புத்தகம் விற்கும் கடைக்கு பக்கம் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்.
கிறிஸ்மஸ் வருமுன் கடைகள், வீடுகளில் விளக்கு அலங்காரங்கள் ஆரம்பித்து விட்டது. அக்டோபர் முதல் வாரத்திலிருந்தே கடைகளில் கிறிஸ்மஸ் விற்பனைகள் (பரிசு பொருட்கள் விற்பனை) அமோகமாக நடக்குமாம். நன்றி சொல்லும் நாளிலும் நிறைய விற்பனையாகும் இந்த மாதிரி பொருட்கள். ஏசு பிறப்பு குடில் அமைப்புகள் வித விதமாக இருக்கும். வீடுகளில் மிக அழகாய் ஏசு பிறப்பு குடில் அமைக்கப்படும். மகன் வீடிலும் ஏசுபிறப்பு குடில் அமைப்பான்.
டிசம்பர் முதல் வாரத்திலிருந்து இந்த ஊரில் ஒளித்திருவிழா ஆரம்பித்து விட்டது. ஜனவரி புத்தாண்டு வரை இந்த ஒளித் திருவிழா நடைபெறும்.
அலங்கார விளக்குகளை பார்க்க சில இடங்களுக்கு
மகள் அழைத்து போனாள். நான் பார்த்த காட்சிகள் இந்த பதிவில்.
புத்தகம் வாங்கும் கடைக்கு அழைத்து போனாள். அந்த கடைக்கு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த கிறிஸ்மஸ் மரம்
மேலே உள்ள மூன்று படங்கள் புத்தககடை பக்கம் எடுத்தவை
இந்த வளாகத்தில் எடுத்த சில படங்கள் கீழே
தேவாலயம்
இலைகளை உதிர்த்த மரம் விளக்குகளால் அழகானது
விளக்குகம்பம் வெளிச்சம் நிலா வெளிச்சம் போல காட்சி அளிக்கிறது
Conyers எனும் இடத்தில் உள்ள பழைய காலத்து ரயில் நிற்கும் இடத்தில் விளக்கு அலங்காரம்
ரயிலை பகலில் எடுத்த படம் இன்னொரு பதிவாக போட வேண்டும்
Conyers கடை வீதி
விடுமுறை நாள் என்பதால் கடைகள் இல்லை
காரில் வரும் போது எடுத்த படம்
மகள் வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டில் வைத்து இருந்ததை காரில் வரும் போது எடுத்த படம்.
ஒரு கடை வாசலில் வைத்து இருந்தார்கள்
வீட்டு வாசலில் அலங்காரமாக வைக்க விற்கப்படும் பொருட்கள்
இரவு
பகல்
மகள் வீட்டில்
இங்கு எல்லோர் வீடுகளிலும் கிறிஸ்மஸ் அலங்காரம் செய்வார்கள் மகனும் வைப்பான், அங்கு போனபின் மகன் வீட்டு கிறிஸ்மஸ் அலங்காரம் படம் போடுகிறேன்.
மகள் வீட்டு பால்கனி
வெளிபக்கம் இருந்து இரவு எடுத்தேன் மகள் வீடு.
காமிராவில் எடுக்கவில்லை எல்லாபடங்களும் அலைபேசியில் தான்.
கிறிஸ்மஸ் என்றால் கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமலா? அவர் பின்னால் வருவார். எல்லோருக்கும் பரிசு பொருட்கள் எடுத்து வருகிறார். குளிர் வேறு அதனால் கொஞ்சம் மெதுவாக வருவார். கிறிஸ்மஸ் வரும் முன் வந்து விடுவார்.
குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------