செவ்வாய், 11 ஜூலை, 2023

வீரமாகாளியம்மன் (சிங்கப்பூர்)




ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலுக்கு பின் அடுத்து போன கோவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில். "லிட்டில் இந்தியா" என்று சொல்லும் இடத்தில் சிராங்கூன் சாலையில் அமைந்து இருக்கும் கோவில் மிக அழகான கோவில்.


சிங்கப்பூரில் தரிசனம் செய்த கோவில்கள்  என்று  இதற்கு முன் போட்ட   பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் படங்கள், செய்திகள் இந்த பதிவில்.


கோவிலுக்கு எதிரில் உள்ள ஓட்டலில் இளநீர் குடித்தோம், அங்கு இருந்து எடுத்த படங்கள் இந்த கோபுர படங்கள். கோபுரத்திற்கு மேல் "ஓம்" என்ற எழுத்து உள்ள விளக்கு இருக்கிறது. இரவு ஒளிரும் என்று நினைக்கிறேன்.


இங்கு வாழும் மக்களுக்கு  காவல் தெய்வமாக இருக்கிறார்.

இரண்டாம் உலகப்போரில் தனது சந்நிதியில் சரண் அடைந்த  மக்களை எந்தவொரு சேதமும் இல்லாமல் காளி காப்பாற்றியதால்  காளியை காவல் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். நல்ல சீரான வாழ்வை தருவாளம் இந்த மாகாளி.





மூலவர் வீரமாகாளியம்மன்

அன்னை வீரமாகாளி அம்மன் வலதுகாலை மடக்கி , இடதுகாலை தொங்கவிட்டு  எட்டுகரங்களுடன் இருக்கிறார்.


அன்னையின் வலபக்கம் விநாயகர்

அன்னையின் இடபக்கம் முருகன்
அன்னையின் பல் வேறு தோற்றங்கள்   மேல் பகுதியில்  பல கதைகளை கூறி கொண்டு இருக்கிறது அழகாய்

நடராஜர், சிவகாமி,  மாணிக்கவாசகர், திருமுறை கோவில் 



அம்மன் எதிர்புறம் உள்ள கொடிமரம்


பைரவர்
தட்சிணாமூர்த்தி தங்க கவசம் அலங்காரத்தோடு அழகாய்



உற்சவருக்கு அபிஷேகம் செய்ய போகிறார்கள்.


காசி விஸ்வநாதர்

                                               காசி விசாலாட்சி
                                     கண்ணாடி தடுப்புக்குள்   பிரம்மா
                                                பள்ளியறை
                                                                 நால்வர்





நவக்கிரகம்

கோவில் முழுவதும் கதைகள் சொல்லும் சிற்பங்கள் மிக அழகாய் இருக்கிறது.
                                                           அனுமன்

லட்சுமணர், ராமர் , சீதா,  மூலவரும் உற்சவரும்

                          

அன்னையின் கதைகள் சொல்லும் சிற்பங்கள்
லாட சாமியார், மதுரை வீரன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன்
அபிஷேகத்திற்கு பால் டப்பாக்கள் இருக்கிறது, எலுமிச்சை மாலை, வெற்றிலை பழங்கள், பூக்கள்
தர்மபுரத்தில் உள்ள அஷ்டதசபுஜ துர்கா மகாலட்சுமி போல இருக்கிறது 
மாயவரம் அம்மன் என்று சொல்கிறார்கள்.


சரஸ்வதி
சமயபுர மாரியம்மன்



மாயவரம் பக்கம் பேச்சியாயி என்பார்கள் இங்கு பெரியாச்சி என்று சொல்கிறார்கள்


                                                                நாகர்

கோவில் எதிரில் உள்ள கட்டிடம், நகை கடை, பூக்கடை

சிங்கப்பூர் "லிட்டில் இந்தியா" என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் இந்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்த இடத்தில் கம்பீரமாக  வீரமாகாளியம்மன் இருக்கிறார். சிங்கப்பூருக்கு சுற்றுலா வரும் அன்பர்கள் லிட்டில் இந்தியாவையும் வீராகாளியம்மனையும்   பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலையும் தரிசனம் செய்வார்களாம். நாங்களும் தரிசனம் செய்தோம்.

கி.பி 1835 ல் இந்தியாவிலிருந்து வந்து  வாழ்ந்த  தொழிலாளர்களால் கட்டப்பட்டது. தாங்கள் பெற்ற ஊதியத்தை  கோவிலின் வளர்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார்கள். 

மேலும் பெரிதாக கட்ட கி.பி 1908 -ம் ஆண்டு ரிச்சர்ட் ஓவன் நோரிஸ் என்பவரிடம்  இருந்து 150 வெள்ளிக்கு  நிலத்தை வாங்கி தங்கள் சேமிப்பையும் மற்ற பக்தர்களின் உதவியாலும் கோவிலை பெரிதாக  கட்டி இருக்கிறார்கள்.

 இந்த கோவிலையும் சிங்கப்பூர் அரசு பழமையான வரலாறு  இருப்பதாலும்    கட்டிடக்கலை சிறப்பாக இருக்கிறது என்றும் தேசிய சின்னமாக போற்றுகிறது. 

தங்க விமானம், வெள்ளி ரதம் எல்லாம் இருக்கிறது. நவராத்திரி விழா மற்றும்  பல விழாக்களும் சிறப்பாக நடக்குமாம்.

சர்க்கரை பொங்கல், புளியோதரை அம்மன் பிரசாதங்கள்






இந்த கோவில் யூடியூப் பகிர்வு  காணொளி நன்றாக இருக்கிறது, நேரம் இருந்தால் பார்க்கலாம். நான் எடுத்த காணொளி அல்ல.



இந்த பஸ்ஸில் பயணம் செய்து பெருமாள் கோவில் போனோம்.

என் கணவரின் தம்பி பேரன்   அமர்ந்து இருக்கிறான் .

அவன் நாங்கள் இந்த பஸ்ஸில் பயணம் செய்ய ஆசைபட்டான். டாக்ஸியில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். அவன் விருப்பபடி இந்த பஸ்ஸில் பயணம் செய்தோம். நன்றாக இருந்தது, பஸ் படி உயரமாக இல்லை. நான் ஏறி போக எளிதாக இருந்தது.



வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன் சொல்லி சென்ற விவரங்கள் அருமை.

    வழக்கமாக நீங்கள் எடுக்கும் படங்களின் சிறப்பு கோணங்கள் இதில் குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகிய படங்களுடன் சொல்லி சென்ற விவரங்கள் அருமை.//

      நன்றி.


      //வழக்கமாக நீங்கள் எடுக்கும் படங்களின் சிறப்பு கோணங்கள் இதில் குறைவு.//

      சரியாக சொன்னீர்கள் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வந்து உடனே கோவில்களுக்கு பயணம். கொஞ்சம் அலுப்பு வேறு

      காலை முதல் மதியம் வரை மூன்று கோயில்கள் பயணம்.உச்சிகால பூஜை முடிந்து நடை சாற்றி விடுவார்கள் . நின்று நிதானமாக எடுக்கவில்லை, கோவிலில் எடுக்ககூடாதா எடுக்கலாமா என்று தெரியவில்லை. எப்படியே தூர பார்வையாக படங்கள் எடுத்தேன்.


      அவசரமாக எடுத்த படங்கள். அடுத்த கோவில் பெருமாள் கோவில் போனோம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.




      நீக்கு
  2. படங்களும் தகவல்களும் சிறப்பு. கோயில் அழகாக பராமரிக்கப்படுவது படங்கள் வழி தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      //படங்களும் தகவல்களும் சிறப்பு.//

      நன்றி.


      கோயில் அழகாக பராமரிக்கப்படுவது படங்கள் வழி தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.//

      ஆமாம் நன்றாக பராமரிக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.



      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அசர வைக்கும் படங்கள் அம்மா.‌.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் மிக அழகு
    காலையில் அழகிய தெய்வ தரிசனங்கள்.

    கோவில் பழமை. சுற்றியுள்ள கட்டிடங்கள் எல்லாமே புதுமை.

    பிரசாதங்களும் அழகான பாக்ஸில் வைத்திருக்கிறார்கள்.

    ரொம்பவே சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்ற கோவில் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் மிக அழகு//

      நன்றி.

      //கோவில் பழமை. சுற்றியுள்ள கட்டிடங்கள் எல்லாமே புதுமை.

      பிரசாதங்களும் அழகான பாக்ஸில் வைத்திருக்கிறார்கள்.//

      ஆமாம்.

      //ரொம்பவே சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்ற கோவில் இது//

      ஆமாம், எல்லா கோவிலில் எல்லா இடங்களும் மிக சுத்தமாக இருந்தது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  5. இரு மரங்களின் நடுவில் எடுத்த காளி கோபுரப் படம் ரொம்ப அழகான கோணத்தில் நல்லாருக்கு கோமதிக்கா

    1835 லியே கட்டிருக்காங்க!!..அதுக்குப் பிறகு புதியதாகக் கட்டப்பட்டாலும்...அப்போவே உருவாகியிருப்பது ஆச்சரியம்தான்..

    //இரண்டாம் உலகப்போரில் தனது சந்நிதியில் சரண் அடைந்த மக்களை எந்தவொரு சேதமும் இல்லாமல் காளி காப்பாற்றியதால் காளியை காவல் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். நல்ல சீரான வாழ்வை தருவாளம் இந்த மாகாளி.//

    ஆச்சரியமான சிறப்பான விஷயம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //இரு மரங்களின் நடுவில் எடுத்த காளி கோபுரப் படம் ரொம்ப அழகான கோணத்தில் நல்லாருக்கு கோமதிக்கா//

      நன்றி கீதா

      //1835 லியே கட்டிருக்காங்க!!..அதுக்குப் பிறகு புதியதாகக் கட்டப்பட்டாலும்...அப்போவே உருவாகியிருப்பது ஆச்சரியம்தான்..//

      ஆமாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று தாங்ககள் குடியேறிய இடத்தில் தங்களுக்கு கோவில் அமைத்து வழிபட்டு இருப்பது சிறப்புதான்.

      //ஆச்சரியமான சிறப்பான விஷயம்!//
      தன்னை நம்பியவர்களை காப்பாற்றி அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்.

      நீக்கு
  6. சிங்கப்பூருக்கு சுற்றுலா வரும் அன்பர்கள் லிட்டில் இந்தியாவையும் வீராகாளியம்மனையும் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலையும் தரிசனம் செய்வார்களாம். .//

    ஆமாம்.....

    //கி.பி 1835 ல் இந்தியாவிலிருந்து வந்து வாழ்ந்த தொழிலாளர்களால் கட்டப்பட்டது. தாங்கள் பெற்ற ஊதியத்தை கோவிலின் வளர்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார்கள். //

    ஓ! இப்போது புரிந்ததுகோயில் எப்படிக் கட்டப்பட்டது அங்கு என்று...கோயில் பற்றிய விவரங்களும் தெரிந்தது, கோமதிக்கா.

    //கட்டிடக்கலை சிறப்பாக இருக்கிறது என்றும் தேசிய சின்னமாக போற்றுகிறது. //

    ஆஹா! ஆனால் உண்மைதான் அழகான சிற்பங்கள் கோயில் முழுவதும். எல்லாப் படங்களிலும் பார்க்க முடிகிறது...

    காளி கோயில் என்றாலும் எல்லா தெய்வங்களும் தனித்தனி சன்னதிகளுடன் இருக்காங்களே!!! அத்தனை பேரும் இருக்காங்க ஒரேகோயிலில் அனைவரும்! சிற்பங்கள்தான் மனதைக் கவர்கின்றன. அத்தனையும் பராமரித்துக் காக்க வேண்டும் ஆனால் அங்கு அதெல்லாம் அழகாக நடக்கும்!

    பிரசாதங்கள் ஈர்க்கின்றன.

    கோயில் அழகு என்றால் உங்கள் புகைப்படங்களும் செம, கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரமாகாளியம்மனுக்கு நிறைய வரலாறு இருக்கிறது கீதா. இந்தியாவிலிருந்து அங்கு போன மக்களுக்கும் வரலாறு இருக்கிறது. நான் கொஞ்சம் தான் பகிர்ந்து இருக்கிறேன்.

      //ஆஹா! ஆனால் உண்மைதான் அழகான சிற்பங்கள் கோயில் முழுவதும். எல்லாப் படங்களிலும் பார்க்க முடிகிறது.//
      ஆமாம். காமிரா கொண்டு போகவில்லை சிற்பங்கள் அனைத்தையும் ஜூம் செய்து பார்த்தால் மிக அழகாய் இருக்கும். காணொளியில் நன்றாக தெரியும்.

      ஒரே கோவிலில் அனைத்து சுவாமிகளையு தரிசனம் செய்து விடலாம்.

      நன்கு பராமரிப்பார்கள். படங்கள் ஓரளவுக்கு எடுத்து இருக்கிறேன்.
      பிரசாதங்கள் வாங்கவில்லை, "நாகர்வோவில் ஆரியபவனில்" மதியம் சாப்பிட்டோம்.

      நீக்கு
  7. பேருந்து ரொம்ப அழகாக இருக்கிறது. பொதுவாகவே அங்கு எல்லாம் பெரியவர்கள், கால்வலி உள்ளவர்கள் எளிதாக ஏறும்படி இருக்கும்.

    பேருந்து, மெட்ரோ ரயில் எல்லாம் பயணிக்க சுகமாக இருக்கும்.

    காணொளி பார்த்தேன் கோமதிக்கா, நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேருந்து ரொம்ப அழகாக இருக்கிறது. பொதுவாகவே அங்கு எல்லாம் பெரியவர்கள், கால்வலி உள்ளவர்கள் எளிதாக ஏறும்படி இருக்கும்.

      பேருந்து, மெட்ரோ ரயில் எல்லாம் பயணிக்க சுகமாக இருக்கும்.//
      பேருந்துவிலும், மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்தோம்.

      காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்

      //சிறப்பு.//
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. ஏறத்தாழ நான்கு வருடங்கள் சிங்கப்பூரில் வாழ்ந்திருக்கின்றேன்..

    ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் சிறப்பானது..

    அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும்.. எதிலும் ஒரு ஒழுங்கு காக்கப்படுவதை இங்கே காணலாம்..

    நல்ல பதிவு..
    நலம் தருவாள் அன்னை வீரமாகாளி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் சிறப்பானது..

      அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும்.. எதிலும் ஒரு ஒழுங்கு காக்கப்படுவதை இங்கே காணலாம்..//

      ஆமாம், அன்னையைப்பற்றி படிக்கும் போது சிறப்பு அறிந்து கொண்டேன்.

      எதிலும் ஒரு ஒழுங்கு கடைபிடிக்கும் போது எல்லாம் நன்றாக இருக்கும்.

      //நல்ல பதிவு..
      நலம் தருவாள் அன்னை வீரமாகாளி..//
      அது போதும் அன்னை கை, காலை திடமாக வைத்து இருக்கவேண்டும், நம் வேலைகளை நாம் செய்யும் பாக்கியம் கொடுத்தால் போதும்.


      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. இந்தக் கோவில் கொஞ்சம் நன்றாகவே நம்மூர் வாசனை தெரிகிறது!  சில இடங்களில் மேல் சுவரில் கருப்பாக இருக்கிறது. படங்கள்மூலம் நாங்களும் சுற்றி வந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இந்தக் கோவில் கொஞ்சம் நன்றாகவே நம்மூர் வாசனை தெரிகிறது! //

      நம் மூர் மக்கள் கட்டிய கோவில் தானே!

      //சில இடங்களில் மேல் சுவரில் கருப்பாக இருக்கிறது.//
      அந்த இடத்தில் போக்கஸ் லைட் இருக்கிறது, அதனால் நிழல் விழுந்து கருப்பாக தெரிகிறது சுவர்.

      // படங்கள்மூலம் நாங்களும் சுற்றி வந்தோம்.//

      நன்றி.

      நீக்கு
  11. பஸ் அழகாய் இருக்கிறது.  பீக் அவர் அது இது என்று நெரிசலாய் கூட்டம் நிற்காமல் இருந்தால் சரி!  கடல் கந்துபோன காளியையும் , பெருமாளையும் எங்களையும் தரிசிக்க வைத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஸ் அழகாய் இருக்கிறது. பீக் அவர் அது இது என்று நெரிசலாய் கூட்டம் நிற்காமல் இருந்தால் சரி! //

      சாரின் தம்பி மகள் சொன்னாள் பஸ்ஸில் கூட்டமாய இருக்காது என்று நிறைய பஸ் அடுத்து அடுத்து வருகிறது.

      //கடல் கந்துபோன காளியையும் , பெருமாளையும் எங்களையும் தரிசிக்க வைத்ததற்கு நன்றி.//

      அடுத்த பதிவில் பெருமாள் வருவார். இதில் காளி, ராமர் தான் இருக்கிரார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் வ்ரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வீரமாகாளியம்மன் கோவில் பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக உள்ளது. கோபுர படங்கள் அழகாக உள்ளன. மூலஸ்தான அம்மனையும், இருமரங்களின் நடுவே உள்ள அன்னையையும் தரிசித்துக் கொண்டேன். உங்களால், சிங்கப்பூரிலுள்ள அன்னையையும், அழகான கோபுரங்களையும் கண்குளிர கண்டு கொண்டேன். மற்ற தெய்வங்களின் படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. கோவிலைப் பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன்.

    ஓரிடத்தில் அதுவும் இந்த மாதிரி வெளிநாடுகளில் பல தெய்வங்கள் ஸ்தாபிதம் அடைந்து தன்னருளை அங்குள்ள மக்களுக்கு தந்து வழங்குவதை பார்க்கும் போது நம் மனமும் மகிழ்ச்சி அடைகிறது அல்லவா..? அதுவும் அங்கு சென்று தரிசிக்கும் அருளையும் இறைவன், இறைவி நமக்கு தருவது ஒரு பெருமைக்குரிய விஷயம். உங்களால் நாங்களும் அங்குள்ள கோவில்களின் விபரம் அறிந்து கொண்டு, கடவுளை தரிசிக்கும் பேறு பெற்றோம்.

    அங்குள்ள பஸ் அமைப்பும் நன்றாக உள்ளது. அதில் சென்று நீங்கள் தரிசித்த பெருமாள் கோவில் விபரம் அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நான் இரண்டு நாட்களாக வலைத்தளம் வர இயலவில்லை. என் மகளுக்கு சற்று உடம்பு முடியாமல் போனதினால், மருத்துவரிடம் செல்வது, அவளை கவனித்து கொள்வது என நேரம் போய் விட்டது . அதனால்தான் என் வருகை தாமதமாகி விட்டது. இன்று அவள் இறைவனருளால் நலமாகி உள்ளாள். மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நீங்கள் நலம் என்று அறிந்து மகிழ்ச்சி. உங்கள் மகள் உடல் நலமில்லாமல் மருத்துவரிடம் சென்று வந்தது அறிந்து வருத்தம்.
      அதனால் தான் வலைத்தளம் வரவில்லையா?
      இப்போது இறைவன் அருளால் நலமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி.
      இறைவன் அருளால் பூரண நலம் அடைய பிரார்த்திக்கிறேன்.

      பதிவில் அனைத்தையும் படித்து படங்களை ரசித்து எப்போதும் போல விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. வீரகாளி அம்மனை கண்டு வணங்கினோம்.படங்கள் சிறப்பு.
    மூன்று வருடங்களுக்கு முன்பு தைப்பூச நாளில் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      தை பூச சமயத்தில் தரிசனம் செய்தீர்களா? காவடிகள் மிக சிறப்பாக இருந்து இருக்கும் இல்லையா?
      பழைய நினைவுகள் மனதில் வந்து போய் இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு