்ச்சி. அமாவாசை அன்று அவர்கள் பாடலை கேட்போம், மகிழ்ச்சியாக இருக்கும், என்றும் இருப்பது போல்தான் நமக்கு உணர்வு தோன்றும் தான்.
காலம் மாற்றத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் இருக்கும் போது முன்பு பதிவு செய்து வைத்து இருந்த பாடல்களை கேட்டு மகிழ வசதிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
அன்பு கோமதி,
பதிலளிநீக்குதாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்.
மதுரையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதும்,
அவைகளில் நீங்கள் கலந்து கொள்வதும் மிக அருமை.
தமிழ் வளர்க்கும் மதுரையில் தேவாரம் ஒலிப்பதும் மிக மிக மகிழ்ச்சி.
அவற்றை நீங்கள் பதிவு செய்வதும் இன்னும் சிறப்பு.
தங்கள் மாமனார் குரல் மிக அருமை.
பக்திரசம் கூட்டும் குடும்பத்தில் நீங்களும் ஒன்றி இருக்கிறீர்கள்.
அக்காலத்து இசைக்கருவிகள் பற்றிய ஆராய்ச்சியும்
பேச்சும் அருமை.
சுந்தரர் வெள்ளையானை மேல் போகும் காட்சி
அதி அற்புதம்.
இந்தக்கால ட்ரம்ஸ் போலவே அப்போது இருந்த முழவு வாத்தியப்
படம் ...வர்ணிக்க மொழிகள் போதாது.
வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் சிறப்பான
பதிவைப் படிக்கப் படிக்க இன்பம்.
மகிழ்ந்திருங்கள்.
நிறைய எழுதுங்கள். வாழ்க நலமுடன்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குநேற்று இரவு தான் போட்டேன் அக்கா, தாமதம், மன்னிப்பு எல்லாம் எதற்கு?
நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் எப்போது வேண்டுமென்றாலும்.
சனிக்கிழமை தோறும் சொல்லித் தருவார் என் தங்கைகள், அண்ணி கலந்து கொள்வார்கள் நான் தூரத்தில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாது. இப்போது இணையம் என்பதால் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
மாமனார் பாடலை கேட்டது மகிழ்ச்சி.
மாமனார் சுந்தரர் குரு பூஜைக்கு வருட வருடம் கலந்து கொள்வார்கள்.உடல் நிலை சரியில்லாத போதும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். திருவஞ்சைக்களத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவாரம் பாடி வருவார்கள்.
இசைக்கருவிகள் பற்றிய ஆராய்ச்சியும் அவர் பேச்சும் அற்புதம் தான் அக்கா.
முழவு வாத்தியத்தின் மாற்றங்களை அழகாய் சொன்னார்கள்.
கைவலி, முதுகுவலி எல்லாம் கொஞ்சம் இருக்கிறது அதனால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்துக் கொண்டு படங்கள் சேர்த்து எழுதி வருகிறேன்.
உங்கள் விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
உங்கள் உற்சாக பின்னூட்டங்கள் தான் என்னை எழுத தூண்டுகிறது.
கர்ண்ட் போய்விட்டது கோமதிக்கா அதான் கருத்து போட்டது பாதியில் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குஒவ்வொரு இசைக்கருவிகள் பற்றியும் அது குறிப்பிடப்பட்டிருப்பது பற்றியும் தெரிந்துகொண்டேன்.
விளக்கங்கள் வாசித்தேன். உங்கள் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்று நீங்களும் அதில் கற்றது மகிழ்வான விஷயம் அக்கா.
உங்கள் மாமனார் வயதான பிறகும் கூடக் கற்றுக் கொடுத்து வந்தது நல்ல விஷயம் இல்லையாக்கா
நல்ல பதிவு
மீண்டும் கரன்ட் போய்விட்டது கோமதிக்கா
கீதா
கீதா, அதனால் என்னப்பா பரவாயில்லை .
நீக்குமீண்டும் வந்து பயிலரங்கம் பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.
மாமனார் வயதான பின்னும் சுறு சுறுப்பாய் இயங்கவைத்தது இசைதான்.
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகள் நிறைய இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
அருமையாகப் படியுள்ளார்
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
காலையில் தங்களது மாமனார் அவர்கள் பாடிச் செய்த திருப்பதிகம் எங்கே எனத் தேடுவதற்குள் அலுவலகத்தை அடைந்து விட்டது பேருந்து...
பதிலளிநீக்குஇப்போது தான் கண்டெடுத்தேன்...
ஐயா அவர்களது குரலைக் கேட்டதும் உச்சி முதல் பரவசம் மேலோங்கி நின்றது...
இப்படியான திருப்பதிகங்களைக் காதாரக் கேட்பதும் மனதார சிந்திப்பதும் நமது வாழ்வை
அர்த்தமுள்ளதாக மாற்றும் என்பதில் ஐயமே இல்லை...
பெரியவர்களின் ஆசியும் அன்பும் அனைவருக்கும் கிடைப்பதாக...
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குமாமாவின் பாடலை தேடி படித்து விட்ட்டஹு மகிழ்ச்சி.
அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல். எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடித்த பாடல் .சாரின் தம்பி இப்போது அப்பாவின் பாடல்களை ஆவணப்படுத்துகிறார்கள். எங்கள் வீட்டு இளையதலைமுறைகள் படித்தும் பாடியும் வருகிறார்கள்.
//இப்படியான திருப்பதிகங்களைக் காதாரக் கேட்பதும் மனதார சிந்திப்பதும் நமது வாழ்வை
அர்த்தமுள்ளதாக மாற்றும் என்பதில் ஐயமே இல்லை...//
நீங்கள் சொல்வது சரி.
//பெரியவர்களின் ஆசியும் அன்பும் அனைவருக்கும் கிடைப்பதாக...
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..//
மாமாவின் ஆசி அனைவருக்கும் என்றும் கிடைக்கும்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
காணொளி மிக அருமை ....அங்கும் இனி தொடர்கிறேன் ...
பதிலளிநீக்குஇணைய வழி கருத்தரங்குகள் மிக சிறப்பு மா ..நமது நேரத்தை சிறப்பாக நல்ல முறையில், மகிழ்வாக செயல் படுத்த உதவும் ..
குடமுழா வாத்தியத்தை பிரம்மா வாசிப்பது போல் உள்ள சிற்பம் மிக அழகு ...
திருமதி. கோடீஸ்வரி அவர்கள் (85 வயது) தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திருப்புகழ், மற்றும் தனிப் பாடல்கள் எல்லாம் ஒரு மணி நேரம் சொல்லித் தருகிறார்.....மிக சிறப்பு
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குதொடர்வது மகிழ்ச்சி.
ஆமாம், நல்ல முறையில் வேறு சிந்தனை இல்லாமல் இறை சிந்தனையோடு இருக்க உதவுகிறது. எங்களை போல் உள்ளவர்களுக்கு இது நல்ல ஊட்ட மருந்து போல!
குடமுழா வாத்தியம் பிரம்மா வாசிக்கும் படம் தேட வேண்டும்.
திருமதி. கோடீஸ்வரி அம்மா அவர்களுக்கு இறைவன் தேகபலத்தையும் உடல் நலத்தையும் கொடுக்க வேண்டும் இப்படி தொண்டு செய்வதற்கு.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இது போன்ற நிகழ்வுகள் தெய்வ சிந்தனையை வளர்க்கவும் உலகில் நன்மை பயக்கவும் உதவிடும். தங்கள் மாமா அருமையாகப் பாடியுள்ளார்கள். 65ஆம் வயதில் பாடியது என்பது அறிந்தேன். 80 வயது வரையிலும் கற்றுக் கொடுத்தார்கள் என்பது பாராட்டுக்குரியது. திருமதி கோடீஸ்வரி அம்மா அவர்களின் சேவையும் மகத்தானது.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//இது போன்ற நிகழ்வுகள் தெய்வ சிந்தனையை வளர்க்கவும் உலகில் நன்மை பயக்கவும் உதவிடும்.//
ஆமாம் ராமலக்ஷ்மி, நீங்கள் சொல்வது சரிதான்.
மாமா பாடியதை கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.
அம்மா கோடீஸ்வரி அவர்களின் சேவையும் மகத்தானதுதான்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.