திங்கள், 20 டிசம்பர், 2021

தோட்டத்திற்கு வந்த பல வித பறவைகள்


மணிப்புறா 

பறவைக்கு  பின்னால் தெரியும் செடியில் முன்பு பசுமையான சின்ன சின்ன இலைகளும் சிவப்பு பூவும் இருக்கும் இப்போது முட்கள் மட்டுமே !

இந்த பதிவில் மகன் வீட்டுத்தோட்டத்துப் பறவைகள்.


அந்தப்பக்கம் இந்தபக்கம் பார்வை
அமைதி புறாவே அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை

ஆண்,பெண் சிட்டுக்குருவிகள்
சின்ன சின்ன குருவி இரண்டும் என்ன பேசுவது என்று தெரியாமல் என்னைப்பார்க்குது


காடை
என்னப் பார்க்கிறது?
உணவு இருக்கா என்ற பார்வை
கீழே இறங்கலமா என்று பார்க்கிறது



 இறங்கி விட்டது   உணவு சாப்பிட  
 
இந்த காணொளியின் பின்னனியில்  பேரன் கவின் பாட்டு கற்றுக் கொண்டு இருப்பது  கேட்கும்.(ஆன் லைன் மூலம் ஆசிரியர் சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறார்.) சிறிய காணொளிதான்.

நான் காணொளி எடுக்க நினைக்கையில் நிறைய காடை நடந்து கொண்டு இருந்தது ,  எடுக்க ஆரம்பித்தவுடன் மூன்று நின்றது. நிறைவு பகுதியில் இரண்டு மட்டும். மற்றவைகள் பறந்து போய் விட்டது. மீண்டும் காத்து இருந்தேன் வரவில்லை.

5 காடை பறவைகள்,  பறக்கும் சிட்டுகுருவி 
கண்ணாடி கதவு வழியாக எடுத்த படம் . நிறைய காடைகள் புறா எல்லாம் நின்றது,படம் எடுத்த போது இரண்டு காடை பறவைகளும், பறக்கும் மணிப்புறாவும் கிடைத்தது.

தோசை பூரி எலாம் போட்டால் பிய்த்து போடுவேன், அதை கொத்திக் கொண்டு ஒரு காடை விறு விறு என்று நடையை கட்டும் இன்னொன்று அதை துரத்தும் தோட்டம் முழுவதும் இப்படி துரத்தி துரத்தி ஓடுவது பார்க்க அழகாய் இருக்கும். கண்ணாடி கதவு வழியாக பார்க்கலாம். கதவை திறந்தால் எல்லாம் பறந்து போகும்.

இவைகள் கூட்டமாய் ஒரு இடத்தில் வாழும். ஆண், பெண் வித்தியாசம் தன் தலைபகுதி முடிச்சுதான்.

மீண்டும் கூட்டமாக வந்தால் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.  வீட்டுக்குள் போக திரும்பிய போது மரங்கொத்தி பறந்து வந்து விளக்கு தூணில் அமர்ந்து சத்த கொடுத்தது. "என்னை படம் எடு" என்பது போல் நின்றது, எடுத்து விட்டேன். 

பெண் மரங்கொத்திப் பறவை.
தோட்டத்தின் மதிலுக்கு அந்தப்பக்கம் உள்ள விளக்கு கம்பம்.
எல்லா பறவைகளுக்கும் இந்த இடம் பிடிக்கும்.
அரிசோனாவில் இப்படித்தான் இருக்கும் மரங்ககொத்திப் பறவைகள். இந்த பறவைகளின் படங்கள் பதிவுகளில்  போட்டு இருக்கிறேன். ஆண் மரங்கொத்திக்கு குங்குமம் வைத்தது போல சிவப்பு திட்டு தலை பகுதியில் இருக்கும்.  முன்பு நான் பகிர்ந்த படம் நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் மீண்டும் பாருங்கள்.

மரங்கொத்திப் பறவைகள் என்ற இந்த பழைய பதிவில் ஆண் மரங்கொத்தி தலையில் உள்ள பொட்டு தெரியும்.

ஜீலை மாதம் எடுத்த படம் . குளிர் ஆடைஅணிந்து இருப்பது போல் இருக்கு இல்லையா?
கூட்டமாய் சில நேரம் ஏகந்தமாய் சில நேரம்
2017 ம் ஆண்டு  எடுத்த காடைகள் படம்
2017ம் ஆண்டு எடுத்த புறக்கள்  படம். இந்த பின் பக்க வீட்டு கூரையும் பறவைகளுக்கு பிடித்த இடம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. பறவைகள் அனைத்தையும் பொறுமையாக எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    உங்கள் பெயரன் கவினுக்கு எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      பேரன் கவினுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும், கருத்துக்கும் நன்றி ஜி.

      நீக்கு
  2. படங்கள் அத்தனையும் அழகு கோமதிக்கா...ஒவ்வொரு பறவைப் படமும் தெளிவு. வீடியோவில் கோயல் உணவு சாப்பிடுவது ஜூம் செய்தாலும் மிகத் தெளிவாக இருக்கிறது. இன்னும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அத்தனையும் அழகு கோமதிக்கா...ஒவ்வொரு பறவைப் படமும் தெளிவு//

      நன்றி கீதா.

      //வீடியோவில் கோயல் உணவு சாப்பிடுவது ஜூம் செய்தாலும் மிகத் தெளிவாக இருக்கிறது//

      வீடியோ பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      //இன்னும் வருகிறேன்//

      வாங்க வாங்க

      .

      நீக்கு
  3. மணிப்புறா இங்கே... மாடப்புறா எங்கே?!!


    "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு.. "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      மணிப்புறாவும் இருக்கிறது மாடப்புறாக்கள் கூறை மேலே இருக்கிறது.

      சிட்டுக்குருவிக்கு கட்டுப்பாடும் இல்லை தட்டுப்பாடும் இல்லை இங்கு.

      நீக்கு
  4. ஆமாம், காடைக்கு ஏன் கவிஞர்கள் பாட்டெதுவும் எழுதவில்லை?  அதைப் பார்த்ததும் கவிஞர்களுக்கு பசியெடுத்து விடுகிறதோ..  உணவாக மட்டுமே பார்க்கிறார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "காடை பிடிப்போம், கவுதாரி பிடிப்போம் , காக்கா பிடிக்க மாட்டோம்" என்று ஒரு பாட்டு இருக்கே!

      //அதைப் பார்த்ததும் கவிஞர்களுக்கு பசியெடுத்து விடுகிறதோ.. உணவாக மட்டுமே பார்க்கிறார்களோ//

      அதை சாப்பிடுபவர்கள் ! கவிஞர்கள் மட்டுமா என்ன!

      நீக்கு
  5. காணொளியைவிட கவினின் பாட்டுப்பயிற்சி சுவாரசியம்.

    மரங்கொத்திப்பறவை ஓய்வாக அமர்ந்திருக்கிறது!  அதற்கொரு பாடல்வரி சேர்க்கலாமா?

    "மரங்கொத்திப் பறவையைப் போலே என் மனம் கொத்தி போனது யாரோ.."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி நான் நினைத்தது போல் வரவில்லை.
      கவின் பாட்டு தானக இணைந்தது சுவாரசியம்தான்.
      மரங்கொத்தி தன் மனம் கொத்தி போனது யார் என்று சிந்திக்கிறதா?
      நல்லபாடல் நினைவுக்கு வந்து இருக்கிறது உங்களுக்கு.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. அழகான படங்கள். கண்ணாடி ஊடே துல்லியமாக எடுப்பது கொஞ்சம் கடினம்தான். பாராட்டுக்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      கண்ணாடி கதவு வழியாக எடுத்த படம் என்று போட்டு இருக்கும் இரண்டு படங்கள் மட்டுமே கண்ணாடி ஊடே எடுக்கப்பட்டது மற்றவை சிறிது கதவை திறந்து வைத்து ஜூம் செய்து எடுத்த படங்கள்.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  7. ஆகா... அருமை... குருவி படம் மிகவும் கவர்ந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. இங்கும் கருத்து போக ரோபோ அனுமதிக்காமல் படுத்தியது. கில்லர்ஜிக்கு ஒரு வழியாகப் போய்விட்டது அதனால் இங்கு இப்போது மீண்டும் முயற்சி...

    சின்ன குருவிகள் இரண்டும் என்ன பேசுவது என்று தெரியாமல்//

    ஒரு வேளை ஃபோட்டோ எடுக்கறாங்களே போஸ் கொடுத்துவிட்டு அப்புறமா பேசுவோம்...ப்ரைவசி??? ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா , வேறு யாரும் ரோபோ இருப்பதாக சொல்லவில்லையே!
      தேவகோட்டை ஜிக்கு வாழ்த்து போட்டேன் ரோபோ வரவில்லையே!

      //ஒரு வேளை ஃபோட்டோ எடுக்கறாங்களே போஸ் கொடுத்துவிட்டு அப்புறமா பேசுவோம்...ப்ரைவசி??? ஹாஹாஹா//

      இருக்கலாம்.



      நீக்கு
  9. கருத்து உங்களுக்குப் போய்விட்டது என்று நினைக்கிறேன்!!!
    என்ன பார்க்கிறது?!!

    ஃபோட்டோ மட்டும் எடுக்கிறாரே இவர், நமக்கு ஏதாவது போட்டிருப்பாரோ என்று பார்க்கிறதாக இருக்கும்!!!!!


    காணொளியில் பேரன் பாட்டுக் கற்பது முதலில் கேட்கவில்லை அக்கா அப்புறம் யுட்யூபில் போய்க் கேட்டேன் நன்றாகக் கேட்டது.

    ரொம்ப ரொம்ப நன்றாகப் பாடுகிறார் கோமதிக்கா. குரல் நன்றாக இருப்பதோடு, ராகம் நன்றாக வருகிறது மிக நன்றாக வருகிறது!!!! சூப்பர்.

    அவர் பாடியது இருந்தால் இங்குப் பகிருங்களேன் முழு பாடலும்....

    இது கொஞ்சமே இருக்கு. அவருக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க அக்கா. தொடர்ந்து பயிற்சி செய்யச் சொல்லுங்க ரொம்ப நன்றாக வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து வந்து விட்டது.

      //ஃபோட்டோ மட்டும் எடுக்கிறாரே இவர், நமக்கு ஏதாவது போட்டிருப்பாரோ என்று பார்க்கிறதாக இருக்கும்!!!!!//

      அதற்கு பிடித்த உணவுகள் நிறைய போட்டு இருக்கிறோம் இன்று.

      //காணொளியில் பேரன் பாட்டுக் கற்பது முதலில் கேட்கவில்லை அக்கா அப்புறம் யுட்யூபில் போய்க் கேட்டேன் நன்றாகக் கேட்டது.//

      யுடுயூபில் கேட்டீர்களா? அவன் பாட்டிய பாடலை பகிர்றேன்.

      //இது கொஞ்சமே இருக்கு. அவருக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க அக்கா. தொடர்ந்து பயிற்சி செய்யச் சொல்லுங்க ரொம்ப நன்றாக வருகிறது.//

      அவன் முன் அறையில் பாடி கொண்டு இருந்தான்.நான் தோட்டத்து வாசலில் நின்று இருந்தேன். காணொளியில் பாடல் பதிவாகி இருப்பது போட்டு பார்த்தபின் தான் தெரியும்.

      பயிற்சி செய்ய சொல்கிறேன். நீங்கள் சொன்னதையும் பாடலை பாராட்டியதையும் சொன்னேன்.




      நீக்கு
  10. மீண்டும் கேட்டேன். சங்கராபரணம் ராகத்தில் கீதமோ? அல்லது ஸ்வரஜதியோ?

    ரொம்ப நன்றாகப் பாடுகிறார்!!! ராகம் ரொம்பக் க்ளியர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் பாடியது கீதம். காம்போதி ராகம்.

      உங்கள் பாராட்டுக்கு நன்றி சொல்ல சொன்னான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஓ காம்போதி ராக கீதமா...மீண்டும் கேட்கிறேன் கோமதிக்கா...ஒரு சில நிமிடங்களே இல்லையா மீண்டும் கேட்கிறேன் கோமதிக்கா..

      அப்போது கருத்து முழுவதும் கொடுக்க முடியாமல் போனது.

      கண்ணாடி வழியே எடுத்தவையும் பிரமாதம் கோமதிக்கா. பெரும்பாலும் கண்ணாடி வழியே சரியாக வருவது கஷ்டம்.

      பச்சையின் நடுவே ஆண் மரங்கொத்தி செம அழகு. அதன் தலையில் ஏதோ ஆன்டெனா இருப்பது போலவும் அந்த சைட் போஸை உற்றுக் கவனித்தால் ஒரு பெண்ணின் முகம் கூரிய மூக்குடன் இருப்பது போலவும் தலையைச் சுற்றி குளிருக்கு குல்லாய் போட்டது போலவும் அதன் மேலே இருக்கும் இரு பொட்டுகளும் ஏதோ இரவில் வெளியே செல்ல தலையில் ஒரு லைட் வைச்சுப்பாங்களே ஹெட் லைட்!! அது போலௌவ்ம் இருக்கிறது ஆன்டெனா சென்சார் போலவும்

      அடுத்த நேர் போசில் குளிரு உடை அணிந்து தலையையும் தொப்பி வைத்துக் கவர் செய்திருப்பது போலவே இருக்கிறது

      படத்தில் குருவி பறந்து செல்வதும் நன்று. பறக்கும் பறவையை எடுப்பது கஷ்டம்.

      நான் கேமராவில் பறவைகளை எடுக்கும் போது கன்டினுவஸ் ஆப்ஷனை சூஸ் செய்துவிட்டு எடுக்கும் வழக்கம் உண்டு. அப்படி எடுத்த ஒரு படத்தியப் பகிர்கிறேன் விசாகப்பட்டினம் சென்ற படங்கள் போடும் போது - சென்று 4 வருடம் ஆகிறது இன்னும் எழுதவில்லை போடவில்லை. போடுகிறேன் விரைவில் இப்போதையது முடியட்டும் அதன் பின்....அப்போது காணொளிகள் எடுக்காமல் விட்டுவிட்டேன்.

      கீதா

      நீக்கு
    3. அடடா நான் ராகம் தப்பா சொல்லிட்டேன் போல ஸாரி சொல்லிடுங்க கவின் கிட்ட!

      அக்கா அனைத்துப் படங்களும் ரொம்ப ரொம்ப ரசித்தேன். உங்க வீட்டுக்கு வந்த இந்தக் காடை/கோயல் ஆன்டெனா இருக்கே அது காம்பெல்'ஸ் கோயல்/காடை

      சொல்ல விட்டுப் போச்சு வீட்டு தோட்டத்தின் மதிலுக்குப் பின்னால் தெரியும் மலை கொஞ்சமே தெரிஞ்சாலும் அழாகாகஇருக்கு அப்ப வீட்டை விட்டு வெளியில் வந்தால் மலை முழுவதும் தெரியு இல்லையா...ஆமாம் முன்னாடி அந்த வீட்டுப் பக்கம் உள்ள சாலை கூட போட்டு இருந்தீங்க அப்போது மலை தெரிந்தது படம் பார்த்த நினைவு...

      காடை/கோயல்...இதையா அடிச்சு சாப்பிடுவாங்க? நம்ம ஊர்ல நாட்டுக் காடை கொண்டை எதுவும் இல்லாமல் குருவி கலர்ல இருக்கும்

      அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    4. அக்கா ரோபோ டர்ன் வைச்சு ஒவ்வொரு செட் செட்டா வரும் போல! ரோபோ இல்லாமல் 4 நாள் தான் ஆகிறது என்று நினைக்கிறேன் அதற்குள் மூண்டும் வந்துவிட்டது.

      ஒவ்வொருவருக்கும் அது டர்ன் வைச்சுருக்கு போல!!! ஹாஅஹா

      கீதா

      நீக்கு
    5. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அருமை. பறவைகளையும் ரசித்தேன் நீங்கள் எடுத்திருக்கும் விதத்தையும் ரசித்தேன். படங்கள் எல்லாம் தெள்ளத் தெளிவாக இருக்கின்றன. நன்றாக ரசித்து எடுக்கின்றீர்கள் சகோதரி.

      துளசிதரன்

      நீக்கு
    6. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    7. கீதா , உங்கள் பின்னூட்டங்களுக்கு கீழ் பதிலளி வரவில்லை அதனால் தனியாக கொடுக்கிறேன்.

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      //பச்சையின் நடுவே ஆண் மரங்கொத்தி செம அழகு. அதன் தலையில் ஏதோ ஆன்டெனா இருப்பது போலவும் அந்த சைட் போஸை உற்றுக் கவனித்தால் ஒரு பெண்ணின் முகம் கூரிய மூக்குடன் இருப்பது போலவும் தலையைச் சுற்றி குளிருக்கு குல்லாய் போட்டது போலவும் அதன் மேலே இருக்கும் இரு பொட்டுகளும் ஏதோ இரவில் வெளியே செல்ல தலையில் ஒரு லைட் வைச்சுப்பாங்களே ஹெட் லைட்!! அது போலௌவ்ம் இருக்கிறது ஆன்டெனா சென்சார் போலவும்

      அடுத்த நேர் போசில் குளிரு உடை அணிந்து தலையையும் தொப்பி வைத்துக் கவர் செய்திருப்பது போலவே இருக்கிறது//

      காம்பெல்'ஸ் கோயல்/காடைதான் அதன் முழு பெயர்.

      நன்கு ரசித்து கருத்து சொன்னீர்கள் அது மரங்கொத்தி பறவை இல்லை காடை பறவை.
      விளக்கு கம்பத்தில் அமர்ந்து இருக்கும் படத்தில் இருப்பதுதான் மரங்கொத்தி.

      //படத்தில் குருவி பறந்து செல்வதும் நன்று. பறக்கும் பறவையை எடுப்பது கஷ்டம்.//

      காடைகளை எடுக்கும் போது பறக்கும் குருவி, பறக்கும் மணிப்புறா தற்செயலாக கிடைத்தது.

      விசாகப்பட்டினம் சென்ற போது எடுத்த படங்களை பதிவாக போடுங்கள்.

      //அந்த வீட்டுப் பக்கம் உள்ள சாலை கூட போட்டு இருந்தீங்க அப்போது மலை தெரிந்தது படம் பார்த்த நினைவு...//

      நிறைய போட்டு இருக்கிறேன் மலை படம்.
      இன்னும் பகிர நிறைய படங்கள் இருக்கிறது. இறைவன் அருளால் எல்லாம் பகிர ஆசைதான்.

      ரோபோ ஏன் வருகிறது என்று தெரியவில்லையே!

      மீண்டும் வந்து நிறைய பின்னூட்டங்கள் கொடுத்தற்கு நன்றி.



      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. பறவைகளை அழகாக படங்கள் எடுத்து அதன் விபரங்களைச் சொல்லி பதிவிடுவதில் என்றும்உங்களுக்கு நிகர் நீங்களே..

    மதில் சுவர் மீது அமர்ந்து இருக்கும் புறாக்கள் மிக அழகாக உள்ளது. இரு ஜோடி புறாக்களும் சொல்லி வைத்தாற் போல் அங்குமிங்குமாக பார்க்கிறதே ...!
    நீங்கள் படங்களுக்கு கொடுத்த வார்த்தைகள் வெகு பொருத்தமாக அமைந்திருக்கிறது.

    சிட்டு குருவிகள் பார்க்க, பார்க்க அழகு. அவை ஆண், பெண் என அருகருகே அமர்ந்து நீங்கள் படமெடுப்பதற்காகவே போஸ் தந்த மாதிரி உள்ளது. ஜூம் செய்து படங்களை எடுத்தீர்களா..?

    காடை பறவையும் உடல் மேல் டிசைன் போட்ட மாதிரி அவ்வளவு அழகாக உள்ளது. இதையெல்லாம் உணவாக்க மனிதர்களுக்கு எப்படி மனம் வருமோ?

    அது காத்திருந்து பறந்து வந்து தாங்கள் அளித்த உணவை சாப்பிடுவது மனதுக்கு நன்றாக உள்ளது. தங்கள் பேரன் கவினின் குரல் இனிமையை ரசித்தபடி உங்களுக்கெல்லாம் நன்றி கூறியபடி உணவை உட்கொள்கிறது.

    கவின் சங்கீதம் கற்றுக் கொள்வது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம். அவருக்கு நல்ல குரல் வளம் உள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். என் பேத்தியிடம், நேற்று கவின் பாடும் அந்த காணொளியை போட்டுக் காட்டி, நம் கோமதி சகோதரியின் பேரன் எப்படி பாடுகிறான் பார்த்தாயா என காண்பித்தேன். அவளும் நன்றாக கேட்டாள். அவள் இப்போதுதான் ஸரிகமபதநிஸ ஆரம்ப நிலையில் இருக்கிறாள். இவர்கள் இருவரும் நன்றாக சங்கீதம் கற்றுக் கொள்ள இறைவனை மனமாற வேண்டுகிறேன்.

    காடைகளின் படங்களும், புறா, குருவி பறக்கும் படங்களும் அழகாக உள்ளது. மரங்கொத்தி பறவை படங்களையும் பார்த்து ரசித்தேன். பின்பக்கம் கூட்டமாக அமர்ந்து பேசிக் களிக்கும் புறா படங்களும் அழகு.

    நேற்று காலையில் இந்தப்பதிவை பார்த்து விட்டேன். மாலையில் முழுவதுமாக ரசித்து பதில் போடுவதற்குள், மற்றுமொரு மார்கழி நினைவு பதிவு தாங்கள் போட்டதினால், அதை படித்துப் பார்த்து அதற்கு முதலில் பின்னூட்டமிட்டேன். மார்கழியில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த அந்த திருத்தலத்தை பார்க்க சந்தர்ப்பம் தந்தற்கும் மிக்க நன்றி சகோதரி. அருமையான இரு பதிவுகளை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //அருமையான பதிவு. பறவைகளை அழகாக படங்கள் எடுத்து அதன் விபரங்களைச் சொல்லி பதிவிடுவதில் என்றும்உங்களுக்கு நிகர் நீங்களே..//

      ஆஹா! என்னால் முடிந்த அளவு விவரங்கள் சொல்கிறேன் அவ்வளவுதான்.

      //காடை பறவையும் உடல் மேல் டிசைன் போட்ட மாதிரி அவ்வளவு அழகாக உள்ளது. இதையெல்லாம் உணவாக்க மனிதர்களுக்கு எப்படி மனம் வருமோ?//

      மனிதன் அதை சாப்பிடமால் உயிர் வழலாம், ஆனால் வல்லூறுக்கு இதை போன்ற பறவை எலியை உணவாக படைத்து இருக்கிறான்.

      இன்று காடை ஒன்றை வல்லூறு அடித்து கொன்று விட்டது மிகவும் கவலை அளிக்கிறது. இறைவன் வல்லூறுக்கு உணவாக படைத்து இருக்கிறான் என்றாலும் பார்த்த போது மனது மிகவும் சங்கடப்பட்டது.

      //தங்கள் பேரன் கவினின் குரல் இனிமையை ரசித்தபடி உங்களுக்கெல்லாம் நன்றி கூறியபடி உணவை உட்கொள்கிறது.//

      பேரனின் குரல் இனிமை என்றதற்கும், வாழ்த்துக்கள் வழங்கியதற்கும் நன்றி.
      பேத்தி நன்றாக பாட்டு கற்றுக் கொண்டு பாட வாழ்த்துக்கள். இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      கூடி களிக்கும் புறாக்களைப்பார்த்து மீட்டீங்க் போடுது புறாக்கள் என்பான்.
      இன்று பறக்கும் பலூங்களை எடுத்தேன் அப்போது புறாக்கள் கூட்டமாய் பறந்து போனதும் அகப்பட்டது.
      ஊருக்கு திரும்பும் நாள் வந்து விட்டது. இவைகளை பிரிய போகிறோம் என்ர வருத்தம் இருக்கிறது. மகிழ்ச்சியை தந்த இவைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாளும் வேண்டுவேன்.

      பதிவை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      மார்கழி நினைவுகள் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி, நன்றி.










      நீக்கு
  12. மிக துல்லிய காட்சிகள் ...

    அனைத்து படங்களும் அழகு மா ரசித்தேன் ..

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. சிறப்பு. ஆங்கிலப் பெயர்களையும் குறிப்பிட முடியுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்
      ஆங்கில பெயர்களை குறிப்பிட முயல்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு