நாங்கள் தங்கி இருந்த படகு வீடு
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் இரண்டு நாள் படகு வீட்டில் சவாரி செய்தோம். மூன்றாம் நாள் காலை படகு வீட்டை பிரிய மனம் இல்லாமல் வந்தோம். படகில் சுற்றி காட்டினார்கள், இரவு மீண்டும் அதே இடத்தில் வந்து தங்கி விடுவோம். அருமையாக இருந்தது படகு பயணம். மகன் ஜூன் மாதம் அழைத்து சென்றான்.
பேரனின் பிறந்தநாளையும், மருமகளின் அம்மா பிறந்த நாளையும் படகில் கொண்டாடி மகிழ்ந்தோம். அவை இங்கு என் சேமிப்பாக பதிவில் இடம் பெறுகிறது.
மீனா ஆச்சிக்கு பிறந்த நாள் கேக்
கவின் பிறந்த நாள் கேக்
படகு வீட்டுக்கு போகும் வழி நம்மை வரவேற்கும் அழகிய பெண் சிலை
வழி எல்லாம் பசுமை, மரத்தில் கட்டி இருக்கும் ஊஞ்சல்
தனி தனி வீடுகள் இருக்கிறது, அதில் தங்கி கொண்டு , படகு வீட்டில் பயணம் செய்து வரலாம்.
தேங்காய் மட்டைகளை அழகாய் மரத்தை சுற்றி வைத்து இருக்கிறார்கள்.
இரும்பு தொட்டியில் தாமரைச் செடி
அழகான பெரிய மண் தொட்டி
தொட்டிகளில் வித விதமான செடிகள்
வெட்டிப்போட்ட மரத்துண்டிலும் செடி வளர்த்து இருக்கிறார்கள்
தங்கும் மர வீடுகள்
அடர்ந்த மரம் செடி வழியே நடந்து போவதே மகிழ்ச்சி
பழைய காலத்தை நினைவு படுத்த வீட்டு முன் வண்டி
பழைய ஜாடி, பானைகளில் செடி.
தலையில் குடையை குல்லா போல மாட்டி கொண்டு தோட்டத்தில் இலை சருகுகளை சுத்தம் செய்யும் அம்மா.
நாங்கள் தங்கி இருந்த படகு வீடு
படகு வீட்டில் ஏற மரப்படி போடுகிறார்கள் அதில் ஏறி படகு வீட்டுக்குள் போக வேண்டும். படகு ஆடும் நமக்கு கை கொடுத்து உள்ளே அழைப்பார்கள்.
நாங்கள் இரண்டு படுக்கை அறை (ஏசி வசதி) கொண்ட படகு வீட்டில் தங்கி இருந்தோம், வரவேற்பு அறை, சமையல் அறை இருக்கும். மூன்று பேர் இருந்தனர் ஒருவர் சமையல் செய்ய இருவர் படகு ஓட்டுவார்கள் மாற்றி மாற்றி. சமையலுக்கும் உதவுவார்கள். நாம் சைவம் என்பதை முன்பே சொல்லி விட்டதால் அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்து தந்தார்கள்.
காலை உணவு
மதிய உணவு
மாலை படகு தங்கும் இடத்திற்கு வந்து விடும். மரத்தில் கட்டி வைத்து விடுவார்கள். காற்றில் படகு ஆடி கொண்டு இருக்கும் . தண்ணீர் அலை போல படகை மோதி செல்லும்.
முதல் நாள் கேரள மக்கள் விரும்பும் அரிசியில் உணவு தயார் செய்து இருந்தார்கள். மறுநாள் எங்களுக்கு நாம் சாப்பிடும் அரிசி சொல்லி விட்டோம் . அதை சமைத்து தந்தார்கள். மிதமான காரம் சொல்லி விட்டதால் அதற்கு ஏற்றார் போல சமைத்து தந்தார்கள்.
மறுநாள் இரண்டு அரிசியிலும் சாதம் சமைத்து இருந்தார்கள்.
விருப்பபட்டதை சாப்பிடலாம்.
ஓரு நாள்நேந்திர பழ பஜ்ஜி, இன்னொரு நாள் வெங்காய பஜ்ஜி செய்து தந்தார்கள்,
வெங்காய பஜ்ஜி, பிஸ்கட், டீ.
புட்டும் , கடலை கறியும் செய்து தந்தார்கள்
நாங்கள் எல்லோரும் படகு ஓட்டுவது போல போட்டோ எடுத்து கொண்டோம். பேரனின் விருப்பம்
பேரன் காலை உணவை சாப்பிடுகிறான், டிவி உண்டு, ஆனால் இயற்கையை ரசிக்க சென்று இருக்கிறோம், அதனால் டி.வி பார்க்கவில்லை.
இரண்டு பக்கமும் இருக்கைகள் இருக்கிறது கண்ணாடி ஜன்னல் வழியாக படகு போவதை ரசிக்கலாம். ஆகாயதாமரை செடிகளில் பறவைகள் அமர்ந்து இருப்பதை , ஆகாயதாமரை தண்ணீரில் மிதந்து நகர்ந்து பயணம் செய்து போனதை அடுத்த பதிவில் பார்க்கலாம். இரண்டு பக்கமும் கரை இருக்கிறது, மக்கள் படகில் பள்ளி கல்லூரி, அலுவலகம் செல்கிறார்கள் படகில். அதை பார்க்கலாம், பஸ் ஸ்டாப் போல படகு நிறுத்தும் இடம் இருக்கும் அங்கு காத்து இருந்து ஏறி போவதை பார்த்தோம்.
மழை தூறலில் படகு பயணம் செய்கிறவர்களை, வித விதமாக போகும் படகு வீடுகளை ரசிக்கலாம். பறவைகளை ரசிக்கலாம்.
படகை சில இடங்களில் நிறுத்தி நம்மை பார்த்து வர சொல்வார்கள், அப்படி கிறித்துவ தேவாலயம், கண்ணன் கோவில் , நாரயண குரு தேவா கோவில் , கடைகள், எல்லாம் பார்த்தோம் அவை அடுத்து அடுத்து பதிவுகளில் வரும். தொடர்ந்து வருவீர்கள் தானே!
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
படங்கள் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குவிவரணங்கள் சிறப்பு மகிழ்ச்சியான விடயமே தொடர்ந்து வருகிறேன்....
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அழகாக இருக்கிறது.//
நன்றி.
//விவரணங்கள் சிறப்பு மகிழ்ச்சியான விடயமே தொடர்ந்து வருகிறேன்....//
உங்கள் கருத்துக்கும் தொடர்வருகைக்கும் நன்றி ஜி
படங்களும் விவரங்களும் அருமை.
பதிலளிநீக்குநானும் படகு வீட்டில் பயணம் செல்லணும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். சைவ உணவு கிடைக்காது. மீன் வறுக்கும் வாசனைதான் முழுவதும் அடிக்கும் என்ற எண்ணத்தினால் பயணம் செல்வது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
பசங்களுடன் சென்றிருக்கலாம். இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ?
வணக்கம் நெல்லத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களும் விவரங்களும் அருமை.//
நன்றி.
//நானும் படகு வீட்டில் பயணம் செல்லணும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.//
செய்யலாம் நினைத்தால்.
//சைவ உணவு கிடைக்காது. மீன் வறுக்கும் வாசனைதான் முழுவதும் அடிக்கும் என்ற எண்ணத்தினால் பயணம் செல்வது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.//
சைவ உணவு கிடைக்கிறது. மீன் சாப்பிடுஅன்பர்களுக்கு அப்படியே ஏரியில் பிடித்து சமைத்து கொடுப்பார்களாம். மீன் வாடையே இல்லை. மீன் வறுக்கும் வாசனை இல்லையே! செய்யும் இடத்திற்கு போனால் வாசனை அடிக்கும் என்று நினைக்கிறேன்.
பயணம் செய்யலாம். மழை பெய்த போது பயணம் மிகவும் நன்றாக இருந்தது.
//பசங்களுடன் சென்றிருக்கலாம். இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ?//
குழந்தைகளுடன் போகும் போது மிகவும் குதுகலமாக இருக்கும்.
வாய்ப்பு கிடைக்கட்டும் சேர்ந்து போய் வாங்க.
நீங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பயணம் செய்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குசைவ உணவு விவரங்கள் அருமை. பேரனுடன் செலவிட்ட தருணங்கள் மறக்கமுடியாது.
தொடர்ந்து வருவேன்
//நீங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பயணம் செய்திருக்கிறீர்கள்.//
நீக்குஆமாம், இரண்டு நாள் தங்கியதால் கோவில்களை பார்க்க, மற்றும் இயற்கை காட்சியை ரசிக்கமுடிந்தது.
//சைவ உணவு விவரங்கள் அருமை. //
அவியல், கோவைக்காய் பொரியல், சாலட், உருளை பொரியல் என்று நன்றாக செய்து கொடுத்தார்.
பழங்கள் தினம் உண்டு.
//பேரனுடன் செலவிட்ட தருணங்கள் மறக்கமுடியாது.//
ஆமாம், அவனுடன் செலவிட்ட தருணங்களை பதிவு செய்யவே பதிவு.
//தொடர்ந்து வருவேன்//
மகிழ்ச்சி.
பதிவை ரசித்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. நீங்கள் இரண்டு நாள் பயணமாக மகன், பேரனுடன் படகு வீட்டில் சவாரி செய்து வந்தது மகிழ்ச்சி. படங்கள் அனைத்தும் தெளிவாகவும், அழகாகவும் உள்ளன.
உங்கள் சம்மந்தியின் பிறந்த நாளையும், பேரன் கவினின் பிறந்த நாளையும் படகிலேயே கொண்டாடியது மிகவும் சிறப்பு. அந்த படங்களும் நன்றாக உள்ளது.
பசுமை மிகுந்த இடங்களில் சென்று தங்கினாலே மனதுக்கு உற்சாகமாக இருக்கும். செடி கொடியென அங்கு எல்லாமே பசுமையாக உள்ளது. அனைத்தையும் ரசித்தேன்.
உணவும் சைவமாக சமைத்து தர ஆட்கள் அங்கு இருப்பது சௌகரியமே.. உணவு படங்களும் நன்றாக உள்ளது. மேலும் தாங்கள் அங்கு சென்ற பல இடங்களை இனி வரும் பதிவில் தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். நானும் உங்களுடன் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. நீங்கள் இரண்டு நாள் பயணமாக மகன், பேரனுடன் படகு வீட்டில் சவாரி செய்து வந்தது மகிழ்ச்சி. படங்கள் அனைத்தும் தெளிவாகவும், அழகாகவும் உள்ளன.
உங்கள் சம்மந்தியின் பிறந்த நாளையும், பேரன் கவினின் பிறந்த நாளையும் படகிலேயே கொண்டாடியது மிகவும் சிறப்பு. அந்த படங்களும் நன்றாக உள்ளது.//
நன்றி.
//பசுமை மிகுந்த இடங்களில் சென்று தங்கினாலே மனதுக்கு உற்சாகமாக இருக்கும். செடி கொடியென அங்கு எல்லாமே பசுமையாக உள்ளது. அனைத்தையும் ரசித்தேன்//
ஆமாம், படகு இருந்த இடத்தை சுற்றி பசுமை யான செடி கொடிகளுடன் அழகான வீடுகள் இருந்தன. பார்க்கவே அழகு.
உணவும் சைவமாக சமைத்து தர ஆட்கள் அங்கு இருப்பது சௌகரியமே.. உணவு படங்களும் நன்றாக உள்ளது//
வயிற்றை கெடுக்காமல் இருந்தது உணவு. அன்பாக சமைத்து கொடுத்ததால் நன்றாக இருந்தது.
//மேலும் தாங்கள் அங்கு சென்ற பல இடங்களை இனி வரும் பதிவில் தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். நானும் உங்களுடன் தொடர்ந்து வருகிறேன். //
நான் சென்ற இடங்களை பார்க்க தொடர்ந்து வருவதாக சொன்னது மகிழ்ச்சி.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக உள்ளன. உங்களுக்கு கவின் அல்லாமல் வேறு பேரன் பேத்திகள் இல்லையா?
பதிலளிநீக்குவணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் நன்றாக உள்ளன. உங்களுக்கு கவின் அல்லாமல் வேறு பேரன் பேத்திகள் இல்லையா?//
மகனுக்கு ஒரு பையன் கவின். மகளுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். முன்பே கேட்டு இருக்கிறீர்கள் சொல்லி இருக்கிறேன்.
அவர்கள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள் . பல பழைய பதிவுகளில் அவர்கள் பாடியது, மிருதங்கம் வாசிப்பது எல்லாம் போட்டு இருக்கிறேன். நீங்கள் பழையநவராத்திரி பதிவுகளை படித்து இருந்தால் தெரிந்து இருக்கும். மேகமலை பதிவில் பேரன் , பேத்தி,மகளுடன் சுற்றுலா சென்றதை போட்டு இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படகு வீட்டில் பயணம் - ஆஹா… சிறப்பான விஷயம். உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்வது சிறப்பு. தொடர்ந்து எழுதுங்களம்மா. படகுகளில், கப்பல்களில் பயணம் செய்து இருக்கிறேன் என்றாலும் இது போன்ற படகு வீட்டில் இது வரை பயணம் செய்ததோ, தங்கியதோ இல்லை. படங்கள் அனைத்தும் அழகு. தொடரட்டும் பயணம், தொடரட்டும் பயணக் கட்டுரைகள்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//படகு வீட்டில் பயணம் - ஆஹா… சிறப்பான விஷயம். உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்வது சிறப்பு. தொடர்ந்து எழுதுங்களம்மா.//
நன்றி வெங்கட். தொடர்ந்து எழுதுகிறேன்.
//படகுகளில், கப்பல்களில் பயணம் செய்து இருக்கிறேன் என்றாலும் இது போன்ற படகு வீட்டில் இது வரை பயணம் செய்ததோ, தங்கியதோ இல்லை. //
உங்களுக்கு பிடிக்கும் விடுமுறையின் போது குடும்பத்துடன் சென்று வாருங்கள் .
//படங்கள் அனைத்தும் அழகு. தொடரட்டும் பயணம், தொடரட்டும் பயணக் கட்டுரைகள்.//
உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.
ஆகா.. அழகே அழகு!..
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் இயற்கையை நம்ம வட்டாரங்களில் ஆராதிப்பதே இல்லை..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//ஆகா.. அழகே அழகு!..
இப்படியெல்லாம் இயற்கையை நம்ம வட்டாரங்களில் ஆராதிப்பதே இல்லை..//
இயற்கையை ஆராதிக்க நம் வட்டராங்களில் நிறைய இடம் இருக்கிறதே ! ஆராதிப்பவர்களும் இருக்கிறார்கள் .
உங்கள் கருத்துக்கு நன்றி.
இங்கே தஞ்சை நகரைச் சுற்றி அமைந்துள்ள அகழியில் படகு விடப் போகின்றோம் என்ற அறிவிப்புகளை ஐம்பது வருடங்களாகக் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்..
பதிலளிநீக்குஇதற்காக கீழ வாசல் வெள்ளைப் பிள்ளையார் கோயில் சந்நிதி வாசலில் சாலை மேம்பாலம் எல்லாம் கட்டினார்கள்..
இப்போதும் தஞ்சாவூர் பெரிய அகழி குப்பைக் காடாகவும் சாக்கடைத் தண்ணீராகவும் தான் இருக்கின்றது..
இங்கே தஞ்சை நகரைச் சுற்றி அமைந்துள்ள அகழியில் படகு விடப் போகின்றோம் என்ற அறிவிப்புகளை ஐம்பது வருடங்களாகக் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்..//
நீக்குஎன்ன காரணமோ விடமால் இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே!
//இதற்காக கீழ வாசல் வெள்ளைப் பிள்ளையார் கோயில் சந்நிதி வாசலில் சாலை மேம்பாலம் எல்லாம் கட்டினார்கள்..//
ஒ! அப்படியா?
//இப்போதும் தஞ்சாவூர் பெரிய அகழி குப்பைக் காடாகவும் சாக்கடைத் தண்ணீராகவும் தான் இருக்கின்றது..//
விரைவில் எல்லாம் சரியாக பிரார்த்திக்க வேண்டும் போல!
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகை ஆராதிக்கின்றோம்..
பதிலளிநீக்குயார் சொன்னது?..
கும்பகோணம் கோயில் மதில்கள் எல்லாம் எந்த அளவுக்கு கண்றாவி சுவரொட்டிகளால் கெடுத்து வைக்கப்பட்டிருக்கிறன என்பதை நேரில் பார்த்தால் தான் விளங்கும்..
தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிய்த்துக் கொண்டு போவதில் இருக்கும் ஆர்வம் கோயில் மதில்களைக் காப்பாற்றுவதில் இல்லை..
இதிலே கோயில் நகரம் என்ற பெருமை வேறு!..
//கும்பகோணம் கோயில் மதில்கள் எல்லாம் எந்த அளவுக்கு கண்றாவி சுவரொட்டிகளால் கெடுத்து வைக்கப்பட்டிருக்கிறன என்பதை நேரில் பார்த்தால் தான் விளங்கும்..//
பதிலளிநீக்குசுவரெட்டிகள் ஒட்டக் கூடாது என்று எழுதி வைக்க வேண்டும்.ஒட்டினால் தண்டிக்கபடுவீர்கள் என்று போட்டால் ஒட்ட மாட்டார்கள்.
அருமையான விவரணம். விளக்கத்துடன் படங்கள். ஓ இரு தினங்கள் படகு வீட்டில்! அருமையான அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா. போன நேரம் மழைக்காலமா?
பதிலளிநீக்குநானும் போன வருடம் தான் இப்படி ஒரு அனுபவம் கிடைக்கப் பெற்றேன். அதுவும் பகல் மட்டும்.
உங்களுக்கும் இது மறக்க முடியாத அனுபவம்தான். அடுத்த நாள் நிகழ்வுகளைப் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்,
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//அருமையான விவரணம். விளக்கத்துடன் படங்கள். ஓ இரு தினங்கள் படகு வீட்டில்! அருமையான அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா. போன நேரம் மழைக்காலமா?//
நாங்கள் போனது ஜூன் 16, 17, 18 காலை வரை அங்கு இருந்தோம்.
மழை பெய்து கொண்டு தான் இருந்தது. இரண்டு நாளும்.
//நானும் போன வருடம் தான் இப்படி ஒரு அனுபவம் கிடைக்கப் பெற்றேன். அதுவும் பகல் மட்டும்.//
ஓ! அப்படியா மகிழ்ச்சி. நன்றாக இருந்தது இல்லையா?
//உங்களுக்கும் இது மறக்க முடியாத அனுபவம்தான். அடுத்த நாள் நிகழ்வுகளைப் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்,//
ஆமாம், மகனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், மறக்க முடியாத அனுபவம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதிக்கா...ஆஹா எனக்கு இப்படிப் படகில் செல்ல ரொம்ப ஆசை உண்டு இந்த ஆலப்புழா படகில் ஒரு இரவு தங்கி...
பதிலளிநீக்குபடங்களும் அதைப் பற்றிய விவரங்களும் சூப்பரா இருக்கு அக்கா. என்ன ஒரு பசுமை! தங்கியிருந்த வீடும் மிக அழகாக இருக்கு. சுற்றித் தோட்டத்துடன். பசுமை பசுமைதான் செடிகளும் தாமரைத் தொட்டியும் என்ன சொல்ல இப்படி அழகாக வெளிநாட்டவர் எல்லாம் வந்து தங்கி ரசிக்கும்படியாக அழகுபடுத்தி இருக்காங்க பாருங்க! இப்படி இருந்தால் சுற்றுலாப் பயணிகள் வராம இருப்பாங்களா!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா...ஆஹா எனக்கு இப்படிப் படகில் செல்ல ரொம்ப ஆசை உண்டு இந்த ஆலப்புழா படகில் ஒரு இரவு தங்கி...//
வாய்ப்பு வரும் போது போய் வாருங்கள்.
நான் நினைத்துப்பார்க்கவில்லை, மகன் அழைத்து சென்றது மகிழ்ச்சியான தருணம்.
//படங்களும் அதைப் பற்றிய விவரங்களும் சூப்பரா இருக்கு அக்கா. என்ன ஒரு பசுமை! தங்கியிருந்த வீடும் மிக அழகாக இருக்கு. //
நாங்கள் படகு வீட்டில் தான் தங்கி இருந்தோம். போகும் வழியில் உள்ள பசுமை குடில்களிலும் தங்கலாம் என்றேன்.
//சுற்றித் தோட்டத்துடன். பசுமை பசுமைதான் செடிகளும் தாமரைத் தொட்டியும் என்ன சொல்ல இப்படி அழகாக வெளிநாட்டவர் எல்லாம் வந்து தங்கி ரசிக்கும்படியாக அழகுபடுத்தி இருக்காங்க பாருங்க! இப்படி இருந்தால் சுற்றுலாப் பயணிகள் வராம இருப்பாங்களா!//
ஆமாம், சுற்றுலா துறையினர் மிக அழகாய் பராமரிக்கிறார்கள்.
நானும் தொட்டியில் அல்லது நிலத்தில் செடிகளைச் சுற்றி தேங்காய் உரிக்கும் நார் இருக்குல்லியாக்கா அதைச் சுற்றி வைத்து விடுவேன் அல்லது தொட்டியில் போட்டு வைப்பேன். ஈரம் வறண்டு போகாமல் இருக்க உதவும். கூடவே கோக்கோ பீட் வருகிறதே அந்த உரமும் ஆச்சு.
பதிலளிநீக்குதுண்டான மரத்துண்டில் செடி வளர்ப்பது கூட நல்ல ஐடியா. நானும் வீட்டில் இருக்கும் பழைய ஜாடி, மண்சட்டிகளில் வைத்ததுண்டு இப்பதான் எதுவுமே செய்யலை. தொட்டிகள் அப்படியே இருக்கின்றன.
பூஞ்சோலையாக இடையே நடந்து செல்ல அருமையா இருக்கு. மழை பெய்த அடையாளம் இருக்கிறதே
வீட்டின் முன் மாட்டு வண்டி! எல்லாமே அழகு.
போட்டினுள் நீங்கள் பேரன் இருக்கும் படம் ரசித்துப் பார்த்தேன்
சாப்பாடும் கவர்கிறது குறிப்பாகப் பழம்பொரி. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வருகிறேன் உங்களோடு போட்டில் பயணிக்க.
படங்களை ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா
கீதா
//நானும் தொட்டியில் அல்லது நிலத்தில் செடிகளைச் சுற்றி தேங்காய் உரிக்கும் நார் இருக்குல்லியாக்கா அதைச் சுற்றி வைத்து விடுவேன் அல்லது தொட்டியில் போட்டு வைப்பேன். ஈரம் வறண்டு போகாமல் இருக்க உதவும். கூடவே கோக்கோ பீட் வருகிறதே அந்த உரமும் ஆச்சு.//
நீக்குஆமாம், முன்பு சொல்லி இருக்கிறீர்கள். மண் அரிப்பை தடுக்கும் மழைகாலத்தில். நான் ஊருக்கு போகும் போது தொட்டிகளில் தேங்காய் நார்களை த்ண்ணீரில் ஊறவைத்து போட்டு வைப்பேன். பின் தண்ணீர் ஊற்ரீனால் ஒரு வாரம் தாங்கும் . வந்து தண்ணீர் ஊற்றும் வரை.
//துண்டான மரத்துண்டில் செடி வளர்ப்பது கூட நல்ல ஐடியா. நானும் வீட்டில் இருக்கும் பழைய ஜாடி, மண்சட்டிகளில் வைத்ததுண்டு இப்பதான் எதுவுமே செய்யலை. தொட்டிகள் அப்படியே இருக்கின்றன.//
மரத்தூண்டில் மட்டும் இல்லை மரத்தின் நடுவில் செடியை கட்டி வைத்து விடுகிறார்கள் அது வளர்ந்து பூத்து இருப்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம் நீங்கள்.
//பூஞ்சோலையாக இடையே நடந்து செல்ல அருமையா இருக்கு. மழை பெய்த அடையாளம் இருக்கிறதே//
ஆமாம் மழை பெய்து கொண்டே இருந்தது, நாங்கள் சுற்றிப்பார்க்கும் போது மழை இல்லை, படகு வீட்டுக்குள் வந்த பின் தான் மழை.
//வீட்டின் முன் மாட்டு வண்டி! எல்லாமே அழகு.
போட்டினுள் நீங்கள் பேரன் இருக்கும் படம் ரசித்துப் பார்த்தேன்
சாப்பாடும் கவர்கிறது குறிப்பாகப் பழம்பொரி. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.//
பழம்பொரி உங்களுக்கு பிடிக்காமல் இருக்குமா?
//அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வருகிறேன் உங்களோடு போட்டில் பயணிக்க.//
வாங்க வாங்க மகிழ்ச்சி.
படங்களை ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா//
படங்களை, பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.
என் தங்கை இரு முறை சென்றிருக்கிறாள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடன், அப்புறம் அவள் மகள், அண்ணா குடும்பத்துடன் ஆனால் அவங்க இரு முறையுமே பகல் மட்டும். இரவு தங்கவில்லை என்றாள்
பதிலளிநீக்குபேரனுக்கும் அந்தப் பாட்டிக்குமான பிறந்த நாள் கொண்டாடியதும் சிறப்பு!
கீதா
//என் தங்கை இரு முறை சென்றிருக்கிறாள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடன், அப்புறம் அவள் மகள், அண்ணா குடும்பத்துடன் ஆனால் அவங்க இரு முறையுமே பகல் மட்டும். இரவு தங்கவில்லை என்றாள்//
நீக்குஒ சரி சரி. பகலில் மட்டும் பயணம் செய்யும் படகு, மாலை ஆறுமணிக்கு நிறுத்தி விடுவார்கள்.அதனால் மறுநாள் இருக்கிற மாதிரி இருந்தால் தான் தங்க வேண்டும், இல்லையென்றால் அவசியம் இல்லை.
படகில் கல்லூரி மாணவ , மாணவிகள் , பெரிய குடும்பத்துடன் போகிறவர்களை பார்த்தோம். படகின் மேல் தளத்தில் ஆடி, கொண்டு பாடி கொண்டு எல்லாம் போனார்கள்.
//பேரனுக்கும் அந்தப் பாட்டிக்குமான பிறந்த நாள் கொண்டாடியதும் சிறப்பு!//
ஆமாம், நினைவுகளை தரும் அந்த பிறந்த நாள் இல்லையா?
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
படகு வீடு பயணம் புதுமையாக சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கும் அதில் சென்று வர ஆசை உண்டாகிறது. ஒவ்வொரு நாளும் பயணம் முடிந்து கொண்டு வந்து கரையில் கட்டினாலும், அதே படகில்தானே இருப்பீர்கள்?
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//படகு வீடு பயணம் புதுமையாக சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்//
புதுமையாக இருந்தது உண்மை.
. //எனக்கும் அதில் சென்று வர ஆசை உண்டாகிறது. ஒவ்வொரு நாளும் பயணம் முடிந்து கொண்டு வந்து கரையில் கட்டினாலும், அதே படகில்தானே இருப்பீர்கள்?//
6 மணிக்கு கட்டிய பின்னும் அதில் தான் இருந்தோம்.உரவு தங்குவது அதில் தான் இரண்டு படுக்கறை சகல வசதியுடன் இருந்தது, குளியல் அறை, கழிவறை எல்லாம் படகில் உண்டு.
படங்கள் சுவாரஸ்யம். ஓ.. தனித்தனி வீடுகளில் தாங்கிக்கொண்டு படகுப்பயணமா? நான் மூன்று நாட்களும் படகிலேயே வாசம் என்று நினைத்தேன்!
பதிலளிநீக்கு//படங்கள் சுவாரஸ்யம். ஓ.. தனித்தனி வீடுகளில் தாங்கிக்கொண்டு படகுப்பயணமா? நான் மூன்று நாட்களும் படகிலேயே வாசம் என்று நினைத்தேன்!//
நீக்குபடகில் தான் எங்கள் வாசம்.
மூன்று நாட்களும் நாங்கள் படகில் தான் இருந்தோம். தனி வீடுகளும் உண்டு . கூட்டமாக ஏதாவது விழாவுக்கு வந்தவர்கள், படகு வீட்டில் தங்க பிடிக்காதவர்கள் தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து கொண்டு காலையில் முதல் மாலை வரை படகு சவாரி செய்யலாம் என்றேன் ஸ்ரீராம்.
மரத்தைச் சுற்றி தேங்காய் மட்டை பார்க்க அழகாய் இருக்கிறது. வெட்டிப் போட்ட மரத்துண்டையும் வீணாக்கவில்லை...அடர்ந்த மரம், செடி வழியே நடந்து போவது சந்தோஷம்தான். சட்டென வேறு எதுவும் எதிர்ப்பட வாய்ப்புகள் உண்டா?!!
பதிலளிநீக்கு//மரத்தைச் சுற்றி தேங்காய் மட்டை பார்க்க அழகாய் இருக்கிறது. வெட்டிப் போட்ட மரத்துண்டையும் வீணாக்கவில்லை.//..
நீக்குஆமாம், எதையும் வீணாக்காமல் செடி வளர்த்து இருக்கிறார்கள்.
//அடர்ந்த மரம், செடி வழியே நடந்து போவது சந்தோஷம்தான். சட்டென வேறு எதுவும் எதிர்ப்பட வாய்ப்புகள் உண்டா?!!//
அடர்ந்த மரம், செடி வழியே நடந்து போகும் போது எதுவும் எதிர்படடு பயமுறுத்தவில்லை, சுத்தம் செய்யும் அம்மாதான் மலர்ந்த முகத்துடன் எதிர்பட்டார்.
படகு ஓட்டும் படம் ஜோர். எல்லா படங்களுமே ரசிக்க வைத்தன. உணவுப் படங்கள் ஊன்றி கவனிக்க வைத்தன!!!! ஹிஹிஹி...
பதிலளிநீக்கு//படகு ஓட்டும் படம் ஜோர். எல்லா படங்களுமே ரசிக்க வைத்தன. உணவுப் படங்கள் ஊன்றி கவனிக்க வைத்தன!!!! ஹிஹிஹி...//
நீக்குமறுநாள் புட்டு கடலைக்கறி அவர்கள் சிறப்பு உணவு வைத்தார்கள் அதை படம் எடுக்கவில்லை போலும் தேடினேன் கிடைக்கவில்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இன்று அடுத்த பதிவு வரும்.
படங்களும் பகிர்வும் அருமை. நாங்கள் சென்ற குமரகம் பயணம் நினைவுக்கு வந்தது. நேந்திரம் பஜ்ஜி மாலை நேரத்தில் தவறாமல் இருக்கும்:)!
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களும் பகிர்வும் அருமை. நாங்கள் சென்ற குமரகம் பயணம் நினைவுக்கு வந்தது.//
எனக்கும் நினைவுக்கு வந்தது, உங்கள் படகு படம் தமிழ் நாடு சுற்றுலா விளம்பரத்தில் வந்தது இல்லையா?
//நேந்திரம் பஜ்ஜி மாலை நேரத்தில் தவறாமல் இருக்கும்:)!//
தினம் நேந்திரம் பஜ்ஜி இல்லை ஒரு நாள் வெங்காயபஜ்ஜியும் செய்தார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
படகுப் பயணமும் ,தங்கி இருந்த மரவீடும் மிகவும் அழகாக இருக்கிறது.படங்கள் அனைத்தும் நன்று.
பதிலளிநீக்குஎங்கள்நாட்டிலும் மாதுகங்காவில் படகு சவாரி இருக்கிறது கேரள படகுகள் போன்று அழகானவை அல்ல.இயற்கையை ரசிக்கலாம். புத்தர் கோவில் செல்லலாம்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//படகுப் பயணமும் ,தங்கி இருந்த மரவீடும் மிகவும் அழகாக இருக்கிறது.படங்கள் அனைத்தும் நன்று.//
நன்றி.
//எங்கள்நாட்டிலும் மாதுகங்காவில் படகு சவாரி இருக்கிறது கேரள படகுகள் போன்று அழகானவை அல்ல.இயற்கையை ரசிக்கலாம். புத்தர் கோவில் செல்லலாம்.//
உங்கள் வரவுக்கும் நல்ல தகவலுக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கும் நன்றி.