காலடியில் உள்ள பூர்ணா நதியில் சங்கரர் தன் தாயோடு குளிக்கப் போகும் போது முதலை சங்கரரின் காலைக் கவ்வியது, துறவறம் மேற்கொள்ள சங்கரர் அனுமதி கேட்கும் காட்சி.
சங்கரரின் தாய் தனது மகன் துறவறம் மேற்கொள்வதை விரும்பவில்லை.
'அம்மா! துறவறம் மேற்கொள்ள அனுமதி கொடுத்தால் இந்த முதலை என் காலை விட்டு விடும் " என்று சொல்ல , தாய் சம்மதிக்கிறார்.
ஆதி சங்கரர் துறவறம் மேற்கொள்ள தன் அம்மா ஆர்யாம்பாளிடம் அனுமதி பெற்றது இப்படித்தான். அதைச் சித்தரிக்கும் காட்சி.
சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் முதல் பகுதி படிக்காதவர்கள் படிக்கலாம்.
அந்த அன்புத் தாய் ஒரு வரம் மட்டும் சங்கரரிடம் கேட்கிறார். தனக்கு இறுதிக்கடன் செய்ய வரவேண்டும் என்று கேட்கிறார். சங்கரரும் ஒத்துக் கொள்கிறார்.
துறவறம் மேற்கொண்டாலும் பட்டினத்தார், ஆதிசங்கரர் எல்லாம் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்கள்.
சங்கரர் சன்னதியைச் சுற்றி மதில் சுவர்- அதில் சங்கரர் வாழ்க்கை வரலாறு செதுக்கப்பட்டுள்ளது. எழு வயதிலிருந்தே பிட்சை பெற்றுத்தான் உணவு உண்டு வந்தார் . அந்தக்காட்சிகள் எல்லாம் உள்ளன.
ஒரு சிறுவன் யானை மேல் அழகாய் சவாரி செய்தான். குழந்தைகள் உலகம் தனி உலகம் தான்.
கோவிலுக்கு உள்ளேயே நிறைய இருக்கிறது, பார்க்க
சங்கரர் சன்னதியிலிருந்து ராஜகோபுரம் தெரிகிறது
சங்கரர் சன்னதி
அந்தப் பக்கம் இருக்கும் சிங்கத்தின் வாயில் கல் உருண்டை
சங்கரர் சன்னதிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலின் கதவு மூடி இருந்தது. மாலை பூஜையின் போதுதான் திறப்பார்கள்.
ஸ்ரீ பாரதி தீர்த்தர் அவர்களின் ஷஷ்டியப்த பூர்த்தி நிறைவு விழாவில் ஆன்மீகப் பயணிகளுக்கு எல்லா வசதிகளுடன் கூடிய குறைந்த வாடகைக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டு இருக்கிறது.
3000 பேர் சாப்பிடக்கூடிய அன்னதான கூடம் அல்லது நூலகம் என்று நினைக்கிறேன் , பார்த்தவர்கள் நினைவு இருப்பவர்கள் சொல்லுங்கள்.
ஆதி சங்கரர் மற்றும் அவருக்குப் பின் வந்த குருமார்களின் வாழ்க்கை வரலாறு கூறும் படங்கள் உள்ள இடம்.
கோவில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.
"குரு நிவாஸி'ல் போய் குருவை காலை 11 மணி முதல் தரிசிக்கலாம்.
அடுத்த பதிவில் ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும் 'குரு நிவாஸ்' . மிக அழகாய் பாக்குமரமும், அதைச் சுற்றி மிளகுக்கொடி படர்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டே போகலாம். பல மரங்களும் சூழ்ந்து இருக்கும் இடத்தில் அமைந்து இருக்கிறது "குருநிவாஸ்" என்ற பெயரில் அழகிய பிரம்மாண்ட கட்டிடம். அங்கே ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதிதீர்த்தசுவாமிகளைப் பார்க்கப் போகலாம்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
//சங்கரரின் தாய் தனது மகன் துறவறம் மேற்கொள்வதை விரும்பவில்லை.
பதிலளிநீக்கு'அம்மா! துறவறம் மேற்கொள்ள அனுமதி கொடுத்தால் இந்த முதலை என் காலை விட்டு விடும் " என்று சொல்ல , தாய் சம்மதிக்கிறார்.//
ஓ இப்படியும் ஒரு கதை இருக்கோ கோமதி அக்கா.. முந்தைய துறவு பூண்டோரின் பின்னால் ஒவ்வொரு கதை இருக்கும்.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குமுதலில் வந்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
//ஓ இப்படியும் ஒரு கதை இருக்கோ கோமதி அக்கா.. முந்தைய துறவு பூண்டோரின் பின்னால் ஒவ்வொரு கதை இருக்கும்.//
ஆமாம், ஒவ்வொரு துறவிகளின் வாழ்க்கை வரலாறும் படித்தால் அவர் துறவு பூண்டதற்கு காரணம் இருக்கும்.காரணம் இல்லாமல் காரியம் இல்லை.
ஆஆஆஆஆஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
நீக்கு//ஆஆஆஆஆஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))//
நீக்குஆமாம், ஆமாம்.
வாழ்க வளமுடன் அதிரா, நீங்கள் தான் முதலில் வந்தீர்கள்.
இந்தக் கோயில் சிற்பங்கள் ஒரு வித்தியாசமான அழகாக இருக்கின்றன.. ஃபிரேம் பண்ணிப்போட்டதைப்போல..
பதிலளிநீக்குஆஹா ஆனைப்பிள்ளைமேல் சவாரி அழகு... யானைகளின் நடுவிலே படிக்கட்டுக்கள் சின்னதாக இருக்கிறதே.. இது மெயின் வாசலோ இல்லை சைட்டில் இருக்குதோ கோமதி அக்கா?
//இந்தக் கோயில் சிற்பங்கள் ஒரு வித்தியாசமான அழகாக இருக்கின்றன.. ஃபிரேம் பண்ணிப்போட்டதைப்போல..//
நீக்குஇவை எல்லாம் பிற்காலத்தில் செய்தவை. பழமையானது அல்ல.
கட்டம் கட்டமாக செய்து சுவற்றில் பதிக்கப்பட்டது தான்.
மெயின் வாசல் இல்லை அதிரா சங்கரர் சன்னதியை சுற்றி மதில் சுவர் அதில்தான் அவர் வாழ்க்கை வரலாறு. எல்லா பக்க வாசலும் மெயின் வாசல் படமும் போட்டு இருக்கிறேன் அதிரா.
படங்கள் அத்தனையும் மிக அழகாக எடுத்திருக்கிறீங்க கோமதி அக்கா.. சூப்பராக இருக்கின்றன அனைத்தும்..
பதிலளிநீக்குஇப்படித்தான் எனக்கும் புளொக் என்பது ஒரு பொக்கிசம், ஆல்பம்.... ஓட்டோகிராஃப் போல... எக்காலத்திலும் திறந்து பார்த்து நினைக்க வசதியாக இருக்கும் என்றே பல படங்கள் போடுகிறேன்
படத்தைப்பற்றி கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி அதிரா.
நீக்கு//இப்படித்தான் எனக்கும் புளொக் என்பது ஒரு பொக்கிசம், ஆல்பம்.... ஓட்டோகிராஃப் போல... எக்காலத்திலும் திறந்து பார்த்து நினைக்க வசதியாக இருக்கும் என்றே பல படங்கள் போடுகிறேன்//
நீங்கள் சொல்வது சரிதான், வலைத்தளம் பொக்கிஷம்தான். நாம் போய் வந்தவைகளை, நம் நினைவுகளை பகிர்ந்து கொண்டு மீண்டும் அதை படித்து பார்ப்பது படங்களை பார்ப்பது மகிழ்ச்சி தரும் விஷயம் தான். முடிந்தவரை பகிர பார்க்கிறேன் இனி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.
நீக்குகாலை வணக்கம், சிற்பங்கள் சிதிலமடையாமல் தெளிவாக இருக்கின்றன. புகைப்படமும் அழகாய் எடுக்கப் பட்டிருக்கிறது. யானைமேல் சவாரி செய்யும் சிறுவன் - என்ன ஒரு ஆர்வம்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குமதில் சுவர் முழுவதும் உள்ள புகைப்படங்களை எடுக்கலாம், ஆனால் குழு சுற்றுலாவாக செல்லும் போது நம்மால் காலதாமதம் ஆக கூடாது என்று முக்கியமானவைகளை மட்டும் எடுத்த படங்கள்.
எல்லா குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இந்த மாதிரி யானை மேல் அமர்ந்து கொள்வது மகிழ்ச்சியானது. அமர்ந்தால் யாரும் சிரிப்பார்களோ என்று அதன் அருகில் அல்லது சாய்ந்து கொண்டு பெரியவர்கள் படம் எடுத்துக் கொள்வார்கள்.
சங்கரரின் சன்னதி கோவிலின் தோற்றத்திலிருந்து மாறுபட்டுத் தெரிகிறது. சிங்கத்தின் வாயில் கல்லை உள்ளே தள்ளிப் பார்த்தீர்களா? அருகில் ஒரு சுரங்கம் திறந்திருக்கக் கூடும்!
பதிலளிநீக்குசங்கரரின் சன்னதி என்ற படத்தில் முன் மண்டபம் மட்டும் தெரியும் . பக்கவாட்டில் எடுத்த படத்தில் கோபுரமும் கலசமும் தெரியும்.
நீக்கு//சிங்கத்தின் வாயில் கல்லை உள்ளே தள்ளிப் பார்த்தீர்களா? அருகில் ஒரு சுரங்கம் திறந்திருக்கக் கூடும்!//
சரித்திர கதைகளில் வருவது போல் சுரங்க பாதையா?
"கதிரா மங்கலம் வனத்துர்க்கை"" கோவிலில் இப்படி சிங்ககத்தின் வாயில் உருளை கல் இருக்கும் எல்லோரும் வாயில் கை விட்டு உருட்டி பார்க்க ஆரம்பித்தவுடன் அதற்கு கண்ணாடி தடுப்பு போட்டு விட்டார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஸ்ரீ சாரதை அனைவருக்கும் அருள் பொழிவாளாக...
பதிலளிநீக்குஅழகிய படங்கள்...
பதிவின் வழி திருக்கோயிலைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது..
வாழ்க நலம்....
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், ஸ்ரீ சாரதை அனைவருக்கும் அருளை பொழியட்டும்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அன்பு கோமதிமா,
பதிலளிநீக்குகட்டிடங்களும் சிற்பங்களும் மிக அழகு.
ஆதி சங்கரரின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்கள் செதுக்கப் பட்டிருப்பதும் அருமை.
பாரம்பரியம் மிக்க கோவிலும்
அதன் மண்டபங்களும் படம் எடுத்த விதம்
பளிச்சென்று இருக்கிறது.
யானையின் மேல் சிறுவன் எங்களது ஹலெபேட் சுற்றுலாவை நினைவுபடுத்தியது.
எங்கள் மகனும் மகளும் அங்கே இரு யானைகள் மேலும் அமர
கணவர் படங்கள் எடுத்தார்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்கு//ஆதி சங்கரரின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்கள் செதுக்கப் பட்டிருப்பதும் அருமை//
ஆமாம் அக்கா , வரலாறு தெரிந்து கொள்ளமுடியும்.
கோவிலின்ன் படங்கள், யானைமேல் அமர்ந்த சிறுவன் படம் பார்த்து உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
யாளிகளும், சிங்கத்தின் வாயில் உருளும் உருண்டையும்
பதிலளிநீக்குஹொய்சள மன்னர்கள் கோவிலமைப்பை நினைவு கொள்ள வைக்கிறது.
அழகும் அருமையும் நிறைந்த பதிவுக்கு நன்றி மா.
யாளிகளும், சிங்கத்தின் உருளும் உருணடைகளும் நிறைய இடங்களில் இருக்கிறது அக்கா.
நீக்குசங்கரர் கோவில் இருக்கும் இடம் புதிதாக கட்டபட்டு இருக்கிறது பழைய பாணியில்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.
ஆதிசங்கரர் பர்றிய புத்தகம் இருந்தும் வாசிக்கவில்லை வீட்டில். இப்போ உங்க பதிவின் மூலம் வாசித்தது அவரைபற்றி அறிய ஆவலை ஏற்ப்டுத்துது. ஊரில் சில கோவில்களில் நாயன்மார்கள் வரலாறு, கதைகளை சித்திரமாக வரைந்திருப்பாங்க. இந்திய கோவில்களில் சிற்பவேலைபாடுகள் மிக அருமையா இருக்கும். சிங்கத்தின் வாயில் கல்,கோவில் சிற்பங்கள் அழகா இருக்கின்றன.. உங்கள் படங்கள் அத்தனையும் அழகா இருக்கு அக்கா.
பதிலளிநீக்குவணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
நீக்கு//சில கோவில்களில் நாயன்மார்கள் வரலாறு, கதைகளை சித்திரமாக வரைந்திருப்பாங்க//
இங்கும் சில கோவில்களில் நாயன்மார்கள் அப்புறம் அந்த கோவில் தலவரலாறு கதைகள் சுற்றில் ஓவியமாக வரைந்து இருக்கும்.
வைணவ தலங்களில் (திவயதேசங்களில்) ஆழவார்களின் ஓவியங்கள் , ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள், ஓவியம் எல்லாம் வரைந்து இருப்பார்கள்.
கோபுரங்களில் அந்த கதைகளும் சிற்பங்களாக வடித்து இருப்பார்கள் அம்மு.
ஆதிசங்கரர் வரலாறு எல்லோருக்கும் தெரியும் என்பதால் சிறு குறிப்புடன் நிறூத்திக் கொண்டேன்.
பதிவு, படங்களை ரசித்துப்பார்த்தும், படித்தும் கருத்து சொன்ன பிரியசகிக்கு நன்றிகள்.
அழகான படங்கள் சிறப்பான தகவல்கள் சகோ
பதிலளிநீக்குமிகவும் தத்ரூபமாக சிற்பங்கள் அதிசயிக்க வைக்கின்றன அவ்வளவு தெளிவு.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்கள் தகவல்கள் உங்களுக்கு பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி.
சிற்பங்கள் நன்றாக செய்து இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
சிற்பங்கள் அழகு... படங்கள் எடுத்த விதம் அனைத்துமே அழகு...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குசிற்பங்களை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.
படங்கள் அழகோ அழகு
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
முதல் படமே ரொம்ப அழகாக இருக்கிறது அக்கா. அந்தக் கலை அடுத்த படமும் அப்படியே
பதிலளிநீக்குகோயிலின் கோபுரங்கள் அந்தப் படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு கோமதிக்கா
சூப்பர். எல்லா படமும் ரசித்தேன்
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்குமுதல் படம், கோபுர படங்கள் எல்லா வற்றையும் ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கோயில் எல்லாம் கிட்டத்தட்ட நம்மூர் சிற்பக் கலை போல இருக்கிறது இல்லையா ஆனாலும் நன்றாக வடிவமைத்திருக்காங்க
பதிலளிநீக்குநீங்கள் எடுத்த விதமும் ரொம்ப அழகாக இருக்கு கோமதிக்கா
கீதா
சங்கரர் சன்னதி நம்மூர் சிற்பக்கலை போலதான்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
ஃ போட்டோக்களும் விளக்கமும் அருமை கோயில் நம் ஊர் போலவே இருக்கிறது ஸ்ரீ ஆதிசங்கரர் தாயுடன் இருப்பது போன்ற சிற்பங்கள் கொஞ்சம் தென்னிந்தியக் கோயில் சிற்பங்களை விட வித்தியாசமாக இருக்கிறது (அபயா அருணா ) ஆனால் ஏனென்று தெரியவில்லை என் ஜப்பானீசு பிளாக் ID தான் வருகிறது )
பதிலளிநீக்குவணக்கம் அபயா அருணா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
ஜப்பானீஸ் மொழி கற்றுக் கொள்கிறீர்களா? மகிழ்ச்சி.
எமக்குத் தொழில் ஜப்பானிய மொழி ஒரு 15வருடங்களாக
நீக்குவணக்கம் அபயா அருணா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் பழைய கணக்கு உள்ள பேரை கொண்டு வந்து விட்டீர்கள்.
உங்கள் தொழில் ஜப்பானிய மொழி கற்பித்தலா?
மகிழ்ச்சி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகோவிலைப்பற்றிய விளக்கங்கள் சிறப்பு. ஆதி சங்கரரின் வாழ்க்கை ஏற்கனவே தெரிந்ததென்றாலும், தங்கள் பதிவு வழி படங்களோடு பார்ப்பது மனதுக்கு நன்றாக உள்ளது. மிகவும் அழகாக பொறுமையுடன் படங்களை எடுத்துள்ளீர்கள். வாழ்த்துகள். தங்கள் படங்களை பார்க்கும் போது நாங்கள் சிருங்கேரி கோவில் சென்று வந்த நினவடுக்குகளில் எனக்கு ஞாபகம் ஒரளவு வரப் பார்க்கிறது. (ஆனால் முழுதாக அல்ல..!)
நாங்கள் இந்த கோவிலுக்கு செல்லும் போது இருட்டாகி விட்டதினால், அவசர அவசரமாக சாரதாம்பிகை தரிசனம் பெற்று, குருவையும் தரிசனம் செய்து (அந்நேரம் அவர் அங்கு பூஜையில் இருப்பதால்) திரும்பினோம். நாங்கள் சென்று பத்து வருடங்களுக்கு மேலாகிறது. கோவில் நினைவுகளும் அவ்வளவாக இருக்கவில்லை. உங்களைப் போல் படங்களும் எடுக்கவில்லை. நான்கு நாட்களுக்குள் பல கோவில் என்ற ஏற்பாட்டில் ஒரே அவசரந்தான்..! இன்னும் பல கோவில்களை இப்படி அழகாக பகிருங்கள். படிக்க காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஆதி சங்கரர் வரலாறு எல்லோருக்கும் தெரிந்தது என்பதால்தான் விளக்கமாய் சொல்லவில்லை. படவிளக்கம் மட்டும் தந்தேன்.
நாங்கள் சென்று வந்து 5 வருடம் ஆச்சு, நீங்கள் சென்று 10 வருடமா?
நாங்கள் மதியம் போனோம், மாலை குருவை தரிசனம் செய்து திரும்பினோம்.
இறைவன் அருளால் ஒவ்வொன்றாக பகிர ஆசை.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி. பதிவை படிக்க காத்து இருக்கிறேன் என்று சொல்வதும் மனதுக்கு மகிழ்வை தருகிறது கமலா. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
சிற்பங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்களும் சிறப்பு. தொடரட்டும் பயணமும் தகவல்களும்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நாங்களும் சிருங்கேரி போய்ப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றன. அப்பு பிறந்த வருடம் போனோம் என நினைக்கிறேன். அந்த வருஷம் முழுக்கப் பயணமாகவே அமைந்ததால் சரியாய்ச் சொல்லத் தெரியவில்லை. பதிவுகளில் போய்ப் பார்த்தால் புரிந்துவிடும். ஆனால் அப்போல்லாம் காமிரா இல்லை. சங்கரர் கோயில் கட்டுமானத்தில் இருந்தது. சாரதாம்பிகை கோயில் வித்யாரண்யர் காலத்திலே கட்டப்பட்டது என்றார்கள். அதன் கட்டுமானமும் சங்கரர் கோயில் கட்டுமானமும் வேறுபட்டிருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குநேற்று உங்கள் வேலைகளை தெரிந்து கொண்டேன்.
நிறைய செய்திகள் இருக்கிறது அந்த கோவிலைப்பற்றி அதனால்தான் சுருக்கமாக முடித்து கொண்டேன்.
கொட்டி கிடக்கிறது இணையத்தில் செய்தி ஆனால் நான் கோவிலில் எடுத்த அந்த கட்டிடம் எங்கும் இல்லை. நூலக்ம், அன்னதானகூடம் எல்லாம் உள் பக்கம் காட்சி இருக்கிறது வெளி வாசல் படம் இல்லை.
போய் வந்தவுடன் போட்டு விட வேண்டும் பதிவு , இப்படி ஐந்து வருடம் கழித்து போட்டால் நினைவில் இருப்பதை பகிர்கிறேன்.
முதலில் இருந்த சாரதை கோவில் தீவிபத்தில் எரிந்து விடது என்றும் புதிதாக கட்டினார்கள் என்றும் உள்ளது.
படங்கள் எல்லாம் வெகு அழகு! நன்றாக எடுத்திருக்கிறீர்கள். சில கோயில்களில் அக்கம்பக்கம் யாரும் இல்லை என்றால் நானுமே யானை மேல் உட்கார்ந்துப்பேன். :))) நிஜ யானை மீது உட்கார பயம். ஊட்டியில் இருந்தப்போ அதுக்காகவே முதுமலை போகவில்லை! சும்மாப் போய்ப் பார்க்க அவருக்கு இஷ்டமில்லை. குருவின் இருப்பிடமும் சோலைகள் சூழ்ந்து அழகாய்க் காட்சி அளிக்கும். யாத்ரிகர்களுக்கு என நிறைய அறைகள் கட்டி விட்டிருக்கின்றனர். நாங்கள் அங்கே தான் அறை எடுத்துத் தங்கினோம். காலை நாலரைக்கே அறை வாயிலுக்கே ஒருத்தர் காஃபி கொண்டு வருவார். இரண்டு வித தம்பளர்கள் உண்டு. அந்தத் தெருவிலேயே ஒரு மாமா வீட்டில் சமைத்துக் காலை, மதியம், இரவு 3 வேளையும் சாப்பாடு கொடுப்பார்கள். நாங்கள் ஒரு நாள் அங்கே மடத்தில் கொடுக்கும் இலவசச் சாப்பாடு சாப்பிட்டோம். பின்னர் எல்லாம் வெளியே தான். நீங்கள் போட்டிருக்கும் கட்டடம் அன்னதானக்கூடமும் நூலகமும் சேர்ந்துனு நினைக்கிறேன். படம் கையில் இருந்திருந்தால் நினைவு படுத்திக்கலாம்.
பதிலளிநீக்கு//சில கோயில்களில் அக்கம்பக்கம் யாரும் இல்லை என்றால் நானுமே யானை மேல் உட்கார்ந்துப்பேன். :)))//
நீக்குஆமாம், நீங்களும் யானை பிரியர் இல்லையா? (குழந்தை வேறு நீங்கள்.)
முதுமலை என்றாலே யானை மேல் சவாரி செய்து காட்டை சுற்றிப்பார்ப்பதுதானே!
குருவின் இருப்பிடமும் இயற்கை எழில் கொஞ்சும் தான்.
நாங்கள், உடுப்பி, மற்றும் அன்னபூர்ணி கோவிலில் சாப்பிட்டோம். அப்புறம் எல்லாம் வெளியே ஒட்டல்களில்தான்.
உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
அங்கே மாணவர்கள் மரத்தடியிலும், நதிக்கரையிலும் உலாவிக்கொண்டு அவர்களுக்குள்ளாக சம்ஸ்கிருதத்தில் விவாதங்கள் செய்து கொண்டு குருவிடம் பாடம் கேட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் இம்மாதிரிச் சூழலில் நாமும் படித்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றும்.
பதிலளிநீக்குஆமாம் , வேதபாடசாலை மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் பார்த்தோம் மாலை குருவை தரிசிக்க போகும் போது கற்பிக்கும் ஆசிரியர்களை கெளரவபடுத்தியதைப் பார்த்தோம்.
நீக்கு//ம்மாதிரிச் சூழலில் நாமும் படித்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றும்.//
குருகுல வாசம் நன்றாகத்தான் இருக்கும்.
http://aanmiga-payanam.blogspot.com/2006/08/8-1.html
பதிலளிநீக்குhttp://aanmiga-payanam.blogspot.com/2006/08/9-2.html
http://aanmiga-payanam.blogspot.com/2006/08/10-3.html
http://aanmiga-payanam.blogspot.com/2006/08/11.html 2006 ஆம் வருடம் சிருங்கேரிக்குப் போயிருக்கோம். அப்பு அப்போப் பிறக்கவில்லை. மேலே உள்ள சுட்டியில் சுருக்கமாக விபரங்கள் கிடைக்கும். படங்கள் ஏதும் இல்லாததால் கோயில் பற்றி விளக்கமாக எழுதவில்லை. ஆனால் வித்யாரண்யரால் ஏற்படுத்தப்பட்ட சாரதா கோயில் இது தான் எனச் சொன்னார்கள். சாரதை பீடம் ஆதி சங்கரரால் ஏற்படுத்தப்பட்டது.
உங்கள் சுட்டிகளுக்கு நன்றி.
நீக்குபடிக்கிறேன்.
//அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.
நன்றி மாலைமலர்.
கோவிலுக்கு நிறைய வரலாறு இருக்கிறது.
அன்னை சாரதை அனைவருக்கும் நலம் தர வேண்டும் , அதுவே நாம் விரும்புவது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் சுட்டிகள் வேறு கோவில்களை காட்டுகிறது.
நீக்குமடத்து தெரு பகவத் விநாயகர் கோவில் காட்டுது.
சிருங்கேரி வரவில்லை.
ஆன்மிக பயணம்: August 2006
நீக்குaanmiga-payanam.blogspot.com/2006/08
ஆகஸ்ட் 11, 2006 நாங்கள் முதலில் போனது என்னமோ பங்களூர் தான். அதுக்கு அப்புறம் மைசூர். அங்கிருந்து தி� ...
இந்த சுட்டிக்கு சென்றால் மடத்து தெரு பகவத் விநாயகர் கோவில் காட்டுது
என்ன என்று பாருங்கள்.
yes, giving wrong posts. will check in the afternoon. Thank you for bearing with me. :)
நீக்குநீங்கள் அனுப்பிய சுட்டிகள் எல்லாம் படித்து கருத்து சொல்லி விட்டேன் கீதா.
நீக்குசிருங்கேரி, பலமுறை பார்த்த இடம்தான் என்றாலும் நீங்கள் உரிய படங்களுடன் அழகாக விளக்கும்போது மீண்டும் பார்த்த அனுபவத்தைப் பெறுகிறேன். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம் இராய செல்லப்பா சார், வாழ்க வளமுடன்
நீக்கு//நீங்கள் உரிய படங்களுடன் அழகாக விளக்கும்போது மீண்டும் பார்த்த அனுபவத்தைப் பெறுகிறேன்//
மகிழ்ச்சி சார்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அழகான படங்கள். காலடியில் சங்கர் பிறந்த இடத்தில் இருக்கும் கோவில் கூட இதெ அமைப்பில்தான் இருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குகாலடி சங்கரர் கோவில் பார்க்கவில்லை நாங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஇடுகையை முன்பே படித்துவிட்டேன். கருத்திட அப்போது வாய்ப்பில்லை. பிறகு மறந்துவிட்டேன் போலிருக்கிறது.
சிருங்கேரிக்குப் போகும் வாய்ப்பு வரணும்.
நான் ரொம்பவும் வியப்பது, 30+ வயதுக்குள்ளேயே ஒரு நூற்றாண்டுகள் வாழ்ந்து செய்யவேண்டிய பணிகளைச் செய்துமுடித்துவிட்டார் ஆதிசங்கரர். எப்படி இறைவன் இப்படியொரு திறமையை சிலருக்குக் கொடுத்திருக்கிறான் என்று எண்ணி வியக்கிறேன் (கடவுளின் அம்சம் என்பதையெல்லாம் ஒரு கணம் சிந்திக்காமல்). கணிதமேதை ராமானுஜம், தேசக்கவிஞன் பாரதி போன்று பலர்...கொஞ்சம் வயதுதான் வாழ்ந்தார்கள் ஆனால் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குதிருச்சூர் வடக்கு நாதர் கருணை அறிவுள்ள பிள்ளை,(ஞானகுழந்தையை கொடுத்தார்) குறைந்த வயது.
அதற்குள் செய்து முடிக்கவேண்டிய காரியங்களுக்கு திறமையை வாரி வழங்கி விட்டார்.
//கணிதமேதை ராமானுஜம், தேசக்கவிஞன் பாரதி போன்று பலர்...கொஞ்சம் வயதுதான் வாழ்ந்தார்கள் ஆனால் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள்.//
பெரியவர்கள் சின்னவயதில் போனவர்களை பற்றி பேசும் சொல்வார்கள் "போவதற்குதான் இவ்வளவு புத்தி வாய்த்ததோ!" என்றும் வந்த காரியம் முடிந்தது புறப்பட்டு விட்டான் என்றும்.
சங்கரர், இங்கிருந்து இமயமலைப் பக்கம் சென்று, பத்ரிநாராயணர் கோவிலை ஸ்தாபித்து(என்று சொல்றாங்க. அது முதலில் புத்தக் கோவிலாக இருந்ததை நாராயணனுக்கு உரிய கோவிலாக மாற்றி) அங்கு கேரளத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளை அர்ச்சகர்களாக நியமித்து (அவர்களை ராவல்ஜி என்று சொல்றாங்க), பிறகு திரும்பவும் தென்னிந்தியா நோக்கிப் பயணித்து, இதற்கிடையில் மடங்களை ஸ்தாபித்து, நூல்கள் எழுதி, சீடர்களைத் தயார் செய்து என்று ஏகப்பட்ட பணிகளைச் செய்திருக்கிறார்.
பதிலளிநீக்குஎப்படி சிலருக்கு இவ்வளவு ability இருக்கு என்று வியப்பேன்.
சங்கரர் பற்றிய வரலாறுகள் நிறைய இருக்கிறது.நாங்கள், கேதார்நாத், ஜோஷிமட் இடங்களில் சங்கரர் அமைத்து இருந்த மடங்கள் பார்த்தோம்.கேதார்நாத்தில் வெள்ளத்தில்
நீக்குஅழிந்து விட்டது. இப்போது மீண்டும் கட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
குருவுக்கு ஏற்ற சீடர்கள். சீடர்கள் உதவியுடன் ஏகப்பட்ட பணிகளை சிறு வயதில் செய்து முடித்து இருப்பது இறைவன் கொடுத்த திறமை.
நிறைய படித்து இருக்கிறீர்கள் சங்கரர் வரலாறுபற்றி, மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி .
சங்கரரின் வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்களும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் அமைந்து இருக்கும் இடம் மிக அழகாய் இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
சங்கரர் வரலாறு கூறும் சிற்பங்கள் அமைந்திருப்பது சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி