இன்று "உங்கள் பறவைகள் வந்தனவா என்று வல்லி அக்கா கேட்டதால் இந்த பதிவு. மகன் வீட்டில் வழக்கமாய் வரும் புறாக்கள், சிட்டுக்குருவிகள், மரங்கொத்திகள் , காடைகளும் வருகிறது. அவைகள் முன்பு எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன். நேற்றும் பறவைகளை எடுத்தேன்.
இந்த பதிவில் உள்ள பறவைகள் மகள் வீட்டு தோட்டத்தில் (அட்லாண்டாவில்) எடுத்த பறவைகள்.
சிட்டுக்குருவி போல இருக்கும் பறவை
மரங்கள் எல்லாம் மழை, மற்றும் குளிரில் பாசம் பிடித்து இருக்கிறது.
வடக்கு மோக்கிங்பேர்ட் மிமஸ் பாலிக்ளோட்டோஸ் என்று கூகுள் சொல்கிறது. வேறு யாராவது பறவைகளை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் வேறு பேர் சொன்னாலும் சொல்லலாம்.
புற்கள் சிவப்பு நிறமாக மாறி வருகிறது. புற்களுக்கு இடையில் கிடைக்கும் கொட்டைகள், புழு, பூச்சிகளை உண்கிறது இந்த பறவை.
ஸ்டெல்லர்ஸ் ஜெய் என்று அழைக்கப்படும் நீல நிறப் பறவைக்கு இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் வில்ஹெல்ம் ஸ்டெல்லர் அவர்களின் பெயர் வைக்கப்பட்டதாம் . படித்து தெரிந்து கொண்ட செய்தி.
நீல ஜெய் சயனோசிட்டா கிறிஸ்டாட்டா என்றும் கூகுள் சொல்கிறது.
மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து இருந்தது. பச்சை பசேல் புற்கள் காய்ந்து இருக்கிறது. அதன் மேல் மரத்தின் இலைகள் உதிர்ந்து இருப்பதால், பறவைகளும், அணில்களும் தேடி தேடிதான் உணவை உண்டன.
ஆண் கார்டினால்
பசுமை மறைந்து காய்ந்து இருக்கும் புற்களில் மேலே துளிர்த்து இருப்பதை மட்டும் சுவைத்து சாப்பிடுகிறது.
பெண் கார்டினால் பறவை
மகள் ஊரிலிருந்து கிளம்பும் போது பறவைகளை படம் எடுக்க குளிரில் மதியம் நேரம் காத்து இருந்து எடுத்தேன். குளிர் காலத்தில் பறவைகள் வருவது குறைந்து இருந்தது.
முன்பு இப்படி பசுமை இலைகள் நிறமாறி அழகிய தோற்றம் கொடுத்த மரம் இப்போது கீழே இருப்பது போல மாறி விட்டது.
இலைகள் உதிர்ந்து மரங்கள் களை இழந்து நிற்கிறது.
முன்பு பசுமையாக இருந்த, மரங்கள், செடிகள், புற்கள் (இந்த பால்கனியிலிருந்துதான் பறவைகளை படம் எடுப்பேன்)
(முன்பு எடுத்த படம் ) பச்சை பசேல் இலைகளுக்கு இடையே பறவை அமர்ந்து இருப்பதை தேடி எடுத்த படம்.
"படம் எடுத்து விட்டாயா? போக போகிறேன் உணவு தேட"
ஓடி ஓடி தேடுகிறது
தேடி கொண்டு இருக்கிறது
கிடைத்து விட்டது. குளிர் காலம் வந்து விட்டால் கொட்டைகளை சேமித்து வைக்குமாம்.
மகள் ஊருக்கு வந்த நாள் முதலாக அணிலை படம் எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன். நிற்காமல் மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும். மரத்தில் பச்சைபசுமையான இலைகள் இருந்தன அதில் மறைந்து கொள்ளும்.
ஊருக்கு போக போவது தெரிந்து விட்டது போல "போனால் போகுது எடுத்துக் கொள்" என்று படம் எடுக்க அனுமதி கொடுத்தது போல நின்றது .
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
கார்டினல் ஆண்,பெண் வெவ்வேறு வண்ணங்களா,
எத்தனை அதிசயம் மா. கார்டினல் ,சிவப்பு வண்ணத்தில்
மட்டும் இருக்கும் என்று நினைத்தேன்.
அதே போல ப்ளூ ஜே பறவை. என்ன அழகு!!!
நீங்கள் வெறும் படம் மட்டும் எடுத்துக் கொண்டு
நிற்காமல் விவரமும் சொல்கிறீர்கள்.
மிக மிக அருமையான வழக்கம்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//கார்டினல் ஆண்,பெண் வெவ்வேறு வண்ணங்களா,
எத்தனை அதிசயம் மா. கார்டினல் ,சிவப்பு வண்ணத்தில்
மட்டும் இருக்கும் என்று நினைத்தேன்.//
நானும் அப்படித்தான் முன்பு நினைத்தேன்.
//அதே போல ப்ளூ ஜே பறவை. என்ன அழகு!!!
நீங்கள் வெறும் படம் மட்டும் எடுத்துக் கொண்டு
நிற்காமல் விவரமும் சொல்கிறீர்கள்.//
பறவையின் பேர் கண்டு பிடிக்க பார்க்கும் போது சில விவரங்களும் தெரிந்து கொள்கிறேன். அப்புறம் அவை சாப்பிடுவதை கவனிக்கிறேன் அதனால் கொஞ்சம் சொல்கிறேன்.
உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்னை உற்சாகப்படுத்தி பதிவு போட வைத்ததற்கு.
அணில்களின் தேடல் ,அவற்றின் கண்கள், இலை உதிர்ந்த மரங்கள்,
பதிலளிநீக்குபழுப்படைந்த புல் தரை எல்லாமே குளிர் காலத்தைக் காண்பிக்கின்றன.
இங்கே அணில் மட்டுமே வருகிறது.
ஆந்தை வீட்டு சிம்னியில் கூடு கட்டி,
ட்டூஹூனு கத்திக் கொண்டிருக்கும்.
அருமையான பதிவு மா.
//அணில்களின் தேடல் ,அவற்றின் கண்கள், இலை உதிர்ந்த மரங்கள்,
நீக்குபழுப்படைந்த புல் தரை எல்லாமே குளிர் காலத்தைக் காண்பிக்கின்றன.//
ஆமாம் அக்கா.
ஆந்தை இங்கும் சில நேரம் எதிர் வீட்டு மேல் அமரும் ஆனால் படம் எடுக்க முடியாது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
காணொளிகள் மிக அருமை.
பதிலளிநீக்குகாணொளிகள் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.
நீக்குஅழகிய படங்கள். பறவைகள் பாக்கவே அழகாக இருக்கின்றன. அதற்கான பெயர்களும் எனக்கு புதிது. காணொளிகள் சுவாரஸ்யம். பசுமைப்பகுதியை மட்டும் உண்ணும் அந்தப் பறவையின் காணொளி கவனமாக எடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குபறவைகள் பெயர் சரிதான் என்று நினைத்து சொல்லி இருக்கிறேன்.வேறு யாரும் வந்து அதன் பேர் இது இல்லை என்றால் மாற்ற வேண்டும்.
பறவைகள் புல்லின் நுனியை கடித்து தின்பதை பார்த்தவுடந்தான் காணொளி எடுக்க ஆசை பட்டு எடுத்தேன்.
காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அணில் படம் ஒன்றுக்கு படமெடுத்தாச்சா, போகட்டுமா என்று கேட்பது போல கேப்ஷன் கொடுத்திருப்பது ரசிக்க வைத்தது. ஆண் கார்டினால் வண்ண மயமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅணில் படம் நிறைய முகநூலில் போட்டேன் பார்த்து இருப்பீர்கள்.
நீக்குஅது அப்படிதான் நின்றது. கடைசியில் என்னைப்பார்த்து விட்டு மரத்தை விட்டு இறங்கி போனது.
உங்கள் ரசிப்புக்கு நன்றி. கார்டினாலில் நிறைய வகை இருக்கிறது .
மகள் ஊரிலிருந்து கிளம்பப் போகிறீர்களா? பேரன் அழைக்கிறானா? கவின் மகிழ்ச்சியாகக் காத்திருப்பான்.
பதிலளிநீக்குநான் மகள் ஊரிலிருந்து கிளம்பி 11ம் தேதி மகன் வீட்டுக்கு வந்தேன்.
நீக்குகிறிஸ்துமஸ் தாத்தா பதிவு இங்கு வந்தபின் தான் போட்டேன்.
சாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் மகன் வீட்டில் தான் .
இங்கிருந்தும் கிளம்பும் நாள் வந்து விட்டது.
கவினுடன் தான் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்க்க போனோம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பறவைகள் மிக அழகு. அணில் நான் லண்டனில் பார்த்ததுபோல பெரிதாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇரு நாட்களுக்குமுன் வளாகத்தில் செம்போத்து பறவையைப் பார்த்தேன்
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஅணில் இதைவிட பெரிதாகவும் இருக்கிறது. ஆனால் அது இந்த பகுதியில் இல்லை.
செம்போந்து பறவை படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன். மதுரையில் தபால் தந்தி நகர் வீட்டில் இருந்த போது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. பறவைகளும்,அணில்களும் கண்களை கவர்கிறது. விதவிதமான பறவைகளின் பெயர்களை உடனே தேடி படித்து தெரிந்து வைத்திருக்கும் தங்களின் ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன்.
இப்போது தாங்கள் மகன் வீட்டுக்கு வந்திருக்கும் செய்தியறிந்து கொண்டேன்.
சிட்டுக்குருவி படங்கள் மிக அழகாக உள்ளது. மோக்கிங்பேர்ட் பறவை, ஸ்டெல்லர்ஸ் ஜெய் பறவை (இதன் பெயர்களே நன்றாக உள்ளது) என விதவிதமான பெயர் கொண்ட பறவைகள் அதன் உணவு, காணொளிகள் கண்டு மகிழ்ந்தேன். சிவப்பு நிற புற்கள்தாம் அதன் உணவு போலும்.
கார்டினல் ஆண், பெண் பறவைகள் மிக அழகாக இருக்கின்றன. அதிலும் அந்த சிகப்பு நிறமாக இருக்கும் ஆண் பறவை கொஞ்சம் குண்டாக பார்க்க அழகாக உள்ளது. அது புற்களை கடித்து சாப்பிடுவதுமான அந்த காணொளியும் பார்த்தேன். அழகாக உள்ளது.
மரங்கள் சீதோஷ்ண காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு இந்த பறவைகளுக்கும், அணில்களுக்கும் பேருதவியாக இருந்து வருகிறது.
பச்சை பசேல் மரங்களுக்கு நடுவே அந்த சிகப்பு குண்டுபறவை படம் மிக அழகாக உள்ளது.
ஒவ்வொரு பறவை வகைகளும், அணில்கள், மற்ற மிருகங்கள் என அனைத்தும், அந்தந்த இடங்களுக்கு தோதாக வாழ்ந்து வருவதை பார்க்கும் போது, உலகத்தின் விந்தைகளும், இவற்றையெல்லாம தோற்றுவித்த ஆண்டவனின் சிருஷ்டிகளும், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
அணில்களின் படங்களும், அது உங்களுடன் பேசிய பேச்சுக்களையும் ரசித்தேன். அணில்களின் வால் நீளம் இங்குள்ளதை விட கொஞ்சம் அதிகமோ? அணில்கள் உங்களுக்கு அருமையாக போஸ் தந்திருக்கின்றன. எல்லாப் படங்களும் வழக்கம் போல் அருமையாக வந்திருக்கின்றன. நீங்கள் சிறந்த போட்டோகிராஃப்பராகி விட்டீர்கள். உங்கள் திறமைக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். அழகான படங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குமகன் கிறிஸ்துமஸ் தாத்தா பார்க்க அழைத்து போனான் என்று போட்டு இருந்தேன் கமலா. 11ம் தேதி வந்து விட்டேன்.
//ஒவ்வொரு பறவை வகைகளும், அணில்கள், மற்ற மிருகங்கள் என அனைத்தும், அந்தந்த இடங்களுக்கு தோதாக வாழ்ந்து வருவதை பார்க்கும் போது, உலகத்தின் விந்தைகளும், இவற்றையெல்லாம தோற்றுவித்த ஆண்டவனின் சிருஷ்டிகளும், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.//
ஆமாம், ஆண்டவனின் சிருஷ்டி பிரமிப்பை தரும் என்பது உணமை.
வித விதமான பறவைகளை பார்க்கும் போது அதன் பேரை தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. அந்த அந்த ஊருக்கு ஏற்றமாதிரி பறவைகளும் இருக்கிறது. வெளி நாட்டிலிருந்து கால தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற மாதிரி வெகு தூரம் பறந்து போய் சிறிது காலம் வாழும் பறவையும் இருக்கிறது.
நம் மூர் அணில் போல மகன் வீட்டில் இருக்கிறது. மகன் முன்பு இருந்த ஊரில் பெரிய குண்டு அணில் பிரவுன் கலரில் இருக்கும் நம்மூர் காட்டு அணில் போல!
இந்த அணிலுக்கு வால் பெரியதுதான்.
//நீங்கள் சிறந்த போட்டோகிராஃப்பராகி விட்டீர்கள். உங்கள் திறமைக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். அழகான படங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
படம் எடுக்க காமிராவின் நுணுக்கம் எல்லாம் அறியவில்லை, ஆட்டோ மோடில் வைத்து எடுத்து கொண்டு இருக்கிறேன். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
உங்கள் மனப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்களுக்கு மட்டும் தான் இந்த பறவைகளும் அணில் போன்ற மிருகங்களும் ஆற அமர போஸ் கொடுக்கின்றன. பொறாமையாக இருக்கிறது. பிரேம் செட் செய்து போகஸ் செய்து படம் எடுக்க 2 செகண்ட் ஆவது ஆகும். அதுவரை அவை அசையாமல் ஒரே இடத்தில இருப்பது ஆச்சர்யம் தான். படங்கள் யாவும் அழகு.
பதிலளிநீக்குநல்ல அழகான படங்களைக் கொண்டு 2022 காலண்டர் தயாரித்து மின் நிலாவுக்கு இணைப்பாகத் தரலாமே.
Jayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குபறவைகள் உங்களை அழைத்து வந்து விட்டது போல!
//பிரேம் செட் செய்து போகஸ் செய்து படம் எடுக்க 2 செகண்ட் ஆவது ஆகும். அதுவரை அவை அசையாமல் ஒரே இடத்தில இருப்பது ஆச்சர்யம் தான்.//
வித விதமாக எடுப்பேன் அவை தோற்றத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் ஒரே மாதிரி போஸ் கொடுக்காது, எடுத்தவற்றில் நன்றாக இருப்பதை தருகிறேன். சில நேரம் முகத்தை காட்டாமல் திரும்பி உட்கார்ந்து இருக்கும், திடீரென்று திரும்பும். பொறுமையாக காத்து இருந்துதான் எடுக்க வேண்டி உள்ளது.
மிக அழகாய் உட்கார்ந்து இருப்பதை ஜன்னல் வழியாக பார்த்து விட்டு காமிராவை தூக்கி கொண்டு வந்தால் பறந்து விடும். நிறைய ஏமாற்றங்களும் ஏற்பட்டு இருக்கிறது.
//நல்ல அழகான படங்களைக் கொண்டு 2022 காலண்டர் தயாரித்து மின் நிலாவுக்கு இணைப்பாகத் தரலாமே.//
தரலாமே! ஆனால் என் படங்கள் காலண்டரில் இடம்பெற தகுதியாக இருக்கா என்று தெரியவில்லை.
//படங்கள் யாவும் அழகு.//
நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி.
அழகிய பறவைகள் விளக்கம் அருமை சகோ.
பதிலளிநீக்குகாணொளிகள் கண்டேன்... பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய பறவைகள் விளக்கம் அருமை சகோ.//
நன்றி.
படங்களை, காணொளிகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
மிகவும் ரசித்தேன் அம்மா...
பதிலளிநீக்குவணகம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஅனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கார்டினாலும் ப்ளூ ஜேயும் புதிதாகத் தெரிந்து கொண்டேன். உங்களோடு பழகிப் பழகிப் பறவைகள் உங்களைப் புரிந்து கொண்டு விட்டன. அதனால் நீங்கள் படம் எடுக்கும்வரை ஆற அமர உட்கார்ந்திருந்து போஸ் கொடுக்கின்றன. சிவப்பு வண்ணக் கார்டினால் பறவை மிக அழகு. எல்லாமே அழகு தான் என்றாலும் இது குறிப்பிட்டுச் சொல்லும்படி உள்ளது.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//உங்களோடு பழகிப் பழகிப் பறவைகள் உங்களைப் புரிந்து கொண்டு விட்டன. அதனால் நீங்கள் படம் எடுக்கும்வரை ஆற அமர உட்கார்ந்திருந்து போஸ் கொடுக்கின்றன. //
நீங்கள் சொல்வது நன்றாக தான் இருக்கிறது. ஆனால் வெகு தூரத்தில் நிற்பதை ஜூம் செய்து எடுக்கிறேன். அவை பக்கத்தில் இருக்கும் போது எடுத்தால் நன்றாக இருக்கும் .
பக்கத்தில் இருக்கும் போது காமிராவை தூக்கினாலே பறந்து போய்விடும்.
சிவப்பு வண்ணக் கார்டினால் பார்க்க அழகுதான். அது அடிக்கடி அடிக்கடி வரும். மரத்திலேயே இருக்கும் . இப்போது மரத்தில் அதற்கு புழு, பூச்சி கிடைக்கவில்லை, அதனால் கீழே தேடுகிறது. உணவு தேடுவதில் கவனம் செலுத்துவதால் படம் எடுக்க முடிகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா கை கொடுங்க! எதுக்கு?
பதிலளிநீக்குஉங்கள் கருத்திற்கு எங்கள் தளத்தில் பதிக் கொடுத்த போது நீங்களும் யுட்யூபில் பறவைகள் வீடியோக்கள் எல்லா வீடியோக்களையுமே பகிருங்கள் தெளிவாக பறவைகள் இருக்கின்றன என்று சொல்லியிருந்தேன் இங்கு வந்து ஆண் கார்டினால் யுட்யூபில் பார்த்து விட்டேன் ஆண் பறவைக்கும் பெண் பறவைக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது இல்லையா.
நாங்கள் இருவருமே உங்கள் சானலை லைக் செய்து சப்ஸ்க்ரைப் செய்துவிட்டோம் அக்கா. இரு காணொளிகளும் அருமை
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//நீங்களும் யுட்யூபில் பறவைகள் வீடியோக்கள் எல்லா வீடியோக்களையுமே பகிருங்கள் தெளிவாக பறவைகள் இருக்கின்றன என்று சொல்லியிருந்தேன் //
யுட்யூபில் பகிர சொன்னதற்கு நன்றி.
பிள்ளைகள் கற்று கொடுத்தார்கள். பேரன் நிறைய யூட்யூபில் வீடியோக்கள் போடுகிறான்.
நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.
//நாங்கள் இருவருமே உங்கள் சானலை லைக் செய்து சப்ஸ்க்ரைப் செய்துவிட்டோம் அக்கா. இரு காணொளிகளும் அருமை//
நன்றி உங்கள் இருவருக்கும்.
பெண் கார்டினால் கொஞ்சம் கிளி கலரில் இருக்கிறதோ?
பதிலளிநீக்குஸ்டெல்லார்ஸ் ஜெய் யின் வால் செம அழகு. நிறமும்...
என் கேமராவில் பறவைகள் பல எடுத்திருக்கிறேன் கோமதிக்கா. சமீபத்திலும் கூட கொக்குகள் பறப்பது எல்லாம் எடுத்தேன் ஆனால் இத்தனை க்ளியராக இல்லை.
ரொம்பத் தெளிவாக அழகாக இருக்கின்றன கோமதிக்கா. நீங்களும் ராமலக்ஷமி அவங்க செய்வது போல ஃப்ளிக்கரில் பதிவேற்றலாம் என்று நினைக்கிறேன். படம் செலக்ட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு கோமதிக்கா
கீதா
கார்டினால் பறவைகள் கூகுளில் பார்த்தால் வித விதமாக இருக்கிறது கீதா.
நீக்குநீலபறவை கொஞ்சம் கோபமான பறவையாம். அதன் உடல், வால் எல்லாம் அழகுதான்.
நீங்கள் எடுத்த பறவைகளை பதிவு போடுங்கள்.
//ரொம்பத் தெளிவாக அழகாக இருக்கின்றன கோமதிக்கா. நீங்களும் ராமலக்ஷமி அவங்க செய்வது போல ஃப்ளிக்கரில் பதிவேற்றலாம் என்று நினைக்கிறேன். படம் செலக்ட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு கோமதிக்கா//
ராமலக்ஷ்மி மாதிரியா! ? நானா? ! அவர் படங்கள் அப்படியே நேரில் பார்ப்பது போல இருக்கும் . நான் ஏதோ எடுத்து கொண்டு இருக்கிறேன்.
உங்கள் உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி.
இலைகளின் கலர் மாறியிருப்பது தெரிகிறது.
பதிலளிநீக்குபறவை பார்த்து பார்த்து கொத்தித் தின்பதும் அழகு.
மகள் ஊரிலிருந்து கிளம்பும் போது பறவைகளை படம் எடுக்க குளிரில் மதியம் நேரம் காத்து இருந்து எடுத்தேன்.//
இதுதான் ஆர்வம்/பாஷன்!!!
நீங்களும் என்னைப் போலவே!!!! நானும் எடுத்துக் கொண்டே இருப்பேன். அதற்காகவே தனியாகச் செல்வது/பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். கூட வருபவர்களுக்கு ஆர்வம் இல்லை என்றால் நாம் பொறுமையாக எடுக்கும் வரை அவர்களுக்குப் பொறுமை இல்லை என்றால்.....பெரும்பாலும் இருக்காது...பிரச்சனைகள் வரும்...எனவே எடுக்க முடியாமல் ஓட வேண்டியிருக்கும். ஹாஹாஹா
படங்கள் அத்தனையும் அழகோ அழகு!!
கீதா
மரங்களின் இலைகள் நிறம் மாறி இருக்கும் பருவத்தில் வெகு தூரம் போய் பார்த்து வந்தோம். வீட்டுக்கு முன்னேயே அழகாய் தோற்றம் கொடுத்தது.
நீக்கு//இதுதான் ஆர்வம்/பாஷன்!!!//
ஆர்வத்தை பாராட்டியதற்கு நன்றி.
//நாம் பொறுமையாக எடுக்கும் வரை அவர்களுக்குப் பொறுமை இல்லை என்றால்.....பெரும்பாலும் இருக்காது...பிரச்சனைகள் வரும்...எனவே எடுக்க முடியாமல் ஓட வேண்டியிருக்கும். ஹாஹாஹா//
உடன் வருபவர்கள் கொடுக்கும் ஆதரவால்தான் எடுக்க முடிகிறது போகும் இடங்களில்.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
இலைகள் உதிர்ந்தாலும் மரங்கல் அழகாகத்தான் இருக்கின்றன கோமதிக்கா இதுவும் ஒரு அழகு!! நீங்கள் எடுத்திருப்பதும் நன்றாக இருக்கின்றது
பதிலளிநீக்குஆமாம் அந்த பால்கனி நினைவிருக்கிறது மகள் வீட்டிலிருந்து எடுத்த படங்களை இதற்கு முன் போட்டிருந்தீர்களே!
பச்சை பசேலுக்கு இடையில் கழுத்துக் கறுப்பும் உடல் சிவப்பும் ஆன அப்பறவை கொள்ளை அழகு!!!
அணிலார் ஏதோ பேசுகிறாரே என்று நினைத்துப் பார்த்தால் நீங்கள் சொல்லியிருக்கீங்க!!! அவர் சாப்பிடப் போவதாக!!!
அணிலாரின் வால் மட்டும் புஸு புஸு என்று முகத்தை நிலத்தில் புதைத்துக் கொண்டு ஹாஹாஅஹ செம போஸ்!!
ஏதோ கிடைத்துவிட்டது சாப்பிடப் பார்க்கிறார்...
இப்படித்தான் இங்கு நான் ஒரு பார்க்கில் எடுத்த அணில் படங்கள் பறவைகள் படங்கள் எல்லாம் பழுதாகிய ஹார்ட் டிஸ்கில் மாட்டிக் கொண்டுவிட்டது. எப்போது அதிலிருந்து டேட்டா எல்லாம் எடுக்க முடியுமோ தெரியவில்லை...பகிர்வதற்கு நிறைய இருக்கிறது.
அனைத்துப் படங்களையும் ரசித்தேன் கோமதிக்கா
கீதா
//இலைகள் உதிர்ந்தாலும் மரங்கல் அழகாகத்தான் இருக்கின்றன கோமதிக்கா இதுவும் ஒரு அழகு!! நீங்கள் எடுத்திருப்பதும் நன்றாக இருக்கின்றது//
நீக்குஇலையுதிர் காலத்துக்கு முன் மரங்களின் இலைகள் நிறம் மாறி அழகான தோற்றம் தந்த பின் உதிரும். உதிரும் இலைகள், காய்களை பாடம் செய்து வித விதமாக மகள், மருமகள் அலங்காரத்திற்கு பயன் படுத்தி இருக்கிறார்கள்.
அணிலார் ஏதோ பேசுகிறாரே என்று நினைத்துப் பார்த்தால் நீங்கள் சொல்லியிருக்கீங்க!!! அவர் சாப்பிடப் போவதாக!!!
//அணிலாரின் வால் மட்டும் புஸு புஸு என்று முகத்தை நிலத்தில் புதைத்துக் கொண்டு ஹாஹாஅஹ செம போஸ்!!//
அணிலை நிறைய படம் எடுத்தேன் தனி பதிவாக போடலாம். அதுதான் கடைசியில் அது பொறுமை இழந்து கடைசி படத்தில் என்னைப்பார்த்து முறைத்தது.
இந்த பதிவில் கொஞ்சம்தான் போட்டேன்.
எனக்கும் ஹார்ட் டிஸ்கில் போனதை மீட்க முடியவில்லை.
படங்கள் எடுத்தவுடன் பகிர்ந்து விட வேண்டும் என்று சொல்கிறது போல!
ண்ஹீங்கள் சொல்வது போல பகிர நிறைய இருக்கிறது. இறையருளால் முடிந்தவரை பகிர நினைக்கிறேன்.
ரசித்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா.
வழக்கம் போல மிகவும் தெளிவான படங்கள். பறவைகள் நேரில் பார்ப்பதற்கும் அழகாக இருந்திருக்கும் கூடுதலாக எல்லாமே உங்கள் கேமராவில் மேலும் அழகோடு காட்சி கொடுக்கின்றன. அதன் வழி நாங்களும் பார்த்து மகிழ முடிகிறது.
பதிலளிநீக்குஅழகான பறவைகள். வித்தியாசமான பறவைகள்.
காணொளிகளும் கண்டேன். யுட்யூபிலும் பார்த்தேன். மிக்க நன்றி சகோதரி பகிர்விற்கு
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//வழக்கம் போல மிகவும் தெளிவான படங்கள். பறவைகள் நேரில் பார்ப்பதற்கும் அழகாக இருந்திருக்கும் கூடுதலாக எல்லாமே உங்கள் கேமராவில் மேலும் அழகோடு காட்சி கொடுக்கின்றன. அதன் வழி நாங்களும் பார்த்து மகிழ முடிகிறது.//
நேரில் பார்க்க அழகு பறவைகள். முடிந்தவரை எடுத்து இருக்கிறேன்.கிளைகளில் வந்து அமரும் போது மிக அழகாய் இருக்கும்.
//அழகான பறவைகள். வித்தியாசமான பறவைகள்.//
ஆமாம், வித்தியாசமான பறவைகள்.
//காணொளிகளும் கண்டேன். யுட்யூபிலும் பார்த்தேன். மிக்க நன்றி சகோதரி பகிர்விற்கு//
காணொளிகளை கண்டு சப்ஸ்க்ரைப் செய்த விவரம் கீதா சொன்னார்கள் நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பொறுமையாகவும் அருமையாகவும் படமாக்கியுள்ளீர்கள். புற்கள் சிகப்பாகக் காட்சி அளிப்பது அழகு. மரங்கள் இலை உதிர்ந்து போவதும் சீஸனில் தழைத்து வருவதும் ஒரு சுழற்சியாக நடக்கிறது எங்கள் குடியிருப்பில் இருக்கும் மடகாஸ்கர் ஆல்மண்ட் மரங்களில். எப்போதேனும் இந்த மரம் குறித்துப் பகிர்ந்திடுகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//பொறுமையாகவும் அருமையாகவும் படமாக்கியுள்ளீர்கள். புற்கள் சிகப்பாகக் காட்சி அளிப்பது அழகு.//
நன்றி.
//எங்கள் குடியிருப்பில் இருக்கும் மடகாஸ்கர் ஆல்மண்ட் மரங்களில். எப்போதேனும் இந்த மரம் குறித்துப் பகிர்ந்திடுகிறேன்.//
பகிருங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நீல நிறப்பறவை, சிகப்பு நிற பறவை, அணில் அத்தனையும் மிகவும் அழகு!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ஒவ்வொரு படமும் கதை பேசுகிறது மா..அத்துணை அழகு
பதிலளிநீக்குஅணிலார் படங்கள் ஆஹா வெகு அழகு ...எனக்கும் அணிலார் படங்கள் எடுக்க மிக பிடிக்கும் ...இங்கு cuppon park சென்றால் இது போல காட்சிகள் கிடைக்கும் ...
வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கும்,
உங்கள் விருப்பத்தை சொன்னதற்கு நன்றி.
எத்தனை வண்ணங்களில் அழகிய பறவைகள்.
பதிலளிநீக்கு