திருக்கருகாவூர் கோயில்
இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசம் அருகே 6 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் நாகபட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. காவிரி எனும் வெட்டாற்றின் கரையில் அமைந்து இருக்கும் அழகிய ஊர்.
குழந்தை பேறு அளித்து கருவை காத்து அருளும் அன்னை இருக்கும் கோயில் திருக்கருகாவூர். தேவாரதலங்களில் ஒன்று.
திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் இருவரும் பாடிய தேவார பாடல்பெற்ற தலம். பல சிறப்புகளை பெற்ற கோயில்.
இதற்கு முந்திய திட்டை கோயில் பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம். 21.4. 2022, 22.4 . 2022 இரு நாட்களும் சென்று தரிசனம் செய்து வந்த கோயில்கள் தொடர் பதிவு.
அம்மன் சன்னதியில் கோவில் தலவரலாறு அழகிய ஓவியங்களாக தீட்டப்பட்டு இருக்கிறது.
கோவில் தல வரலாறு :-
பெண்ணுக்கு திருமணம் ஆக வேண்டும் என்றாலும் திருமணம் ஆனவுடன் குழந்தை பேறு வேண்டும் என்றாலும், கருவில் உதித்த அந்த குழந்தை நல்லபடியாக வெளி உலகத்தை காண வேண்டும் என்றாலும் இந்த அம்மனை வேண்டி கொண்டால் நல்லபடியாக எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது .
இந்த ஊரில் நித்துருவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் வாழ்ந்து வந்தார்கள். வேதிகை கர்ப்பம் அடைந்து இருந்தார். அவர் கணவர் வீட்டில் இல்லை, வெளியே போய் இருந்தார். வேதிகை பேறுகால சமயம் என்பதால் களைப்பால் கண் அயர்ந்து மயக்க நிலையில் இருந்த போது ஊர்த்துவபாத முனிவர் பிட்சை கேட்டு வந்தார்.
வேதிகை மெல்ல எழுந்து வருவதற்குள் அலட்சியத்தால் பிட்சையிட வரவில்லை என்று கோபம் கோண்டு கரு கலைய சாபம் இட்டு விடுகிறார். (பெண்களின் பேறு கால சமயம் பெண்கள் படும் துனபத்தை அறியாதவர் போலும் ) நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பு, பசி எல்லாம் சேர்ந்து சினம் ஏற்பட்டு இருக்கிறது முனிவருக்கு.
வேதிகை அம்மனிடம் முறையிட்டு அழுகிறார். தாய் மனமிரங்கி வேதிகையின் கருவை குடத்திலிட்டு காத்து கொடுக்கிறாள். அந்த குழந்தை "நைதுருவன் "
அது முதல் அம்மன் கர்ப்பரட்சாம்பிகையாக போற்ற படுகிறாள் வேதிகை இன்று முதல் கர்ப்பம் தரித்தவர்களின் கருவை காத்து அருளவேண்டும் என்று கேட்டு கொள்கிறார் அன்னையிடம். அதன் பின் கோவில் உருவாகி இருக்கிறது.
இறைவன் முல்லைவன நாதர். இவர் சுயம்பு மூர்த்தி. விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு என்று சொல்கிறார்கள். அன்னையின் கோவில் பிறகு கட்டப்பட்டது. அன்னை கரப்பரட்சாம்பிகை.
இன்று விஞ்ஞான கண்டுபிடிப்பு கருவை வெளியே காத்து தாயாருக்கு கொடுப்பதை அன்றே அன்னை செய்து இருக்கிறாள்.
கரு உருவாக படியை நெய்யால் மெழுகும் பெண்கள், கருவுற்ற பெண்கள் நல்லபடியாக குழந்தை பிறக்க நெய் வாங்க வந்தவர்கள், குழந்தையை தங்க தொட்டிலில் போட்டு அன்னையிடம் காட்ட வந்தவர்கள் என்று எப்போதும் மகிழ்ச்சி அலையை பரவ விடும் இடமாக இருக்கிறது அன்னையின் கோயில்,பெண்களுக்கு தாய்வீடு போல இருக்கிறது.
கஷ்டம் வந்தால் சொல்லவும் மகிழ்ச்சி ஏற்பட்டவுடன் அதை பகிர்ந்து கொள்ளவும் தாய் இருக்கிறாள்.
சுவாமி பேர்- முல்லைவனேசுவரர், அம்மன் பேர்- கரும்பனையாளம்மை. முல்லைவனத்தில் சுயம்பாக தோன்றியவர் அவர் உடலில் முல்லைகொடிகள் அடையாளம் இருக்கும்.
கோவில் வாசலிலில் இருந்து எடுத்த படம்
திருக்குளத்தின் நடுவில் இருக்கும் அம்மன்
மீனுக்கு காத்து இருக்கும் வெண் கழுத்து மீன் கொத்தி
இடது பக்கம் கோசாலை, வலது பக்கம் வசந்த மண்டபம். அதில் வைக்கோலை போட்டு வைத்து இருந்தார்கள் அதனால் படம் எடுக்கவில்லை.
வெயில் தெரியவில்லை வேப்பமர காற்று நிழல் தரும் மண்டபம்
அன்னதானவழங்கும் இடம் போகும் பாதை11 மணிக்கே டோக்கன் பெற்று அமர்ந்து விடுவார்களாம். இத்தனை பேருக்குத்தான் என்று அளவு வைத்து இருப்பார்கள் போலும்.
அன்னதான கூடம் அருகில் கழிவரையும், குளியல் அறையும் இருக்கிறது.
அன்னை இருக்குமிடம்
அருகில் அழகிய நந்தவனம்
குழந்தை பிறந்தவுடன் வேண்டுதலை நிறைவேற்ற வந்து இருக்கும் அன்பர்கள். தொட்டிலில் மூன்று வயது பாலகன் மகிழ்ச்சியாக கோவிலை வலம் வந்தான், இடுப்பில் இருக்கும் பாலகனை அடுத்து தொட்டிலில் படுக்க வைத்த போது அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டான்.
அன்னைக்கு மகிழ்ச்சியாக நன்றி சொல்ல வந்த குடும்பம்
இரட்டை குழந்தைகள் இரண்டும் ஆண்குழந்தைகள்
அம்மன் கோயில் தூணில் இருந்த அழகிய சிற்பம்துலாபாரம் கொடுக்க தயாராக இருக்கிறது.
தேர் சக்கரம் போன்ற அமைப்பு நிறைய கோயில்களில் பார்த்து இருப்பீர்கள்.
ஸ்வாமி சன்னதி விமானம்
அம்மன் சன்னதி விமானம், தலவிருடசம் முல்லைக் கொடி
கோவில் தரிசன நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை. மாலை 3 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்து இருக்கும். என் மருமகளின் தோழிக்கு இந்த கோயிலில் நெய் வாங்கி அனுப்பினோம். இப்போது அழகிய பெண் குழந்தை இருக்கிறாள் 5 வயது அவளுக்கு. கோயில் அலுவலகத்தில் பணம் கட்டி முகவரியை சொல்லி விட்டால் பிரசாதம் அனுப்பி வைத்து விடுவார்கள்.
அடுத்து எந்த கோயில் போனோம் என்பது அடுத்த பதிவில்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
திருக்கோவில் குளமே பெரிதாக இருக்கிறதே... அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குகாமதேனு பால கொடுத்த குளம் ஆச்சே! பெரிதாக இருக்கும் தான். தண்ணீர் நிறைய இருந்தால் இன்னும் அழகாய் இருக்கும்.
தண்ணீரே மிக கம்மியாக இருக்கும் போல.. மீன்கொத்தி வேறு ஆவலாய்க் காத்திருக்கிறது!
பதிலளிநீக்குதண்ணீர் நிறைய இல்லை ஆனால் மீன்கள் இருக்கிறதே! ஆதுதான் மீன் கொத்திகாத்து இருக்கிறது. நானும் அது வேகமாய் கீழே இறங்குவதை பார்க்க காத்து இருந்தேன் சிறிது நேரம் . நேரம் ஆகி விட்டது போகலாம் என்றார்கள் உறவினர்கள் அதனால் வந்து விட்டேன்.
நீக்குதிருக்கடையூர், திருக்கருகாவூர், திருநாகேஸ்வரம் கோவில் எல்லாமே கொஞ்சம் ஒரே மாதிரி அமைப்பில் இருக்கும் கோவில்களோ...
பதிலளிநீக்குதிருக்கருகாவூர் கோயிலை விட மற்ற இரண்டு கோயில்களும் பெரிது.
நீக்குசோழர் காலத்தில் கட்டிய கோயில்கள் தான் என்று நினைக்கிறேன். அதனால் ஒரே மாதிரி இருக்கலாம்.
ஓரிரு நாட்கள் முன்பு வேதபுரீஸ்வரர் கோவில் செண்டிருந்தேன். அந்நகாநாத் கூட்டத்துக்குள் அவ்வப்போது சிலர் நுழைந்து கொண்டிருந்தார்கள். எவ்வளவு பேர்களுக்கு தயார் செய்வார்களோ...
பதிலளிநீக்குவேதபுரீஸ்வரர் கோவிலில் உணவுக்கு வருபவர்களை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 100 பேருக்கு அன்னதானம் தயார் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குஆம்!! 'அன்னதானக் கூடத்துக்குள்' என்றிருக்க வேண்டும்! பேட்ச் பேட்சாக போட்டுக் கொண்டிருந்தார்கள்!
நீக்குநிறைய பேருக்கு சமைப்பார்கள் போலும் பேட்ச் பேட்சாக என்றால் நிறைய பேர் இருப்பார்களே! அன்று அன்னதான திட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு இருப்பார்கள் போலும்.
நீக்குஇரட்டைக் குழந்தைகள் அழகு. அன்னையின் அருளில் சௌக்கியமாக இருக்கட்டும். படங்கள் யாவும் சிறப்பு.
பதிலளிநீக்குநாங்களும், கோயிலில் இருந்தவர்களும் இரட்டை குழந்தைகளை வாழ்த்தினோம். தாத்தா பாட்டிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . என்ன குழந்தைகள் என்று கேட்டு போட்டோ எடுக்க அனுமதி பெற்றேன். முகத்தை மலர்ச்சியாக வைத்து கொண்டு ஆண் குழந்தைகள் என்று பெருமிதமாக சொன்னார்கள். குழந்தைகளை வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன் என்று வாழ்த்தினோம், அன்னையிடம் அவர்களை நல்ல குழந்தைகளாக ஆரோக்கியமான குழந்தைகளாக ஆசீர்வாதம் செய் அம்மா என்று வேண்டினோம்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களும் நலம் சேர்க்கும் குழந்தைகளுக்கு.
பெற்றவர்களுக்கும், உற்றவர்களுக்கும் அந்த குழந்தைகள் பெருமை சேர்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி.
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
அன்னையின் கோவில் தரிசனம் கிடைத்தது.
நல்ல கோவில் முல்லைப் பூவின் அழகு சொல்லி முடியாது. நாங்கள் சென்று வந்து
10 வருடங்கள் ஆகிவிட்டது.
அப்போது நீங்கள் மாயவரத்தில் இருந்தீர்கள்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குபத்து வருடம் முன்பு தரிசனம் செய்து வந்தீர்களா? நல்லது.
நான் மூன்று தடவை போய் இருக்கிறேன்.
மாயவரத்தில் இருக்கும் போது இரண்டுதடவை. இங்கு வந்தபின் திடீர் என்று கிடைத்த தரிசனம். தங்கை மணிவிழாவிற்கு திருக்கடவூர் போகும் போது வழியில் உள்ள கோயில்கள் பார்த்த போது கிடைத்தது.
திருக்கருகாவூர் தென்னை மரங்கள் அடர்ந்த பிரகாரச் சுற்று நன்றாக
பதிலளிநீக்குநினைவில் இருக்கிறது.
தொட்டிலில் கிடக்கும் இரட்டையர் அபூர்வ ஆனந்தம்.
தங்கத்தொட்டிலாக இருந்தாலும் குழந்தைகளுக்கு உறுத்துமோ என்னவோ.
அதுதான் அழுதிருக்கிறான்
அந்த மழலை.
கருகாவூர் அன்னை என்னாளும் நம் மக்களை வாழ வைக்க வேண்டும்.
வாஹ்க வளமுடன் அன்புத் தங்கச்சி.
கோயிலில் நிறைய மாற்றங்கள் அக்கா. பழைய மாதிரி இப்போது இல்லை. தங்கத் தொட்டிலில் இரட்டையர் அழவில்லை சமத்தாக படுத்து இருந்தார்கள்.வேறு இரண்டு வயது குழந்தை அழுதான்.
நீக்குதங்கத்தேர் என்றாலும் குழந்தைக்கு அழுத்தும் தான்.
//கருகாவூர் அன்னை என்னாளும் நம் மக்களை வாழ வைக்க வேண்டும்.
வாஹ்க வளமுடன் அன்புத் தங்கச்சி.//
நம் மக்களை நலமோடு வாழ பிரார்த்தனை செய்து கொள்வோம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.
கோயில் படங்கள் எல்லாமே மிக அழகு கோமதிக்கா. எனக்கு மிகவும் பிடித்த அம்மன் கர்ப்பரஷகாம்பிகை. இப்படியான கோயில் அம்மனை அறிந்ததே நான் அறிய வந்ததே மருத்துவர் ஜெயம் கண்ணன் அவர்களின் மூலம்தான் அவங்க இந்தக் கோயிலுக்கு நிறைய செய்வாங்க அவங்க மருத்துவமனை (சென்னையில்) பெயரும் அம்மன் பெயரில்தான். அவங்க இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குமருத்துவர் ஜெயம் கண்ணன் அவர்கள் பொதிகையில் வார வாரம் பேசுவார்கள். திரு மந்திர பாடல்களில் குழந்தையின் வளர்ச்சி பாடலுக்கு விளக்கம் சொல்வார்கள். கேட்பேன்.
உங்களுக்கு பிடித்த அம்மன் என்று அறிந்து மகிழ்ச்சி.
அக்கா அந்த கோசாலை படத்தில் மண்டபம் செம் அழகு தூண்கள், படம்கும் அழகா எடுத்திருக்கீங்க
பதிலளிநீக்குகுளம் பெரிது ஆனால் தண்ணீர்தான் குறைவாக இருந்தது போலும் வெயிலினால். மீன் கொத்தி ஆஹா அழகு நல்ல தெளிவா வந்திருக்கு கோமதிக்கா படம். இதே வெண்மார்பு/கழுத்து மீன் கொத்தி வீட்டருகில் ஏரியில் நிறைய தினமும் பார்க்கலாம் நானும் இதன் படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன் அது போல வேறொரு வகையும் எடுத்திருக்கிறேன். ஆனால் அதை இப்போது காண முடிவதில்லை.
மிக அழகு கலரைப் பாருங்கள்!!! ஷைனிங்க். இயற்கையின் அற்புதம்! ரசித்துப் பார்த்தேன். அதற்கு மீன் கிடைத்ததோ என்னவோ..
கீதா
அக்கா அந்த கோசாலை படத்தில் மண்டபம் செம் அழகு தூண்கள், படம்கும் அழகா எடுத்திருக்கீங்க//
பதிலளிநீக்குநன்றி கீதா.
தண்ணீர் வரும் பாதைகள் சரியாக இருக்கா ? வெயிலால் தண்ணீர் குறைவா தெரியவில்லை.
ஏரிக்கரையோரம் அதிகமாய் பார்க்கலாம் கீதா. இன்னொன்று நானும் வைத்திஸ்வரன் கோயில் திருக்குளம் அருகே எடுத்தேன். முன்பு பழைய பதிவில் இருக்கும்.
ஆமாம் நிறைய எடுத்தேன் மீன் கொத்தியை இரண்டு மட்டும் இங்கு போட்டேன்.
படங்களை ரசித்துப்பார்த்து சொன்ன கருத்துக்களுக்கு நன்றி கீதா.
தொட்டிலில் குழந்தைகள் வலம் வருவது அழகு என்றால் அந்த இரட்டையர்கள் அழகு. தொட்டிலும் பார்க்க அழகாக இருக்கிறது. அம்மை எல்லோருக்கும் அருள் பொழிய வேண்டும்.
பதிலளிநீக்குதிருக்கருகாவூர் அம்மன் பற்றி கவிநயாம்மா எழுதியிருக்க அதைப் பாடிப் பதிந்த நினைவும் இருக்கிறது. டக்கென்று பாடல் வரிகள் நினைவுக்கு வரவில்லை..திருமியச்சூர் அம்மன் பற்றிய பாடல்தான் டக்கென்று மனதில் வருகிறது.
கோவில் வரலாறும் முன்பே அறிந்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் இங்கு கோயிலில் இருக்கும் படங்களுடன் நீங்கள் போட்டிருப்பதையும் பார்த்து அறிந்தேன். நன்றி கோமதிக்கா
அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா
கீதா
ஆமாம், தொட்டிலில் குழந்தைகள் உறவினர்களுடன் வலம் வருவது அழகு.
நீக்குஅம்மை எல்லோருக்கும் அருள் புரிய வேண்டுவோம்.
கவிநயாம்மா பாடி பாடல் கேட்டு இருப்பேன், முன்பு இவர்களும் சுப்பு தாத்தாவும் அடிக்கடி பாடல்கள் பாடி பதிவாரகள்.
இந்த கோயிலுக்கு நிரைய வரலாறு இருக்கிறது கீதா. குழந்தைபேறு வரலாறு மற்ற எல்லாவற்றையும் விட முன் நிற்கிறது மக்கள் மனதில்.
பதிவில் அனைத்தையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான பதிவு. கோவிலைப் பற்றிய விபரங்கள் அருமை. திருக்கருகாவூர் அன்னையை தரிசித்து கொண்டேன். நானும் இக்கோவிலுக்கு சென்றதில்லை. அன்னையின் சக்தியைப்பற்றி கேள்விபட்டுள்ளேன். என் அண்ணாவின் இரண்டாவது மருமகளும் அப்போது இக்கோவிலுக்கு வேண்டிக் கொண்டு பெண் குழந்தை பிறந்ததும், ரக்ஷிதா என்ற பெயர் இட்டார்கள். பின் நீங்கள் கூறியது போல் கோவில் வேண்டுதலையும் முடித்து வந்து இப்போது நல்லபடியாக வளர்ந்து விட்டாள். இப்போது அந்த குழந்தை ஒன்பதாவது வகுப்பு படிக்கிறாள். அன்னை அனைத்து குழந்தைகளையும் கருணையுடன் பார்த்து வாழ்நாள் முழுக்க நல்லாசிகள் வழங்க வேண்டுமென நானும் மனதாற அன்னையை பிரார்த்தித்து கொள்கிறேன்.
கோவில் ஸ்தல வரலாறு படித்து தெரிந்து கொண்டேன். நீங்கள் கூறியிருப்பது போல இந்தக்கால விஞ்ஞான வளர்ச்சியை அன்னை இயற்கையாக நிறைவேற்றி காட்டியிருக்கிறார். அந்த உண்மை நிகழ்வு மெய் சிலிர்த்து விட்டது.
"காற்றுக்கு படிக்கத் தெரியாது" வாசகம் அருமை. கோவில் குளம் மற்றபகுதிகளையும், குழந்தை பிறந்தவுடன் பிரார்த்தனை நிறைவேற்ற வைத்திருக்கும் அழகிய தொட்டில் போன்றவைகளை தங்கள் பதிவில் பார்த்து தரிசித்துக் கொண்டேன். மிக்க நன்றி அன்னையின் அருளால் பிறந்திருக்கும் அந்த இரட்டைக்குழந்தைகளை நானும் மனதாற வாழ்த்துகிறேன். .
மீன் கொத்தி பறவை படமும் மிக அழகாக உள்ளது. கருணை நிரம்பிய தங்களைக் காண இந்தப் பறவைகளுக்கு எவ்வளவு ஆர்வம் என எண்ணும் போது உங்களை பாராட்டாமல் இருக்க என்னால் இயலவில்லை. உங்களின் அன்பு எல்லா பறவைகளுக்கும் ஒரு சிறந்த வரம். பறவைகளுடன் நானும் உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். படங்கள் அனைத்தும் அழகாக எடுத்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஅண்ணன் பேத்தி அன்னையின் அருளால் பிறந்தது அறிந்து மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் ரஷிதா.
//அன்னை அனைத்து குழந்தைகளையும் கருணையுடன் பார்த்து வாழ்நாள் முழுக்க நல்லாசிகள் வழங்க வேண்டுமென நானும் மனதாற அன்னையை பிரார்த்தித்து கொள்கிறேன்.//
மனதாற அன்னையை பிரார்த்தித்து கொள்கிறேன் நானும் உங்களுடன்.
//விஞ்ஞான வளர்ச்சியை அன்னை இயற்கையாக நிறைவேற்றி காட்டியிருக்கிறார். அந்த உண்மை நிகழ்வு மெய் சிலிர்த்து விட்டது.//
ஆமாம், கமலா நிறைய புராணகதைகளில் இப்போது விஞ்ஞான வளர்ச்சியில் சாதனை செய்து இருப்பது வரும். கண்ணப்பர் கண் கொடுத்த கதை, அகத்தியருக்கு தன் திருமணத்தை இருந்த இடத்திலிருந்து நேரடி ஒளி, ஒலி பரப்பியது. என்று நிறைய இருக்கிறது.
//அன்னையின் அருளால் பிறந்திருக்கும் அந்த இரட்டைக்குழந்தைகளை நானும் மனதாற வாழ்த்துகிறேன்.//
நல்லது நம் எல்லோர் வாழ்த்துக்களும் அன்னையின் அருளும் அந்த குழந்தைகளை நல்லபடியாக வாழவைக்கும்.
//மீன் கொத்தி பறவை படமும் மிக அழகாக உள்ளது. //
நன்றி. தேடினேன் பறவைகளை கிடைத்தது பகிர்ந்தேன்.உங்கள் பாராட்டும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னொரு கோயிலில் கிளிகளை எடுத்தேன். அவை முகம் காட்டவே இல்லை.சில நேரம் நமக்கு ஏமாற்றமும் கிடைக்கும்.
பதிவை படித்து படங்களை ரசித்து மனமார்த்த வாழ்த்துக்களை சொல்லி கருத்து க்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி.
திருக்கருகாவூர் தல புராணத்துடன் அழகிய படங்கள்..
பதிலளிநீக்குபிரத்யக்ஷ தேவியவள் கர்ப்ப ரக்ஷாம்பிகை..
அனைவரையும் அவள் காத்தருள வேண்டும்..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//பிரத்யக்ஷ தேவியவள் கர்ப்ப ரக்ஷாம்பிகை..//
ஆமாம்.
அனைவரையும் அவள் காத்தருள வேண்டும்.//
அமாம், அதுதான் நம் பிரார்த்தனையும். பிரார்த்தனை செய்வோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான விபரங்களுடன் கூடிய பதிவு. படங்கள் எல்லாமே அருமை. நாங்கள் பல முறை பலருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு சென்றிருக்கோம். எண்ணெய் வாங்கி அனுப்பி இருக்கோம்.இப்போக் கடைசியாப் போனது குஞ்சுலு பிறக்கும் முன்னர் மருமகள் அங்கே படிக்கட்டை நெய்யால் மொழுகும்போது குடும்பத்தோடு போயிருந்தோம். அது முடிந்த பின்னர் குஞ்சுலுவின் ஒன்றரை வயதில் குலதெய்வம் மொட்டை முடிந்த பின்னர் நேரே இங்கே வந்து தான் தங்கத் தொட்டிலில் குழந்தையைப் போட்டுப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்தோம். மருமகள் கர்ப்பமாய் இருக்கையில் கருக் கலைந்து விடுமோ என மருத்துவரே கவலைப்பட்டார் எனப் பையர் தொலைபேசியில் தெரிவித்து அழுதபோது நாங்க இருவரும் உடனே மறுநாள் திருக்கருகாவூர் சென்று அம்மனை மனதாரப் பிரார்த்தித்து வந்தோம். எண்ணெயையும் வாங்கி உடனே மருமகளின் பெற்றோருக்கு அனுப்பி உடனே அவங்களுக்கு உதவ வேண்டி அவங்களையும் கிளம்பிப் போகச் சொன்னோம். உண்மையில் குஞ்சுலு பிறந்தது அம்பிகையின் அருளேயன்றி வேறில்லை.
பதிலளிநீக்குவணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் பலமுறை போய் பலருக்கு பிரார்த்தனை செய்து வந்தது மகிழ்ச்சி.துர்கா அம்மன் அருளால் பிறந்தது மகிழ்ச்சி.
பலருக்கு பிரார்த்தனை செய்து எண்ணெய் வாங்கி அனுப்பிய உங்களுக்கு அன்னை அருளாமல் இருப்பார்களா?
நீங்கள் இந்த விவரங்கள் மதுரை வந்த போது சொல்லி இருக்கிறீர்கள்.
நம்பிக்கையுடன் வருபவர்களை அம்மன் கைவிடுவது இல்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கருத்துப் போனதா இல்லையா எனத் தெரியலை. :( கருத்து மாடரேஷன் இருக்கு இல்லையா? வெளிவந்தால் தான் தெரியும்.
பதிலளிநீக்குவந்து விட்டது. பதில் கொடுத்து விட்டேன்.
நீக்குஅருமையான படங்கள்... நாங்களும் ஒருமுறை சென்று வந்துள்ளோம்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநீங்களும் சென்று வந்தது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான படங்கள். விரிவான தகவல்கள். மீன் கொத்திப் பறவையை அழகாகப் படமாக்கியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை, பறவையை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
குழந்தை வரம் கொடுக்கும் அன்னை அற்புதமான கோவில் தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குகுழந்தை வரம், குழந்தையை காக்க வரம் கொடுக்கும் தாய்.
உங்கள் கருந்துக்கு நன்றி மாதேவி.
அருமையான படங்கள் தல வரலாறு அறிந்தேன்.
பதிலளிநீக்குஇந்தக் கோயிலுக்கு சென்று வரவேண்டும்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குசென்று வாருங்கள் . உங்கள் கருத்துக்கு நன்றி.