கண்ணன் பிறந்தான் மனக்கவலைகள் போக்க மன்னன் பிறந்தான்.
எங்கள் வீட்டில் கண்ணன்!
வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே.
-பெரியாழ்வார் திருமொழி
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ!
-- பெரியாழ்வார் திருமொழி
வண்ணக்கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக்குறுங்கயிற்றல் கட்டுண்டானாகிலும்
எண்ணற்கரியன் இமையோர்க்கும்சாழலே!
- திருமங்கை ஆழ்வார்.
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அவர்கள் பாடிய கண்ணன் வருகின்ற நேரம் பாடல் கேட்டு இருப்பீர்கள். மீண்டும் கேட்டு பாருங்களேன்.
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
எங்கள் வீட்டுக் கண்ணன்-பேரன்
விடுமுறையில் கொஞ்ச நேரம் விளையாடுவான் எங்களுடன் அப்புறம்
, கதைகள் சொல்வான், "கிருஷ்ணா" கதைகள் பாகம் பாகமாய் தினம் தொடர்ந்தான்.முன்பு நம்மிடம் கேட்ட குழந்தை இப்போது தாத்தா, பாட்டிக்கு கதை சொல்கிறான். தெரியாத மாதிரி கதை கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவான். பள்ளி திறந்து விட்டது .ஆன்லைனில் பள்ளி நடக்கிறது..
6 வது படிக்கிறான்.
இந்தப் பாட்டைப் பாடி 'கிருஷ்ணா கதை! தாத்தா ஆச்சிவாங்க' என்று ஸ்கைப்பில் கூப்பிடுவான்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்... ஆனால் இங்கு அடுத்த மாதம் (10/9/2020) என்றொரு தகவல்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி.
அடுத்த மாதமும் வணங்கி விடுவோம் கண்ணனை.
அழகான பதிவு...
பதிலளிநீக்குகாலையிலேயே எதிர்பார்த்திருந்தேன்...
இப்போது இங்கு இரவு 8:50..
உறங்குவதற்கு முன்பாக ஒரு பார்வை..
தங்கள் பதிவு கண்ணில் பட்டது..
கிருஷ்ணனின் நினைவுகளுடன்
நலமே விளைக..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஇரவு 8 மணிக்கு போட்டேன் பதிவு.
கிருஷ்ணனின் நினைவுகளுடன் தான் அதுவும் மாயவரத்தில் வீட்டுக்கு எதிரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் 10 நாள் விழா மிகவும் சிறப்பாக நடக்கும் மாலை பஜனைகள் நடக்கும் கலந்து கொள்வேன். ராதா கல்யாணத்துடன் விழா இனிதே நிறைவு பெறும்.
நேற்று இரவு பொதிகை தொலைக்காட்சியில் கண்ணன் பாடல்களை கேட்டு மகிழ்ந்தோம்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோகுலாஷ்டமி வாழ்த்துகள். பேரனின் போஸ் சூப்பர்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது இல்லையா?அதனால் பாடல் எல்லாம் கேட்கவில்லை போலும்.
இப்போது வந்து பாடல் கேட்டு விட்டேன். உண்மைதான். அலுவலகம் முழு அளவில் இயங்கத் தொடங்கியாச்சு. அதில் தலைமை அலுவலகம் சுத்தமாக வராமல் இருந்துவிட்டு, எங்களை அவசரப்படுத்துகிறார்கள்!
நீக்குமீண்டும் வந்து பாடல் கேட்டது மகிழ்ச்சி.
நீக்குவேலை பளூ அதிகமாய் ஆகி விட்டது, அலுவலகம் வீட்டிலிருந்து தூரம் என்று பல காரணம் தெரிந்து கொண்டேன். எல்லா இடங்களிலும் இதுதான் இப்போ நடக்கும் நிலைமை.
இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் மீண்டும் வந்து பாடலை கேட்டது மகிழ்ச்சி, நன்றி.
//தெரியாத மாதிரி கதை கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவான்//
பதிலளிநீக்குஇதுதானே மகிழ்ச்சி.
இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்
வாழ்க நலம்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் ஜி, அதுதான் மகிழ்ச்சி.
அவன் கற்றுக் கொள்ளும் பாடலை நமக்கு சொல்லித்தருவான் நாம் பாடினால் மகிழ்வான்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பேரன் அழகாக இருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள். //கதைகள் சொல்வான், "கிருஷ்ணா" கதைகள் பாகம் பாகமாய் தினம் தொடர்ந்தான்.முன்பு நம்மிடம் கேட்ட குழந்தை இப்போது தாத்தா, பாட்டிக்கு கதை சொல்கிறான். தெரியாத மாதிரி கதை கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவான். கதை கேட்பதும் என்பது எத்தனை சந்தோஷமான விஷயம். //
பதிலளிநீக்குஉண்மை
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன் வாழ்க வளமுடன்
நீக்குபேரனுக்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி, நன்றி.
நாம் கதை சொல்லி கேட்ட குழந்தை நமக்கு சொல்லும் போது மகிழ்ச்சிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இனிய காலை வணக்கம் கோமதிக்கா.
பதிலளிநீக்குநாங்களும் நேற்றுதான் கொண்டாடினோம்.
நெய்வேத்தியம் அசத்தல், கோலம் மிக மிக அழகாக இருக்கிறது கோமதிக்கா. மாமா வரைந்தாரா? மாமா வரைவது தெரியும். நீங்கள் போட்டீங்களா? அழகு யாரா இருந்தாலும் பாராட்டுகள், வாழ்த்துகள் கோமதிக்கா.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//நாங்களும் நேற்றுதான் கொண்டாடினோம்.//
மகிழ்ச்சி.
கோலம் நான் போட்டேன். கோலம் அச்சு பெங்களூரில் வாங்கினேன் பல வருடங்களுக்கு முன்பு. அப்போது கோல அச்சு வந்த புதிது.
உங்கள் பாராட்டுக்களுக்கு, வாழ்த்துக்களுக்கு நன்றி.
கீதா, உங்கள் இனிய காலை வணக்கத்திற்கு நன்றி.
நீக்குகோலம் நீங்க போட்டீங்களா! ஆஹா நல்லாருக்கு கோமதிக்கா. இங்குதான் வாங்கினீங்களா அட! ஆமாம் இப்போதும் இங்கு கிடைக்கிறது அச்சு. இங்கு ரங்கோலி போடுறாங்க எனவே பல வித அச்சுகள் கிடைக்கின்றன.
நீக்குகீதா
ஆமாம் கீதா, சல்லடை தட்டு போல இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மதுரை மீனாட்சி கோவில் பக்கம் பெரிய பெரிய தட்டுக்கள் கிடைக்கிறது. வீட்டுத்தளம் மாறி விட்டதால் மனைபலகையில்தான் கோலங்கள் போட முடிகிறது.
நீக்குபேரன் அசத்துகிறார்.
பதிலளிநீக்குஆமாம் குழந்தைகள் கதை கேட்டுவிட்டு அவர்களாகச் சொல்லும் போது நாம் அதைத் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் ஓ அப்படியா அப்படியா என்று அதுவும்நாமும் கண்ணை உருட்டி வியந்து முகத்தில் பல உணர்வுகளைக் காட்டிக் கேட்கும் போது குழந்தைகளும் ஆர்வமாகி சொல்லுவாங்க பாருங்க...அதெல்லாம் பொக்கிஷமான தருணங்கள். எனக்கு என் மருமகளுக்கும் என் மருமகன் எனக்குக் கதை சொன்னதும் ஆஹா எல்லாம் பொற்காலங்கள்.
கீதா
என் பேத்திதான் சிறு வயதில் கதைகள் கேட்டுக் கொண்டே இருப்பாள். நாம் குரலில் ஏற்ற இறக்கங்களுடன் கதை சொல்வதை அவளும் அதே முக பாவத்துடன் கதையை திருப்பி சொல்வாள். அவள் கதை கேட்கும் அழகை முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
நீக்குபேரன் இரண்டு பேருக்கும் அவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். பெரிய பேரனுக்கு விளையாட்டுதான் மிகவும் பிடிக்கும் கதைகளைவிட.
பேரன் கவின் கதைகளை அழகாய் சொல்வான். விளையாடினாலும் நம்மை உடன் சேர்த்துக் கொண்டு விளையாட வைத்து விடுவான்.
அவனே அழகாய் கதை தயார் செய்து வசனங்கள் அழகாய் பேசுவான். பலகுரல்களில்.
நீங்கள் சொல்வது போல் குழந்தைகளுடன் இருக்கும் நேரங்கள் பொக்கிஷமான தருணங்கள் தான். உங்கள் பொற்காலங்கள் பகிர்வும் மகிழ்ச்சி தருகிறது.
மீண்டும் வந்து கருத்துக்கள் சொன்னது மகிழ்ச்சி. நன்றி கீதா.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.
என் கண்ணில் கோலம்தான் முதலில் தெரிந்தது. அழகாக போட்டிருக்க்கிறீங்க அக்கா.சாமியறையும் அழகா இருக்கு. நானும் இப்படி கபேர்ட்டில்தான் வைத்திருக்கேன். குட்டி கிருஷ்ணர் சிலையும் அழகா இருக்கு. என்ன்னிடம் கிருஷ்ணர் சிலை இல்லை. படம்தான் இருக்கு. ஊரிலிருந்து வாங்கி வரவேண்டும் என நினைத்து மறந்துவிடுவேன்.
பதிலளிநீக்குகிருஷ்ணர் வேடத்தில் பேரன் அட்டகாசமா இருக்கார். இப்பதான் அவர்கள் சொல்லும் கதைகளை,பேச்சுகளை கேட்கமுடியும். கேட்கவேணும். வளர்ந்தால் எங்களுடன் பேசவே நேரம் இருக்காது..
கண்ணன் வருகின்ற நேரம் பாடல் அருமையாக இருக்கு.
உங்களுக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் அக்கா.
வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
நீக்குகோலம் முதலில் தெரிந்ததா மகிழ்ச்சி.
//நானும் இப்படி கபேர்ட்டில்தான் வைத்திருக்கேன். //
ஓ ! தங்கையும் அக்கா மாதிரியா மகிழ்ச்சி.
தொட்டிலில் இருக்கும் தவழும் கண்ணன் அம்மா கொடுத்தது. கல்யாணத்திற்கு மறு நாள் ஒரு விழா நடக்கும் அதற்கு குழந்தை கொடுப்பார்கள்.அம்மா எங்கள் எல்லோருக்கும் தவழும் கண்ணன் கொடுத்தார்கள். ஊஞ்சல் என் அண்ணியின் அம்மா வாங்கி கொடுத்தார்கள். சின்ன கண்ணன் (வெண்ணை பானை வைத்து இருக்கும்) மகன் வாங்கி தந்தான் , தவழும் கண்ணன், பசுவோடு இருக்கும் கண்ணன் மாயவரம் கொலுவிற்கு பக்கத்து வீட்டுநட்பு வாங்கி கொடுத்தது. இன்னும் நிறைய கண்ணன்கள் இருக்கிறார்கள் கொலுபெட்டியில்.
அடுத்த முறை ஊருக்கு போகும் போது மறக்காமல் வாங்கி வாங்க.
//இப்பதான் அவர்கள் சொல்லும் கதைகளை,பேச்சுகளை கேட்கமுடியும். கேட்கவேணும். வளர்ந்தால் எங்களுடன் பேசவே நேரம் இருக்காது..//
ஆமாம் அம்மு, நீங்கள் சொல்வது சரிதான்.
பாடல் காவடி சிந்தாய் அருமையாக இருந்ததால்தான் பகிர்ந்து கொண்டேன் உங்களுக்கு பிடித்து இருந்தது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மு.
அழகான கோலம், அருமையான அலங்காரம், இனிமையான பாடல் என்று சுவையான தொகுப்பு. பேரனைப் பற்றிய தகவல்கள் சந்தோஷமளிக்கின்றன. வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குகோலம், அலங்காரம், பாடல் எல்லாவற்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பேரனைப் பற்றி பேசுவது பாட்டிகளுக்கு இன்பம் தானே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
கிருஷ்ண ஜெயந்தி படங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குஅதிலும் பேரன் ஸ்கைப் கான்வர்சேஷன் - ஆஹா. வாழ்த்துகள்.
ப்ரபந்தப் பாடல்களும் அருமையாத் தேர்ந்தெடுத்திருக்கீங்க.
கண்ணன் போஸில் பேரன் - நல்ல நினைவுகளாக இருக்கும். வாழ்க வளமுடன்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை , பேரனின் உரையாடலை ரசித்து வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
ப்ரபந்தப் பாடல்கள் தேர்வை பாராட்டியதற்கு நன்றி.
வருடா வருடம் மருமகள் கண்ணன் அலங்காரம் அழகாய் செய்வாள்.
நல்ல நினைவுகளாய் தான் இருக்கும் .
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நெல்லை.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. கோகுலாஷ்டமி சிறப்பாக நடைப்பெற்றதா? பிரசாத படங்கள், பூஜையறை படங்கள், கோலம் என அனைத்துமே சிறப்பாக இருந்தது. நாங்களும் நேற்றுதான் கொண்டாடினோம். நேற்று இரவு வேலைகளின் மும்மரத்தில் இன்று காலைதான் பதிவை பார்த்தேன். இப்போது மறுபடி படித்து வருவதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது.
தங்கள் பேரனின் அன்பு கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அவரின் கண்ணன் அலங்காரம் நன்றாக உள்ளது. அவர் ஸ்கைப்பில் பார்த்து தங்களுடன் அன்பாக பேசி மகிழும் போது மனதுக்கு இதமாக நன்றாகத்தான் இருக்கும். அதுதானே நமக்கும் வேண்டும். அவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குகண்ணன் அருளால் கோகுலாஷ்டமி நடைபெற்றது.நீங்களும் நேற்று கொணாடியது மகிழ்ச்சி. இந்த கொரோனா காலத்தில் ஒருவரும் வீட்டுக்கு வருவது இல்லை. அக்கம் பக்கமும் அப்படித்தான்.
பேரன் தினம் பள்ளி விடுமுறை என்பதால் அதிகநேரம் பேசி, பாடி, கதைகள் சொல்லி எங்களை மகிழ்வித்தான். இப்போது அவனுக்கு ஆன்லைனில் பள்ளி ஆரம்பித்து விட்டது.
இருந்தாலும் சிறிது நேரமாவது பேசி போகிறான்.
வேறு என்ன வேண்டும் நமக்கு அன்பாக பேசினாலே போதும் மனம் குளிர்ந்து விடும்.
பேரனிடம் உங்கள் வாழ்த்தை சொல்கிறேன்.
உங்கள் வேலைகள் முடித்து எப்போது வசதி படுகிறதோ அப்போது வந்து பதிவை படித்து கருத்து சொல்லலாம் கமலா.
உங்கள் அன்பான கருத்துக்கு இதமான பேச்சுக்கு நன்றி .
அன்பு கோமதி,
பதிலளிநீக்குபடங்களும் பட்சணங்களும் அருமை.
அந்தக் கண்ணனை வரைந்தது யாரோ.
பேரனைப் போலவே எங்கள் பேத்தியும்
கிருஷ்ணா பார்த்துக் கொண்டே இருப்பாள்.
அருணா சாய்ராம் பாடல் இங்கிருக்கும் பேரனுக்கு மிகப் பிடிக்கும்.
எங்களுக்கும் அடுத்த மாதம்தான் கிருஷ்ணர் பிறந்த தினம் வருகிறது.
பெரியாழ்வார் பாசுரமுங்களும்,
திருமங்கை ஆழ்வார் பாசுரமும் மிக இனிமை.
பதிவிட்டத்ற்கு மிக நன்றி மா.வாழ்க நலமுடன்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குகண்ணன் வரைந்தது இல்லை அச்சு அக்கா, அதை பலகையில் தட்டி கலர் கொடுத்தது நான்.
கிருஷ்ணா பெரியவர்களும் பார்க்க தூண்டும் படம்பிடிப்பு. கதைகள் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் நன்றாக இருக்கிறது.
பேத்தி கிருஷ்ணா பார்ப்பது மகிழ்ச்சி.
பேரனுக்கு அருணா சாய்ராம் பாட்டு பிடிப்பது அறிந்து மகிழ்ச்சி.
பாசுரங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கும், வாழ்த்தியதற்கும் நன்றி அக்கா.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். வழிபாட்டுப் படங்கள் அருமை. பேரன் கண்ணனாக மிக அழகு. ஆம், கதைகளைத் தெரியாத மாதிரிக் கேட்டுக் கொள்ள வேண்டும் :). அச்சுக் கோலம் ஆனாலும் அழகாக வண்ணம் சேர்த்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குகோலத்தை படங்களை பாராட்டியதற்கு நன்றி.
பேரனிடம் கதைகளை, பாடல்களை தெரியாத மாதிரி கேட்டால்தான் சொல்வான், பாடுவான் மிகவும் மகிழ்ச்சியாக. விளையாட்டும் அப்படித்தான் புது புதிதாக அவன் கற்றுக் கொண்டவுடன் நமக்கும் கற்றுக் கொடுப்பான்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
கிருஷ்ணஜெயந்தி படங்கள் எல்லாமே மிக அழகு மா ...
பதிலளிநீக்குகண்ணாடி ஓவிய கிருஷ்ணர் படங்கள் மிகவும் மனதை மிகவும் கவர்ந்தன ..ஜூம் செய்து பல முறை பார்த்து ரசித்தேன் ...
தங்கள் வீட்டு செல்ல கிருஷ்ணரும் கொள்ளை அழகு ...வாழ்த்துக்கள் மா
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குமருமகள் வரைந்த கண்ணாடி ஓவியம் .
படங்களை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கும், பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
மிக அருமை. பேரன் கிருஷ்ணர் வேஷத்தில் அழகாய் இருக்கிறான். முன்னர் எடுத்த படம்னு நினைக்கிறேன். இப்போத் தான் அவனோட குழந்தைப் படத்தை நீங்க போட்ட நினைவு. அதுக்குள்ளாக ஆறாம் வகுப்புப் படிக்கிறான். இப்போ நன்றாக விபரம் தெரிந்திருக்கும். குழந்தை உங்களுடன் ஸ்கைபில் கிருஷ்ணன் கதைகள் சொல்லி விளையாடுவதும் அருமை.கிருஷ்ணன் கோலமும், அலங்காரங்களும் அருமை. பக்ஷணங்கள் தான் கொஞ்சமாய்ப் போய் விட்டதோ? :)))) எங்க வீட்டில் நான் எடுத்த படங்களும் போடணும். வாட்சப்பில் குழுவில் பகிர்ந்திருந்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குபேரன் கண்ணன் அலங்காரம் போன வருடம் எடுத்த படம் .
இப்போது நங்கு விவரம் தெரிகிறது. நிறைய விஷயங்கள் பேசுகிறான். குழந்தைதன்மையும் இருக்கிறது.
//கிருஷ்ணன் கோலமும், அலங்காரங்களும் அருமை. பக்ஷணங்கள் தான் கொஞ்சமாய்ப் போய் விட்டதோ?//
சாப்பிட ஆள் இருந்தால் எல்லாம் செய்யலாம், வீட்டுக்கு வருவாரும் இல்லை, கொடுத்து வாங்கும் அளவு யாரும் அக்கம் பக்கத்தில் பழகவில்லை.
அவல் பாயசம் மட்டுமே செய்தேன். சீடை சார் கடையில் வாங்கி வந்தார்கள் அவல் வாங்க போன போது.
உங்கள் போன வருட கிருஷ்ண ஜெயந்தி படங்கள் பார்த்தேன் பதிவில்.
நீங்கள் எடுத்த படங்களை போடுங்கள்.
குழந்தைகளிடம் நாம் எதுவும் தெரியாதவர்கள் போல் இருப்பதில் தான் அவர்களின் சந்தோஷமே! எங்க பேத்தி குட்டிக் குஞ்சுலு எங்களை ஃப்ரண்ட்ஸ் என்றே அழைக்கிறாள். அவளும் எங்களுக்கு பலவிதமான நிறங்களையும் எண்களை ஒன்றிலிருந்து ஆரம்பித்தும் சொல்லிக் கொடுக்கிறாள். நாங்களும் திரும்பச் சொல்லணும். இல்லைனா ஃப்ளையிங் கிஸ் இல்லை, பை சொல்ல மாட்டேன் என்பாள்.
பதிலளிநீக்கு//எங்க பேத்தி குட்டிக் குஞ்சுலு எங்களை ஃப்ரண்ட்ஸ் என்றே அழைக்கிறாள். //
நீக்குஅதுதான் இன்பம்.
குழந்தைகளிடம் நாமும் குழந்தையாக இருப்பது தான் மகிழ்ச்சியே!
பேத்தி பாடம் நடத்துவது மகிழ்ச்சி.
அருமையான பாசுரங்களைத் தேர்வு செய்து போட்டிருக்கிறீர்கள். எங்கள் வீட்டிலும் ஊஞ்சல் கிருஷ்ணன் இருக்கிறான். புஷ்கரிலும், காசியிலும் வாங்கியவை. பெண்ணுக்கும் பிள்ளைக்கும்
பதிலளிநீக்குதொட்டில் கிருஷ்ணர் கொடுத்தோம்.
உங்கள் வீட்டு தொட்டில் கிருஷ்ணரை பார்த்து இருக்கிறேன்.
நீக்குகுழந்தைகளுக்கு தொட்டில் கிருஷ்ணருக்கு கொடுத்தது மகிழ்ச்சி.
தவழும் வெண்கல கிருஷ்ணர் ரிஷிகேஷில் வாங்கினேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இரண்டு போஸ்ட்க்கு நீங்கள் வரவில்லை என்ற போது உங்களுக்கு காட்டவில்லை போலும் என்று நினைத்தேன்.
இதற்கு முன் ராமர் கோவில் போட்டு இருந்தேன்.
கோமதி அக்கா நலம்தானே? கிருஸ்ணஜெயந்திக் கொண்டாட்டம் உங்கள் வீட்டிலும் அழகாக இருக்கிறது... பேரனும் அழகாக வெளிக்கிட்டுக் குழல் ஊதுகிறார்..
பதிலளிநீக்குநீண்ட நாட்களாக வர முடியவில்லை.. மன்னிக்கவும், இனி முடிஞ்சவரை வரப்பார்க்கிறேன்..
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குநலம் தான் அதிரா. நீங்களும், உங்கள் அன்பு குடும்பமும் நலம் தானே!
நீங்கள் வந்தது மகிழ்ச்சி. விடுமுறைகள் முடிந்து விட்டதா?
பதிவு ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
முடிந்த போது வாருங்கள், ஒரு மறு மொழி கொடுத்தாலும் போதும்
நீங்கள் ஆசைபட்ட வேலைகளை செய்து முடித்தீர்களா?
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். பேரன் படம் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி.
பேரன் அழகாக இருக்கிறார் .பேரனுக்கு வாழ்த்து!
பதிலளிநீக்குவணக்கம் அன்பு, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபேரனை வாழ்த்தியதற்கு நன்றி.