மயூரநாதர்
டிசம்பர் 12. 11. 2022 ல் மயிலாடுதுறை போன போது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகள் தொடர் பதிவாக போட்டு வருகிறேன்.
மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் இந்த பதிவில்.
இடம் பெறுகிறது . பாடல்பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் தேவாரம் பாடி இருக்கிறார்கள்.
போன பதிவில் திருக்குளம், மயூரநாத சன்னதியில் உள்ள உட்பிரகாரம் வரை வந்தோம். இந்த பதிவில் மூலவர் மயூரநாதரை தரிசனம் செய்த பின் உள் சுற்றில் உள்ள சுவாமிகள் விவரம் இந்த பதிவில்.
பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார்
சேக்கிழார் அடிபோற்றி
நால்வர் தோத்திரம் பாடி வணங்கி கொள்வோம்
சகல சம்பத்துக்களையும் அருளும் சப்த மாதாக்கள்.
அடுத்து 63 நாயன்மார்களுக்கும் செப்பு சிலைகள், மற்றும் கல்லில் சிலைகள் உள்ளன. முனிவர்கள் பூஜித்த நிறைய லிங்கங்கள் , கடைசியாக சகஸ்ரலிங்கம் இருக்கும்.
18 சித்தர்களில் ஒருவர். மயிலாடுதுறையில் இந்த கோவிலில் தான் அவரின் ஜீவ சாமதி உள்ளது.
துர்க்கை அம்மன், இவருக்கு அருகே சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.
குதம்பை சித்தர் ஜீவ சமாதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணா மூர்த்திக்கு அருகில் இருக்கிறது. சமாதிக்கு மேல் விநாயகர் சிலை இருக்கிறது . எப்போதும் சந்தன காப்பில் இருப்பார்.
முன்பு இந்த இடத்தில் சந்தன மரம் இருந்ததாம். அந்த சந்தனமரத்தில் உருவாக்கப்பட்ட விநாயகர் சமாதி மேல் இருக்கிறது . அகத்தியர் வணங்கிய விநாயகர் என்பதால் அகத்திய விநாயகர் என்றும் சொல்வார்கள்.
மழை வேண்டி இவருக்கு பூஜை செய்தால் நல்ல மழை பொழியும் என்பது நம்பிக்கை உண்டு. மாயவரத்தில் மழைக்கு பஞ்சமே இல்லை.
குதம்பை சித்தர் பாடல்கள்:-
எங்கும் நிறைந்த சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி
எங்கும் நிறைந்த இறைவன், நம்முள்ளும் இருக்கிறார்
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
தெண்டனிட்டு ஏத்தடி குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே.
இறைவனின் கால்களில் அடிபணிந்து அவரை ஏற்றி போற்றுவோம்.
எந்த உயிருக்கும் இரை தரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.
எல்லா உயிர்களுக்கும் உணவு அளிக்கும் ஈசனை வாழ்த்துவோம்.
மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி -குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி.
கடவுளின் உண்மை உணர்ந்தவர்களுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பை சித்தரின் கருத்து.
ஜீவசமாதிக்கு வெளியே இருக்கும் தூண் அருகே குதம்பை சித்தர் சிலை இருக்கிறது.
இங்கு ஒரு கிணறு இருக்கிறது புனித தீர்த்தம். இறைவனுக்கு அபிஷேகத்திற்கு எடுப்பார்கள், அதனால் இந்த இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். தட்சிணாமூர்த்திக்கு அருகே ஜூரதேவர், ஆலிங்கன மூர்த்தி சிலைகள் உள்ளன.
தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான குமரன் இருக்கிறார்
கஜலட்சுமி தனி சன்னதிஅஷ்டலட்சுமிகள்
அஷ்டலட்சுமிகள் சன்னதிக்கு மேலே சட்டை நாதர் சன்னதி இருக்கிறது, சீர்காழியில் இருப்பது போல மாடியில் இருப்பார், மரப்படிகள் உண்டு. வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜை முடிந்தவுடன் இவருக்கு பூஜை ஆகும் என்று நினைக்கிறேன். நாங்கள் கீழ் இருந்து வணங்கி இருக்கிறோம். (கீழே இருந்தே பார்க்கலாம் லைட் எரியும் எப்போதும் அதனால் நன்றாக தெரிவார்.)
பிரகாரத்தில் சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு இருக்கிறார்
அழகிய வேலைப்பாடு கொண்ட தூண்கள்
திருமுறைக் கோவில்
ஆலயங்கள், ஆதீனங்கள், மடங்கள் வீடுகளில் இது போன்ற திருமுறை கோவில் உண்டு. எங்கள் மாமனார் வீட்டில் உண்டு. எங்கள் வீட்டில் பூஜை அறையில் பன்னிருதிருமுறை, திருவாசகம் எல்லாம் வைத்து இருப்போம். படிக்கும் போது எடுத்து படித்து விட்டு அங்கு வைத்து விடுவோம்.
திருமுறைக்கோவில் அருகே நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது, நல்ல பெரிய நடராஜர், தினமும் மாலையில் முதலில் நடராஜருக்கு பூஜை நடக்கும். நடராஜ சன்னதிக்கு நேரே மயிலம்மன் சன்னதி , மயில் வடிவில் சிவபெருமானும், அம்பிகையும் காட்சி தருவார்கள், அம்பிகையின் இருபுறமும் சிறு இரண்டு மயில்கள் காணப்படும், அவை சரஸ்வதி, திருமகள் .
நவக்கிரக சன்னதி அருகே ஒரு சிவலிங்கம் உள்ளது. அந்த சிவலிங்கம் ஈசான திசையில் அமைந்து உள்ளது, அவர் பெயர் அருணாச்சலேஸ்வரர் .அங்கு இந்த மாதிரி அறிவுப்பு இருக்கும்.
கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று இத்திருக்கோவிலை 16 முறை வலம் வந்தால் திருவண்ணாமலையை கிரிவலம் வந்த பலன் என்று போட்டு இருக்கும்.
நவக்கிரக சன்னதி அருகில் பைரவர் இருக்கிறார், அருகே சனிபகவான் தனியாக உள்ளார்.
கார்த்திகை முழுவதும் கோவிலை வலம் வருவார்கள். "கார்த்திகை வழிபாட்டுக்குழு" சிறப்பாக நடக்கிறது.
"துர்க்கை வாரவழிபாடு" , "தேவார கூட்டு வழிபாடு", "திருவாசக முற்றோதல்" , "பைரவருக்கு தேய்மிறை அஷ்டமி," மற்றும் தை, ஆடி மாதங்களில் "விளக்கு பூஜை," கார்த்திகை மாதம் "1008 சங்காபிஷேகம்" எல்லாம் நடைபெறும். 63 நாயன்மார்களுக்கும் அவர்கள் திருநட்சத்திரத்தில் கட்டளை செய்பவர்கள் இருக்கிறார்கள்.
நாலவர் குருபூஜை நடைபெறும்.
கொடிமரத்துக்கு வலபக்கம் இருக்கும் சுப்பிரமணியருக்கு அருணகிரிநாதர் திருப்புகழ பாடி இருக்கிறார்.
அம்மன் சன்னதி அடுத்துப்பார்ப்போம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------
அழகிய படங்கள். கோவிலைப் பற்றி தளம்தளமாக விவரம் சொல்லி கோவிலைச் சுற்றி வந்த உணர்வைத் தந்து விட்டர்கள்.பக்கம் திறந்ததும் மயூரநாதர் தரிசனம். ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய படங்கள். கோவிலைப் பற்றி தளம்தளமாக விவரம் சொல்லி கோவிலைச் சுற்றி வந்த உணர்வைத் தந்து விட்டர்கள்.//
நன்றி.
//பக்கம் திறந்ததும் மயூரநாதர் தரிசனம். ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறேன்.//
உங்கள் வேண்டுதலை மயூரநாதர் நிறைவேற்றுவார்.
நானும் உங்கள் வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனை செய்கிறேன்.
கோவிலில் கூட்டம் இல்லாத நேரம் போல. சன்னதிகள் ஏகாந்தமாய் இருக்கின்றன. ஏனோ அப்படி இருப்பதுதான் மனதுக்குப் பிடிக்கிறது. நீண்ட நடைகள், சன்னதிகள் அழகு.
பதிலளிநீக்கு//கோவிலில் கூட்டம் இல்லாத நேரம் போல. சன்னதிகள் ஏகாந்தமாய் இருக்கின்றன. ஏனோ அப்படி இருப்பதுதான் மனதுக்குப் பிடிக்கிறது. நீண்ட நடைகள், சன்னதிகள் அழகு.//
நீக்குகாலை நேரம் போனோம் அதனால் கூட்டம் வரவில்லை. பெரிய கோவில் என்று சொல்வது போல பெரிய கோவில் ஸ்ரீராம்.
5 பிரகாரம் கொண்ட கோவில்.
நீங்கள் போகும் போது வேறு வேலைகள் வைத்து கொள்ளாமல் கோவிலை முழுமையாக தரிசனம் செய்து வாருங்கள்.
கண்டிப்பாக. நீங்கள் சொல்வது போல காலை நேரம் சென்றால் கூட்டமில்லாத இடைஞ்சல் இல்லாத தரிசனமும், கோவிலை ரசிக்கும் பாக்கியமும் கிட்டலாம். மயூரநாதர் என்னை உடனே மாயூரத்துக்கு வரவழைக்க பிரார்த்திக்கிறேன்.
நீக்கு//கண்டிப்பாக. நீங்கள் சொல்வது போல காலை நேரம் சென்றால் கூட்டமில்லாத இடைஞ்சல் இல்லாத தரிசனமும், கோவிலை ரசிக்கும் பாக்கியமும் கிட்டலாம். மயூரநாதர் என்னை உடனே மாயூரத்துக்கு வரவழைக்க பிரார்த்திக்கிறேன்.//
நீக்குகூட்டமாக இருக்கும் போதும் மயூரநாதரை, அபயாம்பிகையை தரிசனம் செய்ய முடியும் . கருணை மிக்கவர் வரவழைத்து விடுவார்.
குதம்பை சித்தர் இங்குதான் சமாதி ஆனார் என்பது தெரிந்து கொண்டேன். அவர் பாடல்கள் சில ஆங்காங்கே படித்த நினைவு . அந்த பாணியில் நான் கூட ரெண்டு அரசியல் வரிகள் எழுதி வைத்திருந்தேன்!
பதிலளிநீக்கு//குதம்பை சித்தர் இங்குதான் சமாதி ஆனார் என்பது தெரிந்து கொண்டேன். அவர் பாடல்கள் சில ஆங்காங்கே படித்த நினைவு .//
நீக்குகுதம்பை சித்தர் எளிமையான வரிகள். அர்த்தம் புரியும் யார் படித்தாலும்.
//அந்த பாணியில் நான் கூட ரெண்டு அரசியல் வரிகள் எழுதி வைத்திருந்தேன்!//
பகிருங்கள் படிப்போம்.
கிட்டத்தட்ட இப்படி ஒன்று எழுதி இருந்தேன்..
நீக்குவீடிருக்கு, குடும்பமிருக்கு
பொழுதுபோக்க
பாட்டிருக்கு
நல்ல தமிழ்ப்பண் இருக்கு
டாஸ்மாக் ஏதுக்கடி குதம்பாய்
டாஸ்மாக் ஏதுக்கடி?!
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம். "இன்பம் எங்கே இன்பம் எங்கே" பாடலில் சொல்வது போல சொல்லி இருக்கிறீர்கள்.
நீக்கு//கனி ரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்//
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்
பகிர்வுக்கு நன்றி.
நன்றி அக்கா. பழைய பாடலின் வரிகளை அழகாக நினைவு வைத்திருக்கிறீர்களே..
நீக்குபிடித்த பாடல் பாடல் வரிகள் நினைவு இருந்தாலும் உடனே கூகுள் உபயத்தால் வரிகளை தேடி போட்டு விட்டேன்.
நீக்குபாடல் பகிர்வில் நிறைய முறை போட்டு இருக்கிறேன்.
நானும் சாரும் பழைய பாடல் ரசிகர்கள். எங்களுக்கு இது பழைய பாடல் என்றால் உங்களுக்கும் இப்போது உள்ளவர்களுக்கும் இது மிக பழைய பாடல்.
https://www.youtube.com/watch?v=dyLhW-ehTgQ
சந்தனக்காப்பில் விநாயகர் அழகு. நடராஜர் படம் காணோமே...
பதிலளிநீக்கு//சந்தனக்காப்பில் விநாயகர் அழகு. நடராஜர் படம் காணோமே.//
நீக்குநடராஜர் படம் எடுக்கவில்லை ஸ்ரீராம், மகன் எடுத்த படங்கள், நான் எடுத்த படங்கள் என்று கலவையாக வருகிறது. மகன் எடுத்த படங்களிலும் தேடினேன் நடராஜர் கிடைக்கவில்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஸ்ரீ மயூரநாதர் கோயில் அழகைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை..
பதிலளிநீக்குஅழகழகான சிற்பத் தூண்களும் நீண்ட பிரகாரங்களும் தெய்வீகம்...
காலைப்பொழுது ஒன்றின் போது சென்றிருந்தோம்..
சிறு சந்நிதிகளில் அபிஷேக நீர் தாறுமாறாக ஓடி எங்கும் ஈரமாகவே இருந்தது..
அறுபத்து மூவர் பிரகாரத்திலும் துர்க்கையின் சந்நிதியிலும் மிகவும் மனதுக்கு சங்கடமாக இருந்தது..
நமது மக்களுக்கும் சந்நிதிகளில் எப்படி விளக்கு ஏற்றுவது என்பது இன்று வரையிலும் தெரியவில்லை.. போதாத குறைக்கு புதுப்புது சோசிய விளக்கங்கள்...
கோயிலில் ஊழியர் பற்றாக்குறை போலிருக்கின்றது..
தெற்கு வெளிப் பிரகாரத்தில் மன்டபம் இடிந்து கிடந்தது..
இப்போது திருப்பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது..
அனைத்தும் மயூரநாதர் அருளால் சீராகும் என்று நம்புவோம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//ஸ்ரீ மயூரநாதர் கோயில் அழகைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை..
அழகழகான சிற்பத் தூண்களும் நீண்ட பிரகாரங்களும் தெய்வீகம்..//
ஆமாம். தெய்வீகம்..
//சிறு சந்நிதிகளில் அபிஷேக நீர் தாறுமாறாக ஓடி எங்கும் ஈரமாகவே இருந்தது..
அறுபத்து மூவர் பிரகாரத்திலும் துர்க்கையின் சந்நிதியிலும் மிகவும் மனதுக்கு சங்கடமாக இருந்தது..//
தட்சிணா மூர்த்திக்கு , துர்க்கைக்கு எல்லாம் அடிக்கடி அபிஷேகம் ஆகும். தண்ணீர் தேங்கி நின்றால் வாடை வரும். அபிஷேக நீரை மிதித்து கொண்டு சண்டிகேஸ்வரரை வணங்க போகும் போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.
//நமது மக்களுக்கும் சந்நிதிகளில் எப்படி விளக்கு ஏற்றுவது என்பது இன்று வரையிலும் தெரியவில்லை.. போதாத குறைக்கு புதுப்புது சோசிய விளக்கங்கள்...//
ஆமாம், கோவிலுக்கு எண்ணெய் வாங்கி கொடுத்து விட்டாலே புண்ணியம் தான். அதை மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை தங்கள் கைபட விளக்கு போட நினைக்கிறார்கள்.
கோயிலில் ஊழியர் பற்றாக்குறை போலிருக்கின்றது..//
ஆமாம், அப்படித்தான் இருக்கும். உழவாரபணி செய்வோர் வந்து அடிக்கடி சுத்தம் செய்வார்கள்.
//தெற்கு வெளிப் பிரகாரத்தில் மன்டபம் இடிந்து கிடந்தது..
இப்போது திருப்பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது..
அனைத்தும் மயூரநாதர் அருளால் சீராகும் என்று நம்புவோம்..//
திருப்பணி நடப்பதால் எல்லாம் சீராகும். நீங்கள் சொல்வது போல மயூரநாதர் அருளால் அனைத்தும் நல்லபடியாக நடக்கட்டும்.
அபயாம்பிகை சந்நிதியில் அந்த கால கண்ணாடி விளக்குகள் அழகிலும் அழகு..
பதிலளிநீக்கு//அபயாம்பிகை சந்நிதியில் அந்த கால கண்ணாடி விளக்குகள் அழகிலும் அழகு.//
நீக்குஆமாம், அதை ஏற்ற பெரிய சக்கரம் வைத்த ஏணிகள் உண்டு.
அழகான படங்கள்.. விரிவான செய்திகள்..
பதிலளிநீக்குசிறப்பான பதிவு..
அழகான படங்கள்.. விரிவான செய்திகள்..
நீக்குசிறப்பான பதிவு..//
நன்றி.
நாங்கள் சென்றிருந்த அன்று தான் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்குப் போவதற்குள் மூன்று இடங்களில் நடை வழி மாற்றம்.. தடைகள்...
பதிலளிநீக்குதிரும்பி வந்தபோது பேருந்து நிலைய வாசலில் வெற்றிக் கொண்டாட்டம்..
அரை மணி நேரத்துக்கு பட்டாசு வெடிப்பு..
போக்குவரத்து தடைபட்டிருந்தது..
நாங்கள் சென்றிருந்த அன்று தான் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்குப் போவதற்குள் மூன்று இடங்களில் நடை வழி மாற்றம்.. தடைகள்...//
நீக்குஆமாம், அப்படித்தான் நடக்கும்.
//திரும்பி வந்தபோது பேருந்து நிலைய வாசலில் வெற்றிக் கொண்டாட்டம்..
அரை மணி நேரத்துக்கு பட்டாசு வெடிப்பு..
போக்குவரத்து தடைபட்டிருந்தது.//
அங்குதான் எப்போதும் போராட்டங்கள், மற்றும் வெற்றி விழாக்கள் நடக்கும்.
பதிலளிநீக்கு//இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கின்றது
மயிலாடுதுறை..//
என்று சென்ற பதில் எழுதியிருந்த கருத்திற்கு -
//மயிலாடுதுறை தனி மாவட்ட அந்தஸ்து பெற்று விட்டது, மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும்..//
என்று தெரிவித்து இருக்கின்றீர்கள்..
மகிழ்ச்சி..
மயிலாடுதுறை சிறப்பான வசதிகளைப் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..
ஆனால், நான் அன்றைக்கு சொல்ல வந்தது வேறு...
இப்போது இருப்பது வேறுபட்ட மயிலாடுதுறை.. அவ்வளவு தான்..
//இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கின்றது
நீக்குமயிலாடுதுறை..//
உண்மைதான். பழைய அமைதியான மாயவரம் இல்லை.
பள்ளிகள் எல்லாம் தனியார் வசம் ஆங்கில பேர்களில் நிறைய பள்ளிகள் வந்து இருக்கிறது.
அந்தக்கால ஓட்டுவீடுகள்(இரட்டை திண்ணை வீடுகள்) இல்லை. எல்லாம் கடைகளும் ஆஸ்பத்திரிகளும் என்று புதிதாக மாறி இருக்கிறது.
அரசு பள்ளியில் சீருடை தருகிறோம், காலுக்கு செருப்பு தருகிறோம், ஆங்கிலத்தில் பாடம் சொல்லி தருகிறோம் என்றாலும் அரசு பள்ளியில் சேர்க்க மனம் வரவில்லை.
ஆங்கிலம் படித்து தன் குழந்தை பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசைகள் உள்ள பெற்றோர் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து அதிக கல்வி கட்டணம் கொடுத்து புதிதாக வந்து இருக்கும் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்..
//இப்போது இருப்பது வேறுபட்ட மயிலாடுதுறை.. அவ்வளவு தான்.//
இப்போது மாறி விட்டது உண்மைதான். எளிமை போய் விட்டது.
நகரத்தின் கோலங்கள் வந்து விட்டது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குகோயிலைப்பற்றிய விபரங்கள் சிறப்பு.
வாழ்க வையகம்
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
கோயிலைப்பற்றிய விபரங்கள் சிறப்பு.
//
உங்கள் கருத்துக்கு நன்றி.
நிறைந்த விபரங்களுடன் கோவிலை தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபடங்களையும் நன்று . தூண்களும் அழகு.
சித்தர் சமாதி சந்தணக் காப்பு விநாயகர் என கண்டு வாங்கினோம்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//நிறைந்த விபரங்களுடன் கோவிலை தந்துள்ளீர்கள்.
படங்களையும் நன்று . தூண்களும் அழகு.//
நிறைய சிறப்புகள் இருக்கிறது இந்த கோவிலுக்கு, நான் கொஞ்சம் தான் கொடுத்து இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
/
சேக்கிழார் வாழ்த்து வாசித்து தெரிந்து கொண்டேன் கோமதிக்கா.
பதிலளிநீக்குநால்வர் தோத்திரமும் படித்துக் கொண்டேன்.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//சேக்கிழார் வாழ்த்து வாசித்து தெரிந்து கொண்டேன் கோமதிக்கா.
நால்வர் தோத்திரமும் படித்துக் கொண்டேன்.//
நல்லது கீதா.
குதம்பைச் சித்தர் பற்றிக் கேட்டதுண்டு. அவரது ஜீவசமாதி இக்கோயிலில் என்பது தகவல்.
பதிலளிநீக்குசந்தனக்காப்பு விநாயகர் அழகாக இருக்கிறார்!!
இங்கு வீட்டின் பின் புற சாலையில் ஆஞ்சனேயர் கோயில் உண்டு சிறிய கோயில் அதில் விநாயகர் சன்னதியும் உண்டு. இருவருக்குமே ஒரே நிறத்தில்தான் ஆடைகள் காப்பு எல்லாம் செய்வார்கள் ரொம்ப அழகா செய்வாங்க...அலங்காரம் மிகவும் பிரமாதமாக இருக்கும்...தினமும் செல்கிறேன். எல்லோரும் மொபைலில் ஃபோட்டோ எடுக்கிறார்கள் ஆனால் எனக்குதான் அப்படி எடுப்பது கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.
எடுக்க முயற்சிக்கிறேன்
கீதா
//குதம்பைச் சித்தர் பற்றிக் கேட்டதுண்டு. அவரது ஜீவசமாதி இக்கோயிலில் என்பது தகவல்.
நீக்குசந்தனக்காப்பு விநாயகர் அழகாக இருக்கிறார்!!//
ஆமாம், எப்போதும் அழகாய் காட்சி அளிப்பார்.
//இங்கு வீட்டின் பின் புற சாலையில் ஆஞ்சனேயர் கோயில் உண்டு சிறிய கோயில் அதில் விநாயகர் சன்னதியும் உண்டு. இருவருக்குமே ஒரே நிறத்தில்தான் ஆடைகள் காப்பு எல்லாம் செய்வார்கள் ரொம்ப அழகா செய்வாங்க...அலங்காரம் மிகவும் பிரமாதமாக இருக்கும்...தினமும் செல்கிறேன். எல்லோரும் மொபைலில் ஃபோட்டோ எடுக்கிறார்கள் ஆனால் எனக்குதான் அப்படி எடுப்பது கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.//
நானும் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு தினம் போவேன் முன்பு.
இப்போது சந்தங்காப்பு அலங்காரம் வித விதமாக எல்லா கோவில்களிலும் செய்கிறார்கள்.
மக்கள் அதை காட்சி படுத்த நினைப்பது தப்பில்லை என்று சொல்லும் கோவில்களில் எடுக்கலாம், சில கோவில்களில் எடுக்க அனுமதி இல்லை.
ஓ அகத்தியர் வணங்கிய விநாயகரா!! அவ்வளவு பழமை வாய்ந்தவர்!!
பதிலளிநீக்குகுதம்பைச் சித்தர் பாடல்கள் ஆங்காங்கே வாசித்ததுண்டு. அதன் ஒலி நயம் அருமையா இருக்கும்
சன்னதி ஏன் ஈரமா இருக்குன்னு நினைத்தேன் அடுத்தாற்போல் காரணம் தெரிந்தது.
ஆதீனம் சன்னதி தூண்கள் கலை அழகு!
கீதா
//ஓ அகத்தியர் வணங்கிய விநாயகரா!! அவ்வளவு பழமை வாய்ந்தவர்!!//
நீக்குஆமாம் , பழமை வாய்ந்த கோவில் , அவரும் 14, 15 ம் நூற்றாண்டு என்கிறார்கள்.
//குதம்பைச் சித்தர் பாடல்கள் ஆங்காங்கே வாசித்ததுண்டு. அதன் ஒலி நயம் அருமையா இருக்கும்//
ஆமாம்.
//சன்னதி ஏன் ஈரமா இருக்குன்னு நினைத்தேன் அடுத்தாற்போல் காரணம் தெரிந்தது.//
தட்சிணாமூர்த்தி இருக்கிறார், அவருக்கு அடிக்கடி அபிஷேகம் ஆகும் அந்த அபிஷேக நீர், நாங்கள் அதிகாலை போனோம், அதனால் அபிசேக நீர் வேறு அந்த இடத்தை ஈரமாக்கி இருக்கிறது.
//ஆதீனம் சன்னதி தூண்கள் கலை அழகு!//
ஆமாம்.
இங்கும் சட்டைநாதர் மேலே இருக்கிறாரா? சீர்காழியில் பார்த்திருக்கிறேன்...
பதிலளிநீக்குபிராகாரம் தூண்களுடன் அழகு!!!
பல்லாக்கு சிறியதாக அழகாக இருக்கிறது. பள்ளியறை என்று தனியாக எல்லாம் இருக்கிறதே! எல்லாக் கோயில்களிலும் இப்படி உண்டா?
வேலைப்பாடுகள் ரொம்ப அழகாக இருக்கின்றன.
என் தோழி வீட்டிலும் திருமறைக்கோயில் உண்டு, ஆமாம் அதில்தான் பன்னிருத்திருமறை திருவாசகம் எல்லாம் வைத்திருப்பாங்க. அதுக்கும் பூஜை செய்வாங்க.
கோயிலைப்பற்றி சன்னதிகள் பற்றி என்று எல்லா விவரங்களும் சொல்லியிருக்கீங்க கோமதிக்கா. கூடவே கோயில் நிகழ்வுகள் தகவல்கள்.
படங்களும் விவரணமும் அருமை, கோமதிக்கா
கீதா
//இங்கும் சட்டைநாதர் மேலே இருக்கிறாரா? சீர்காழியில் பார்த்திருக்கிறேன்...//
நீக்குசீர்காழி போல இங்கும், வைத்தீஸ்வரன் கோவிலிலும் உண்டு.
பிராகாரம் தூண்களுடன் அழகு!!!//
தூண்கள் கலை நயத்தோடு இருக்கும்.
//பல்லாக்கு சிறியதாக அழகாக இருக்கிறது. பள்ளியறை என்று தனியாக எல்லாம் இருக்கிறதே! எல்லாக் கோயில்களிலும் இப்படி உண்டா?
வேலைப்பாடுகள் ரொம்ப அழகாக இருக்கின்றன.''//
பல்லாக்கில் சுவாமியின் பாதம் மட்டுமே வைத்து எடுத்து போவார்கள். பள்ளியறை அழகாய் பெரிதாக இருக்கும். எல்லா பெரிய கோவில்களிலும் இருக்கும் பட்டு மெத்தை, கண்ணாடி என்று அழகாய் அலங்காரமாக இருக்கும். சில கோவில்களில் இரவு பள்ளியறை பூஜை சமயம் மட்டுமே பார்க்க முடியும். கதவு மிக அழகாய் இருக்கும். மூடி வைத்து இருப்பார்கள்.
பல்லாக்கு இதை விட பெரிதாக இன்னும் அழகான பல்லாக்கு பல கோவில்களீல் இருக்கிறது கீதா.
//என் தோழி வீட்டிலும் திருமறைக்கோயில் உண்டு, ஆமாம் அதில்தான் பன்னிருத்திருமறை திருவாசகம் எல்லாம் வைத்திருப்பாங்க. அதுக்கும் பூஜை செய்வாங்க.//
மகிழ்ச்சி.
//கோயிலைப்பற்றி சன்னதிகள் பற்றி என்று எல்லா விவரங்களும் சொல்லியிருக்கீங்க கோமதிக்கா. கூடவே கோயில் நிகழ்வுகள் தகவல்கள்.
படங்களும் விவரணமும் அருமை, கோமதிக்கா//
பதிவை ரசித்து படித்து பல பின்னூட்டங்களை கொடுத்த உங்களுக்கு நன்றி கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. மயூரநாதரை தரிசித்து கொண்டேன். மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலைப்பற்றி, அங்குள்ள சன்னிதிகளின் சிறப்புகளை குறித்து உடபிரகாரத்தில் இடம் பெற்றிருக்கும் தெய்வங்களைப் பற்றி விபரமாக கூறியதில் நாங்களும் உங்களுடன் இக் கோவில் முழுவதையும் பக்தியுடன் சுற்றி தெய்வங்களை தரிசித்த திருப்தியை அடைந்தோம். . அருமையான விவரணம். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
சந்தனகாப்பு விநாயகர் அருமையான தரிசனம் கண்டு கொண்டேன். 🙏. குதம்பை சித்தர் ஜீவசமாதி அடைந்த இருப்பிடம் பற்றி விபரம் தெரிந்து கொண்டேன்.
பிரகாரத் தூண்கள் பிரம்மாண்டமாக உள்ளன. அதிலுள்ள சிற்பங்களும் அழகு. இறைவனை பள்ளியறைக்கு அழைத்துப் போகும் பல்லக்கு அழகாக இருக்கிறது. ஒவ்வொரு கோவில்கள் பற்றியும் அங்குள்ள எல்லாவற்றையும் விபரமாக பார்த்து பார்த்து நீங்கள் சொல்லும் அழகே ஒரு சிறப்பான அழகு. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். எனக்கு இந்த மாதிரி விபரமாக சொல்லும் திறன் நிச்சயமாக கிடையாது./ தெரியாது. அடுத்து அம்மன் சன்னிதி செல்ல காத்திருக்கிறேன். இறைவன் மயூரநாதர் நம் அனைவருக்கும் என்றும் துணையாக உடன் வர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன்,வாழ்க வளமுடன்
நீக்குபதிவு அருமையாக உள்ளது. மயூரநாதரை தரிசித்து கொண்டேன். மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலைப்பற்றி, அங்குள்ள சன்னிதிகளின் சிறப்புகளை குறித்து உடபிரகாரத்தில் இடம் பெற்றிருக்கும் தெய்வங்களைப் பற்றி விபரமாக கூறியதில் நாங்களும் உங்களுடன் இக் கோவில் முழுவதையும் பக்தியுடன் சுற்றி தெய்வங்களை தரிசித்த திருப்தியை அடைந்தோம். . அருமையான விவரணம். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.//
நன்றி கமலா.
//சந்தனகாப்பு விநாயகர் அருமையான தரிசனம் கண்டு கொண்டேன். 🙏. குதம்பை சித்தர் ஜீவசமாதி அடைந்த இருப்பிடம் பற்றி விபரம் தெரிந்து கொண்டேன்.//
மயிலாடுதுறையில் பல சித்தர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.
சித்தர்காடு என்ற இடமே இருக்கிறது. 64 சித்தர்கள் இருக்கிறார்கள். என்று சொன்னாலும், நிறைய சித்தர்கள் இன்றும் நிறைய இடங்களில் இங்கு காணப்படுகிறார்கள்.
//பிரகாரத் தூண்கள் பிரம்மாண்டமாக உள்ளன. அதிலுள்ள சிற்பங்களும் அழகு. இறைவனை பள்ளியறைக்கு அழைத்துப் போகும் பல்லக்கு அழகாக இருக்கிறது. ஒவ்வொரு கோவில்கள் பற்றியும் அங்குள்ள எல்லாவற்றையும் விபரமாக பார்த்து பார்த்து நீங்கள் சொல்லும் அழகே ஒரு சிறப்பான அழகு. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். எனக்கு இந்த மாதிரி விபரமாக சொல்லும் திறன் நிச்சயமாக கிடையாது./ தெரியாது.//
உங்கள் பாராட்டுக்களூக்கு நன்றி. நீங்கள் எத்தனை திறமை வாய்ந்தவர்கள்! கதை, கவிதை, சமையல் குறிப்பு அழகாய் சொல்வது என்று பன்முக திறமை இருக்கே உங்களிடம்.
உடல்நிலை பூரண நலம் அடைந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புதிய பதிவு போடுங்கள் கமலா.
தொடர்வது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
நீக்குஇப்போது உடல்நலம் பரவாயில்லை சகோதரி. நீங்கள் அன்புடன் விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள்தான் பதிவுலகில் என்னை ஏதோ எழுத வைத்து கொண்டிருந்தது. இப்போது கொஞ்ச நாட்களாகவே எதுவுமே எழுத ஏனோ விளங்கவில்லை. ஆனால், நிறைய எழுத வேண்டுமென்ற ஆசை மட்டும் உள்ளது. நீங்களும் இரு தடவைகளாக என்னை எழுதும்படிக்கு சொல்லுகிறீர்கள். உங்கள் அன்பான வார்த்தைகள் என்னை கண்டிப்பாக எழுத வைக்கும் சகோதரி. மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா உங்கள் உடல் நலம் பரவாயில்லை என்று கேட்டு மகிழ்ச்சி.
நீக்குநேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து கொள்ளுங்கள். அப்புறம் முடிந்த போது பதிவு செய்யுங்கள்.
எழுத ஆசை இருந்தால் போதும் எழுத வைத்து விடும்.
உங்கள் உடன் பதிலுக்கு நன்றி.
குதம்பை சித்தரின் கருத்து மிகவும் சிறப்பு...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துகள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குகுதம்பை சித்தரின் கருத்து மிகவும் சிறப்பு...
தொடர வாழ்த்துகள்...//
குதம்பை சித்தர் கருத்து உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
சந்தனக் காப்பில் பிள்ளையார் கம்பீரமாக உள்ளார். இந்தக் கோயிலிலும் சப்த மாதாக்கள் நல்ல வெளிச்சத்தில் அருள் பாலிக்கின்றனர். கஜலட்சுமிக்கு தனி சன்னதி, அஷ்டலட்சுமி சிலைகள் கூடுதல் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//சந்தனக் காப்பில் பிள்ளையார் கம்பீரமாக உள்ளார். இந்தக் கோயிலிலும் சப்த மாதாக்கள் நல்ல வெளிச்சத்தில் அருள் பாலிக்கின்றனர். கஜலட்சுமிக்கு தனி சன்னதி, அஷ்டலட்சுமி சிலைகள் கூடுதல் சிறப்பு.//
ஆமாம், இந்த கோவிலில் தனி தனி சன்னதிகளில் நன்றாக இருக்கும்.
சப்த மாதாக்களுக்கு இப்போது முன்பு போல வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நம்ம அருமை நண்பரைச் சந்தனக்காப்பில் பார்த்தது மகிழ்வாக இருக்கிறது. இங்கே ஜீவ சமாதி இருப்பதே தெரியாது. ஆனால் மாயவரம் அருகே தானே சித்தர்காடு இருக்கு? நாங்க அங்கே ஒரு முறை போயிருக்கோம். கோயிலைப் பற்றித் தெளிவாக ஒவ்வொரு சந்நிதியையும் விடாமல் பார்த்துப் படங்களுடன் விளக்கி இருப்பதற்கு நன்றி. இதைக் கையேடாக வைத்துக் கொண்டு கோயிலுக்குப் போயிட்டு வந்துடலாம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//நம்ம அருமை நண்பரைச் சந்தனக்காப்பில் பார்த்தது மகிழ்வாக இருக்கிறது. //
குதம்பை சித்தர் ஜீவஸ்மாதி மேல் பிள்ளையார். எப்போதும் சந்தனகாப்பில் தான் இருப்பார்.
//மாயவரம் அருகே தானே சித்தர்காடு இருக்கு? நாங்க அங்கே ஒரு முறை போயிருக்கோம்//
சித்தர் காட்டில் 64 சித்தர்கள் இருக்கிறார்கள். முன்பு அந்த கோவில்
பதிவு போட்டேன் தேடி பார்க்க வேண்டும்.
//கோயிலைப் பற்றித் தெளிவாக ஒவ்வொரு சந்நிதியையும் விடாமல் பார்த்துப் படங்களுடன் விளக்கி இருப்பதற்கு நன்றி. இதைக் கையேடாக வைத்துக் கொண்டு கோயிலுக்குப் போயிட்டு வந்துடலாம்.//
மாயவரம் கோவிலில் படம் எடுக்க இன்னும் நிறைய இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.