சனி, 25 ஜூலை, 2026

நாலுபக்கம் மலைகள் நடுவில் ஏரி






அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள "வில்லியம்ஸ் " நகரில் சுதந்திர தின விழா பார்க்க போகும் போது  போகும் வழியில் அழகிய ஏரியை பார்த்தோம்.  அதன் பேர்  Watson Lake 

  மக்கள் அந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்கள்.  மலைகளில் ஏறினார்கள், மீன் பிடித்தார்கள் நல்ல பொழுது போக்கும் இடம்.

இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் விடுமுறை நாளில்  நீர்நிலைகள் இருக்கும் இடம் தேடி வருகிறார்கள். 

புதன், 15 ஜூலை, 2026

அமெரிக்காவின் சுதந்திர தின கொண்டாட்டம்





வழியெல்லாம் இது போன்ற  வாழ்த்துகளை வைத்து இருந்தார்கள்.


அமெரிக்காவின் சுதந்திர தினம் ஒவ்வொரு  ஆண்டும் ஜூலை 4 அன்று கொண்டாப்படுகிறது.

பிரிட்டனிடம் இருந்து 13 அமெரிக்கக் காலனிகள் சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் 1776 -ஆம் ஆண்டு ஜூலை  4 -ல் சுதந்திர பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த தேசிய விழா அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 250 வது வருடம் அதனால்  கூடுதல் சிறப்பு. அதைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகனால். விழாவில்  எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

வியாழன், 9 ஜூலை, 2026

களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா துணை




ஜூன் மாதம் 11 ஆம் தேதி  மகன் குடும்பத்தோடு குலதெய்வம் கோயில் போய் வந்தேன்.
அங்கு எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கும் என் சேமிப்பாகவும் இந்த பதிவில்  இடம் பெறுகிறது.