வியாழன், 23 டிசம்பர், 2021

வேட்டையாடும் பறவை

வல்லூறு  உருவத்தில் சிறியது, ஆனால் வேகமாக பறக்க வல்லது. தன்னை விட பெரிய பறவைகளையும் வேட்டையாடும், வாத்து, புறாவினங்களை எளிதாக தாக்கி கொல்லும் என்று    அதைப்பற்றி படித்து இருக்கிறோம்.

நேற்று அதை  பார்த்து விட்டேன்.  காடை பறவையை அடித்து தூக்கி செல்வதை.

இதற்கு முன்பு போட்ட பதிவில் தோட்டத்திற்கு வரும் பறவைகளைப் பற்றி போட்டு இருந்தேன். 

நேற்று  தோட்டத்தில் உலவி கொண்டு இருந்த காடை பறவை ஒன்றை  வல்லூறு அடித்தி வீழ்த்தி விட்டது. கண்ணாடி கதவில் வேகமாக மோதிய சத்தம் கேட்டு ஓடி போய் பார்த்தோம். நாங்கள் பார்த்ததும் வல்லூறு ஊஞ்சல் கம்பியில் போய் அமர்ந்து கொண்டது. கீழே காடை கிடந்தது, லேசாக உயிர் துடிப்பு இருந்தது. தண்ணீர் கொடுத்து காப்பாற்ற முடியுமா என்று நானும் பேரனும் நினைத்த போது அமைதி அடைந்து விட்டது.

மகன் "உள்ளே வந்து விடுங்கள் வல்லூறு அதன் உணவை அது எடுத்து கொண்டு போகட்டும்." என்று சொல்லி விட்டான். நான் வருத்தபட்ட போது "இவைகளின் நடமாட்டம் இங்கு அதிகம் இப்படி அடிக்கடி நிகழும். அவற்றுக்கு உணவு இதுதான் நாம் என்ன செய்ய முடியும்" என்று சொன்னான்.

இறைவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றை உணவாக படைத்து இருக்கிறான். 

வல்லூறு தன் குஞ்சுகளுக்கு உணவு அளிக்கும் காலத்தில் அதிகமாக விரைவாக வேட்டையாடுமாம். கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து தாக்கி கவர்ந்து செல்லுமாம்.


ஊஞ்சல் கம்பியில் காத்து இருக்கிறது
மதில் மேல் காத்து இருக்கிறது. கண்ணாடி கதவு வழியாக எடுத்த படம்
 நாம் நிற்கிறோமா என்று பார்த்து கொண்டு இருக்கிறது
மதில் மேல் வெகு நேரம் அமர்ந்து இருந்தது
நேற்று சுற்றி திரிந்த பறவை இன்று !

தன் இரையை அடித்து வீழ்த்தி கம்பீரமாக நிற்கிறது. 

பேரன் கவின் தன் ஐபேடில் ஒளிந்து இருந்து  எடுத்த படம். "ஆச்சி பறவையை தூக்கி போய் விட்டது அதை படம் எடுத்தேன்" என்று அழைத்தான் பேரன். உணவு மேடைக்கு கொண்டு போய் வைத்து கொத்த பார்த்தது அதை பார்க்க மனதுக்கு கஷ்டமாய் இருக்கும் என்று கண்ணாடி கதவை திறந்தோம் , உடனே கால்களில் பற்றி எடுத்து பறந்து  போய் விட்டது.

 மதுரையில் பறவைகளுக்கு , உணவும் தண்ணீரும் வைப்பேன் 

தபால்தந்தி நகர் வீட்டில்  ஜன்னல் வழியாக எடுத்த படம்.

என்ன பார்வை ! என்ன பார்வை !   எங்கள் வீட்டுக்கு வந்த குட்டி வல்லூறு பற்றி பதிவு போட்டது. டிசம்பர் 2016ல் போட்டது. இப்போதும் வல்லூறு பறவையை டிசம்பர் மாதம் பார்த்து இருக்கிறேன்.

கழுகு

கழுகு ஏரியிலிருந்து மீனை  கொத்தி எடுத்து வந்து தின்கிறது.

கழுகு ஏரியிலிருந்து மீனை  கொத்தி எடுத்து வந்து தின்கிறது.

" cataract   Lake " என்ற ஏரிக்கு மகன் ஜீலை மாதம் அழைத்து சென்ற போது  எடுத்த கழுகு படம். காமிராவில் எடுத்த படங்கள் எல்லாம் ஒரு சமயம்  போய் விட்டது என்று சொன்னேன் அல்லவா ? அதில் இந்த  கழுகை எடுத்த காணொளியும் இருந்தது.  இந்த கழுகு படங்கள்  அலைபேசியில் எடுத்தவை.

காலை கூட்டை விட்டு உணவு தேடி வரும்  பறவை மீண்டும் கூட்டுக்கு செல்வதற்கு  இறைவன் அருள் வேண்டும்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

--------------------------------------------------------------------------------------------------

21 கருத்துகள்:

 1. பாவம் காடை.  ஆனால் என்ன செய்ய, வல்லூறுகளுக்கு உணவை அப்படி எடுத்துக்கொள்ள இறைவன் பணித்திருக்கிறான். படைப்பின், உயிரியல் சுழற்சியின் மர்மங்கள்.. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது போல உயிரியல் சுழற்சியின் மர்மங்கள்தான். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றை ஆகராமாக படைத்து இருக்கிறார்.

   நீக்கு
 2. தன் இனத்தையே சாப்பிடும் வல்லூறு.  கழுகும் இப்படிச் செய்யுமா, தெரியவில்லை.  கழுகு ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு பறப்பது போல காணொளி முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன் இனைத்தியே சாப்பிடுமா வல்லூறு ! கழுகு பெருமபாலும் உயிரற்றவைகளை சாப்பிடும் என்பார்கள்.மீன்கள், புழு, பூச்சிகளை மட்டும் சாப்பிடும் கழுகும் இருக்கிறதாம். நான் மீன் சாப்பிடும் கழுகை படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.
   வயல்களில் எலிகளிய பிடித்து உண்ணும். இப்போது வயல்களில் மருத்து போடுவதால் அது ஒத்துக் கொள்ளாமல் நிறைய கழுகுகள் இறக்க நேரிடுகிறது.
   என்று படித்தேன்.

   //ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு பறப்பது போல காணொளி முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன்...

   கால்களுக்கு பலம் அதிகம். இறக்கையால் இரையை அடித்து பின் தூக்கி போகுமாம்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 3. ஒவ்வொன்றுக்கும் வேறு மாதிரியான வாழ்வு... ம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
   ஒவ்வொன்றுக்கும் வேறு மாதிரியான வாழ்க்கைத்தான்.
   பிற உயிர்களிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள எவ்வளவு போராட்டம்!
   இத்தனைகளும் இடையே அவை உயிர் வாழ்கிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. //இறைவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றை உணவாக படைத்து இருக்கிறான்//

  ஆம் இதுவும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் இப்படி இல்லாவிட்டால் இறந்த பறவை, மிருகங்களின் அசுத்தத்தையும், வாடைகளையும் எதிர் கொள்வது எப்படி ?

  எல்லாம் நன்மைக்கே... இதுவே இறைவனின் (மனிதர்களின்) சித்தாந்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //ஆம் இதுவும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் இப்படி இல்லாவிட்டால் இறந்த பறவை, மிருகங்களின் அசுத்தத்தையும், வாடைகளையும் எதிர் கொள்வது எப்படி? //

   நீங்கள் சொல்வதும் சரிதான்.

   //எல்லாம் நன்மைக்கே... இதுவே இறைவனின் (மனிதர்களின்) சித்தாந்தம்.//

   வேறு என்ன சொல்லமுடியும்?
   தனக்கு ஏற்றார் போல சிலவற்றை ஏற்று பழகி வாழ்ந்து வருகிறோம். இறைவன் நம்மை வைத்து விளையாடுகிறான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 5. இதுதான் இயற்கை. சுழற்சி. கோமதிக்கா எனக்கும் இப்படி ஒவ்வொன்றும் மற்றொன்றை அடிப்பதைப் பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும் அப்ப நினைத்துக் கொள்வேன்..அவை தன்னைக் காத்துக் கொள்ளவோ அலல்து தன் உணவிற்காகவோதான் அடிக்கின்றன ஆனால்.மனுஷன் ஆறறிவு படைத்தவன் ஷண கோபத்தில் கொலையே செய்கிறான்....

  வல்லூரு அழகாக இருக்கிறது. காடை பாவம் நேற்று முந்தையநாள்தான் பதிவு போட்டிருந்தீங்க ஃபோட்டோ எடுத்து...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

   //அவை தன்னைக் காத்துக் கொள்ளவோ அலல்து தன் உணவிற்காகவோதான் அடிக்கின்றன ஆனால்.மனுஷன் ஆறறிவு படைத்தவன் ஷண கோபத்தில் கொலையே செய்கிறான்....//

   ஆமாம் , உண்மை.


   //வல்லூரு அழகாக இருக்கிறது. காடை பாவம் நேற்று முந்தையநாள்தான் பதிவு போட்டிருந்தீங்க ஃபோட்டோ எடுத்து...//

   ஆமாம் , அதை நினைத்தால்தான் மனது வேதனை அளிக்கிறது.
   ஊருக்கு கிளம்பும் நாளில் இப்படி ஆச்சே என்று வருந்துகிறேன்.
   மகிழ்ச்சியை தந்து வந்த பறவைகள் இழப்பு மனதுக்கு வேதனைதான்.
   புறாகுஞ்சுகள், புறாமுட்டைகளை அண்டம் காக்கா மற்றும் வல்லூறு அடிக்கடி எடுத்து சென்று விடும். அவை தோட்டத்திற்கு வந்தால் விரட்டி விடுவான், மணிப்புறா கூடு கட்டி இருக்கும் போது.

   நீக்கு
 6. வல்லூறின் கண்கள் பாருங்க கீழே அது மேலே பார்க்கும் படம்!! மிக அழகாக எடுத்திருக்கீங்க கோமதிக்கா.

  படங்கள் கண்ணாடி வழியே எடுத்ததும் தெளிவாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. கழுகு காணொளியும் பார்த்தேன்....சுற்றிப் பார்க்கிறது யாரேனும் வருகிறார்களா என்று போலும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏரிக்கரையில் வேறு யாரும் இல்லை நாங்கள் தான் இருந்தோம்.
   வேறு ஏதாவது பறவை வந்து தட்டி பறித்து விடுமோ! என்று பயப்படுகிறது. இன்னொரு கழுகு வட்டமிட்டு கொண்டு இருந்தது.
   காணொளியும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 8. அன்பின் கோமதிமா;
  வாழ்க வளமுடன்.

  வல்லூறு ,கழுகு எல்லாமே படங்கள்
  அதிசயமாக இருக்கின்றன.
  என்ன உக்கிரமாகப் பார்க்கிறது.!
  கழுகுப் பார்வை என்று சும்மாவா சொன்னார்கள்!!!!!

  வல்லூறு வருவதும், அது அடித்த காடை தரையில் கிடப்பதும்
  இயற்கையின் பாடங்கள். வல்லவன் வெல்வான்.

  இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பது என்ன உண்மை
  தான் நினைவுக்கு வருகிறது. காடையின் ஜோடி
  என்ன செய்யுமோ பாவம்.

  இறைவன் கணக்குப் படிதானே எல்லாம் நடக்கிறது!!

  அருமையான படங்கள். பேரன் கவினுக்கும் உங்களை மாதிரி
  இயற்கையின் மீது அத்தனை கவனம்!

  வரும் விடுமுறை நாட்களும் பயணங்களும் அவனுக்குப்
  பயனுள்ளதாகச் செல்ல வேண்டும்.

  அருமையான வீடியோ.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
  வல்லூறு, கழுகு இரண்டுக்கும் நல்ல தூரப்பார்வை இருக்கிறது.
  கால்களுக்கு, இறைக்கைகளுக்கு நல்ல வலுவும் இருக்கிறது.

  //வல்லூறு வருவதும், அது அடித்த காடை தரையில் கிடப்பதும்
  இயற்கையின் பாடங்கள். வல்லவன் வெல்வான்.//

  ஆமாம் அக்கா.

  //இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பது என்ன உண்மை
  தான் நினைவுக்கு வருகிறது. காடையின் ஜோடி
  என்ன செய்யுமோ பாவம்.//

  நிலயாமையை உணர்த்தும் பாடங்கள் இவை.
  கூட்டமாக வரும் தனித்தே பார்க்க முடியாது.
  அவை குஞ்சுகளுடன் சத்தம் கொடுத்துக் கொண்டு நடக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் பார்க்க!

  //இறைவன் கணக்குப் படிதானே எல்லாம் நடக்கிறது!!//

  ஆமாம் அக்கா.

  //பேரன் கவினுக்கும் உங்களை மாதிரி
  இயற்கையின் மீது அத்தனை கவனம்!

  வரும் விடுமுறை நாட்களும் பயணங்களும் அவனுக்குப்
  பயனுள்ளதாகச் செல்ல வேண்டும்.//

  அவனுக்கும் இயற்கையை, பறவையை ரசிப்பான். என்னை அழைப்பான் பறவைகள் வந்தால். எடுக்க முடியாமல் பறந்து போனால் , அடுத்த முறை வரும் போது சொல்கிறேன் என்பான்.
  பேரனை வாழ்த்தியதற்கு நன்றி.
  உங்கள் கருத்துக்கு நன்றி.


  பதிலளிநீக்கு
 10. கம்பீர காட்சிகள் ...

  அவை உணவிற்காக தான் செய்கின்றன ஆனாலும் நம் முன்னே என்னும் பொழுது ஒரு வருத்தம் வருகிறது மா ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

   //அவை உணவிற்காக தான் செய்கின்றன ஆனாலும் நம் முன்னே என்னும் பொழுது ஒரு வருத்தம் வருகிறது மா ..//

   ஆமாம். வீட்டில் டீயூப் லைட் பக்கம் பல்லி பூச்சியை பதுங்கி பிடிக்க வரும். நான் பூச்சியை துரத்தி விடுவேன் கொஞ்ச நேரம் நின்றால் உன்னை பல்லி பிடித்து விடும் என்று. என் கணவர் கடிந்து கொள்வார், "பல்லியின் உணவு அந்த பூச்சி " அதை சாப்பிட விடாமல் ஏன் தடுக்கிறாய் என்று. வேறு எங்கோ பிடித்து விட்டு போகட்டும் நம் கண்முன் வேண்டாம் என்பேன்.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. இயற்கையின் நியதி சில சமயங்களில் இரக்கமற்றதாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. இறைவனின் படைப்பில் உணவிற்காக ஒன்றை ஒன்று அடிப்பது காணும் எமக்கு மனசங்கடம் அவையின் உணவு அது என்று ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 13. காட்சிகளைப் பொறுமையாகப் படமாக்கியிருக்கிறீர்கள். ஆம், இறைவனின் படைப்பில் இயற்கையின் சுழற்சி.

  பதிலளிநீக்கு