மதுரை கோச்சடையில் இருக்கும் பழமையான கோவில் ரண தீர பாண்டியர் காலத்து பழைய கோவிலாம்.
பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அதற்கு முன் இந்த கோவிலில் தான் நடைபெற்றதாம். மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் இருந்துதான் புட்டு தோப்பில் நடைபெற்று வருகிறது.
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு கோவித்த சடையான் என்பதே இப்போது கோச்சடை என்று அழைக்கபடுகிறதாம்.