விழாவிற்கு வரும் மக்களை உற்சாகப்படுத்த இசை விருந்து.
சுவற்றில் மிக அழகாய் இந்த ஊரின் பேரை வரைந்து இருக்கிறார்கள். இலையுதிர் காலவிழாவை வரவேற்று மக்களின் மகிழ்ச்சியை சொல்கிறது ஓவியம்.
Conyers பழைய நகரம். இந்த இடத்திற்கு இரண்டு முறை போய் வந்தோம் . வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறது. அக்டோபர் 9ம் தேதி போன போது இலையுதிர் கால விழா அக்டோபர் 24 ல் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்கள்.
24ம் தேதி நடப்பதாக அறிவிப்பு பலகை எல்லாம் வைத்து இருந்தார்கள்.
பழைய நகரத்தின் ஊர் அழகு. சினிமா படபிடிப்புக்கள் அடிக்கடி நடக்குமாம் இந்த ஊரில்.
பழைய கடைவீதியை அப்படியே புதுபித்து வைத்து இருக்கிறார்கள்.
இந்த பலூன் அலங்காரத்தில் சிலர் நின்று படம் எடுத்துக் கொண்டார்கள்
நாயை அழைத்து வருபவர்களுக்கு கூடைக்கு பக்கத்தில் இருக்கும் பாத்திரத்தில் நீர், சில இடங்களில் உணவும் வைத்து இருக்கிறார்கள்.
கடையில் பொருள் வாங்கும் பெண்மணி அணிந்து இருந்த தொப்பியில் எட்டுக்கால் பூச்சிகள். கையில் குழந்தை பொம்மை, குழந்தையை தூக்கி கொண்டு வருவது போல் வந்தார்.
ஆடும் குதிரை போல ஆடும் ஏரோபிளேன்
ஆடும் குதிரை
பரங்கி காயில் நாமே வண்ணம் தீட்டி வாங்கி செல்லலாம்.
இருபக்க சுவர்களிலும் ஓவியம் வரைந்து இருக்கிறார்கள்.
கடைத்தெருவில் விற்பனை :- துணியில் செய்த பரங்கி காய்கள் , மண்ணால் செய்த கிறிஸ்மஸ் மரங்கள், பரங்கிகாய்களில் வித வித பொம்மைகள், மற்றும் வித விதமான பழைய கல் டலார்கள், அறுந்து போன மணி மாலைகள் , பழைய கம்மல்களை வைத்து ஒட்டி பிரேம் செய்து இருந்தார்கள். இயற்கை காட்சிகளை படம் வரைந்து கை தையலில் அழகாய் பின்னிய சுவர் ஓவியங்கள் என்று நிறைய விற்பனைக்கு வைத்து இருந்தார்கள்.
மகளை உப்பு மூட்டைபோல் தூக்கி கொண்டு கடைகளை பார்வையிடும் அம்மா
வயதான இருவர் கிறிஸ்மஸ் தாத்தா தம்பதி போல் உடை அணிந்து அமர்ந்து இருந்தார்கள், நிறைய பேர் அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டார்கள்.
தண்ணீர் குழாய் கூட மாடு போல வண்ணம் தீட்டி அழகாய் இருந்தது.
McDonough என்ற இடத்திலும் இலையுதிர் கால விழா நடந்தது அதை பார்க்க போனோம், அது அடுத்த பதிவில்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
எத்தனை அழகான படங்கள்.
முக்கியமாகப் பிடித்தது கிறிஸ்துமஸ் தாத்தா பாட்டி மிகவும்
பிடித்தது,
அடுத்தாற்போல் உடை உடுத்திய செல்லங்களும், பிராமில் வலம் வரும் செல்லங்களும்!!
அருமை. அருமை.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//எத்தனை அழகான படங்கள்.
முக்கியமாகப் பிடித்தது கிறிஸ்துமஸ் தாத்தா பாட்டி மிகவும்
பிடித்தது,//
நன்றி அக்கா. எனக்கும் அந்த தாத்தா, பாட்டியை பிடித்தது.
பிராமில் குட்டி செல்லத்திற்கு தலையில் ரிப்பன் கட்டி பூக்கள் வைத்து இருந்தார்கள்.
மிகவும் அருமையாக வளர்க்கிறார்கள்.
போகும் இடம் எல்லாம் செல்லங்களை தூக்கியும், முதுகில் தொங்கும் பைகளில் வைத்துக் கொண்டு உடன் அழைத்து கொண்டு வலம் வருபவர்கள் முகத்தில் அதிகமான மகிழ்ச்சியை பார்க்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
ஒவ்வொரு படமும் (படைப்பும்) மிகவும் அழகாக இருக்கிறது... மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்களால் நாங்களும் இந்த இடத்திற்குச் சென்று வந்த உணர்வு. படங்கள் வழமை போல சிறப்பாக வந்திருக்கிறது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் அனுபவங்களும் பகிர்வுகளும்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் பாராட்டுக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
ரசிக்கும்படியான படங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா , வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கொலு நகரம் போல் இருக்கிறது என்று சொல்லலாமா!...
பதிலளிநீக்குநல்ல விவரிப்புடன் பதிவு..
வழக்கம் போல அழகான படங்கள்..
வாழ்க நலம்...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி காட்சி அளிக்கும் நகரம்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
//கொலு நகரம் போல் இருக்கிறது என்று சொல்லலாமா!.//
நீக்குஆமாம். அப்படிதான் இருக்கிறது!
ரசனையாக காட்சிகள் படங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான். ரசனையான காட்சி அமைப்புகள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இலையுதிர் கால விழா.. இந்தப் பெயரே நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. புதுப்பித்த கடை வீதிகள் நன்றாக உள்ளது. மக்கள் அனைவரும் அங்கு மிகவும் உற்சாகமாக உள்ளார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்த தாத்தா, பாட்டி அழகாக உள்ளார்கள்.
செல்லங்களுக்கு உடையணிவித்து அழைத்து வருவதும் பார்க்க நன்றாக உள்ளது. மின்சார அடுப்பில் செய்யும் பணியாரங்கள் நம்மூர் குழிப்பணியாரங்களை நினைவுபடுத்துகின்றன. திரு விழா என்றாலே, இப்படி அலங்காரங்கள், தின்பண்டங்கள் என்றிருந்தால்தானே சோபிக்கும். அத்தனைப் படங்களையும், அறியாத செய்திகளையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஅங்கு குளிர் அடுத்த மாதம் ஆரம்பித்து விடும், மரங்கள் தன் இலைகளை உதிர்த்து கொட்டும். சில மரங்களின் இலைகள் நிறமாறி அழகாய் இருக்கும்.
அதிக குளிர் இல்லாமல், இளம் வெயிலை வரவேற்கும் மக்கள். குறைந்த ஆடைகளை இப்போதுதான் அவர்கள் போட முடியும். அதனால இதை மிகவும் வரவேற்கிறார்கள்.
அடுத்தமாதம் குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிய வேண்டும்.
எல்லா படங்களைடும் ரசித்து பார்த்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.
வளர்ப்பு செல்லங்களை அவர்கள் எடுத்து வருவதும் , அழைத்து வருவதும் பார்க்கவே ஆனந்தம்.
//திரு விழா என்றாலே, இப்படி அலங்காரங்கள், தின்பண்டங்கள் என்றிருந்தால்தானே சோபிக்கும்.//
ஆமாம். பஞ்சுமிட்டாய், ஜஸ்கீரீம், உணவு வகைகள், துணிமணிகள், தோடு பாசி, குளிர்கால குல்லாக்கள், ஸ்வெட்டர் என்று நம் ஊர் திருவிழாவை நினைவு படுத்துகிறது.
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.
நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும்படி பதிவு உள்ளது. ஏராளமான படங்கள் அழகு, விஷயத்தைப் புரிந்துகொள்ள வைக்கிறது.
பதிலளிநீக்குநம்ம ஊர் வசந்தோற்சவம் மாதிரின்னு நினைக்கிறேன்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஏராளமான படங்கள்! அதிகமாகி விட்டது. நான் எடுத்து விடுகிறேன் நிறைய என்ன செய்வது? படங்கள் போட்டு செய்தியை சொல்வது எளிதாக இருக்கிறது எனக்கு.
நம்ம ஊர் வசந்தோற்சவம் மாதிரின்னு நினைக்கிறேன்//
ஆமாம். ஒவ்வொரு பருவத்திற்கும் இங்கு விழா வைத்து இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
எல்லாப் படங்களும் அழகு. ரசித்துச் சுவைத்து எடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
இலையுதிர்காலத்துக்கெல்லாம் விழாவா... அட.. நம்மூரில் வசந்தகாலம் ஆரம்பிக்கிறது என்று பண்டிகை கொண்டாடுவார்கள் இல்லை?
பதிலளிநீக்குநம் ஊரிலும் இப்படி ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு கோவில்களில் விழா இருக்கே!
நீக்குநம்மூரில் கோடை விழா, வசந்தோற்சவம் உண்டு.
பழைய நகரத்தில் வீடுகள் அழகாக இருக்கின்றன. நம்மூர் மாரியம்மன் திருவிழா போல எல்லா விற்பனையும் இருக்கிறது. ஜெயண்ட் வீலும் பெரிய அப்பளமும்தான் மிஸ்ஸிங். பணியாரம் கூட இருக்கிறது!
பதிலளிநீக்குபழைய நகரத்தில் பழைய கடைத்தெரு அதை அப்படியே வைத்து இருக்கிறார்கள். பல ஆண்டுகள் ஆன கட்டிடம்.
நீக்குஜெயண்ட் வீல், வைக்க அங்கு இடம் இல்லை இருந்தால் வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பணியாரம் விலை 7 டாலர்.
இலையுதிர்காலம் என்றதுமே எனக்கு சுஜாதாவின் கொலையுதிர்காலம் நினைவுக்கு வந்தது!
பதிலளிநீக்கு//இலையுதிர்காலம் என்றதுமே எனக்கு சுஜாதாவின் கொலையுதிர்காலம் நினைவுக்கு வந்தது!//
நீக்குஎழுத்தை சுவாசிக்கும் உங்களுக்கு அவர் கதை நினைவுக்கு வராமல் இருக்குமா?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்களும் பகிர்வும் வியக்க வைக்கின்றன
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மதுரை பக்கம். தெருவோரம் மற்றும் திருவிழா கடைகளில் பணியாரம் விற்பது போல இங்கும் விற்கிறார்கள் விழாவில்.//
பதிலளிநீக்குகோமதிக்கா நானும் அதைத்தான் நினைத்தேன் அட குழிப்பணியாரக் கல் போல இருக்கிறது என்று. நீங்களும் சொல்லிருக்கீங்க.
எல்லாப்படங்களும் செமையா இருக்கு.
ஆமாம் இதை அவர்கள் ரொம்ப மகிழ்ந்து கொண்டாடுவார்கள். கல்ஃபோர்னியாவில் பூண்டும் கூட குவிந்து ஃபேர் நடக்கும் பரங்கிக்காய் போல அதுவும். தாங்க்ஸ் கிவிங்க், ஹாலோவீன், இதை எல்லாம் பார்க்கும் போது நம்மூர் போலத்தான் கிட்டத்தட்ட.
படங்கள் எல்லாம் அட்டகாசம். நன்றாக இருக்கிறது கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அட குழிப்பணியாரக் கல் போல இருக்கிறது என்று. நீங்களும் சொல்லிருக்கீங்க.//
ஆமாம்., வடையும், பணியாரமும் எப்போதும் கிடைக்கும் ஊர் மதுரை.
//எல்லாப்படங்களும் செமையா இருக்கு.//
நன்றி.
//கல்ஃபோர்னியாவில் பூண்டும் கூட குவிந்து ஃபேர் நடக்கும் பரங்கிக்காய் போல அதுவும். தாங்க்ஸ் கிவிங்க், ஹாலோவீன், இதை எல்லாம் பார்க்கும் போது நம்மூர் போலத்தான் கிட்டத்தட்ட.//
தகவல்களுக்கு நன்றி.
படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பழைய ஊர் படப்பிடிப்பும் நடக்கும் என்று போட்டிருக்கும் அந்த கொலாஜ் ஃபோட்டோவில் படங்கள் ரொம்ப அழகாக இருக்கிறது ஊர்.
நீக்குகீதா
ஆமாம் கீதா , நாங்கள் போன முதல் நாள் ஒரு படிபிடிப்பு நடந்து இருக்கிறது.
நீக்குகுழிப்பணியாரம் நன்றாக இருக்கு நம்ம ஊர் அப்பம் போல. நம் ஊர்களிலும் கோயில்களில் ஒவ்வொரு பருவ மாற்றத்துக்கும் விழா உண்டே! மக்கள் மனம் எங்கும் ஒரே மாதிரித் தான் சிந்திக்கிறது இல்லையா? அவரவர் அலங்காரங்கள், மொழி, பழக்க வழக்கங்கள், சாப்பாடு ஆகியவை மாறினாலும் அடிப்படை மாறுவது இல்லை.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//குழிப்பணியாரம் நன்றாக இருக்கு நம்ம ஊர் அப்பம் போல.//
பார்க்க நம் அப்பம் போலதான் இருக்கிறது.
//நம் ஊர்களிலும் கோயில்களில் ஒவ்வொரு பருவ மாற்றத்துக்கும் விழா உண்டே! மக்கள் மனம் எங்கும் ஒரே மாதிரித் தான் சிந்திக்கிறது இல்லையா? //
ஆமாம். அந்த அந்த நாட்டுக்கு உள்ள பழக்க வழக்கங்களை கடைபிடித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
எல்லாப் படங்களும் செல்லங்கள் சேர்த்து நன்றாக இருக்கின்றன. நீங்கள் படங்கள் எடுக்கும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதைப் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எங்கள் பெண் படம் எடுக்க விடமாட்டாள். அவங்களோட சுதந்திரம்/தனிமை கெட்டுவிடும் என்பாள். கிறிஸ்துமஸ் தாத்தா/பாட்டி அழகு.
பதிலளிநீக்கு//நீங்கள் படங்கள் எடுக்கும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதைப் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது.//
நீக்குநான் படம் எடுக்கும் போது மகிழ்ந்து போய் அதன் குறும்புகளை சொன்னார்கள்.
அவர்கள் அனுமதியுடன் தான் நான் படம் எடுத்து இருக்கிறேன்.
//கிறிஸ்துமஸ் தாத்தா/பாட்டி அழகு.//
எல்லோரும் அவர்கள் இருவருடம் படம் எடுத்துக் கொண்டார்கள்.
அடுத்ததற்குப் பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குமுடிந்த போது வாங்க .
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குமுக்குழி பணியாரம் சுடுவது போலத்தான் இருக்கிறது.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//முக்குழி பணியாரம் சுடுவது போலத்தான் இருக்கிறது.//
ஆமாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.