தங்கையின் வீட்டு மாடித்தோட்டம்
தோட்டக்கலை என்பது நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்ல- மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தைத் தரும.
வீட்டுத்தோட்டத்தால் மனதுக்கு மகிழ்ச்சி, தோட்டத்தில் வேலைபார்ப்பதால் உடல் ஆரோக்கியம். எல்லாம் கிடைக்கிறது. தோட்டத்தில் வைத்த செடிகளில் அதன் படிப்படியான வளர்ச்சி நிலைகளைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தினசரி ஒரே மாதிரி வேலைகளால் அலுப்பும் சலிப்பும் ஏற்படாமல் தடுக்கும் இந்த தோட்டக்கலை.
நம்மைச் சுற்றி உள்ள காற்றைச் சுத்தப்படுத்தி ஆரோக்கியம் நிறைந்த சூழலைத் தருகிறது.
தக்காளி, வெண்டை, கத்தரி,( இரண்டு கலர்) , பச்சை மிளகாய், அவரை, பீன்ஸ் காய்கறிகள் வைத்து இருக்கிறாள்.
கோழிக் கொண்டைப் பூ , ரோஜா , கள்ளி (பூக்கவில்லை அப்போது) . காகிதப்பூ.செம்பருத்தி (நிறைய கலர்) இருக்கிறது
கள்ளிப்பூக்களும் மொட்டுக்களும்.
அவள் வீட்டில் காய்த்த காய்கள், பூக்கள் கொடுத்தாள் நான் போய் இருந்தபோது.
நம் வீட்டில் காய்த்த காய்களைப் பிறருக்குக் கொடுப்பது மகிழ்ச்சி, நம் வீட்டில் பூத்த மலர்களை இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் கொடுப்பது மகிழ்ச்சி.
அவளுடைய பொழுதுகள் தோட்டத்தில் போகிறது. ஒவ்வொரு செடியையையும் தன் குழந்தையைக் கவனிப்பதுபோல் கவனிப்பாள். அவள் தனது தோழிகளுக்குச் செடிகளைப் பரிசளிப்பாள். அவர்களின் போன் உரையாடல், படங்கள் பரிமாற்றம் எல்லாம் தோட்டத்தைப்பற்றியே இருக்கும்.
தங்கையின் கணவருக்கும் இப்போது தோட்டத்தைப் பராமரிப்பது சந்தோஷமான பொழுதுபோக்காய் ஆகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கையுடன் சேர்ந்து தோட்டத்தைக் கவனிப்பது உரமிடுவது, களைகளை அகற்றுவது என்று பொழுதுகள் போகிறது .
அடுக்கு மல்லி, முல்லைப் பூ .
வீட்டில் பூத்த பூக்களை அக்கம்பக்கத்துப் பெண் குழந்தைகளுக்கு அழகாய்க் கட்டிக் கொடுப்பாள்.
காசித் தும்பைப் பூக்கள்
இந்த படங்கள் தங்கை அனுப்பி வைத்தாள். மேலே உள்ள படங்கள் நான் அவள் வீட்டுக்குப் போயிருந்தபோது எடுத்த படங்கள்.
வீட்டின் முன் அரளி, வேம்பு, மருதாணி, பவளமல்லி வைத்து இருக்கிறாள்.
போர்டிக்கோ முழுக்க விதவிதமான செடிகள்தான். அவைகளை முன்பு பதிவாக்கி இருக்கிறேன்.
வீட்டில் இயற்கை உரம் தயாரித்துத் தொட்டிகளில் போட்டு வருகிறாள்.
மேலே படத்தில் இருப்பது மாயவரத்தில் இருந்தபோது நான் வைத்திருந்த பூத்தொட்டிகள்.
மருதாணி, அரளி, செம்பருத்தி, ஓமவல்லி, துளசி, நந்தியாவட்டை, கற்றாழை
திருநீற்றுப்பச்சை ஆகிய செடிகள்.
ஊரைவிட்டு வரும்போது அவைகளைப் படம் எடுத்து வைத்துக்கொண்டேன். செடித்தொட்டிகளை எங்கள் வீட்டில் செய்த அம்மாவும், மற்றும் அங்கு உள்ள அக்கம் பக்கத்தினரும் எடுத்துக்கொண்டார்கள் . இப்போதும் போன் செய்தால் செடிகளைப் பத்திரமாக என் நினைவாக பாதுகாப்பதாய்ச் சொல்லும்போது மனம் மகிழும்.
தொலைக்காட்சியில் உலகச்சுற்று சூழல் தினத்தன்று காட்டிய முக்கிய செய்தி
குழந்தைகள் விதைப் பந்துகள் தயாரித்து, வனப்பகுதிகள், ஏரிக்கரையோரம், சாலை ஓரம், எல்லாம் வீசி வருவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
குழந்தைகளுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
சில திருமணவீடுகளில், விழாக்களில் விதைப்பந்துகள் கொடுக்கப்படுகிறது, வீட்டில் இடம் இருந்தால் விதைத்து வையுங்கள் இல்லை என்றால் பாதையில் போகும்போது வீசிச் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.
உலகசுற்றுச் சூழல் தினத்திற்கு எனக்கு வந்த வாட்ஸ் அப் செய்தி.
சிறு குழந்தை மரம் நடுவது மனதுக்கு மகிழ்ச்சி. போத்தீஸ் ஜவுளிக் கடையில் ஒரு தீபாவளிக்கு மரக்கன்றுகள் கொடுத்தார்கள் என்று என் அண்ணன் வீட்டில் சப்போட்டா நட்டு வைத்து இருந்தார்கள் வீட்டில்.
அடுக்குமாடிக்குடியிருப்பில் இப்போது குடியிருந்தாலும் இங்கும் சின்னத் தோட்டம் அமைத்து இருக்கிறேன்.
வீட்டில் ஒரு பூச்செடியாவது வைத்துப் பராமரித்து வாருங்கள். அது தரும் ஆனந்தம் அளவிடமுடியாது.
ஓமவல்லி, (கற்பூரவல்லி) துளசி வைத்தால் வீட்டு வைத்தியத்திற்கு உதவும்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
==========================================================================
"இப்படி அல்லவோ வாழ்வை ரசிக்க வேண்டும்" என்று தோன்றுகிறது அம்மா...
பதிலளிநீக்குஇதே போல் சிறு பால்கனியில் எங்கள் சந்தோசமே...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇயற்கையை ரசித்து வாழ்ந்தால் கவலைகள் இல்லை.
பால்கனி தோட்டம் இருக்கா? நல்லது மகிழ்ச்சிதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக அருமையான பதிவு! புத்தம்புதிய மலர்களும் காய்கறிகளும் என்றுமே நம் மனதை நிறைக்கும். மகிழ்விக்கும்! உங்கள் அடுக்கு மல்லியும் தும்பைப்பூவும் அத்தனை அழகு!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான் . பூக்களும், காய்களும் நம்மை மகிழ்விக்கும் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆகா.. அழகு.. அருமை..
பதிலளிநீக்குஆனந்தப் பூந்தோட்டம் ...
தோட்டத்துப் பூக்கள் மகிழ்ச்சியைத் தருபவை என்றால்.. தோட்டத்துக் காய்கள் ஆரோக்கியத்தைக் கொடுப்பவை...
நம் கண் முன்னே வளர்ந்து பூத்து காய்களைக் கொடையாய்க் கொடுக்கும் தாவரங்களுக்கு ஈடு இணை இல்லை...
மாடித் தோட்டமோ கொல்லைப் புறத் தோட்டமோ அதெல்லாம் மனிதருக்கு உயிரோட்டமானவை..
விடியலில் தோட்டத்துப் பூக்களை காய்களை பார்ப்பதும் அவற்றுடன் நேரம் செலவழிப்பதும் எத்தனை எத்தனை மகிழ்ச்சி...
அழகான படங்களுடன் இனிய பதிவு...
வாழ்க நலம்...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஆனந்தப் பூந்தோட்டம் நல்லா இருக்கிறது பேர்.
ஆனந்தத்தை அள்ளி தருவது உண்மைதான்.
நம் கண் முன்னே அரும்பாகி, மொட்டாகி, மலர்வது ஆனந்தம் தான்.
சில தனி வீடுகளில் கொல்லைப்புறம் கிடையாது, முன்னால் கார் நிறுத்தும் இடமாகி விட்டது , அதனால் மொட்டைமாடிதான் செடிகள் வைத்தாக வேண்டும்.
காலையும், மாலையும் செடிகளுடன் பேச அதை பார்த்து மகிழ மகிழ்ச்சிதான்.
உங்கள் விரிவான அழகான பின்னூட்டத்திற்கு நன்றி.
ஆஹா என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு... ஆவ்வ்வ்வ் பார்கப் பார்க்க ஆசையாக இருக்குது கோமதி அக்கா.. இதுதான் இதற்காகத்தான் நாமும் இங்கு வெயிலைக்கண்டாலே கார்டினுக்குள் இறங்குவது, சும்மாவே கண் வெட்டாமல் நம் பயிர்கள் செடிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. பொழுது தானாகக் கழியும்.
பதிலளிநீக்குசூப்பராக இருக்குது தங்கச்சியின் தோட்டம். ஏன் மேலே செட் போல செய்திருக்கினம்?.. வெயில் அதிகம் என்றோ?.. காத்துக்கு விழாதோ அது..
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஆஹா! பாட்டு பாடிவிட்டீர்கள் தோட்டத்தைப்பார்த்து.
நாம் நட்டச்செடியை பார்த்துக் கொண்டே இருக்கலாம், அவை மலர்களை மகிழ்ந்து கொடுக்கும் போது, தலையசைத்து நம்மை வரவேற்கும்.
பொழுதுகள் தானகக் கழியும் தான்.
வெயில் அதிகம் அதனால் தான் பசுமை செட், காற்றுக்கு துணி மட்டும் பறந்து கிழியும் வேறு மாற்ற வேண்டும்.
இரண்டு காய் காய்த்தாலும், நம் தோட்டத்தில் ஆய்ந்ததெனில்.. ஒரு தனிப்பிரியம். எங்கள் வீட்டிலும், இது எங்கட கார்டின் வெஜிடபிள் எனச் சொன்னால் போதும், கைப்பாக இருந்தால்கூட சாப்பிடுவார்கள் உண்மையில்.. அவ்ளோ லவ்வாக இருக்கும், நம்முடையது எனும்போது..
பதிலளிநீக்குகாய்கள் பூச்சி அடிக்காமல் மிக அழகாக இருக்குது.. கொஞ்சம் வித்தியாசமாக, கபேஜ், கரட், அப்படியும் போட்டுப் பார்க்கச் சொல்லுங்கோ.. அதிக வெயில் எனில் வளராது என நினைக்கிறேன்.
ஆமாம் அதிரா, நீங்கள் சொல்வது சரிதான்.
நீக்குநம் வீட்டில் ஆய்ந்ததெனில் ஒரு தனிப்பிரியம்தான்.
//அவ்ளோ லவ்வாக இருக்கும், நம்முடையது எனும்போது..//
நம் உழைப்பு நம்மை மகிழ வைக்கும் தானே அதிரா.
தர்பூசணி, வெண் பூசணி எல்லாம் வைத்து இருந்தாள், நீங்கள் சொன்ன காய்கறிகளை போட்டுப் பார்க்க சொல்கிறேன்.
கள்ளிச்செடி மிக அழகு.. இங்கும் இப்படி பலவண்ணக் கலர்ப் பூக்களுடன் இருந்தன பார்த்தேன், வாங்கினால் வீட்டுக்குள்தான் வைக்கோணும் என்பதனால வாங்கவில்லை... எங்களிடம் இருப்பது பூக்காதாக்கும் கர்ர்:))..
பதிலளிநீக்கு//நம் வீட்டில் காய்த்த காய்களைப் பிறருக்குக் கொடுப்பது மகிழ்ச்சி//
100 வீதம் உண்மை.. பாடுபட்டுப் பராமரிப்பதைக் காட்டிலும், அடுத்தவர்களுக்குக் கொடுக்கும்போது இருக்கும் மகிழ்ச்சியே தனி.. வடகமும் அப்படியே...
கள்ளிச்செடியை தங்கை வெளியில்தான் வைத்து இருக்கிறாள் நல்ல வெயிலில்.
நீக்குஉங்கள் நாட்டில் உள்ளே வைக்க வேண்டுமா ஏன்?
வீட்டில் உள்ள கள்ளிச்செடி பூக்கா வகையா?
//பாடுபட்டுப் பராமரிப்பதைக் காட்டிலும், அடுத்தவர்களுக்குக் கொடுக்கும்போது இருக்கும் மகிழ்ச்சியே தனி.. வடகமும் அப்படியே...//
நீங்கள் சொல்வதும் உண்மைதான், இந்த தங்கைதான் எனக்கும் மற்றவர்களுக்கும் இப்போது வடகம் போட்டு தருகிறாள்.
ஆஹா என்ன அழகான பூக்கள்.. அடுக்குமல்லி சூப்பர்... முல்லைப்பூ இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை, முல்லை இலைகளில் சொதி, கறி செய்வார்கள் என நினைக்கிறேன் கோமதி அக்கா.. மாடியே வாசம் வீசுமே...
பதிலளிநீக்குஆவ்வ்வ் இந்தக் காசித்தும்பைதான், வெங்கட் பக்கம் அந்தமானில் எடுத்த படம் போட்டிருந்தார் என நினைக்கிறேன், ஊரில் வீட்டில் நிறையக் கலர் இருந்தன ஆனால் பெயர் மறந்துவிட்டேன் எனச் சொன்னேன்.. ஆஆ அது காசித்தும்பை... விதைத்து விட்டால்ல்.. நெல் வயல்போல பூத்துக் குலுங்கும்...
முல்லைப்பூ, மல்லிகை மணம் வீசும் தான்.
நீக்குசொதி, கறி செய்வது புதிய செய்தி.
காசி தும்பையில் அடுக்கு பூ என்னிடம் இருந்தது ரோஸ் கலரில்.
பால்ஸ்ம் என்றும் சொல்லுவார்கள்.
நெல் வயல் போல் அழகான உவமை.
//வீட்டில் இயற்கை உரம் தயாரித்துத் தொட்டிகளில் போட்டு வருகிறாள்.//
பதிலளிநீக்குஇதேதான் எல்லோரும் பண்ணுகிறார்கள், ஆனா எங்களுக்கு இங்கு உக்குவது கஸ்டம் குளிர் என்பதால், உக்காமல் போனால் மணக்கலாம் அல்லது புழுக்கள் வரலாம் எனும் பயத்தில் நான் தயாரிக்க வெளிக்கிடுவதில்லை.
விதைப்பந்து நல்ல ஐடியாத்தான்... சும்மா குப்பையில் போடுவதை, இப்படி உபயோகிப்பது நல்லதே... அழகிய பதிவு.. படங்களும் தெளிவாக அழகாக ரசிக்க வைக்கின்றன.
வீட்டில் உரம் தயாரிக்க நிறைய வழிகள் இருக்கிறது அதிரா.
நீக்குஉங்களுக்குத்தான் அங்கு உரம் இட்ட மண் கிடைக்கிறதே.
விதைப்பந்து எனக்கும் பிடித்து விட்டது அதனால்தான் பகிர்வு இங்கே.
படங்களை ரசித்து அழகாய் நிறைய கருத்துக்கள் சொன்ன அதிராவிற்கு நன்றிகள்.
அருமையான பதிவு அம்மா.
பதிலளிநீக்குவணக்கம் செல்வநாயகி, வாழ்க வளமுடன்
நீக்குமாடித் தோட்டம் உங்களை அழைத்து வந்து விட்டதே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
இந்த இடுகையை இப்போது படிக்கிறேன். எங்கள் பால்கனியில் வைக்க நேற்று என் பெண் (வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் மாற்ற வெளியில் சென்றிருந்தவள்) ஒரு துளசிச் செடியை சிறு தொட்டியுடன் வாங்கி வந்தாள். பால்கனியில் வைத்துள்ளாள்.
பதிலளிநீக்குமாடித் தோட்டம் படங்கள் மிக அழகு. பார்க்கும்போது நாமும் செம்பருத்தி, வெற்றிலை, மணிப்ளான்ட் போன்ற செடிகளை பெரிய தொட்டி வைத்து வளர்க்கணும் எனும் ஆசை வருகிறது.
மகள், ஸ்ட்ராபெர்ரி.... என்றெல்லாம் அவள் ஆசைகளைச் சொன்னாள். பார்ப்போம் எப்படி நடக்கிறதென்று.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குமகள் துளசி செடி வாங்கி வந்தது மகிழ்ச்சி.
தங்கையும் வெற்றிலை கீழே போர்டிகோவில் வைத்து இருக்கிறாள், தொட்டியில் அல்லி மலர்கள், மீன்கள் விட்டு இருக்கிறாள், அதை பூனைகளிடமிருந்து பாதுகாக்க வலை போட்டு இருக்கிறாள். வெயில் வேண்டாத பூக்கள் கீழே இருக்கிறது.
//நாமும் செம்பருத்தி, வெற்றிலை, மணிப்ளான்ட் போன்ற செடிகளை பெரிய தொட்டி வைத்து வளர்க்கணும் எனும் ஆசை வருகிறது.//
வளருங்கள். நீங்கள்தான் உங்கள் பால்கனி நல்ல பெரிது என்ரீர்களே!
மகளின் ஆசைக்கு சில செடிகள் வைக்கலாம்.
என் ஆசை ஒரு வெண்பூசனி கொடி வளர்த்து பூசனிக் காய்கள் வளர வைக்கணும் என்று. அது சாத்தியமான்னு தெரியவில்லை.
பதிலளிநீக்குமகள், அழகான போன்சாய் செடிகள் பார்த்ததாகவும் அதில் மாமரமும் பார்த்தேன், 1200 ரூபாய் ரேஞ்சில் என்றாள். நான், போன்சாய் செடிகள் (மரங்கள்) வளர்ப்பது பாவம் என்ற எண்ணம் கொண்டவன்.
சார் வரைந்த படம் போட்டு நாளாகிவிட்டதே
கீழே வெண்பூசணி வைத்து இருந்தாள், மாடியில் தர்பூசணி வைத்தாள் வந்து ஒரு காய் வந்து விட்டது. வெண்பூசணி நிறைய காய்த்து அக்கம் பக்கம், உறவினர்களுக்கு எல்லாம் கொடுத்தாள். பொங்கல் சமயம்.
நீக்குபோன்சாய் செடிகள் எனக்கும் பிடிப்பது இல்லை, அதன் கால் கைகளை முடிக்கி போடுவது போல மனம் பதறும். மகன் ஊரில் போன்சாய் மரங்கள் வைத்து இருக்கும் கண்காட்சிக்கு கூட்டிப்போனான் , விற்பனைக்கு வைத்து இருந்தார்கள் நானும் அவனை வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன். பூமியில் சுதந்திரமாக தன் வேர்களை பரப்பி நீரை உறிஞ்சி வாழும் மரங்களை இப்படி வளர்ப்பது பிடித்தமில்லை.
தொட்டி செடிகளே பூமியில் நட்டால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும் . அதனால் நான் மாயவரத்தில் பெரிய தொட்டிகள் வாங்கி வைத்தேன். இங்கு பால்கனிக்கு ஏற்றார் போல் சின்னத் தொட்டி.
சார் பிஸியாக இருக்கிறார்கள் ஒரு புத்தகம் எழுதி கொண்டு இருக்கிறார்கள். அதனால் கேட்கவில்லை, கேட்டால் வரைந்து தரலாம். சொல்கிறேன் உங்கள் விருப்பத்தை அடுத்த பதிவுக்கு ஏற்றார் போல் கேட்கிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
மாடியில் தோட்டம் வைத்தால் கட்டிடத்துக்கு பாதிப்பு வரும் என்று என் பழைய வீட்டில் இருபது வருடங்களுக்கு முன் பயமுறுத்தினார்கள். பின்னர் குறைந்த அளவில் பூச்செடிகள் மட்டும் வைத்திருந்தோம். இப்போது எங்கள் வீட்டில் ஓமவல்லி, செம்பருத்தி, வெற்றிலை, துளசி கற்றாழை எங்கள் வீட்டு பால்கனியில் இருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஇப்போது உள்ள வீடுகள் மாடி தோட்டம் வைப்பதற்கு ஏற்றார் மாதிரிதான் கட்டுகிறார்கள்.
மாடியில் மரம், அழகிய புல்வெளி அமைக்கிறார்கள்.
//எங்கள் வீட்டில் ஓமவல்லி, செம்பருத்தி, வெற்றிலை, துளசி கற்றாழை எங்கள் வீட்டு பால்கனியில் இருக்கின்றன.//
முக்கியமான செடிகள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
இப்போது இருக்கும் அபார்ட்மெண்ட் மாடியில் சிறுபகுதியில் இப்படி வைக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் எங்களுக்கெல்லாம் தொடர்ந்து கவனித்துக்கொள்ளும் அக்கறை அவ்வளவு இருக்காது என்கிற சந்தேகிகம் - எங்கள்மேல் எங்களுக்கே - இருப்பதால் தொடங்கத் தயக்கமாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//எங்களுக்கெல்லாம் தொடர்ந்து கவனித்துக்கொள்ளும் அக்கறை அவ்வளவு இருக்காது என்கிற சந்தேகிகம் - எங்கள்மேல் எங்களுக்கே - இருப்பதால் தொடங்கத் தயக்கமாக இருக்கிறது.//
நீக்குமுதலில் தயக்கமாக இருந்தாலும் வைத்து விட்டால் அதை பராமரிக்கும் எண்ணம் வந்துவிடும், அதனுடன் பேச ஆரம்பித்து விட்டால் அவைகளை தினம் பார்க்கும் ஆவலும் வந்து விடும்.
பழைய வீட்டில் வாழை வைத்து இலைக்கு மட்டுமே பயன்பட்டது. எங்கள் வீட்டின் அருகே இருந்த நிலம் பாறைநிலம்! முருங்கை வைத்தும் கூட வருடத்துக்கு நான்கைந்து காய்களே காய்த்தன. இவ்வளவுக்கும் பக்கத்துத் தெருவில் கொத்துக்கொத்தாய் மரம் முழுக்கக் காய்களாய் இருந்த மரத்தின் கிளை வாங்கி பொது வைத்து வளர்த்த மரம் அது!
பதிலளிநீக்குவாழையின் இலையை வெட்டிக் கொண்டே இருந்தால் காய் காய்க்காது என்பார்கள்.
நீக்குபக்கத்து விட்டு முருங்கைமரம் படம் பார்த்து இருக்கிறேன், மண்வாகும் நன்றாக இருந்தால்தான் வளரும். கம்பிளி பூச்சி வந்து முருங்கை மரத்தை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எல்லாம் படித்த நினைவு இருக்கிறது.
பச்சைமிளகாய், கத்தரிக்காய், தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, போன்றவை வீட்டில் வளர்க்கவேண்டும் என்பது என் ஆசை.
பதிலளிநீக்குமனிதர்கள் மாறலாம். செடி கொடிகளின்
நீக்குபாசம் மாறாது. எத்தனைக்கெத்தனை பராமரிக்கிறோமோ
அத்தனைக்கு அத்தனை பலன் கொடுக்கும்.
உங்கள் தங்கை வீட்டுத் தோட்டம் அத்தனை
அழகாக இருக்கிறது.
எத்தனை வண்ணங்கள் மா.
அதுவும் மல்லிகை, நித்தியமல்லிப் பூக்களின் அருமை
சொல்லி முடியாது.
காய்கறிகளும் விளைத்திருக்கிறார்.
உங்கள் தங்கைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
என் பாராட்டுகளைச் சொல்லுங்கள்.
நன்றி கோமதி.
பச்சைமிளகாய், கத்தரிக்காய், தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, போன்றவை வீட்டில் வளர்க்கவேண்டும் என்பது என் ஆசை.//
நீக்குஉங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//செடி கொடிகளின்
பாசம் மாறாது. எத்தனைக்கெத்தனை பராமரிக்கிறோமோ
அத்தனைக்கு அத்தனை பலன் கொடுக்கும்.//
உண்மைதான் அக்கா.
//உங்கள் தங்கைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
என் பாராட்டுகளைச் சொல்லுங்கள்.//
கண்டிப்பாய் சொல்கிறேன். உங்கள் பாராட்டுக்களுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.
தோட்டம் பார்க்க ஆசையாக இருக்கிறது.. மேலே ஷெட் போட்டிருப்பதைப் போல் சுற்றிலும் கூடப் பச்சைக்கலர்த்துணியால் கட்டலாம். செடிகள் அனைத்தும் நன்றாக வளர்ந்து பலன் தர வாழ்த்துகள். என்ன இருந்தாலும் நம் குழந்தைகளைப் போல் செடிகளை வளர்ப்பதால் மனதில் ஓர் சந்தோஷம் வரத்தான் செய்யும். பெருமிதமாகவும் இருக்கும். நிறையத் தோட்டம் போட்டுக் காய், கனிகளைப் பலனாக அனுபவித்தாயிற்று. இன்னமும் அம்பத்தூர் வீட்டு வேப்பமரம், தென்னை, பலா மரம், நாரத்தை மரங்கள் நினைவு தான். எல்லாவற்றையும் வெட்டியும் அங்கே அடுக்குமாடிக்குடியிருப்பு வந்துவிட்டது. சொந்த வீடு,தனிவீடு என்றாலே அதன் அருமை தனிதான். ஆனால் குழந்தைகள் இந்த வயசில் உங்களால் மேற்பார்வை பார்த்துக்கொண்டு பாடுபடுவது கஷ்டம் என்கிறார்கள். இங்கே எங்கள் பால்கனியில் வைக்க முடியாது. ஏகப்பட்ட நிபந்தனைகள், கட்டுப்பாடுகள். மாடியில் வைத்தால் நேரடி வெயிலில் பட்டுப் போய்விடுகின்றன.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குமேலே மட்டும் செட் போட்டால் போதும் சுற்றி வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
//என்ன இருந்தாலும் நம் குழந்தைகளைப் போல் செடிகளை வளர்ப்பதால் மனதில் ஓர் சந்தோஷம் வரத்தான் செய்யும். பெருமிதமாகவும் இருக்கும்.//
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
உங்கள் அம்பத்தூர் தோட்ட நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன் அது போலவே பகிர்ந்து கொண்டீர்கள் நாம் வளர்த்த மரம் செடிகள் எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அது போல் அவை அழிந்து அங்கு அடுக்குமாடி குடியிருப்பு என்றால் வருத்தம் ஏற்படும்தான். ஒரு தென்னை மரத்தை எங்கள் வீட்டில் வெட்டினோம், பக்கத்து வீட்டுக்காரர் தொந்திரவால் அதுவே எனக்கு மிகவும் மனது சங்கடமாய் இருந்தது.
நிபந்தனைகள் இருக்கும் போது ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் ஊரில் மாடியில் வெயில் அதிகமாய்தான் இருக்கும்.
அழகான தோட்டத்தை அருமையாகப் பராமரிக்கும் உங்கள் தங்கைக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும். தெரிவித்துவிடுங்கள்.
பதிலளிநீக்குஎன் தங்கையிடம் உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்களை தெரிவித்து விடுகிறேன்.
நீக்குஇன்னொரு தங்கை வீட்டில் மாம்பழங்கள், எலுமிச்சை காய்க்கிறது, இப்போது கொரானாவால் ஒருவர் வீட்டுக்கும் செல்லவில்லை , அவர்களும் யாரும் வரவில்லை.
வந்தால் கொண்டு வருவார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான தோட்டம். நெய்வேலி நகரில் இருந்த வரை வீட்டில் பெரிய தோட்டம். இங்கே வந்த பிறகு தோட்டம் வைக்க ஆசை இருந்தாலும் முடிவதில்லை. படங்கள் பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் நெய்வேலி வீட்டில் பலா காய்த்து அதை உறவினர், நண்பர்களுக்கு கொடுத்து வருவதை எல்லாம் முன்பு பதிவாக்கி இருக்கிறீர்கள்.
அங்கு மண்வளம் நன்றாக இருக்கும் எல்லோர் வீடுகளிலும் காய்கறிகள், மலர்செடிகள், பழ மரங்கல் வைத்து இருப்பார்கள், எங்கள் உறவினர் நெய்வேலியில் இருந்தார்கள் அவர்களும் வைத்து இருந்தார்கள்.
உங்கள் நெய்வேலி நினைவுகள் , மற்றும் பதிவை பற்றிய கருத்துக்க்கு நன்றி.
பசுமை மனதுக்கு இதமானது அழகான படங்கள்.
பதிலளிநீக்குகடைசி படத்தின் செய்தி சவுக்கடி வார்த்தைகள்.
நானும் வாழ்நாளில் ஒரு மரத்தையாவது வளர்த்து விடவேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் சூழல் அமையவில்லை.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வீட்டில் பின்புறம் நிறைய இடம் இருக்கே! அங்கு மரங்கள் இல்லையா?
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
தோட்டம் என்றாலே மனதுக்கும் உடலுக்கும் உற்சாகத்தை தரும்.அதை பார்ப்பதே ஆனந்தம்தான்.
பதிலளிநீக்குஎங்களுக்கும் பிடித்தமானது.எங்கிருந்தாலும் செடிகள் நாட்டிக் கொள்வோம். இப்பொழுது மூன்று இடங்கள் ;) மாறி மாறிப் பராமரிக்கிறோம்.
உங்கள் தங்கையின் தோட்டம் மிகுந்த அழகு. காய்கறிகளும் பலன் கொடுத்திருக்கின்றன. வாழ்த்துகள்.
இயற்கையை பேணுவோம்.மரம் நடுவோம் அதன் பலன் பெறுவோம். .
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//தோட்டம் என்றாலே மனதுக்கும் உடலுக்கும் உற்சாகத்தை தரும்.அதை பார்ப்பதே ஆனந்தம்தான்.//
உண்மைதான் மாதேவி.
//எங்களுக்கும் பிடித்தமானது.எங்கிருந்தாலும் செடிகள் நாட்டிக் கொள்வோம். இப்பொழுது மூன்று இடங்கள் ;) மாறி மாறிப் பராமரிக்கிறோம்.//
மூன்று இடங்களிலும் செடிகள் வைத்து பராமரிப்பது கேட்கவே மகிழ்ச்சி.
//உங்கள் தங்கையின் தோட்டம் மிகுந்த அழகு. காய்கறிகளும் பலன் கொடுத்திருக்கின்றன. வாழ்த்துகள்.//
உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி.
//இயற்கையை பேணுவோம்.மரம் நடுவோம் அதன் பலன் பெறுவோம். .//
நீக்குநீங்கள் சொன்னது போல் இயற்கையை பேணுவோம். மரம் நடுவோம் பலன் பெறுவோம்.
நம்மால் முடிந்ததை செய்வோம்.
நன்றி மாதேவி.
மாடித்தோட்டத்தினை பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு. நாமளே நட்டுபராமரித்து,அதில் வரும் காய்கறிகள்,பூக்களை பார்க்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். நான் நேற்று என் வெந்தயகீரையை பறித்து பருப்பு கூட்டு வைத்து சாப்பிட எத்தனை மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்கையின் காய்கறிகள்,பூக்கள் பார்க்க ஆசையா இருக்கு. ஊரிலிருந்தால் எல்லாம் செய்யலாம். இடமும் இருக்கு. இங்கு குளிரில் முக்கல்வாசி மாதமும் போகுது.
மல்லிகைபூக்கள் கொள்ளை அழகு. நல்ல வாசமா இருக்கும்.
வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
நீக்குமாடித்தோட்டம் மனது மகிழ்ச்சியை தந்தது பார்த்தவுடன்.
நாமே நட்டு பாராமரிப்பதுதான் மகிழ்ச்சிதான் அம்மு.
வெந்தயகீரை நானும் பயிரிடவேண்டும். கூட்டு செய்து விட்டீர்களா?
புதினாவும், வெந்தயகீரையும் கண்ணுக்கு அழகாய் இருந்தது உங்கள் பதிவு படத்தில்.
//ஊரிலிருந்தால் எல்லாம் செய்யலாம். இடமும் இருக்கு. இங்கு குளிரில் முக்கல்வாசி மாதமும் போகுது.//
ஆமாம் , தட்ப வெட்ப நிலை மாறி மாறி இருக்கும் போதே நீங்கள் எல்லாம் தோட்டம் அமைத்த்து இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
மல்லிகை அழகு, வாசமும் அருமையாக இருக்கும்.
நல்ல அழகான கலரில் செம்பருத்திபூ, எனக்கு மிகவும் பிடித்த மலர்.காகிதமலர் கூட அழகு. என்ன அதில் முள் இருக்கு. பின்னாடி வேப்பமரமும் நிற்கிறதே. இவங்களுடையாதா? அல்லது பக்கத்து வீட்டாருடையதா. காசிதும்பையும் அழகா இருக்கு. வீட்டில் சட்டியில் தன்ணீர் நிரப்பி அதில் மலர்கள் போட்டு வைப்பது அழகு மட்டுமல்ல வீட்டுக்கும் நல்லது என்பார்கள். இங்கு ஒவ்வொரு நாளும் வாங்கி வாசில் வைப்பார்கள்.
பதிலளிநீக்குவிதை பந்து நடைமுறை இங்கும் வந்துவிட்டது. நல்ல ஐடியா. இங்கு மரங்களை அழிக்கவிடமாட்டார்கள். வெட்டுவதாயின் மரம் வைத்து விட்டுதான் வெட்டுவார்கள்.
அழகான பதிவு அக்கா. படங்களும் அழகு.
நல்ல அழகான கலரில் செம்பருத்திபூ, எனக்கு மிகவும் பிடித்த மலர்.காகிதமலர் கூட அழகு. என்ன அதில் முள் இருக்கு. பின்னாடி வேப்பமரமும் நிற்கிறதே. இவங்களுடையாதா?
நீக்குஆமாம் அழகான செம்பருத்திபூ காகிடஹ் மலரில் முள் உண்டுதான்.
வேப்பமரம், அடுக்கு அரளிபூ, நந்தியாவட்டை, மருதாணி,அடுக்கு நந்தியாவட்டை, ஒற்றை நந்தியவட்டை, பவளமல்லி எல்லாம் வைத்து இருக்கிறாள், என் வீட்டுக்கு வரும் போது பலவித மலர்களை டப்பாவில் போட்டு கொண்டு வருவாள்.
எங்கள் வீட்டில் முன்பு ஆரஞ்சு அடுக்கு செம்பருத்தி, சிவப்புகலரில் பெரிய செம்பருத்தி எல்லாம் வைத்து இருந்தேன்.
//காசிதும்பையும் அழகா இருக்கு. வீட்டில் சட்டியில் தன்ணீர் நிரப்பி அதில் மலர்கள் போட்டு வைப்பது அழகு மட்டுமல்ல வீட்டுக்கும் நல்லது என்பார்கள். இங்கு ஒவ்வொரு நாளும் வாங்கி வாசில் வைப்பார்கள்.//
அவள் அரவிந்தர் அன்னையின் பக்தை பூக்களை தண்ணீரில் போட்டு வைப்பாள், அன்னை படத்தின் முன் பிளவர் வாசில் மலர் கொத்துக்கள் வைப்பாள்.
//விதை பந்து நடைமுறை இங்கும் வந்துவிட்டது. நல்ல ஐடியா. இங்கு மரங்களை அழிக்கவிடமாட்டார்கள். வெட்டுவதாயின் மரம் வைத்து விட்டுதான் வெட்டுவார்கள்.//
நல்ல கொள்கை. அப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு மரம் வெட்டினால் பத்து மரமாவது வைக்க வேண்டும்.
உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றி அம்மு.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்கள் தங்கை வீட்டு மாடித் தோட்டம் நல்ல பசுமையாக இருக்கிறது. காய்கறிகளும், பூக்களுமாக நல்ல முறையில் பராமரித்து வருகிறார். குடும்ப வேலைகளிடையே கண்ணுங்கருத்துமாய் தோட்டத்தை பராமரித்து வரும் அவருக்கு என் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள்.
எங்கள் அம்மா வீட்டிலிருந்த வரை இந்த மாதிரி பசுமைகள் என் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. முற்றத்தில் நிறைய பூக்கள், கொல்லையில் முருங்கை மரம், நிழலாக வாத மடக்கி, பனை தென்னை என வைத்து அனுபவித்தோம். வாசலில், மற்றும் முற்றத்தில் இருந்த வேப்பமரங்கள் நல்ல நிழலுடன் சுகமான காற்றையும் தந்து இருக்கிறது. அதெல்லாம் ஒரு காலம்.
திருமணத்திற்கு பின் சென்னை வாசத்தில் என் தோட்டக் கனவு போயே விட்டது. இப்போது இங்கு வந்த பின் பால்கனியில், வெற்றிலை, துளசி, செம்பருத்தி என வாங்கி வைத்து நல்ல பலன் தந்தது. அவையும் சில வருடங்களில் வீட்டு சூழ்நிலையில் அதுவாகவே கனவாகவே போய் விட்டது. எங்கள் மாடியில் வேறு சிலர் வைத்திருந்த செடி கொடிகளின் பூக்களை, காய்களை வலையில் பகிர்வதற்காக நானும் எனது செல்லில் படமாக்கி வைத்திருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்ததும் நிறைய செடிகளை வளர்த்து அவற்றுடன் பேச ஆசை வருகிறது. ஆண்டவன் சித்தம் எப்படி அமைகிறதென்று பார்க்கலாம்.
சுற்றுச் சூழல் தினத்திற்கு தங்களுக்கு வந்த வாட்சப் செய்தி அருமை. தங்கள் வார்த்தையும் உண்மை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஎன் தங்கைக்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி சொல்லி விடுகிறேன் தங்கையிடம்.
உங்கள் அம்மாவீட்டு நினைவுகள் என் கற்பனையில் மலர்ந்தது, சுகமான வேப்பமரக்காற்று தன் பூக்களை உதிர்த்தது என் மேல்.
வெற்றிலை, துளசி, செம்பருத்தி எல்லாம் அதிக கவனிப்பு செய்யவேண்டிய செடிகள்.
நீங்கள் படமாக்கி வைத்து இருக்கும் படங்களை பதிவாக்கி மகிழுங்கள் , நாங்களும் பார்த்து மகிழ்கிறோம். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் நம் மகிழ்ச்சிக்காக கொஞ்சம் நேரம் செலவழிப்போம், அதுவே நமக்கு மகிழ்ச்சியான ஓய்வு.
நிறைய செடி, கொடிகள் வைத்து பேசுங்கள் உங்கள் ஆசை நிறைவேற இறைவன் அருள்புரிவார் கமலா.
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.
மாடித் தோட்டம் அழகு
பதிலளிநீக்குதங்களின் தங்கைக்கு வாழ்த்துகள்
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அழகான மாடித் தோட்டம். வீட்டுக்குத் தேவையான அத்தனை காய்களும் கிடைத்திடும் போல. தங்கள் சகோதரிக்கு வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் சமீபத்தில் சேம்பு நட்டோம். வீட்டின் முன் பெரிய தோட்டம். பின்பக்கம் எங்கள் ரப்பர் தோட்டம். அதற்கும் வீட்டிற்கும் இடையே உள்ள நிலத்தில் சேம்பு. நிறைய இருக்கின்றன மரங்களும்.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குவீட்டுக்கு தேவையானது கிடைக்கிறதுதான்.
வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன் தங்கையிடம்.
சேம்பு பார்க்க அழகாய் இருக்கும், ரப்பர் தோட்டம் அதைவிட அழகு.
கேரளவில் எல்லா வீடுகளும் தோட்டத்துடன் பச்சைபசேல் என்று இருக்குமே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஹையோ கோமதிக்கா ரொம்ப சாரிக்கா மிஸ் செய்திட்டேன் பதிவை. அப்டேட் செய்தது கீழே இருந்திருக்கிறது.
பதிலளிநீக்குமுதல் வரியே அசத்தல் ஆம் கோமதிக்கா தோட்டக்கலை என்பது மனதிற்கு மிகுந்த உற்சாகம் அளிக்கக் கூடியது. ஒவ்வொரு முறை காய் பூ எல்லாம் வரும் போது ஏதோ நாம் நம் குழந்தையை பிரசவித்து வளர்ப்பது போல இருக்கும் அத்தனை மகிழ்ச்சி தரும்.
வீட்டுத்தோட்டத்தால் மனதுக்கு மகிழ்ச்சி, தோட்டத்தில் வேலைபார்ப்பதால் உடல் ஆரோக்கியம். எல்லாம் கிடைக்கிறது. தோட்டத்தில் வைத்த செடிகளில் அதன் படிப்படியான வளர்ச்சி நிலைகளைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தினசரி ஒரே மாதிரி வேலைகளால் அலுப்பும் சலிப்பும் ஏற்படாமல் தடுக்கும் இந்த தோட்டக்கலை.//
அப்படியே டிட்டோ டிட்டோ டிட்டோ டிட்டோ!!
எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் செய்யத்தான் வழி இல்லாமல் இருக்கிறது கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், நம் குழந்தைபோல்தான் நாம் வளர்க்கும் செடிகளும்.
அக்காவின் கருத்துடன் தங்கை ஒத்து போனது மகிழ்ச்சி.
இடம், நேரம், சூழ்நிலை சரியாக இருந்தால் வளர்க்கலாம். வழி கிடைக்கும் போது தோட்டம் அமைக்கலாம் கீதா.
கத்தரிக்காய் செம அழகு. பச்சைக் கத்தரிக்காய் இங்கு நிறைய கிடைக்கிறது வரி போட்டதும் வரி இல்லாமல் உருண்டையாகவும்.
பதிலளிநீக்குஅக்கா அந்த வரியுள்ள வயலட் கத்தரி விதை பயோடெக் விதையா அக்கா? ஏனென்றால் அப்படியான கத்தரியை வாங்காதீங்கன்னு இடையில் செய்தி வந்தது அதனால் கேட்கிறேன்.
பூக்கள் செமையா இருக்கு. கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளுகிறது.
கள்ளிப்பூக்களும் மொட்டுகளும் ரொம்ப அழகாக இருக்கிறது
சாம்பார் வைக்க காய்கள் கிடைத்துவிட்டது கோமதிக்கா உங்களுக்கு!!!!!! ஹா ஹா ஹா
கீதா
அங்கு பெரிய கத்திரிக்காய் கிடைக்குமே!
நீக்குநல்ல தரமான் நாட்டு கத்திரிக்காய் விதைதான் கீதா.
அழகான பூக்களை எல்லோரும் விரும்புவார்கள் என்றுதான் இந்த பதிவு .
அன்று கதம்ப சாம்பார்த்தான் வைத்தேன் கீதா.
பூக்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன. நீங்கள் அலங்காரமாக வைத்திருப்பதும்!!! செழிப்பாகவும் பூத்திருக்கின்றன. மனதிற்கு மிக மிக சந்தோஷமாக இருக்கும் இத்தனைப் பூக்களையும் செடியில் பார்க்கும் போது!!
பதிலளிநீக்குகாசித்தும்பை நல்ல பெரிதாக இருக்கிறதே! அழகான கலரும்
மாயவரம் அரளி மருதாணி செம. வீட்டிலேயே உரம் தயாரித்து வாவ்!!
விதைப்பந்து தயாரித்த மாணவிக்குப் பாராட்டுகள்.
சில திருமணவீடுகளில், விழாக்களில் விதைப்பந்துகள் கொடுக்கப்படுகிறது, வீட்டில் இடம் இருந்தால் விதைத்து வையுங்கள் இல்லை என்றால் பாதையில் போகும்போது வீசிச் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.//
இதுவே தான் நானும் மகனும் சில வருடங்களுக்கு முன்பே யோசித்தது கோமதிக்கா. செடிக்கன்றுகள் அல்லது விதைகள் என்று...
பதிவை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா
கீதா
செடிகளில் உள்ள பூ படங்கள் நான் எடுத்தது தட்டில் அலங்கார படுத்தி வைத்து படம் எடுத்து அனுப்பியது தங்கை.
நீக்குகாசிதும்பை பூ அடுக்கு இதைவிட பெரிதாக இருக்கும்.
மாயவரம் செடிகள், மற்றும் விதைபந்து,ரசித்து கருத்து சொன்னதற்கு.
//இதுவே தான் நானும் மகனும் சில வருடங்களுக்கு முன்பே யோசித்தது கோமதிக்கா. செடிக்கன்றுகள் அல்லது விதைகள் என்று...//
நீங்கள் யோசித்தபடி எல்லாம் செய்யுங்கள் , வாழ்த்துக்கள் கீதா.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தங்கை மற்றும் தங்களது தோட்ட ஆர்வம் பற்றி வாசிக்கையில், படங்களைப் பார்க்கையில் மனம் மகிழ்கிறது. சிறு விரல்களால் உருவான விதைப் பந்துகள் யாவும் விருட்சங்கள் ஆகட்டும்!
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஆமாம், ராமலக்ஷ்மி நீங்கள் சொன்னது போல் சிறு விரல்களால் உருவான விதைப் பந்துகள் யாவும் விருடசங்கள் ஆகட்டும், பூமிக்கு மகிழ்ச்சி, நமக்கும் நல்லது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இரண்டு நாட்களுக்கு முன்பே முகநூலில் பார்த்தேன். அங்கு கருத்திட முடியவில்லை. மிக அழகான மாடித் தோட்டம். வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கும் உங்கள் தங்கைக்கு பாராட்டுகள். செல்லப் பிராணிகள் வளர்ப்பது போல தோட்டம் போடும் பொழுதும் செடிகளிடம் ஒரு வாஞ்சை ஏற்பட்டு விடுகிறது.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//செல்லப் பிராணிகள் வளர்ப்பது போல தோட்டம் போடும் பொழுதும் செடிகளிடம் ஒரு வாஞ்சை ஏற்பட்டு விடுகிறது.//
நீங்கள் சொல்வது உண்மைதான்.
உங்கள் பாராட்டுக்களுக்கும், கருத்துக்கும் நன்றி
தங்கள் தங்கையின் வீட்டு மாடித்தோட்டம் மிக அருமையாக இருக்கிறது மா ...
பதிலளிநீக்குபூக்கள் கொள்ளை வாசம் ...பார்க்கவே மனதிற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது ...
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி அனு.
தோட்டத்தில் வைத்த செடிகளில் அதன் படிப்படியான வளர்ச்சி நிலைகளைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உண்மைதான்..
பதிலளிநீக்குவணக்கம் koilpillai வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.