பசுமை நடையின் 100 வது பயணம், தொல்லியல் விழாவாக நடந்தது. 10 .2. 2019 ம் தேதி. கீழ்க்குயில்குடி சமணர் மலையில். மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் பத்து கி.மீ தொலைவில் சமணர் மலை அமைந்துள்ளது. காலை 6.30க்கு ஆரம்பித்தது விழா. மாலை 3.30 மணியிலிருந்து மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கக் கலை அரங்கத்தில் இரவு 9 மணிவரை நடந்து நிறைவு பெற்றது.
முதலில் இந்த விழா இரண்டு மூன்று முறை தேதி மாற்றப்பட்டதாம். ஆனால் விழாவிற்கு அழைத்த அன்பர்கள் மாற்றப்படவில்லை அவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புச் செய்து இருக்கிறார்கள்.
நான் எப்போது 100வது நடைப்பயணம் வரும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று நடைப்பயணத்தில் கணுக்கால் வலியால் கலந்து கொள்ள முடியவில்லை. முகநூல் சகோதரி மீரா பாலாஜி அவர்கள் சொன்ன வைத்தியத்தைப் பின்பற்றினேன். அதனால் கால்வலி குறைந்து வருகிறது. அவருக்கு நன்றி.
ஆண்டவன் சித்தம் நானும் இந்த 100வது நாள் விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து இருக்கிறார்.
இந்தப் பதிவில் சமணர் மலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பகிர்கிறேன்.
ஐயனார் கோவிலும் தாமரைத் தடாகமும் அழகாகக் காட்சி அளிக்கும் கீழக்குயில்குடி
தாமரை இலைகள் தான் தடாகம் முழுவதும்
தாமரை மலர்கள் ஒன்று இரண்டுதான் இருந்தது.
தடாகத்திற்குத் தண்ணீர் வரத்து இருக்கிறது.
ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் வேப்பமர நிழலில் இருக்கிறார்.
பசுமை நடையின் இளைஞர் படை, வழி எங்கும் விழாத் தோரணங்களைக் கட்டிக் கொண்டு இருக்கிறது, வித விதமான தோரணங்கள்.
மலைக்குப் போகும் இடமெல்லாம் அவர்களின் பசுமைநடைத் திருவிழாத் தோரணங்கள் அலங்கரித்தன.
போகும் வழி எல்லாம் மரங்களும், மலைகளும் அழகு செய்தன. படங்கள் தனியாக இரண்டு , மூன்று பதிவில் போட வேண்டும்.
இதுபோல் இன்னும் இரண்டு பங்கு படிகளில் ஏறிப் போனால் குகை போன்ற பகுதி காணப்படுகிறது. குகையின் வெளிப்பக்கம் புடைப்புச்சிற்பமாக மகாவீரர் சிலை செதுக்கப்பட்டு இருக்கிறது. அழகான முக்குடையின் கீழ் மகாவீரர் நீண்ட காதுகளுடன் இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ மூன்று சிம்மங்களின் மேல் இருக்கும் ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறார். இந்த இடத்திற்கு பெயர் "செட்டிப்புடவு"
குகைகுள் இடது பக்கம் ஐந்து சிற்பங்கள் இருக்கிறது. முதலிலும், கடைசியிலும் தேவர்கள் இருக்கிறார்கள். முக்குடைக்குக் கீழே அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் உருவமும் செதுக்கப்பட்டு இருக்கிறது. முதலில் உள்ள தேவர் யானை மீது அமர்ந்து போருக்குத் தயார் நிலையில் இருப்பது போல் இருக்கிறது அவரின் பெயர் கொற்றாகிரியா. இந்தச் சிற்பங்களுக்குக் கீழ் இந்த சிலையைச் செய்து கொடுத்தவர்கள் பேர் வட்டெழுத்தில் உள்ளது.
காலை நேரம் மழை மேகமாய் இருந்தது. குகைக்குள் இருட்டாக இருந்தது. பசுமை நடையைச் சேர்ந்த இளைஞர் அணி முன்பே போய் குகைக்குள் சுத்தம் செய்து சிலைகளைப் பார்க்க ஏதுவாகத் தண்ணீர் விட்டுச் சுத்தப்படுத்தி வைத்து இருந்தார்கள். அதனால் தெரிந்தது.
கடைசியில் உள்ள சிலையின் இரு புறமும் சேடியர் இருக்க இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் இருக்கிறது. அவர் பெயர் அம்பியா.
முன்பு இங்கு வந்தபோது ஒவ்வொன்றையும் நன்கு விளக்கிச் சொல்லி இருப்பார்கள். நாங்கள் முதன் முறை, அதனால் கேட்டுத் தெரிந்து கொண்டோம். இந்த முறை அங்கு குகைக்கு வெளியே இரு புத்தகங்கள் வெளியிடும் விழா நடந்தது . அதனால் மீண்டும் சிலைகளைப் பற்றிப் பேச வில்லை. மாலை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் விழா ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. .
குகை வாசலில் முதலில் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார்கள். அப்புறம் தொல்லியல் பேராசிரியர் சொ. சாந்தலிங்கம் உரையாற்றினார். அவர் சொன்ன செய்திகள் அடுத்த பதிவில்.
அடுத்த பதிவில் யார் யார் வந்து இருந்தார்கள் என்ன புத்தகம் வெளியிடப்பட்டது என்ற விவரங்கள் வரும்.
அய்யனார் கோவில் - அங்கு கோவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிக அழகாய் இருந்தது, தச அவதாரக் காட்சிகள், சிவனின் லீலைகள் எல்லாம் அழகாய் இருந்தது.
அதன் பின்புறம் தெரியும் மலை மேல் என்ன இருக்கிறது என்பது பற்றியும், தாமரைத்தடாகம் பற்றியும், அதில் உள்ள மீன்கள் பற்றியும் அடுத்த பதிவில்.
அங்கு நடந்த விழா நிறைவில் செவிக்கு உணவு கொடுத்த பின் வயிற்றுக்கும் உணவு கொடுத்தார்கள் சர்க்கரைப் பொங்கலும், வெண்பொங்கலும். வீட்டுக்கு விருந்தினர் வந்தால் எப்படி உபசரிப்பார்களோ அப்படி அன்புடன் சாப்பிட அழைத்துத் தந்தார்கள் . உணவு சுவையாக இருந்தது.
நான் பசுமை நடையில் 8 நடைகள் கலந்து கொண்டு இருக்கிறேன்.
இதற்கு முன் போன கீழடி அகழ்வாராய்ச்சி, அதற்கு முன் போன கொங்கர்புளியங்குளம், கீழவளவு மூன்றும் டிராஃப்டில் இருக்கிறது இன்னும் போடவில்லை .
விரைவில் போட வேண்டும். தம்பி மகள் திருமணம் வருகிறது 17 ம்தேதி. 15 முதல் உறவுகள் வர ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் நேரம் கிடைக்கும்போது போடுகிறேன்.
குகைக்கு போகும் வழியில் எறும்புகள் இலைகளை ஒன்று சேர்த்துக் கூடு கட்டிக் கொண்டு இருந்தன. இறைவன் படைப்பில் அதிசயங்கள் எங்கள் மாமியார் வீட்டு வாசலில் உள்ள புங்க மரத்தில் இந்த எறும்பு கட்டிய கூட்டைப் படிப் படியாக போட்டோ எடுத்துப் பதிவு போட்டு இருந்தேன் 2014 ம் வருடம் மே மாதம் போட்ட பதிவு- படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம். இந்தப் பதிவின் கடைசியில் இப்படி எழுதி இருந்தேன்:-
// சின்ன வேலையில் இடைஞ்சல் வந்தால் எவ்வளவு கோபம், எவ்வளவு மனத்துயர் படுகிறோம். எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின் வாழ்வில் வெற்றி நிச்சயம்! //
கூட்டு முயற்சியின் வெற்றிக்கு எறும்புகள் சரியான எடுத்துக்காட்டு இந்த எறும்புகள் இடையில் ஏதாவது இடைஞ்சல் வந்தாலும் மீண்டும் வழிதடத்தைக் கண்டு பிடித்து மீண்டும் தன் வேலையைச் சிறப்பாக செய்யும்.
அது போலதான் இந்த பசுமை நடையை நண்பர்கள் குழுவுடன் ( 30 பேருடன்) ஆரம்பித்தவர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள். எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்புமாகத் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு 9 வருடமாய் இந்த பசுமைநடையை ஆரம்பித்து நடத்தி 100 வது நடை வரை வந்து இருக்கிறார்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சியைச் சொல்வதுபோல் அவர் முதல் நடை ஆரம்பித்த இடம் இதுதான், அதே இடத்தில் 100வது நடை நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த இடத்தில் இந்த எறும்புக் கூடு கட்டிக் கொண்டு இருப்பது பொருத்தமாய்த் தோன்றியது எனக்கு.
வாழ்த்துவோம்! பசுமை நடையின் 100வது பயணத்துடன் முடிந்து விடாமல் மீண்டும் இந்தப் பயணம் தொடர வேண்டும் என்பது தான் வந்து இருந்த சிறப்பு விருந்தினர்கள், நடையில் கலந்து கொள்பவர்கள் எண்ணம். அது இறைவன் அருளால் தொடர வேண்டும்.
வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------
பசுமை நடை குழுவினருக்கு வாழ்த்துகள். தங்கள் பதிவும் படங்களும் சமணர் மலையை நேரில் பாரத்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது,
பதிலளிநீக்குவணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநலமா? உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பசுமை நடை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். படங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.
சரியான முகூர்த்த தினத்தில் நடந்ததால் வர முயன்றும் வர இயலவில்லை ...
பதிலளிநீக்குஉங்கள் பதிவு ஒரு ஆறுதல்
வணக்கம் Kasthuri Rengan, வாழ்க வளமுடன்.
நீக்குநலமா? வெகு நாட்கள் ஆகி விட்டது உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர்கள் முன்பு ஒரு முறை பத்திரிக்கை எல்லாம் அடித்து கொடுத்து விட்டார்களாம்,
நிறைய காரணங்களால் விழா தேதி மாற்றி மாற்றி அமைக்கப் பட்டு இருக்கிறது. தை கடைசி இல்லையா? முகூர்த்த நாள் என்பதால் விழாவிற்கு 400க்கு மேல் வந்தார்கள் அவர்கள் 800 பேர் எதிர்ப்பார்த்தார்கள்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ஓ கோமதி அக்கா, நடப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லதுதானே, 100 ஆவது நாளில் கலந்து விட்டீங்கள் பிறகென்ன வாழ்த்துக்கள். அதிக தூரம் நடக்க வேண்டி இருக்குமோ? ஒவ்வொரு தடவையும். அந்த மலையை ஏறிமுடிச்சீங்களோ? உச்சியில் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே கோயில் கீழேதானே இருக்கு.
பதிலளிநீக்குஆமாம் அதிரா, நடப்பது மனதுக்கும், உடலுக்கும் நல்லதுதான். அதுவும் இது போன்ற இயற்கை சூழ்ந்த இடத்தில் நடப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.
நீக்குநான் இந்த சமணமலையை அடைந்தவுடன் தூரத்தில் தெரிந்த கோவில், மலையைப் பார்த்தவுடன் அங்கு இருந்தவரிடம் கேட்டக் கேள்வி அந்த மலை மேலா விழா என்று?
இன்று அங்கு போகவில்லை அம்மா, நீங்கள் போக வேண்டும் என்றால் கீழே நடக்கும் விழா முடிந்த பின் போய் வாருங்கள், அரைமணி நேரம் ஆகும் என்றார்கள். நாங்கள் ஏறி போய் பார்த்தோமா? அங்கு என்ன இருந்தது எல்லாம் வரும் பதிவுகளில் வரும்.
வித்தியாசமான கோயில் அமைப்பு, வாசலில் இருப்போர் சூரனைப்போல தெரிகின்றனர்:).
பதிலளிநீக்குஆஹா எந்தப் பெரிய தாமரைக் குளம், என்னா அழகாக இருக்கு.. பூக்கள் இல்லாவிட்டாலும் தாமரைக்குளம் எனும் பெயர் கேட்டாலே அழகுதானே.
சமண மலைகளில் நிறைய இடங்களில் அய்யனார் உண்டு, இது போன்ற சிலைகள் உண்டு. கோவில் பதிவில் இவர்களின் படம் வரும் பக்கத்தில்.
நீக்குதாமரைக்குளம் அழகு. மீன்கள் அழகு. ஒரு நாள் முழுவதும் ஒதுக்கிப் பார்க்க வேண்டிய இடம். வழி நெடுக பாறைகள் வித விதமாய் தோற்றம் அளிக்குது, ஆலமரங்கள் அழகாய் இருக்கிறது. குளத்து நீர் எடுத்து பொங்கல் வைக்கிறார்கள். நாங்கள் போன போது குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க வந்து இருந்தார்கள். நல்ல வேளை கடா வெட்டு இல்லை. அவர்கள் சொல்லிக் கொண்டார்கள் நிறைய முகூர்த்தங்கள் அதனல் உறவினர்கள் வரவில்லை என்று. 10 பேர் கொண்ட கூட்டம் இருந்தது.
சமணர்கள் நீர் இருக்கும் இடத்தில் அமைதியான அழகான இடத்தில் தான் இருந்து இருக்கிறார்கள், அவர்கள் இருக்கும் இடமெல்லாம் தாமரைக்குளம் இருக்கும்.
மலையும் கோயிலும் குளமும் ஒருங்கே வரும்படி படமெடுத்திருப்பது மிக அழகு. இன்னும் கொஞ்சம் கமெராவை உயர்த்தி முழு மலையும் தெரியும் வண்ணம் எடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்குஅய்யனார் கோவிலும், குளமும் வரும்படி எடுத்த படம்.
நீக்குமலையைப் பற்றி எழுதும் போது மலை வரும். தனித்து எடுக்க முடியாத தோற்றம் மலைக்கு
பாதையைப் பார்த்தால் கருங்கல்லாக இருக்கு.. வழுக்கிவிடும்போல தெரியுது கவனமாக நடக்கோணும், ஸ்பீட்டாக நடக்க முடியாதென நினைக்கிறேன். தோழில் பாக் குடன் ஏறுவது மாமாவோ?
பதிலளிநீக்குசிலை உருவம்.. புத்தரைப்போலவும், அப்பரைப்போலவும் இருக்கே..
நீங்கள் சொல்வது போல் கவனமாய் நடக்க வேண்டும். கல் சமமாய் இல்லை, கல் மேடாக, பள்ளமாக இருந்தது. ஏறுவது மாமாதான்.
நீக்குமகவீரர், புத்தர் எல்லாம் காது வளர்த்து இருப்பார்கள். அப்பர் காது வளர்த்து இருக்க மாட்டார், காதில் உத்திராட்ச குண்டலம் அணிந்து இருப்பார்.
//அவர் பெயர் அம்பியா.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா இதுதான் பின்னாளில் அம்பிகா ஆச்சோ..
ஆஹா பொங்கல் சட்னி சாம்பாறு.. பார்க்க சூப்பராக இருக்கு.
நிறைய பேர்கள் சமணம் , புத்தம் மதத்தில் இது போல் இருக்கிறது. பின்னால் பார்ப்போம்.
நீக்குபார்க்க சுவைக்க இனிமை.
//தம்பி மகள் திருமணம் வருகிறது 17 ம்தேதி. 15 முதல் உறவுகள் வர ஆரம்பித்து விடுவார்கள்.//
பதிலளிநீக்குஓ அப்போ திரும்படியும் கோமதி அக்கா காணாமல் போயிடப்போறீங்க.. நன்கு என்சோய் பண்ணி வாங்கோ.. உங்கள் மகன் குடும்பம் வருகிறார்களோ வெடிங் க்கு..
கணவரின் சகோதரர்கள், மற்றும் என் பெரியப்பா மகன் குடும்பத்துடன் வருகிறார்கள்.
நீக்குஎன் மகன் குடும்பம் வரவில்லை.
ஓ என் சின்ன வயதை நினைவு படுத்திப்போட்டீங்க.. மாமர எறும்பைப் போட்டு.. அவற்றை நாங்கள் “முசுறு” என்போம்:)) இந்த முசுறு வகைதான் இப்படி கூடுகட்டும் மர இலைகளில்.. ஆனால் கடிக்கும் பொல்லாதது:).
பதிலளிநீக்குபசுமை நடையின் நடைப்பயணம் தொடரவும், அதில் நீங்கள் இருவரும் நலமோடு எப்பவும் கலந்து கொள்ளவும் இறைவனை வேண்டுகிறேன்.
அதிரா சுட்டி கொடுத்து இருந்தேன் படித்தீர்களா?
நீக்குநீங்கள் சொல்லும் முசுறு கடித்தால் பல மணி நேரம் வலிக்கும், தேள் கொட்டுவது போல் இருக்கும். அதுவும் எங்கள் அத்தை வீட்டு வேப்பமரத்தில் இருக்கும் அது கூடு கட்டி இருப்பதையும் போட்டு இருக்கிறேன். இது தேன் எறும்பு இது கடிக்காது மரத்து அடியில் போய் பக்கத்தில் அது கூடு கட்டுவதை படம் எடுத்தேன், கடிக்கவில்லை.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
பசுமை நடை நூறாவது நிகழ்வுக்கு அந்தக்குழுவினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். இளைஞர்கள் தன்முனைப்புடன் அங்கு சேவை புரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. குகைகளை சுத்தம் செய்து, உள்ளே சிற்பங்களையும் பார்க்கும் வண்ணம் ஏற்பாடு செய்து.... பாராட்டுக்குரிய செயல்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குஎந்த ஒரு இயக்கமும் வளர வேண்டும் என்றால் சேவை மனபான்மை உள்ளவர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் முடியும். அது இந்த குழுவில் உள்ளவர்களிடம் நிறைய இருக்கிறது. எல்லோரையும் வரவேற்பது, உதவி செய்வது எல்லாம் பாராட்டுக்குரிய செயல்தான். அதுவும் வயதானவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையும், கவனிப்பும் மிக மிக பாராட்டுக்குரிய விஷயம்.
முதல் இரண்டு படங்களை பார்க்கும்போது அந்தக் குன்றின் மீது எப்படி ஏறுவது என்கிற மலைப்பு வருகிறது. எவ்வளவு நேரம் பிடிக்கும்? நான் இந்த இடங்கள் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குஸ்ரீராம், இந்த மாதிரி நிறைய இருக்கிறது இடங்கள். அவ்வளவு இடங்களுக்கும் இவர்கள் அழைத்து சென்று இருக்கிறார்கள் 9 ஆண்டுகளாக.
நீக்குகுன்றின் மேல் எப்படி ஏறுவது என்ற மலைப்பு தான் ஏற்படும். ஏற 30 நிமிடம் ஆகும். என்றார்கள்.
தம்பி மகள் திருமணத்துக்கு வாழ்த்துகள். உறவுகளைச் சந்திப்பதிலும் அளவளாவுவதிலும் நேரம் போவது தெரியாது.
பதிலளிநீக்குஸ்ரீராம் நீங்கள் சொல்வது போல் உறவினர்களை சந்திப்பது, உரையாடுவது மகிழ்ச்சி தரும் விஷயங்கள் தான்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
பழைய எறும்பு பதிவை மீண்டும் படித்தமைக்கு நன்றி.
நூறாவது நடைப்பயணத்துக்கு வாழ்த்துகள். நீங்கள் எழுதும் முன்னரே இந்த 100 ஆம் நடைப்பயண விழா பற்றிய குறிப்பை எதிலோ படித்துவிட்டு உங்களைத் தான் நினைத்துக்கொண்டேன். போய் வருவீர்கள் என எண்ணினேன். கலந்து கொண்டு விழா பற்றிய குறிப்புகள் மட்டுமில்லாமல் அழகான படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி. ஐயனார் கோயிலும் அதன் சுற்றுவட்டாரமும் அழகு. மலையைப் பார்த்தால் கொஞ்சம் திருப்பரங்குன்றம் சாயலில் இருக்கு. இப்போத் திருநெல்வேலி போகையில் திருப்பரங்குன்றம் மலையைக் கடக்கும்போது எல்லாம் உங்களை நினைத்துக்கொண்டேன்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குமுகநூலில் நிறைய பேர் பசுமைநடை 100வது விழாவிற்கு அழைத்து இருந்தார்கள்.
நான் போய் வந்த பின் வாழ்த்து சொல்லி இரண்டு பதிவு முகநூலில் போட்டு இருந்தேன். நீங்கள் லைக் செய்து இருந்தீர்கள்.
மலைகள் எல்லாமே திருப்பரங்குன்றம் சாயல்தான்.
என்னை நினைத்து கொண்டது மகிழ்ச்சி.
மலைப்படிகள் அதிக உயரமாக இல்லை என்றாலும் என்னால் ஏறமுடியுமா என்பது சந்தேகமே! எங்களுக்கும் இம்மாதிரிப் பயணங்களில் ஆவல், போகணும்னு நினைச்சாலும் போக முடியறதில்லை. உங்கள் ஒருங்கிணைப்பாளர் அழகாக ஏற்பாடுகள் செய்து அழைத்துச் செல்கிறார். மனதுக்கு நிறைவாய் உள்ளது. குகைக்குள் சிற்பங்கள் தெரியும் வண்ணம் சுத்தம் செய்திருப்பதும் பாராட்டத்தக்கது. அடுத்தடுத்துப் போட நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறீர்கள். காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநான் போட்டு இருக்கும் இருக்கும் படிகள் உள்ளது மலையின் தெற்கு புறம் உள்ளது.
நீக்குமலை மேல் உள்ளது வேறு மாதிரி இருக்கும்.
பசுமை நடை ஒருங்கிணைப்பாளர்களை பாரட்டவேண்டும் தான்.
மழை பெய்தால் முன்பே போய் அங்கு போக முடியுமா என்பதை எல்லாம் பார்த்து வந்த பின்னரே அழைத்து செல்வார்கள்.
முன்பே போய் அமருவதற்கு அந்த இடத்தை சுத்தம் செய்வது , சாப்பாடு கொடுப்பதற்கு இடத்தை சரிப்பார்ப்பது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள் மலர்ந்த முகத்துடன். ஆவலுடன் காத்து இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த முறை சந்திப்பு இடம் எல்லாம் போட்டு எல்லோரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்ல வில்லை. எல்லோரையும் சமணமலைக்கு வந்து விடுங்கள் என்று அழைப்பு அனுப்பி விட்டார்கள்.
நீக்குஅழைப்பும் பழைய முகவரிக்கு போய் விட்டது. என் அண்ணி அதை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி வைத்தார்கள். அது மூலம் வழி விசாரித்து போய் விட்டோம்.
அவர்கள் "விருட்சத்திருவிழா", "பாறைத் திருவிழா" என்று முன்பு நடத்தி இருக்கிறார்கள் . அதனால் எல்லோருக்கும் தெரியும் வந்து விடுவார்கள் என்று அவர்கள் முன்பே போய் விட்டார்கள், அங்கு விழா ஏற்பாடுகளை செய்ய வேண்டுமே!
எல்லோர் வரவுக்கும் காத்து இருந்தால் வேலைகள் தடைபடும் இல்லையா?
தம்பி மகள் திருமணத்துக்கு வாழ்த்துகள். உறவினர் வருகையும் மகிழ்ச்சி தரக்கூடியது. எல்லாம் முடிந்து விரைவில் பதிவுலகம் வந்து அடுத்த பதிவுகளைத் தாருங்கள். எல்லாம் அறிவு சார்ந்த பதிவுகள். நல்ல விபரங்களைத் தாங்கி வருகின்றன. பலவும் அறியாத செய்திகள். அறியத் தருவதற்கு நன்றி.
பதிலளிநீக்குதம்பி மகள் திருமணத்திற்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி.
நீக்குநீங்கள் சொன்னது போல் உறவினர் வருகையும் மகிழ்ச்சி தரக்கூடியது தான் .
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.
பசுமை நடையினரின் முயற்சி அரிதானது, பாராட்டத்தக்கது. வரலாற்றிற்கு அவர்களுடைய பங்களிப்பானது மிகவும் சிறப்பானது. அதனை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல் வரலாற்றிற்கு அவர்கள் பங்களிப்பு மிகவும் சிறப்பானது தான்.
உடல் உழைப்பு, பணம் செலவு , இதையெல்லாம் தாண்டி சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற அவர்களின் எண்ணத்திற்கு அவர்களை பாராட்டவேண்டும்.
தங்கள் நேரங்களை நல்லவழியில் செலவு செய்யும் இளைஞர்களை பாராட்டி மகிழ வேண்டும்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
100 பசுமை நடைகளே ஒரு சாதனைதான்
பதிலளிநீக்குதொடரட்டும்
பசுமை நடையை வெகுவாக ரசித்தேன்... இதை ஆர்கனைஸ் செய்பவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பதிலளிநீக்குகால்வலிக்கு என்ன வைத்தியம்? எனக்கு 7-8 மாதங்களாக பாத வலியினால் எப்போதும் எம்சிபி செருப்புடனேயே இருக்கவேண்டியிருக்கு.
கல்லில் புடைப்புச் சிற்பங்கள் மிக அருமை.
எனக்கும் தொல்லியியல் அறிஞர்களின் உரையைக் கேட்க மிகுந்த ஆசைதான்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
நீக்கு//இதை ஆர்கனைஸ் செய்பவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//
ஆமாம் நெல்லை, எவ்வளவு பாராட்டினாலும் தகும் அவர்களுக்கு.
கால்வலி வைத்தியத்தை தனி பதிவாக போடலாம் என்று நினைத்தேன். மீராவுக்கு நன்றி சொல்வது போல் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன். வலை உலக நட்புகளால் ஏற்படும் நன்மைகள் இவற்றை சொல்லலாம் என்று இங்கு குறிப்பிடவில்லை.
கடுகு எண்ணெய்யில் பூண்டை தட்டிப்போட்டு சூடு செய்து மிதமான சூட்டில்
வலி உள்ள இடத்தில் தேய்க்க சொன்னார்கள்.
தினம் தினம் புதிதாக எண்ணெய் சூடு செய்ய வேண்டும். என்றார்கள். அது முக்கிய குறிப்பு.
நான் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் இரண்டு பல் பூண்டு போட்டு காய்ச்சி தேய்கிறேன் அப்படியே வெந்நீரில் குளித்து விடுவேன்.
உங்களுக்கு பூண்டு வாடை பிடிக்காது அல்லவா?
வைத்தியம் அதனால் செய்து பார்க்கலாம்.
வைஷ்ணவி தேவி கோவிலுக்கு நடந்து போய் விட்டு வரும் வழி எல்லாம் கடுகு எண்ணெய் வைத்துக் கொண்டு நிறைய பேர் உட்கார்ந்து இருப்பார்கள் கால்களில் தேய்த்து விட பார்த்து இருக்கிறேன்.
ஆனாலும் மீராபாலாஜி சொன்ன பிறகுதான் செய்து பார்க்க தோன்றியது.
வெந்நீரில் கல் உப்பு போட்டு ஓரு பாத்திரத்திலும், இன்னொரு பாத்திரம் பச்சை தண்ணீரும் வைத்துக் கொள்ளுங்கள். வெந்நீர் உள்ள பாத்திரத்தில் கொஞ்ச நேரம், அப்புறம் பச்சை தண்ணீரில் கொஞ்ச நேரம் வைத்து இருக்க வேண்டும். இந்த வைத்தியம் எனக்கு குதிங்கால் வலி இருந்த போது மருத்துவர் சொன்னது.
இப்போதும் வெகு தூரம் நடந்தால் நிறைய நிற்க நேர்ந்தால் வலி வரும் அப்போது இந்த பாதக் குளியல் செய்து கொள்வேன்.
அப்புறம் என் உடல் முழுவது தாங்கி கொண்டு இருக்கிறாயே என்று அதற்கு நாள்தோறும் நன்றி சொல்லி கொஞ்சம் பிடித்து விடுவேன் அன்பாய். நம் காலை நாம் பிடித்து நன்றி சொன்னால் நல்லது தானே!
செய்து பாருங்கள், உங்கள் கால்வலி விரைவில் குணமாக வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.
நன்றி கோமதி அரசு மேடம். வெந்நீரில் பாதங்களை வைக்கிறேன். உடனே குளிர் நீரில் - ? - செய்துபார்க்கிறேன்.
நீக்குவெந்நீர், தண்ணீர் மாற்றி வைக்க வேண்டும்.
நீக்குபசுமை நடையின் 100வது பயணம் மென்மேலும் தொடர்ந்து பல சாதனைகள் படைக்கும் அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.
பசுமை நடை 100வது நிகழ்வுக்கு வாழ்த்துக்கள் அக்கா .
பதிலளிநீக்குஇந்த படங்களையும் இடங்களையும் பார்க்கும்போது எனக்கும் ஆசையா இருக்கு அந்த இடங்களில் நடக்கணும்போல .தாமரைக்குளமும் அந்த சில மலர்களும் அழகு .
மீரா பாலாஜி எனக்கும் முன்பு நான் முகப்புத்தகத்தில் இருந்தப்போ நட்பு .ஒருமுறை வேறொருவருக்கு என் பக்கம் வந்து இருமலுக்கு ஒரு கைமருந்து சொன்னார் அதை நான் குறித்து வைத்து இன்னமும் எங்க வீட்டில் யூஸ் பண்றேன் ..மிக்க சந்தோசம் உங்களுக்கு வலி குறைந்ததில் .
வாழை இலை வைத்திருப்பது கம்போஸ்ட்டபிள் பனை ஓலை தட்டா அக்கா ..?
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏஞ்சல், மலை அழகு, மரங்கள் சூழ்ந்த பகுதி இவைகளை பார்கக பார்க்க பரவசமாய் இருக்கும்.
மீரா பாலாஜிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். மிகவும் வேதனையாக வேறு எதையும் சிந்திக்க முடியாது இருந்த வலியை குறைத்து இருக்கிறார்.
வலியை முற்றிலும் போக்கி விடவேண்டும். நாம் கொஞ்சம் நாள் பூர உழைக்கும் கால்களை கவனிக்க வேண்டும்.
வாழை இலை வைத்து இருக்கும் தட்டு பாக்கு மரத்தட்டு.
உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.
பசுமையை நடையை வாழ்த்தியதற்கு நன்றி ஏஞ்சல்.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபசுமை நடையின் 100 ஆவது பயணம் சிறப்பாக நடந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. அதுவும் தொல்லியல் விழாவாக நடைப்பெற்று அதில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதை குறித்து மிக்க மகிழ்ச்சி. சமண மலையும், கீழேயிருக்கும் தாமரை தாகமும் அய்யனார் கோவிலும் அழகாக உள்ளது. படங்கள் அத்தனையும் அழகு. மலையிலிருக்கும் புடைப்பு சிற்பங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மிகவும் ரசித்தேன்.
பதிவில் இடையில் குறிப்பிட்டிருந்த எறும்புகளின் விடாமுயற்சி பதிவையும் படித்தேன். சுறுசுறுப்புக்கு நாம் எறும்புகளைதானே உதாரணமாக சொல்வோம். மண்ணை கிளறி விட்டு அதன் அடியில் புற்றுகளை அமைத்துக் கொள்ளும் எறும்புகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த எறும்புகள் மர இலைகளை மடித்துக் கொண்டு எவ்வளவு அழகாக கூடுகள் கட்டிக் கொள்கின்றன. அதை அழகாக படமெடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய தங்களது பொறுமையையும், விடாமுயற்சியும் எண்ணி வியக்கிறேன். தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
தாங்கள் கால் வலியுடன் எப்படியோ இது போன்ற பசுமை நடையில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு எங்களுக்கும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள பதிவாக இட்டமைக்கும் மனமார்ந்த நன்றிகள். தங்கள் பதிவின் மூலமாகத்தான் இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்கிறேன். தாமத வருகைக்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
நீக்குபசுமைந்டையின் 100வது விழா சிறப்பாக நடந்தது.
பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மிக மிக சந்தோஷம்.
எப்போது வேண்டுமென்றாலும் வந்து கருத்து சொல்லலாம்.
தாமத வருகை மன்னிப்பு என்ற வார்த்தைகள் வேண்டாம்.
உடல்நலம் சரியில்லை என்று படித்தேன், உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அன்பான கருத்துக்கு நன்றி கமலா.
அருமையான பசுமைநடை...இடம் மிக அழகாக இருக்கிறது. மலையும் கோயிலும் குளமும் எல்லாமும். 100வது நடையில் கலந்து கொண்டு விழாவிலும் உங்களால் கலந்து கொள்ள முடிந்ததே வாழ்த்துகள் குழுவிற்கும் தங்களுக்கும். படங்கள் மிக அருமை சகோதரி. தங்கள் தம்பி மகளுக்கும் வரவிருக்கும் மருமகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.
நீக்குமலையும், கோவிலும் மிக அழகாய் இருக்கிறது. சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் அந்த கோவிலில் இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோமதிக்கா செமையா இருக்கு படங்கள் எல்லாம். உங்க கால் வலி குறைந்திருக்கா...எப்படி நடந்திருக்கீங்க நடை நல்லது என்றாலும்...இறைவன் அருள் புரிந்தது மகிழ்ச்சி அக்கா..
பதிலளிநீக்குஅந்த பாறை அழகா இருக்கு. ஐயனார் கோயில் ரொம்ப அழகா இருக்கு. அதன் பின்னர்தான் அந்த மலையில் ஏறும் படிகள் தெரியுது...அப்போ நீங்கள் ஏறியது கோயிலின் பின்புறமாக இடது புறமாகவோ? அங்குதான் மரங்கள் எல்லாம் தெரியுது...குகை சற்றுக் கீழே என்றாலும் படிகள் இருக்கா? படிகள் கரடு முரடாகத் தெரிந்தாலும் ஏறும் வழி ரொம்ப அழகா இருக்கு...அப்ப இந்தக் குகை அந்த மொட்டைப் பாறையின் இடது புறம் இருக்கோ அதாவது நாம் படத்தில் பார்க்கும் போது இடது புறம்?
தடாகம் வாவ் போட வைக்கிறது.
பாறையின் மீது படிகள் இருக்கு போலத் தெரியுதே உச்சிக்குப் போக? ஆனால் அங்கு என்ன இருக்கு என்று அடுத்த பதிவில் வரும்னு சொல்லிருக்கீங்க..
இன்னும் படங்கள் பார்க்க ஆவலுடன் இருக்கேன் அக்கா.
உங்கள் தம்பி மகளின் திருமணம் நல்லபடியாக நடக்க இறைவன் அருள் புரிவார். மனமார்ந்த வாழ்த்துகளும். நீங்கள் நிதானமாக எல்லோரையும் கவனித்துவிட்டு உறவுகளுடன் நன்றாக எஞ்சாய் செய்துவிட்டு வந்து பதிவு போடுங்கள் அக்கா. உங்கள் காலையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஓய்வு எடுத்துக் கொண்டால் உறவுகளுடன் களிக்க ஏதுவாக இருக்குமே!!..
அருமையான படங்களுடன் அழகான பதிவு கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குகால் வலி குறைந்து இருக்கிறது.
மீரா பாலாஜியின் அருளால்.
கோவிலுக்கு இடது பக்கம் கொஞ்சம் துரம் போனால் இந்த குகை செல்லும் படி வரும்.
தடாகம் நன்றாக இருக்கிறது. மீங்கள் தடாகத்தை சுத்தம் செய்கிறது.
மலை மேல் என்ன இருக்கிறது எப்படி மேலே சென்றமோ என்பது அடுத்த பதிவில்.
நான் என் காலையும் கவனித்து கொள்கிறேன் கீதா.
வருகிறேன் மீண்டும் பதிவுகள் போட.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், அன்பான கருத்துக்களுக்கும் நன்றி.
சாப்பாடு சூப்பர்!!! பார்க்கவே அழகா இருக்கு என்பதோடு இப்படியான இயற்கைச் சூழலில் அமர்ந்து குழுவுடன் சாப்பிடுவது என்பதே மகிழ்வான விஷயம். குழுவினருக்கும் இளைஞர்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
ஒவ்வொரு ஞாயிறும் விரதம் என்பதால் சாப்பிட முடியாது கீதா. இந்த முறை விரதம் கைவிடபட்டது. மருத்துவர் விரதம் இருக்ககூடாது என்று சொல்லி விட்டார். மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால். அதனால் சாப்பிட்டோம். இயற்கையான இடத்தில் சாப்பிடுவதும் எல்லோரின் அன்பு உபசரிப்பும் சேர்ந்து கொண்டதால் மகிழ்ச்சி.
நீக்குகுழுவினருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சொன்னது மகிழ்ச்சி, நன்றி கீதா.
அன்பு கோமதி. பசுமை நடை அமைப்பாளர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள். எத்தனை முன்னேற்பாடுகளுடன் செய்கிறார்கள். உடல் வலிமையும் மேலோங்கும்.
பதிலளிநீக்குமனதுக்கும் இனிமை. தாமரைக் குளங்கள் மதுரையைச் சுற்றி நிறையப் பார்த்திருக்கிறேன். திருமோகூர்க் கோவில் குளம் , நீர் கூடத்தெரியாமல் பூக்களால் நிறைந்திருக்கும்.
உங்களால் அவ்வளவு தூரம் போக முடிந்தததா.
கல்லும் முள்ளுமாகத் தெரிகிறதே.
எறும்புக் கூடு அவ்வளவு அழகு. அதற்கு நீங்கள் சொன்ன எடுத்துக்காட்டும் அழகு.
இதே போல் பல நல்ல இடங்களுக்கும் சென்று ,நல்ல செய்திகளைப் பகிரும் உங்களுக்கு மிக நன்றி.
கடுகெண்ணெய் இங்கே கிடைத்தால் நானும் உபயோகிக்கிறேன்.
பாத வலிக்குப் பிரயோசனப்படும். மீரா பாலாஜி அவர்களுக்கு மிக நன்றி.
உங்கள் தம்பி மகன் திருமணம் இனிதே நடை பெற வாழ்த்துகள்.
எடுத்த படங்கள் அனைத்தும் மிக அழகு.தெளிவாகவும் இருக்கிறது.
வாழ்க வளமுடன்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குநடக்கும் தூரம் நிறைய இல்லை அக்கா, கொஞ்சதூரம் தான்.
திருமோகூர் குளம் நன்றாக இருக்கும் நானும் பார்த்து இருக்கிறேன்.
ஆமாம அக்கா மீரா பாலாஜிக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
கிடைக்கும் அக்கா வட நாட்டுக் கடையில் கேட்டுப்பாருங்கள்.
உங்கள் எல்லோர் வாழ்த்துக்களூம் தம்பி மகளுக்கு கிடைத்தது அவள் பாக்கியம்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாழ்த்துவோம்! பசுமை நடையின் 100வது பயணத்துடன் முடிந்து விடாமல் மீண்டும் இந்தப் பயணம் தொடர வேண்டும் ...
பதிலளிநீக்குஉண்மையில் மிக மகிழ்ச்சியாக உள்ளது ..எத்தகைய நிகழ்வு அருமை ...இன்னும் மிக சிறப்பாக தொடரட்டும் ....
படங்கள் எல்லாம் மிக அழகு மா..
தாமரை தடாகம் இல்லாத சமணர் இடம் ஏது..
தங்கள் வீட்டு திருமணம் மிக சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் மா...
மதுரை போகும் போது செல்ல வேண்டிய இடம் ..குறித்துக் கொண்டேன்
வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
நீக்குபசுமைநடை வாழ்த்துக்களுக்கு நன்றி.
நிறைய பேராக ஞாயிற்றுகிழமை போல் போகலாம். பொழுது நன்றாக போகும்.
குழந்தைகள் எல்லோருக்கும் பிடிக்கும்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
அழகழகான படங்களுடன் பசுமைநடைப் பதிவு மனதில் நிறைகின்றது..இப்படியான இயற்கைச் சூழலில் தினமும் சிறிது நேரம் இருந்தாலே மனமும் உடலும் மேன்மை பெறும்.. எல்லார்க்கும் நன்மைகள் கிடைக்கட்டும்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது சரிதான். இது போனற இயற்கை சூழலில் இருந்தால் உடலும், மனமும் நன்றாக இருக்கும் தான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பசுமை நடையின் 100வது நடைப் பயணமும், அதன் படங்களோடு கூடிய விளக்கங்களும் அருமை. ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும், பாராட்டுகளுக்கு நன்றி.
பசுமை நடையின் நூறாவது பயணம் குறித்த படங்களும் பகிர்வும் மிக அருமை. சாத்தியமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். கால்வலி சரியாகியிருக்குமென நம்புகிறேன். மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குபசுமை நடையை 100 நடையை சாத்தியமாக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள் அவர்களை மேலும் செயல்பட வைக்க உத்வேகம் கொடுக்கும்.
காலவலி சரியாகி வருகிறது.
மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
இராசிபுரம் போய் வந்தேன் மறுவீடு விழாவிற்கு.
இப்போது தம்பி வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்களுக்கு நன்றி.