சனி, 27 ஜூன், 2020

சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்


துங்கா  நதியின் எதிர்க்கரையிலிருந்து எடுத்த கோபுரக் காட்சி

2015 ஜனவரி முதல் வாரத்தில் கர்நாடகாவிற்கு ஆன்மீகச் சுற்றுலா 6 நாள்  பயணம் செய்தோம் அதில் அருள்மிகு  குக்கி சுப்பிரமணியர் திருக்கோவில்  போனதை மட்டும் முன்பு பதிவு போட்டு இருந்தேன் அப்புறம் பதிவு தொடரவில்லை.

மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர்  . உடுப்பி கிருஷ்ணன்.

இந்த கொரோனா காலத்தில் கோவில் போக முடியவில்லை. போன கோவில்கள் பற்றிப்பதிவு போடலாம் என்று ஆரம்பித்து இருக்கிறேன். 

சிருங்கேரி கோவிலின் வெளிப்பக்கம் இருந்து எடுத்தது

இதுவும் வெளிப்பக்க வீதியிலிருந்து எடுத்த படம்.

கோவிலின் உள் பக்கம் இருந்து எடுத்தது

இந்த சாரதாம்பாள் கோவில் (ஸ்ரீசாரதா பீடம்) அமைந்துள்ள இடம், சிக்மகளூர் மாவட்டத்தில் துங்கா நதிக்கரையில் அழகாய்  அமைந்து இருக்கிறது.  

சிருங்கேரி சாரதா பீடம் உருவாகக் காரணமாய் இருந்த நாகமும், தவளையும்

ஆதி சங்கரர் துங்கா நதிக்கரையோரம் நடந்துபோய்க்கொண்டு இருக்கும் போது அவர் பார்த்த காட்சி- தவளைக்கு வெயிலின் கொடுமை தெரியாமல் இருக்க நாகம் குடைபிடித்த காட்சி- பகைமை உணர்ச்சி இல்லாமல் ஒற்றுமையாகப் பாம்பும் தவளையும் இருப்பதைப் பார்த்து சாரதா பீடத்தை அமைக்கச் சிறந்த இடம் என்று ஆதிசங்கரர்  பீடத்தை அமைத்து 12 ஆண்டு காலம் தன் சீடர்களுக்கு   இங்கிருந்து அத்வைதத்தைக்  கற்பித்தார்.

ஸ்ரீ வித்யாசங்கர கோவில் - 600 வருடம் பழமையான  கலைவேலைப்பாடு கொண்ட கோவில் - ஸ்ரீசக்கர வடிவில் இருக்கிறது . உள்ளே லிங்க வடிவில் ஸ்ரீ வித்யா சங்கரர் - உள்ளே அழகிய தூண்கள் இருக்கின்றன.

கல் சங்கிலிகள்

கோபுர கலசங்களும் இடிதாங்கியும் 

உயரமான தீபஸ்தம்பம் (மாலை நேரம்  எடுத்த படம்)
அம்மன் சன்னதி வாசல்
சாரதாம்பாளை  வாசலில் இருந்தே பார்த்துக் கொண்டு உள்ளே செல்லலாம்.
நாங்கள் போனபோது  நிறைய குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் நடந்து கொண்டு இருந்தது. 

சாரதாம்பாள் இருக்கும் இடத்தைக் கொஞ்சம் தூரத்திலிருந்து ஜூம் செய்து எடுத்தேன். அன்னை  தெரிந்தாள்.  மனதுக்கு மகிழ்ச்சி.

எல்லா நேரமும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.  சகஸ்ரநாம அர்ச்சனைக்குப் பணம் கட்டினால் பிரசாதம், பெரிய தேங்காய்பர்பி  தருகிறார்கள். நாங்கள் பல கோவில்கள் பார்க்கவேண்டி இருந்ததால்  அம்மனை வணங்கிவிட்டுக்  குருவைப் பார்த்து ஆசீர்வாதம் பெற்றுப் பின் திரும்பினோம்.
அம்மன் கோவில் வாசலுக்கு நேரே ஒரு மண்டபத்தில்   ஆதிசங்கரர் மற்றும் அவருக்குப்பின்  வந்த சங்கராச்சாரியார்கள். கடைசியில் இருப்பவர் 36 ஆவதாக  இப்போது இருக்கும்  பாரதி தீர்த்த ஸ்வாமிகள்


வித்யா சங்கரர்  கோவில்  திராவிட, ஹொய்சாள கலைப்பாணி என்கிறார்கள்.
எல்லாப் பக்கமும் எப்படிப் படம் எடுத்தாலும் அழகிய தோற்றம் தரும் கோவில்

ராமர், கண்ணன்   சிலைகள் சுற்றிவர இருக்கிறது
அழகிய துவாரபாலகர்கள் - இருவர்  கையிலும்  கெண்டி அழகாய் இருக்கிறது.
இடப்பக்கம் இருப்பவர் கையில் கெண்டியில் வேலைப்பாடு இல்லை, வலப்பக்கம் இருப்பவர் கையில் உள்ள கெண்டியில் வேலைப்பாடுகள் உள்ளது.
ஆடை அலங்காரங்கள், கிரீடம் பின்னால் இருக்கும் வளைவு (திருவாச்சி) இருவருக்கும் வேறுபடுகிறது.துங்கா நதிப்படித்துறை   

படியில் அமர்ந்து மீன்கள் துள்ளி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

படித்துறையில் பொரி விற்கிறார்கள் வாங்கி  நதியில் இருக்கும் மீன்களுக்குப்  போட்டோம். பெரிய பெரிய மீன்கள் படம் எடுத்தேன்  வாய் மட்டும் தான் தெரிகிறது.  கறுப்பு கலரில் மீன் உடல் தெரியவில்லை .

இந்த மீன்கள் பெரிதாக இருப்பதால் இந்தப் படித்துறையில் குளிக்க மாட்டார்களாம், எதிர்க் கரையில்தான் குளிப்பார்களாம்.
படித்துறையிலிருந்து எடுத்த படம்.

சிருங்கேரியில்  சாரதாம்பாள் கோவிலில் ஆதிசங்கரருக்குத் தனிச்சன்னதி, அவர் வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் சிற்பங்கள் அமைந்து இருக்கின்றன. அப்புறம் 
குரு தரிசனம் செய்தோம், எதிர்கரையில் அமைந்து இருக்கும் குருபீடம் போய். அவை அடுத்த பதிவில்.


சாரதாம்பாள் ஸ்ரீசக்கரத்தின் மேல் அமர்ந்து  எல்லோருக்கும் அவர்கள் வேண்டும் வரத்தை  அருள்கிறார் என்று சொல்கிறார்கள். எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தோம்.


இந்தப் பதிவு என் 500வது பதிவு. 2009 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நான் வலைத்தளம் ஆரம்பித்தேன். மிக மெதுவான நடைதான்.  உங்கள் ஆதரவும், அன்பும் என்றும் வேண்டும். உற்சாகப்படுத்தி எழுதவைப்பவர்கள் அனைவருக்கும் நன்றி.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-------------------------------------------------------------------------

80 கருத்துகள்:

 1. 500 வது பதிவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் உங்கள் அழகிய பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   500 வது பதிவு, 11 வது வருடம் ஆரம்பம்.
   உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஆம்...   நீங்களும் நாங்களும் ஒரே மாதம், ஒரே வருடத்தில் தொடங்கி இருக்கிறோம்.  27 நாட்கள் இளையவர்கள் நாங்கள்!

   நீக்கு
  3. நேற்று உங்கள் பதிவு பார்த்த பிந்தான் எனக்கு நானும் ஜூன் மாதம் ஆரம்பித்தது நினைவு வந்தது உங்கள் பதிவில் சொன்னேன். வல்லி அக்கா வந்து வாழ்த்து சொன்னார்கள்.
   இளையவர்கள் என்றாலும் சாதனை செய்தவர்கள். வாழ்த்துக்கள்.

   நீக்கு
 2. அழகிய புகைப்படங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. மிக அழகான கோவில். வித்யாசங்கர் கோவில் ஒரு பலகையின் மீது நிறுத்தி வைத்திருப்பது போல இருக்கிறது. விரும்பினால் அப்படியே உருட்டித் தள்ளிக்கொண்டு வேறு இடம் போய் விடலாம் போல...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //விரும்பினால் அப்படியே உருட்டித் தள்ளிக்கொண்டு வேறு இடம் போய் விடலாம் போல...!//

   ஆஹா! ஆசைதான்.

   நிறைய கோணத்தில் நிறைய படங்கள் எடுத்து இருக்கிறேன் வித்யாசங்கர் கோவிலை மிக அழகான கோவில்தான்.

   நீக்கு
 3. இந்த லாக்டவுன் காலத்தில் கோவில்களுக்குப் போக முடியாத குறையை இதுமாதிரி பதிவுகள் தீர்க்கும். அன்னையின் தரிசனம் கிடைத்தது எனக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது பயணம் செய்த இனிய நினைவுகளை நினைத்துப் பார்க்கும் காலம்தான்.
   விரைவில் எல்லாம் நலமாகி தொற்று மறைந்து இயல்பு வாழ்க்கை மறுபடி ஆரம்பிக்க வேண்டும். இங்கு வளாகத்தில் ஒரு பையனுக்கு வந்து விட்டது. அதனால் கெடுபிடிகள் அதிகமாய் இருக்கிறது குடியிருப்பில். வளாகத்தில் நடைபயிற்சிகூட செய்யவேண்டாம் என்று சொல்கிறார்கள்.

   அந்த வீட்டில் இப்போது யாரும் இல்லை டாக்டரிடம் போகிறோம் என்று சொல்லி போனார்களாம் வீடு பூட்டி இருக்கிறது யாரும் இல்லை வீட்டில்.

   சிறுவன் உடல் நலமாக வீடு திரும்ப வேண்டும்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. பத்திரமாக இருங்கள்.  கவனமாக இருங்கள்.

   நீக்கு
  3. பத்திரமாய் இருக்கிறோம், கவனமாய் இருக்கிறோம் அப்புறம் இறைவன் விட்ட வழி.
   உங்கள் அக்கறையான அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்கவளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. இப்போது பயணம் செய்ய முடியாத போது பழைய பயண நினைவுகளை அசைபோடுவது நல்லது.

  500-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் மா...

  நீங்கள் ஜூன் 1.... நான் அதே வருடம் செப்டம்பர் 30! வலைப்பயணம் தொடரட்டும் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   எங்களை போன்றவர்களுக்கு பழைய நினைவுகளை அசைபோடுவதே மகிழ்ச்சியானது.
   இப்போது அது மேலும் அதிகமாகிறது. மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ள பயன்படுகிறது.

   உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீங்களும் 2009 ல் தான் பதிவு ஆரம்பித்தீர்கள் அல்லவா!

   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு
  2. அன்பு கோமதி , அப்போதே 500 பதிவுகள் ஆகி விட்டதே. இப்போது அதற்கும் மேல் இருக்க வேண்டும் அல்லவா. இது 2015 ஆம் வருடப் பதிவு.
   எப்படி இருந்தாலும் ஆய்களையும் வாழ்த்துகளையும் பிடியுங்கள்.
   ஒரு பதிவும் போட்டாலும் ஏகப்பட்ட செய்திகள் அதில் இருக்குமே.

   இந்தப் பதிவிலும் அன்னயின் கோவில் படங்கள்
   அத்தனையும் அற்புதம்.
   ஒவ்வொரு கோணமாக எடுத்திருக்கிறீர்கள்.
   தவளையைக் காக்கும் நாகம் படம் மிக அருமை.
   அதனால தான் ஆதிசங்கரர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்வார்கள்.

   முன்பெல்லாம் புனித பயணங்கள் தொடர் வந்து கொண்டே இருக்குமே.
   ஜயா தொலைக்காட்சியிலும் காண்பிப்பார்கள்.

   மிக நன்றிமா. ஸ்ரீ லலிதாம்பா அனைவருக்கும் வித்யையும்
   செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.

   நீக்கு
  3. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
   அக்கா, இப்போதுதான் 500 . உங்கள் ஆசிகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
   முன்பு பின்னூட்டங்கல் மட்டும் போட்டு கொண்டு இருந்தேன் முதலில். எழுத அழைத்தவர்கள், நீங்கள், கோமா அதை மறக்க முடியாது.

   வலைச்சரத்தில் எழுத வைத்தவர் வை.கோ சார்.
   எழுத உற்சாகபடுத்தியவர்கள் நிறைய பேர். இப்போது அவர்கள் எழுதுவது இல்லை வலைத்தளத்தில்.

   //தவளையைக் காக்கும் நாகம் படம் மிக அருமை.
   அதனால தான் ஆதிசங்கரர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்வார்கள்.//

   அதை மேலே குறிப்பிட்டு இருக்கிறேன் அக்கா. அவர் சன்னதியை சுற்றி அவர் வாழ்க்கை வரலாறு உள்ளது அதில் இருந்த படம் இது.

   அடுத்த பதிவில் அவை வரும் அக்கா.

   இப்போதும் ஆலய தரிசனம், ஆன்மீக பயணம் என்று போட்டி போட்டுக் கொண்டு தொலைக்காட்சியில் காலை, மாலை காட்டுகிறார்கள். அது போக யூடியூப்பில் நிறைய காணொளிகள், தினப்பத்திரிக்கைகள், வாரமலர்கள், மாத இதழ்கள் எல்லாவற்றிலும் ஆன்மீக பகுதியில் கோவில்கள் காட்டுகிறார்கள். நமக்குத்தான் நேரம் வேண்டும் பார்க்க.

   //ஸ்ரீ லலிதாம்பா அனைவருக்கும் வித்யையும்
   செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.//

   உங்கள் பிரார்த்தனைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி அக்கா.

   நீக்கு
 6. எல்லாப் பக்கமும் எடுத்த படங்கள் அனைத்தும் அருமை அம்மா..

  500வது பதிவு - வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன்.

   நீக்கு
  2. எளிய நடை, சிறந்த புகைப்படங்கள், நேரில பார்ப்பதைப் போன்ற எழுத்தோட்டம். அடுத்த ஆலயதரிசன எழுத்தோவியத்தை எதிர்நோக்கியுள்ளேன். நன்றி.

   நீக்கு
  3. வணக்கம் Unknown, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   அடுத்து இரண்டு கோவில்கள் பகிர்ந்து இருக்கிறேன்.

   நீக்கு
 7. வித்யாசங்கர கோயிலை பார்க்கும்போது அமைப்பானது பேலூர், ஹலேபேட் கோயில்களை நினைவூட்டியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

   //பேலூர், ஹலேபேட் கோயில்களை நினைவூட்டியது.//

   ஆமாம் ஐயா.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரி

  முதலில் உங்களது 500ஆவது பதிவுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள். தங்கள் பதிவுகள் மென்மேலும் தொடர்ந்து 5000ஐ எட்ட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  பதிவு நன்றாக உள்ளது. சிருங்கேரி கோவில் படங்களும், அதை நீங்கள் எடுத்த கோணங்களும் அழகாக உள்ளது. கோவிலைப் பற்றிய விவரங்களுக்கும், கோவில் தரிசனத்திற்கும் நன்றி. சாரதாதேவி அன்னையை கண்டு மனதாற பிரார்த்தித்து கொண்டேன். எங்கள் குரு சிருங்கேரி பீடாதிபதிதான். அனைத்திற்கும் குருவே துணை.

  நாங்களும் இங்கு வந்த பின் நீங்கள் சென்ற இடங்களுக்கு இரு முறை சென்று தரிசித்து வந்தோம். குக்கே சுப்பிரமணியா கோவில் மட்டும் செல்லவில்லை. அது எங்களது சுற்றில் இன்னமும் ஒரு நாள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் என்பதினால், தனியாக பின்பு செல்லலாம் என வந்து விட்டோம். அவன் அப்போது (சுப்பிரமணியன்) எங்களை அழைக்கவில்லை.மறுபடி எப்போது அழைத்தாலும்.கிளம்ப வேண்டியதுதான் என மனச்சமாதானம் செய்து கொண்டோம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகள் வெளியில் எங்கேனும் செல்லும் எண்ணங்களையே அகற்றி வருகிறது. இப்போதுள்ள இந்த சூழ்நிலைகள் அகன்று இறைவன் அனைவரையும் நலமுடன் பழைய பயமில்லா சூழலுக்கு கொண்டு வர எனது பிரார்த்தனைகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   //உங்களது 500ஆவது பதிவுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள். தங்கள் பதிவுகள் மென்மேலும் தொடர்ந்து 5000ஐ எட்ட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்//

   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கமலா, 5000 பதிவு ! அதிகம் இருந்தாலும் உங்கள் அன்பானபிரார்த்தனைக்கு நன்றி.

   //சாரதாதேவி அன்னையை கண்டு மனதாற பிரார்த்தித்து கொண்டேன். எங்கள் குரு சிருங்கேரி பீடாதிபதிதான். அனைத்திற்கும் குருவே துணை.//

   மகிழ்ச்சி .

   குக்கே சுப்பிரமணியா கோவில் சுட்டி கொடுத்து இருக்கிறேன் கமலா பாருங்கள் இப்போது அப்புறம் இயல்பு நிலை திரும்பியவுடன் பாருங்கள். முருகன் அழைப்பார்.


   //இறைவன் அனைவரையும் நலமுடன் பழைய பயமில்லா சூழலுக்கு கொண்டு வர எனது பிரார்த்தனைகளும். //

   உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அன்பான கருத்துக்கும் மிகவும் நன்றி கமலா.
   நீக்கு
 9. பதிவு 500 வாழ்த்துக்கள். முர்டேஸ்வரில் இருந்து மங்களூர் திரும்பும்போது உடுப்பி கிருஷ்ணனையும் தரிசித்து இருக்கலாம். 
  மற்ற இடங்களைப் பற்றிய படங்களும் விவரனையும் எதிர் பார்க்கிறேன்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ Jayakumar Chandrasekaran, வாழ்க வளமுடன்.
   உடுப்பி கிருஷ்ணரை நினைவு படுத்தியதற்கு நன்றி, அவர் பெயர் விடுபட்டு விட்டது அதை உங்கள் மூலம் நினைவு படுத்தி விட்டார். உடுப்பி கிருஷ்ணரை தரிசனம் செய்தோம், அங்கு உணவு அருந்தினோம்.
   நீங்கள் தொடர்வது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. ஐநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆன்மீகப் பயணங்கள், அனுபவப் பகிர்வுகள், வாழ்வியல் சித்தாந்தங்கள், நீங்கள் பார்த்த இடங்களை எங்களுக்கும் காட்ட வேண்டுமென சிரமமேற்கொண்டு எடுத்த அனைத்து அருமையான ஒளிப்படங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம் திருமதி பக்கங்களைப் பற்றி. தொடருங்கள்.. தொடருகிறோம்..!

  லாக் டவுன் நேரத்தில் எல்லோருமே பழைய ஃபோல்டர்களிலிருந்துதான் பகிர வேண்டியதாயுள்ளது.

  பதிவும் படங்களும் தகவல்களும் நன்று. நாகமும் தவளையும் concept சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   வாழ்த்துக்களுக்கு நன்றி. அன்பாக திருமதி பக்கங்கள் பற்றி விரிவான கருத்து மகிழ்ச்சி படுத்துகிறது ராமலக்ஷ்மி.
   எப்போதும் உற்சாகமான கருத்துக்கள் கொடுத்து என்னை எழுத வைத்தவர் நீங்கள். முன்பு மாதிரி நீங்களும் கதை , கவிதை கட்டுரைகள் வலைத்தளத்தில் எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

   உங்கள் படங்கள் மிக அற்புதமானது, என் படங்களையும் அருமையான ஓளிப்படங்கள் என்று சொல்வது மகிழ்ச்சி.

   //லாக் டவுன் நேரத்தில் எல்லோருமே பழைய ஃபோல்டர்களிலிருந்துதான் பகிர வேண்டியதாயுள்ளது.//

   ஆமாம் ராமலக்ஷ்மி.

   நாகமும் தவளையும் concept சுவாரஸ்யம்.//

   முக்கியமான பாத்திரங்கள் ஆதி சங்கரர் வாழ்வில். அவர் வாழ்க்கையை மாற்றிய (துறவறம் மேற்கொள்ள வைத்தது)
   முதலையும் உண்டு அது அடுத்த பதிவில்.

   உங்கள் அன்பான விரிவான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
  2. முதலை சங்கரரின் காலைக் கவ்வும் கதை அறிவேன். உங்கள் வரிகளில் வாசிக்கக் காத்திருக்கிறேன்.

   ஆம், படைப்பிலக்கியத்தில் ஒரு தேக்கம் வந்து விட்டது உண்மைதான். முன் போல எழுத முயன்றிடுகிறேன். நன்றி கோமதிம்மா.

   நீக்கு
  3. ராமலக்ஷ்மி, மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   //படைப்பிலக்கியத்தில் ஒரு தேக்கம் வந்து விட்டது உண்மைதான். முன் போல எழுத முயன்றிடுகிறேன்.//

   உங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. எழுதுங்கள் ராமலக்ஷ்மி. கை வலி, தோள்பட்டை வலி எல்லாம் இப்போது இல்லை அல்லவா? எழுதுங்கள்.   நீக்கு
  4. கைவலி, தோள் வலி அதிகமாகி விடாமல் கவனமாக இருக்க வேண்டியுள்ளது இப்போதும். அதிகமாக (லாப்டாப்)சிஸ்டத்தில் இருப்பதில்லை. அதுவும் தேக்கத்திற்கு ஒரு காரணமே. நினைவு வைத்து விசாரித்தமைக்கு நன்றி:).

   /எல்லாப் பக்கமும் எப்படிப் படம் எடுத்தாலும் அழகிய தோற்றம் தரும் கோவில்/ ரசித்து ரசித்து நீங்கள் எடுத்திருக்கும் படங்களே சாட்சி. கர்நாடகாவில் இன்னும் பார்க்க வேண்டிய கோயில்கள் வரிசையில் இதையும் வைத்துள்ளேன்.

   நீக்கு
  5. எனக்கும் கைவலி, தோள்வலி இருக்கிறது. எளிய உடற்பயிற்சி, மற்றும் கை வைத்தியத்தில் ஓடுகிறது.
   இரவு தான் மிகவும் கைவலி இருக்கும்.

   கலைநயமிக்க நிறைய கோவில்கள் கர்நாடகாவில் இருப்பது உண்மை.

   முடிந்த போது பாருங்கள் உங்கள் காமிராவிற்கு நல்ல வேலை இருக்கும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. கோயிலின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. விளக்கமும், செய்திகளும் சிறப்பு.

  500-வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி ஜி.

   நீக்கு
 12. சிருங்கேரி சாரதா பீடம் மற்றும் ஆச்சார்யாவின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்க ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.

  படங்கள் மிக அழகு.

  சங்கராச்சார்யார் அவர்களை தரிசனம் செய்தீர்களா? படங்கள் எடுத்தீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //சிருங்கேரி சாரதா பீடம் மற்றும் ஆச்சார்யாவின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்க ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.//

   நானும் ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.
   குருவை சந்தித்தோம் அவர் பேச்சை கேட்டோம். குரு வழிபாடு செய்தவர்களுக்கு கற்கண்டு பிரசாதம் கொடுத்தார்.
   உள்ளே அவரை படம் எடுக்க அனுமதி இல்லை. போகும் வழியெல்லாம் அழகாய் பாக்கு மரங்களும், மிளகுகொடிசுற்றி பார்க்கவே அழகாய் இருந்தது .
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


   நீக்கு
 13. 500வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  அதனைத் தனிப் பதிவாக வெளியிட்டிருக்கலாம், சாரின் ஒரு ஓவியத்தோடு.

  தொடர்ந்து சலிப்பில்லாமல் எழுதவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

   //அதனைத் தனிப் பதிவாக வெளியிட்டிருக்கலாம், சாரின் ஒரு ஓவியத்தோடு.//

   நீங்கள் சொன்னது போல் தனி பதிவாக வெளிடிட்டு இருக்கலாம்.

   ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பதிவு போட்டேன், என்று குறிப்பு எழுதி வைத்து இருந்தேன், பத்து ஆண்டு நிறைவு பெற்று 11ம் ஆண்டு வரும் போது 500வது பதிவு வந்து விட்டது.

   சார் படம் போடுகிறேன் முன்பே கேட்டீர்கள்.


   //தொடர்ந்து சலிப்பில்லாமல் எழுதவேண்டும்.//

   ஆமாம், அதை இறைவன் அருள வேண்டும்.

   நீக்கு
 14. நான் குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு மட்டும் சென்றிருக்கிறேன். அப்போது ஆற்றில் வெள்ளம். நாங்கள் சென்ற பேருந்து ஒரு புறத்தில் நின்றுவிட்டது. பிறகு தனியார் வண்டி மூலமாக சுற்றுப்பாதையில் சென்று கோவில் தரிசனம் செய்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு செல்லும் முன் உடல் நிலை சரியில்லை எனக்கு பயணத்தை ரத்து செய்யலாம் என்று நினைத்தோம், அப்புறம் இறைவன் அருளால் மாத்திரைகள் எடுத்துக் கொண்டு கர்நாடகா பயணம் ஆரம்பித்தேன்.

   உங்கள் பயணத்திலும் ஆற்றில் வெள்ளம் வந்து இடையூறு ஏற்பட்டலும் முருகனை நன்றாக தரிசனம் செய்து இருக்கிறீர்கள். எல்லாம் அவன் அருள்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 15. காலையிலேயே எபியில் தங்களது ஐநூறாவது பதிவு வெளியாகியுள்ளதைப் படித்தேன்...

  மிகவும் மகிழ்ச்சி...

  இன்னும் பலநூறு பதிவுகள் தரவேண்டும் -
  என, பிரார்த்தித்துக் கொள்கிறேன்...

  வாழ்க வளமுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //இன்னும் பலநூறு பதிவுகள் தரவேண்டும் -
   என, பிரார்த்தித்துக் கொள்கிறேன்...//

   உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 16. துங்கா நதிக்கரை ஓரத்திலே
  சங்கர்ற் அமைத்த் கோயிலிலே
  தன்கியே சாரதை வீற்றிருப்பாள்...

  P.சுசீலா அவர்களது துதிப் பாடல் நினைவுக்கு வருகின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //துங்கா நதிக்கரை ஓரத்திலே
   சங்கர்ற் அமைத்த் கோயிலிலே
   தன்கியே சாரதை வீற்றிருப்பாள்..//

   நவராத்திரி பாடல்கள் என்ற ஒலி நாடாவில் பி. சுசீலா அவர்களின் பாடல் இருக்கிறது மிகவும் பிடித்த பாடலை நினைவு படுத்தியதற்கு நன்றி.

   நீக்கு
 17. 500 ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

   உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 18. ஸ்ரீ வித்யா சங்கர் கோவிலின் அழகு அசத்துகிறது. மிகவும் அழகான கோவில். அதன் சிற்பங்கள் பிரமிக்க வைக்கின்றன! இந்த கோவில் எங்குள்ளது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் தான் ஸ்ரீ வித்யா சங்கர் கோவில் இருக்கிறது.
   கர்நாடகா மாநிலத்தில் இந்த சாரதாம்பாள் கோவில் (ஸ்ரீசாரதா பீடம்) அமைந்துள்ள இடம், சிக்மகளூர் மாவட்டத்தில் துங்கா நதிக்கரையில் அழகாய் அமைந்து இருக்கிறது.
   என்று மேலே போட்டு இருக்கிறேன் மனோ.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 19. காலையில் வேலைக்குச் செல்லும் வேளையில் உதித்தது இந்தக் கவிதை..

  வேலை முடிந்து சற்றே ஓய்வு..
  இதோ தங்களுக்காக...
  ...........

  ஒரு நூறு இருநூறாய்
  ஐந்நூறு பதிவுகள்
  இன்னமுதக் கற்கண்டாய்
  தந்தது தான் இத்தளம்..
  கவிபாடும் பறவைக்கெல்லாம்
  கதிகாட்டும் கொத்தளம்..

  பாரம்பர்யக் குவியலென
  பழஞ்செல்வ மூட்டை..
  பக்குவமாய்ப் பகிர்வதிலும்
  புகழ் விளைக்கும் கோட்டை..
  இளஞ்சோடிப் புறவுகளும்
  அடைக்கலமாய்த் தேடும்..
  அன்னை அன்பு நெஞ்சினிலே
  அச்சம் இன்றிக் கூடும்..

  நல்முத்து மணிகளென
  நற்றமிழில் வார்க்கின்ற
  பண்புநிறை பக்கங்கள்..
  மல்லி முல்லை செண்பகமாய்
  சேர்த்தெடுத்துக் கோர்க்கின்ற
  அன்புநிறை பக்கங்கள்..
  திருமதியின் பக்கங்கள்..
  திருநிறையும் பக்கங்கள்..

  பண்பு வளர் அன்பினொடு
  பாரெல்லாம் பெருக
  பலநூறு பதிவு இன்னும்
  பைந்தமிழில் தருக..

  தீந்தமிழின் சொல்லெடுத்து
  மகிழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்..
  சாரதையின் நல்லருளும்
  சேர்ந்திருக்க வேண்டுகிறேன்...
  ***

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! அழகான அருமையான கவிதை.
   உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் உடனே கவிதை எழுதுவது.

   சகோ உங்கள் அன்பு விழியோரத்தில் நீர் துளிர்க்க வைத்துவிட்டது.

   //சாரதையின் நல்லருளும்
   சேர்ந்திருக்க வேண்டுகிறேன்...//

   உங்கள் அன்பு வாழ்த்துக்கு நன்றி., சாரதையிடம் வேண்டியதும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

   நன்றி நன்றி.   நீக்கு
 20. சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு 500 அது பதிவிற்கு வாழ்த்துகள். பதிவு அருமையாக ஒரு நல்ல விஷயத்தோடு வந்திருப்பது சிறப்பு. மேலும் மேலும் பதிவுகள் வளர்ந்திடவும் வாழ்த்துகள்!

  இந்த இடங்கள் சென்றிருக்கிறேன். மூகாம்பிகைக் கோயிலும் சென்றிருக்கிறேன்.

  படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன. மிகவும் ரசித்தேன்.

