திங்கள், 10 ஜூலை, 2017

திடியன் மலை

திடியன் மலை
திடியன் மலை மதுரையிலிருந்து  தேனீ பாதையில் 31 கி,மீ தொலைவில் உள்ளது.

                  
                
                           விழாவிற்கு சமைத்துக் கொண்டு இருப்பவர்கள் 

போன ஞாயிறு (02/07/2017) திடியன்  என்ற ஊருக்குப் போனோம்.
 (காலை 6 மணிக்கு கிளம்பினோம்).  அங்குள்ள  ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தியைப்பற்றி இணையத்தில் படித்து அவரைப் பார்க்கப் போனோம். தட்சிணாமூர்த்தி 14 சித்தர்களுடன் நந்தியின் மேல் அமர்ந்து இருப்பார், மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் என்று படித்தோம். நாங்கள் போன போது கோவில் நடை திறக்கவில்லை. பக்கத்தில்  இருந்த சமுதாயக்கூடத்தில்  ஏதோ விழாவிற்குச்  சமைத்துக் கொண்டு இருந்தவர்கள் குருக்கள் 7மணிக்கு வந்து விடுவார், 10 மணி வரை இருப்பார், அதற்குள் மேலே போய் வந்து விடுங்கள் என்றார், மேலே உள்ள மலைக் கோவிலைக் குறிப்பிடுகிறார் போக முடியுமா? என்ற கேள்வியை அங்கிருந்த பெரியவரிடம் கேட்டோம்.  அவர் போகலாம், படிகள் இருக்கு , பிடித்துக் கொண்டு ஏறக் கம்பி இருக்கு போய் வாங்க பயமில்லை மேலே போலீஸ் இருக்கிறார் என்றார்.

பெரியவர் சொன்னால் பெருமாள் சொன்னது போல என்பார்கள். மேலேயும் பெருமாள் தான் இருக்கிறார், போய் வந்து விடுவோம் என்று கிளம்பினோம். அன்று நவமி வேறு . மலையின் பேரும் ராமர் மலை என்கிறார்கள். ராமருக்கு நவமி விஷேசம் இல்லையா?
அவர் அழைக்கிறார் போய் வருவோம் என்று  கிளம்பினோம்.

 அவன் இன்றி அணுவும் அசையாது, எல்லாம் அவன் விருப்பம்,  நடப்பது எல்லாம் நாராயணன் செயல் என்பதை உணர்ந்த கணம். கைலாசநாதரைப் பார்க்க வந்தோம், அவர் முதலில் பெருமாளைப் பார்த்து வா என்கிறார்.

"மலைகள் என்னை அழைக்கின்றன நான் போயே ஆக வேண்டும்"    ஜான்முய்ர் சொன்னது போல் நான் மலைக்கோவில் போக வேண்டும் என்று நினைக்கவில்லை   ஆனால் மலையில்  உள்ள மலையப்பர்   அழைத்து விட்டாரே ! 

//மலைகளின் அழைப்பு
"மலைகள் என்னை அழைக்கின்றன. நான் போயே ஆக வேண்டும்." என்பது ஜான் முய்ரின் மிக பிரபலமான வாசகம். மலையேற்ற ரசிகர்களின் காயத்ரி மந்திரமாக விட்டவை இவ்வரிகள்.
மலைகள் தன் உச்சிகளிலும் மடியிலும் பல ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. மலைகள் மேல் கொள்ளப்படுவது பெருங்காதல். தீராக் காதல். குறிஞ்சி நிலமே எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கியது. சங்க காலம் தொட்டு, மலைகள் படைப்பூக்கத்தை விருத்தி செய்யும் ஒரு லாகிரியாக இருப்பது.
நமது பண்பாட்டில் மலைகளுக்கு பெரிய ஆன்மிக முகம் உண்டு. இமயத்தில் சிவன், மலையாஜல புத்ரி பர்வதராஜகுமாரியான பார்வதி, ஏழுமலைவாசி பெருமாள், குன்று தோறாடும் குமரன், உச்சிப் பிள்ளையார், சபரிமலை ஐயப்பன் என்று இறையில்லங்களாய் மலைகளே இருக்கின்றன.
மலையேற்றம் நம்மை உடைக்கின்றது. இயற்கையின் முன்னர் நாம் எத்தனை சிறியவர்கள் என்று உணர்த்துகிறது. மலையுச்சியைத் தொட்டு, சாதித்து விட்டதாய் நாம் நிமிரும் போது, தோள் மேல் பிள்ளையை ஏற்றி மகிழும் தகப்பனைப் போல் இறுமார்ந்து நிற்கிறது.//

மோகன்ஜி அவர்கள் முகநூலில் அவர் போன ஆஸ்திரியப் பயணக் கட்டுரையில் மலைகளின் அழைப்பை குறிப்பிட்டு இருந்தார். 
பதிவுக்கு பொருத்தமாய் உள்ளதால்  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்..

மலைக்கு  சீக்கீரம் போய் திரும்ப வேண்டும் என்று கிளம்பிய வேகம் சுற்றுப்புறம் கவனத்தில் இல்லை, மலை மேலேயே கவனம்  முழுவதும்.  கைலாசநாதரைத்  தாண்டி வந்தால் வல்லப கணபதி, அதற்கு அடுத்து  தாமரை குளம் - காய்ந்து கிடக்கிறது, வேண்டுதலுக்குக் கலர் மீன்களை இந்த தாமரைக் குளத்தில் விடலாம், நேர்த்திகடனாய் என்று  அறிவிப்புப் பலகை இருக்கிறது அதை வந்து  போட்டோ எடுத்துக் கொள்ளலாம், என்று அதை எல்லாம் நின்று கவனிக்காமல்  எங்கள்  பயணம் தொடர்கிறது.

இந்த  அலங்கார தோரண வாயிலைக் கடந்து போனால் ஆலமரத்தடியில் விநாயகர்  இருக்கிறார். அவரையும் கடந்து போகிறோம்.

அடுத்து, பிள்ளையார் ,மூஞ்சூரு,  கல் விளக்குத் தூண் இருக்கிறது அவரையும் ஒரு நிமிடம் நின்று கும்பிடவில்லை  மலைப் பாதை கண்ணில் தெரிகிறதா? என்று மட்டும் கவனம்

. மலையடிவாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  பெருமாள் இருக்கிறார்

மடப்பள்ளி
கோவிலுக்கு போகப் படிகள்
கோவில் உள் வாசல்
மூலஸ்தானம்

குழலூதும் கண்ணன் இரு பக்கமும் நாகர்கள்.

விஷ்ணு அமர்ந்த நிலையில்,ராமானுஜர், நம்மாழ்வார் என்று நினைக்கிறேன். சொல்ல பட்டர் இல்லை.கதவு திறந்து இருந்தது. எல்லா தெய்வ விக்கிரங்களுக்கும் தைலக்காப்பு செய்து இருந்தார், தண்ணீர் எடுக்கச் சென்று இருந்தார் போலும்.
கருடாழ்வார்

 மலையில் உள்ள பெருமாளைத் தரிசனம் செய்து வந்தபின் தான் பார்த்தோம். இவர்களை, விநாயகரை பார்க்காமல் மேலே போய் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

நீங்கள் மலைக் கோவில் போகும் முன் விநாயகரை வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி பின் மேலே போய் வாருங்கள் அதற்குதான் முதலில் அவர்கள் படத்தையும், செய்தியையும் பகிர்ந்து இருக்கிறேன்.

                        
பெருமாளே !  என்று  வணங்கி மலை மேல் சிமெண்ட்டால் கட்டப்பட்டு இருந்த படிகளில்  ஏற ஆரம்பித்தோம். படி நன்றாக இருக்கிறது இல்ல என்று பேசிக் கொண்டே .
  
ஒரு பையன் மலையேறும் பயிற்சியில் இருப்பவர் போலும் கீழ்ப் படியில் அலைபேசியை வைத்து விட்டுப் படிகளில் ஓடி ஏறிக்  கொண்டும்  இறங்கிக் கொண்டும் இருந்தார் 

ஓ! எளிதாக இருக்கும் போல இருக்கே ! என்று எண்ணிய எண்ணம்  சரியா?
அடுத்த பதிவில்.

என் கணவர் வரைந்த அனிமேஷன்  கார்ட்டூன் படம்.வாழ்க வளமுடன்.

31 கருத்துகள்:

 1. ஆவலைத் தூண்டும்படியான விஷயங்களுடன் பதிவு..

  புதிய தகவல்களுடன் அழகிய படங்கள்..
  அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கின்றேன்..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 2. பயண அனுபவம் நன்று நிறைய விடயங்கள் கடைசி புகைப்படம் ஸூப்பர்
  த.ம.பிறகு

  பதிலளிநீக்கு
 3. திருமங்கல்ம் செல்லம்பட்டி
  உசிலம்பட்டி பகுதிகளில் அதிக
  வருடங்கள் வேலபார்த்தும் அந்த
  வழியில் செல்கையில் கீழிருந்தே
  வணங்கிச் சென்றதோடு சரி
  உங்கள் பதிவின் மூலமே
  தரிசிக்கிறேன்
  படங்களுடன் பகிர்ந்த விதம்
  மிக மிக அருமை
  ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து

  பதிலளிநீக்கு

 4. ​தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன். திடியன் மலை என்பதை முதலில் திருடியன் மலை என்று படித்துவிட்டேன்!!!

  தகுந்த இடத்தில் மோகன்ஜியின் பதிவின் வரிகள் நினைவுக்கு வந்து, அதையும் தேடி எடுத்துக் கொடுத்திருப்பதற்கு ஒரு சபாஷ்.

  ஸாரின் அனிமேஷன் படம் அருமை. மின்னுகிறது!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம், துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  அடுத்த பதிவை சீக்கிரம் போடுகிறேன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.
  சாரின் படத்தை ரசித்தமைக்கு நன்றி. அடுத்த பதிவுக்கும் படம் கேட்டு இருக்கிறேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
  போகவில்லை என்றாலும் பல வருடங்கள் பார்த்து வணங்கும் பாக்கியம் கிடைத்து இருக்கே!
  உங்கள் உற்சாக பின்னூட்டத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  மோகன் ஜியின் பதிவின் வரிகள் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா?
  உங்கள் பாராட்டுக்கு நன்றி.
  நான் காமிரா கொண்டு போகவில்லை, மறந்து விட்டது. அலைபேசியில் எடுத்த படங்கள் தான்.

  சாரின் படத்தை ரசித்தமைக்கு நன்றி.
  அடுத்த பதிவுக்கும் படம் வரைந்து தருகிறேன் என்றார்கள்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. படிக்கட்டுகளைப் பார்க்கும்போதே மேல் மூக்சு கீழ்மூச்சு வாங்குகிறது
  அனிமேசன்படம் அருமை

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  இந்த படிக்கட்டுக்களை பார்த்தே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க்கினால் எப்படி இனி வரும் படியைப்பார்த்தால் என்ன சொல்வீர்கள்?
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. உச்சி அடைந்து விட்டால் திருப்தி தான் வேண்டும் - வாழ்விலும்...

  அனிமேஷன் அசத்தல்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
  சாரிடம் உங்கள் பாராட்டை சொன்னேன் மகிழ்ந்தார்கள்.

  பதிலளிநீக்கு

 13. திடியன் மலை...ரம்மியமாக உள்ளது..

  பதிலளிநீக்கு
 14. தாமரைப் பூத்த தடாகம் ஒன்று அங்கு அழகாக இருக்குமே ,அதை ஏன் படம் பிடிக்கலை :)
  அனிமேஷனை ரசித்தேன் ,ஜி க்கு என் பாராட்டுக்கள் :)

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
  திடியன் மலை மேல் இருந்துப் பார்த்தால் இன்னும் ரம்மியம் தான்.
  மழை இல்லாமல் இப்போது காய்ந்து கிடக்கிறது. முன்பு வெகு அழகாய் இருந்து இருக்கிறது.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
  தாமரைப் பூத்த தாடகம் காய்ந்து கிடக்கிறது என்று போட்டு இருக்கிறேனே!
  அடுத்த பதிவில் காய்ந்ததாடகம் வரும்.
  அனிமேஷனை ரசித்து பாராட்டியதை சொல்லி விட்டேன்.
  நன்றி சொன்னார்கள்.

  பதிலளிநீக்கு
 17. தங்களின் இந்தப் மலைப் பயண அனுபவம் மிகவும் த்ரில்லிங்காக இருந்திருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.

  படங்களும், பதிவும், செய்திகளும் மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளன.

  சார் வரைந்து கடைசியில் காட்டப்பட்டுள்ள ஓவியம் அருமை. அதை அனிமேஷன் போலக் காட்டியுள்ளது அதைவிட அருமை+திறமை. பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  //தங்களின் இந்தப் மலைப் பயண அனுபவம் மிகவும் த்ரில்லிங்காக இருந்திருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.//

  மிகவும் த்ரில்லிங்க்காக் இருந்தது உண்மைதான் சார்.
  படங்கள் காமிரா கொண்டு போக மறந்து விட்டதால் அலைபேசியில் எடுத்தது தான்.
  புதிதாக அனிமேஷன் கற்றுக் கொண்டார்கள் உடனே எனக்கு வரைந்து தந்து விட்டார்கள். அடுத்த பதிவுக்கு ஏறுவது போல் வரைந்து தந்து இருக்கிறார்கள். இன்று மாலை அடுத்த பதிவு போட எண்ணம்.

  உங்கள் ஊக்கம் தரும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தான் சாரை வரைய வைக்கிறது.
  உங்களுக்கு நன்றிகள்.


  பதிலளிநீக்கு
 19. படம் நன்றாகவே வரைந்திருக்கிறார். இறைவன் விளையாடிய விளையாட்டை அறிய ஆவல். புதுசு புதுசாத் தேடிச் செல்கிறீர்கள். ஆசை இருக்கு தாசில் பண்ண! மலை ஏறக் கூடாது என்னும் மருத்துவரின் கட்டளை தடுக்கிறது. :)

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  கணவரின் படத்தை பாராட்டியதற்கு நன்றி.
  எனக்கும் போய்வந்த பின் உடல் படுத்துகிறது.
  கை,கால், கழுத்து வலி.
  வாகனம் போகும் ம்லிக்கு போய் தரிசனம் செய்யலாம்.
  உடல் நலம் தான் முக்கியம்.
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. ஐயோ.. மலையைப் பார்த்த பிறகுமா படி ஏறி தரிசிக்கலாம் என்று நினைத்தீர்கள். அவன் நினைத்துவிட்டால், அப்புறம் வேறு எண்ணம் நமக்கு எப்படி வரும்? பத்திரமாக வந்துசேர்ந்தீர்களே.

  படம், அவ்வளவு சிறப்பாக வரவில்லை. ஆனால் அடுத்த இடுகையில் போட்டிருக்கும் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
 22. இறைவனின் விளையாட்டு. ...
  அனிமேஷன் படம் அருமை.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
  வெயிலுக்கு முன் மலையேறி இறங்க வேண்டும்,
  கைலாசநாதர் கோவில் பத்துமணிக்கு அடைத்து விடுவார்கள் என்ற அவசரத்தில் எடுத்த படம். இரண்டும் அலைபேசியில் எடுத்தது தான்.
  அவன் அருளால் பத்திரமாய் வந்து சேர்ந்தோம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. நான் பிறந்து வளர்ந்த இடம் ராசிங்கபுரம். தேனியின் அருகில்தான். எனவே இந்தத் திடியன்மலை அறிவேன். அப்போது இப்படி எல்லாம் இருந்ததில்லை. படிகள் எதுவும் இப்படிக் கிடையாது. கடினமான பாதை ஏற்றம். எனவே சென்றதில்லை. இப்போது உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொண்டேன். பிறந்த ஊருக்கு அடுத்த முறை செல்ல வேண்டும். அழகான படங்கள்.

  கீதா: அருமையான படுகள் கோமதிக்கா. பார்க்கணும் போல இருக்கு. மலை ஏற்றம் கொஞ்சம் கடினம் போலத் தோன்றுகிறதே படிகள் இருந்தாலும். அதிகமான தூரமோ...சரி விநாயகரின் விளையாட்டு என்ன என்று அறிய இதோ அடுத்த பதிவுக்குச் செல்கிறோம்....

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும். கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
  2009 ல் தான் ஊர் மக்கள் படையை செதுக்கி இருக்கிறார்கள், குடும்பம் குடும்பமாய்.
  அவர்கள் பெயர்கள் படிக்கட்டுகளில் இடம் பெற்று இருக்கிறது. அவர்களை வாழ்த்திதான் ஏறினேன். நான் சிறு வயதில் தேனியில் ஒரு வருடம் இருந்து இருக்கிறோம்.(அப்பா அங்கு வேலைப்பார்த்தார்கள்)

  மலையேற்றம் கொஞ்சம் கடினம் தான், சிறு வயது உள்ளவர்கள் ஏறிவிடுவார்கள், எங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. "மலைகள் என்னை அழைக்கின்றன நான் போயே ஆக வேண்டும்" ஆம். இதுவொரு அருமையான வாசகம். சமைப்பவர் சொன்ன தகவலில் எங்களுக்குக் கிடைத்தது இயற்கைக் காட்சிகளும் இறை தரிசனமும். 2006ஆம் ஆண்டு ஷரவணபெலகுலா மலையேறிய நினைவு வந்தது. நாங்கள் சென்றிருந்தது மஹாகும்பாபிஷேக சமயம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மஹாகும்பாபிஷேகம் அடுத்த வருடம் 2018_ல் நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன. மீண்டும் போகும் ஆசை எழுகிறது:).

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  சமைப்பவருக்கு நன்றி சொல்லி வந்தோம்.
  ஷரவணபெலகுலா போய் வாருங்கள்.
  உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் 1969 இல் பியூசி படிக்கும் போது நண்பர்களோடு சேர்ந்து மலை உச்சி வரை சென்று அங்குள்ள ராமர் கல் தூணாக காட்சியளிப்பதை கண்டு தரிசனம் செய்துள்ளேன்.த்ரில்லிங்கான அனுபவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் Murugan Thillainayagam, வாழ்க வளமுடன்.
   உங்கள் அனுபவ கருத்துக்கு நன்றி.

   நீக்கு