ஆலப்புழா படகு வீடு பயணம் பதிவில் பார்த்த கோவில்கள் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன், நினைவு இருக்கும்.
முதலில் பார்த்த ஸ்ரீ நாராயணகுரு தேவா கோவில் அப்புறம் கிருஷ்ணர் கோவிலும் போகும் வழியில் பார்த்த அழகிய காட்சிகளும் இடம்பெறுகிறது.
ஸ்ரீநாராயண குரு ஒரு தத்துவவாதி, ஆன்மீக தலைவர்
நாராயண குருவை பற்றி தெரிந்து கொள்ள கூகுள் உதவியை நாடினேன். கிடைத்த விவரம் கீழே . கொஞ்சம் எடுத்து போட்டு இருக்கிறேன். நிறைய இருக்கிறது அவரைபற்றியும் அவர் கருத்துக்களை பின்பற்றுபவர்களை பற்றியும். விக்கிபீடியா போய் படிக்கலாம் விருப்பபட்டால்.
//20 ஆகஸ்ட் 1856 - 20 செப்டம்பர் 1928) [ 1] இந்தியாவில் ஒரு தத்துவவாதி , ஆன்மீகத் தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார் . ஆன்மீக அறிவொளி மற்றும் சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக கேரளாவின் சாதிய சமூகத்தில் அநீதிக்கு எதிராக சீர்திருத்த இயக்கத்தை அவர் வழிநடத்தினார் . [2] அவரது மேற்கோள் பிரபலமாகிவிட்டது: "ஒரு ஜாதி, ஒரு மதம், மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் ஒரு கடவுள்". அவர் அத்வைத கவிதையான தெய்வ தசகம் எழுதியவர் , இது கேரளாவில் சமூக பிரார்த்தனைக்காக அதிகம் பயன்படுத்தப்படும் கவிதைகளில் ஒன்றாகும் . [3]//
நன்றி.- விக்கி பீடியா
சிறிய கோவில். பிரகராத்தில் வலம் வரும் போது பார்த்த வாழை மரம்
வாழை மரங்கள் அழகாய் குலை தள்ளி இருந்தது
வாடாமல்லி மலர்கள்
அந்த கோவில் அழகாய் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருக்கிறது. குருக்கள் மடபள்ளியில் நின்றார். நாங்கள் வருவார் என்று கொஞ்சம் நேரம் நின்றோம் அவர் வரவில்லை. அதனால் படகுக்கு வந்து விட்டோம்.
மாலை நேரம் கோவிலை பார்த்து விட்டு திரும்பும் நேரம் சூரியன் மறையும் அந்தி பொழுது கடல் அலை போல காட்சி அளித்தது ஏரி நீர்.
மஞ்சள் வானம்
மறுநாள் காலையில் கிருஷ்ணன் கோவில் போனோம். கொஞ்ச தூரம் காலை நேர நடைப்பயிற்சி போல நடந்து போனோம் பாரதி ஆசை பட்டது போல தென்னைமரங்கள் சூழ்ந்து இருக்கும் வீடுகளை பார்த்து ரசித்து கொண்டு போனோம்.
இயற்கையை ரசித்து கொண்டே நடந்தோம் கோவிலை நோக்கி.
இயற்கையை ரசித்து கொண்டே நடந்தோம் கோவிலை நோக்கி.
பாக்கு மரங்களும் வீடுகளில் உண்டு
வேருடன் உள்ள செடிகளை தென்னைமரத்தில் கட்டி வைத்து இருக்கிறார்கள் அவை பூத்து அழகாய் காட்சி அளிக்கிறது, மழை பெய்து கொண்டே இருப்பதால் தண்ணீர் தனியாக தேவை படாது என்று நினைக்கிறேன்.
போகும் வழி எல்லாம் சிறு சிறு ஓடைகள்
சிறு பாலம் கடந்தால் கோவில் வரும்
கோவிலுக்குள் உள்ள கோவில் திருக்குளம்
வெளியிலிருந்து கோவிலின் தோற்றம், முதலில் தெரிவது ஐயப்பன், அடுத்து பகவதி அம்மன்
பிரகாரத்தில் உள்ள நாகர்கள் மஞ்சள் பொடி தூவி வணங்குகிறார்கள், வரும் அன்பர்கள் எல்லாம்.
தூரத்தில் தெரிவது பிள்ளையார் சன்னதி,
பிள்ளையார் நல்ல அலங்காரத்தில் இருக்கிறார், பின்புறம் உள்ள திருவாச்சி மிக அழகாய் இருக்கிறது
ஐயப்பன் நல்ல அலங்காரமாக காட்சி அளித்தார்
கிருஷ்ணன் கோவில் திறக்கவில்லை , குருக்கள் வந்து திறப்பார்
என்றார்.
திறந்த பின் குழல் ஊதும் கண்ணன் அழகு.
உற்சவ கிருஷ்ணர் திருவிழாவில் இடம்பெறுவார்
மேலே வைத்து இருக்கும் சப்பரம் கிருஷ்ண ஜெயந்திக்கு கீழே இறக்கப்பட்டு அதில் கண்ணன் வலம் வருவார் என்றார்
பகவதி அம்மன் சன்னதி படம் எடுக்க போகும் போது குருக்கள் எடுக்க கூடாது என்று சொல்லி விட்டார், முன்பு எடுக்கும் போது அவர் பார்க்கவில்லை போலும்.
பேரனுக்கு பிறந்த நாள் என்று அர்ச்சனை செய்தோம் கிருஷ்ணருக்கு.
இலையில் சந்தனம் பூ பிரசாதம் தந்தார்.
சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம், தயிர் சாதம் பிரசாதம் கிடைத்தது.
பெற்றுக் கொண்டு மீண்டும் குருக்களுக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லி படகு வீட்டுக்கு திரும்பினோம். படகில் காலை உணவை உண்டு முடித்தபின் போன இடம் அடுத்த பதிவில்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. முதல் படம் நிறைந்த ஏரியில் படகின் படம் மிக அழகாக இருக்கிறது. நம் ஸ்ரீராம் சகோதரர் போல், எனக்கும் அந்தப் படகு படத்தை பார்த்ததும், "தியாகம்" (அப்படித்தான் நினைக்கிறேன்.எனினும் ஒரு சந்தேகம். ) படத்தில் வரும் "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா" என்ற பாடல் பாடத் தோன்றியது. அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதில் நடிகர் சிவாஜி அவர்களின் முக பாவ, உச்சரிப்புடன் பாடல் நன்றாக இருக்கும். சகோதரர் ஸ்ரீ ராம் அவர்கள் ஏற்கனவே வெள்ளி பாடல் பதிவில் அதை பகிர்ந்துள்ளாரா என்று தெரியவில்லை.
தாங்கள் எடுத்த எல்லா படங்களும் மிக அருமையாக உள்ளன. ஸ்ரீ நாராயண குரு தேவா கோவில் அழகாக உள்ளது. அவரைப்பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். அடுத்து கிருஷ்ணா கோவிலுக்கு போகும் வழிகளும் கொள்ளை அழகு. நீங்கள் நடந்து சென்ற நடைபாதை, தென்னை பாக்கு மரங்கள் என இயற்கை சூழ்ந்த இடங்கள் மனதை ரம்மியமாக்குகின்றன.
தென்னை மரங்களில் படரும் செடிகளும் பூக்களுமாய் இயற்கை நன்றாக உள்ளதென்றால் வாடா மல்லியின் அழகும் மஞ்சள் வானத்தின் அழகும் மனதை நிறைக்கின்றன.
ஸ்ரீ கிருஷ்ணரையும், ஸ்ரீ பிள்ளையாரையும் தரிசித்து கொண்டேன். உற்சவ மூர்த்தியும் அழகாக உள்ளார். அங்கு கவினுக்கு அவரின் பிறந்த நாளுக்காக அர்ச்சனை செய்தது மகிழ்ச்சி. பிரசாதங்கள் மனதுக்கு திருப்தியாக கிடைத்து விட்டதும் மகிழ்ச்சி. நீங்கள் அடுத்து சென்ற கோவிலைப்பற்றி அறிந்து கொள்ள தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை..//
நன்றி
//முதல் படம் நிறைந்த ஏரியில் படகின் படம் மிக அழகாக இருக்கிறது.//
நாங்கள் வந்த படகிலிருந்து எதிர்பக்கம் போன படகை எடுத்த படம் அது.
//நம் ஸ்ரீராம் சகோதரர் போல், எனக்கும் அந்தப் படகு படத்தை பார்த்ததும், "தியாகம்" (அப்படித்தான் நினைக்கிறேன்.எனினும் ஒரு சந்தேகம். ) படத்தில் வரும் "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா" என்ற பாடல் பாடத் தோன்றியது.//
நீங்கள் சொன்னது சரிதான் தியாகம் படம் தான். நீங்கள் நன்றாக பாடுவீர்களா?
முதல் படமே அட்டகாசமாக இருக்கிறது. படகே அழகாக இருக்கு கோமதிக்கா. மேலேயும் ஏறிச் செல்ல முடியுமா?
பதிலளிநீக்குநாராயண குரு கோயில் அழகாக இருக்கிறது. ஆமாம் துளசி கூட எங்கள் தளத்தில் நாராயணகுரு அவர்களின் மேற்கோள் சொல்லியிருந்தார் ஒரு பதிவில். அவர் க்ருத்தில் சொல்வார் என்று நினைக்கிறேன். அவர் வீட்டில் நாராயணகுரு அவர்களின் படம் உண்டு.
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//முதல் படமே அட்டகாசமாக இருக்கிறது. படகே அழகாக இருக்கு கோமதிக்கா. மேலேயும் ஏறிச் செல்ல முடியுமா?//
இது நாங்கள் சென்ற படகு இல்லை. நான் போன பதிவில் போட்டு இருந்ததேன் அல்லவா அதுதான் நாங்கள் போன படகு. எங்கள் படகிலிருந்து எதிர்பக்கம் போன படகை படம் எடுத்தேன், இனி வரும் வாரங்களில் நான் பார்த்த படகுகள் படம் வரும் கீதா.
மேலேயும் ஏறி போகிறமாதிரி படகுவீடுகள் இருக்கிறது கீதா.
//நாராயண குரு கோயில் அழகாக இருக்கிறது. ஆமாம் துளசி கூட எங்கள் தளத்தில் நாராயணகுரு அவர்களின் மேற்கோள் சொல்லியிருந்தார் ஒரு பதிவில். அவர் க்ருத்தில் சொல்வார் என்று நினைக்கிறேன். அவர் வீட்டில் நாராயணகுரு அவர்களின் படம் உண்டு.//
நாராயண குரு படம் நிறைய வீடுகளில் இருக்கும். அவர் நிறைய நல்ல கருத்துக்களிய சொல்லி இருக்கிறார். சகோ துளசிக்கு தெரியும் பாடம் நடத்தி இருப்பார் குருவைபற்றி.
.வாழைமரக் குலை, வாடாமல்லி எல்லாம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது.
பதிலளிநீக்குபொதுவாகவே கேரளத்தில் கோயில்கள் மிகவும் சுத்தமாகப் பராமரிப்பாங்க.
அந்தி நேரம் சூரியன் வண்ணத்தில் ஏரி எல்லாம் சூப்பர். படங்கள் மிக அழகு. தங்க நிறம்! இந்த ஏரியும் காயல்தான் கடல்நீர் கலக்கும். Back water. மிகப் பெரியது.
கிருஷ்ணன் கோயில் பக்கம் நீரும் பாதையும் மரங்களும்....கேரளத்தில் இப்படியான பகுதிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீரும் நிலமும் அடுத்து இப்படி இருப்பது. கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் பகுதி வரை தீவுகள் போன்ற கிராமங்களைப் பார்க்கலாம். ஆனால் வெள்ளம் வரும் போது அபாயமும் உண்டு!
இயற்கை சூழ் கோயில் மனதைக் கவர்கிறது. அருமையாக இருக்கிறது படங்களூம். ரசித்துப் பார்க்கிறேன், கோமதிக்கா
கீதா
வாழைமரக் குலை, வாடாமல்லி எல்லாம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது.//
நீக்குஆமாம். நான் சின்ன வயதில் வழியில் வாடமல்லி செடி எங்கு பார்த்தாலும் எடுத்து வந்து வீட்டில் தொட்டியில் வைப்பேன்.
இப்போது கதம்பத்தில் கூட வாடமல்லி இருப்பது இல்லை.
பொதுவாகவே கேரளத்தில் கோயில்கள் மிகவும் சுத்தமாகப் பராமரிப்பாங்க.
//அந்தி நேரம் சூரியன் வண்ணத்தில் ஏரி எல்லாம் சூப்பர். படங்கள் மிக அழகு.
மகன் எடுத்த சூரியன் படம் மிக அழகாய் இருக்கும் இது நான் எடுத்த படங்கள். மகன் நிறைய எடுத்தான். வேறு ஒரு சமயத்தில் அவன் எடுத்த படங்களை போடுகிறேன்.
//தங்க நிறம்! இந்த ஏரியும் காயல்தான் கடல்நீர் கலக்கும். Back water. மிகப் பெரியது.//
ஆமாம்.
//கிருஷ்ணன் கோயில் பக்கம் நீரும் பாதையும் மரங்களும்....கேரளத்தில் இப்படியான பகுதிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீரும் நிலமும் அடுத்து இப்படி இருப்பது. கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் பகுதி வரை தீவுகள் போன்ற கிராமங்களைப் பார்க்கலாம். ஆனால் வெள்ளம் வரும் போது அபாயமும் உண்டு!//
எல்லோர் வீட்டு முன் பக்கம் , பின் பக்கம் எல்லாம் தண்ணீர் பாத்திரம் கழுவ, துணி துவைக்க , குளிக்க எல்லாவற்றுக்கும் பயன் படுத்துகிறார்கள்.
//இயற்கை சூழ் கோயில் மனதைக் கவர்கிறது. அருமையாக இருக்கிறது படங்களூம். ரசித்துப் பார்க்கிறேன், கோமதிக்கா//
அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
ஆமாம் அக்கா எல்லோரும் இந்தத் தண்ணீரைத்தான் பயன்படுத்துவார்கள். முன்னில் பின்னில் எல்லாம் தண்ணீர்தான். மகன் எடுத்த படங்களையும் பகிருங்கள் கோமதிக்கா.
நீக்குநாராயண குருவின் செயல்களும், அவரது மொழிகளும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனிதர்களில் என்ன பாகுபாடு? எல்லோரும் இறைவன் முன் சமம் என்பது மனித மனத்திலும் வர வேண்டும்.
கீதா
//நாராயண குருவின் செயல்களும், அவரது மொழிகளும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனிதர்களில் என்ன பாகுபாடு? எல்லோரும் இறைவன் முன் சமம் என்பது மனித மனத்திலும் வர வேண்டும்.//
நீக்குஆமாம்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
கிருஷ்ண ன் கோயில் போகும் வழி அழகோ அழகு...கூடவே அந்த சிறிய வாய்க்கால் போன்றது வருகிறதே. இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் இப்படித்தான் இருக்கும். ஆழி சூழ் இடங்கள் போல தண்ணீர் சூழந்து இடங்கள். கேரள ஆசை கூடுகிறது படங்கள் பார்த்ததும். கோயில், சன்னதிகள், திருக்குளம் எல்லாமே அழகு. கேரளத்தில் சந்தனத்தை இலையில் வைத்துதான் தருவாங்க. இல்லைனா கையில் தருவாங்க.
பதிலளிநீக்குபடங்களை ரசித்துப் பார்த்தேன். ஏதாவது விட்டுப்போயிருக்கா என்று பார்க்க நாளை வருகிறேன் கோமதிக்கா...தூக்கம் கண்ணை அழுத்துகிறது.
கீதா
//கிருஷ்ண ன் கோயில் போகும் வழி அழகோ அழகு...கூடவே அந்த சிறிய வாய்க்கால் போன்றது வருகிறதே. இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் இப்படித்தான் இருக்கும். ஆழி சூழ் இடங்கள் போல தண்ணீர் சூழந்து இடங்கள்.//
நீக்குஆமாம், தண்ணீர் தேசம் என்றும், கிழக்கின் வெனிஸ் நகரம் என்றும் ஆலப்புழையை சொல்கிறார்கள்.
//ஆசை கூடுகிறது படங்கள் பார்த்ததும். கோயில், சன்னதிகள், திருக்குளம் எல்லாமே அழகு//
ஆமாம்.
. //கேரளத்தில் சந்தனத்தை இலையில் வைத்துதான் தருவாங்க. இல்லைனா கையில் தருவாங்க//
ஆமாம், டெல்லி குருவாயூர் கோவிலில் நம் விரலில் குச்சியால் தடவி விடுவார்கள், அர்ச்சனை செய்பவர்களுக்கு மட்டும் இலையில் பூவும், சந்தனமும் தருவார்கள். முக்கியமானவர்களுக்கு நெற்றியில் தீற்றி விடுவார்கள்..
//படங்களை ரசித்துப் பார்த்தேன். ஏதாவது விட்டுப்போயிருக்கா என்று பார்க்க நாளை வருகிறேன் கோமதிக்கா...தூக்கம் கண்ணை அழுத்துகிறது.//
ஓய்வு எடுங்கள் நாளை பார்த்து கொள்ளலாம். எல்லாம் சொல்லி விட்டீர்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
நாராயணகுரு பற்றி முன்பு ஏதோ கொஞ்சம் படித்த நினைவு. அவருக்கு கோவிலா? அந்தக் கோவிலும் சரி, கீழே நீங்கள் பகிர்ந்துள்ள கிருஷ்ணன் கோவிலும் சரி எவ்வளவு சுத்தமாக காட்சி அளிக்கிறது! கேரளாவுக்கு உரிய கட்டிடக்கலை.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//நாராயணகுரு பற்றி முன்பு ஏதோ கொஞ்சம் படித்த நினைவு. அவருக்கு கோவிலா? //
//செயல்களின் ஞானி" என்று ஒருவர் கூறலாம். அவர் தென்னிந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உயர்வுக்கு பெரிதும் பங்களித்துள்ளார் மற்றும் அவரது பணி சில நேரங்களில் காந்தியுடன் தொடர்புடையது. எம். ரோமெய்ன் ரோலண்ட், 1928 டிசம்பர்//
ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உயர்வுக்கு பாடு பட்டவருக்கு கோவில் .
அவரை நினைவில் வைத்துள்ள மக்களின் நன்றி உணர்வு.
//அந்தக் கோவிலும் சரி, கீழே நீங்கள் பகிர்ந்துள்ள கிருஷ்ணன் கோவிலும் சரி எவ்வளவு சுத்தமாக காட்சி அளிக்கிறது! கேரளாவுக்கு உரிய கட்டிடக்கலை.//
ஆமாம், எங்கும் சுத்தம். பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு சின்ன பொறாமை கலந்த வியப்பு என்ன தெரியுமா? படகு விடும் அளவு அங்கு நீர் நிலைகளில் தண்ணீர் எப்போதும் இருக்கிறது என்பது. அதையும் சுத்தமாக பராமரிக்கிறார்கள் போலும்.
பதிலளிநீக்கு//ஒரு சின்ன பொறாமை கலந்த வியப்பு என்ன தெரியுமா? படகு விடும் அளவு அங்கு நீர் நிலைகளில் தண்ணீர் எப்போதும் இருக்கிறது என்பது. அதையும் சுத்தமாக பராமரிக்கிறார்கள் போலும்.//
நீக்குபடகு போகும் இடங்களில் நீங்கள் சொல்வது போல சுத்தமாக பராமரிக்கிறார்கள். சுற்றுலா வருபவர்கள் தான் காலை பாட்டிலை தூக்கி வீசுகிறார்கள். அதை ஆகாயத் தாமரைசெடிகள் அதை தாங்கி மிதந்து போகும். இன்னும் நிறைய இடங்கள் ஆகாயத்தாமரையால் நிறைந்து இருக்கிறது அதையும் அப்புறபடுத்தினால் உண்மையில் தண்ணீர் தேசம் தான்.
ஆற்றங்கரையோரம் அந்தி சூரியன் படம், ஆற்றின் பாம், இயற்கை அழகு கொஞ்சும் இடங்களின் படங்கள் எல்லாமே அருமை.
பதிலளிநீக்கு//ஆற்றங்கரையோரம் அந்தி சூரியன் படம், ஆற்றின் பாம், இயற்கை அழகு கொஞ்சும் இடங்களின் படங்கள் எல்லாமே அருமை.//
நீக்குமகன் மேலும் அழகாய் எடுத்து இருக்கிறான் இந்த மாலைச்சூரியனை.
அவன் போனில். நான் எடுக்கும் போது கீழே இறங்கி விட்டது சூரியன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
பதிவில் குறிப்பிடப்பட்ட இரண்டு கோயில்களும் அழகு. ஸ்ரீ நாராயண குரு - கேரளத்தில் மிகவும் பிரபலமான குரு. என் மலையாள நண்பர்கள் பலரும் இவர் மேல் நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு குழுவாக சேர்ந்து ஸ்ரீ நாராயண குரு பெயரில் நல்ல பல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார்கள் தில்லியில். படகுப் பயணம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குகல்வியறிவின்மை, மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழித்து, மக்களின் நலனுக்காக கல்வியை மேம்படுத்துவதற்காக அவர் பாடுபட்டார். பள்ளி, கல்லூரிகள் அவர் பெயரில் நடந்து வருகிறது கேரளத்தில் என்று படித்தேன்.
//ஸ்ரீ நாராயண குரு - கேரளத்தில் மிகவும் பிரபலமான குரு. என் மலையாள நண்பர்கள் பலரும் இவர் மேல் நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு குழுவாக சேர்ந்து ஸ்ரீ நாராயண குரு பெயரில் நல்ல பல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார்கள் தில்லியில்.//
உங்கள் நண்பர்கள் ஸ்ரீநாராயண குரு பெயரில் நல்ல விஷயங்களை செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகம் முழுவதும் அவர் சீடர் கள் இருக்கிறார்களாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.
கோவில் தரிசனம் கண்டோம். பொதுவா கேரளக் எஓவில்களில் படங்கள் எடுக்கவிடமாட்டார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
பதிலளிநீக்குபடங்கள் மிகழகு. படகுப் பயணம் செல்லும் ஆவலைத் தூண்டிவிட்டது.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோவில் தரிசனம் கண்டோம். பொதுவா கேரளக் எஓவில்களில் படங்கள் எடுக்கவிடமாட்டார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்.//
ஆமாம், வைக்கம் கோவில் போனோம், அங்கும் வெளிபக்கம் மட்டுமே அனுமதி.
//படங்கள் மிகழகு. படகுப் பயணம் செல்லும் ஆவலைத் தூண்டிவிட்டது.//
நன்றி.
இராமானுஜர், நாராயணகுரு, மாதா அமிர்தானந்தமயி போன்றவர்கள், கடவுள் சன்னிதானத்தில் பேத்த்திற்கு இடமில்லை, அனைத்து மக்களும் ஒன்றே, பக்தியே கடவுளிடம் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்பதைப் பறைசாற்ற அவதரித்தவர்கள்.
பதிலளிநீக்குமக்களில் ஒடுக்கப்பட்ட இனம் என்று இருப்பதே பெரும் பிழை.
//இராமானுஜர், நாராயணகுரு, மாதா அமிர்தானந்தமயி போன்றவர்கள், கடவுள் சன்னிதானத்தில் பேத்த்திற்கு இடமில்லை, அனைத்து மக்களும் ஒன்றே, பக்தியே கடவுளிடம் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்பதைப் பறைசாற்ற அவதரித்தவர்கள்.//
நீக்குஆமாம், நல்ல கொள்கை உடையவர்கள். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு எடுத்து காட்டு.
நன்றி.
//ஒரு ஜாதி, ஒரு மதம், மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் ஒரு கடவுள்//
பதிலளிநீக்குஎவ்வளவு உயர்ந்த சிந்தனை இதை அனைவரும் ஏற்றால் உலகில் பிரச்சனைகள் ஏது ?
வழக்கம் போல அழகிய படங்களுடன் விளக்கம் அருமை சகோ.
வாழ்க வையகம்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//எவ்வளவு உயர்ந்த சிந்தனை இதை அனைவரும் ஏற்றால் உலகில் பிரச்சனைகள் ஏது ?///
ஆமாம். நல்ல சிந்தனையை கடைபிடித்தால் உலகில் பிரச்சனைகள் இருக்காது.
//வழக்கம் போல அழகிய படங்களுடன் விளக்கம் அருமை சகோ.//
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
அருமயான படங்கள், விளக்கங்கள். இரு கோயில்களின் தரிசனமும் கிடைத்தது.
பதிலளிநீக்குகுருவின் மற்றொரு பொன்மொழி "மதம் ஏதாகினும் மனிதன் நல்லவனாய் வாழ்ந்தாலே போதும்" என்பது.
நல்ல அனுபவம் உங்கள் எல்லோருக்கும் இந்தப் படகுப்பயணம் கொடுத்திருக்கும்.
எங்களுக்கும் படங்கள் காட்டி விளக்கங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி, சகோதரி
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//அருமயான படங்கள், விளக்கங்கள். இரு கோயில்களின் தரிசனமும் கிடைத்தது.
குருவின் மற்றொரு பொன்மொழி "மதம் ஏதாகினும் மனிதன் நல்லவனாய் வாழ்ந்தாலே போதும்" என்பது.//
ஆமாம் அது தான் முக்கியம்.
//நல்ல அனுபவம் உங்கள் எல்லோருக்கும் இந்தப் படகுப்பயணம் கொடுத்திருக்கும்//
ஆமாம், நல்ல அனுபவங்களை கொடுத்தது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.
கோயில் தரிசனம் நன்று. அந்திச்சூரியன், வாடாமல்லிகள், குலை தள்ளிய வாழை யாவும் அருமை. ஆம், ஏரியின் அலைகள் கடல் அலை போன்று ஆனால் அமைதியாக அசையும், பார்க்க அழகாக மனதுக்கு அமைதி அளிப்பதாக இருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//கோயில் தரிசனம் நன்று. அந்திச்சூரியன், வாடாமல்லிகள், குலை தள்ளிய வாழை யாவும் அருமை.//
நன்றி.
//ஆம், ஏரியின் அலைகள் கடல் அலை போன்று ஆனால் அமைதியாக அசையும், பார்க்க அழகாக மனதுக்கு அமைதி அளிப்பதாக இருக்கும்.//
ஆமாம், அமைதியாக அசையும் தான். பார்க்க அழகாய் மனது அமைதி தருவது உண்மைதான் ராமலக்ஷ்மி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஒரு வாரமாக சரியில்லை.. தட்டச்சு செய்வதில் சிரமம்.. இப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் மிகுந்த சிரமத்துக்கிடையில் எனது பதிவுகள்..
நீக்குஅழகிய படங்களுடன் பதிவு.. சிறப்பு..
ஐயப்பன் கோயில் செல்லும் போதெல்லாம் ஸ்ரீ நாராயண குரு கோயில்கள் கண்டிருக்கின்றேன்..
விரல்களில் வலி..
தாமதத்திற்கு மன்னிக்கவும்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்
நீக்கு//ஒரு வாரமாக சரியில்லை.. தட்டச்சு செய்வதில் சிரமம்.. இப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் மிகுந்த சிரமத்துக்கிடையில் எனது பதிவுகள்..//
ஆமாம், எங்கள் ப்ளாக்கில் மற்றும் உங்கள் தளத்திலும் சொல்லி இருந்தீர்கள். உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.
//அழகிய படங்களுடன் பதிவு.. சிறப்பு..//
நன்றி.
//ஐயப்பன் கோயில் செல்லும் போதெல்லாம் ஸ்ரீ நாராயண குரு கோயில்கள் கண்டிருக்கின்றேன்..//
நல்லது, மகிழ்ச்சி.
கேரளா மற்றும் உலக நாடுகள் பல வற்றிலும் நாராயணகுரு கோவில் இருக்கிறது .
//விரல்களில் வலி..
தாமதத்திற்கு மன்னிக்கவும்..//
பதிவுகள் எங்கு போய் விடப் போகிறது உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள். மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
மாலை சூரியன் படம் மிகுந்த அழகு.
பதிலளிநீக்குதென்னை மர சோலை தெருவில் நடந்து செல்வதே ஆனந்தம்தான்.படங்கள் அனைத்தும் அழகு.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//மாலை சூரியன் படம் மிகுந்த அழகு.
தென்னை மர சோலை தெருவில் நடந்து செல்வதே ஆனந்தம்தான்.படங்கள் அனைத்தும் அழகு.//
ஆமாம், நீங்கள் ஸ்ப்ல்வது போல அனைததையும் ரசித்துகொண்டு நடந்து போவது மகிழ்ச்சியாக இருந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.