  வாழ்த்துகள்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   கற்க வேண்டியது நிறைய இருக்கிறது , சகலகலாவல்லியின் கடைகண் பார்வை கிடைத்தால் நல்லது . 500வது பதிவாக சாரதாம்பாள் வந்து இருக்கிறார்.

   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ.

   நீக்கு
 21. ஆஹா கோமதிக்கா 500 வது பதிவுக்கு வாழ்த்துகள்! கூடவே ஒரு ஸ்வீட் போட்டிருக்கக் கூடாதோ?!!! ஹா ஹா ஹா

  ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க!!!

  அக்கா படங்கள் அத்தனையும் அப்படியே மனதை கொள்ளை கொள்ளுகுறது. ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க!! சூப்பரோ சூப்பர்.

  எல்லாப் பக்கமும் எப்படிப் படம் எடுத்தாலும் அழகிய தோற்றம் தரும் கோவில்//

  அதே அதே அதே!! அந்தப் படங்கள் தான் முதலில் கண்ணைக் கவர்ந்தது என்ன அழகு இல்லையா? கலைவடிவம் சான்ஸே இல்லைக்கா...செமையா இருக்கு..ரொம்பவும் ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
   நான் 500வது பதிவு என்று நினைத்து எழுதவில்லை கீதா. ஆன்மீக பயணக்கட்டுரைகள் எழுதவேண்டியது நிறைய இருக்கே! கோவில் போகமுடியாத காலத்தில் அதை போடுவோம் என்று நினைத்து பதிவு தயார் செய்து இருந்தேன்.

   எங்கள் ப்ளாக்கிற்கு பிறந்தநாள் என்றதும் நாமும் 2009 தானே வலைத்தளம் ஆரம்பித்தோம் என்று நினைவு வந்தது. 11 வருடத்தில் நாம் எவ்வளவு போஸ்ட் போட்டு இருக்கோம் என்று பார்த்தேன் 500 காட்டியது. அதனால் சிறு குறிப்பு.
   அவ்வளவுதான்.

   அன்பான உங்கள் பேச்சே இனிமைதான். தங்கை அதிரா நிறைய ஸ்வீட் இரண்டு நாள் முன் கொடுத்து விட்டார். அதனால் உடல் நலம் கருதி ஸ்வீட் கொடுக்கவில்லை.
   கோவிலின் கலை அழகை ரசித்தீர்களா மகிழ்ச்சி.

   நீக்கு
 22. தகவல்கள் சிறப்பு.

  எங்கள் வீட்டில் என்னைத்தவிர எல்லாரும் இக்கோயில் போயிருக்காங்க. இப்ப நல்ல சான்ஸ் போவதற்கு இங்கே கர்நாடகாவில் இருப்பதால் ஆனால் பாருங்க போக முடியாதபடி சூழல் ஆகிப் போச்சு.

  மீன்களின் வாய் நன்றாகத் தெரிகிறது அழகு இல்லையா அக்கா. எங்க ஊர்க் குளத்திலேயே எக்கச்சக்க மீன்கள் நாங்கள் குளிக்கும் போது காலில் தன் மீசையாலோ, வாயாலோ தடவி தடவிச் செல்லும். அதுவும் புண் இருந்தால் கொத்தும். அதற்காகவே நாங்கள் உடலில் புண் இருந்தால் இறங்கத் தயங்குவோம். ஆனால் அப்படிச் செய்தால் புண் விரைவில் ஆறிவிடும் என்றும் சொல்லுவாங்க.

  துங்கபத்திரா நதி அழகுதான்.

  எல்லாப்படங்களிலும் மனதை மிகவும் கவர்ந்தது அந்த திராவிட ஹொய்சாள கலைநயம் மிக்கவை தான் அத்தனை படங்களும் அழகோ அழ்கு...

  மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

  இன்னும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகள் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 23. //எங்கள் வீட்டில் என்னைத்தவிர எல்லாரும் இக்கோயில் போயிருக்காங்க. இப்ப நல்ல சான்ஸ் போவதற்கு இங்கே கர்நாடகாவில் இருப்பதால் ஆனால் பாருங்க போக முடியாதபடி சூழல் ஆகிப் போச்சு.//

  பொறுத்து இருப்போம், மறுபடியும் பழைய நிலை திரும்பும் . அப்போது போய் மகிழ்வாய் தரிசனம் செய்யலாம்.

  பெரிய பெரிய மால்களில் சிறு மீன்கள் நம் காலை சுத்தம் செய்ய வந்து விட்டதே ! நம் காலகளை தொட்டியில் வைத்துக் கொண்டால் மீன்கள் நம் காலை கடித்து வருடி கொடுக்கும்.
  பார்த்து இருக்கிறேன் ஆனால் நான் காலை கொடுக்கவில்லை.
  துங்கா நதியின் அழகு அடுத்த பகுதியில் வரும்.
  படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. கோயில் கோபுரம் மிக அழகு.. ஏதோ திருத்த வேலை நடக்கிறது போலும், ..அழகழகாகப் படமெடுத்திருக்கிறீங்க கோமதி அக்கா..ஏதோ திருத்தப் பணி நடக்கிறது போலும் அதனால கோபுர அழகு கொஞ்சம் குறையுது ஒழுங்காக எடுக்க முடியாமல்.

  நாகத்தின் மடியில் தவளையார் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார்... இது நிஜத்தில் நடக்காதே ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   நாங்கள் போன போது கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் நடந்து கொண்டு இருந்தது.

   //நாகத்தின் மடியில் தவளையார் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார்... இது நிஜத்தில் நடக்காதே ஹா ஹா ஹா.//

   நிறைமாத கர்ப்பிணியாம் அந்த தவளை அது வெயிலில் கஷ்டபடுவதைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அதற்கு குடைபிடித்ததாம் நாகம், இயல்புக்கு மாறா நடந்ததால்தான் அந்த இடம் நல்ல இடம் என்று பீடம் அமைத்து இருக்கிறார்.

   நாயும், பூனையும் எங்கும் நட்பாய் இருக்க முடியாது என்பார்கள் ஆனால் செல்லமாய் இரண்டையும் வளர்க்கும் வீட்டில் ஒற்றுமையாக இரண்டும் இருக்கே!

   நீக்கு
 25. ஸ்ரீ வித்யா சங்கர கோயில் சிற்ப வேலைப்பாடுகள் அழகோ அழகு, படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீங்கள்.

  கல்லில் செய்த சங்கிலிகளோ அவை.. ஆஆஆ கழண்டு விழுந்தால் அவ்வளவுதான்.

  இடிதாங்கி கலசம் எல்லாம் அக்காலத்திலேயே வைத்தார்களோ.. பார்க்கப் புதுசாக இருக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஸ்ரீ வித்யா சங்கர கோயில் சிற்ப வேலைப்பாடுகள் அழகோ அழகு, படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீங்கள்.//

   நன்றி அதிரா.

   //கல்லில் செய்த சங்கிலிகளோ அவை.. ஆஆஆ கழண்டு விழுந்தால் அவ்வளவுதான்.//
   தமிழ்நாட்டில் பழமையான கோவில்களில் இந்த கல் சங்கிலிகள் இன்னும் பெரிதாக தொங்கும். கழண்டு விழாது அந்தக்கால வேலைத்திறன்.

   இடிதாங்கி புதிதாக வைத்து இருப்பார்கள். கலசமே இடிதாங்கிதான் அதற்குள் கேழ்வரகு போன்ற தானியங்களை போட்டுதான் வைத்து இருப்பார்கள் அந்த காலத்திலிருந்து இப்போது வரை.

   நீக்கு
 26. ஓம் தூரத்திலேயே சாரதாம்பாள் மூலஸ்தானம் அழகாக தெரியும்படி வெளிச்சம் வரப்பண்ணியிருக்கினம் போலும். சிற்ப வேலைப்பாடுகள் அழகோ அழகு...என்ன ஒரு கலைநயம்.

  படித்துறை மிக அழகாகவும் சுத்தமாகவும் இருக்கு.. இதிலிருந்து கதை, கவிதை எழுதலாம் போல இருக்கு.... மீன்களும் உண்டோ அவ்வ்வ்வ்வ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஓம் தூரத்திலேயே சாரதாம்பாள் மூலஸ்தானம் அழகாக தெரியும்படி வெளிச்சம் வரப்பண்ணியிருக்கினம் போலும்.//

   ஆமாம் , அப்படியே போட்டு விட்டேன் வெளிச்சம் வர வைத்து போடுகிறேன் மீண்டும்.
   கோவில் இருக்கும் இடம், சுற்றுபுறம் எல்லாம் அழகோ அழகுதான் அதிரா.

   //படித்துறை மிக அழகாகவும் சுத்தமாகவும் இருக்கு.. இதிலிருந்து கதை, கவிதை எழுதலாம் போல இருக்கு.... மீன்களும் உண்டோ அவ்வ்வ்வ்வ்..//

   பெரிய பெரிய கரிய மீன்.
   அதிரா எழுதுங்கள் கதை, கவிதை எல்லாம்.

   நீக்கு
 27. ஓ கோமதி அக்கா 500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. எல்லோரும் சேர்ந்து இன்னும் பல நூறு பதிவுகள் காண்போம்.

  நானும் அப்போ உங்களோடுதான் புளொக் திறந்தேன்.. 2009 பெப்ரவரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா , அக்காவை முந்தி கொண்டு எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

   //எல்லோரும் சேர்ந்து இன்னும் பல நூறு பதிவுகள் காண்போம்.//

   கண்டிப்பாய் . உங்கள் உற்சாகமான பின்னூட்டங்கள் இன்னும் எழுத சொல்லும்.

   உங்கள் கருத்துக்களுக்கு, வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி அதிரா.

   நீக்கு
 28. 500 ஆவது பதிவுக்கும் பனிரண்டாம் ஆண்டுத் தொடக்கத்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நேற்றே வரணும்னு நினைச்சு முடியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   நீங்கள்தான் அழகாய் எங்கள் ப்ளாக்கில் வாழ்த்தி விட்டீர்களே!
   உங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 29. சிருங்கேரியில் நாங்கள் நாலைந்து நாட்கள் தங்கினோம். தினம் சாயங்காலம் கோயில் வாசலில் தான் உட்கார்ந்திருப்போம். சிருங்கேரி சங்கராசாரியாரை 3,4 தரம் போய் தரிசித்தோம். துங்கா நதிக்கரையில் அமர்ந்து கொண்டு இயற்கைக் காட்சிகளை ரசித்தவண்ணம் உட்கார்ந்திருப்போம். ஆனால் படங்கள் ஏதும் எடுக்கவில்லை. அப்போ ஃபில்ம் மாற்றும் காமிரா தான் இருந்தது. அதுவும் கயிலை கொண்டு போனப்போ ஏதோ வீணாகிவிட்டது. ஆகவே இங்கெல்லாம் பயணம் செய்தப்போ மாதிரிக்குக் கூடப் படங்கள் எடுக்க வில்லை. :( பல இடங்கள் இப்படிப் படங்கள் எடுக்காமலேயே பயணம் செய்தோம். தர்மஸ்தலா, குக்கே, மங்களூரின் கோயில்கள், உடுப்பி, சிருங்கேரி, சிருங்கேரி சுற்றுவட்டாரத்துக் கோயில்கள், ஹொரநாடு அன்னபூர்ணா என! அதன் பின்னரும் நவ கைலாயம், நவதிருப்பதி போனப்போவும் காமிரா எல்லாம் கிடையாது. அஹோபில யாத்திரைக்கும் பின்னர் தான் காமிராவே கிடைத்தது. மங்களூரில் "கத்ரி" கோயில் ஓர் சிற்ப அற்புதம். இரவு நேரத்தில் போனதால் கோயில் மூடும் நேரம் வந்துவிட்டது என்பதால் அதிகம் நின்று நிதானித்துப் பார்க்க முடியலை. ஆனால் நல்ல தரிசனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிருங்கேரியில் நாங்கள் நாலைந்து நாட்கள் தங்கினோம் என்பதை கேட்கும் போது மனது மகிழ்ச்சி அடைகிறது நல்ல வாய்ப்பு இறையருளால்.

   சங்கராசாரியாரை நிறைய தடவை தரிசனம் செய்தது அறிந்து மகிழ்ச்சி, குருவருள் கிடைப்பது பெரிய புண்ணியம்தான்.

   படம் எடுக்கவில்லை என்றால் என்ன? உங்கள் மனக்கண்ணில் அத்தனையும் காட்சியாக இருக்கிறது.

   இயற்கை எழில் சூழ்ந்தது கொரநாடு அன்னபூர்ணா கோவில்.
   அஹோபில யாத்திரை செய்யவில்லை.
   உங்கள் பயண அனுபவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி, நன்றி.

   நீக்கு
 30. தஞ்சையம்பதிக்கு வருகை தந்து
  ஸ்ரீ வராஹி அம்மனைத் துதித்து எழுதிய வரிகளைப் படித்து சிற்ப்பித்த்மைக்கு மக்கள்..

  அன்னையின் அருள் கொண்டு தான்
  அந்த வரிகளை எழுதினேன்...

  இன்னும் அவள் அருள்வாள்..
  காத்திருக்கின்றேன்..

  மகிழ்ச்சி.. நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்னை ஸ்ரீ வராஹி அருளால் நீங்கள் எழுதிய கவிதை அருமை.
   இன்னும் அருள்தரட்டும்.
   அன்னையின் மேல் கவிதை மழை பொழிந்தால் அன்னை அருள் மழை பொழிவாள்.
   எங்களும் அவள் அருள் கிடைக்கட்டும்.
   நன்றி.

   நீக்கு
 31. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் மா ..

  குக்கே பற்றி தேடும் போது தான் முதன் முதலில் உங்கள் தளம் கண்டு வந்து ...பின் தொடர ஆரம்பித்தேன் ...

  ஆனால் குக்கே செல்லும் வாய்ப்பு தான் இன்னும் கிடைக்க வில்லை ..
  சாரதாம்பாளை தரிசித்துக் கொண்டேன் ...அனைவருக்கும் நல்ல மன அமைதியையும் , உடல் நலத்தையும் அன்னை அருள வேண்டும் ...

  உங்களின் பதிவுகள் என்றுமே தனி சிறப்பு மா ...தேவையான தகவல்கள் படங்கள் என படிக்க படிக்க இன்பம் தருபவையாக இருக்கும் ...

  இது போல இன்னும் இன்னும் பல பதிவுகள் நீங்கள் தரனும் மா ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அனு.
   குக்கே செல்லும் வாய்ப்பு விரைவில் வர பிரார்த்திக்றேன் அனு.


   //சாரதாம்பாளை தரிசித்துக் கொண்டேன் ...அனைவருக்கும் நல்ல மன அமைதியையும் , உடல் நலத்தையும் அன்னை அருள வேண்டும் ...//

   நீங்கள் சொல்வது இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியம்.

   உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 32. 500வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!. இன்னும் நிறைய பதிவுகள்   எழுத வாழ்த்துகிறேன்.  படங்கள் வழக்கம் போல தெளிவு! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடங்கள் எல்லாமே நான் பார்க்க விரும்பும் தலங்கள்.  இறை அருளால் காணக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   வாழ்த்துக்களுக்கு நன்றி.

   //நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடங்கள் எல்லாமே நான் பார்க்க விரும்பும் தலங்கள். இறை அருளால் காணக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.//

   உங்கள் நம்பிக்கை இறை அருளை கூட்டி வைக்கும்.

   உங்கள் வாழ்த்துக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 33. 500 வது பதிவுக்கு வாழ்த்துகள், வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிவுகள், இடையிடையே சமையல் குறிப்புகளும் எழுத வேண்டும் அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
   சமையல் குறிப்புகள் எழுதுகிறேன் அம்மு.

   நீக்கு
 34. முதல் ஐந்து படங்களும் ரெம்ப அழகு அக்கா. 1வது படம் சூப்பர். ஸ்ரீசாரதா பீடம் அமைய காரணமான கதை சுவாரஸ்யம்.
  ஸ்ரீ வித்யாசங்கர கோவில் கலைநயமிக்க அழகா இருக்கின்றது. கல்சங்கிலி பிரமிப்பு. அக்காலத்தில் என்ன மாதிரி கலைநயமிக்கதாக கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். எனக்கு தஞ்சை பெரிய கோவிலை பார்த்த பிரமிப்பு இன்னமும் இருக்கு. இதையும்பார்க்க விருப்பமா இருக்கு. பார்ப்போம்.

  ஶ்ரீவித்யாசங்கர கோவில் படத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அவ்வளவு அழகா இருக்கு. படமும்தான்.
  நீங்க ஜும் செய்து படம் எடுத்ததால் நாங்களும் அன்னையை தரிசித்தோம் அக்கா. 89ம் ஆண்டு (சின்னனில்)நானும் ஒரு சங்கராச்சார்ய சுவாமிகளை கண்டு தரிசித்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கேன்.
  எல்லா இடங்களும் அழகா இருக்கு. படத்தில் நீங்களா?
  உங்கள் படங்கள் அத்தனையும் அழகாக இருக்கு அக்கா. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்நடாகாவில் நிறைய கோவில்கள் மிக அழகாய் கலைநயத்தோடு இருக்கும் அம்மு.
   இந்தியா முழுவதும் பார்க்க வேண்டிய கோவில்கள் நிறைய இருக்கிறது.
   நம்மால் முடிந்ததை இறையருளால் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

   உங்கள் ஆசையை இறைவன் நடத்தி வைப்பார்.

   //89ம் ஆண்டு (சின்னனில்)நானும் ஒரு சங்கராச்சார்ய சுவாமிகளை கண்டு தரிசித்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கேன்.//

   ஓ ! மகிழ்ச்சி அம்மு.

   //எல்லா இடங்களும் அழகா இருக்கு. படத்தில் நீங்களா?//
   இல்லை அம்மு. என் படம் அடுத்த பதிவில் போடுகிறேன்.
   மேலே முருகன் கோவில் சுட்டி கொடுத்து இருக்கிறேன் அது பார்த்தீர்களா?
   ஆதில் நானும், சாரும் உள்ள படம் போட்டு இருக்கிறேன்.
   உங்கள் வாழ்த்துக்களுக்கும்,அன்பான கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 35. 500 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.தொடர்க நலமாக. ஹொய்சால கட்டிட கலையில் கோவில் மிகவும் அழகு. படங்களும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு