ரோஜா தோட்டத்து கதை
தோட்டத்து நிழலில் அமர்ந்து பேசி புகைபடங்கள் எடுக்கலாம்
அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்" என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக பகிர்ந்து வருகிறேன்.
இந்த பதிவில் அங்கு பார்த்த மிக பழமையான ரோஜா தோட்டம் பற்றிய பகிர்வு. உலகின் மிக பெரிய ரோஜா தோட்டம். லேடி பாங்க்சியா ரோஸ் செடி 1885 ஆம ஆண்டில் ஸ்காட்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இந்த வீட்டின் பின் புறத்தில் நடப்பட்டது. உலகின் மிகப் பெரியதாக அளவிடப்பட்டு இருப்பது இந்த தோட்டத்தின் சிறப்பு. இந்த இடம் 8000 சதுர அடியாம். இந்த தோட்டம் "ஷேடி லேடி" என்று செல்லபெயர் பெற்று இருக்கிறது. ரோஜாத் தோட்ட மியூசியம் பார்க்க கட்டணம் உண்டு.
, இந்த பூனை நாங்கள் அனுமதி சீட்டு வாங்கும் போதும் தூங்கி கொண்டு இருந்தது, உள்ளே போய் பார்த்து திரும்பி வந்த பின்னும் தூங்கி கொண்டு இருந்தது.
ரோஜா பந்தலுக்கு கீழ் பேரன்
பறவை வீடு
ஜனவரி மாதம் பூக்குமாம்
வெண்மேகம், நீலவானம் பச்சை பந்தல் அழகாய் இருக்கிறதா?
இந்த படிகளில் நின்று பார்த்தால் ரோஜா பந்தல் மிக நன்றாக தெரிகிறது
அந்தக்காலத்து அடிபம்பு
தோட்டத்தில் மாதுளை காய்த்து தொங்கியது
ஆப்பிள் மரம் காய்த்து இருந்தது
ரோஜா தோட்டம் பார்க்க வந்து பார்க்கவில்லை என்று இருக்க கூடாது என்று பார்த்த ஒற்றை வெள்ளை ரோஜா செடி.
ரோஸ் கலர் ரோஜாசெடி ஒன்று இருந்தது.
அரளி போன்று தோற்றம் அளிக்கும் வெள்ளை, ரோஸ் கலரில் பூக்கள்
பசுமை பந்தல் ரோஜா செடியின் ஒரு கிளை வெளியே எட்டிப் பார்க்கிறது.
ரோஜாத் தோட்ட மியூசியம்
வித விதமான பொருட்கள் இருக்கிறது
ஆங்கில பாடப்புத்தகம், மற்றும் பள்ளி பேட்ஜ், பதக்கம் எல்லாம் இருக்கிறது
வரவேற்பு அறை
அந்தக்கால சீமாட்டி
குழந்தையை வைத்து தள்ளி போக பிரம்பு வண்டி
சின்ன பியோனா
கோட் மாட்டும் ஸ்டாண்ட்
இரட்டை குதிரைகளுக்கு நடுவே அமர்ந்து ஆடும் வண்டி, சாமான்கள் வைத்து இழுத்து செல்ல சக்கரம் வைத்த சிறிய வண்டி
பீங்கான் ஜாடி, பேஸின் மேல பூக்கள் வரைந்து இருக்கிறது
தையல் மிஷின் கால் வைக்கும் இடம் மாட்டி கொள்ள வார் இருக்கிறது.
இருப்பு பெட்டகம், ரோட் எஞ்சின் போல சிறிய வண்டி பழைய காலத்து சைக்கிள்
இதில் என்ன அரைப்பார்கள் என்று தெரியவில்லை, நிறைய அச்சுகள் இருக்கிறது
வித விதமான கற்கள்
மருந்து குப்பி என்று போட்டு இருந்தது
தராசு
எடை கற்கள்
வித விதமான துப்பாக்கிகள்
நாற்காலியின் சாய்வு பகுதியில் குரோஸா பின்னல் வேலைபாடு துணி தொங்கவிடபட்டு இருக்கிறது.
இந்த கண்ணாடி மர அலமாரி அழகு
சுவற்றில் அலங்கார படத்திற்கு கீழ் இருப்பது சிறிய பியோனா
நெசவு செய்யும் கருவிகள்,
பீங்கான்ப் பொருட்கள்
மண் பானைகள் போல் காட்சி தருபவை பின்னியது . கையால் பின்னியவை. பீங்கான், மண்பானையில் ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள்.
ஒயர் போன்ற சன்னமான நாரில் பின்னியது
மேசை விரிப்பு அழகான குரோஸா பின்னல் வேலை
நேரத்தையும் காலத்தின் வெப்ப நிலையையும் குறிக்கும் சுவர் கடிகாரம்
எத்தனையோ விதமான பூட்டுக்கள், பிடில் போல இருப்பதும் பூட்டுதான். வெள்ளிப்பாத்திரங்கள், பீங்கான் ஜாடிகள்
அந்தக்கால சீமாட்டி
குழந்தையை வைத்து தள்ளி போக பிரம்பு வண்டி
சின்ன பியோனா
கோட் மாட்டும் ஸ்டாண்ட்
இரட்டை குதிரைகளுக்கு நடுவே அமர்ந்து ஆடும் வண்டி, சாமான்கள் வைத்து இழுத்து செல்ல சக்கரம் வைத்த சிறிய வண்டி
பீங்கான் ஜாடி, பேஸின் மேல பூக்கள் வரைந்து இருக்கிறது
தையல் மிஷின் கால் வைக்கும் இடம் மாட்டி கொள்ள வார் இருக்கிறது.
இருப்பு பெட்டகம், ரோட் எஞ்சின் போல சிறிய வண்டி பழைய காலத்து சைக்கிள்
இதில் என்ன அரைப்பார்கள் என்று தெரியவில்லை, நிறைய அச்சுகள் இருக்கிறது
வித விதமான கற்கள்
மருந்து குப்பி என்று போட்டு இருந்தது
தராசு
எடை கற்கள்
வரவேற்பு அறையில் பேரன்
இசைதட்டு போல இருக்கிறது ஆனால் மருத்துவ கருவி என்கிறது
சரித்திரத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டை காட்சி, அழகான பொம்மைகள்
நாற்காலியின் சாய்வு பகுதியில் குரோஸா பின்னல் வேலைபாடு துணி தொங்கவிடபட்டு இருக்கிறது.
இந்த கண்ணாடி மர அலமாரி அழகு
சுவற்றில் அலங்கார படத்திற்கு கீழ் இருப்பது சிறிய பியோனா
நெசவு செய்யும் கருவிகள்,
பீங்கான்ப் பொருட்கள்
மண் பானைகள் போல் காட்சி தருபவை பின்னியது . கையால் பின்னியவை. பீங்கான், மண்பானையில் ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள்.
ஒயர் போன்ற சன்னமான நாரில் பின்னியது
மேசை விரிப்பு அழகான குரோஸா பின்னல் வேலை
நேரத்தையும் காலத்தின் வெப்ப நிலையையும் குறிக்கும் சுவர் கடிகாரம்
ஜனவரி மாதம் இலையே தெரியாமல் சின்ன சின்ன வெள்ளை ரோஜாக்கள் பூத்து குலுங்கி மணம் பரப்பி மகிழ்விக்குமாம் அனைவரையும். ஆறு தலைமுறையை கண்ட ரோஜா தோட்டம்.
நான் டோம்ப்ஸ்டோன் நகரத்தைப்பற்றி அங்கு பார்த்தவைகளை காட்சியாக்கி இருந்தேன் பதிவில் அவை அனைத்தும் சுருக்கமாக இந்த காணொளியில் இருக்கிறது. துப்பாக்கி சண்டை, அந்தக்கால நடனம், இசை , மற்றும் இந்த ரோஜா தோட்ட வரலாறு எல்லாம் இருக்கிறது . சிறிய காணொளிதான் பாருங்கள்.
டோம்ப்ஸ்டோனில் பார்த்தவைகள் இந்த பதிவுடன் நிறைவு பெறுகிறது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------
படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது சகோ. தகவல்கள் நன்று.
பதிலளிநீக்குகாணொளி முழுமையாக கண்டேன் அருமை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குகாணொளி முழுமையாக கண்டது மகிழ்ச்சி.
//படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது சகோ. தகவல்கள் நன்று//
உங்கள் கருத்துக்கு நன்றி..
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
முதலில் கண் கவர்வது க்ரோஷா வேலைப்பாடுகள்.
இவ்வளவு படங்களுடன் பதிவைப்
பார்ப்பது
இதுவே முதல்தடவை.
இந்த ரோஜாக்கள் பூக்கும் போது
போய்ச் சென்று வந்தால் நன்றாகத் தான் இருக்கும்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க் வளமுடன்
நீக்குகுரோஷா பின்னல் பிடித்து இருக்கிறதா மகிழ்ச்சி.
படங்கள் அதிகமாகி விட்டது, இதையும் இரண்டு பதிவாக போடலாம்.
போய் வந்து பல மாதம் ஆகி விட்டது. தள்ளி போட்டு கொண்டே இருக்கிறேன். அதுதான் ஒரே பதிவாக போட்டு முடித்து விட்டேன்.
ரோஜா பூக்கள் பூக்கும் போது போகலாம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கடிகாரம், உஷ்ண மானி எல்லாம் மாட்டப் பட்டிருக்கும் சுவரே
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது,.
எல்லா இடங்களிலும் அழகு மிளிர்கிறது.
கலை வண்ணம் சிறந்த ஜாடிகள், பூ வேலைப்பாடுகள்
சின்ன பியானோக்கள்
சின்ன பூட்டுகள்,அதுவும் பிடில் வடிவில்
இருக்கும் பூட்டு.
இவர்களின் கற்பனைகளுக்கு எல்லையே. இல்லை என்று
நினைக்கிறேன்.
ஆமாம் அக்கா,கடிகாரம் மாட்டி இருக்கும் சுவர் அழகுதான்.
நீக்குஅனைத்தையும் ரசித்து பார்த்து இருக்கிறீர்கள்.
பூட்டுக்கள் வியக்க வைத்தது.
கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் போது எல்லாம் அழகுதான்.
துப்பாக்கிகளும் இருக்கின்றன.
பதிலளிநீக்குநல்ல போர்சிலீன் பொம்மைகளும் பாத்திரங்களும் இருக்கின்றன.
அழகு எவ்வளவு இருந்ததோ அவ்வளவு ஆபத்தும் இருந்திருக்கிறது.
மிக மிக சிறப்பாகச் சித்தரிக்கப்பட்ட
சரித்திரம்.
ரோஜாக்களில் ஆரம்பித்து மொத்த வரலாறும்
கொடுத்த விதம் மிக அருமை.
ஆமாம் அக்கா, மியூசியம் பார்க்க வருபவர்களை அந்த போர் காட்சி கவரும்.
நீக்குஎப்போது யார் சுடுவார்கள் என்று தெரியாமல் துப்பாக்கியில் கை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். காணொளி பார்த்தீர்களா பிடித்து இருக்கிறது என்று தெரிகிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.
வணக்கம் கோம்திக்கா...
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல் செம. இப்ப கருத்து போட்டு அட்டெண்டன்ஸ் வைத்துவிட்டுப் போகிறேன். பின்னர் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறேன்.
கும்பகர்ணி (பெண் பூனை போலத்தான் தெரிகிறது முகத்தில் லைட்டாக பிங்க் கலர் ஷேட் தெரிகிறது போல் உள்ளதால்..) பூனையை!!!! ரசித்தேன்!!!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் வழக்கம் போல் செம.//
நன்றி.
//இப்ப கருத்து போட்டு அட்டெண்டன்ஸ் வைத்துவிட்டுப் போகிறேன். பின்னர் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறேன்.//
வாங்க மெதுவாக.
// (பெண் பூனை போலத்தான் தெரிகிறது முகத்தில் லைட்டாக பிங்க் கலர் ஷேட் தெரிகிறது போல் உள்ளதால்..) //
பெண் என்று கண்டு பிடித்து விட்டீர்களா?
கும்பகர்ணியா ! ரசித்தேன்.
பேரன் நன்றாக வளர்ந்திருக்கிறார். உயரமாக.!
பதிலளிநீக்குஆலமரத்தின் அடிபாகம் மேல் என்ன படர்ந்திருக்கிறது? அழகான இயற்கைப்பந்தல் ! அதைல் பறவை வீடும்! அப்படி என்றால் இதைப் பராமரிப்பவர்கள் இப்படிச் செய்திருப்பார்களோ?
ஜனவரி மாதம் பூப்பது அது என்ன கோமதிக்கா?
பச்சைப் பந்தல் செம அழகு! உள்ளே புகுந்து செல்ல ஆசை எழுகிறது.
கீதா
ஆமாம் ,கவின் வளர்ந்து விட்டான்.
நீக்குஆலமரத்து அடிபாகம் போல் இருப்பது ரோஜா கொடிகள் அப்படி கனமாக காணப்படுகிறது. அதை குறிப்பிட வில்லை இப்போது எழுதி விட்டேன்.வளர்ப்பவர்கள் கொடி ரோஜாவை பந்தலில் படர விட்டு இருக்கிறார்கள்.
ரோஜா தோட்டம் ரோஜா தோட்டம் என்று சொல்லி இருக்கிறேன் ஜனவரி மாதம் பூப்பது என்ன என்று கேட்டு இருக்கிறீகளே கீதா!
பந்தலுக்கு கீழே அழகாய் அமர நாற்காலிகள் போட்டு இருக்கே அமர்ந்து போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று போட்டு இருக்கிறேன் பாருங்கள்.
நீங்கள் பந்தலுக்கு கீஃஜே போய் அமர்ந்து கொண்டு கொடிகளுக்கு இடையே தெரியும் வானத்தை பார்த்து ரசிக்கலாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ரோஜா தோட்டத்து வரலாறு பிரமிப்பூட்டுகிறது. வீட்டில் ஒரு ரோஜாச்செடி வைத்து பாதுகாக்கவே நாக்கு தள்ளுகிறது..!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குவரலாறு படித்து விட்டீர்களா?
ரோஜாச்செடியை 6 தலைமுறையாக பராமரித்து வருகிறார்கள்.
அந்தப் பூனையை காசு கொடுத்து பார்க்கும் அளவு என்ன விசேஷம்? தூங்கி கொண்டிருந்தாள் வேஸ்ட் என்று காஸைத் இருப்பிக் கொடுக்க மாட்டார்களோ...
பதிலளிநீக்குஆஹா! பூனையை பார்க்க காசா? அது அவர் வளர்ப்பு செல்லம் .
நீக்குரோஜாத்தோட்டம், மற்றும் மியூசியம் பார்க்கத்தான் காசு. பூனையை பார்க்க அல்ல. இன்று நான் அவசரத்தில் சரியாக எழுதவில்லை போல!
இப்போது காய்ந்து போயிருக்கிறது போல... இவ்வளவு புதராய் இருந்தால் பாம்பு வராதோ.... "ரோஜாத்தோட்டத்து மாதுளையே... அப்பைலைப் பார்த்து அவசரமா?" என்று பாட்டுப் பாடி விடலாமா?!!
பதிலளிநீக்குகாய்ந்து போகவில்லை கீழே தெரிவது கொடி மேலே பசுமையாக இலைகள் தெரிகிறது அல்லவா?
நீக்குநல்ல உயரமான பந்தல் அடைசல் இல்லை கீழே அதனால் பாம்பு பயம் இல்லை என்றே நினைக்கிறேன். காணொளி பாருங்கள் நேரம் கிடைக்கும் போது.
பாட்டு நினைவுக்கு வந்து விட்டதா மாதுளையை பார்த்தவுடன்.
அரளி போலதான் தெரிகிறது. ரோஸ் என்று நீங்கள் சொன்னால் கஷ்டப்பட்டுதான் நம்பவேண்டும்!
பதிலளிநீக்குஅரளி போன்ர பூ என்றுதான் போட்டு இருக்கிறேன் ரோஸ் என்று சொல்லவில்லை.
நீக்குநன்றாக படித்து பாருங்கள். வெள்ளை ரோஸ் ஒன்று , ரோஸ் கலர் ரோஸ் ஒன்று இருக்கிறது. அப்புறம் அரளி போல ரோஸ் கலரில் ஒரு பூ, வெள்ளை கலரில் ஒரு பூ இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன்.
சீமாட்டி குளிக்கப் போவதற்குமுன் சோம்பலாய் உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது! எல்லா படங்களும் அருமை. எல்லா பழைய பொருட்களும் கண்ணைக் கவர்கின்றன. அந்த அரைப்பானில் அருகிலிருக்கும் அண்டஹ்ச் சிறிய இரும்புச் சாமான்களை போட்டு அரைப்பார்களோ!! காணொளி சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குசீமாட்டி சோம்பலாக இருக்கிறார்களா? நல்ல கற்பனை.
பதிலளிநீக்குமருந்து பாடில் போல இருக்கிறது. கற்கள் இருக்கிறது மேலே.
அரைப்பானில் என்ன அரைப்பார்கள் என்று தெரியவில்லை.
படங்களை எல்லாம் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.
அருமை
பதிலளிநீக்குவணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.
அனைத்தையும் அழகாக புகைப்படம் எடுத்து உள்ளீர்கள்... அனைத்து பொக்கிசங்களும் அருமை...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
நீக்குஅனைத்தையும் ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அட அங்கும் நம்மூரைப் போல அப்போதே அடிபம்பு!!! மாதுளை, ஆப்பிள் எல்லாம் காய்த்து இருப்பது அதுவும் செழுமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குரோஜா, அரளி போன்று - அரளிதானோ அந்த ஊர் வகை? - இருப்பது பசுமைப் பந்தல் எல்லாமே வீட்டுத் தோட்டம் என்பது வியப்பாக இருக்கிறது இவ்வளவு பெரிய தோட்டமுள்ள வீடு!!! அந்தக்காலத்தில்.
ரோஜாத் தோட்ட ம்யூசியம் விதவிதமான பொருட்களுடன் வித்தியாசமாக இருக்கிறது. வீடு அந்த வீட்டுப் பொருட்கள் எலலம் இப்போது காட்சிப் பொருளாய் இல்லையா? அதான் அந்த வீட்டில் சிறு பிள்ளைகள் பயன்படுத்திய புத்தகம் பேட்ஜ் போலும்.
கீதா
//அட அங்கும் நம்மூரைப் போல அப்போதே அடிபம்பு!!! மாதுளை, ஆப்பிள் எல்லாம் காய்த்து இருப்பது அதுவும் செழுமையாக இருக்கிறது//
நீக்குஆமாம்.
//ரோஜா, அரளி போன்று - அரளிதானோ அந்த ஊர் வகை? - இருப்பது பசுமைப் பந்தல் எல்லாமே வீட்டுத் தோட்டம் என்பது வியப்பாக இருக்கிறது இவ்வளவு பெரிய தோட்டமுள்ள வீடு!!! அந்தக்காலத்தில்.//
அரளி பூ போல இருக்கும் ஆனால் இலை சிவந்திபூ இலை போல இருக்கும்.
அந்த காலத்தில் எல்லோரும் வசதியாக பெரிய பெரிய இடத்தை வைத்து இருந்து இருக்கிறார்கள்.
ஆமாம், தங்கள் பொருட்களை காட்சிக்கு கொடுத்தவர்கள் பேர் மற்றும் வாழ்க்கை வரலாறு குறிப்பு வைத்து இருக்கிறார்கள்.
இந்த பதிவில் அங்கு பார்த்த மிக பழமையான ரோஜா தோட்டம் பற்றிய பகிர்வு. உலகின் மிக பெரிய ரோஜா தோட்டம். லேடி பாங்க்சியா ரோஸ் செடி 1885 ஆம ஆண்டில் ஸ்காட்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இந்த வீட்டின் பின் புறத்தில் நடப்பட்டது. உலகின் மிகப் பெரியதாக அளவிடப்பட்டு இருப்பது இந்த தோட்டத்தின் சிறப்பு. இந்த இடம் 8000 சதுர அடியாம். இந்த தோட்டம் "ஷேடி லேடி" என்று செல்லபெயர் பெற்று இருக்கிறது..//
பதிலளிநீக்குபெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வீடு!!! தோட்டம்..
கீதா
பெரிய தோட்டம் பெரிய வரலாறு இருப்பது உண்மை. ஆறாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் இப்போது அந்த ரோஜாத்தோட்டத்தை பார்த்து கொள்வது பெரிய வரலாறுதான் கீதா.
நீக்குபடங்கள் எல்லாம் தெளிவாக, பழைய வரலாற்றைச் சொல்லுவதாக இருக்கின்றன.
பதிலளிநீக்குரோஜாத் தோட்டமும் அவ்வீட்டில் பூத்திருக்கும் மலர்களும், கனிகளும் அழகாக இருக்கின்றன. காணொளி கண்டேன் ரசித்தேன், சகோதரி.
படங்களையும் ரசித்தேன்.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் எல்லாம் தெளிவாக, பழைய வரலாற்றைச் சொல்லுவதாக இருக்கின்றன.//
ஆமாம்.
//ரோஜாத் தோட்டமும் அவ்வீட்டில் பூத்திருக்கும் மலர்களும், கனிகளும் அழகாக இருக்கின்றன. காணொளி கண்டேன் ரசித்தேன், சகோதரி.//
அனைத்தையும் படித்து, பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
சீமாட்டி, குழந்தை, கோட் ஸ்டாண்ட்....அட நம்ம ஊர் போல குழந்தைகள் ஆடும் குதிரை. நானும் கூட ஆடியிருக்கிறேன் சிறிய வயதில். இது கொஞ்சம் வித்தியாசமாக இரு குழந்தைகள் ஆடலாம் போல இருக்கிறது.
பதிலளிநீக்குதையல் மிஷினில் கால்கள் வைத்துக் கொள்ள அதுவும் விலகாமல் இருக்க வாருடன் பதிந்திருப்பது வித்தியாசம். வசதியாக இருக்கும் போலத் தெரிகிறது.
ட்ரங்கு பெட்டி, சிறிய ரோடு ரோலர்...
அது அரைக்கும் இயந்திரமா? அப்படி என்றால் கோதுமை அல்லது ரைய் என்று அங்கு சொல்லபப்டும் தானியமாக இருக்கலாம். ரை ப்ரெட், கோதுமையில் ப்ரெட் செய்யவும் அந்த அச்சுகள் பயன்பட்டிருக்கலாம் அக்கா.
கீதா
இரட்டை குதிரை போல இரட்டை வாத்து என் அக்கா குழந்தைகள் ஆடி இருக்கிறார்கள்.
நீக்குபோட்டோ இருக்கிறது. இதில் குழந்தையை வைத்தால் பக்கத்திலிருந்து பார்த்து கொள்ள வேண்டும் . கீழே இறங்கும் போது கால் மாட்டிக் கொள்ளும் அப்புறம் இடைவெளி வழியாக விழுந்து விடுவார்கள். ஆடும் குதிரை, நடைவண்டி போன்ற வண்டிகளில் விளையாடும் போது பக்கத்தில் யாராவது இருக்க வேண்டும்.
//அது அரைக்கும் இயந்திரமா? அப்படி என்றால் கோதுமை அல்லது ரைய் என்று அங்கு சொல்லபப்டும் தானியமாக இருக்கலாம். ரை ப்ரெட், கோதுமையில் ப்ரெட் செய்யவும் அந்த அச்சுகள் பயன்பட்டிருக்கலாம் அக்கா.//
இருக்கலாம், யாரும் பக்கத்தில் இல்லை கேட்பதற்கு .
தையல் மிஷின் வித்தியாசமாக இருக்கிறது அல்லாவா? அதுதான் இந்த பகிர்வு. படங்களை சேமிக்க நினைத்து அனைத்தையும் போட்டு விட்டேன்.
அனைத்தையும் விரும்பிப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
வரவேற்பு அரை, தராசு, வரவேற்பரையில் பேரன், பீங்கான் பொருட்கள் அலமாறி மண்பானைகள் நாரில் பின்னப்பட்டவை எல்லாம் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா...எனக்குப் பீங்கான், நார், பனை ஓலை யில் மூங்கிலில் செய்யப்படும் கூடைகள் பொருட்கள் மிகவும் பிடிக்கும். அது போலக் கண்ணாடிப் பொருட்கள் என் அடுக்களையில் பெரும்பாலும் பீங்கான், கண்ணாடி பாட்டில்கள் தான் பொருட்களைப் போட்டு வைத்திருக்க.
பதிலளிநீக்குகாணொளியும் கண்டு ரசித்தேன் அக்கா
அனைத்தும் அருமை
கீதா
//வரவேற்பு அரை, தராசு, வரவேற்பரையில் பேரன், பீங்கான் பொருட்கள் அலமாறி மண்பானைகள் நாரில் பின்னப்பட்டவை எல்லாம் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா.//
நீக்குநன்றி கீதா.
.எனக்குப் பீங்கான், நார், பனை ஓலை யில் மூங்கிலில் செய்யப்படும் கூடைகள் பொருட்கள் மிகவும் பிடிக்கும். அது போலக் கண்ணாடிப் பொருட்கள் என் அடுக்களையில் பெரும்பாலும் பீங்கான், கண்ணாடி பாட்டில்கள் தான் பொருட்களைப் போட்டு வைத்திருக்க.//
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால்தான் இந்த பகிர்வு கீதா.
படங்களை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அனைத்துப்புகைப்படங்களும் மிகவும் அழகு! அடிப்பம்பு முதல் குரோஷா பின்னல் வரை எல்லாமே மிகவும் வித்தியாசமான பொருள்களாக இருக்கின்றன! அந்த எடைக்கற்கள் கூட ஒரு கலை நயத்துடன் இருக்கின்றன! அனைத்தையும் காணக்கொடுத்தமைக்கு அன்பு நன்றி!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குஅனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
விதம் விதமான பூட்டுகள், துப்பாக்கிகள், வரவேற்புரை அலங்காரம், சிறிய பியானோ...எதைச் சொல்ல எதை விட? அருமை!அருமை!
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குஅனைத்தும் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
ரோஜாக்கள் பூத்திருக்கும் பொழுது எப்படி இருக்கும்? என்று கற்பனை செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குமஹாபலேஷ்வர் சென்ற பொழுது பாதையின் இரு புறங்களிலும் ரோஜா தோட்டங்களில் பூத்து குலுங்கிய ரோஜாக்களை ரசித்த நினைவு வருகிறது.
ரோஜாக்கள் பூத்து இருக்கும் பார்க்க காணொளி கொடுத்து இருக்கிறேன் பாருங்கள் நேரம் இருக்கும் போது. பூத்து இருப்பது அழகாய் இருக்கிறது.
நீக்குஉங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு எப்போதும் போல் அருமையாக உள்ளது. ரோஜா தோட்ட வரலாற்றை அறிந்து கொண்டேன்.
எவ்வளவு பிரமாண்ட செடி. ஆலமரத்தின் விழுதுகளைப்போல கெட்டியான வேர்களுடன் அமைந்த பந்தல் மிகவும் அழகாக உள்ளது. அறியாத செய்திகளை தரும் தங்களுக்கு மிக்க நன்றிகள்.எப்போதும் போல் அழகாக புகைப்படங்கள் எடுத்துள்ளீர்கள். தங்கள் பேரன் இருக்கும் இரு புகைப்படங்களும் அழகாக உள்ளது.
முதலில் அந்த தூங்கும் பூனை அவ்வளவு அழகு. மியூஸியத்தில் இருக்கும் கலைப் பொருட்கள் வியக்க வைக்கிறது. பிரம்பு தொட்டில், இரட்டை குதிரைகளுடன் ஆடும் வண்டி, தையல் மிஷின், குரோசா பின்னிய பொருட்கள், விதவிதமான பூட்டுகள், நெசவு செய்யும் கருவி, விதவிதமான பீங்கான் பொருட்கள் என எல்லாமே காண அற்புதமான காட்சிகள். நேரத்தையும் தட்ப வெப்ப நிலையையும் காட்டும் கடிகாரமும் நன்றாக உள்ளது.
காணொளியும் கண்டேன். எல்லா சுவாரஸ்யமான செய்திகளுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றிகள். நேற்று என் கைப்பேசி சார்ஜர் செய்த தொந்தரவினால் நேற்று முழுவதும் எந்த பதிவுக்கும் உடனே வர இயலவில்லை. உங்களின் இந்தப் பதிவிற்கும் தாமதமாகி விட்டது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு எப்போதும் போல் அருமையாக உள்ளது//
நன்றி.
//எவ்வளவு பிரமாண்ட செடி. ஆலமரத்தின் விழுதுகளைப்போல கெட்டியான வேர்களுடன் அமைந்த பந்தல் மிகவும் அழகாக உள்ளது. //
ஆமாம், ஆலமரத்தின் விழுதுகள் போன்ற கனமான கொடியின் பின்னல் தான் வியக்க வைக்கிறது.
தூங்கும் பூனை, மற்றும் கலைப்பொருடகளை எல்லாம் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
காணொளியும் பார்த்தது மகிழ்ச்சி.
//நேற்று என் கைப்பேசி சார்ஜர் செய்த தொந்தரவினால் நேற்று முழுவதும் எந்த பதிவுக்கும் உடனே வர இயலவில்லை. உங்களின் இந்தப் பதிவிற்கும் தாமதமாகி விட்டது.//
பரவாயில்லை. எப்போது வந்தாலும் நிதானமாக ஒவ்வொன்றையும் படித்து கருத்து சொல்வது மகிச்சி. நன்றி.
அருமையான பகிர்வு. ரோஜாச் செடிகளைப் பந்தலாக, கொடிகளாக இப்போதுதான் பார்க்கிறேன். அருங்காட்சியத்தின் ஒவ்வொரு பொருட்களும் சுவாரஸ்யம் அளிக்கின்றன. நல்ல பராமரிப்பு. எங்களுக்காக அத்தனையையும் அக்கறையுடன் படமாக்கி அறியத் தந்துள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குநாங்கள் சார்தம் போய் இருந்த போது தங்கும் விடுதியில் ரோஸ் கலர் கொடி ரோஸ் வாசல் கேட்டில் வரவேற்பு தோரணம் போல் அழகாய் வைத்து இருந்தார்கள் ராமலக்ஷ்மி.
முன்பு அந்த பதிவில் போட்டு இருந்தேன், பார்க்க வேண்டும். ஆனால் இது போனற பிரமாண்ட கொடி இல்லை.
அருகாட்சியத்தின் பொருடகள் எல்லாம் அந்தக்கால பழமையை குறிக்கிறது. நீங்கள் சொல்வது போல உங்களுக்காகவும், என் சேமிப்பாகவும் பகிர்ந்தேன்.
நான் நினைவு படுத்தி கொள்ள உதவும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பொக்கிசங்கள் அன்றைய நாளை நினைவுகொண்டன.
பதிலளிநீக்குதோட்டமும் பாடல்களும் கவர்கின்றன.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குபொக்கிஷங்கள் அன்றைய நாளை நினைவு கொண்டு வந்தது அறிந்து மகிழ்ச்சி.
பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.
ஆறு தலைமுறையை கண்ட ரோஜா தோட்டம்....ஆஹா
பதிலளிநீக்குவணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குதலைமுறைகளை சொல்லிக் கொண்டு நிற்கிறது ரோஜா தோட்டம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.