ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்


ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்


சிங்கப்பூர் போய் இருந்த போது தரிசனம் செய்த  கோவில்களை பகிர்ந்து வருகிறேன். போன பதிவில் வீரமாகாளியம்மன் கோவில்.
 இந்த பதிவில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் இடம்பெறுகிறது


தசவாதார காட்சி

கோபுர வாசலின் இருப்பக்க சுவற்றில் இப்படி அழகான கதை சொல்லும் சிற்பங்கள்.


"லிட்டில் இந்தியா"  என்று அழைக்கப்படும் இந்த  இடத்தில் சிராங்கூன் சாலையின் முன்பக்கம் பேரூந்தை விட்டு இறங்கியவுடன் கோவில்  இருக்கிறது.  1800 -ம் வருஷம் இந்த கோவில்  கட்டப்பட்டு இருக்கிறது. முதலில் நரசிம்ம பெருமாள் கோவில் என்று அழைத்து இருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் திருக்குளம் இருந்ததாம். அதில் குளித்து விட்டு இறைவனை பக்தியோடு வழிபடுவார்களாம். இப்போது அந்த குளம் மண்மூடி விட்டதாம்.

வெளி பக்கம் இருந்து எடுத்த  படம்

உள் பக்கம் இருந்து எடுத்த வாசல் படம்
அழகிய தூண்கள், அழகான வேலைப்பாடு மேல் விதானத்தில்

கொடிமரமும் மேல் விதானமும்



கருடாழ்வாரை தரிசனம் செய்து விட்டு பெருமாளை பார்க்க போகிறோம்.


                                           ராசி கட்டங்கள்

அழகான தூண்கள்  பின்புற உயர்ந்த கட்டிங்களும்  கோவில் நிறத்திலேயே இருக்கிறது.

தூண்களிலும் சிறூ சிறு சிற்பங்கள் இருக்கிறது

கருடாழ்வார் , லட்சுமி  இந்தபக்கம் தெரிகிறது, தூணின் நாலுபக்கமும்  அழகான சிற்பங்கள் இருக்கிறது.

 பழமுதிர் சோலையில் உள்ளது போல பிள்ளையாரும், வேலும் ஒரு இடத்தில் இருக்கிறார்கள்.

 முதலில் பிள்ளையாரையும், வேலையும், நரசிம்மரையும் வைத்து வணங்கி இருக்கிறார்கள். இப்போது நரசிம்மரை காணோம். யோக நரசிம்மர் இருக்கிறார். 


    மூலவர் இருக்கும் இடத்தின் அழகான தோற்றம்

                                  உச்சிக்கால பூஜை ஆகிறது.
                         ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள்


பெருமாள் இருக்கும் சன்னதியின் பக்கவாட்டில் இப்படி  துளசி செடி தொட்டிகள், மற்றும் அலங்கார குடை,  செடிகள் வைத்து இருக்கிறார்கள். தீர்த்தம், சடாரி எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.
மகாலெட்சுமி சன்னதி உற்சவரும் , மூலவரும்.



சக்கரத்தாழ்வார்,  மூலவரும், உற்சவரும், பின்னால் கண்ணாடியில் யோகநரசிம்மர் தெரிகிறார்.

விஷ்ணு துர்க்கை, மூலவரும் உற்சவரும்.
அஷ்ட தசபுஜ துர்க்கை சிலை சுவற்றில் , தங்கத்தேர்
வெள்ளி சப்பரம் இருக்கிறது , அடுத்த பதிவில் இடம்பெறும்.

                                          ஆண்டாள் சன்னதி

சுவாமி எழுந்தருளும் மண்டபம்.  மேல் விமானத்தில் தசவாதார சிற்பங்கள்.

மேலும் படங்கள் அடுத்த பதிவில்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

------------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    மேலும் மிக மிகத்தெளிவாக இருக்கிறது

    நானும் தரிசனம் செய்து கொண்டேன் மிக்க நன்றி.

    பின்புற கட்டிடங்களும் அதே நிறத்தில் இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

      மேலும் மிக மிகத்தெளிவாக இருக்கிறது//

      நன்றி.


      //நானும் தரிசனம் செய்து கொண்டேன் மிக்க நன்றி.

      பின்புற கட்டிடங்களும் அதே நிறத்தில் இருப்பது சிறப்பு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. ஆடி அமாவாசைக்கு பெருமாள் தரிசனம்! தரிசித்துக் கொண்டேன். கோவிலின் உள்ளே இருந்து வெளி நோக்கி எடுத்த படமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம் , வாழ்க வளமுடன்

      //ஆடி அமாவாசைக்கு பெருமாள் தரிசனம்! தரிசித்துக் கொண்டேன். கோவிலின் உள்ளே இருந்து வெளி நோக்கி எடுத்த படமும் அழகு.//

      நன்றி.

      நீக்கு
  3. அழகிய படங்கள்.  ஒன்று சொல்ல வேண்டும்.  பக்கச் சுவர்களும் சரி, தூண்களும் சரி..  கறுப்புப் படியாமல் சுத்தமாக இருக்கின்றன.  விதானங்களும் பளபள என்று இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு விபூதி, குங்குமத்தை தூண்களில் கொட்டமாட்டார்கள் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
    2. //அழகிய படங்கள். ஒன்று சொல்ல வேண்டும். பக்கச் சுவர்களும் சரி, தூண்களும் சரி.. கறுப்புப் படியாமல் சுத்தமாக இருக்கின்றன. விதானங்களும் பளபள என்று இருக்கின்றன.//

      இடத்திற்கு ஏற்றார் போல நம் மக்களும் அங்கு போகிறவர்கள் கோவிலை சுத்தமாக வைத்து கொள்கிறார்கள்.
      இங்கு தேவகோட்டை ஜி சொல்வது போல தூண்களில் விபூதியை , குங்குமத்தை கொட்டி எண்ணெய் கைகளை சுவரில், தூணில் துடைப்பார்கள், தூணில் இருக்கும் சிற்பங்களுக்கும், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டு விளக்கு ஏற்றி சூடனை காட்டி கும்பிட்டால் கறுமை படியும் அதெல்லாம் அங்கு இல்லை அதனால் சுத்தமாக இருக்கிறது.

      நீக்கு
  4. எல்லா இடங்களையும் வளைத்து வளைத்து படம் எடுத்திருப்பதிலிருந்து படம் எடுக்கத் தடையில்லை என்று தெரிகிறது!!  எல்லாப் படங்களும் அத்தெளிவாக அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லா இடங்களையும் வளைத்து வளைத்து படம் எடுத்திருப்பதிலிருந்து படம் எடுக்கத் தடையில்லை என்று தெரிகிறது!! எல்லாப் படங்களும் அத்தெளிவாக அழகாக இருக்கின்றன.//

      அங்கு தடை செய்யவில்லை படம் எடுப்பதை இருந்தாலும் தயக்கம் பக்கத்தில் போய் எடுக்க. தூரத்திலிருந்து படங்களை அலைபேசியில் எடுத்தேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. அளவான படங்களுடன் சுருக்கமான விளக்கங்களுடன் பதிவு கட்சிதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்

      //அளவான படங்களுடன் சுருக்கமான விளக்கங்களுடன் பதிவு கட்சிதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //தரிசனம் சிறப்பு அம்மா...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு கோமதிக்கா. 22 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன் என்பதால் கோயில் உட்புறம் இவ்வளவு அழகான தூண்கள் வேலைப்பாடுகள் இருந்தனவா என்று நினைவில்லை. ஒரு வேளை நான் கவனிக்கலையோ என்னவோ. செராங்கூர், லிட்டில் இந்தியா பகுதி நினைவிருக்கிறது சாலைகள் கூட. அருகில் இருந்த கோமளவிலாஸ் உணவகத்தில் உணவு சாப்பிட்டதும் கூட நினைவிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு கோமதிக்கா.//

      நன்றி.

      22 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன் என்பதால் கோயில் உட்புறம் இவ்வளவு அழகான தூண்கள் வேலைப்பாடுகள் இருந்தனவா என்று நினைவில்லை. ஒரு வேளை நான் கவனிக்கலையோ என்னவோ.//

      கோவில் நிறைய மாற்றங்கள் பெற்று இருக்கலாம். 22 வருடங்கள் ஆச்சே!

      //செராங்கூர், லிட்டில் இந்தியா பகுதி நினைவிருக்கிறது சாலைகள் கூட. அருகில் இருந்த கோமளவிலாஸ் உணவகத்தில் உணவு சாப்பிட்டதும் கூட நினைவிருக்கிறது.//

      கோமளவிலாஸ் இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் கோமதிக்கா....இவ்வளவு பெரிதாக வேளைப்பாடுகளுடன் இத்தனை சன்னதிகளுடன் பார்த்த நினைவில்லை. இப்போது புதிதாகத் தெரிகிறது. இவ்வளவு பளிச்சென்றும் இருந்ததாக நினைவில்லை...

      கீதா

      நீக்கு
  8. சிற்பங்கள் மேல்விதான டிசைன் எல்லாம் செம அழகு.

    பக்க்வாட்டில் துளசித் செடிகள் தொட்டிகள் எல்லாம் இருப்பது அழகாக இருக்கிறது அங்கு சூரிய வெளிச்சம் வருமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிற்பங்கள் மேல்விதான டிசைன் எல்லாம் செம அழகு.//

      ஆமாம்.

      //பக்க்வாட்டில் துளசித் செடிகள் தொட்டிகள் எல்லாம் இருப்பது அழகாக இருக்கிறது அங்கு சூரிய வெளிச்சம் வருமோ?//

      துள்சியை தவிர மற்றவை வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படும் செடிகள்தான். துளசி வழிப்பாட்டுக்கு வைத்து இருப்பார்கள் போலும்.துளசி தொட்டிக்கு பட்டு துணி சுற்றி இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. அருமையான தரிசனம் எங்களுக்கும். சிற்பங்களும் வேலைப்பாடுகளும் அழகு. மேல்விதான வடிவமைப்புகள் சிறப்பு. குறிப்பாக ராசிக்கட்டங்கள் மேல்விதானத்தில் பார்த்திராத ஒன்று.

    அழகிய படங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அருமையான தரிசனம் எங்களுக்கும். சிற்பங்களும் வேலைப்பாடுகளும் அழகு. மேல்விதான வடிவமைப்புகள் சிறப்பு. குறிப்பாக ராசிக்கட்டங்கள் மேல்விதானத்தில் பார்த்திராத ஒன்று.//

      நம் ஊரில் நிறைய கோவில்களில் இந்த ராசி கட்டங்கள் இருக்கிரது ராமலக்ஷ்மி.

      மேல் விதானம் மிகவும் உயரமாக இருக்கும் படம் எடுக்க மிகவும் கஷ்டமாக இருக்கும். இங்கு உயரம் குறைவாக இருந்தால் படம் எடுக்க முடிந்தது.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.


      அழகிய படங்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் படங்கள், கோவிலைப்பற்றிய விபரங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் எப்போதும் போல நன்றாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பெருமாள் திருப்பதி பெருமாள் மாதிரி உள்ளார். நன்றாக தரிசனம் செய்து கொண்டேன். அவர் காலடியில் குழலூதும் கிருஷ்ண விக்கிரமா? படத்தைப் பெரிதாக்கி பார்த்தும் சரியாக தெரியவில்லை. அதனால்தான் கேட்கிறேன்.

    மேல் விதான போட்டோக்கள், அழகான தூண்களை எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் அழகாக இருக்கிறது. அத்தனையையும் ரசித்துப் பார்த்தேன். இந்த கோவில் எல்லாம் உங்கள் தயவில் பார்த்தாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமை. சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் படங்கள், கோவிலைப்பற்றிய விபரங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் எப்போதும் போல நன்றாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.//

      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      //பெருமாள் திருப்பதி பெருமாள் மாதிரி உள்ளார். நன்றாக தரிசனம் செய்து கொண்டேன். அவர் காலடியில் குழலூதும் கிருஷ்ண விக்கிரமா? படத்தைப் பெரிதாக்கி பார்த்தும் சரியாக தெரியவில்லை. அதனால்தான் கேட்கிறேன்.//

      ஆமாம், திருப்பதி பெருமாள் மாதிரிதான் இருக்கிறார்.
      அவர் காலடியில் இருப்பது குழலூதும் கிருஷ்ணர் தான் .

      //மேல் விதான போட்டோக்கள், அழகான தூண்களை எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் அழகாக இருக்கிறது. //
      ஆமாம். அத்தனையும் அழகுதான்.


      //அத்தனையையும் ரசித்துப் பார்த்தேன். இந்த கோவில் எல்லாம் உங்கள் தயவில் பார்த்தாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      என்னை மகன் சிங்கப்பூர் அழைத்து போனதால் இந்த கோவில்களை பார்க்க முடிந்தது, ஓர்ப்படி மகளும் இந்த கோவிலுக்கு அழைத்து சென்றாள்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  11. தைப் பூசக் காவடிகள் இந்த பெருமாள் கோயிலில் இருந்து தான் புறப்படும்...

    மனமெல்லாம் பழைய நினைவுகள்..

    நான் வேலை செய்த இடத்தில் புறப்பட்டால் ஒரு மணி நேர பயணத்தில் இங்கு வந்து நிற்கும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //தைப் பூசக் காவடிகள் இந்த பெருமாள் கோயிலில் இருந்து தான் புறப்படும்...//

      ஓ !அப்படியா முருகனின் வேல் வைத்து வணங்கி வருகிறார்கள் அல்லவா?


      //மனமெல்லாம் பழைய நினைவுகள்..//

      நினைவுகள் மறப்பது இல்லை.

      //நான் வேலை செய்த இடத்தில் புறப்பட்டால் ஒரு மணி நேர பயணத்தில் இங்கு வந்து நிற்கும்..//

      அடிக்கடி போய் தரிசனம் செய்து இருப்பீர்கள், இப்போது கோவில் நிறைய மாற்றங்கள் தெரியுமே! உங்களுக்கு.

      //நலம் வாழ்க..//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. அழகிய படங்களுடன் சிங்கை பெருமாள் தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் மனம் ஆறுதல் அடைந்து வரும் என்று நினைக்கிறேன்.
      உங்களை மீண்டும் வலைத்தளம் பார்த்தது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு