வெள்ளி, 2 அக்டோபர், 2020

காந்தி நினைவு இல்லம்2017ஆம் ஆண்டு காந்தி அருங்காட்சியகம் சென்று வந்தோம்  . காந்தி ஜெயந்தி நாளில்  போட வேண்டும் என்று நினைத்தது. இந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்குத்தான்  கைகூடி வந்து இருக்கிறது. 

அப்பாவுடன் நினைவு இல்லத்தில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கு 1972ல் போய் இருக்கிறேன்.   விடுமுறைக்கு மதுரை வரும் போதெல்லாம்  உறவினர்கள், மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் இருக்கிறோம். 

இந்த முறை பேரனுக்கு என்று போனது .


முகப்புத் தோற்றம்

இராணி மங்கம்மாள் அரண்மனை அருங்காட்சியகமாக மாறியது.காந்திஜியின் நினைவு இல்லம் நிறுவப் பட்டது. 
                                                         பேரனின் நண்பன் -   Flat Stanley 

உள்  வாசல்

பேரன் மதுரையில் முக்கியமான இடங்களை தனது ஊர் நண்பனுக்குக் காட்டுவதாக  'ப்ராஜெக்ட்' செய்தான்.  முதலில் அவன் நண்பரின் வருகை காந்தி  நினைவு அருங்காட்சியகம். நண்பர் -அரிசோனாவிலிருந்து மதுரைக்கு வந்து இருக்கும் கற்பனைப் பாத்திரம் அவர் பெயர் -
Flat Stanley 


வகுப்புகள் நடக்கும் இடம்
                            
கதர் மாலை அணிந்த காந்திஜி

அவர் பயன்படுத்திய படுக்கை, கம்பளிப் போர்வை
அவர் அணிந்த காலணி
அவர் அணிந்த காலணி

அவர் பயன்படுத்தியவைகள்


காந்திஜி பயன்படுத்திய கை ராட்டை, தக்களி , பஞ்சு
அவரது கண்ணாடி, கண்ணாடிக் கூடு, ஜபமாலை, 

காந்திஜி பயன்படுத்திய பொருட்கள்  இருக்கிறதுஇந்த நீண்ட தாழ்வாரத்தின் கடைசியில் தான் காந்திஜியின் மேல் துண்டு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது.
காந்தி இறக்கும் போது அணிந்து இருந்த மேல் துண்டு, இரத்த கறையுடன்


காந்திஜியின் 151 வது பிறந்த நாள். லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் 116 வது  பிறந்த நாள்.

 காமராஜர் அவர்களின் நினைவு நாள்.  

நாட்டுக்காகப் பாடுபட்ட நல்ல தலைவர்களைப் போற்றி வணங்குவோம்.

                                வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.  

========================================================================

29 கருத்துகள்:

 1. அழகான படங்கள் விளக்கத்துடன் அருமை சகோ.

  பெயரனுக்கு வாழ்த்துகள்.

  சமீபத்தில் காந்தி மியூசியம் போவோம் என்று போனபோது... ஒரு அவசர அழைப்பு திரும்பி விட்டேன். அடுத்தமுறை அவசியம் போகவேண்டும்...

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
  படங்களை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கும், பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி ஜி.

  அடுத்த முறை வந்து பாருங்கள் அவரமில்லாமல் நிறைய இருக்கிறது அருங்காட்சியகத்தில் பார்க்க.

  பதிலளிநீக்கு
 3. அன்பு கோமதிமா.
  காந்திஜி பற்றிய நினைவு மண்டபக்காட்சிகள் அனைத்தும் மிக அருமை.
  அவருடைய சின்னங்கள் எல்லாம் இங்கே வந்துவிட்டால் அவருடைய ஆசிரமத்தில்
  ஏதாவது மீதி இருக்குமோ.
  சால்வை, இறந்த போது அணிந்திருந்த துண்டு
  எல்லாமே சோக நினைவுகள் தான்.
  அந்த நேரத்திலேயே நம் நாட்டில் வன்மை ஆரம்பித்து விட்டது.
  இராட்டை, தக்கிளி எல்லாம் பழைய நினைவைத்
  தூண்டுகின்றன.

  பேரனின் தோழர் பொம்மை பிரமாதம்.
  மிக அழகாக ஆல்பம் தயாரித்திருக்கிறார்.
  அருமையான வேலைப்பாடுகள்.

  அன்பு ஆசிகள் பேரனுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

   //22-9–1921ல் மகாத்மா காந்தி மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தபோது, இங்குள்ள மக்கள் மேலாடை கூட அணிய வழியில்லாமல், மிகவும் வறுமையான நிலையில் வாழ்வதை கண்டார். அதன்பின்தான் சட்டையுடன் வலம் வந்த அவர், தன் மேலாடையை களைந்தார். அரை ஆடைக்கு மாறினார். 'இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு முழு ஆடை அடைகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன்' என்று சூளுரைத்தார். அப்படிப்பட்ட வரலாற்று சம்பவம் நிகழ்ந்த ஊர் என்பதால் மதுரையை தேர்வு செய்தார்கள்.//

   //காந்தி பயன்படுத்திய பதினான்கு அசல் பொருட்களும், 32 மாதிரி பொருட்களும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. சுடப்பட்ட அன்று காந்தி உடுத்தியிருந்த ரத்த கரை படிந்த வேட்டி இங்கு உள்ளது.//


   நன்றி விகடன்

   காந்திஜி வாழ்வில் முக்கிய பங்கு மதுரைக்கு இருக்கே! அதுதான் அவருக்கு இங்கு நினைவு இல்லம். அவர் உடைமைகளில் அசலும், நகலும் இருக்கிறது. அவரை சுட்ட துப்பாக்கியின் நகல் வடிவம் இருக்கிறது.

   இராட்டை, தக்களி எல்லாம் பள்ளியில் படிக்கும் போது சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். பழைய நினைவுகள் மனதில் இருக்கிறது.

   பேரனின் நண்பரை இரண்டு பாட்டிகளும், தாத்தாவும் மதுரை முக்கியமான இடங்களுக்கு அழைத்து சென்றோம். படங்களை அனுப்பினோம் மருமகளுக்கு. பள்ளியில் இந்த ஆல்பத்தை காட்டி மதுரையின் பெருமைகளை கூறினான்.

   உங்கள் அன்பு ஆசிகளுக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.
   பதிலளிநீக்கு

   பழைய இடுகைகள்முகப்பு

   நீக்கு
 4. மதுரையில் ராணி மங்கம்மாள் அவர்களது அரண்மனை தான் காந்தி அருங்காட்சியகமாக மாறியுள்ளது...

  ஆனாலும் இன்னும் காந்தி அருங்காட்சியகம் காணும் வாய்ப்பு அமையவில்லை...

  நிறைந்த செய்திகளும் அழகிய படங்களுமாக பதிவு அருமை...

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்

   //1670ல் ராணிமங்கம்மாள் கோடை காலத்தில் நிர்வாகம் செய்வதற்காக கட்டப்பட்ட அரண்மனை பின்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர்களின் கலெக்டர், நீதிபதிகள் தங்கும் பங்களாவாக இருந்தது. அதையே காந்தி அருங்காட்சியகமாக 1959ல் அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.//

   நன்றி விகடன்

   வாய்ப்பு வரும் போது வந்து பாருங்கள் .
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


   நீக்கு
  2. ரணி மங்கம்மாள் மிகச் சிறந்த நிர்வாகி.. பிற்காலத்து அரச பரம்பரையில் குறிப்பிடத்தக்கவர்.. மக்களுக்கான நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்... பற்பல சாத்திரங்களைக் கட்டுவித்தவர்... அவைகள் தான் மங்கம்மாள் சத்திரங்கள் எனப்படுகின்றன..

   வீரப்பெண்மணியாகிய அவரை வீழ்த்தியது
   மாற்றார்களின் வஞ்சகம்...

   நாட்டைப் பிடிக்க வந்தவர்கள் செய்தது துரோகம் எனில்
   நம்மவர்கள் இத்தகைய தியாக சீலர்களை மறந்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை...

   ராணி மங்கம்மாள் புகழ் வாழ்க!..

   நீக்கு
  3. ராணி மங்கம்மாள் அவர்கள் சிறந்த நிர்வாகிதான். மனதிடம் மிக்கவர்.
   சமுதாயபணிகள் நிறைய செய்து இருக்கிறார்.
   அவர் கட்டிய சத்திரங்கள், அரண்மனைகள் காலத்தை வென்று இன்றும் கம்பீரமாக அவர் பெயர்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறது. சமுதாயபணி அவரைப்போல் செய்தவர் இல்லை என்று வரலாறு சொல்கிறது.
   யார் மறந்தாலும் 17ம் நூற்றாண்டு வரலாறு அவர் புகழ் பாடி கொண்டுதான் இருக்கும்.

   அவரைப்பற்றி சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. நானும் இங்கு சென்று வந்திருக்கிறேன்.  என் நண்பர்கள் நால்வருடன் இங்கு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் பார்த்தபோது பழைய நினைவுகள் கிளர்ந்தன.

  காந்தியிஜின் நினைவைப் போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   வெகு நாட்கள் ஆச்சு நீங்கள் என் வலைத்தளம் வந்து.
   மதுரையில் வசித்த நீங்கள் பார்க்காமல் இருப்பீர்களா!
   நண்பர்களுடன் பார்த்து இருப்பதும் படம் எடுத்துக் கொண்டதும் மறக்கமுடியாத நினைவுகள் தான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   பழைய நினைவுகள்

   நீக்கு
 6. பேரனின் நண்பன் படங்கள் ஆகா...!

  பொக்கிச பதிவு அம்மா... நன்றி...

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் திண்டுக்கல் தனாபாலன், வாழ்க வளமுடன்

  பேரனின் நண்பன் படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. எல்லாப் படங்களும் இப்போது தான் முழுமையாக இறங்கியுள்ளன...

  பேரன் கவின் தமது கற்பனை கடலாக விரிந்து கலாச்சாரத் தூது ஆக அமையட்டும்...

  பனிக்கட்டியில் சிவலிங்கம் செய்தவர் தங்கள் மகன் தானே!..

  விதையொன்று போட சுரை ஒன்று முளைக்குமா!.. என்பார்கள் தஞ்சை வழக்கத்தில்...

  நலமே வாழ்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா படங்களையும் முழுமையாக பார்த்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
   பனிக்கட்டியில் சிவலிங்கம், விநாயகர் செய்து இருக்கிறான், சாக்பீஸ் வைத்து கோவில் கட்டி இருக்கிறான் கலைநயத்தோடு 9 வது வகுப்பு படிக்கும் போது. இப்போதும் ஏதாவது ஓவியம், கை வேலை செய்து கொண்டுதான் இருப்பான். மருமகளும் நல்ல கைவேலைகள், ஓவியம் வரைவாள்.
   மீண்டும் வந்து கருத்துச்சொல்லி வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. காந்திஜி அவர்களின் நினைவு இல்லம், அவர் பயன்படுத்திய பொருட்கள் என அத்தனை படங்களும் நன்றாக உள்ளது. ராணி மங்கம்மாள் ஒரு சிறப்பான ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர் வீரம் மிகுந்த பெண்பணி. சமூக சேவைகள் செய்வதில் மிகவும் விருப்பமுள்ளவர். அவரின் அரண்மனை காந்தியடிகளின் நினைவு இல்லமாக மாறியிருப்பது வெகு பொருத்தம். இல்லத்தின் அனைத்துப் பகுதிகளையும் நன்றாக படமெடுத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நான் மதுரை அருகே திருமங்கலத்திலிருந்தும் இங்கெல்லாம் சென்று வர சந்தர்ப்பம் ஏனோ அமையவில்லை.

  தங்கள் பேரனின் நண்பர் ஓவியம் நன்றாக உள்ளது. அவர் அமைத்த தொகுப்பு படங்களும் அருமையாய் உள்ளது. அவரின் கலையம்சத்துடன் கூடிய விதவிதமான விளையாட்டு திறமைகளை,நீங்கள் பகிர்ந்துள்ளீர்கள். இத்தனை சிறுவயதில் அவருக்குள் இயற்கையாகவே விளைகின்ற கற்பனைக்கும், அவரின் திறமைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் மகன், மருமகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
  திருமங்கலத்தில் இருந்தீர்களா? மதுரையில் எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள், அழகர் கோவில், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று வருவார்கள் அப்பா அழைத்து செல்வார்கள். தயானந்த சரஸ்வதி தொடர் சொற்பொழிவு காந்தி நினைவு இல்லத்தில் நடைபெறும் அதற்கு அழைத்து செல்வார்கள். இப்போது இங்கு வந்த பின் இரண்டு தடவை போய் இருக்கிறேன்.

  அதற்கு பக்கத்தில் பாரதி பூங்கா, முருகன் கோவில் எல்லாம் இருக்கிறது. நம் வீட்டிலிருந்து தூரமாக இருக்கிறது போக முடிவது இல்லை.

  பேரன் அமைத்த தொகுப்பில் இந்த ஊரின் சிறப்பான இடங்கள், இந்த ஊரின் மல்லிகை, மல்லிகைபூ இட்லி எல்லாம் இடம் பெற்று இருக்கிறது.

  மகன், மகள், பேரனை வாழ்த்தியதற்கு நன்றி .
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. புகைப்படங்களோடு நீங்கள் விளக்கியிருக்கும் விதமும், பேரனின் ப்ராஜெக்டும் அருமை. நாங்க மதுரை விஜயத்தின் பொழுது காந்தி மியூசியம் சென்றோம். ஆனால் எங்களிடம் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றார்கள். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   புகைப்படம் எடுக்க அனுமதி டிக்கட் 50 ரூபாய் கொடுத்து அனுமதி பெற்றுக் கொண்டு எடுத்தோம். மாயவரத்திலிருந்து மதுரைக்கு வந்த போது மீனாட்சி அம்மன் கோவிலிலும் படம் எடுக்க அனுமதி கொடுத்தார்கள். அப்புறம் 50 வாங்கி அனுமதி கொடுத்தார்கள். இப்போது உள்ளே அலைபேசி, காமிரா அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

   அது போல் நீங்கள் போன போது அனுமதி இல்லை போலும்.

   உள்வாயில் படத்தில் ஓரத்தில் படம் எடுக்க வீடியோ எடுக்க 50 ரூபாய் என்று இருக்கிறது பாருங்கள்.

   பேரனின் ப்ராஜெக்டை பாராட்டியதற்கு நன்றி. உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. அருமையான படங்கள், பேரனின் அழகான ப்ராஜெக்ட்டுக்கு வாழ்த்துகள். பேரன், மகன், மருமகள் அனைவரும் வந்திருக்கிறார்களா? வெகு திறமையுடன் பேரன் செய்திருக்கும் இந்தப் ப்ராஜெக்டும் அதன் படங்களும் சிறப்பாக இருக்கின்றன.

  காந்தி ம்யூசியத்துக்கு நான் கல்யாணம் ஆகித்தான் பின்னர் மறுவீட்டுக்கு மதுரை வந்தப்போ முதல் முதலாகப் போனேன்! அதுக்கப்புறமா ஒரு முறை குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறேன். ஆனாலும் அப்போதெல்லாம் காமிராவெல்லாம் கிடையாது. படங்கள் எடுக்கவில்லை. என்றாலும் உள்ளே இவற்றை எல்லாம் பார்த்த நினைவுகள் இருக்கின்றன. அஹமதாபாதில் சபர்மதி ஆசிரமமும் போனோம். வர்தா ஆசிரமம் தான் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை. அருமையான நினைவலைகள். பாராட்டுகள், வாழ்த்துகள். காந்தி ஜயந்திக்கு அழகான, அருமையான அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 13. உங்கள் பேரனின் ப்ராஜெக்ட் - நன்றாக இருக்கிறது.

  சிறப்பான நாளில் சிற்ந்ததோர் பதிவு. காந்தி அருங்காட்சியகத்திற்கு உங்கள் பதிவு வழி எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

  //பேரனின் அழகான ப்ராஜெக்ட்டுக்கு வாழ்த்துகள்.//

  நன்றி. 2017 ல் செய்த ப்ராஜெட் இது. இப்போதுதான் பகிர்ந்து இருக்கிறேன்.
  மகன், மருமகள் பேரன் யாரும் வரவில்லை. முன்பு போட முடியவில்லை , இப்போதுதான் போட முடிந்தது.

  //அஹமதாபாதில் சபர்மதி ஆசிரமமும் போனோம். வர்தா ஆசிரமம் தான் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை.//

  எனக்கு சபர்மதி, வர்தா ஆசிரமம் போக வாய்ப்பு கிடைக்கவில்லை.

  உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. வணக்கம் Paul Jeyaseelan , வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 16. அருமையான படங்கள். அருமையான பகிர்வு. பேரனுக்கு வாழ்த்துகள்

  போர்பந்தரில் காந்தி இல்லத்திற்குச் சென்றுவந்த நினைவை மீட்டிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   படங்களையும், பதிவையும் ரசித்து கருத்து சொன்னதற்கும், பேரனை வாழ்த்தியதற்கும் நன்றி.

   போர்பந்தரில் உள்ள காந்தி இல்லத்திற்குச் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி நெல்லை.

   உங்களை காணோமே என்று நினைத்தேன் , வந்து விட்டீர்கள், நன்றி.

   நீக்கு
  2. போர்பந்தர் நாங்களும் போய் வந்தோம். அங்கே தான் சுதாமா கோயிலும் உள்ளது.

   நீக்கு
  3. நீங்களும் போர்பந்தர் போய் வந்தீர்களா மகிழ்ச்சி.
   சுதாமா கோயிலும் போய் வந்தது அறிந்து மகிழ்ச்சி.
   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 17. மதுரையில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்று. பல முறை சென்றுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   மதுரை பார்க்க வேண்டிய இடம் தான் .
   நீங்கள் பலமுறை பார்த்து இருப்பது அறிந்தேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு