தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.
தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில் .மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.
தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.
இந்த பதிவில் தங்க புத்தர் இடம் பெறுகிறார்.
புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1
புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்--பாகம் -2
இதற்கு முன் போட்ட பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.
புத்தர் சயனக் கோலத்தில் இருக்கும் இடம்
ஒரு புத்த துறவி புத்தர் தலைமுடியை பற்றி சொல்லும் போது அவருக்கு நல்ல சுருள் முடி என்று சொன்னார்.
சுருள் முடி
நீண்ட காது
தலையை தாங்கி நிற்கும் கை
பின் பக்கத்தலை
வெள்ளை எருக்கு பூவை கோர்த்து செயற்க்கை பூக்களுடன் அழகாய் வைத்து இருக்கிறார்கள்.
புத்தர் உடல் ஒவ்வொரு பாகத்துக்கு நடுவிலும் இப்படி படுத்து இருக்கும் புத்தர், அமர்ந்து இருக்கும் புத்தர் பூ அலங்காரம் இருக்கிறது.
சின்ன காணொளிதான் புத்தரின் தலை முதல் கால் வரை எடுத்தது.
புத்தரின் எதிரில் உலோக பாத்திரங்கள் வரிசையாக வைத்து இருக்கிறார்கள், அதில் காசுகள் இருக்கிறது.
புத்தரின் விரல்களை பற்றி தன் அப்பாவிடம் பேசுகிறான் பேரன் கவின்
இறைவனின் பாதங்களை பிடித்துக் கொள்ள வேண்டும் அவன்தான் நமக்கு கதி வேறு யாரும் இல்லை.
அமைதியை போதித்த குருபிரான் கெளதம புத்தரின் போதனகள் அன்பு,அகிம்சை, அமைதியை வலியுறுத்துகிறது. உலக மக்கள் எல்லாம் அதை கடைபிடித்தால் போர் இருக்காது. எங்கும் அமைதியும் ஆனந்தமும் இருக்கும்.
சுபதினம் என்ற படத்தில் புத்தன் பிறந்து போதனை செய்தான் அன்புக்கு அதுதான் சுபதினம் என்று கவிஞர் வாலி எழுதிய பாடல். சீர்காழி கோவிந்த ராஜன் எழுதியது நினைவுக்கு வருகிறது.
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்
உலக மக்கள் அனைவரும் நலமாக இருந்தால் எல்லோருக்கும் எல்லா நாளும் சுபதினம் தான். உலக மக்கள் அனைவருக்க்காவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
நம் ஊர் மாதிரி விளக்கு வைக்க ஒரு இடம். மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து இருக்கிறார்கள். க்ண்ணாடி விளக்கு தூணில் விளக்கு இருக்கிறது.
தத்தாத்ரேயர்ம் பிள்ளையார் எல்லாம் இருக்கிறார்கள்.
புத்தர் போதனைகள் தாய் மொழியில் இருக்கிறது நமக்கு படிக்க முடியவில்லை.
அதானல் நம் தாய் மொழியில் உள்ள போதனைகள் பகிர்ந்து இருக்கிறேன்.
குருமார்கள் சிலைகள் இருக்கிறது அவர்கள் முன்னால் விரிப்பில் அமர்ந்து தியான செய்வார்கள் போலும். ஒவ்வொருவர் அருகிலும் உண்டியல் இருக்கிறது.














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக