வியாழன், 14 ஜூலை, 2022

திருப்பரங்குன்றம்


திருப்பரங்குன்றத்திற்கு இந்த மாதம்  2ம் தேதி போய் இருந்தேன்  உறவினர்களுடன். 
கருவறையில் முருகபெருமான் குடும்பத்தினருடன் காட்சி  தருவார். தாய், தந்தை, அண்ணன், மாமா, மனைவி என்று குடும்பசகிதமாக இருப்பார். தந்தையை, மாமாவை  பார்க்க முடிவது இல்லை. பல வருடங்களுக்கு முன் பார்த்தோம் இப்போது சில வருடங்களாக பார்க்க முடிவதே இல்லை.


செய்தி தாளில் இனி அனைத்து பக்தர்களும்   சத்திய கிரிசுவரர் என்ற பரங்கிரிநாதேசுவரரையும், பவளக்கனிவாய் பெருமாளையும்  தரிசனம் செய்யலாம். என்று போட்டு இருந்ததை படித்தேன்.
(முன்பு 100 டிக்கெட் வாங்கினால் அனுமதி உண்டு. )

முருகனை தரிசனம் செய்ய  50 ரூபாய்  சீட்டு வாங்கி கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக போனோம். ஆனால் நேரே தெரியும் முருகன், மகிசாசுரமர்த்தினி, கற்பக விநாயகரை மட்டுமே பார்க்க முடிந்தது. இரண்டு பக்கமும் இருக்கும்  சிவனையும், பெருமாளையும் பார்க்க முடியவில்லை. உள்ளே அனுமதிக்கவில்லை . உள்ளே போனால்தான் பார்க்க முடியும் இருவரையும்.


செய்தி தாளில் இனி எல்லோரும் பார்க்கலாம் என்று போட்டு இருந்தார்களே !என்று கோவில்  குருக்களிடம் கேட்டேன். "கீழே அலுவலகத்தில் பாஸ் வாங்கி வாருங்கள்" என்றார். "பெரிய மனிதர்களுக்கு மட்டுமே அந்த  அனுமதி" என்றார் அங்கு நின்று கூட்டத்தை வழி நடத்தி கொண்டு இருந்தவர்.

                                                      உற்சவர்

முருகனை தரிசனம் செய்து விட்டு அடுத்த தடவை வரும் போது சிவனையும், பெருமாளையும் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு  வணங்கி வந்தோம்.



சஷ்டி மண்டபத்திற்கு அருகில் அமர்ந்து இருந்த குரங்கிற்கு பக்தர்கள் வாழைப்பழம் கொடுத்தார்கள். ஒரு பக்தர் வாழைப்பழத்தை உரித்து கொடுத்தார், குரங்கு அவர் கையிலிருந்து வெடுக்கென பிடிங்கியது, "எனக்கு உரிக்க தெரியும் என்று."




மலை மேல் ஓம்  வடிவ விளக்கு




மலையின் அழகை  மறைக்கும்  புதிய கட்டிடம்.

லிங்க வடிவமலை



கண்ணில் கண்ட காட்சிகள் என்று   பதிவில் மேலும் யானை குட்டியை ரசிக்கலாம்.

முன்பு திருப்பரங்குன்றம் போன போது இந்த யானை சின்ன யானையாக இருந்தது, சின்ன டிரம் நிறைய இருந்த  தண்ணீரில்  குளித்து கொண்டு இருந்தது.

இப்போது யானைக்கு புதிதாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது

 யானை வளர்ந்து விட்டது

கோடை காலத்தில்  மகிழ்ச்சியாக குளிக்க ஷவர் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

யானையின் பெயர் தெய்வானை. அசாமிலிருந்து  வாங்கி ஒருவர் கோயிலுக்கு நன்கொடை அளித்து இருக்கிறார்.

மண் கொட்டி வைத்து இருக்கிறார்கள், மண்ணை மேலே போட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சின்ன காணொளி தான் 
மக்களை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக கை உயர்த்தி  ஆட்டம் போட்டது


குன்றத்துக்குமரன்

விசாகன் வினைகள் தீர்ப்பான்


திருப்பரங்குன்றம் பதிவுகள் நிறைய முன்பு போட்டு இருக்கிறேன் , அவற்றில் சிலவற்றின் சுட்டிகள் மேலே இருப்பது.

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்

துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை

பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை

உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.

-திருஞானசம்பந்தர்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------------------------------------

45 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
    காணொளி கண்டேன்.

    இறைவனை வணங்குவதில் பெரிய இடம், சிறிய இடம் என்ன இருக்கிறது ?

    எல்லாம் வியாபாரம் ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
      காணொளி கண்டேன்.//

      நன்றி.

      //இறைவனை வணங்குவதில் பெரிய இடம், சிறிய இடம் என்ன இருக்கிறது ?//

      இறைவனுக்கு எல்லோரும் சமம். ஆனால் மனிதர் அல்லவா? இறைவனை வணங்க சட்ட திட்டம் வகுக்கிறார்கள்.
      பெரிய பதவி, பெரிய இடம் மட்டுமே உள்ளே அனுமதி. விழா காலங்களில் கூட்டம் சமாளிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.
      விழா இல்லாத நாளில் அனுமதிக்கலாம். அப்போதும் இப்படியே சொல்கிறார்கள்.

      //எல்லாம் வியாபாரம் ஆகி விட்டது.//

      ஆமாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  2. சிவனையும் பெருமாளையும் பார்க்க முடியவேண்டும்.  அரசாங்கம் வி ஐ பி க்களுக்கு மட்டும் அந்தச் சலுகை வழங்கி இருப்பது வருத்தத்துக்குரியது.  ஆனாலும் அவர்கள் சொன்னதை நம்பாமல் நீங்கள் அலுவலகத்தில் பாஸ் கெட்டப் பார்த்திருக்கலாமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      சிவனையும், பெருமாளையும் பார்க்க பாஸ் கேட்டு போய் இருக்கலாம்.அப்படி இருப்பது யாருக்கும் தெரியாதா? யாருமே போகவில்லையே! காவல் அதிகாரிகளுடன் ஒரு சிலர் உள்ளே இருந்தார்கள். வேறு யாரும் இல்லை.

      நீக்கு
  3. குரங்குப் படம் பேஸ்புக்கிலும் போட்டிருந்தீர்கள்.   மலையின் அழகை  ஷாங்காய் மறைக்கும் கட்டிடங்கள் கிர்ர்ர்ர்...  குட்டி யானையாகத்தான் தெரிகிறது இன்னும் அதன் பெயர் என்னவோ?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரங்குப் படம் பேஸ்புக்கிலும் போட்டிருந்தீர்கள்.//

      ஆமாம்.யானையும் போட்டு இருந்தேன்.

      யானையின் பெயர் தெய்வானை. அசாமிலிருந்து கொண்டுவந்து இருக்கிறார்கள். ஒருவர் நன்கொடையாக கோவிலுக்கு கொடுத்து இருக்கிறார். அதற்கு மொழி பிரச்சனை இருந்து இருக்கிறதாம். பாகனை அடித்து கொன்று விட்டதாம். அதனால் மறு வாழ்வு மையம் போய் மருத்துவம் பார்த்து கொண்டு இப்போது விழா காலங்களில் மட்டும் வெளியே வருமாம். மற்றபடி அதன் இடத்தில் இருக்கிறது. மக்கள் எதுவும் அதற்கு உணவு கொடுக்க கூடாதாம். கட்டுப்பாடு செய்து இருக்கிறார்கள். தடுப்பு வேலிக்குள் இருக்கிறது யானை.
      கிரிவல பாதையில் நடைபயிற்சி செய்கிறதாம் காலையில்.

      நீக்கு
    2. யானையின் பெயரை சேர்த்து விட்டேன்.

      நீக்கு
    3. யானைக்கும் மொழிப் பிரச்னையில் ஆளைக் கொலை செய்யுமளவு வெறி வருகிறது!!!! பார்க்க சாதுவாக இருக்கிறது.

      நீக்கு
    4. யானையின் பெயர் கேட்டீர்கள் என்று படித்தேன் . தினமலர் கோவில் செய்தியில் அறிந்த விஷயம் இது. என்ன காரணம் என்று யானை சொன்னால்தான் தெரியும். இப்போது யானை பாகனை குடும்பத்தோடு வைத்து இருக்கிறார்கள். நன்கு பழகி வருகிறதாம். மறு வாழ்வு மையம் போய் வந்த பின் உற்சாகமாக இருக்கிறதாம்.

      நீக்கு
  4. பழைய பதிவும் சென்று (மறுபடி) பார்த்து வந்தேன்.  ஸாரின் ஓவியம் பார்த்தேன்.  என் கமெண்ட்ஸும் பார்த்தேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவை பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
      நன்றி.

      நீக்கு
  5. காணொளி பார்த்தேன்.  பார்த்தேன்.  பாவம் கோவில் நடை சாத்தியதும் யானை தனிமையாக ஃபீல் செய்யுமோ என்னவோ...  எப்போடா காலை கதவு திறந்து மக்கள் உள்ளே வருவார்கள் என்று காத்திருக்குமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாவம் கோவில் நடை சாத்தியதும் யானை தனிமையாக ஃபீல் செய்யுமோ என்னவோ... எப்போடா காலை கதவு திறந்து மக்கள் உள்ளே வருவார்கள் என்று காத்திருக்குமோ....//

      ஆமாம், தனிமை கொடுமை இல்லையா? மக்களை பார்த்தவுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது. ஆடி கொண்டே இருக்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. படங்கள் அழகாக உள்ளன.

    தேக்கி வைத்திருந்த நீர் அணை திறந்தவுடன் எப்படி பாய்ந்து வருமோ அப்படி கோவிட் கட்டுப்பாடுகள் நீங்கியபின் மக்கள் வெளியில் கோவில்கள், சுற்றுலா  மையங்கள் என்று செல்ல ஆரம்பித்து விட்டார்கள். கோவில்கள் எல்லாவற்றிலும் தற்போது கட்டணங்கள் வசூலிக்க ஆரம்பித்து விட்டனர்.  இது சரியில்லை என்று எனக்கு தோன்றுகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
      //படங்கள் அழகாக உள்ளன.//

      நன்றி சார்.

      //தேக்கி வைத்திருந்த நீர் அணை திறந்தவுடன் எப்படி பாய்ந்து வருமோ அப்படி கோவிட் கட்டுப்பாடுகள் நீங்கியபின் மக்கள் வெளியில் கோவில்கள், சுற்றுலா மையங்கள் என்று செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.//

      ஆமாம். எவ்வளவு நாள்தான் பயந்து கொண்டு இருப்பது என்று போக ஆரம்பித்து விட்டார்கள்.

      //கோவில்கள் எல்லாவற்றிலும் தற்போது கட்டணங்கள் வசூலிக்க ஆரம்பித்து விட்டனர். இது சரியில்லை என்று எனக்கு தோன்றுகிறது. //

      தற்போது என்று இல்லை. பல வருடங்களாக இப்படித்தான் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 20 வருடம் முன்பு 15 ரூபாய் கட்டணம் இருந்தது இப்போது, மீனாட்சி, சொக்கனை பார்க்க 100 ரூபாய் அம்மனை மட்டும் , சுவாமியை மட்டு பார்க்க 50 ரூபாய். கட்டணம் வைத்தும் கூட்டம் அலை மோதுகிறது.
      வெகு நேரம் காத்து நிற்க வேண்டி இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. ஜெகே அண்ணா கட்டணம் இப்போதா என்ன? கோமதிக்கா சொல்லியிருப்பது போல் எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது.

      நான் கட்டணம் கட்ட வேண்டிய கோயில்களுக்குச் செல்வதில்லை. அது தப்போ சரியோ...ஆனால் நான் போகமாட்டேன்.

      அதற்குப் பதில் ஒரு உண்மையான யாசகருக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிடுவது நல்லது என்று நினைப்பேன்.

      கீதா

      நீக்கு
  7. அருமை. திருப்பரங்குன்றம் சென்ற வந்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. // இறைவனை வணங்குவதில் பெரிய இடம், சிறிய இடம் என்ன இருக்கிறது ?..//

    சிவனும் பெருமாளும் பாஸ் கொடுத்து விட்டாலும் இவனுங்க - விரட்டி விட்டுடுவானுங்க..

    கோயிலுக்கு வருபவர்களை அப்படி இப்படி என்று பிரிப்பதே அநியாயம்.. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      கோவில் அமைப்பு உள்ளே போனால்தான் சிவனையும், பெருமாளையும் பார்க்க முடியும் என்று இருக்கிறது.

      எப்படி மக்களை உள்ளே அனுமதித்து அவர்களை தரிசிக்க வைக்கலாம் என்று சிந்தித்து செயலாற்ற அந்த முருகன் தான் வழி காட்ட வேண்டும்.
      நீங்கள் சொல்வது போல் நல்ல முடிவு கிடைத்தால் நல்லதுதான்.

      வேறு என்ன சொல்வது?

      நீக்கு
    2. அதே துரை அண்ணா எனக்கும் கோபம் வந்துவிட்டது. அதென்ன இறைவன் முன் இப்படி ஒரு பிரிவினை எல்லாம் மனிதர்கள் செய்யும் அவலம்...

      கீதா

      நீக்கு
  9. கோயில்களுக்கு அரசாங்கம் என்ன முதலீடு செய்து இருக்கின்றது?..

    எதற்கு இந்த நாட்டாண்மை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விதிகளை யார் கொண்டு வருகிறார்கள்?
      யார் சீர் திருத்துவார்கள் என்பது தெரியவில்லை.
      மற்ற கோவில்களில் காசு கொடுத்தால் இறைவனை தரிசனம் செய்து வரலாம். இந்த கோவிலில் காசு கொடுத்தாலும் உள்ளே இருக்கும் இரு தெய்வங்களை பார்க்க முடியாது.
      கோவிலுக்குள்ளேயே டிக்கட் வாங்கி வரும் பக்த்ர்கள் செல்லும் வழி வேறு . தர்ம தரிசனம் செய்யும் வழி வேறு அதனால் சில சன்னனதிகளுக்கு போக முடியாது. கம்பு கட்டி போக முடியாமல் வைத்து இருக்கிறார்கள்.


      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. திருப்பரம்குன்று தரிசனம் பெற்றோம். யாத்திரையில் தரிசித்திருக்கிறேன் பிடித்தமான இடம் .
    கட்டிடங்கள் மறைப்பது குன்றின் அழகை கெடுத்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      நீங்கள் தரிசனம் செய்து பல வருடம் இருக்குமா ?
      திருப்பரம்குன்றம் மிக அழகான இடம் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      கட்டிங்கள் குன்றின் அழகை கெடுப்பது உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வெள்ளியன்று திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.
    கோபுர தரிசனமும் கிடைத்தது. அங்கு திருமங்கலத்தில் இருக்கும் போது நாங்கள் எப்போதோ இந்த கோவிலுக்கு ஒரு தடவை சென்றிருக்கிறோம். அதுவும் இப்போது அவ்வளவாக நினைவிலில்லை. எனக்கு உங்கள் பதிவை படித்ததும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" என்ற பக்திப் பாடல் மனதுக்குள் ஓடியது.

    ஏன் அப்படி கருவறையில் இருக்கும் மற்ற தெய்வங்களை தரிசனம் செய்ய மறுக்கிறார்கள்.? ஆனால், கொஞ்சம் பிரபலமான கோவில்களில் இது ஒரு பிரச்சனைதான். பணம்தான் எங்கும் எதிலும் முன்னிலை வகிக்கிறது. என்ன செய்வது? நீங்கள் முருகன் தன் குடும்பத்துடன் கருவறையில் காட்சி தருகிறார் என்றதும் என் மனக்கண்களால்அனைவரையும் தரிசித்து கொண்டேன்.

    கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பொறுமையாக எடுத்திருக்கிறீர்கள். மலை படங்கள் மிகவும் அழகாக உள்ளன. அது போல் யானையை எடுத்த படங்களும் அருமையாக உள்ளது. யானை பற்றிய காணொளியை பார்த்தும், அதைப்பற்றிய தங்கள் கருத்தின் விபரமும் படித்தும் தெரிந்து கொண்டேன்.யானை பார்க்கவே கொஞ்சம் பயமூட்டும்படியாகத்தான் உள்ளது.

    வாழைப்பழம் சாப்பிடும் குரங்கார் படங்கள் அருமை. அதற்கு வாழைப்பழத்தின் தோல் உரித்து சாப்பிட சொல்லிக் குடுக்க வேண்டுமா?

    இன்று இந்தப் பதிவுக்கு வரவே தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். தாங்களும் மற்ற அனைவரும் என் பதிவுக்கு வந்து கருத்துரைகளுக்கு மிக்க நன்றி. அதற்கும் இன்னமும் பதில்கள் தர நேரம் கிடைக்கவில்லை. இனிதான் தர வேண்டும். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //எனக்கு உங்கள் பதிவை படித்ததும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" என்ற பக்திப் பாடல் மனதுக்குள் ஓடியது.//

      சூலமங்கலம் சகோதரிகள் பாட்டு மறக்க முடியுமா? திருப்பரங்குன்றம் என்றாலே நீங்கள் சொல்வது போல இந்த பாடல் நம் காதில் ஒலிக்க தொடங்கி விடும் என்பது உண்மை.

      அந்த கோவில் அமைப்பு அப்படி இருக்கிறது. முருகன் , அம்மன், பிள்ளையார் எல்லாம் நேர் கோட்டில் சிவனும், பெருமாளும் எதிர் எதிர் பக்கம் . இருக்கிறார்கள். இடம் கொஞ்சம் தான் இருக்கிறது.
      அங்கு கூட்டம் சேர்க்க விரும்பவில்லை போலும் நிர்வாகத்தார்.
      உங்களை போல மன கண்ணால் வணங்கி கொள்ள வேண்டியதுதான். வேறு வழி இல்லை.

      படங்களை எல்லாம் ரசித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
      யானையை பழகின இடம் விட்டு கூட்டி வந்தது, அதற்கு இந்த ஊர் வெயில் மற்றும் சூழ்நிலைகள் பிடிக்க வில்லை போலும். இப்போது நலமாக இருக்கிறதாம். இருந்தாலும் மக்களுக்கு ஆசீர்வாதம் செய்ய விடுவது இல்லை போலும். எனக்கே இப்போதுதான் தினமலர் செய்தியை படித்தபின் விவரம் தெரிந்தது.

      //வாழைப்பழம் சாப்பிடும் குரங்கார் படங்கள் அருமை.//
      நன்றி.

      அதற்கு வாழைப்பழத்தின் தோல் உரித்து சாப்பிட சொல்லிக் குடுக்க வேண்டுமா?//

      அதுதானே! அவர் அதற்கு உதவி செய்வதாக நினைத்து அப்படி கொடுத்தார்.

      வீட்டு வேலைகள் முதலில் அப்புறம்தான் பதிவு. மன்னிப்பு எல்லாம் வேண்டாம். எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது வந்து கருத்து சொன்னால் போதும்.

      உங்கள் கீரை பதிவை படித்தவுடன் அரைக்கீரை வாங்கி விட்டேன் இன்று. உங்களுக்கு நன்றி.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.








      நீக்கு
  12. படங்கள் மற்றும் விவரங்களின் மூலம் இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது என்று தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      ஆமாம், இப்போது பழைய மாதிரி எளிதாக இறைவனை தரிசனம் செய்ய முடியாது அனைத்து பெரிய கோவில்களிலும்.
      மாற்றங்கள் நிறைய ஏற்பட்டு இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. சுவாமி என்ன பாகுபாடா பார்க்கிறார்? அதென்ன பெரியவங்க? நாமெல்லாம் சின்னவங்களா?

    இப்படிச் சொன்னால் எனக்குக் கோபம் வந்துவிடும் கோமதிக்கா...நீங்கள் எல்லாம் ரொம்பப் பொறுமைசாலி. இறைவன் இன்று நமக்கு அருளவில்லை அடுத்த முறை பார்க்கலாம் என்று வந்துவிடுவீர்கள்.

    நான் முன்பென்றால் சண்டை போட்டிருப்பேன் ஆனால் இப்போது மீண்டும் அப்படிச் சொல்லும் கோயிலுக்குப் போகமாட்டேன். இறைவன் முன் எல்லோரும் சமம். வீட்டில் இறைவன் இருக்கிறார். அப்புறம் நடைபாதைக் கோயில்கள் இல்லையா என்ன யார் வேண்டுமானாலும் வணங்கலாம்

    இது தவறோ சரியோ நான் இப்படியான கட்டுப்பாடுகள் இருக்கும் கோயிலுக்குச் செல்வதில்லை கோமதிக்கா.

    பெயர் மறந்து போய்விட்டது, கோயிலில் நடக்கும் ஊழல்கள், கோயிலில் பொதுமக்களுக்கான உரிமைகள் இறைவனை வணங்குவதற்குக் காசு வாங்கக் கூடாது என்று இவற்றிற்காகச் சண்டை போட்டு வரும் ஒரு ஐயங்கார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் அவர் பல வழக்குகள் தொடுத்துவ் வருகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      சுவாமி என்ன பாகுபாடா பார்க்கிறார்? அதென்ன பெரியவங்க? நாமெல்லாம் சின்னவங்களா?//

      சுவாமி பார்ப்பது இல்லை, ஆனால் மனிதன் பார்க்கிறான்.
      உயர்வு தாழ்வு, இருப்பவன், இல்லாதவன் பார்க்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.



      இப்படிச் சொன்னால் எனக்குக் கோபம் வந்துவிடும் கோமதிக்கா...நீங்கள் எல்லாம் ரொம்பப் பொறுமைசாலி. இறைவன் இன்று நமக்கு அருளவில்லை அடுத்த முறை பார்க்கலாம் என்று வந்துவிடுவீர்கள்.//

      எனக்கும் கோபம் வரும் அதனால் தான் கேட்டேன். குருக்களிடம். பெண் காவலர் துணையோடு ஒரு குடும்பம் உள்ளே சிவனை தரிசனம் செய்து கொண்டு இருந்தது.
      கேட்டதற்கு பாஸ் வாங்கி வாருங்கள் என்று குருக்களும், அந்த பெண் காவலரும் சொன்னார்கள். கூட்டத்தை ஒழுங்கு படுத்தி கொண்டு இருந்தவர் வி.ஐ.பிகளுக்கு மட்டும் என்றார். அதுதானே நடக்கிறது.


      நான் முன்பென்றால் சண்டை போட்டிருப்பேன் ஆனால் இப்போது மீண்டும் அப்படிச் சொல்லும் கோயிலுக்குப் போகமாட்டேன். இறைவன் முன் எல்லோரும் சமம். வீட்டில் இறைவன் இருக்கிறார். அப்புறம் நடைபாதைக் கோயில்கள் இல்லையா என்ன யார் வேண்டுமானாலும் வணங்கலாம்//

      அப்படித்தான் நானும் சாரும் கூட்டம் எல்லாத கோயில், டிக்கட் வாங்கி பார்க்க முடியும் கோயில் மட்டும் போகிறோம்.

      சாரின் தம்பி மகன், மருமகள் வந்து இருந்தார்கள் பார்க்க விரும்பினார்கள் போனோம்.

      கோவில்கலில் செய்யும் கெடுபிடிகளால் வீட்டிலிருந்து வணங்கி கொள்ளலாம் என்ற எண்ணம் தான் வருகிறது.
      நடப்பதை எல்லாம் இறைவன் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.
      அவர் விருப்பம் இல்லாமல் நடக்காதே ! பார்ப்போம்.

      நீக்கு
  14. குரங்கு அவர் கையிலிருந்து வெடுக்கென பிடிங்கியது, "எனக்கு உரிக்க தெரியும் என்று."//

    ஹாஹாஹா அதானே!! உரிச்சுக் கொடுக்கறளவுக்கு நான் என்ன சின்னப் பிள்ளையா...ந்னு நினைச்சிருக்கும்...குரங்கார் ரொம்ப அழகு

    மலையின் அழகை மறைக்கும் அளவு கட்டிடம்// என்ன சொல்ல கோமதிக்கா..இப்படித்தான் பல கோயில்களில் முன்பு இருந்தது போல் இருக்கட்டுமே என்று விடாமல் ஏதோ பக்தர்களுக்கு வசதி செய்துகொடுக்கிறோம் என்று இப்படிச் செய்கிறார்கள்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அதானே!! உரிச்சுக் கொடுக்கறளவுக்கு நான் என்ன சின்னப் பிள்ளையா...ந்னு நினைச்சிருக்கும்...குரங்கார் ரொம்ப அழகு//
      ஆமாம், அப்படித்தான் நினைத்து இருக்கும். வருபவர்கள், ப்கிறவர்கள் எல்லாம் பழம் கொடுத்தால் குரங்காகார் நல்லாதான் இருப்பார்.

      புதிய கட்டிடங்கள் நீங்கள் சொல்வது போல மக்களுக்கு வசதிக்கோ, அல்லது கோவில் அலுவலக கட்டடிடமோ தெரியவில்லை.

      நீக்கு
  15. யானை அழகோ அழகு. குட்டியும் வளர்ந்ததும் செம...நெற்றித் திலகம் கூடுதல் அழகு. ஆஹா ஷவர் !! அதுக்கு ஏத்தாப்ல நிறைய போட்டிருக்காங்க ...

    மின் விசிறி கூட இருக்கிறதே!

    தெய்வயானை!! ஆமாம் தெய்வ யானைதானே!!! அழகான பெயர்ப்பொருத்தம்.

    காணொளி ரொம்ப ரொம்ப ரசித்தேன் கோ௳திக்கா என்ன அழகாக ஆட்டி ஆட்டி நடனம் ஆடுகிறது!!!

    படங்களையும் பதிவையும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானைக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து அதை மகிழ்ச்சியாக வைத்து இருக்கிரார்கள்.
      காணொளி, மற்றும் படங்களை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  16. படங்களும் பகிர்வும் அருமை. யானை தெய்வானை மிக அழகு. ஃபேஸ்புக்கிலும் இப்படங்களை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      ஃபேஸ்புக்கிலும் பார்த்து இங்கும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  17. பெரிய மனிதர்களுக்கு மட்டுமே அனுமதி... அப்படீன்னா 150 கிலோ எடைக்குமேல் இருக்கணுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //பெரிய மனிதர்களுக்கு மட்டுமே அனுமதி... அப்படீன்னா 150 கிலோ எடைக்குமேல் இருக்கணுமோ?//

      ஆஹா!

      பெரியமனிதர்கள், புகழ், செல்வாக்கு பொருந்தியவர்களாக இருக்க வேண்டுமே!

      நீக்கு
  18. கோவில் தரிசனம் நன்று. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  19. பத்து நாட்கள் ஊரிலில்லை. அதனால் தாமதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலய தரிசனம் நல்லபடியாக ஆச்சா?
      ஊரிலிருந்து வந்து பதிவை படித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி நெல்லைத் தழிழன்.

      நீக்கு
  20. அருமையான பதிவு. ஆனால் ஈசனையும், பெருமாளையும் பார்க்க முடியலை என்பது குறை தான். அறமற்ற நிலையத்துறைக்கு இதன் மதிப்பெல்லாம் எங்கே தெரியப் போகிறது? எல்லாவற்றிற்கும் காசு பிடுங்கிப் போட்டுக்கத்தான் தெரியும்! இறைவனைப் பார்க்கக் காசு என்பதே இவங்க ஆட்சிக்கு வந்த பின்னர் தான். எழுபதுகள் வரை மதுரை மீனாக்ஷியை நன்றாகத் தரிசனம் செய்ய முடிந்தது. இப்போ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      சிவனையும் , பெருமாளையும் ஒரு காலத்தில் பக்கத்தில் பார்த்தோம். கூட்டம் இவ்வளவு கிடையாது.
      பக்தர் கூட்டம் அதிகமாக அதிகமாக காசு கொடுத்து பார்க்க வைத்தார்கள். எவ்வளவு காசு வைத்தாலும் கொடுத்து பார்க்க ஆட்கள் இருக்கும் போது இந்த நிலை மாறாது.

      மதுரை மீனாஷியை பார்க்கும் ஆவலை அடக்கி கொள்ள வேண்டியதாக இருக்கிறது. காசை கொடுத்தும் பல மணி நேரம் வரிசையில் நின்று சில மணித்துளிக்ளே பார்க்க முடியும் என்றால் மனது சங்கடப்படுகிறது. இப்போது முளை கொட்டு திருவிழா நடக்கிறது.
      போகவே இல்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு