வியாழன், 16 ஜூன், 2022

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில்மதுரை கோச்சடையில் இருக்கும் பழமையான கோவில் ரண தீர பாண்டியர் காலத்து பழைய கோவிலாம்.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அதற்கு முன் இந்த கோவிலில் தான் நடைபெற்றதாம். மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் இருந்துதான்  புட்டு தோப்பில் நடைபெற்று வருகிறது.
 
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு கோவித்த சடையான் என்பதே இப்போது கோச்சடை என்று அழைக்கபடுகிறதாம்.
 கோவிலுக்கு போன உடன்  சிறு வாழை இலை துண்டில் தேங்காய் சாதம் பிரசாதம் கிடைத்தது. ராகு கால பூஜை முடிந்த நேரம் போனோம்.

இங்கு உள்ள சிவன் சுயம்பு மூர்த்தி .  நாலடி உயரத்தில் நல்ல பெரிய  லிங்க வடிவத்தில் இருக்கிறார். மீனாட்சி அம்மனும் சொக்கநதாரும்  அருஅருகே இருக்கிறார்கள். மீனாட்சியும் நல்ல பெரிய அம்மனாக இருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மனையும், சொக்கநதாரையும்  இப்படி அருகில் பார்க்க முடியாது, இங்கு மிக அருகில் தரிசனம் செய்ய முடிகிறது. இருவரும் மிக அழகாய் இருக்கிறார்கள். போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை.

படம்- கூகுள் நன்றி.

கோவில் முன்பு இருந்த தோற்றம் .சிறிய விமானங்கள் இருக்கிறது அம்மனுக்கும் சுவாமிக்கும் . பக்கத்தில் தெரிவதுதான் அம்மச்சியம்மன் சன்னதி.


கோயில் வாசல் முன் கொட்டகை போட்டு இருப்பதால்  விமானங்கள் தெரிவது இல்லை இப்போது. வாசல் ஒன்று தான் இருக்கிறது. முன்பு அம்மனுக்கும், சுவாமிக்கு தனிதனி வாசல் இருந்து இருக்கிறது.

ஆண் வில்வ மரம், பெண் வில்வ மரம் என்று இரண்டு மரங்கள்  சுவாமி சன்னதி வாசலில் இருக்கிறது.


வில்வமரமும் கொட்டகைக்கு மேல் இருக்கிறது. ஆண் மரத்தின் இலைகள் ஒரு இணுக்கில் மூன்று இலையாக இருக்குமாம், பெண் வில்வ மரத்தில் ஒரு இணுக்கில் ஏழு இலைகள் இருக்குமாம்.

வடக்கு பக்கம் அம்மச்சியம்மன் என்ற கிராம தேவதை இருக்கிறார். சங்கு சக்கரம் ஏந்தி துர்கை போல காட்சி அளிக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்தவராம்.காவல் தெய்வம் முனீசுவரர் செடி, கொடிகளூக்கு இடையில் கம்பீரமாக நிற்கிறார்.

இந்த கோயில் சிறிய கோவில்தான். விரைவில் தரிசனம் செய்து விட்டு கோச்சடையில் உள்ள இன்னொரு மீனாட்சி சொக்கநாதர் கோயில் போனோம்.


மீனாட்சி- சுந்தரேசுவரர் கோயில்

இந்த கோயிலும் மதுரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த கோயில் பதினொன்று , அல்லது  பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்கிறார்கள்.

அம்மன் சன்னதி
சுவாமி சன்னதி

நந்தி சிலை சுமார் 1900 ஆம் ஆண்டில் வைகைக்குத் தென் கரையில் ஒரு மேட்டில் கண்டு எடுக்கப்பட்டதாம்.  கழுத்து மணிமாலையில் அதன் நடுவில்  ஒற்றை மணீயும் சலங்கையும்  , கால்களின் குழம்பும், வாலும் மிக அற்புதமாய் வடிவமைக்க பட்டு இருக்கிறது.குருக்கள் இருந்தார் அம்மனுக்கும், சுவாமிக்கும் ஆரத்தி காட்டினார். கோயிலில் இன்னும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்தது. கோயில் சுத்தமாக புதிதாக தோற்றம் அளித்தது. பிரகாரத்தில் அழகிய நந்தவனம் இருக்கிறது. விமானங்களில் அழகிய சிற்பங்கள் பல கதைகளை கூறுகிறது.

                                                தட்சிணா மூர்த்தி
பிப்ரவரி 19 ம் தேதி பேத்தி, பேரன் மகளுடன் இந்த கோவில்கள் போய் வந்தோம். 

கோச்சடை முத்தையா கோவில் தான் காலையில்முதலில் போனோம், அது பெரிய கோவில் என்பதால் இன்னொரு நாள் பார்ப்போம்.

பேத்தி சிறு வயதில் என் தங்கை மகள் திருமணத்தில் மாலையில் நலுங்கு சமயம் நடனம் ஆடிய போது எடுத்த படம்.


இன்று பேத்தி மாதினிக்கு  பிறந்த நாள்   வாழ்த்துங்கள்  அனைவரும். மீனாட்சி சொக்கநாதர் அவளுக்கு எல்லா நலங்களும் அருள வேண்டுகிறேன்.

பேரன் கவின் இந்த வருடம் தமிழ் பள்ளியில் பேச்சு போட்டியில், கதை போட்டியில் கலந்து கொண்டு  முதல் பரிசு வாங்கிய போது எடுத்த படம்.  


  நாளை பேரன் கவினுக்கு பிறந்த நாள் அவனையும்  அனைவரும் வாழ்த்துக்கள். 


மீனாட்சி , சொக்கநாதர்  கவினுக்கு எல்லா நலங்களும் அருள வேண்டுகிறேன்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

29 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி

  இன்று பிறந்த நாள் காணும் தங்கள் பேத்திக்கும். நாளை பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடப் போகும் உங்கள் பேரன் கவினுக்கும் என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இருவரும் வாழ்வில் பல வளங்களைப் பெற்று நலமுடன் பல்லாண்டுகள் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நான் கொஞ்சம் நேரம் முன்பு வந்த போது பதிவின் தலைப்பு வேறாக இருந்தது. கைப்பேசியில் மகனுடன் பேசி விட்டு கொஞ்சம் வேலைகளை முடித்து அதை படித்து விட்டு வரலாம் என்ற வந்து பார்க்கும் போது பதிவு மாறியுள்ளது. பதிவு செய்த போது தலைப்பு மாறி விட்டதா? சரி.. இதைப் படித்து விட்டு கருத்துரைக்க வருகிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   //இன்று பிறந்த நாள் காணும் தங்கள் பேத்திக்கும். நாளை பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடப் போகும் உங்கள் பேரன் கவினுக்கும் என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.//

   வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
   எனக்கே சந்தேகமாக இருக்கே! என்ன தலைப்பு போட்டு இருந்தேன் என்று தெரியவில்லையே!


   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   தலைப்பு திருபுவனம் என காட்டியது. அது நான் ஏற்கனவே படித்த பதிவாகவும் எனக்குத் தோன்றியது. இருப்பினும் மேலும் பல செய்திகளுடன் வேறு பதிவாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். மீண்டும் வரும் போது பதிவின் தலைப்பு மாறியிருக்கவே அதையும் குறிப்பிட்டேன். வேறு ஒன்றுமில்லை. தாங்கள் உடன் பதில் கருத்து தந்தமைக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. திருபுவனம் பதிவு போட்டு இருந்தேன். அதைக் காட்டி இருக்கிறது. மே மாதம் 31ம் தேதி போட்ட பதிவு அது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. கோச்சடை கோவில் படங்கள் நன்றாக வந்துள்ளன. அருள் மிகும் சொக்கநாதரையும், அன்னை மீனாட்சியையும் கண்குளிர தரிசனம் செய்து கொண்டேன். தலபுராணம் நன்கு படிக்க முடிந்தது. தெரிந்த கதைகள் என்றாலும், இறைவனின் திருவிளையாடல்களை எத்தனை முறை படித்தாலும், மேலும் பக்திதான் பெருக்கிடுகிறது.இறைவன் அனைவரையும் நலமுடன் வைத்திருக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  அங்கேயே வேறு ஒரு மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளதா? திருமங்கலத்திலும் ஒரு மீனாட்சி சொக்கநாதர் கோவிலுண்டு. நாங்கள் அங்கிருந்த போது அடிக்கடிச் செல்வோம்.

  தங்கள் பேரன் கவினுக்கு பேச்சுப் போட்டியில் பரிசு கிடைத்திருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். தங்கள் பேத்தியும் அழகாக நடனமாடுகிறார். இருவரும் வாழ்வில் பல கலைகள் கற்று நலமுடன் இருக்க வேண்டும். இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரையில் நிறைய மீனாட்சி சொக்கநாதர் கோவில் இருக்கிறது.
   கோச்சடை மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்க நினைத்தேன் பல முறை இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது.
   திருமங்கலத்திலும் இருப்பதாய் கேள்வி பட்டு இருக்கிறேன் போனது இல்லை.

   //இறைவன் அனைவரையும் நலமுடன் வைத்திருக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

   ஆமாம், பிரார்த்தனை செய்து கொள்வோம்.

   //தங்கள் பேரன் கவினுக்கு பேச்சுப் போட்டியில் பரிசு கிடைத்திருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

   நன்றி .

   //தங்கள் பேத்தியும் அழகாக நடனமாடுகிறார். இருவரும் வாழ்வில் பல கலைகள் கற்று நலமுடன் இருக்க வேண்டும்.//

   உங்கள் வாழ்த்துக்கும், ஆசீர்வாதத்திற்கும் நன்றி.

   நீக்கு
 3. சிறப்பான படங்களுடன் கோவில் தகவல்கள் அருமை அம்மா...

  கோச்சடை என்றவுடன் முதன்முதலில் (1987) மில் வேலை பற்றிய விவரங்களுக்காக, அந்தப் பகுதியில் வசிக்கும் உறவினரை சந்தித்த ஞாபகம் வந்தது...

  கவினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //சிறப்பான படங்களுடன் கோவில் தகவல்கள் அருமை அம்மா...//

   நன்றி.


   //கோச்சடை என்றவுடன் முதன்முதலில் (1987) மில் வேலை பற்றிய விவரங்களுக்காக, அந்தப் பகுதியில் வசிக்கும் உறவினரை சந்தித்த ஞாபகம் வந்தது...//
   கோச்சடை பழைய நினைவுகளை கொண்டு வந்தது மகிழ்ச்சி.

   பிறந்த நாள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. படங்கள் அழகு.  கோவில் மிகப் பழமையானது என்று தெரிகிறது.  ஆனால் புதிப்பிக்கபப்டுவதால் பழமைத்தோற்றம் கெடுமோ என்னவோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   பழமை மாறாமல்தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.
   வெயில் , மழைக்கு கோவில் முன் போடும் கொட்டகைதான் கோயிலின் அழகை கெடுக்கிறது.

   நீக்கு
 5. மோதினிக்கு வாழ்த்துகள்.  கவினுக்கு வாழ்த்துகள்.  கவினுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னித்துக் கொள்ளுங்கள்.  அழகிய பெயரை  மாற்றி டைப் செய்து விட்டேன்,  மாதினிக்கு எங்கள் வாழ்த்துகள்.

   நீக்கு
  2. பேத்தியின் பெயரை மாற்றி விட்டீர்கள்!
   இருவருக்கும் வாழ்த்துகள் சொன்னதற்கும் , உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
  3. தட்டச்சு பிழை என்று தெரியும். மீண்டும் வந்து மாதினிக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 6. அழகான புகைப்படங்கள்! மதுரையில் நிறைய மீனாட்சி-சொக்கநாதர் கோவில்கள் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. கோச்சடை கோவில் சரித்திரப் புகழ் பெற்றது என்று படித்திருக்கிறேன்.
  பேரனுக்கும் பேத்திக்கும் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   ஆமாம், நிறைய மீனாட்சி-சொக்கநாதர் கோவில் இருக்கிறது.கோச்சடை கோவில் சரித்திர புகழ் பெற்றதுதான்.
   உங்கள் கருத்துக்கும், பேரன் பேத்தியை வாழ்த்தியதற்கும் நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார்,
   வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. அழகான படங்கள், அருமையாக எடுத்து இருக்கின்றீர்கள்.
  கோயில் தல வரலாறும் அறியத் தந்தமைக்கு நன்றி சகோ.

  பெயர்த்தி மாதினிக்கு நேற்றைய தாமதமான பிறந்தாள் வாழ்த்துகள்.

  பெயரன் கவின் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கும், இன்றைய பிறந்தநாளில் வாழ்வில் அனைத்து நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்

   //அழகான படங்கள், அருமையாக எடுத்து இருக்கின்றீர்கள்.
   கோயில் தல வரலாறும் அறியத் தந்தமைக்கு நன்றி சகோ.//

   நன்றி.

   //பெயர்த்தி மாதினிக்கு நேற்றைய தாமதமான பிறந்தாள் வாழ்த்துகள்.//

   நன்றி .


   //பெயரன் கவின் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கும், இன்றைய பிறந்தநாளில் வாழ்வில் அனைத்து நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன்.//
   உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. பேரன்,பேத்தி இருவருக்கும் வாழ்த்துகள் சொக்கனாதர் அருளால் சகல திறமைகளும் பெற்று வாழட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   பேரன், பேத்தி இருவருக்கும் வாழ்த்துகள், ஆசீர்வாதம் செய்தமைக்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 10. நான் பார்க்காமல் விடுபட்ட கோயில். அங்கு செல்லும் நாளுக்காக இறையருள் வேண்டி நிற்கிறேன்.
  ஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   நீங்கள் இந்த கோயிலை பார்க்கும் நாளை இறைவன் அருள்வார்.
   உங்கள் ஆய்வுப்பணி நல்லபடியாக நடக்கட்டும் வாழ்த்துக்கள்.
   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. கோமதிக்கா அழகான படங்கள்.

  //பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அதற்கு முன் இந்த கோவிலில் தான் நடைபெற்றதாம். மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் இருந்துதான் புட்டு தோப்பில் நடைபெற்று வருகிறது.

  பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு கோவித்த சடையான் என்பதே இப்போது கோச்சடை என்று அழைக்கபடுகிறதாம்.//

  தகவல் அறிந்துகொண்டேன்.

  பேத்தி மாதினி (பெயர் மிக அழகு!!) க்கு மனமார்ந்த வாழ்த்துகள்! (தாம்தமாகத்தான் வந்திருக்கிறேன் இருந்தாலும் என்றும் வாத்தலாமே

  அது போல கவினுக்கும் வாழ்த்துகள்! பரிசு பெற்றதற்கும் சேர்த்து. கவின் புத்தகம் எழுதியிருக்கிறாரா? அது என்ன புத்தகம் கோமதிக்கா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
   தலவரலாறு உங்களுக்கு தெரிந்தது தான்.
   பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா இடம் மாறியதுதான் புது தகவல்.

   திருநாவுக்கரசரின் அம்மா பேர் மாதினியார் அதைதான் சார் வைத்தார்கள் பேத்திக்கு.

   தமிழ் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் இளம் எழுத்தாளர் போட்டியில் கலந்து கொள்வான் அதில் முதல் பரிசும் வாங்கி விடுவான். இந்த ஆண்டு துணிச்சலான மான் என்று கதை எழுதி இருக்கிறான். கதையில் துணிச்சலும் மனதிடமும் இருந்தால் மான் கூட வேட்டை யாடும் ஓநாய் கூட்டங்களை வெல்லமுடியும் என்று சொல்லி இருக்கிறான்.

   பேச்சு போட்டியில் பயணம் செய்து வந்த ஊர் பற்றி சொல்லி முதல் பரிசு பெற்று இருக்கிறான்.

   தமிழ் பள்ளியில் 7ம் வகுப்பு போகிறான்.


   நீக்கு
 12. படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து விவரிக்க முடியவில்லை. அடுத்த பட வேலை வந்துவிட்டது கோமதிக்கா....வியாழன் முடித்து கொடுக்க வேண்டும்.

  வலைப்பக்கம் வருவேன் வாசிக்கிறேன் சின்ன கமென்ட் போட்டுவிட்டு ஓடுகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் ப்ளாக்கில் சொல்லி இருந்தீர்கள் படித்தேன். இத்தனை வேலைகளுக்கு இடையில் வந்து பின்னூட்டம் அளித்தது மகிழ்ச்சி நன்றி கீதா.
   உங்கள் வேலை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

   நீக்கு
  2. பேரன் பேத்திகளை வாழ்த்தியதற்கு மகிழ்ச்சி. பிறந்த நாள் அன்றுதான் வாழ்த்தவேண்டும் இல்லை.அன்பு உடையவர்கள் எப்போதும் வாழ்த்தலாம் கீதா. உங்கள் வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு நலம் தரும்.

   நீக்கு