வெள்ளி, 30 டிசம்பர், 2022

விராலிமலை சண்முகநாதர்




டிசம்பர் 12ம் தேதி வங்கி வேலையாக மாயவரம் போக வேண்டிய வேலை அப்படி போகும் போது மகன் கூகுள் மூலம்  தேர்வு செய்த  சில கோவில்கள் சென்றோம். முதலில்  துவரங்குறிச்சியில் இருந்த  ஸ்ரீ வெள்ளை விநாயகரை தரிசனம் செய்தோம்.

அடுத்து அருள்மிகு பூதநாயகி அம்மன் கோவில் போனோம்.
இந்த கோயில் இயற்கை எழிலோடு இருந்தது. தனி பதிவாக போடுகிறேன். 

திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.


அடுத்து விராலி மலையை பார்த்தவுடன் "அம்மா விராலிமலை முருகனை வணங்கி போவோம் சின்ன வயதில் பார்த்தது மறந்து விட்டது" என்றான் மகன். நான் "அம்மாவால் ஏறமுடியாதே இடுப்பு, முட்டி வலி இருக்கே!" என்று சொன்னேன்.  கார் ஓட்டி வந்த டிரைவர் "அம்மா கார் மேலே போகும் கொஞ்சம் படிதான் ஏற வேன்டும் என்றார். "
முருகன் வரச் சொல்கிறார் நம்மை என்று மகிழ்வோடு போனேன். 






இன்னும் கொஞ்ச நாளில் அந்த கொஞ்சபடியும் ஏற வேண்டாம்.  "எலிவேட்டர்" அமைத்து கொண்டு இருக்கிறார்கள்.

 20  படி கள்  ஏறி முருகனை தரிசனம் செய்ய போனோம்






20 ரூபாய் விரைவு கட்டணம் கொடுத்து போனோம். அன்று திருமணநாள் அதனால் நல்ல கூட்டம். காது குத்து விழா நிறைய நடந்து கொண்டு இருந்தது.


மேல்விதானத்தில் தேன்கூடு , தேனீக்கள் இல்லை.
மேல் இருந்து எடுத்த படம்

உற்சவர் 
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் அருளிய  விராலிமலை திருப்புகழ்




எனக்கு இந்த சின்ன படிகள்கூட ஏற சிரமமாக இருந்தது முருகன் அருளால் ஏறி வணங்கி வந்து விட்டேன்.

படக்கதையை அப்படியே அங்கு உள்ளது போல் கீழெ கொடுத்து இருக்கிறேன்.

120 ஆண்டுகள் முன்  பர்மாவில் கப்பல் வணிகம் செய்த கரைக்குடி, நேமத்தான்பட்டி எம். எம் . பழனியப்ப செட்டியார் மனப்பாறையில்  வாங்கிய பசுமாடு விராலிமலை-முருகன்மலை அடிவாரத்தில் களவு போனது, அது குறித்து வழக்கில் நீதிமனறத்தில் மயில் சாட்சியாக வந்தது. பின்னர் பழனியப்ப செட்டியார் விராலிமலை முருகன் கோவிலை புதுபித்து அனைத்து வழிபாட்டு முறைகளையும் ஏற்படுத்தினார். என்பதை விளக்கும் புடைப்பு சிற்பம். 

குரங்குகள் சிலையை உடைக்காமல் இருக்க  கம்பி தடுப்பு. நிறைய குரங்குகள் இருக்கிறது.
தண்டபாணி
இடும்பன் சன்னதி



புதுவருடத்தில் முருகன் அனைவருக்கும்  எல்லா நலன்களையும் அருள வேண்டும்.
கந்தா சரணம்!கடம்பா சரணம் !சண்முகாசரணம்!
சண்முகநாதா சரணம் சரணம்.

நோய் மற்றும் துன்பங்கள் நீங்க இத் தலத்து முருகன் அருள்புரிவாராம். அதுதானே இப்போது எல்லோருக்கும் வேண்டும். "முருகா அனைவரும் ஆரோக்கியமாக இருக்க அருள்புரி முருகா "என்று வேண்டிக் கொண்டேன்.

ஆடி வருகுது வேல்  முன்பு போட்ட பதிவு.

களக்கோடி சாஸ்தா

இந்த ஆண்டு (டிசம்பர் 4ம் தேதி) மனநிறைவாக குலதெய்வ வழிபாடு செய்து வந்தோம். மகன் ,மற்றும் உறவினர்களுடன் (என் கணவரின் அண்ணா, தம்பி குடும்பத்தோடு)  குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வணங்கி வந்தோம்.
வரும் புத்தாண்டில் அவர் எல்லோரையும் நலமாக காக்க வேண்டும்.
அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. சுருங்க சொல்லி, படங்கள் மூலமாக சித்திரக் கட்டுரையாக அமைந்து விட்டது. பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //சுருங்க சொல்லி, படங்கள் மூலமாக சித்திரக் கட்டுரையாக அமைந்து விட்டது. பதிவு அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. விராலிமலை கோவில் தரிசனப் படங்கள் அருமை.

    இறைவன் நம்மை அழைத்துத் தரிசனம் கொடுக்கிறான் என்பது உண்மை. மகன் மூலமாகத் தூண்டிவிட்டு அமைந்த தரிசனம்.

    இறை நம்பிக்கை உடையவர்களை அவன் காத்து, அவர்கள் மூலமாக பலருக்கும் இறை நம்பிக்கை வரச் செய்கிறான். (இதை எழுதும்போதே... பழனி மலை முருகா பழம் நீ திருக் குமரா பாடல் மனதில் வந்துபோகிறது. பழனி மலை செல்லும் ஆசையும் வருகிறது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //இறைவன் நம்மை அழைத்துத் தரிசனம் கொடுக்கிறான் என்பது உண்மை. மகன் மூலமாகத் தூண்டிவிட்டு அமைந்த தரிசனம்.//

      என் அப்பா, என் கணவர் மற்றும் என் கண்வர் குடும்பத்தார் அனைவரும் போகும் இடத்தில் உள்ள கோயில்கள் போக வேண்டும் என்று நினைப்பார்கள். அது போல மகனுக்கும் குணம் அமைந்து இருக்கிறது. மகன் மூலம் ஆலயதரிசனம் அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

      //இறை நம்பிக்கை உடையவர்களை அவன் காத்து, அவர்கள் மூலமாக பலருக்கும் இறை நம்பிக்கை வரச் செய்கிறான்.//
      ஆமாம், அந்த மாறா நம்பிக்கை போதும்.

      (இதை எழுதும்போதே... பழனி மலை முருகா பழம் நீ திருக் குமரா பாடல் மனதில் வந்துபோகிறது. பழனி மலை செல்லும் ஆசையும் வருகிறது)

      முன்பு வருடம் ஒரு முறை பழனி செல்வோம். கணவரின் இஷ்ட தெய்வம் முருகன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  3. வெள்ளை விநாயகர்..   மாக்கல் விநாயகரை?  என்ன விசேஷம்?

    விராலிமலை தகவல்கள் சிறப்பு.  படங்கள் அருமை.  எலிவேட்டர் வைத்து கொஞ்சம் படிகள் கூட எற வேண்டாம் என்கிற நிலைமை வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தெரிகிறது.  ஆனால் அப்படி கஷ்டப்படாமல் முருகனைப் பார்ப்பது ஏனோ கொஞ்சம் மனதில் இடிக்கிறது!

    தேனில்லாத தேன்கூடு..  ஏன் அதை அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள்? 

    மயில் சாட்சியாக வந்ததது வியப்பு.  அதுவும் சமீப காலத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      வெள்ளை விநாயகர் பற்றிய விவரங்கள் இனிதான் படித்து பகிர வேண்டும். அவர் வெள்ளி கவசத்தில் இருந்தார். அதனால் வெல்ளை கல் விநாயகரா என்று தெரியவில்லை.

      //எலிவேட்டர் வைத்து கொஞ்சம் படிகள் கூட எற வேண்டாம் என்கிற நிலைமை வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தெரிகிறது. ஆனால் அப்படி கஷ்டப்படாமல் முருகனைப் பார்ப்பது ஏனோ கொஞ்சம் மனதில் இடிக்கிறது!//

      படி ஏறி இறைவனை தரிசனம் செய்ய படிகள் இருக்கிறது.
      படி ஏற முடியாத வீல் சேரில் வருபவர்களின் வசதிக்கு எலிவேட்டர்.
      வய்தாகி பிறர் உதவியுடன் வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் முருகனை பார்க்கும் ஆசை நிறைவேறுகிறது.

      மருந்து அடித்து தேனீக்களை விரட்டிய பின் அந்த தேன் கூடு பயனில்லை , அதனால் அப்படியே வைத்து விட்டார்கள். எங்கள் வீட்டு ஜன்னலில் இப்படித்தான் மதுரையில் பெரிதாக கூடு கட்டி இருந்தது அவற்றை மயங்க வைத்து மருந்து அடித்து கீழே விழ வைத்தனர். சிறிது நேரத்தில் கூடு காலி யாகி விட்டது.

      //மயில் சாட்சியாக வந்ததது வியப்பு. அதுவும் சமீப காலத்தில்.//


      ஆமாம். தெய்வம் படத்தில் சிவகுமார் மனைவி ஜெயா முருகா என்று ஓலமிட்டு அழைத்தவுடன் மயில் வந்து அசோகனை தாக்குவது போல அமைத்து இருப்பார்.

      முன்பு போட்ட பதிவில் மயில் படியேறி முருகனை தரிசிப்பதை போட்டு இருப்பேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      முருகா சரணம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்கள் எல்லாமே அருமை.

    டிசம்பர் 12 நான் திருநல்லாறு, திருக்கடையூரில் இருந்தேன்.

    இன்று இந்நொடி விராலிமலையை கடந்து சென்னை போய்க்கொண்டு இருக்கிறேன்‌.

    2023 புதிய ஆண்டு அனைவருக்கும் நலம் தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      பதிவு போட்டதும் மகனுடன் வெளியே போய் விட்டேன்.
      இரவு தான் வந்தோம். அதனால் பதில்கள் அளிக்க காலதாமதம்.
      உங்கள் பின்னூட்டங்கள் வந்து விட்டன.

      //டிசம்பர் 12 நான் திருநல்லாறு, திருக்கடையூரில் இருந்தேன்.//

      ஓ! எல்லா கோவில்களிலும் நல்ல தரிசனம் ஆச்சா?


      //இன்று இந்நொடி விராலிமலையை கடந்து சென்னை போய்க்கொண்டு இருக்கிறேன்‌.//

      சென்னையில் மகள் குடும்பத்துடன் புதுவருடத்தை கொண்டாடுங்கள்.

      //2023 புதிய ஆண்டு அனைவருக்கும் நலம் தரட்டும்.//

      அனைவருக்கும் நலம் தரட்டும்'மகிழ்ச்சியும் மன நிறைவும் வேண்டும் அனைவருக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  6. கோமதிக்கா, விராலிமலை தலைப்பு பார்த்ததும் நீங்க முன்னாடி இந்தக் கோயில் பற்றி போட்ட பதிவு நினைவு வருகிறது. மயில்கள் நிறைய இருக்கும் இடம். ஆனால் அங்கு கருத்து சொன்னேனா என்று நினைவு இல்லை. மயிலும் படம் எடுத்துப் போட்டிருந்தீங்களோ?

    கோயில் படங்கள் அனைத்தும் அருமை. மயில் வந்து சாட்சி சொன்னது வியப்பு!

    தேன் கூடு ஏன் அப்படியே விட்டு வைத்திருக்காங்களோ? தேனும் இல்லையே..

    படிகள் நிறைய உண்டு தெரியும், இப்போது கிட்ட வரை வண்டி சென்று உங்களுக்குக் கொஞ்சமே படிகள் ஏற வேண்டியதானது குறித்து மகிழ்ச்சி. கோயில் செல்ல முடிந்ததே...

    படிகள் ஏறியது போல் கால் நன்றாகிவிடும் அக்கா.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //மயில்கள் நிறைய இருக்கும் இடம். ஆனால் அங்கு கருத்து சொன்னேனா என்று நினைவு இல்லை. மயிலும் படம் எடுத்துப் போட்டிருந்தீங்களோ?//

      2009 ல் போட்ட பதிவில் மயில் படி ஏறி செல்வதை அது ஆடுவதை போட்டு இருந்தேன். மீண்டும் அதன் சுட்டியை கொடுத்து இருக்கிறேன் கீதா.

      //கோயில் படங்கள் அனைத்தும் அருமை. மயில் வந்து சாட்சி சொன்னது வியப்பு!//
      ஆமாம்.

      தேன் கூடு ஏன் அப்படியே விட்டு வைத்திருக்காங்களோ? தேனும் இல்லையே..//

      ஸ்ரீராமுக்கு பதில் சொல்லி இருக்கிறேன் பாருங்கள்.

      //படிகள் ஏறியது போல் கால் நன்றாகிவிடும் அக்கா.//
      அது தான் வேண்டும் கீதா, நன்றி.



      //படிகள் நிறைய உண்டு தெரியும், இப்போது கிட்ட வரை வண்டி சென்று உங்களுக்குக் கொஞ்சமே படிகள் ஏற வேண்டியதானது குறித்து மகிழ்ச்சி. கோயில் செல்ல முடிந்ததே...//

      படி ஏற முடியாதவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம்.


      நீக்கு
  7. கடைசியில் முன்பு போட்ட பதிவின் சுட்டியும் கொடுத்திருக்கீங்க போய்ப் பார்த்தேன் அங்கு என் கருத்து இல்லை....ஆனால் பதிவு நினைவில் உள்ளது!!!

    எல்லோருக்கும் புது வருடம் நல்லதாக அமைய வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடைசியில் முன்பு போட்ட பதிவின் சுட்டியும் கொடுத்திருக்கீங்க போய்ப் பார்த்தேன் அங்கு என் கருத்து இல்லை....ஆனால் பதிவு நினைவில் உள்ளது!!!//

      அந்த சுட்டியில் மயில் படம் தெரியவில்லை, அதனால் பழைய சுட்டி கொடுத்து இருக்கிறேன் பாருங்கள்.
      //எல்லோருக்கும் புது வருடம் நல்லதாக அமைய வேண்டும்.//
      ஆமாம், அதுதான் பிரார்த்தனைகள் .
      கமலா ஹரிஹரனுக்கு இடுப்பு வலி அதிகமாக இருப்பதாக சொன்னார் .அதனால் அவரை பதிவுகளில் பார்க்க முடியவில்லை.
      எல்லோரும் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் புது வருடத்தில்.


      நீக்கு
  8. எலிவேட்டர் வரப்போவது சந்தோஷம். பலருக்கும் எளிதாக இருக்கும் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கீதா எலிவேட்டர் வருவது நல்லதுதான். ஆனால் உடல் முடியாதவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
      உங்கள் அனைத்து கருத்துக்களூக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  9. விராலிமலை கோவில் தரிசனம்..

    படங்கள் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. முருகப் பெருமான் - அருணகிரி நாதருக்கு அஷ்ட மா சித்திகளை உபதேசித்த தலம் இது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நிறைய திருப்புகழ் இந்த முருகனுக்கு பாடி இருக்கிறார் அருணகிரி நாதர்

      நீக்கு
  11. இங்கே தஞ்சையில் இருந்து துவாக்குடிக்கு சென்று விட்டால் போதும் அங்கிருந்து (திருச்சிக்குப் போகாமல்) குறுக்கு வழியாக விராலிமலைக்குச் சென்று விடலாம்..
    நல்ல சாலை .. இந்த வழியில் அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. ஆனாலும் சென்றதில்லை..

    அவனருள்..
    காத்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுக்கோட்டியிலிருந்து பக்கம் முன்பு தங்கை மகள் வீட்டுக்கு போன போது பார்த்தோம், இப்போது மாயவரத்திற்கு போகும் போது சாலை நன்றாக இருக்கும் என்பதால் திருச்சி வழி போனோம்.

      //தஞ்சையில் இருந்து துவாக்குடிக்கு சென்று விட்டால் போதும் அங்கிருந்து (திருச்சிக்குப் போகாமல்) குறுக்கு வழியாக விராலிமலைக்குச் சென்று விடலாம்..//

      நல்லது.
      தஞ்சையும் வந்தோம், திடீர் பயணம் தஞ்சை என்பதால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கோயிலில் நல்ல கூட்டம் ஞாயிறு என்பதால் மூலவரை பார்க்க முடியவில்லை.
      உங்களை பற்றி மகனிடம் சொல்லி கொண்டு வந்தேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. விராலிமலை முருகன் படங்கள் அனைத்தும் அழகு .தரிசித்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன், அனைத்து படங்களையும் ரசித்துப்பார்த்து தரிசனம் செய்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு