வெள்ளி, 17 டிசம்பர், 2021

தாத்தா வந்தார்! கிறிஸ்துமஸ் தாத்தா வந்தார்!கிறிஸ்துமஸ் தாத்தாவின் வீடு

பேரனும் தாத்தாவும்

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலங்கள்  உலகம் முழுவதும்  நடந்து கொண்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ் அன்று வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை தருவார், ஏழைகளுக்கு உதவுவார் என்று நம்பப்படுகிறது.

வீடுகளின் வெளி பக்கம், வீட்டுக்குள் என்று வித விதமான  கிறிஸ்துமஸ் தாத்தாவின் பொம்மைகளை வைத்து மகிழ்கிறார்கள். அந்த பொம்மைகள் மகிழ்ச்சி அலைகளை பரப்பிக் கொண்டு இருக்கிறது. 

சாண்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவை  குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி பார்த்து அவருடன் படம் எடுத்து கொள்வதில் மகிழ்ச்சி  அடைகிறார்கள்.


நேற்று  அவரை பார்க்க போய் இருந்தோம். ஒரு பெரிய விறபனை அங்காடியில்   அவர் வந்து இருக்கும் வீட்டுக்கு அழைத்து சென்றான் மகன்.  தாத்தாவுடன்  படம் எடுத்துக் கொண்டோம்.  பின் அங்கு வைத்து இருந்த பெரிய கிறிஸ்துமஸ் மரம், மற்றும் விளக்கு அலங்காரங்கள் பார்த்தவை  இந்த பதிவில்.

தாத்தாவின் வீடு

அவரை பார்க்கும் நேரம்  எத்தனை நாட்கள் இருப்பார் என்று சொல்லும் அறிவிப்பு பலகை. எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் மாலை  6.40.
ஜன்னல் வழியே அவரைப்பார்த்து  வெளிபக்கம் நின்று அவருடன் படம் எடுத்து செல்பவர்களும் இருந்தார்கள்.
இந்த வழியாக அனுமதி பெற்றவர்கள் மட்டும்  உள்ளே போக வேண்டும்.
கூட்டம் இல்லை

இவருடன் படம் எடுக்க  பணம் கொடுக்க வேண்டும்.

பேரனை மடியில் அமர்த்தி கொண்டு நன்றாக  பேசினார்.  

 "என்ன பரிசு வேண்டும்?  "என்று முன்பு பார்த்த  தாத்தா கேட்டார்,  இவர் கேட்க வில்லை என்று சொல்லி கொண்டு வந்தான் பேரன். முன்பு நியுஜெர்சியில் இருந்த போது கிறிஸ்துமஸ் தாத்தாவோடு படம் எடுத்துக் கொண்டோம்.    அவர் பேரனிடம் "என்ன பரிசு வேண்டும் உனக்கு" என்று  கேட்டு   டைரியில்  எழுதிக் கொண்டார். உனக்கு கிறிஸ்துமஸ் அன்று உன் வீட்டுக்கு வந்து கொடுக்கிறேன் என்றார்.

அந்த பரிசை மகன்  வாங்கி வைத்து இருந்து  கிறிஸ்துமஸ் அன்று  அவனிடம் தாத்தா வந்து கொடுத்தார் என்று கொடுத்ததை சொன்னான்.  எப்படி வந்தார்? எப்போது வந்தார்? என்று அப்பாவிடம்  கேட்டால் வீட்டின் புகை போக்கி வழியாக வந்து வைத்து விட்டு போனார் என்று மகன் சொன்னதை  சொல்லி கொண்டு இருந்தான் நேற்று.  

நானும் நேற்று  தாத்தா உனக்கு  பிடித்த பொம்மை வாங்கி தரச் சொன்னார் என்று ஒரு விளையாட்டு சாமான்    வாங்கி கொடுத்தேன்.

பெரிய மாலில் தான் இந்த வீடு இருந்தது.
அரிசோனாவின் பெரிய உயரமான கிறிஸ்துமஸ் மரம் அருகில்  பேரன்

அழகான கள்ளிச்செடி
மால் முழுவதும் வித விதமான  மின் விளக்கு அலங்காரம்


மரங்களில் விளக்குகள்

அங்கு இருந்த உணவு விடுதியில் நூடுல்ஸ் சாப்பிட்டோம்


கடையில் அலங்காரம்.


வரும் வழியில் ஒரு வீட்டின் அலங்காரம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது  அவர் வீட்டின் முன் நிறுத்தி படம் எடுத்தோம்.

வீடு முழுவதும் விளக்கு அலங்காரத்தில் 


குளிரில்  நடுங்கி கொண்டு இருக்கும்  பனி மனிதன் (ஸ்னோமேன்)
நான் எடுத்த சிறிய காணொளி 

காரை மின் விளக்கால் அலங்கரித்து  இருந்தார்கள் அதற்குள் தாத்தாவின் பொம்மை


மருந்து கடையில் பரிசு பொருட்கள் விற்பனை 

மகன் வீட்டில்  கிறிஸ்துமஸ் அலங்காரம்
 

 கிறிஸ்துமஸ் மரத்தில்   முககவசம் அணிந்த பொம்மை,சிவப்பு வண்ணத்தில் கிருமி, கையை சுத்தம் செய்யும் திரவம்   என்று  கொரோனா விழிப்பு உணர்வு   செய்தி சொல்லும் பொம்மை இந்த வருட புது வரவு. யானையும் புதுவரவு. 

மகன் வீட்டில் உள்ள பொம்மைகள்.

அட்லாண்டாவில் பார்த்த கிறிஸ்துமஸ் தாத்தா.

தன் மகனை தாத்தா அருகில் அமர்த்தி படம் எடுக்கும் அப்பா.

(இவருடன் படம் எடுக்க  காசு கேட்க மாட்டார்.)

//கிறிஸ்மஸ் என்றால் கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமலா? அவர் பின்னால் வருவார். எல்லோருக்கும் பரிசு பொருட்கள் எடுத்து வருகிறார். குளிர் வேறு அதனால் கொஞ்சம் மெதுவாக வருவார். கிறிஸ்மஸ்  வரும் முன் வந்து விடுவார்.

குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்து கொண்டு இருக்கிறார்.//


என்று போன பதிவில்  சொல்லி இருந்தேன்.  இன்று பை நிறைய பரிசுகளுடன் அனைவருக்கும்  மகிழ்ச்சியை தர வந்து இருக்கிறார். மனநிறைவை தரப் போகிறார். கிறிஸ்துமஸ் கொண்டாடும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவருக்கும்  புதுவருட வாழ்த்துக்கள்.


குழந்தைகளுக்கு நல்ல  அறிவுரைகளுடன் அவர்களுக்கு பிடித்த காட்சிகளுடன்  காணொளி இருக்கிறது. பாடிய விதமும் இசையும் எனக்கு பிடித்து இருக்கிறது . உங்களுக்கும் பிடிக்கும் கேட்டு பாருங்கள்.வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------------------------------

39 கருத்துகள்:

 1. நேற்று என் ஆ ஆட்டோக்காரரிடம் கிறிஸ்துமஸ் பர்ச்சேஸ் முடிந்ததா?  எப்படி தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டபோது ஏதோ ஒரு வார்த்தை சொன்னார்.  இரண்டுமுறை கேட்டும் வார்த்தை புரியவில்லை.  ஆனால் அவர் சொன்னது ஒவ்வொரு வீட்டுக்காய் கிறிஸ்த்மஸ் தாத்தா வேடமணிந்து சென்று ஆடிப்பாடி மகிழ்வித்து, பரிசுகள் கொடுத்து, பெற்று வருவோம் என்றார்.  கோவிலில் பழகிய நண்பர்கள் வீட்டுக்கு செல்வோம்.  சில இந்துக்களும் அவர்கள் வீட்டுக்கு அழைத்து பாடி ஆடச் சொல்வார்கள் என்று சில விடியோக்கள் அனுப்பினார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //அவர் சொன்னது ஒவ்வொரு வீட்டுக்காய் கிறிஸ்த்மஸ் தாத்தா வேடமணிந்து சென்று ஆடிப்பாடி மகிழ்வித்து, பரிசுகள் கொடுத்து, பெற்று வருவோம் என்றார். கோவிலில் பழகிய நண்பர்கள் வீட்டுக்கு செல்வோம். சில இந்துக்களும் அவர்கள் வீட்டுக்கு அழைத்து பாடி ஆடச் சொல்வார்கள் என்று சில விடியோக்கள் அனுப்பினார்.//

   அவர் சொன்னது சரிதான். இரவு நேரம் பாடல்களை பாடிய படி வருவார்கள், அவர்களிடம் நாம் வாங்கிய பரிசு பொருட்களை கொடுக்கலாம், அவர்கள் எளியவர்களுக்கு கொடுப்பார்கள்.
   குழந்தைகளுக்கு இனிப்புகள், பொம்மைகள் கொடுப்பார்கள்.

   நீக்கு
 2. கிறிஸ்துமஸ் தாத்தா என்று யார் வேண்டுமானாலும் வயதானவர்கள் அல்லது யாரேனும் ஒருவர் வேடமணிந்து தெரிந்தவர்களுக்கு மட்டுமோ, இலை அனைவருக்குமோ பரிசுகள் கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்படி நிரந்தரமாக ஒருவர் இதற்காகவே இருப்பார் என்று இப்போதுதான் தெரிகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நிரந்தரமாக ஒருவர் இதற்காகவே இருப்பார் என்று இப்போதுதான் தெரிகிறது!//

   நிகலோஸ் என்ற பாதிரியார் துருக்கியில் பிஷபாக இருந்து ஏழைகளின் துயர் துடைத்தார் அவர் நினைவாகத்தான் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உருவாகி ஏழைகளுக்கு உதவினார்கள் என்பார்கள்.டாக்டர் க்ளெமென்ஷி என்பவர் தான் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா பாத்திரத்தை உருவாக்கினார் என்கிறார்கள்.
   மாயவரத்தில் இரவு வந்து ஒவ்வொரு வீட்டு முன்னாலும் வந்து பாடுவார்கள். கேட்க இனிமையாக இருக்கும் பாடி வருபவர்களுக்கு பிஸ்கட், இனிப்பு , காபி, டீ எல்லாம் கொடுப்பார்கள்.

   நீக்கு
 3. குளிரில் நடுங்கும் பனிமனிதன் அருமை.  அந்தக் காணொளி முடிந்ததும் கர்ணன் கிருஷ்ணன் (என் டி ஆர்) க்ஸ்ட்சி தயாராகிறது என் கணினியில்!  கடைசியில் இணைத்திருக்கும் பாடல் காணொளியும் அருமை.  உங்கள் பேரனுக்கு நீங்கள்தான் பரிசு வாங்கி கொடுத்தீர்களா?  கி.  தாத்தா தரமாட்டாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி பார்த்தது அருமை. கர்ணன் ,, கிருஷ்ணன் காட்சி பார்த்தீர்களா ! அருமை.
   பாடல் காணொளில் பாடல் வரிகள் எனக்கு பிடித்து இருந்தது.
   பேரனுக்கு போட்டு காட்டினேன் அந்த இசை ஏற்றமாதிரி ஆடினான்.

   கிறிஸ்துமஸ் தாத்தாதான் என்னை வாங்கி கொடுக்க சொன்னார்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   பள்ளியில் ஆசிரியர்களுக்கு பேரன் பரிசு கொடுத்து வாழ்த்தி வந்தான்.
   மகன் கிறித்துவ நண்பர்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தி வந்தான்.
   மகன் வேலை செய்யும் இடத்தில் எல்லோரும் பரிசு பொருட்கள் வாங்கி விளையாட்டு முறையில் பரிசுகளை பெற்று மகிழ்வார்கள் என்றான். நாம் வாங்கும் பரிசு மற்றவர்களுக்கும் , அவர்கள் வாங்கிய பரிசு நமக்கும் கிடைக்குமாம்.

   பண்டிகை என்றாலே ஈகைதானே!

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 4. கொண்டாட்டம் சிறப்பு - அதை படங்கள் சொல்கின்றன...

  காணொளிகளும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கிறது. காரில் வரும் போது பார்த்து கொண்டே வந்தோம். சிறந்த வீட்டு அலங்காரங்கள் செய்தி தாள்களில், தொலைக்காட்சியில் இடம்பெற்று பரிசுகள் எல்லாம் உண்டாம்.

   காணொளிகள், படங்களை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. அன்பின் கோமதி மா,
  வாழ்க வளமுடன்.
  கிறிஸ்மஸ் மகிழ்ச்சி அனைத்துப் படங்களிலும் தெரிகிறது.
  பேரன் தன் தாத்தாவையும் நினைத்திருப்பான்.

  காணொளியும் பாடலும் மிக அருமை.

  இந்த வருடம்தான் ஃபைர் ப்ளேஸில் சாக்ஸ் எல்லாம் தொங்க விடவில்லை.

  குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள் இல்லையா.

  ஸ்விஸ் பேரன் கேட்டு வாங்கிக் கொள்வான். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு
  விளையாட்டு சாமான் சொல்லி வைப்பான்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   கிறிஸ்மஸ் மகிழ்ச்சி எங்கு பார்த்தாலும். ஊரே விழா கோலம் பூண்டு இருக்கிறது.

   காணொளி, பாடல் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
   இங்கு சாக்ஸ் வித விதமாக தொங்க விட்டு இருக்கிராள் மருமகள் அதை எடுக்க மறந்து விட்டேன்.
   இங்கு வாசலில் வைக்கவில்லை இந்த ஆண்டு, ஊருக்கு போய் கொண்டு இருப்போம் கிறிஸ்துமஸ் அன்று.

   //ஸ்விஸ் பேரன் கேட்டு வாங்கிக் கொள்வான். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு
   விளையாட்டு சாமான் சொல்லி வைப்பான்:)//

   பேரனும் நிறைய விளையாட்டு சாமான் அவன் அப்பா, அம்மாவிடம் கேட்டு இருக்கிறான்.
   நீக்கு
 6. விளக்குகள் அலங்காரமும் கிறிஸ்மஸ் மரமும் மிக அருமை. அப்பாடி என்ன உயரம்பா.!!

  குழந்தைகளை நம்பிதான் கிறிஸ்மஸ்!!!

  விடுமுறை நாட்களை எல்லோரும் நல்லபடியாக அனுபவிக்கட்டும்.
  புது வருடம் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //விளக்குகள் அலங்காரமும் கிறிஸ்மஸ் மரமும் மிக அருமை. அப்பாடி என்ன உயரம்பா.!!//

   ஆமாம்.
   குழந்தைகளை கவர எத்தனை விதமான பொருடகள்! கடைகளில் குவித்து வைத்து இருக்கும் பொருட்கள் ஆசைகளை அதிகமாக்கும் குழந்தைகளுக்கு.

   //விடுமுறை நாட்களை எல்லோரும் நல்லபடியாக அனுபவிக்கட்டும்.
   புது வருடம் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.//

   நானும் உங்களுடன் வேண்டிக் கொள்கிறேன் அக்கா.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. அழகான படங்கள் எடுத்த விதம் மிகவும் அருமை.

  காணொளிகள் கண்டேன் அருமை. அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   படங்களை காணொளிகளை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 8. அழகான காட்சிகள். தில்லியிலும் இப்படி சிலர் வருவார்கள் - சில வீடுகளுக்கு மட்டும். அப்போது அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததுண்டு.

  காட்சிகள், காணொளிகள் என அனைத்தும் நன்று.

  சூழல் காரணமாக யாருடைய பதிவுகளையும் படிக்க இயலவில்லை. விரைவில் தொடர்ந்து வருவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   நம் மார்கழி அதிகாலை பஜனை ஆரம்பிக்கும், இவர்களுக்கு டிசம்பர் மாதம் .
   இவர்கள் நள்ளிரவு ஆரம்பித்து காலை நிறைவு செய்வார்கள், இப்படிபாடி கொண்டே வீதி வலம் வருவார்கள்.
   உங்கள் சூழல் காரணமாகத்தான் வரவில்லை என்று தெரியும் வெங்கட்.
   நேரம் கிடைக்கும் போது வாங்க. நானும் முடிந்த போது பதிவு போடுகிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. அலங்காரங்கள் கண்ணைக் கவர்ந்தன.

  பேரனுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவுடன் படம் எடுத்துக்கொண்டது ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன்
   //பேரனுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவுடன் படம் எடுத்துக்கொண்டது ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கும்.//

   ஆமாம். அவனுக்கு மிகவும் சந்தோஷம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 10. சிறப்பான கொண்டாட்டம். கிறிஸ்துமஸ் தாத்தா உங்களையே பரிசு வாங்கிக் கொடுக்கச் சொல்லிட்டாரா? :) பேரன் நன்றாக உயர்ந்து விட்டான். கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் அனைத்தும் அருமை. கிறிஸ்துமஸ் தாத்தாவையும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து இந்த மான் இழுக்கும் வண்டியோடு அலங்கரித்து வைத்திருப்பார்கள். அதைப் போலவும் பார்த்திருக்கேன். இவையும் அருமையாக இருக்கின்றன. மாலில் இதற்கென்றே தனி வீடு இருப்பதும் ஆச்சரியம் தான்.வழக்கம் போல் இந்தப் படங்களையும் அருமையாக எடுத்திருக்கீங்க! இந்தக் கருத்துப் போகுமானு தெரியலை. மற்றப் பதிவுகளில் காணாமல் போகின்றன. இங்கே என்ன ஆகிறதோ தெரியலை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //கிறிஸ்துமஸ் தாத்தா உங்களையே பரிசு வாங்கிக் கொடுக்கச் சொல்லிட்டாரா? :) //

   அப்படி பேரனிடம் சொன்னேன். அவன் வாங்க வேண்டிய விளையாட்டு சானான்கள் லிஸ்ட் நிறைய வைத்து இருக்கிறான். ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்றாக வாங்கி கொடுப்பார்கள் அவன் பெற்றோர்கள். நான் இந்த முறை வாங்கி கொடுத்து இருக்கிறேன்.

   //கிறிஸ்துமஸ் தாத்தாவையும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து இந்த மான் இழுக்கும் வண்டியோடு அலங்கரித்து வைத்திருப்பார்கள்.//

   நாங்கள் முன்பு தாத்தாவோடு எடுத்து கொண்ட படம் அந்த வண்டியில் அவர் அமர்ந்து இருக்கும் போதுதான். முன்பு ஒரு பதிவில் குடும்பத்தோடு எடுத்த படம் போட்டு இருக்கிறேன்.

   கிறிஸ்துமஸ் மரம் கீழே அந்த வண்டி இருக்கிறது, மான் இல்லாமல்.

   எல்லாம் அலைபேசியில் எடுத்த படங்கள் தான்.
   கருத்து வந்து விட்டது. ஏன் காணாமல் போகிறது?
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. அந்த பரிசை மகன் வாங்கி வைத்து இருந்து கிறிஸ்துமஸ் அன்று அவனிடம் தாத்தா வந்து கொடுத்தார் என்று கொடுத்ததை சொன்னான். எப்படி வந்தார்? எப்போது வந்தார்? என்று அப்பாவிடம் கேட்டால் வீட்டின் புகை போக்கி வழியாக வந்து வைத்து விட்டு போனார் என்று மகன் சொன்னதை சொல்லி கொண்டு இருந்தான் நேற்று. //

  ஹாஹாஹா குழந்தைகளுக்கான விளக்கம் அருமை. ஆமாம் அந்த வயதில் கேள்விகள் நிறைய வருமே.

  //நானும் நேற்று தாத்தா உனக்கு பிடித்த பொம்மை வாங்கி தரச் சொன்னார் என்று ஒரு விளையாட்டு சாமான் வாங்கி கொடுத்தேன்.//

  பேரன் சந்தோஷப்பட்டிருப்பான். பின்னாளில் தன் சிறுவ்யது நினைவுகள் இதை நினைத்துப் பார்த்து புன்சிரிப்பு உதிர்ப்பான். அப்போது இந்தப் பரிசுப் பொருள் விஷயம் எல்லாம் நன்றாகத் தெரிந்திருக்குமே! இனிய நினைவுகளாகப் பதிந்துவிடும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா , வாழ்க வளமுடன்

   //ஹாஹாஹா குழந்தைகளுக்கான விளக்கம் அருமை. ஆமாம் அந்த வயதில் கேள்விகள் நிறைய வருமே.//

   இப்போதும் சொல்வான் இந்த வீட்டில் புகை போக்கி இல்லை அதனால் அவரால் வர முடியாது, வாசலில் வைத்து போய் விடுவார் பரிசை என்று சொல்கிறான்.

   //பேரன் சந்தோஷப்பட்டிருப்பான். பின்னாளில் தன் சிறுவ்யது நினைவுகள் இதை நினைத்துப் பார்த்து புன்சிரிப்பு உதிர்ப்பான்.//

   ஆமாம். சின்ன விளையாட்டு சாமான் வாங்கி கொடுத்தாலே மகிழ்வான். நினைவாய் எப்போது யார் வாங்கி கொடுத்தது என்று இன்றும் சொல்வான்.


   நீக்கு
 12. பெரிய மாலுக்குள்ளேயே வீடா?!!!

  ஒரு வேளை அது அவரை விசிட் செய்வதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடாக இருக்கும் இல்லையா கோமதிக்கா?

  அவருக்குப் பைசா கொடுக்கணுமா...நம்மூரில் தட்சிணை என்று சொல்வது போல!!!

  இப்படி வேஷம் அணிபவர்கள் பெரும்பாலும் பாதிரியாராக இருப்பார்கள்தான். சில சமயம் கொஞ்சம் வறுமையில் இருப்பவர்கள் கூட இப்படியான வேடம் அணிவதுண்டு என்று கேட்டதுண்டு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பெரிய மாலுக்குள்ளேயே வீடா?!!!//

   ஆமாம் , பெரிய மாலுக்குள் அவருக்கு என்று தற்காலிகமாக கட்டியது.
   ஆமாம், அவர் குருதானே பிஷப் . இதை ரசித்து உண்மையாக மக்களுக்கு உழைப்பவர்களும் இருக்கிறார்கள்.

   நீக்கு
 13. பனிமனிதன் பொம்மைகள் காணொளி , வீட்டின் முன் அலங்காரம் எல்லாம் செம கோமதிக்கா.

  உங்கள் மகன் வீட்டு அலங்காரம் பொம்மைகள், மர அலங்காரம் பொம்மைகள், ரொம்ப ரசித்தேன். சிறப்பாக இருக்கிறது

  அட பரவாயில்லை படம் எடுக்க அட்லாண்டா கிறிஸ்துமஸ் தாத்தா காசு கேட்கவில்லையே!!

  குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளுடன் அவர்களுக்கு பிடித்த காட்சிகளுடன் காணொளி இருக்கிறது. பாடிய விதமும் இசையும் எனக்கு பிடித்து இருக்கிறது . உங்களுக்கும் பிடிக்கும் கேட்டு பாருங்கள்.//

  எனக்கும் மிகவும் பிடித்திருக்கு கோமதிக்கா.

  அத்தனை படங்களும் அழகா எடுத்திருக்கீங்க ரொம்ப நல்லாருக்கு. மிகவும் ரசித்தேன்

  மெரி கிறிஸ்துமஸ்! இறைவன் எல்லோருக்கும் நல்லது நல்கிடட்டும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள், காணொளி , மகன் வீட்டு அலங்காரம் என்று அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

   //மெரி கிறிஸ்துமஸ்! இறைவன் எல்லோருக்கும் நல்லது நல்கிடட்டும்!//

   இறைவன் எல்லோருக்கும் மன அமைதி, மனபலம், உடல் நலம் தரட்டும்.

   நீக்கு
 14. கிறிஸ்துமஸ் அலங்காரம், காணொளிகள், உங்கள் மகன் வீட்டு அலங்காரங்கள் எல்லாம் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.

  பேரன் கிறிஸ்துமஸ் தாத்தாவும் படம் எடுத்துக் கொண்டது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். நன்றாக வளர்ந்திருக்கிறான்.

  படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

   //கிறிஸ்துமஸ் அலங்காரம், காணொளிகள், உங்கள் மகன் வீட்டு அலங்காரங்கள் எல்லாம் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.//

   நன்றி.

   //பேரன் கிறிஸ்துமஸ் தாத்தாவும் படம் எடுத்துக் கொண்டது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். நன்றாக வளர்ந்திருக்கிறான்.//
   ஆமாம், மகிழ்ச்சி அவனுக்கும், எங்களுக்கும்.
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.   நீக்கு
 15. வணக்கம் சகோதரி

  நலமா? பதிவு அருமை. படங்கள் வழக்கம் போல அருமையாக உள்ளது. கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து கம்பீரமாக அமர்ந்திருப்பவர் அருகே தங்கள் பேரனும் அமர்ந்திருக்கும் படங்கள் நன்றாக உள்ளன. கிறிஸ்துமஸ் மரம் அருகே தங்கள் பேரன் கவின் கம்பீரமாக நிற்கும் படமும் அழகாக உள்ளது.

  நீங்கள் மகன் ஊருக்கு திரும்பி விட்டீர்களா? மிகவும் சந்தோஷம். அதனால்தான் சில நாட்களுக்கு உங்களை எங்கும் காணவில்லை போலும்...! நானே கேட்கலாம் என நினைத்த போது நீங்கள் வந்து விட்டீர்கள். மகன் வீட்டிலும் அனைவரையும் கேட்டதாகக் கூறவும்.

  இங்குள்ள ஒரு பெரிய மாலில் சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமிட்டிருக்கும் ஒருவரை அருகில் மகன்,மகளின் குழந்தைளுடன் பார்த்துள்ளோம். அப்போது குழந்தைகளை அவர் அருகில் அமரச் சொல்லியும், சிறு குழந்தைகளாகையால் பயந்து மறுத்து விட்டனர்.

  அங்கு அவருடன் அமர்ந்து போட்டோக்கள் எடுத்துக் கொள்ள பணம் தர வேண்டுமா? தாங்களும், தங்கள் மகனும் உங்கள் பேரனுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா தந்தாகக் கூறி பரிசுகள் வாங்கி தந்தது மகிழ்ச்சி. உங்கள் மகனின் அலுவலகம் போல் இங்கு எங்கள் குழந்தைகள் வேலை பார்க்கும் இடத்திலும் ஒருவருக்கொருவர் பரிசுகளை வாங்கித்தந்து மகிழ்வார்கள். இப்போது வீட்டிலிருந்து வேலைகள் என்பதினால் எப்படி எனத் தெரியவில்லை. கிறிஸ்துமஸ் என்றாலே வருடாவருடம் அனைவருக்கும் ஒரு சந்தோஷம் தரும் விழாதான். அங்கு உங்களனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் எடுத்து பகிர்ந்துள்ள படங்கள் அனைத்தும், குளிரில் நடுங்கும் பனி மனிதன் காணொளியும் அருமையாக உள்ளது. பார்த்து ரசித்தேன்.

  நேற்று வலைத்தளம் வர இயலவில்லை. அதனால் தாமதம். பகிர்வனைத்திற்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //நலமா? பதிவு அருமை. படங்கள் வழக்கம் போல அருமையாக உள்ளது. கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து கம்பீரமாக அமர்ந்திருப்பவர் அருகே தங்கள் பேரனும் அமர்ந்திருக்கும் படங்கள் நன்றாக உள்ளன//

   நான் நலமாக இருக்கிறேன். மகன் ஊருக்கு வந்து விட்டேன். மகளும் உடன் வந்தாள். என் கணவருக்கு முதல் ஆண்டு திதி நல்லவிதமாக இறைவன் அருளால் நிறைவு பெற்றது. அதில் கலந்து கொண்டு ஊருக்கு போய் விட்டாள் மகள்.
   நாங்களும் சில நாட்களில் இந்தியா திரும்புவோம்.

   இப்போது எல்லா இடங்களிலும் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்தவர்களை கடை வாசல் முன் பொம்மையாகவோ , அல்லது வேடமிட்டவரையோ நிற்க வைக்கிறார்கள்.

   தாத்தாவுடன் படம் எடுத்துக் கொள்ள பணம் தர வேண்டும். அது நல்ல காரியங்களுக்கு உபயோகம் ஆகும்.

   //இப்போது வீட்டிலிருந்து வேலைகள் என்பதினால் எப்படி எனத் தெரியவில்லை.//

   ஆமாம், எல்லா இடங்களிலும் இப்படி வந்து விட்டது.
   பேரன் கதை எழுதி இருக்கிறான் தமிழ் பள்ளிக்கு அதில் கிறிஸ்துமஸ் அன்று பரிசு பெறுவதுடன் பரிசுகளை கொடுங்கள் என்று நீதி சொல்லி இருக்கிறான் நிறைவு பகுதியில் கொடுப்பதிலும் இன்பம் இருக்கிறது தானே!

   படங்களை, காணொளியை கண்டு ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

   நீக்கு
 16. பதில்கள்
  1. வணக்கம் சதீஸ் முத்து கோபால, வாழ்க வளமுடன்
   உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 17. அழகான படங்கள். உங்கள் விவரிப்பும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. காலையிலிருந்து மூன்று தடவை முயற்சித்து இப்போது இதுதான் வந்திருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னூட்டம் போட்ட பதிவுக்கே இப்போதும் மூன்று முறை வந்து இருக்கிறது.
   அடுத்த பதிவு போட்டு விட்டேன் பானு.

   நீக்கு
 19. கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பேரன் அழகிய படம்.
  இரண்டு வருடம் முன் கிறிஸ்துமஸ்போது பேரன் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் படமும் எடுத்து பரிசும் வாங்கினார்.மியூசிக் குறூப்புடன் நடனமும் ஆடினார் அப்பொழுது வயது ஒன்றரை :) இப்பொழுது கொரானோ பயணத்தில் கூட்டிப்போகவில்லை.

  பதிலளிநீக்கு