வெள்ளி, 3 டிசம்பர், 2021

டோம்ப்ஸ்டோன் கோர்ட் மியூசியம் - பகுதி -3


நீதிமன்றம் 

அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக பகிர்ந்து வருகிறேன்.

  கோர்ட்ஹவுஸ் மியுசியத்தில்  பார்தத காட்சி பகிர்வின் நிறைவு பகிர்வு  


சட்ட புத்தகம் நீதிபதிகள் படம் , சரித்திரத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தீர்ப்புகளின் விவரங்கள் கண்ணாடி பேழையில்

                                  அந்தக்கால வண்டிகள்
முதல் ரயில் 1903 ல் வந்தது, டோம்ப்ஸ்டோன் வீதிகள் 1900 ல் எப்படி இருந்தது என்ற படம்,  கோர்ட் படம் 1900 ல்,1920 ல் எப்படி இருந்தது என்ற படங்கள்.  பத்திரிக்கைகளில் வந்த படங்களை வெட்டி ஒட்டி பிரேம் செய்து இருக்கிறார்கள். அந்த காலத்து நீதிபதிகள் உபயோகித்த சுத்தியல்.


                            வக்கீல்கள் இருக்கும் அறை


குதிரை மேல் போட்டு அமரும்  ஆசனம்பழைய ஆசனங்கள்வெள்ளி சுரங்கத்தில் வேலை பார்த்தவர்கள்
  விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கும்  பெட்டகம் (இரும்புபெட்டி)


கரடு முரடான கல்லறை நகரத்தில்  தனித்து நிற்கும் கதாபாத்திரங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
கோர்ட் ரூம்

அவர்கள் விவசாயம்  செய்து ஆடு, மாடு வளர்த்த விவரங்கள், கவ்பாய் குதிரையில் அமர்ந்து  மாட்டை ஓட்டி செல்லும் படங்கள்

துப்பாக்கி சண்டை நடந்த காட்சிகள்

தூக்குத் தண்டனை நடந்த இடம்

தூக்கு மேடைக்கு போகும் படிக்கட்டு

ஜெயில்  கதவு

கோர்ட் மியூசியம் நிறைவு பெறுகிறது. மேலும் வேறு என்ன அங்கு பார்த்தோம் என்பது அடுத்த பதிவில்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------

44 கருத்துகள்:

 1. பழைய செய்திகள், பழைய மேஜைகள், நாற்காலிகள், சேணங்கள்...  எல்லாமே அருமை.  தூக்குமேடை பயமுறுத்துகிறது.  படிக்கட்டுகள் கண்ணில் தெரியவில்லையா, சிதிலமடைந்து விட்டதா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   பழைய பொருட்கள், பழைய செய்திகள் எல்லாம் அந்தக் கால நினைவுகளை சொன்னது.

   படிக்கட்டு எனக்கும் தெரியவில்லை, வேகமாய் எடுத்தேன், மகன் , மருமகள், பேரன் வெளியே போய் விட்டார்கள். கடைசியில் எடுத்ததால் அவசரமாக வேறு எடுத்தேன்.படிக்கட்டுகள் பார்த்த நினைவு இல்லை.

   நீக்கு
 2. ​//கரடு முரடான கல்லறை நகரத்தில் தனித்து நிற்கும் கதாபாத்திரங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்//

  அருமையான யோசிக்க வைக்கும் வாசகம். கடவுளின் கதாபாத்திரங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அருமையான யோசிக்க வைக்கும் வாசகம். கடவுளின் கதாபாத்திரங்கள்.//
   ஆமாம், இறைவன் அமைத்த நாடக மேடையில் நாம் எல்லாம் கதாபாத்திரங்கள் தான்.அவர் ஆட்டி வைக்கிறார், நாம் ஆடுகிறோம்.

   பதிவை ரசித்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 3. காட்சிகளின் கருவூலமாகப் பதிவு..
  பழமையான படங்கள் - நமது நினைவுப் பேழையைத் திறந்து விடுகின்றன...

  நலம் வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   உங்கள் நினைவுப் பேழையில் நம் நாட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகள் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 4. பிரமிப்பான தகவல்கள், ஆச்சர்யமான புகைப்படங்கள் அருமையாக எடுத்து இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   அமாம், பார்க்க பார்க்க பிரமிப்பாக இருந்தது உண்மை.

   உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.
   தொடர்ந்து எழுதவைக்கும் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

   நீக்கு
 5. நல்ல தகவல்கள். படங்கள் அழகு.

  தூக்குமேடை... திக் என்று இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத தமிழன், வாழ்க வளமுடன்

   ஆமாம், தூக்குமேடை திக் என்று தான் இருந்தது பார்க்கும் போது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. அருமையிலும் அருமையான ஒரு வரலாற்றுச் சித்திரத்தைக் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். படங்கள் அனைத்தும் அருமை. நீதிமன்றப் படம், தூக்குமேடைப் படம் குறிப்பாக நன்றாக வந்துள்ளன. பழைய ஆசனங்கள், துப்பாக்கிச் சண்டை நடப்பது எல்லாமும் நன்கு உள்ளன. அந்தக் காலத்துத் தினசரிகளும் படம் பிடித்து வைத்திருப்பது வரலாற்று ஆவணத்துக்கு உதவும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //அருமையிலும் அருமையான ஒரு வரலாற்றுச் சித்திரத்தைக் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். படங்கள் அனைத்தும் அருமை.//


   நன்றி

   //நீதிமன்றப் படம், தூக்குமேடைப் படம் குறிப்பாக நன்றாக வந்துள்ளன. பழைய ஆசனங்கள், துப்பாக்கிச் சண்டை நடப்பது எல்லாமும் நன்கு உள்ளன. //

   அங்கு வைக்கபட்டு இருந்த முக்கியமான காட்சிகளை படம் எடுத்து வந்தேன்.

   நீங்கள் சொல்வது போல அந்த மியூசியம் வரலாற்று ஆவணத்திற்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் கண்டிப்பாக உதவும்.

   நீக்கு
 7. தூக்குமேடைக்குச் செல்லும் வழியில் படிகள் உள்ளன. மரக்கட்டையைக் குறுக்கே வைத்துக் கொஞ்சம் உயரமாகப் படிகளை அமைத்துள்ளார்கள். சிலருக்கு ஏறுவது கஷ்டம். அதிலும் தூக்கில் போடப் போகிறார்கள் என்பது தெரிந்த பின்னர் எப்படி ஏற மனம் வரும்? அதில் ஏறி மேடைக்குப் போகும் வழியும் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தூக்குமேடைச்செசெல்லும் வழி படிகள் தெரிவது மகிழ்ச்சி.
   மரகட்டையைக் குறுக்கே வைத்துக் கொஞ்சம் உயரமாக வைத்து இருப்பதுதான் படி.

   நீங்கள் சொல்வது போல தூக்குமேடைக்கு போக போகிறவர்களுக்கு படியில் ஏறுவது கஷ்டம் தான்.

   நீக்கு
 8. உங்கள் பதிவுகள் மூலம் வரலாற்றுச் செய்திகளையும், பறவைகள் குறித்த அரிய தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மிகவும் பயனுள்ள பதிவுகளைத் தொடர்ந்து அளிப்பதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் ஆர்வமாக படித்து, பறவைகளை பார்த்து உற்சாகம் தரும் பின்னூட்டங்களை கொடுக்கும் போது மேலும் இது போன்ற பதிவுகளை கொடுக்க ஆவல் வருகிறது.

   உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

   நீக்கு
 9. கோமதிக்கா வணக்கம்.

  முதல் படம் பார்த்ததுமே டக்கென்று ஏதோ டார்மிட்ரி போலத் தோன்றியது!!!!!! நீதிமன்றம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதால் புரிந்தது. கூர்ந்து கவனித்தால் தெரியும் தான் எனக்கு என்னவோ அப்படித் தோன்றியது கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
   முதல் படம் தங்கும் இடம் போல இரந்ததா? நீதிபதி இருக்கும் இருக்கை உயரமாக இல்லாமல் இருப்பதால் உங்களுக்கு அப்படி தோன்றி இருக்கலாம்.

   நீக்கு
 10. இத்தனை வருடங்கள் ஆகியும் எல்லாவற்றையும் பராமரிப்பது என்பது மிகவும் சிரமம். மிக நன்றாகப் பராமரிக்கிறார்கள். நீதிமன்றம், தபால் நிலையம், தூக்கு மேடை எல்லாமே கொஞ்சம் நம்மூரைப் போலத்தான் இருக்கிறது போல் தெரிகிறது. குதிரை

  படங்களை அனைத்தும் அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
   மியூசியம் ஆக்கி வைத்து இருப்பதே பாதுகாத்து வைக்க தானே! நன்றாக பாரமரித்து வைத்து இருக்கிறார்கள்.

   நம்மூர் மாதிரி தெரிகிறதா? அவை எல்லாம் இங்கும் அப்படிதானே இருக்கிறது.
   படங்கள் எல்லாம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. புகைப்படங்கள் வியப்பைத் தருகின்றன
  நன்றி சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. நீதிமன்றம், வக்கீல்கள் உட்காரும் அறைகள் எல்லாம் கொஞ்சம் நம்மூரை நினைவுபடுத்துகின்றன. வக்கீல்கள் உட்காரும் அறையில் மூலையில் இருக்கும் ட்ரா ஷெல்ஃப் எனக்கு மிகவும் பிடித்த பொருள். அது அங்கேயும் இருக்கிறதே. எங்கள் மாமியார் வீட்டில் இதே போன்று ட்ரா ஷெல்ஃப் நல்ல பெரிதாக அகலமாகவும் இருக்கிறது.

  இப்படியும் பார்த்திருக்கிறேன். இப்போது இதே போன்று ப்ளாஸ்டிக்கில் கடைகளில் பார்த்திருக்கிறேன் கோமதிக்கா.

  ரொம்ப அழகாக இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா, உங்களுக்கு டிரா ஷெல்ஃப் பிடித்து இருக்கிறதா? இப்போது பெரிய கம்பெனிகளில் வீடுகளில் பத்திரமாக பைல்களை வைக்க இது போல இரும்பில் வந்து இருக்கிறது. நல்ல கம்பெனி லாக்கர்கள் இது போன்று இருக்கிறது.

   என் கணவர் நிறைய சின்ன் சின்னதாக ப்ளாஸ்டிகில் வைத்து இருக்கிறார்கள் வீட்டில் வித விதமான கலரில் அவர்களுக்கு சிலவற்றை அதில் வைத்து பேர் எழுதி ஒட்டி இருப்பார்கள். பைல் அளவு இருக்கும் அவைகள்.   நீக்கு
 13. குதிரைமேல் போட்டு அமரும் ஆசனம் வித்தியாசமாக அழகா இருக்கு

  ஆல் வுமன் அண்ட் சில்ட்ரென் கீப் ஆஃப் ஸ்ட்ரீட் டுடே..செய்தித் தாள் அது என்ன நிகழ்வு என்று வாசிக்க முடியவில்லை அக்கா. வித்தியாசமான தலைப்பு..

  அட இந்த மாதிரி பெட்டகம்/இரும்பு பெட்டி அங்கும் இருந்திருக்கு பாருங்க. இங்க நம்ம் ஊர்ல ரொம்ப காலம் முன்ன இப்படிதான் இருந்தது இல்லையா. பார்த்திருக்கிறேன். அதன் பிடி கூட இறுக்கமாக இருக்கும். கதவும் கனமாக இறுக்கமாக இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குதிரை மேல் போட்டு உட்காரும் ஆசனங்கள் ஒவ்வொரு காலங்களிலும் மாறி இருப்பதை காட்டுகிறது. காலை மாட்டி கொள்ளும் வளையங்களும் மாறி இருக்கிறது.

   இருப்பு பெட்டகம் என் தாத்தாவீட்டில் திருவனந்தபுரத்தில் இருக்கிறது, அதை இன்னொரு பதிவில் போடுகிறேன். இப்போதும் வித விதமாக செய்து தருகிறார்கள். ஆமாம் கைபிடி கனமாக இருக்கும் திறக்கமுடியாமல் நிறைய சாவி போட்டால்தான் திறக்க முடிகிற இரும்பு பெட்டிகள் இருக்கிறது. பண்ம வைக்க வெள்ளி பொருட்களை வைக்க, நகைகள். பைல்கள் வைக்க என்று வித விதமாக இருக்கிறது. சிறந்த தொழில் நுட்பத்துடன் செய்கிறார்கள். சாவியை போட்டு கதவை திறந்தால் உள்ளே இருக்கும் (கதவில் மணிகள் தொங்கும்) மணி அடிக்கும் அது போன்ற அமைப்புகள் உள்ளன.

   நீக்கு
  2. //ஆல் வுமன் அண்ட் சில்ட்ரென் கீப் ஆஃப் ஸ்ட்ரீட் டுடே..செய்தித் தாள் அது என்ன நிகழ்வு என்று வாசிக்க முடியவில்லை அக்கா. வித்தியாசமான தலைப்பு..//

   எதற்கோ குழந்தைகளும், பெண்களும் தெருவில் இறங்கி மறியல் செய்து இருக்கிறார்கள், அவர்கள் கோரிக்கை நிராகரிக்கபட்டது. அதுதான் முதல் பக்கத்தில் வந்த முக்கிய செய்தி.

   நீக்கு
 14. பீஸ் வித் கோச்சிஸ் அந்தப் படம் மிக அழகாக 3 டி போல தத்ரூபமாக இருக்கிறது.
  அதற்கு அடுத்த படத்தில் வரலாற்று நிகழ்வு தெரிகிறது. துப்பாக்கிச் சண்டை எல்லாம்

  தூக்கு மேடை பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. படங்கள் விவரங்களின் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.

  படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன் கோமதிக்கா

  மிக்க நன்றி அக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 15. ஆகா...! படங்கள் அழகு... மிகவும் ரசித்தேன்... துல்லியமாக எடுத்து உள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   படங்களை ரசித்து பாராட்டி கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. எல்லா படங்களும் சரித்திர கால நினைவாக உள்ளது. அந்த நகரத்தின் கோர்ட் விஷயங்களை தெள்ளத் தெளிவாக தங்கள் பதிவு படம் பிடித்து காட்டுகிறது. கோர்டில் துப்பாக்கி சூடு நடைபெற்ற பல கேஸ்கள் நடந்த விபரமான படிவங்கள், வழக்கறிஞர்கள் அறை. நீதிபதிகள் உபயோகப்படுத்தும் சுத்தியல், என அந்த ஊரின் வழ்க்காடுமன்றத்தை படம் பிடித்து காட்டுகின்றன.

  பழங்கால ஆசனங்கள், குதிரை மேல் அமர்ந்து செல்லும் ஆசனமென பழைய கால பொருட்களை நினைவுச் சின்னமாக வைத்திருப்பது அதிசயமாக உள்ளது.வெள்ளிச் சுரங்கத்தில் வேலை செய்தவர்களின் போட்டோ, போஸ்ட் ஆபிஸ் எப்படி இருக்குமென காட்டியிருப்பது அனைத்தையும் ரசித்தேன்.

  தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடமெல்லாம் கொஞ்சம் பயமாக உள்ளது. எத்தனை நிரபராதிகளும் அவசர தீர்ப்பில் பலியானார்களோ..?

  படங்கள் அனைத்தும் அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்


  //பதிவு அருமையாக உள்ளது. எல்லா படங்களும் சரித்திர கால நினைவாக உள்ளது. அந்த நகரத்தின் கோர்ட் விஷயங்களை தெள்ளத் தெளிவாக தங்கள் பதிவு படம் பிடித்து காட்டுகிறது. //

  நன்றி.

  அனைத்து படங்களையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  எல்லா காலங்களிலும் நிரபராதிகள் தண்டனைக்கு ஆளாகி இருப்பார்கள், இந்த ஊரிலும் அப்படி நடந்து இருக்கலாம், அவர்களுக்கு தூக்கு தண்டனை வேண்டாம் என்று சொன்னவர்களும் (வாதாடியவர்களும்) இருக்கிறார்கள். தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடத்தை பார்த்த போது மனது வேதனை பட்டது உண்மை.

  படங்களை பாராட்டி கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. எப்போதும் போல படங்கள் துல்லியமாக இருக்கின்றன. தூக்கு மேடை... மனதை என்னவோ செய்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்


   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 19. மிக அருமையாகப் பதிவிட்டு இருக்கிறீர்கள்
  அன்பு தங்கச்சி கோமதி.

  வாழ்க வளமுடன்.

  அரிதான தகவல்கள், போஸ்டர்கள், செய்தித்தாள்கள்

  ஒன்றையும் விட்டு வைக்கவில்லை நீங்கள்.
  இந்த மாதிரிப் பெயர் வைத்த நகரங்களை
  நியூ மெக்சிகோ, அரிசோனா, மிஸ்ஸௌரி
  எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.
  அவர்கள் எல்லாவற்றையும் பாதுகாத்து வைத்திருப்பது
  சரித்திரத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைக்

  காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
   உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

   அவர்களின் சேமிப்பை படம் எடுத்து கொடுத்து இருக்கிறேன்.
   நம் ஊர் மியூசியத்தில் படம் எடுக்க அனுமதி இல்லை.
   இங்கு அனுமதி அளிப்பதால் எடுத்து பகிர முடிகிறது.

   நீக்கு
 20. தூக்கு மேடை, ஏறும் படிகள் எல்லாமே ஒரு விதத் திகிலைத் தருகின்றன.
  கூடவே ஜெயில் வேற.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அக்கா தூக்குமேடையை பார்க்கும் போது திகிலாத்தான் இருக்கிறது.
   எத்தனை எத்த்னை சுதந்திர போராட்டம் செய்தவர்கள் தூக்குமேடையில் நின்று கொண்டு பேசியதை வரலாற்றில் , கதைகளில் படித்து இருக்கிறோம், சினிமாக்களில், பார்த்து இருப்போம்! இங்கு அந்த இடத்தை நெரில் பார்க்கும் போது திக் என்று இருந்தது உண்மை.

   நீக்கு
 21. ஃபைல் காபினெட், பெட்டகம் எல்லாம் நம்மூரிலயும்
  தரையோடு பதிந்து வைக்கப் பட்டிருக்கும்.
  பாட்டி, வெள்ளிக்கிழமை தோறும்
  திறந்து சாம்பிராணி போட்டு,
  அந்த பீரோக்கல் இருக்கும் அறையை சுத்தம் செய்து கோலம்
  போட்டு வைக்கச் சொல்வார்கள்.
  நம் கைபோலவே அந்தப் பிடி இருக்கும்.
  கதவு அரையடி அகலத்துக்கு இருக்கும்.
  அந்த அறைக்கே இரும்புப் பெட்டி அறை
  என்றே பெயர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபைல் காபினெட், பெட்டகம் எல்லாம் நம்மூரிலயும்
   தரையோடு பதிந்து வைக்கப் பட்டிருக்கும்.
   //பாட்டி, வெள்ளிக்கிழமை தோறும்
   திறந்து சாம்பிராணி போட்டு,
   அந்த பீரோக்கல் இருக்கும் அறையை சுத்தம் செய்து கோலம்
   போட்டு வைக்கச் சொல்வார்கள்.//

   ஆமாம், அப்போது எல்லாம் பாங்க் லாக்கரில் யாரும் வைக்க மாட்டார்கள்
   எல்லோர் வீடுகளிலும் நல்ல இரும்பு பெட்டிகள் உண்டு.
   வித விதமாக கைபிடிகள் இருக்கும்.
   இன்றும் செட்டி நாட்டு பக்கம் வித விதமாக சீர் கொடுக்க பயன்படுத்துகிறார்கள்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 22. பழங்காலப் பொருட்கள் அனைத்தும் அழகு, வக்கீல் அறையில் இருக்கும் கடிகாரம் உட்பட. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
  பழங்காலப் பொருட்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 24. பதில்கள்
  1. வணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்

   உங்கள் வரவுக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.

   நீக்கு