ஆலய தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலய தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 மார்ச், 2023

அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் பகுதி - 3


அபயாம்பிகை சன்னதிக்கு வரும் வழி


டிசம்பர் 12. 11. 2022 ல் மயிலாடுதுறை போன போது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகள் தொடர் பதிவாக போட்டு வருகிறேன். 

மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் இந்த பதிவில்.
இடம் பெறுகிறது . பாடல்பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் தேவாரம் பாடி இருக்கிறார்கள். 


போன பதிவில் மயூரநாதர் சன்னதி இந்த பதிவில் அபயாம்பிகை சன்னதி படங்கள் , செய்திகள் இடம்பெறுகிறது.

மயிலாடுதுறையில் மயூரநாத கோவில் அம்மன் பேர் அபயாம்பிகை, நாடி வருபவர்களுக்கு அபயம் அளித்து காக்கும் அம்பிகை.

செவ்வாய், 10 ஜனவரி, 2023

குலதெய்வ வழிபாடு

குலதெய்வம் கோயில் 


குலதெய்வம் கோயில் மடவார் விளாகம் என்ற ஊரில் அமைந்துள்ளது.  மடவார்விளாகம் , பாப்பன்குளம் கிராமம், ஆலங்குளம் வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ளது. எங்கள் குலதெயவம் பேர் "களக்கோட்டீஸ்வரர் தர்ம சாஸ்தா" 

போன மாதம் குலதெய்வம் கோயில் போய் இருந்தோம். கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது பொலிவுடன் இருந்தது கோயில் . 

அங்குள்ள அனைத்து சுவாமிகளுக்கும்  அபிஷேகம் செய்து , புது வஸ்திரம் சாற்றி  பொங்கல் வைத்து வணங்கி வந்தோம். இந்த பதிவில் குலதெய்வ படங்கள் இடம்பெறுகிறது.


சனி, 31 டிசம்பர், 2022

அருள்மிகு பூதநாயகி அம்மன் திருக்கோயில்


பூதநாயகி அம்மன் விமானம்


மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் உள்ள  பூதநாயகி அம்மன் கோயில்

வெள்ளி, 30 டிசம்பர், 2022

விராலிமலை சண்முகநாதர்




டிசம்பர் 12ம் தேதி வங்கி வேலையாக மாயவரம் போக வேண்டிய வேலை அப்படி போகும் போது மகன் கூகுள் மூலம்  தேர்வு செய்த  சில கோவில்கள் சென்றோம். முதலில்  துவரங்குறிச்சியில் இருந்த  ஸ்ரீ வெள்ளை விநாயகரை தரிசனம் செய்தோம்.

வியாழன், 21 ஜூலை, 2022

வண்டியூர் தெப்பக்குளமும் , வண்டியூர் மாரியம்மனும்


மாலை நேரம் வண்டியூர் தெப்பக்குளத்தின் காட்சி. மழை மேகம் சூழ்ந்து இருந்தது.


ஜூலை மாதம் 2 ம் தேதி வீட்டுக்கு வந்த உறவினர்களுடன் திருப்பரங்குன்றம் காலை போனோம். மாலை வண்டியூர்த் தெப்பக்குளம் ,வண்டியூர்  மாரியம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் போனோம்.

வியாழன், 14 ஜூலை, 2022

திருப்பரங்குன்றம்


திருப்பரங்குன்றத்திற்கு இந்த மாதம்  2ம் தேதி போய் இருந்தேன்  உறவினர்களுடன். 
கருவறையில் முருகபெருமான் குடும்பத்தினருடன் காட்சி  தருவார். தாய், தந்தை, அண்ணன், மாமா, மனைவி என்று குடும்பசகிதமாக இருப்பார். தந்தையை, மாமாவை  பார்க்க முடிவது இல்லை. பல வருடங்களுக்கு முன் பார்த்தோம் இப்போது சில வருடங்களாக பார்க்க முடிவதே இல்லை.


செய்தி தாளில் இனி அனைத்து பக்தர்களும்   சத்திய கிரிசுவரர் என்ற பரங்கிரிநாதேசுவரரையும், பவளக்கனிவாய் பெருமாளையும்  தரிசனம் செய்யலாம். என்று போட்டு இருந்ததை படித்தேன்.
(முன்பு 100 டிக்கெட் வாங்கினால் அனுமதி உண்டு. )

வியாழன், 16 ஜூன், 2022

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில்



மதுரை கோச்சடையில் இருக்கும் பழமையான கோவில் ரண தீர பாண்டியர் காலத்து பழைய கோவிலாம்.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அதற்கு முன் இந்த கோவிலில் தான் நடைபெற்றதாம். மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் இருந்துதான்  புட்டு தோப்பில் நடைபெற்று வருகிறது.
 
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு கோவித்த சடையான் என்பதே இப்போது கோச்சடை என்று அழைக்கபடுகிறதாம்.

புதன், 18 மே, 2022

மலர்குழல்மின்னம்மை




 

அம்மன்  சந்நதி  தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில்.  திருக்கடவூர் மயானம் முதல் பகுதி

படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

                                                  அம்மன் கோவில் 

                                          நடராஜர் சந்நதி.
                       கோவில் மணி இருக்கும் மண்டபம்
1928 ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது என்று கல்வெட்டு சொல்கிறது. கல்வெட்டில் அம்மனின் பெயர் "ஸ்ரீ வாடாமல்லிகை அம்பாள்" என்று போட்டு இருக்கிறது. மலர்குழல்மின்னம்மை என்று தல வரலாறு சொல்கிறது.

                                      தற்போதைய பெயர்.

இணையத்தில் அம்மனின் பெயர் நிமலகுசாம்பிகை என்று போட்டு இருக்கிறது.



பிராகாரத்தில் உள்ள  கிணறு இப்போது மோட்டார் போட்டு தண்ணீர் எல்லா சுவாமி சன்னதிகளிலும் கிடைக்கிறது. தண்ணீர் அபிஷேகத்திற்கு தூக்கி சுமக்க வேண்டாம்.
மாலை நேர சூரிய ஓளி  எதிர்பக்கம் என்பதால் படங்கள் கொஞ்சம் இருட்டு. பிள்ளையார்
                           அம்மன் கோவில் விமானம்

அம்மன் பிராகரத்திலிருந்து சுவாமி பிரம்மபுரீசுவரர் கோயில் கோபுரம் தெரிகிறது.
விநாயகர், சண்டிகேஸ்வரி சந்நதிகள் பிரகாரத்தில் இருக்கிறது.



//அடுத்து  அம்மன் சன்னதி போவோம். அதுவும் தனி கோயில் போல பெரிய சன்னதி .
அம்மன் கோயிலில் என்ன பார்த்தேன் என்பதையும்  சொல்கிறேன்.//

இதற்கு முந்திய பதிவில் இப்படி சொல்லி இருந்தேன் நினைவு இருக்கும் உங்களுக்கு. அங்கு பார்த்தது கீழே.



"இல்லம் தேடிக் கல்வி" என்ற தன்னார்வ தொண்டு  கொரோனா பெருந்தொற்று சமயம் நடைபெற்று வந்து இருக்கிறது. இப்போதும் மாலை அரசு  பள்ளி முடித்து வரும் குழந்தைகளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்   மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி நடக்கிறதாம்.
                                  மதினியும், தங்கையும்

 நாங்கள் கோயிலுக்குள் போன போது குழந்தைகள் மட்டும் கோபுர வாசலில் தங்கள் புத்தகபைகளை வைத்து விட்டு உள்ளே வந்து அமர்ந்து இருந்தார்கள்.


அவர்களிடம் "என்ன கோயிலை பார்க்க அழைத்து வந்தார்களா? "என்று கேட்டேன். இல்லை நாங்கள் இந்த ஊர் பள்ளிகூடத்தில் படிப்பவர்கள் "வீடு தேடி கல்வி என்ற  திட்டத்தில் மாலை வகுப்பு" என்று சொன்னார்கள்.
தன்னார்வலர்கள் பதிவு செய்து கொண்டு கற்பித்து வருகிறார்களாம். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.


//தன்னார்வலர்கள்..

  1. வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
  2. கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
  3. தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
  4. யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
  5. குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்//
இணையத்தில் இல்லம் தேடி கல்வியை பற்றி அறிந்து கொள்ள படித்த போது தெரிந்து கொண்டது.


ஆசிரியர் சின்ன பெண்ணாக இருந்தார் அனைவருடனும் சிரித்து அன்பாக பேசி கொண்டு இருந்தார்.

உயரமான விதானம்.  ஜன்னல்கள் இருந்தன.

பக்கத்தில் இருபுறமும்  மண்டபம்  வெவ்வால் நந்தி மண்டபம் என்று சொல்வார்கள் அது போல இருந்தது. 
மாணவர்கள் அலங்காரம்.


கோவிலை வலம் வந்தவிட்டு திரும்பியபோது ஆசிரியர் வந்து விட்டார் . அவர்  குழந்தைகளுக்கு உடை அணிவித்து கொண்டு இருந்தார். ஆசிரியருக்கு வணக்கம் சொல்லி என்ன விழா என்று கேட்டபோது நாடகம் நடித்து காட்ட போகிறார்கள் என்றார்கள்.

என்ன கதை என்று கேட்டேன்?  "கண் தெரியாத ஒவியர்  ஓவிய போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக  படம் வரைவதும் அதற்கு  அரசர் வந்து பரிசு அளிப்பாதான கதை என்று  சொன்னார்." அரசர்தான் போட்டிக்கு அழைக்கிறார் போலும்.

நாடகம் பார்க்கலாம் என்றால் என் தங்கையின் 60 கல்யாண  முதல்  கால ஹோமம்  5.30க்கு ஆரம்பித்து விடும் என்பாதால் எல்லோரும் காரணத்தை சொல்லி, பிள்ளைகளை, ஆசிரியரை வாழ்த்தி விடைபெற்றோம். 

குழந்தைகளின் பெற்றோர்கள் நாடகத்தை பார்க்க வருவார்களா தெரியவில்லை. பார்வையாளர்கள் யாரும் இல்லை. ஆசிரியரும், குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள். நாடகம் தொடங்கும் போது வருவார்கள் என்று நினைக்கிறேன்.

//இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதம் தினமும் 1 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்று கொடுப்பார்கள்.//

பாடதிட்டத்தில் உள்ள பகுதி நாடகம். என்று தெரிந்து கொண்டேன்.



பிரம்மபுரீஸ்வரர், மலர்குழல்மின்னம்மை இந்த குழந்தைகளை நல்ல படியாக வைக்க வேண்டும் அவர்கள் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டோம்.

அடுத்து திருக்கடவூர் திருக்குளம், மார்க்கேண்டையர்  கோவில் பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

சனி, 14 மே, 2022

திருக்கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)




முந்திய பதிவு  திருக்கருகாவூர்  .  திருக்கருகாவூருக்கு  அடுத்து போன கோயில்  "திருக்கடவூர் மயானம்."

  மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களில் இத்தலம் 107 வது தலம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும்  தேவாரம்   பாடல்கள் பாடப் பெற்ற தலம்.
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் அருகே கிமீ தொலைவில் இருக்கிறது இத் தலம். இடது பக்கம் பெரிய நந்தவனம் இருக்கிறது.

இது அம்மன் சன்னதி இருக்கும் இடம்  கோபுர வாசலுடன் நல்ல பெரிதாக இருக்கிறது.

பிரம்மபுரீசுவரர்  இருக்கும் கோபுர வாசல்.

ஒவ்வொரு யுகத்திலும் சிவபெருமான் பெரும் பிரளயத்தை உண்டாக்கி உலகத்தை அழித்து விடுவாராம், அப்போது பிரம்மாவும் அழிந்து போவாராம். மீண்டும் புதுயுகம் துவங்கும் போது பிரம்மாவை  உண்டாக்கி ஜீவராசிகளை உண்டாக்க ஞான உபதேசம் செய்வாராம் சிவன்.   அதனால் சுவாமியின் பெயர் பிரம்மபுரிஸ்வரர்.

பிரம்மாவை அழித்ததால் கடவூர்மயானம் என்றும், அவரை உயிர்ப்பித்து ஞான உபதேசம் செய்தபடியால் திருமெய்ஞானம் என்ற பெயரும் உண்டு என்று தலவரலாறு கூறுகிறது.

கொடிமரம் இல்லை இந்த கோயிலில் , நந்தியும் பலிபீடமும் மட்டுமே உள்ளது. மாலை நாலுமணிக்கு போனோம். நடை திறந்து விளக்குகள் போட்டார் கோயில் மெய்காப்பாளர்




பிரம்ம தீர்த்தம், காசிதீர்த்தம் என்று அழைக்கப்படும் கிணறு உள்ள இடம்.    கிணறு இருக்கும்  இடத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. வெயிலில் கால் சுடாமல் இருக்க வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

மார்க்கண்டேயர் தினம் சிவபூஜை செய்ய  காசியிலிருந்து  கங்கையை இத்தலத்தில் வரவழைத்துக் கொடுத்தாராம் சிவபெருமான். திருக்கடவூர்மாயன பிரம்மபுரீஸவரருக்கு இந்த நீராலால் அபிசேகம் கிடையாது திருக்கடவூர் அமிர்தகடேசுவரருக்கு மட்டுமே இந்த தீர்த்தம். 

இந்த கிணற்றில் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கை பெருகுவதாக ஐதிகம். அன்று மட்டும் பக்தர்கள்  நீராடலாம்.


அமிர்தகடேசுவரார் கோயிலுக்கு அபிசேக தீர்த்தம் இந்த கோயிலில் இருக்கும் கிணற்றிலிருந்து பெரிய குடத்தில்  மாட்டுவண்டியில்  எடுத்து செல்லப்படும்.  முன்பு போட்ட திருக்கடவூர்  பதிவில் அந்த படம்   போட்டு இருக்கிறேன்.






தங்கையும், நானும்
கோயிலின் உட்புறம்  உறவினர்கள் 
துவாரபாலகர்  கையில் அமர்ந்து இருக்கிறது கிளிகள் முகம் காட்ட வில்லை 


ஒலி பெருக்கி மேல் மறைந்து கொண்டது


கலசம் பக்கம் கிளியின் முகம் தெரியும்., மேலே கம்பியில் கருங்குருவி(இரட்டை வால் குருவி)

நால்வரும், சிவபெருமானும்
பெரிய பிரகாரம்
இங்கு உள்ள முருகன் கையில் வில்லோடு காட்சி தருவார்
சிங்காரவேலர் 
தேவார பதிகம்
பிரம்மபுரீஸ்வரர்


வில்வ மரம்
.
கோவில் பிரகாரம்
வாகனங்கள்
வாகனங்கள்  பழுது அடைந்து இருக்கிறது

ஒரு காலத்தில் திருவிழாக்களில் சுவாமியை சுமந்து சென்றவை
சுவாமி சன்னதி விமானம்
கல்வெட்டுக்கள்

பைரவர்
பெருமாள்
  

மலர்குழல் மின்னம்மை  , ஸ்ரீ ஆம்லகுஜநாயகி 

அடுத்து  அம்மன் சன்னதி போவோம். அதுவும் தனி கோயில் போல பெரிய சன்னதி .
அம்மன் கோயிலில் என்ன பார்த்தேன் என்பதையும்  சொல்கிறேன்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
_________________________________________________________________--