திங்கள், 28 ஆகஸ்ட், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 4






பத்துமலை முருகன் கோவில் தொடர் பதிவில் இன்று  ஸ்ரீ வேலயுதர்சுவாமி  மூலவர் இடம் பெறுகிறார்.
 


மேலே   வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை வணங்கி விட்டு கீழே  மூலவரை தரிசனம் செய்ய வந்தோம் .

குகைகுள் கோவில் இருப்பது நன்றாக தெரிகிறதா? உள்ளே இருட்டு குகைக்கு மேலே தெரியும் துவாரத்தில் வெளிச்சம் தெரிகிறது பாருங்கள்.
                                     மூலவர் இருக்கும் வாசல்

மணி மண்டபம்

மூலவர் முருகன்  கோவிலில் முதலில் அங்கு இருக்கும் பிள்ளையாரை வணங்கி கொண்டோம்
குகைகுள் இருக்கும் வேலாயுதர்
வெள்ளி கவசத்தில் அழகாய் காட்சி அளிக்கிறார்
 உற்சவர், முன்பு வேல் மட்டும்  வைத்து வணங்கி இருக்கிறார்கள். அபிஷேகம் செய்ய  நீர் எடுக்க வைத்து இருக்கும் குழாயை வேறு பக்கத்தில் வைத்து இருக்கலாம்.
                 பிள்ளையார் சுழி, மற்றும்   நகரம் என்று  எழுதி இருக்கிறது.

மலையில் இயற்கை காட்சிகளை வரைந்து இருக்கிறார்கள்
வெள்ளி மயில் வாகனத்தில் வேலும் சேவற்கொடியும் தாங்கி நிற்கும் குமரன்
மலையின் உட்புறம் சுவர்கள் தெரியும் பின்னால்
 
தூண்களின் சிற்பங்களுக்கு கண்ணாடி கவசம்

கோவிலின் உட்புறத் தோற்றம்


பெரிய விளக்கு, இருப்பக்கங்களில் சேவலும், மயிலும்  நடுவில் வேல் அமைப்பு.

கோவில் வெளிப்புற மதில் சுவற்றில் 


அழகை ரசிக்க முடியாமல் அங்கு குப்பை தொட்டியும் விளக்குமாறும் இருப்பது பார்க்க  கஷ்டமாக இருக்கிறது பார்க்க.

  

பிள்ளையார் தாய் தந்தையை வலம் வந்து மாம்பழத்தை பெறுதல், முருகன் மயில் மீது உலகை சுற்றி வந்து இறங்கி தாய் தந்தையிரடம் மாங்கனியை கேட்கும் அழகிய சிற்பங்கள்

வள்ளி தெய்வானையுடன் முருகன்
படி இறங்கி கீழே வரும் போது பார்த்த காட்சி,  கட்டிடத்தின் மேல் தேங்கி நிற்கும் மழை நீரை பருகும் குரங்குகள். மரத்திலிருந்து கீழே குதிக்கும் போது தண்ணீர் சிதறுவது பார்க்க அழகாய் இருந்தது.

கீழே பேரன் புறாக்களுடன் விளையாடிய காணொளிகள் சின்ன காணொளிகள்தான் .

கீழே இருக்கும் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி ஹோமம் நடந்தது, அங்கு ஒலிக்கும் மந்திர ஒலி கேட்கும் முதல்   காணொளியில்,


  இந்த  காணொளியில் புறாக்களின் சத்தம் கேட்கும்.



அடுத்து கீழே உள்ள ஆறுபடை வீடுகள் முருகனை பார்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------

35 கருத்துகள்:

  1. அழகிய படங்கள்.  எல்லாப் படங்களுமே அழகாக எடுக்கப் பட்டிருக்கின்றன.  மேலும் கோவிலில் ஆட்களே இல்லாமல் இருக்கிறார்களே..  குகைக்குள் கோவில், சிற்பம், வெளிப்படு என்பதெல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அழகிய படங்கள். எல்லாப் படங்களுமே அழகாக எடுக்கப் பட்டிருக்கின்றன. //

      நன்றி.

      //மேலும் கோவிலில் ஆட்களே இல்லாமல் இருக்கிறார்களே.. குகைக்குள் கோவில், சிற்பம், வெளிப்படு என்பதெல்லாம் அருமை.//

      எல்லா கூட்டமும் மேலே இருக்கும் முருகனை, மலை அழகை கண்டு களித்து கொண்டு இருக்கிறார்கள்.நாங்கள் விரைவில் கீழே இறங்கி விட்டோம்.

      நாங்கள் கீழே படிகளில் இறங்கும் போது தான் மக்கள் கூட்டம் வருகிறது. நாங்கள் 3.30க்கு மேலே ஏறி 5.30க்கு எல்லாம் கீழ் இருக்கும் கோவிலுக்கு வந்து விட்டோம்.இருந்த ஆட்களையும் தவிர்த்து எடுத்த படங்கள் அவை. அப்படியும் இரண்டு,ஒருவர் படத்தில் இடம் பெற்று இருப்பார்கள்.

      குகைக்குள் கோவில், சிற்பம், வெளிப்படு என்பதெல்லாம் அருமை.//

      ஆமாம்.


      நீக்கு
  2. ஸ்பீக்கர் ஆன் செய்யாமல்தான் காணொளிகள் கண்டேன்.  எவ்வளவு புறாக்கள்.  தூரத்தில் தெரியும் பிரம்மாண்ட முருகன் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்பீக்கர் ஆன் செய்யாமல்தான் காணொளிகள் கண்டேன். எவ்வளவு புறாக்கள். தூரத்தில் தெரியும் பிரம்மாண்ட முருகன் அழகு.//

      காணொளிகள் ஸ்பீக்கர் ஆன் செய்து அப்புறம் கேளுங்கள்.
      முருகன் எங்கு இருந்து பார்த்தாலும் அழகாய் இருக்கிறார்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோ
    படங்கள் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறது.

    காணொளி கண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறது.

      காணொளி கண்டேன்//

      படங்களை, காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

      நீக்கு
  4. படங்கள் மிக அழகு.

    நானே சென்றுவந்த பிரமிப்பை ஏற்படுத்தியது.

    பிள்ளையாரையும், வேலாயுதரையும் தரிசித்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் மிக அழகு.
      நன்றி.


      //நானே சென்றுவந்த பிரமிப்பை ஏற்படுத்தியது.

      பிள்ளையாரையும், வேலாயுதரையும் தரிசித்துக்கொண்டேன்.//

      நன்றி.

      நீக்கு
  5. காணொளியில் மந்திரங்களின் பின்னணியில் புறாக்களின் கூட்டம் அழகு.

    இங்கும் பல இடங்களில் புறாக்களின் கூட்டத்தைப் பார்த,த நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளியில் மந்திரங்களின் பின்னணியில் புறாக்களின் கூட்டம் அழகு.

      இங்கும் பல இடங்களில் புறாக்களின் கூட்டத்தைப் பார்த,த நினைவு வந்தது.//

      ஆமாம், நிறைய வட நாட்டு கோவில்களில் புறாக்கள் இருக்கும் இப்படி கும்பலாக.காணொளிகள், மற்று படங்களை பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.
      அதுவும் பிஸியாக இருக்கும் உங்கள் வேலைகளுக்கு இடையில் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. முதல் படமே அட்டகாசமாக இருக்கு கோமதிக்கா

    குகைக்குள் கோயில் இருப்ப்து நன்றாகத் தெரிகிறது கோமதிக்கா. மேளே வெளிச்சமும். இடைவெளி வழியாக

    அதானே அண்ணனை தொழாமல் தம்பியைப் பார்க்கலாமா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //முதல் படமே அட்டகாசமாக இருக்கு கோமதிக்கா//

      நன்றி கீதா

      //குகைக்குள் கோயில் இருப்ப்து நன்றாகத் தெரிகிறது கோமதிக்கா. மேளே வெளிச்சமும். இடைவெளி வழியாக//

      ஆமாம், நமக்கு வியப்பை தரும் விஷயம்.

      //அதானே அண்ணனை தொழாமல் தம்பியைப் பார்க்கலாமா!!!!//

      அண்ணன் அப்போதுதானே வரம் தருவார், செய்யும் காரியங்களுக்கு உடன் வருவார்.

      நன்றி கீதா.

      நீக்கு
  7. கீதா, உங்களுக்கும், சகோ துளசிதரன் அவர்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அழகு அற்புதம்...

    முருகா சரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு அற்புதம்...

      முருகா சரணம்...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. குகைக்குள் வேலாயுதர் அழகு!!! பார்த்ததும் உடனே எனக்கு நினைவு வந்தது இந்த வரிகள் - பாடல்

    செந்தமிழின் ஒளி அழகு, செந்தமிழின் சொல் அழகு தெய்வங்களின் நீ அழகு கதிர்வேலனே
    நாதங்களின் ஓம் அழகு மாதங்களில் தை அழகு , கூர்மையிலும் வேல் அழகு, சிவமைந்தனே! எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்....

    அது நினைவுக்கு வந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குகைக்குள் வேலாயுதர் அழகு!!! பார்த்ததும் உடனே எனக்கு நினைவு வந்தது இந்த வரிகள் - பாடல்

      செந்தமிழின் ஒளி அழகு, செந்தமிழின் சொல் அழகு தெய்வங்களின் நீ அழகு கதிர்வேலனே

      நாதங்களின் ஓம் அழகு மாதங்களில் தை அழகு , கூர்மையிலும் வேல் அழகு, சிவமைந்தனே! எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்....//

      பாடல் வரிகளும் அழகு, பாடலும் அருமை கேட்டேன் கீதா.
      பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  10. வெள்ளி மயில் வாகனன்! உட்புறச் சுவர் எல்லாம் தெரிந்தது

    தூண்களின் சிற்பங்களுக்குக் கண்ணாடி கவசம் போட்டிருப்பது நல்ல விஷ்யாம் இல்லைனா மக்கள் தொட்டுப் பார்த்து அழுக்காகிவிடும் தூசி அடையில்.

    கோயிலின் உட்புறத் தோற்றம் அழகு மற்றும் இந்தக் குகைக்குள் இவ்வளவு இடமா என்று வியக்கவும் வைக்கிறது!

    குகைக்குள் படிகள் எல்லாம் வைத்துக் கட்டியிருப்பதும் வியப்புதான்
    சேவல் மயில் இருப்பக்கம் நடுவில் வேல் படம் சூப்பர் அழகா இருக்கு

    கோயில் உட்புறம் மதிற்சுவர் எல்லாம் எப்படி வடிவமைச்சிருக்காங்க ஒரு குகைக்குள்ள இவ்வளவான்னு சொல்ற வகையில்
    //அழகை ரசிக்க முடியாமல் அங்கு குப்பை தொட்டியும் விளக்குமாறும் இருப்பது பார்க்க கஷ்டமாக இருக்கிறது பார்க்க.//

    சொல்ல வந்தேன்.... உங்கள் வரிகள் அங்கு!!! பார்த்துவிட்டேன்

    மாங்கனி கதை சிற்பங்கள் ....

    தேங்கியிருந்த தன்ணீரில் குரங்கு டைவ் அடிச்சிருக்கும்!!!!!!!!!! ஹாஹாஹாஹா...ஆமாம் தண்ணீர் தெறிக்கும் காட்சி அழகா இருக்கும்..

    புறாக்கள் கூட்டம் பறக்கும் காட்சியை ரசித்தேன் கோமதிக்கா காணொளியில் சவுன்ட் ஆஃப் செய்துவிட்டு! பேரன் விளையாடிய காணொளியையும் ரசித்தேன்.

    படங்கள்ல் எல்லாமே அழகு. இந்தக் குகைக்குள் இவ்வளவு விஷயங்கள் என்பது பிரமிப்புதான் அதுவும அழகான வடிவங்களுடன்!!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளி மயில் வாகனன்! உட்புறச் சுவர் எல்லாம் தெரிந்தது

      தூண்களின் சிற்பங்களுக்குக் கண்ணாடி கவசம் போட்டிருப்பது நல்ல விஷ்யாம் இல்லைனா மக்கள் தொட்டுப் பார்த்து அழுக்காகிவிடும் தூசி அடையில்.//

      ஆமாம், கையை பிடித்து பிடித்து கை ஒடிந்து விடும்.

      //கோயிலின் உட்புறத் தோற்றம் அழகு மற்றும் இந்தக் குகைக்குள் இவ்வளவு இடமா என்று வியக்கவும் வைக்கிறது!//

      ஆமாம், வியக்க வைக்கும் கோவில்.

      //குகைக்குள் படிகள் எல்லாம் வைத்துக் கட்டியிருப்பதும் வியப்புதான்
      சேவல் மயில் இருப்பக்கம் நடுவில் வேல் படம் சூப்பர் அழகா இருக்கு//

      ஆமாம், நன்றாக ரசித்து கட்டி இருக்கிறார்கள்.

      //மாங்கனி கதை சிற்பங்கள் ..//

      சிற்பங்கள் இருக்கும் இடத்திலும் குப்பை கூடை விளக்குமாறு இருந்தது. அதை தள்ளி வைத்து விட்டு எடுத்தேன்...


      //புறாக்கள் கூட்டம் பறக்கும் காட்சியை ரசித்தேன் கோமதிக்கா காணொளியில் சவுன்ட் ஆஃப் செய்துவிட்டு! பேரன் விளையாடிய காணொளியையும் ரசித்தேன்.//

      சவுன்ட் ஆன் செய்து விட்டு கேட்டுப்பாருங்கள் நன்றாக இருக்கும்.

      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி கீதா.

      நீக்கு
  11. படங்கள் காணொளி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் எப்போதும் போல் மிக அழகாக இருக்கிறது. மூலவர் வேலாயுதனை பக்தியுடன் வணங்கிக் கொண்டேன்.

    குகையின் அமைப்பும், அதனுள் அழகாக பிரதிஷ்டை செய்து அமர்ந்திருக்கும் முருகனையும் காண கண் கோடி வேண்டும். உங்கள் தயவால் நானும் பத்துமலை முருகனை நல்ல பல விபரங்களுடன் பணிந்து வணங்கி கொண்டேன்.

    குகைக்குள் வெள்ளி மயில் வாகனத்துடன் இருக்கும் முருகனும், தூண்களில் கண்ணாடி மறைவில் வடிவமைத்திருக்கும் சிற்பங்களும், அழகிய பெரிய விளக்கும், படி இறங்கி வரும் போது கண்ட இயற்கை காட்சிகளும், படங்களாக பார்க்கினும், நானும் தங்களுடன் வந்து குமரனை தரிசித்த திருப்தியை தந்தது. நன்றி சகோதரி

    புறாக்கள் இருந்த இடத்தை விட்டு அசைந்து அசைந்து சிறிது தூரங்களில் பறக்கும் காணொளியும் நன்றாக உள்ளது. தங்கள் பேரன் அவற்றுடன் விளையாடும் காணொளியும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன்.

    இரு தினங்கள் பதிவுகளுக்கு அவ்வளவாக வரவில்லை. இன்று தாமதமாக தங்கள் பதிவுக்கு வந்துள்ளேன். வருந்துகிறேன்.

    எல்லாருக்கும் எல்லா நலன்களையும் முருகப்பெருமான் தந்திட நானும் அந்த முருகனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
    உங்களை காணவில்லையே! என்று நினைத்தேன், வந்து விட்டீர்கள். வழக்கம் போல பதிவை படித்து, காணொளியை ரசித்துப்பார்த்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கம்லா ஹரிஹரன்.

    //எல்லாருக்கும் எல்லா நலன்களையும் முருகப்பெருமான் தந்திட நானும் அந்த முருகனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

    உங்கள் வேண்டுதலுக்கும் நன்றி கமலா

    பதிலளிநீக்கு
  14. மிக அருமை. இப்படி ஒரு கோயிலைப் பார்த்ததே இல்லை. மலை மேல் முருகன் இருக்கார்னூ மட்டும் நினைச்சிருந்தேன். உள்ளே குகையும் மிக அழகான வேலாயுதரும் பார்க்கப் பார்க்கப் பரவசம். உள்ளே குகையின் சிறப்பான அலங்காரங்களும் கண்ணைக் கவர்கின்றன. சேவலும் மயிலும் சேர்ந்த விளக்கு வேல் போல் காட்சி அளிப்பது விளக்கை வார்த்தவரின் கற்பனைத் திறனையும் முருக பக்தியையும் காட்டுகிறது. மற்றவற்றையும் பார்க்கணும். பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //மிக அருமை. இப்படி ஒரு கோயிலைப் பார்த்ததே இல்லை. மலை மேல் முருகன் இருக்கார்னூ மட்டும் நினைச்சிருந்தேன்.//

      குகை கோயில்தான்.

      //உள்ளே குகையும் மிக அழகான வேலாயுதரும் பார்க்கப் பார்க்கப் பரவசம். உள்ளே குகையின் சிறப்பான அலங்காரங்களும் கண்ணைக் கவர்கின்றன.//

      மிக அழகாய் இருந்தது உள்ளே.

      //சேவலும் மயிலும் சேர்ந்த விளக்கு வேல் போல் காட்சி அளிப்பது விளக்கை வார்த்தவரின் கற்பனைத் திறனையும் முருக பக்தியையும் காட்டுகிறது. //

      ஆமாம். கற்பனை திறன், பக்தி இருந்ததால்தான் வேலைபாடு மிக்க
      விளக்கை தயார் செய்ய முடிந்தது.

      மற்றவற்றையும் பார்க்கணும். பார்க்கிறேன்.//

      நேரம் கிடைக்கும் போது பாருங்கள். மகன், மருமகள், பேத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மகள் ஊர் திரும்பி இருப்பார்கள். உடல் நலமாக இருக்கிறார்களா?

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. எல்லாப் படங்களுமே சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கின்றன. 
    காணொளிகள் அருமை..

    புதியன புதியனவாகவே இருக்கட்டும்..

    கண்ணாடிக் கவசம் சிறப்பான நடைமுறை..

    திருச்செந்தூர், உவரி, திருநெல்வேலி சென்றுவிட்டு நேற்று இரவு தான் நல்லபடியாகத் திரும்பினோம்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //எல்லாப் படங்களுமே சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கின்றன.
      காணொளிகள் அருமை..//

      நன்றி.

      இந்த பதிவில் நான் எடுத்த படங்கள், காணொளிகள் இடம்பெற்றன.

      புதியன புதியனவாகவே இருக்கட்டும்..

      கண்ணாடிக் கவசம் சிறப்பான நடைமுறை..//

      ஆமாம் சிலைகள் உடையாமல் இருக்கும்.

      //திருச்செந்தூர், உவரி, திருநெல்வேலி சென்றுவிட்டு நேற்று இரவு தான் நல்லபடியாகத் திரும்பினோம்..//

      நினைத்தேன், உவரி செல்வீர்கள் என்று. தம்பி போன வாரம் போய் வந்தான் குடும்பத்துடன், திருச்செந்தூரில் சீர் அமைப்பு வேலைகள் நடப்பதாக சொன்னான், கூட்டம் அதிகம் என்றான். பணம் கொடுத்து சீட்டு வாங்கித்தான் முருகனை தரிசனம் செய்ய முடிந்தது என்றான்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
      வாழ்க நலம்..

      நீக்கு
  16. கோமதி அக்கா நலம்தானே, உடன் வராமைக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. புளொக்கில் கால் பதிச்சிட்டேன் மீண்டும், இருப்பினும் நேரத் தகறாறாகவே இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //கோமதி அக்கா நலம்தானே, உடன் வராமைக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. புளொக்கில் கால் பதிச்சிட்டேன் மீண்டும், இருப்பினும் நேரத் தகறாறாகவே இருக்கிறது...//

      நலம் தான். கொஞ்சம் கால்வலி அது இது என்று இருந்தாலும் அதை எதிர் கொண்டு வருகிறேன்.
      மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது. நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் அக்கா பதிவுகளை.
      ப்ளொக்கில் கால் பதித்து விட்டால் நேரம் எல்லாம் கிடைத்து விடும்.
      நேரத்தை அதற்கு ஏற்றார் போல மாற்றி அமைத்து கொள்ளலாம்.

      நீக்கு
  17. ஆவ்வ்வ் சிங்கப்பூர் மலேசியா சுற்றுலா போனீங்களோ, சூப்பர், பார்க்க வேண்டிய இடங்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆவ்வ்வ் சிங்கப்பூர் மலேசியா சுற்றுலா போனீங்களோ, சூப்பர், பார்க்க வேண்டிய இடங்கள்தான்.//

      மகன் இந்தியா வரும் முன் 5 நாள் பயணம் ஏற்பாடு செய்து அழைத்து போய் காட்டினான். இரண்டு ஊர்களும் பார்க்க வேண்டிய இடங்கள்தான்.

      நீக்கு
  18. படங்கள் அனைத்தும் மிக அழகு, குகைக்குள் அமைந்திருப்பது மேலும் அழகு.
    தூண் சிலைக்கு கண்ணாடி போட்டு பாதுகாத்திருப்பது புதுமையாக இருக்குது, எங்குமே அப்படிக் கண்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் அனைத்தும் மிக அழகு, குகைக்குள் அமைந்திருப்பது மேலும் அழகு.//

      ஆமாம் அதிரா.


      //தூண் சிலைக்கு கண்ணாடி போட்டு பாதுகாத்திருப்பது புதுமையாக இருக்குது, எங்குமே அப்படிக் கண்டதில்லை.//

      சிங்கப்பூர் கோவில்கள் பதிவு நேரம் கிடைத்தால் பாருங்கள், அதிலும் இப்படி கண்ணாடி தடுப்புக்குள் சிலைகள் இருக்கிறது.

      நீக்கு
  19. வீடியோக்கள், பேரன் புறாக் கூட்டம் சூப்பராக இருக்குது படங்களில் வருவதைப்போல.

    நீங்க, தலைப்பை இடம் மாறிப் போட்டிருக்கிறீங்கள். வீடியோக்கள் மேலே போய் விட்டது, தலைப்பைக் கீழே போட்டுவிட்டீங்கள் கோமதி அக்கா, நான் தேடினேன், கீழே எங்கே வீடியோ இருக்குதென... சரி செய்து விடுங்கோ.
    படங்கள் பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்குது. பேரனுக்கு அங்கு இப்போ ஸ்கூல் ஹொலிடேதானே, திரும்பிவிட்டினமோ...
    மீண்டும் சந்திக்கிறேன் வாழ்க வளமோடு.

    பதிலளிநீக்கு
  20. //வீடியோக்கள், பேரன் புறாக் கூட்டம் சூப்பராக இருக்குது படங்களில் வருவதைப்போல.//

    வீடியோப்பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

    நீங்க, தலைப்பை இடம் மாறிப் போட்டிருக்கிறீங்கள். வீடியோக்கள் மேலே போய் விட்டது, தலைப்பைக் கீழே போட்டுவிட்டீங்கள் கோமதி அக்கா, நான் தேடினேன், கீழே எங்கே வீடியோ இருக்குதென... சரி செய்து விடுங்கோ.//
    இரண்டு காணொளிகளுக்கும் சேர்த்து செய்தியை எழுதி இருந்தேன்,

    கீழே இருக்கும் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி ஹோமம் நடந்தது, அங்கு ஒலிக்கும் மந்திர ஒலி கேட்கும் ஒரு காணொளியில், இன்னொரு காணொளியில் புறாக்களின் சத்தம் கேட்கும்.

    ஒரு காணொளி மந்திரம் ஒலிக்கும் என்பது முதல் காணொளி பற்றி, இன்னொரு காணொளியில் புறாக்களின் சத்தம் கேட்கும் என்று போட்டு இருந்தேன்.

    இப்போது ஆசிரியர் அதிரா சொன்னது போல தனி தனியாக எழுதி விட்டேன். இப்போது படித்து பாருங்கள்.


    படங்கள் பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்குது. பேரனுக்கு அங்கு இப்போ ஸ்கூல் ஹொலிடேதானே, திரும்பிவிட்டினமோ...
    மீண்டும் சந்திக்கிறேன் வாழ்க வளமோடு.

    ஜூலை 31ம் தேதி பள்ளி திறந்து விட்டார்கள். ஊரில் தான் இருக்கிறான், மகனும், மருமகளும் வேலைக்கு போக வேண்டுமே! மூன்று வார விடுமுறை எடுத்து வந்தார்கள் சிட்டாய் பறந்து விட்டது நாட்கள்.

    மீண்டும் வாங்க அதிரா.

    அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு